
06
( 06 ) ஆவிகளின் சரணாலயம்..
ஸ்னேஹாவும் , நிஷாவும் பெங்களூர் சென்று கொண்டிருக்கின்றனர் .
திருப்பூர் ரைல்வே ஸ்டேஷனில் ட்ரைன் நின்று கொண்டிருந்தது .
" நிஷா . எதுக்கு டி போறோம் . சொல்லு டி . அப்புறம் , அது என்னமோ சொன்னியே . அது என்னது டி . "
" அது oneirologyனா , கனவ பத்தி படிக்குறது . நமக்கு ஏன் கனவு வருது , கனவுன்னா என்னன்னு , கனவ பத்தி ஆராய்ச்சி பண்ணுவாங்க . "
" ஓஓஓஓ . அதுக்கு எதுக்கு டி , வாய்ல நுழையாத பேர் வச்சாங்க . அது என்ன ஓனெரியோலஜியா . இல்ல , ஒனைரியோலஜி . போ , வாய்ல நுழையல . என்ன பேர் இது . " என்று நொந்து கொண்டாள் ஸ்னேஹா .
" போ டி . உனக்கு வாய்ல வரலன்னு சொல்லு . எரும . " என்று திட்டினாள் நிஷா .
" போ டி . "
தொடர் வண்டி கிளம்பியது . இருவரும் பேசிக் கொண்டே அமர்ந்து இருந்தனர் .
அடுத்த நாள் காலையில் பெங்களூர் ரைல் நிலையம் வந்து சேர்ந்தனர் .
" ஓய் பேபி . பசிக்குது டி . " ஸ்னேஹா .
" எனக்கும் தான் பசிக்குது . வா ரூம்க்கு போய்ட்டு சாப்டுவோம் . "
இருவரும் ஒரு ஆட்டோ பிடித்தனர் . அவர்களின் ஆட்டோ , ஒரு சிக்னலில் நின்றது .
அவர்களுக்கு அருகில் தான் விக்கியும் , ஹேமாவும் வண்டியில் நின்றிருந்தனர் .
அருகில் இருக்கும் ஆட்டோவை விக்கி கவனித்து விட்டான் . அதில் , ஸ்னேஹா அமர்ந்திருப்பதையும் அவன் அறிந்தான் .
" குட்டி . " விக்கி .
" என்ன டா . " ஹேமா .
" பக்கத்துல ஒரு ஆட்டோ இருக்குல்ல . அதுல என்னோட ஆளு இருக்கா டி . " விக்கி .
" யாரு டா . லெஃப்டா ரைட்டா . " ஹேமா .
" லெஃப்ட் டி . " விக்கி .
" சூப்பரா இருக்காங்க டா . " ஹேமா .
அதற்குள் , சிக்னல் மாற , வண்டிகள் முன்னால் சென்றது .
" டேய் அண்ணா . அவங்கள ஃபாலோ பண்ணுடா . " ஹேமா .
" ம்ம்ம் . "
அந்த ஆட்டோவை இருவரும் ஃபாலோ செய்தனர் .
.................................................................
கிஷோர் தனக்கு வந்த கனவை பற்றி என்னிக் கொண்டிருந்தான் .
👻👻👻👻👻
கிஷோர் மழையில் நனைந்து கொண்டே சிலையென நின்றிருந்தான் . அசையக் கூட இல்லை . கண் இமைக்காமல் , நின்றிருந்தான் . கண்களில் இருந்து இரத்தம் வழிந்து கொண்டிருந்தது . அப்போது அவன் முன் ஒரு உருவம் . அவனின் தலை முடியை பிடித்து தூக்கியது . அப்போது கூட இவன் அசையாமல் இருந்தான் . அங்கு மீண்டும் ஒரு உருவம் . அவனை காப்பதற்கு , மற்றொரு உருவத்திடம் சண்டையிட்டது . அப்போது , நிஷாவை , அந்த உருவம் கொல்ல பார்க்க , அந்த உருவம் செயலிழந்து போணது . அந்த உருவத்தை , மற்றொரு உருவம் கொல்ல வர , இவன் " மகீஈஈஈஈஈஈஈஈஈ " என்று கத்தியவாரு எழுந்தமர்ந்தான் கிஷோர் .
( யார் அந்த மகி . )
👻👻👻👻👻👻👻👻👻👻👻👻👻👻
நிஷாவும் , ஸ்னேஹாவும் , oneirologyயை படித்தவரின் வீட்டில் அமர்ந்து இருந்தனர் .
" சொல்லுங்க . என்ன ப்ரச்சனை உங்குளுக்கு . " உமா .
" மேடம் , எனக்கு ஒரு கனவு . " நிஷா .
" என்ன கனவு . " உமா .
நிஷாவும் அனைத்தையும் கூறினாள் .
" இங்க பாருங்க நிஷா , கனவுன்றது நம்ம மனசு உருவாக்குற பிம்பம் . நம்ம கனவுல பாக்குறவங்க நேர்ல வாங்கன்னு நிரையா பேர் வந்துருக்காங்க . நம்ம கனவுனால , முழுமையான ஒரு உருவத்த உருவாக்க முடியாது . இது எல்லாமே ப்ரம்மை . " உமா .
" இல்ல மேடம் . என்னால அத மறக்க முடியல . " நிஷா .
" கனவ மறக்க முடியலையா , இல்ல கனவுல வந்தவங்கள மறக்க முடியலையா . " உமா சிரித்துக் கொண்டே கேட்டார் .
" கனவுல வந்தவங்கள தான் மறக்க முடியல மேடம் . அந்த உருவம் எதுக்கு என்ற காப்பாத்த வரனும் . " நிஷா .
" நிஷா , இன்னிக்கு இது போதும் . மத்தத நாளைக்கு பாத்துக்கலாம் . " உமா .
" ஓகே மேடம் , நாங்க கிளம்புரோம் . " என்று கூறி , இருவரும் அங்கிருந்து சென்றனர் .
" என்ன டி . கனவுல வந்தவங்கள உன்னால மறக்க முடியலையா . " ஸ்னேஹா .
" ஆமா டி . யார் அதுன்னு தான் தெரியல . ஆனா , அவங்க உண்மையா வந்தா லவ் பண்ணுவேன்னு நினைக்கிறேன் . " நிஷா சிரித்துக் கொண்டே கூறினாள் .
" பார்ரா , லவ் பண்ணுவிங்களா . " ஸ்னேஹா .
இருவரும் , ஒரு காஃபி ஷாப்பில் அமர்ந்து இருந்தனர் . அப்போது அவர்கள் அருகில் வந்தனர் , விக்கியும் , அபியும் .
( ஹேமாவ வீட்டுல விட்டுட்டு , அபிய கூட்டிட்டு வந்துட்டான் . )
" ஹாய் . " விக்கி .
" யாரு டி இது . " நிஷா .
" யாருக்கு தெரியும் . " என்று நிஷாவிடம் கேட்டவள் , அவனிடம் " என்ன வேணும் . யார் நீங்க . " என்று ஆங்கிலத்தில் கேட்டாள் .
" தமிழ்லையே பேசுங்க . எங்குளுக்கும் தமிழ் தெரியும் . " என்று அபியையும் சேர்த்துக் கொண்டான் .
" கேட்டதுக்கு பதில் சொல்லுங்க . யார் நீங்க . " நிஷா .
" ஏய் . நீ அமைதியா இரு . நான் இவள தான் லவ் பண்றேன் . " விக்கி .
" லவ்வா . இடியட் . வாட் ஆர் யூ ஸ்பீக்கிங் . " திட்டினாள் ஸ்னேஹா .
" தேங்க் யூ ஸ்னேஹா . " விக்கி .
" என்னது . நான்சென்ஸ் . அறிவு இல்ல உங்குளுக்கு . லவ்வாம் . இடியட் . " என்று திட்டிவிட்டு , நிஷா விடம் , " வா டி போலாம் . " என்று அவளை இழுத்துக் கொண்டு செல்லும் போது , விக்கி ஸ்னேஹாவின் கையை பிடித்து தடுத்தான் .
" என்ன பண்றிங்க . இதே உங்க தங்கச்சி கைய ஒருத்தன் பிடிச்சா , கோவம் வரும் இல்ல . உங்குளுக்கு வந்தா ரத்தம் , எங்குளுக்கு வந்தா தக்காளி சட்னியா . " நிஷா .
அவன் அமைதியாகி விட , இருவரும் அந்த இடத்தை விட்டு அகன்றனர் .
_____________________________________
இனி என்ன நடக்கும் என்று அடுத்த பாகத்தில் பார்க்கலாம்....
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro