
11
11) ஆவிகளின் சரணாலயம்
" ஹாய் ஆவி . நல்லாருக்கியா . உன் கிட்ட சாப்டகயான்னு கேக்க முடியாது . என்ன பண்ணுன நீ . நல்லா தூங்கினியான்னு கூட கேக்க முடியாது . என்ன பண்ணலாம் , ஆமா உனக்கு தங்கச்சி இருக்காங்களா.... " என்று கேட்ட அடுத்த நொடி அது சுழலாக மாற , நிஷா பயந்து போனாள் .
ஸ்னேஹாவும் நிஷாவும் ஒட்டி நிற்க , நிஷாவை காப்பது போல் , ஸ்னேஹாவை தூர எறிந்து விட்டு , நிஷாவின் முன் நின்றது .
" நிஷாஆஆஆ . " என்று ஸ்னேஹா கத்த , அந்த ஆவியோ , அவளை தாக்க தொடங்கியது . இதை பார்த்து நிஷா பயந்து , ஸ்னேஹாவின் முன் சென்று நின்று கொண்டாள் .
" என்ன பண்ற நீ . இவ பாவம் . நிறுத்திக்கோ இதோட . " என்று கையை நீட்டி தடுக்க , அது அமைதியாக சென்று அதன் இடத்தில் அமர்ந்து கொண்டது .
" ஸ்னேஹா " என்று கூறி அவளை தூக்கி நிற்க வைத்தாள் நிஷா .
" என்ன டி , அந்த ஆவி அடிக்குது . " என்று தனது கையை தடவிக் கொண்டே கேட்டாள் .
" அதான் எனக்கும் தெரியல . " நிஷா .
" போ டி . வலிக்குது . " என்று சினுங்கினாள் ஸ்னேஹா .
" சரி வா , போய் அந்த சொட்டத் தலையன ஒரு வழி பண்ணிட்டு வரலாம் . " என்று ஸ்னேஹாவை அழைத்துக் கொண்டு project giver இன் அறைக்கு சென்றாள் .
" யோவ் . என்னய்யா ஆவி இது . " என்று கேட்டுக் கொண்டே அவரது அனுமதியின்றி உள்ளே நுழைந்தாள் நிஷா .
" என்னம்மா . " அவர் பயந்து போனார் , நிஷாவின் சத்தத்தில் .
" இங்க பாரு . " என்று ஸ்னேஹாவின் கையை காண்பித்தாள் . அவளது கையில் சிறிது இரத்தம் வழிந்து கொண்டிருந்தது .
" என்ன ஆச்சும்மா . "
" உன்னோட அந்த ஆவி தான் இப்டி பண்ணுச்சு . "
" சாரிம்மா . அந்த ஆவிய பத்தி முழுசா சொல்லாதது என்னோட தப்பு தான் . இந்தா , இந்த பென்ட்ரைவ்ல எல்லாமே இருக்கு . போட்டு பாத்துட்டு அப்றமா வந்து வேலைய பாருங்க . ஒரு மூனு நாள் டைம் எடுத்துக்கோங்க . "
நிஷா அவரை முறைத்துக் கொண்டே அந்த அறையை விட்டு வெளியே வந்தாள்.
.
.
" டேய் மச்சி . " விக்கி .
" என்ன டா . " அபி .
" வா டா , போய் என்னோட ஆள பாத்துட்டு வரலாம் . " விக்கி .
" உன்னஅஅஅ . சரி வா போலாம் . " அபி .
இருவரும் ஸ்னேஹாவின் வீட்டிற்கு முன் நின்றிருந்தனர் .
" ஓய் . அங்க பாரு . உன்னோட ஆள் நிக்குறான் . " நிஷா .
" வாய சிப் போட்டு மூடு . "
" ஓகே மேடம் . " சிரித்துக் கொண்டே கூறினாள் .
" ஓய் பேபி . " என்று கத்தினான் விக்கி .
" என்ன , என்ன வேணும் உங்குளுக்கு . லூசு மாதிரி பின்னாடியே அலையாதிங்க . " ஸ்னேஹா .
" ஏன் . உன் பின்னாடி யாரும் அலைய கூடாதா . "
" கூடாது . "
" ஏன் . "
" ஏன்னா என்னோட ஜாப் அப்டி . "
" அப்டி என்ன ஜாப் . "
" அத உங்க கிட்ட சொல்லனும்னு எந்த அவசியமும் எனக்கு இல்ல . "
" ஓவரா பேசுற வேல வச்சுக்காத . "
" 😤😤😤😤 . கடுப்பேத்தாதிங்க . கண்டதும் காதல்ன்றது எல்லாம் என்னால நம்ப முடியாது . "
" இது நாலு வருஷ காதல் . " விக்கி சிரித்துக் கொண்டே கூறினான் .
" வாட் . நாலு வருஷமா . "
" ஆமா . சொல்றேன் கேளு . " என்றவன் கூற ஆரம்பித்தான் .
💭💭💭💭💭
அந்த இளம் மாலை பொழுது . கீச் கீச் என்று பைக் ஹாரனின் சபத்தம் காதை தீண்டியது . ஞாயிற்றுக்கிழமை என்பதால் , அந்த மாலை பொழுதில் அவ்வளவு கூட்டம் .
" மச்சி , மெரினா பீச் போலாமா . " அபி .
" ஓஓஓஓ . போகலாமே . " என்று கூறினான் விக்கி .
இருவரும் மெரினா பீச்சை நோக்கி சென்றனர் .
.
.
இங்கு நிஷாவும் ஸ்னேஹாவும் பர்த் டே பார்ட்டியை எப்படி கொண்டாடலாம் என்று பீச்சில் அமர்ந்து திட்டம் தீட்டிக் கொண்டிருந்தனர் . அடுத்த நாள் கிஷோரின் பிறந்த நாள் . அதனால் தான் தோழிகள் இருவரும் இப்படி அமர்ந்து இல்லாத மூளையை போட்டு பிசைந்து கொண்டிருக்கின்றனர்😜 .
அந்த நேரம் தான் விக்கியும் , அபியும் பீச்சிற்கு வந்து அவர்களுக்கு கொஞ்சம் தள்ளி அமர்ந்திருந்தனர் .
" மச்சி . " விக்கி .
" சொல்லு மச்சி . " அபி .
" ஒன்னுல்ல டா . " விக்கி .
( டேய் எருமைகளா . இப்டியே மொக்கையா பேசுனிங்கன்னா , படிக்கறவங்க கூட படிக்காம போய்ருவாங்க டா . - மீ .
போட்டும் டி . உன்னோட தொல்லைல இருந்து தப்பிச்சுருவாங்கல்ல - அபி ( 😜 )
என்ன டா . பாப்பு பாவம் இல்ல . நீ இப்டி சொல்ற - மீ ( பாவமா மூஞ்சிய வச்சுப்போம் . இல்லன்னா நம்பாதுங்க😜 )
யாரு நீயு , பாவம் . பாவமே பாக்காம இத்தன பேர கொன்னுட்டு , நீ பாவமா - விக்கி .
டேய் சத்தமா சொல்லாத டா . அப்புறம் ஜெயில்ல தூக்கி போட்டற போறாங்க - மீ (😟 )
சரி நீ கெளம்பு . இத படிச்சா தான் ரீடர்ஸ் கடுப்பாவாங்க - அபி .
ஓகே . நான் போறேன் . மொக்கையா பேசப்படாது . - மீ 😎 )
" அவ போய் தூங்கிட்டா ( என்னைய தான் சொல்லுதுங்க ) வா , நம்ம பேசுவோம் . " அபி .
இருவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர் . அப்போது , நிஷாவின் மீது ஒருவன் வந்து விழுந்து விட்டான் . அவ்வளவு தான் , ஸ்னேஹா பத்திரகாளி ஆகிவிட்டாள் .
" idiot . அறிவில்ல . இப்டி தான் வந்து விழுவியா . " என்று அவனின் சட்டையை கொத்தாக பிடித்துக் கொண்டு இவள் திட்டினாள் .
இதையெல்லாம் எல்லா படங்களில் வருவது போல் , விக்கியும் ஸ்லோ மோஷனில் நடப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தான் .
.
.
" இதுவும் love at first sight தான் . " ஸ்னேஹா .
" இல்ல . இத்தன வருஷமா , இதுக்கு பேர் லவ்வா இல்லையான்னு யோசிச்சுக்குட்டே இருந்தேன் . கொஞ்ச நாள் முன்னாடி தான் confirm ஆச்சு . " விக்கி .
" நம்ப முடியாது . கிளம்புங்க . ஏய் , என்ன வேடிக்க பாக்குற . வா போலாம் . " என்று விக்கியிடம் ஆரம்பித்து , நிஷாவை திட்டி விட்டு இழுத்துச் சென்றாள் .
.
.
.
கிஷோர் பேங்களூர் வர போகிறான் என்று தெரிந்தவுடன் ஹேமாவிற்கு தலை கால் புரியவில்லை . மகிழ்ச்சியுடன் அவனது வருகையை எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கிறாள் .
அவள் எதிர்பார்த்த அந்த நாளும் வந்தது .
கூடவே சோகங்களும்...
.
.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro