
04👻
( 04° ) ஆவிகளின் சரணாலயம்....
நிஷா கண் விழித்து பார்த்தாள் . அவள் , அவளுடைய அறையில் இருந்தாள் . அது கணவா இல்லை உண்மையா என்று அறிய முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள் . அப்போது அவளுடைய தாய் , அறைக்குள் நுழைந்தார் .
" என்ன நிஷா . இன்னிக்கு ஏன் இவ்ளோ லேட் . பாரு மணி பத்து ஆச்சு . என்னடா , உடம்பு சரியில்லலயா . "
" அப்டிலாம் இல்லம்மா . நான் நல்லா தான் இருக்கேன் . கொஞ்ச நேரத்துல வரேன் . நீங்க போங்க . " என்று அவரை அனுப்பி வைத்தவள் , தலையில் கையை வைத்துக் கொண்டு அமர்ந்து விட்டாள் .
மனதினுள் , கனவில் வந்ததை எல்லாம் ஓட்டி பார்த்தாள் . அது உண்மையிலேயே நடந்ததை போல் தான் இருந்தது . அப்போது அவள் ஃபோன் அடிக்கவும் , பயந்து போணாள் நிஷா .
அது அவளுடைய ஃபோன் தான் என்று அறிந்ததும் தான் அமைதி அடைந்தாள் .
ஃபோன் அடித்துக் கொண்டே இருக்கவும் தான் , தன் நினைவில் இருந்து வெளியே வந்தவள் , ஃபோனை எடுத்து பார்த்தாள் . அதில் கிஷோர் என்று வந்தது . நிஷாவும் ஃபோனை காதுக்கு கொடுத்தாள் .
" ஹலோ நிஷா . "
" சொல்லு கிஷோர் . இப்போவே ஃபோன் பண்ணிருக்க . என்ன ஆச்சு . "
" ஏய் , நான் இன்னிக்கு யூ.எஸ் போரேன் . "
" ஓஓஓஓ . ஆமால்ல . ஆல் தி பெஸ்ட் கிஷோர் . "
" தேங்க் யூ டி . நீ என்ன பண்ற . "
அவளும் அவளுக்கு வந்த கனவை பற்றி கூறினாள் .
" ஹே லூசு . அது கனவு தான . விடு டி . "
" விட முடியல கிஷோர் . அது எதுக்கு என்னக்கு வரனும் . காலைல எந்திரிச்ச ஒடனே , அது கனவுன்னே என்னால நம்ப முடியல . உண்மை மாதிரியே இருந்துச்சு டா . எப்டி ஈசியா விட சொல்ற . "
" விட்டு தான் ஆகனும் நிஷா . நம்ம ஆவி கூடவே சுத்திட்டு இருக்கோம் . அத பாத்து நம்ம பயபடனும்ன்ற அவசியம் இல்லை . உனக்கே தெரியும் . ஆவிகளின் சரணாலயத்துல இருந்து எந்த ஆவியும் வெளிய வர முடியாது . கவலை படாத நிஷா . "
" இல்ல கிஷோர் . இங்க தான் அப்படி . ஹெட் ஆஃபிஸ்ல இருக்க ஆவி எல்லாமே , அத ஹேன்டில் பண்றவங்க கூடவே தான் இருக்கும் . "
" நிஷா . அதுக்கும் ஒரு எல்லை இருக்கு , தெரியும்ல . "
" தெரியும் டா . ஆனா பயமா இருக்கு . "
" பயப்படாத டி . "
" ம்ம்ம் . "
" சரி டி . நான் வைக்குரேன் . "
" ம்ம்ம் பை . " என்றவள் ஃபோனை வைத்து விட்டாள் .
இருந்தாலும் மனதில் அதையே போட்டு குழப்பிக் கொண்டிருந்தாள் .
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இங்கு அமர்ந்திருந்தவனுக்கு முகம் வியர்த்துக் கொட்டியது . காரணம் , அதே போல் கனவு அவனுக்கும் வந்திருந்தது . இதே கனவு எப்படி அவளுக்கும் வந்திருக்கும் என்ற ஆராய்ச்சியில் அவன்.....
..................................................................
" டேய் , ஹேமா எங்க டா . " என்று காலையில் ஆஃபிஸ் கிளம்பும் அவசரத்தில் கேட்டான் அபி .
" அவ தூங்குரா . " என்று பதிலளித்தான் விக்கி .
" இன்னுமா தூங்குரா . " என்று கேட்டுக் கொண்டே சென்று அவள் ரூம் கதவை தட்ட , அது திறக்கப் படவே இல்லை .
" டேய் . ஹேமா கதவ திறக்க மாட்டிங்குரா . "
" என்ன . " என்று கேட்டுக் கொண்டே அவன் அருகில் வந்தான் விக்கி .
" ஹேமா . " என்று விக்கி கத்தினான் . ஆனால் பதிலில்லை
.
" கதவ உடைச்சரலாமா . " என்று அபி கேட்டுக் கொண்டிருக்கும் போதே ஹேமா கதவை திறந்தாள் .
" என்ன ஆச்சு டி . " விக்கி .
" இல்ல டா . தூங்கிட்டேன் . " ஹேமா .
" காலேஜ் போர ஐடியா இல்லையா . " அபி .
" நான் இன்னிக்கு லீவ் . நேத்து நைட்டே இவன்ட்ட சொல்லிட்டேன் . " ஹேமா .
" சரி டி . போய் தூங்கு . வீட்டுல இன்னிக்கு யாரும் இல்ல . தாத்தா பாட்டிய பாக்க போயிருக்காங்க . பத்திரமா இரு . " என்று கூறி விட்டு சென்றனர் அவர்கள் இருவரும் .
இவளும் , சென்று கதவை பூட்டி விட்டு , டீவி பார்க்க சோஃபாவில் அமர்ந்தாள் .
நேரம் நகர்ந்தது . இரவு மணி எட்டு .
கரன்ட் திடீரென்று கட் ஆனது . ஹேமா அதிர்ந்தாள் . அவளது ஃபோன் இப்போது தான் தனது உயிரை விட்டிருந்தது . வேகமாக அறைக்கு சென்று விடலாம் , என்று நினைத்து செல்ல முயன்றாள் . அப்போது , அவள் முன் ஒரு உருவம் . அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தது . ஹேமா பயத்தில் பின்னால் செல்ல , அதுவோ அவளை நோக்கி வந்தது . ஹேமா கண்களில் பயத்துடன் அந்த உருவத்தையே பார்த்தாள் . அவளுக்கு கத்த கூட தோன்றவில்லை . பயத்தில் உடல் நடுங்கியது . அந்த உருவம் அவள் அருகில் வந்து விட்டது . இவளுக்கும் அந்த உருவத்துக்கும் , இரண்டு சென்டீமீட்டர் தான் இடைவேளை . ஹேமா பயத்தில் , " மகீஈஈஈஈஈஈஈ " என்று கத்தியவாரே எழுந்தாள் .
👻👻👻👻👻👻👻👻👻👻👻👻👻👻
யார் அந்த மகி . அவனுக்கும் இவளுக்கும் என்ன சம்பத்தம் . நிஷாவும் , கிஷோரும் ஆவிகளின் சரணாலயத்தில் வேலை செய்கிறார்கள் . அதனால் , அவர்களுக்கு அந்த கனவு வந்தது . ஆனால் ஹேமாவிற்கு எப்படி இந்த கனவு வந்தது . பார்க்கலாம் வரும் அத்யாயங்களில்.....
👻👻👻👻👻👻👻👻👻👻👻👻👻👻
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro