Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

07

( 07° ) ஆவிகளின் சரணாலயம்....

ஸ்னேஹா நிஷாவிடம் புலம்பிக் கொண்டிருந்தாள் .

" யாரு டி அவன் . திடீர்னு வந்து லவ் பண்றன்னு சொல்றான் . இடியட் . " என்று திட்டினாள் .

" எனக்கு என்ன டி தெரியும் . "

" போ லூசு . "

" என்ன லூசு . அது யாருன்னு உனக்கே தெரியலன்னா , எனக்கு எப்டி தெரியும் . "

" ஆமால்ல . "

" ஆமா . ஆனா யாரு டி அவன் . " என்று சினுங்கினாள் ஸ்னேஹா .

" பாத்துக்கலாம் பேபி . டோன்ட் வர்ரி . "

" ம்ம்ம்ம் . " என்று கூறினாலும் , ஸ்னேஹா  அவனை மறக்கவில்லை .

..................................................................

" என்ன டா பண்ணி வச்சுருக்க . " அபி .

" என்ன பண்ணேன் . "

" அந்த பொண்ணோட முகத்த பாத்தியா . பேயறஞ்ச மாதிரி ஆகிருச்சு . " அபி .

" அதுக்கு நான் என்ன பண்ண . "

" லூசா நீ . திடீர்னு போய் லவ் சொல்ற . "

" நான் லவ் தான சொன்னேன் . "

" போச்சு . இவுனுக்கு பைத்தியம் முத்திடுச்சு .  இவனுக்கு‌ தான் பைத்தியம்னா , நம்மலையும் பைத்தியம் ஆக்கிடுவான் போலையே . " என்று தனக்கு தானே பேசிக் கொண்டான் .

" அபி மாமா . இவன் பைத்தியம்னு உங்குளுக்கு இப்போ தான் தெரியுதா . " ஹேமா .

" ஓய் . இவன் இன்னிக்கு என்ன பண்ணான்னு தெரியுமா . " அபி .

" அப்டி என்னத்த டா பண்ணி தொலைச்ச . " ஹேமா .

" என்னோட ஆள் கிட்ட போய் , லவ் பண்றன்னு சொன்னேன் . " என்று கூறி தோளைக் குலுக்கினான் விக்கி .

" என்ன்அஅஅஅஅ . போய் லவ்வ சொல்லிட்டியாஆஆஆ . " ( படத்துலலாம் வர்ர மாதிரி ஸ்லோ மோஷன்ல இமேஜின் பண்ணிக்கோங்க . )

" ஆமா . அதுக்கு இப்போ என்ன . " விக்கி .

" அதுக்கு என்னவா . என்ன சொன்னாங்க அவங்க . " ஹேமா ஆர்வமாக கேட்டாள் .

" இடியட்னு திட்டினா . " விக்கி .

" அப்றம் , திட்டாம கூப்டு வச்சு கொஞ்சுவாங்களா இவன . லூசு மாதிரி பண்ணி வச்சுருக்கான் இவன் . திடீர்னு போய் லவ் சொன்னா , எந்த பொண்ணு ஒத்துக்கும் . இதுல இவன் , அந்த பொண்ணோட ஃப்ரெண்டையும் திட்டிட்டான் . " அபி .

" டேய் மச்சி . நான் போய் லவ் சொன்னது தப்பா . இல்ல , அந்த பொண்ண திட்டுனது தப்பா . எது தப்பு மச்சி . " என்று சிரித்துக் கொண்டே கேட்டான் விக்கி .

" அ..அது . நீ போய் லவ் சொன்னல்ல . ஆமா சொன்னியா . ந்..நா என்ன பேசுரேன் . " அபி குழப்பத்தில் கேட்டான் .

" பார்ரா . குழம்பி போண மாதிரி நடிக்கிரியா . நான் உன்ன பாக்கலன்னா நெனச்ச . நான் உன்ன பாத்துட்டேன் . " விக்கி .

" எத டா பாத்த . " அபி .

" நீ அந்த பொண்ண வச்ச கண்ணு வாங்காம பாத்ததையும் பாத்தேன் , அந்த பொண்ண நான் திட்டுனப்ப , என்ன முறலச்சல்ல , அதையும் பாத்தேன் . " என்றான் சிரித்துக் கொண்டே .

" அது வந்து டா..... " என்று இழுத்தவனை பார்த்து முறைத்தாள் ஹேமா .

" என்ன மாமா . அவன் பண்ணத மட்டும் சொன்னிங்க . நீங்க பண்ணத சொல்லவே இல்ல . " ஹேமா .

" நல்லா கேளு டி . " விக்கி .

" போதும் டா . எனக்கு தூக்கம் வருது . நான் போறேன் . " என்று கூறியவனை இருவரும் விடாமல் பிடித்து வைத்துக் கொண்டனர் .

💝💝💝💝💝

ஆவிகளின் சரணாலயம் ( சென்னை )

அனைவரும் சற்று பதற்றத்துடன் காணப்பட்டனர் . " திரும்பி திரும்பி , அதையே பண்றதுக்கு , அத பண்ணாமலேயே இருக்கலாம் . இடியட்ஸ் . அந்த ஆவிக்கு வேற வேலையே இல்ல . " அங்கு உள்ள ஒருவள் .

" அது என்னமோ உண்மை தான் . " என்று அவள் கூறிக் கொண்டிருக்கும் போதே , உள்ளே நுழைந்தார் அவர்களின் சீஃபான ஷெர்லின் .

" ஹாய் காய்ஸ் . எப்பையும் இது நடக்குறது தான் . முப்பது வருஷமா , வாய திறக்காம இருக்கற ஆவியை , பேச வைக்கனும் . ஒரு ஆவிக்காக , இத்தன கஷ்டமான்னு கேக்குறது புரியுது . அது நல்ல ஆவியா இல்லையான்னு கூட , யார்னாலையும் கண்டு பிடிக்க முடியலையாம் . ஆவிகளின் சரணாலயம் தொடங்குனதுல இருந்து , இந்த மாதிரி நடந்தது , இது தான் ரெண்டாவது தடவ . சோ , இந்த கேச எப்டி முடிக்க போறோம்னு யோசிங்க . மீட்டிங்க , செந்தில் கன்டின்யூ பண்ணுவாரு . " என்று கூறி விட்டு அகன்றார் ஷெர்லின் .

👻👻👻👻👻👻👻👻👻👻👻👻👻👻


Bạn đang đọc truyện trên: Truyen247.Pro