
13
13 ) ஆவிகளின் சரணாலயம் .
" இந்த மாதிரி முன்னாடி நடந்ததே இல்ல . ஆவி வெளிய போரதுன்றது அவ்ளோ ஈசி இல்ல . அப்படி இருக்கும் போது இந்த தடவ மட்டும் எப்டி போச்சு . " Project givers .
" தெரியலயே . ஆவிகளின் சரணாலயம் ஆரம்பிச்சதுல இருந்து இந்த மாதிரி நடந்ததே இல்ல . " Project makers .
" ஆனா நடந்துருக்கே . " project givers .
" இப்போ என்ன பண்றது . " project takers .
" எனக்கு தெரிஞ்சு , அந்த ஆவி எதுக்காக ஆவியா மாறுச்சோ , அத நிறைவேத்த போயிருக்கும் . " project makers .
" என்ன பண்ணனும்னு சொல்லுங்க . " Katherine .
" முதல்ல எல்லாரையும் காப்பாத்தனும் . அது ஆவி . அதோட குறிக்கோள அடைய அது என்ன வேணும்னாலும் பண்ணும் . " project makers .
" சும்மா பேசிட்டே இருக்காம , என்ன பண்ணனும்னு சொல்லுங்க . " Emma .
" அது தெரிஞ்சா நாங்க சொல்ல மாட்டோமா . " project maker .
இதை கேட்ட மூவரும் அவரை முறைத்தனர் .
.
.
கிஷோருக்கு ஒரு ஃபோன் கால் வந்தது .
" hello . சொல்லு டி . "
" கிஷோர் ." அழுகையுடன் கூறினாள் ஹேமா .
" என்ன டி ஆச்சு . " கிஷோர் .
" எங்க வீட்டுக்கு வா டா . "
" வரேன் . " என்றவன் , தனது வண்டியை உயிர்ப்பித்து ஹேமாவின் வீட்டிற்கு சென்றான் .
அங்கு ஹேமா சோஃபால் அமர்ந்து அழுது கொண்டிருக்க எதிரே விக்கியும் , அபியும் அமர்ந்து இருந்தனர் .
" ஹேமா . " என்று கிஷோர் அவளை அழைக்க , அவள் ஓடி வந்து அவனை அனைத்துக் கொண்டாள் .
" ஏய் தள்ளு டி . " என்ற விக்கி , கிஷோர் அருகில் வந்து அவன் கன்னத்தில் அறைந்தான் .
" என்ன டா நெனச்சுட்டு இருக்க நீ . " விக்கி .
" ஓய் . உங்க நொண்ணன அமைதியா இருக்க சொல்லு டி . " கிஷோர் .
" டேய் . என் கிட்ட பேசு டா . " விக்கி .
கிஷோர் ஒன்றும் கூறாமல் அமைதியாக நின்று இருக்கும் போது திடீரென கிஷோர் மயங்கினான் .
அவன் மயங்கிய அடுத்த நொடி விக்கியும் மயங்கி சரிந்தான் .
இருவரும் அதிர்ந்து போய் , மற்ற இருவருரின் முகத்திலும் தண்ணீர் தெளித்து விட்டனர் . அடுத்த நொடி இருவரும் கண்களில் தீப்பொறி பறக்க எழுந்து நின்றனர் .
" டேய் . வந்துட்டேன்ல . உன்னோட தங்கச்சி எனக்கு தான் டா . "
" விட்ருவனா . அவ எப்போமே சிவாவுக்கு தான் . "
" என்ன டா சிவா சிவானுட்டு இருக்க . "
" டேய் . போ இங்கிருந்து . கிஷோர் இவள காதலிக்கிறான் . தெரியும் இல்ல . "
" சிவாவும் கிஷோரும் வேற வேற இல்ல மகி . "
" என்ன டா வேணும் உனக்கு . "
" எனக்கு உன்னோட தங்கச்சி வேணும் . "
" அவ என்ன பொருளா . இந்தா வெச்சுக்கோன்னு எடுத்து குடுக்குறதுக்கு . "
" மகி . எனக்கு உன்னோட தங்கச்சி வேணும் . அவள எனக்கு கல்யாணம் பண்ணி குடு . "
" முடியாது டா. "
" அப்போ உன்னேட காதலி செத்து போவா . பரவால்லையா . "
" விஷு . " என்றவனின் கண்களில் கண்ணீர் மொட்டுக்கள் சிந்த தயாராக இருக்க , அதை அடக்கியவன் " எனக்கு என்னோட தங்கச்சி தான் முக்கியம் . " என்றான் .
அதை கேட்டு ஏளனமாக சிரித்தான் அவன் .
" ஓஓ . அப்போ உன்னோட பொண்டாட்டி உனக்கு வேணாம் . இல்லையா . "
இதை இருவரும் அதிர்ந்து பார்த்துக் கொண்டு இருந்தனர் .
" யாரு நீங்க . யாரு மகி , விஷு . என்ன பேசுறிங்க ." என்று கத்தினாள் ஹேமா .
" சாது , அமைதியா இரு. "
" நீ யாரு . இவன் எதுக்கு உன்ன மகின்னு சொல்றான் . " என்று கேட்டுக் கொண்டிருக்கும் போதே கிருஷ் கத்தினான் .
" ஹேமா . நிஷாக்கு ஃபோன் பண்ணி வர சொல்லு . சீக்கிரம் . " என்று கூறி முடிக்கும் முன் அவன் உடலில் இருந்த ஆவி அவனை கட்டுப் படுத்தியது .
ஹேமா அவனின் ஃபோனை பிடுங்கி , நிஷா என்ற பெயரை தேடி , அவளுக்கு கால் செய்தாள் .
அங்கு நிஷாவும் ஸ்னேஹாவும் கோபத்தின் உச்சியில் அமர்ந்திருந்தனர் .அப்போது தான் ஃபோன் அடிக்கவும் , அதை எடுத்து காதிற்கு கொடுத்தாள் .
" ஹலோ . சொல்லு கிஷோர் . "
" ஹலோ . நிஷா , நான் கிஷோர் இல்ல . ஹேமா . கொஞ்சம் வீட்டுக்கு வர முடியுமா . "
" வரேன் . அட்ரஸ் . "
அவளும் அட்ரஸ் சொல்லி விட்டு வைத்து விட்டாள் .
இருவரும் ஹேமாவின் வீட்டிற்கு புறப்பட்டனர் .
.
.
யார் அவங்க ரெண்டு பேரும் . விஷு யாரு . விக்கிக்கும் மகிக்கும் என்ன சம்பந்தம் .
Stay tuned to know that..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro