ஆரம்பம் - 1
அடர்ந்திருந்த மேகங்களின் எதிரனைகள் அனலாய் நிலத்தை தாக்க.. அனல் கண்ட தீயுலகம் பல கல் தூர தொலைவில் அமைந்திருந்தும் வெப்பம் தாளாது தேகம் வேர்வையில் குளித்திருக்க.. பயம் துளிர்விட்டிருக்க... கோவம் கண்களை மறைக்க... நடக்க மறுத்த காலை இழுத்து கொண்டு ... பாதி வெடிப்புகளும் ... விரிசல்களும் விழுந்த சாலையில் நெருப்பு குமிழிகள் வெடித்து கொண்டிருக்க பல மதிழுந்துகளும் பெரிய வாகனங்ளும் ஒன்றை ஒன்று இடித்து சராமரியாய் தாக்கியதில் வெடித்து சிதறி கிடக்க.. அக்கம் பக்கம் சிலர் இரத்த வெள்ளத்தில் மடிந்து கிடக்க ... பல கட்டிடங்கள் இடிந்து சரிந்திருக்க... பல கட்டிடங்களில் தீ பிடித்து புகை வந்தவறாரிருக்க... விகாரமாய் இருந்த அந்த சாலையில் தன்னந்தனியாய் நடந்து சென்றான் அவன்....
விகோரமாய் தெரிந்த இருள் வாணில் மெல்ல மெல்ல சூரியனவனின் ஆட்சி மேலோங்க.... வாணம் செம்மை சாயம் பூசி கொண்டு கண்களை மறைக்கும் கூசிய ஒளியுடன் உலகிற்கு அபாய மணிகளுடன் நெருங்கியது...
சூரியனின் பயங்கரமான தோற்றத்தை கண்கள் சுருங்க பார்த்தவன் அசராது அவன் பாதையில் நேரே நடந்தான்...
அதே பாதையில் அவனுக்கு நேரெதிரிலிருந்து பல மக்கள் உயிரை கையில் பிடித்து கொண்டு அவனை தாண்டி ஓடினர்.... அவர்களில் ஒருவர் ஓட்டத்திலே இவனை இடிக்க... தடுமாறி கீழ் விழ போனவன் தட்டு தடுமாறி எழுந்து அவன் பாதையை தொடர்ந்தான்....
அவனின் நடையில் எந்த பயமும் இல்லாமல் தைரியம் நிறைந்திருக்க... அவனை நோக்கி அபாயகரமான ஆயுதங்களுடன் கருப்பும் பச்சையும் கலந்த வாகனத்தில் வந்தனர் அந்நாட்டின் இராணுவ படையினர்...
அதை கண்டடும் காணாது தன் நடையை தொடர்ந்தவனை அனைவரும் அதிர்ச்சியோடு நோக்க.... அந்த ட்ரூப் வண்டியிலிருந்து பாதி உடல் வேர்வையில் திலைத்திருக்க பெரும் மைக்குடன் எழுந்தார் கேப்ட்டன்...
கேப்ட்டன் : ஏ என்ன தைரியத்துல முன்னேறி வர... மரியாதையா பின்னாடி போ... என அந்த சாலையே அதிர கரகரவென்ற குரலில் கர்ஜித்தார்...
அவரது குரலிலே ஏதோ ஒரு பயமும் கலந்திருந்தது அவனுக்கு தெரியாமலில்லை... தன் முன் நூற்றுக்கணக்கான இராணுவ படையினர் தன் உயிரை குடித்து விடும் நோக்கில் கடைசி எச்சரிக்கையுடன் நின்றும் அதை ஈ எறும்பாய் எண்ணியனின் நடை நின்றபாடில்லை...
தானே எச்சரித்தும் தொடர்ந்து வருபவனை கண்டு கோவம் தலைக்கேற... அவருக்கு கீழிருந்த ஒரு வீரரை அவனை சுட்டு தள்ள உத்தரவு பிறப்பித்தார்...
சீரி வந்த புல்லட் ஒன்று நடந்து வந்தவனின் தோளில் துளையிட... அ என ஒரு நொடி பின்னோக்கி தள்ள பட்டவன் இரத்தம் தெறிக்க விழ போனவன் உடலின் அதிர்வை சமாளித்து குண்டு பட்ட இடத்தினை உள்ளங்கையால் இறுக்கி பிடித்து கொண்டு மீண்டும் நடந்து வந்தான்...
அவனை உருத்து நோக்கிய இராணுவ வீரர்களின் மனதில் பிரளயமே வெடிக்க... மனம் வெதும்பி இருந்தவர்களுள் இவனது தைரியமும் அசராத அந்த நிமிர்வும் கேப்ட்டனை அதிர வைத்தது...
கேப்ட்டன் : சொல்றத கேட்டு இப்போவே ஓடீடு... இந்த இடமே இன்னும் கொஞ்ச நேரத்துல அழிய போகுது... உன்ன கொல்லவும் தயங்க மாட்டோம்.... வெளிய போ... என மீண்டும் தன் வரட்டு தொண்டையினிலிருந்து குரலை இழுத்து கத்தினார்...
என் காது கேட்காதடா என்பதை போல் தன் ஒரு காலை இழுத்து கொண்டும் ஒரு கையை தாங்கி பிடித்து கொண்டும் கண்களில் கோபமும் வெறியும் நிறம்பி வழிய நிமிர்ந்து வந்து கொண்டே இருந்தான் அவன்...
ஆத்திரமடைந்த கேப்ட்டன்
கேப்ட்டன் : அட்டக் ஹிம் அகெய்ன் என காது கிளிய கத்தினார்.... மின்னல் வேகத்தில் சீரி பாய்ந்த புல்லட் கண்ணிமைக்கும் நொடி பொழுதினில் அவன் கழுத்திற்கும் தோளிற்கும் இடையில் இறங்க.... அதன் அதிர்வில் பின்னோக்கி தள்ளப்பட்டவன் வலியை பொருட்படுத்தாது முன்பை விட வேகமாய் முன்னேறினான்...
கேப்ட்டன் : யு ப்லைண்ட் ஃபூல்.... அவன் தலைல சுட்டு தள்ளு... செத்து ஒழியட்டும்... நமக்கு நேரமில்ல.... என கீழிருத வீரரின் காதருகில் போய் அவர் செவிகளை செவுடாக்கும் பொருட்டு அடி தொண்டையிலிருந்து அலரினார்.... எதிர்பாராத இந்த அலரலில் அதிர்ந்து போன அந்த வீரரின் கரங்கள் எதிலோ பட... எக்குத்தப்பாய் உயிர்பித்த பெரிய துப்பாக்கியிலிருந்த ஒரே ஒரு உலகளவு விஷ மருந்தை கொண்ட ஆபத்தான அந்த தோட்டா அதி வேகத்தில் சீரி பாய்ந்து அவன் நெஞ்சில் துளையிட்டது..
ஒரு நொடி அதன் அதீத சத்தத்தில் அந்த இராணுவ படையே கேப்ட்டனை அதிர்ந்து நோக்க.... கண்களை விரித்து கொண்டு அதிர்ச்சியிலிருந்த கேப்ட்டனின் முன் பதினைந்தடி தூரத்தில் மூச்சற்று கீழே சரிந்தான் அவன்...
சில நொடிகள் நடந்ததை ஜீரனிக்க இயலாமல் நின்ற கேப்ட்டனின் மூளையில் அந்த தோட்டா உள்ளிருக்கும் விஷத்தின் வீரயமும் அதன் ஆபத்தும் அதன் விலையும் அது ஒரு உடம்பில் நுழைந்தால் நொடி பொழுதில் உயிர் குடித்து விடும் என்ற விஷயமும் அந்த உயிர் பிரிந்த சில நொடிளிலே அது வெடித்து சிதறினால் சுற்று வட்டாரத்தில் கிட்ட தட்ட அருகில் உள்ள இரண்டு கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள அனைத்தும் உரு தெரியாமல் அழிந்து விடும் என அவருக்கு மட்டுமே தெரிந்த அந்த ஒரு இரகசியமும் ரிங்காரமிட... அவரின் இமைகள் ஒரு முறை இமைத்த மூடிய நொடியே மூட இயலாது செய்வதை போல் தட்டுத்தடுமாறி கண்கள் சொருக மீண்டும் எழுந்து நின்றான் அவன்...
அந்த மொத்த இராணுவ படையும் இரத்த ஓட்டம் நின்றிட அவனை கண்கள் இமைத்திடாது நோக்கினர்.... அதை எதையும் கண்டு கொள்ளாதவனின் நடை மீண்டும் தொடர.... ஸ்னைப்பர் கன்னால் அவனை குறி வைத்த ஒரு வீரரை உடனே தடுத்தார் கேப்ட்டன்...
கேப்ட்டன் : இல்ல ... இல்ல அவன சுடாத.... அவன் உடம்புல வேற எதாவது ஒரு கீறல் பட்டு உயிர் பிரிஞ்சாலும் இந்த ஊரோட நாமளும் கண்ணிமைக்கிர பொழுதுலையே அழிஞ்சிடுவோம்.... அவனுக்கு வழி விட்டு ஒதுங்கி நில்லுங்க.... என பயத்தில் நடுங்க வெளி வந்தவரின் நடுக்கத்தை முதல் முறை கண்ட அனைத்து வீரர்களும் உடனே வழி விட்டு ஒதுங்கி நின்றனர்...
அவர்களை ஒரு பொருட்டாக கூட மதித்திடாமல் தாண்டி சென்றவனினன் வலது பக்க கழுத்தில் மறைவாய் தெரிந்த ஒரு குறியீட்டை கண்ட கேப்ட்டன் அதிர... அவர் பின் இன்னோறு ட்ரூப் வண்டியில் அமர்ந்திருந்த அவரது உதவியாளர் அவனது முக அடையாளத்தையும் அவனது நெற்றியிலிருக்கும் ஒரு தழும்பையும் கழுத்தில் கிடந்த செய்னையும் கண்டதில் நாக்கு மேலண்ணத்தில் ஒட்டி கொள்ள... தானாய் உடல் நடுங்கிட .... இதழ் வெடவெடக்க உச்சரித்தார் ஒரு பெயரை...
அந்த பெயரை செவிசாய்த்த கேப்ட்டன் இன்னும் அதிர... வீரர்கள் உறைந்து நின்றனர்.... கேப்ட்டனின் அதரங்கள் தானாய் உச்சரித்தது " சன் ஆஃப் தி கிரேட் கர்னல் மெல்வின் வியர்டோ.. மிஸ்டர் நவிஸ் அல்டோ "
இதை செவி சாய்த்தவனின் உதடுகள் குறுநகை பூக்க... இழுத்து கொண்டு வந்த காலை முறுக்கியவன் இப்போது கம்பீரமாய் நடந்து சென்றான் நவிஸ் அல்டோ என்னும் நவிழன்...
இராணுவ படையினர் அனைவரும் அவனை உருத்து நோக்க.... எந்த அலட்டலும் இல்லாமல் ஒரு கட்டிடத்திற்குள் நுழைந்து விளக்குகளை உயிர்பித்தவன் ஒரு ஹெட்ஃபோன்சை மாட்டி கொண்டு மைக்கின் முன் அமர்ந்தான்...
அபாயகரமான அலரல்களும் .... வெடித்து சிதறிடும் அணுகுண்டுகளின் ஓசைகளும்... குழந்தைகள் அலரும் ஓசைகளும் ... நிறைந்திருந்த அந்த உலகில் மெல்லிய ஓசையிடும் எதிரொலித்தது நவிழனின் குரல்....
" விதி தெரிகையில் சதி சரியும்...
மதி வேறுபடுகையில் கதி கீழும் ...
சிறம் தாக்கையில் கரம் நீளும்...
புறம் பார்க்கையில் மனம் மருகும்... "
என அழுத்தம் திருத்தமாய் மென்மையாகவும் தெளிவாகவும் வந்த குரலினில் மற்ற சர்ச்சையான அனைத்து ஓசைகளும் தனிச்சையாய் அடங்க.... பல மூளைகளிலும் இருந்த அனைத்து மக்களின் இடையிலும் இருந்த ரேடியோக்களில் ஒலிக்க தொடங்கியது நவியின் உரை...
" இதோட அர்த்தம் எல்லார்க்குமே தெரியும்.... விதி தெரிகையில் சதி சரியும்.... நம்மளோட விதி தெரிஞ்சதும் அத தடுக்க யாரு என்ன சதி செஞ்சிருந்தாலும் அது நடக்காது.... மதி வேறுபடுகையில் கதி கீழும்... அறிவும் யோசனையும் மாறுனா இருக்குர நிலமையும் கீழாகும்.... சிறம் தாக்கையில் கரம் நீளும்.... ஒருத்தர தாக்குனா யாரா இருந்தாலும் திரும்பி தாக்க கை நீளும்.... புறம் பார்க்கையில் மனம் மருகும்.... அருகருகே பாக்குரப்போ நம்ம கூட நல்லா இருந்தவங்களோட நிலமை இப்போ இப்டி இருக்குரத நினைக்கும் போது மனம் மருக செய்யும்..... "
என அந்த நேரத்திற்கு ஏதுவாய் ஒலித்த அவனின் கவிதையும் பொருளும் செவி சாய்த்து கொண்டிருந்தவர்களுக்கு அவர்களின் நிலையை நினைவுட்டி கண்ணீர் பெருக்கெடுக்க வைத்தது...
" இந்த நேரத்துக்கு நம்ம உலகத்தோட மக்கள் ஒவ்வொரு மூலையிலையும் உயிருக்கு பயந்து ஒடுங்கி இருக்காங்க... நம்ம இருப்பிடங்களையும் நம்ம இருந்த இடங்களையும் அரசாங்கம் அழிக்கிரதுக்கு காரணம் சுயநலம் இல்ல... நம்மள காப்பாத்த அவங்க எடுத்த முயற்சிகள்... " என அவன் கூறியதில் இதை கேட்டு கொண்டிருந்த இரண்டரைரை கோடிக்கும் மேற்பட்ட மக்களும் ஒருவரை ஒருவர் அதிர்ச்சியுடன் பார்த்து கொள்ள.... இதை கேட்டு கொண்டிருந்த இராணுவ படையினர் அதிர்ச்சியாக... கேப்ட்டன் கவலையுடன் தலை குனிந்தார்...
" நம்ம உலகத்துல இப்போ வாழ்ர மக்களோட எண்ணிக்கை... வெறும் மூன்றரை கோடி தான்... வெறும் மூன்றரை கோடி... அது கோடிடா பன்னாடைன்னு சொல்லாதீங்க " என அவன் சற்று கேலியான குரலில் கூறும் போது விரக்தியாய் புன்னகைத்தார் கேப்ட்டன்...
" ஏன்னா உண்மையாவே இதெல்லாம் பல வருஷங்களுக்கு முன்னாடி வெறும் கோடி தானாம்... என்னா அப்போ ஒரு நாட்டுலையே மூணு கோடி ஏழு கோடி மக்கள் இருந்தாங்க... இப்போ ... ம்ஹும்... " என சலிப்பாய் கூறியதை கேட்டு அப்படியா என பலரும் அதிர்ச்சியடைந்தனர்...
" இந்த நேரத்துக்கு சின்ன வயசுல தம்பி தங்கச்சிக்கிட்ட புடிங்க தின்ன சாக்லேட்டு... வீட்டு விட்டு கோச்சிக்கிட்டு அம்மா கிட்ட அழுதுக்குட்டே வந்து அடி வாங்குன அழுகை.... அப்பா கிட்ட வாங்குன திட்டு... டீச்சருக்கு தெரியாம பன்ன சேட்டை... நம்ம குழந்தைங்க வச்ச முதல் அடி... இப்டி பல நினைவுகள் வந்து போகும்... அதோட வேறு ஒரு விஷயமும் வரனும்..... " என கூறும் போது ஏதோ அவன் பேச்சை கேட்டு நிம்மதி பிறக்க அமர்ந்திருந்த மக்கள் மனதினுள்ளே என்ன என கேட்டு கொள்ள...
" சொல்றேன்.... சொல்ல போறது அதிர்ச்சியான தகவல் தான்... ஆனா தாங்குர சக்தி என் நாய் குட்டி ஜிம்மிக்கே இருக்கும் போது நமக்கு இருக்காதா என்ன.... " என்கும் போது மக்களின் முகத்தில் புன்னகை பூத்திட.... அவன் குரல் மட்டுமே ஒலித்து கொண்டிருந்த அந்த உலகில் திடீரென ரேடியோக்கள் அனைத்திலும் குழந்தை ஒன்றின் அழுகுரல் வீரிட்டு கேட்டது....
பசி தாளாமல் விட்டு விட்டு வீரிட்டு கேட்ட அழுகுரலில் திரும்பி தான் இருக்குமிடத்தை சுற்றி பார்த்த நவிழன் ஒரு ஓரத்தை கண்டு திடுக்கிட்டான்....
அங்கு தலையிலிருந்து இரத்தம் கோடாய் வழிய.... அழுது அழுது சிவந்து வீங்கிய கண்களுடன் அழுது கொண்டிருந்த குழந்தையை தன் நெஞ்சோடு இறுக்கி கொண்டு அமர்ந்திருந்தாள் ஒரு யுவதி...
அவளை கண்ட நவிழனின் கண்களில் இத்துனை நேரமில்லாது அந்த பெரும் ஆபத்தை கண்டும் இல்லாதிருந்த மிரட்சி தென்பட்டது... அவன் தன்னை கண்டு கொண்டான் என்பதை உணர்ந்தும் அவள் அதே போல் அமர்த்து அவனை பார்த்து கொண்டு அழ.... குழந்தையின் அழுகை சத்தத்தை கேட்டு கொண்டிருந்த அனைவருமே சற்று பயத்துடன் அமர்ந்திருக்க... ஹெட்ஃபோன்சை கலட்டி வைத்து விட்டு உடனே அவளருகில் சென்றவன் அக்குழந்தையை தூக்கி அவளுக்கு எழ உதவினான்...
டவலால் சுற்றப்பட்டிருந்த குழந்தையை தோளில் போட்டு தட்டி கொடுத்தவன் ...
" எதுக்கு மா இங்க இருக்க... குழந்தை ஏன் அழுது... பேரென்ன " என கேள்விகளை அடுக்கி கொண்டே அக்குழந்தையை தன் உடல் வலியுடன் சமாதானம் செய்து கொண்டிருந்தவன் அவள் அழுகையுடன் நிஹாசன் அல்டோ என்றதில் தனிச்சையாய் குழந்தையை பார்த்தான்...
இப்போது குழந்தையின் அழுகை நின்றிருக்க... வண்டு கண்களை திறந்து வைத்து செப்பு இதழில் எச்சில் நிறைந்திருக்க... அவன் சாயலை ஒத்திருந்தது அந்த ஆண் குழந்தை....
சில நிமிடங்கள் உறைந்து நின்றிருந்தவன் தன்னை அணைத்தவளின் இறுக்கத்திலே தன் நிலை பெற்றான் நவிழன்... கொலு கொலு கன்னத்தில் அழகாய் குழி விழ... குட்டி இதழ் விரித்து தந்தையை கண்டு சிரித்தான் அவன் மகன்....
அவனது கரங்கள் தனிச்சையாக அவளை அவனோடு இறுக்கிட .. அவன் அணைப்பில் புதைந்தாள் நவிழனின் மனைவி மிரானா நவிஸ் அல்டோ என்னும் மிர்துலஹாசினி
குழந்தையின் அழுகை நின்று சில நிமிடங்கள் கடக்க... திடீரென யாரோ ஒருவரின் கால் கனெக்ட்டானதாய் ஒரு ஒலி கேட்க ... குழந்தையை ஹாசினியிடம் கொடுத்த நவிழன் மீண்டும் போய் அமர்ந்தான்....
ஒரு முறை ஹெட்ஃபோன்சை எடுத்ததும் அவளை பார்த்தவன் அவள் அழுகையுடன் சிரிப்பதை கண்டு அதை அப்படியே போட்டு விட்டு அவளிடம் நெருங்கி வந்தவன் அவள் எதிர்பார்க்காத நேரம் அவளது இதழை தன்னிதழோடு கோர்த்து கொண்டான்...
எதிர்பாரா இதழ் முத்தத்தில் அதிர்ந்த ஹாசினி .. அவனிடமிருந்து திமிறி மென் கன்னங்கள் வெட்க்கதுப்புகள் பூசிட திரும்பி நின்று கொண்டாள்....
இப்போது அந்த காலருடைய காலை அன்ம்யூட் செய்தான்...
" குழந்தைங்க அழுரதால யாரும் பயப்புட வேண்டாம்.... நா சொல்ல வேண்டிய விஷயத்துக்கு வரேன்... நாளைக்கு 12 : 12 : 2112 ... நமக்கு இரெண்டு வர்ஷத்துக்கு முன்னாடி வந்த ஆபத்து போய்ட்டதா நீங்க நெனச்சிட்டு இருக்கீங்க.. ஆனா உண்மை அது இல்ல.... நாளைக்கு நாம இந்த உலகத்துல இருப்போமா மாட்டோமான்னு நமக்கே தெரியாதங்குரது தான் உண்மை... நம்ம உலகத்தோட அழிவு நெருங்கீடுச்சு.. நம்ம உலகத்தோட இரண்டு நாடுகளை இராணுவம் சூரியனோட பாதிப்பு பரவக்கூடாதுங்குரதுனால தான் வெடிச்சு சிதற வச்சாங்க... இப்போ அடுத்த கட்டமா அவங்க வெடிக்க வக்க போற நாடு இப்போ நா இருக்குர கன்யாச்சலம்... இங்க பதினஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடி வர இராணுவப்படை இருந்தாங்க... இப்போ பக்கத்து நாட்டுக்கு போய்ர்ப்பாங்க... மக்களையும் இங்கேர்ந்து அங்க துரத்திடாங்க.... இன்னும் சரியா இரண்டரை மணி நேரத்துல இந்த நாட்டுலையும் சூரியனோடு கதிர்கள் முழுசா விழ ஆரம்பிச்சிரும்.... அதுக்காக தான் என்னயும் உள்ள விடாம தடுக்க துப்பாக்கியால சுட்டாங்க.... மூணு புல்லட் தான் இறங்குச்சு... ஒன்னு தோளுல... ஒன்னு தோள்பட்டைல... இன்னோன்னு நெஞ்சுல.... எனக்கு ஒன்னும் ஆகாது... ஏன்னா என் உடல்ல ஆல்ரெடி அதுக்கான மருந்திருக்கு... நா செத்தா ஒரு நாழு மணி நேரம் களிச்சு தா சாவேன்... " என அசால்ட்டாய் சொல்லி கொண்டிருந்தவனை ஹாசினி அதிர்ச்சியோடு நோக்க.... கேட்டு கொண்டிருந்த அனைவரும் முன்பிருந்த அதிர்ச்சி பத்தாதென இவன் தந்த இறுதி அதிர்ச்சியில் உறைந்தனர்....
" ஆனாலும் உடலோட வலிமை இப்போவே குறைஞ்சிட்டு வருது.... ம்ம்ம் எப்போ வேணா போய்டுவேன்னு நினைக்கிறேன்... என் அம்மா தங்கச்சி... என் பொண்டாட்டி அதுவும் இல்லாம என் புள்ளையையும் பாத்துட்டேன்... அந்த திருப்தி போதும் எனக்கு... ஒரு சந்தோஷமான விஷயம்ப்பா... நா ஒரு வர்ஷத்தூக்கு முன்னாடியே அப்பாவாய்ட்டேன்.... ஹ்ம் உலகத்தோட கடைசி நாள்ள தெரியிது... சரி விடுங்க பரவாயில்ல... இப்போ இருக்குர இருவத்தி நாழு மணி நேரத்த வீணடிச்சிராதீங்க... முடிஞ்சா அடுத்த எப்பெமில் சந்திக்கிறேன்... அதுவரை உங்களிடமிருந்து விடைபெறுவது உங்கள் நவி " என்றதோடு கண்கள் சொருக கீழே விழப்போனவனின் இதழ்கள் " லவ் யு ஹசி " என முனுமுனுக்க கண்களை மூடி மூச்சற்று கீழே சரிந்தான் நவிழன்...
முற்றுமா...
ஹாய் இதயங்களே.... நேத்தே இந்த கதைய போற்றுக்கனும்... ஆனா என்னால பப்லிஷ் பன்ன முடியல... கொஞ்சம் கன்ஃப்யூஷன்ல இருந்தேன் அதான்... இந்த கதை உங்களுக்கு வித்யாசமா தான் இருக்கும்... பட் படிக்க நல்லா இருக்கும்... புடிச்சா படிங்க... கருத்தையும் சொல்லுங்க... நாளைக்கு காலம் யூடி குடுத்துடுறேன்.... பயப்புடாதீங்க...
நோட் : இக்கதையை இப்போது தொடர போவதில்லை.... அறிமுகம் மட்டும் தான்....
டாட்டா....
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro