ஆனந்தம் - 4
"நாயகி இந்த டிரஸ் இருக்குற பெட்டி எங்க வச்சிருக்க?"
ராஜரத்தினம் படியிலிருந்து இறங்கும் பொழுதே மனைவியை கேள்வி கேட்டுக்கொண்டே இறங்க, சோபாவில் உல்லாசமாக விசிலடித்து பேப்பர் பார்த்துக்கொண்டிருந்த மகனை பார்த்ததும் உடலில் இருந்த அழுப்பு கோவமாக மாறியது.
"பேருக்கு தான் பிள்ளைன்னு பெத்து வச்சிருக்கேன், ஆனா இது நாள் வர எனக்கு ஒரு செங்கல் தூக்க கூட உதவுனது இல்ல. என்ன புள்ளன்னு டி இவன நீ பெத்து போட்ருக்க? வயசான காலத்துல நான் இவ்ளோ வேலை பாக்குறேனே உதவி பண்ணலாம்னு கொஞ்சமாவது தோணுதா?"
தேவா அருகில் அமர்ந்து கைபேசியை பார்த்து சிரித்துக்கொண்டிருந்த இஷாவிற்கு சுற்றி என்ன நடக்கின்றனதென்று கூட தெரியவில்லை.
தந்தையை உதாசீனப்படுத்தியவன், "ஏய் போய் உன் அய்யாக்கு ஹெல்ப் பண்ண வேண்டியது தான? பல்ல இளிச்சிட்டு ஒக்காந்துருக்க" தங்கையை தேவா அதட்ட, தந்தைக்கு கோவம் வந்தது.
"அவ கொழந்த அவளை ஏன்டா மெரட்டுற? தெண்டம்"
மீண்டும் மகனை பேச இவர்களை கடந்து சென்ற அன்னையை பார்த்து தேவா எதுவும் பேசாமல் இருந்தான்.
அதன் பிறகு பிள்ளைகள் இருவரையும் எதிர்பார்க்காமல் தம்பதிகள் இருவருமே அத்தனை பொருட்களையும் கீழே கொண்டு வந்து வைத்து காலை உணவை உண்ண உணவு மேஜை சென்றுவிட அவர்கள் வரும் முன்பு மொத்த பொருட்களையும் வாகனத்தில் ஏற்றியிருந்தான்.
உணவை முடித்து வந்த நாயகி தேவா வாகனத்தை லாக் செய்வதை பார்த்து, "டேய் நீ ஏன்டா எடுத்து வச்ச, ஒழுங்காவே வச்சிருக்க மாட்டியே"
பயத்திலே வந்து அவனிடமிருந்த சாவியை பறித்து மீண்டும் வாகனத்தை திறந்து, "பாரு எப்படி வச்சிருக்கனு, டோர திறந்த ஒடனே கீழ மலமலனு விழுகும்" என்றார் எரிச்சலாக.
"இப்ப தொறந்து பாத்துட்டு தான சொல்றிங்க? ஏன் விழுகல?"
கேள்வி கேட்ட மகனை முறைத்தவர், "பேசு, திமிரா பேசு, கொஞ்சம் சம்பாதிக்கிற அகம்பாவம் உனக்கு. உன் தாத்தா மட்டும் இல்லனா இந்த காசு உனக்கு இல்ல"
காரணமே இல்லாமல் அவனை பேசவும் எரிச்சலுற்றவன் தன்னுடைய அறைக்கு சென்று டூ வீலர் சாவியை எடுத்து தன்னுடைய பையை மட்டும் வாகனத்திலிருந்து எடுத்து சென்ற மகனை வீட்டினுள் அமர்ந்துகொண்டு பார்த்த பெற்றோர் இருவரும் அமைதியாக தங்கள் வேலையை தொடர்ந்தனர்.
மதுரை விட்டு ஹைவேஸ் பகுதியை அடைந்த தேவானந்த் வாகனத்தை நிறுத்தி ஹெல்மட்டை அவிழ்த்து சிறிது தூய்மையான காற்றை வாங்கிய பிறகே மனம் லேசானது.
சில நொடிகள் தன்னை ஆசுவாச படுத்திக்கொண்டு விக்னேஷ் எண்ணிற்கு அழைத்து லோக்கேஷன் அனுப்ப கூற, "இப்ப தானேடா சித்தப்பா கேட்டாங்க அவர்கிட்ட வாங்கிக்கோ"
"லோக்கேஷன் அனுப்புறத்துல உனக்கு எங்க வலிக்க போகுது? அந்த ஆள்கிட்ட எல்லாம் கேக்க முடியாது நீ அனுப்புறதா இருந்தா அனுப்பு இல்லனா நான் அப்டியே தாத்தா வீட்டுக்கு போறேன்"
கடுகடுத்தவன் மனநிலை சரியில்லை என்பதை உணர்த்த விக்னேஷ் உடனே அனுப்பி வைத்தான்.
அர்ஜுனன் குடும்பம் ராஜரத்தினம் வீட்டிற்கு வந்து இரண்டு வாரங்கள் ஆகியிருந்தது. மொத்த குடும்பமும் சந்தோஷத்தில் இருக்க, நாயகிக்கு தான் அவர்களோடு ஒன்ற இயலாமல் தாமரை இலை தண்ணீராய் வளம் வந்தார்.
காலை வந்த அவர்கள் குடும்பம் இரவு உணவை முடித்து தான் சென்றிருந்தது. அப்பொழுது அர்ஜுனனே மகன், மருமகளிடம் வந்து நிச்சயம் வீட்டிற்கு வர வேண்டும் என கூறியிருக்க இத்தனை நாட்கள் விடுப்பு கிடைக்காமல் இன்று தான் ராஜரத்தினம் குடும்பம் கிளம்பியது.
வீட்டிற்கு முதல் முறை செல்லும் பொழுது வெறும் கையேடு செல்ல விரும்பாமல் வீட்டினருக்கு பிடித்த பழங்கள், மதுரையில் எவை எல்லாம் ப்ரசித்தியோ அவை அனைத்தையும் வாங்கி, உடன் அனைவருக்கும் தேடி தேடி பார்த்து உடை எடுப்பதை பார்த்த நாயாகி அலுத்துக்கொண்டார்.
இன்று காலை கிளம்பும் பொழுது தான் தேவாவை கோபமூட்டி அவனை வீட்டை விட்டு ஓடவும் வைத்தது. தன்னுடைய வாகனத்தின் வேகத்தில் ஒரு மணி நேரத்தில் அர்ஜுனன் வீட்டின் தெருவில் நின்றிருந்தான்.
சரியான இடத்திற்கு வந்த தேவா எந்த வீடென தெரியாமல் குழம்பி நின்ற பொழுது குப்பை வாலியை எடுத்து வெளியில் வைக்க வந்த பைரவியை பார்த்து, "ஹலோ" என்றான் அவள் காதில் கேட்கவென அழைத்தான்.
பொதுவாகவே அந்த தெருவில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்காதென்பதால் அவன் அழைத்து பைரவிக்கு சற்று கூடுதலான சத்தத்தோடவே கேட்டு திரும்ப, அவன் அவளை தான் பார்த்து நின்றான்.
"அர்ஜுனன் வீடு எங்க?" என அவன் கேட்கவும் தான் அவனை நன்கு நோக்கினாள்.
சாதாரண ட்ராக் பாண்ட், ட்ஷிர்ட் தான், தோளில் ஒரு பை. எதுவும் பேசாமல் தனக்கு எதிரில் இருந்த வீட்டை பைரவி கை காட்டி வீட்டினுள் நுழைந்துவிட, அவளை முகத்தை சுளித்து பார்த்த தேவா, "சரியான சிடுமூஞ்சியால இருக்கு இந்த புள்ள"
முணுமுணுத்தவன் அந்த வீட்டை புருவத்தை சுளித்து பார்த்துவிட்டு தன்னுடைய வீட்டிற்குள் நுழைந்தான்.
வீட்டினுள் நுழையும் பொழுதே அவனை பார்த்துவிட்ட பார்வதிக்கு சொல்லிலடங்கா சந்தோசம், மகன் வராததை கூட கவனிக்காமல் பேரனுக்கு வேண்டிய அத்தனையையும் செய்ய, உடன் அவன் பெரியம்மா, அத்தைகள், அவர்கள் பிள்ளைகள் என அத்தனை வரவேற்பு.
இவர்கள் செய்வது அனைத்தையும் தூரத்தில் ஊஞ்சலில் அமர்ந்தே வேடிக்கை பார்த்த அர்ஜுனனுக்கு மனதில் சிறு நெருடல் கூட, இந்த சந்தோஷத்தையா இத்தனை வருடங்கள் பிரித்து வைத்திருந்தோமென.
"அய்யமா, இவ்ளோ கவனிக்கிறீங்களே, காலைல நான் சாப்பிடல யாராவது ஒருத்தர் அத பத்தி கேட்டீங்களா?" எனவும் பார்வதி சமையலறை சென்று உணவை எடுக்க போக, அவரை தடுத்தனர் பெண்கள்.
"ஏன் ம்மா பலச பிள்ளைக்கு போடணும்? அரை மணி நேரம் இரு தம்பி, உனக்கு நாங்க வித விதமா செஞ்சிடுறோம்" என்ற பூர்ணிமா, விக்னேஷிடம்,
"விக்கி ஆட்டுக்கறி எடுத்துட்டு வா" என்றார்.
"என்ன சனிக்கிழமை கறி சமைக்க மாட்டீங்கல்ல, இன்னைக்கு என்ன புதுசா?"
இளசுகளின் மனதிலிருந்ததை முந்தி கொண்டு நிவேதா கேட்க, "இனி எல்லாம் இப்டி தான் மாறிட்டே இருக்கும்" என சீதா சந்தோசமாக உள்ளே வர, அவருடனே வந்தான் சந்தோஷ், அவனுக்கு பின்னால் பைரவியும்.
முதலில் சந்தோஷ மட்டுமே கவனித்த தேவா, "மச்சா, நீ தான் சந்தோஷா? ஏன்டா அன்னைக்கு வீட்டுக்கு வரல" இருக்கையிலிருந்து எழுந்து வந்து சந்தோஷை நெருங்கிய பொழுது தான் அவனுக்கு பின்னால் வந்த பைரவியை கவனித்தான்.
'இவ தான் அத்தையோட பொண்ணா? அதுனால தான் அய்யப்பா பேர கேட்டதும் அந்த பார்வை பத்தாளா, சிடுமூஞ்சி' மொத்தமாய் பைரவியை தவிர்த்து சந்தோஷிடம் ஒன்றிவிட்டான் தேவா.
சந்தோஷிற்கும் ஒரு முறை கூட பேசியிராத தேவாவின் இந்த உரிமை பேச்சு பிடித்துப்போக, அவனும் கூட்டத்தினரோடு இணைந்துகொண்டான். விக்கி அதற்குள் கறி எடுத்துவர, தேவாவின் குடும்பமே வந்திருந்தது.
தங்களை விட தங்கள் மகனுக்கு அங்கு கிடைத்த மரியாதையை கவனித்த ரத்தினம், "இவனுக்கு எதுக்கு கறி சோறு எல்லாம்? சும்மா இருந்தா எப்படிடா செமிக்கும்?" தேவாவை இளக்காரமாக பேச அதை எதையும் காதில் வாங்கவில்லை அவர் புதல்வன்.
"சாப்புடுற பிள்ளையை எதுவும் பேசாத ரத்தினம்" தந்தையின் மிரட்டலுக்கு பிறகே ரத்தினம் அமைதியானார்.
"பெரியம்மா பசிக்கிது" தானே சமையலறை சென்று தட்டை தேட, "தோ ரெடி, தேவா. நீ ஒக்காரு வர்றோம்" ஐந்து நிமிடத்தில் உணவு மேஜையில் மொத்த உணவும் அடுக்கப்பட, அந்த உணவிற்காகவே மீண்டும் ஒரு முறை இளசுகள் முதல் பெரியவர்கள் வரை ருசி பார்க்க ஆர்வப்பட்டு அமர்ந்தனர்.
வரவேற்பறையில் அமர்ந்திருந்த பைரவியை சமையலறையிலிருந்து சீதா உணவருந்த அழைக்க, அனைவர் முன்பும் மறுக்க முடியாமல் மேஜையின் ஒரு ஓரத்தில் வந்தமர்ந்தாள்.
"அடடே ஈரல், சுவரொட்டி எல்லாம் கூட இருக்கு" தேவா வியக்க, பிரதாப்,
"இதுக்கே ஏன்டா இப்டி ஆச்சிரியப்படுற? மத்தியானம் கவனிப்ப மட்டும் பாரு" என்றார் அவன் தோளில் ஒரு தட்டு தட்டி.
"ம்ம்ஹ்ம் வேணாம், எனக்காக எதுவும் செய்ய வேணாம் பெரிப்பா. வெஃஜ் வைங்க நாளைக்கு பெருசா கவனிச்சிடுங்க"
நல்லவன் போல் பேசிய சகோதரனிடம், "நடிக்காதடா" இஷா காலை வார, "ஆஹ் பசிக்கிது பசிக்கிது" என பேச்சை மாற்றி உணவை பரிமாற வைத்தான்.
தேவா அருகே சந்தோஷ், விக்னேஷ் அமர, அவனுக்கு எதிரில் பேசவே நிவேதாவும், அவளுக்கு இரு பக்கமும் உதயநிலை, இந்து மித்ரா என அமர, கண்களுக்கு எதிரில் இரண்டு முறைப்பெண்களை வைத்து உணவுண்பதில் தேவாவிற்கும் அவ்வளவு துள்ளல் மனதினுள்.
"ம்மா எனக்கு ஈரல்"
நிவேதா அன்னையிடம் கேட்க, "நாளைக்கு சாப்பிடலாம், இன்னைக்கு கொஞ்சம் தான் கெடைச்சதாம்" என இருந்ததில் ஈஷாவிற்கு கொஞ்சம், தேவாவிற்கு மீதத்தை வைக்க முகம் சுருங்கியது பெண்ணுக்கு.
அவளின் வாட்டத்தை படித்தவன் தனுடையதில் இருந்ததை அப்படியே எடுத்து அவளுடைய தட்டிற்கு இடம் மாற்ற, நிவேதாவிற்கு கண்கள் விரிந்தது.
'சாப்புடு' கண்ணாலேயே பேசி உணவுண்ண நிவேதா சன்னமான சிரிப்போடு இரண்டு இட்லியை உள்ளே இறக்கினாள்.
"அத்தை மச்சானுக்கு இன்னொரு இட்லி" தேவாவின் தட்டில் உணவு காலியாகியிருப்பத்தை பார்த்து நிவேதா குரல் கொடுக்க அவளை சிரிப்போடு பார்த்தவன் மெச்சுதலான பார்வையாய் புருவம் உயர்த்தி கொடுக்க அவன் செய்கையில் நிவேதாவிற்கு இன்னும் சிரிப்பு.
தூரத்தில் அமர்ந்திருந்தாலும் பைரவி கண்களுக்கு மொத்த மேஜையும் தெரிந்தது. எதேச்சையாக சகோதரனை பார்க்க திரும்பிய பைரவி விழிகளுக்கு இவர்கள் இருவரின் சம்பாஷணையை பார்த்து விட்டு ஒன்றும் நடவாதது போல் கண்களை திருப்பிக்கொண்டாள்.
அன்னை வைத்த இரண்டு இட்லியில் ஒன்றை மட்டும் உண்டு எழுந்து செல்ல அவளை கவனித்த அர்ஜுனனுக்கு இருந்த இதமான மனநிலை மாறி மனதில் பாரம் ஏறியது.
"வேணும்னா வாய தொறந்து கேக்கணும், அத விட்டு முகத்தை தூக்கி வச்சிட்டு ஒக்கார கூடாது" திடீரென அருகில் கேட்ட பேரனின் குரலில் தலையை தூக்க அவருக்கு ஒரு கவளம் உணவை ஊட்டிவிட்டுவிட்டான் அவர் சுதாரிக்கும் முன்பே.
பேரனின் திடீர் செயலில் பெரியவர் இன்பமாய் அதிர, அந்த சந்தோசம் தேவாவின் முகத்திற்கு தாவும் முன்பு, "அறிவிருக்கா தேவா? அப்பா இன்னைக்கு கறி எதுவும் சாப்புட மாட்டாங்க. நீ என்ன செஞ்சாலும் அது உபாத்திரமா தான் ஆகுது"
மொத்த வீட்டினரின் முன்பு யோசிக்காமல் மகனை ராஜரத்தினம் குற்றம் சாட்ட சிவப்பேறிய கண்களோடு நின்றான் தேவா.
"எல்லாத்துலயும் உனக்கு அவசரம் தான்டா" நாயகியும் கணவனுக்கு உடன் சிந்து படிக்க, அனைவரும் மொத்தமாக அமைதியாகிவிட்டனர்.
"ரத்தினம், நான் அன்னைக்கு உன்ன புரிஞ்சுக்காம பண்ண அதே தப்ப இன்னைக்கு நீயும் பண்ற, என் பேரன் எனக்கு சாம்பாரை தான் ஊட்டி விட்டான், என்ன பேசுனாலும் யோசிச்சு பேசு"
பெரியவர் கோவத்தை நேராக மகன் மேல் காட்டிவிட, நிலைமையின் தீவிரத்தை மறைக்க சந்தோஷ், "வா உன்ன கடைக்கு கூட்டிட்டு போறேன்" என தேவாவை அழைத்து சென்றுவிட்டான்.
அதே போல் பார்வதியின் மகனையும் மருமகளையும் கவனிக்க, சூழல் கணம் குறைந்தது.
இளைஞர்கள் மூவரும் கடைக்கு சென்று மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்த பொழுது வீட்டில் அனைவரும் உண்டு வரவேற்ப்பை முற்றத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க இவர்கள் வந்ததும் பெண்கள் வந்து பரிமாறி மீண்டும் பேச்சில் ஈடுபட தினம் மதிய உறக்கத்தை நாடும் எவருக்கும் உறக்கம் வராமல் போனது.
"பெரிம்மா எனக்கு ரூம் எதுன்னு காமிங்களேன் நான் கொஞ்ச நேரம் தூங்கணும்" - தேவா
"நீ அத்தை வீட்டுல இரு ய்யா, இங்க மேல ரூம் வேலை பாக்கணும், அத்தை வீட்டுல மேல் மாடில முன்னாடி இருக்க ரூம் தான் ய்யா உனக்கு" - பார்வதி
"சரி அய்யம்மா" - தேவா
அத்தையின் வீடு எதிரில் இருப்பதை தெரிந்தவன் தன்னுடைய பையை எடுத்து வெளியில் வந்த பொழுது நிவேதா யாருடனோ கைபேசியில் பேசிக்கொண்டிருக்க அவள் பேசட்டும் என காத்திருந்தவன், அவள் கைபேசியை அனைத்து திரும்ப, அவள் குண்டு கண்களை பார்த்து ஒரு நொடி சொக்கி தான் போனான்.
அவள் அழகை ரசிப்பதை நிறுத்தாமல் அதை பாடாகவும் வெளியிட நினைத்து, "பெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம், ரெண்டே ரெண்டே கண் தான் ஒவ்வொன்றும் காவியம்..."
அவன் பாடியத்தில் வெட்கம் வந்துவிட, சிரித்த நிவேதா, "சாமி போதும் நிறுத்துறீங்களா?" எனவும் தான் நிறுத்தினான்.
"என்ன பாட்டெல்லாம் திடீர்னு?" - நிவேதா
"அழக மனசுக்குள்ள வச்சுக்க முடியாம வெளிய பாட்டா வந்துடுச்சு" - தேவா
"ரைட்டு" - நிவேதா
"நீ எந்த பக்கம் திரும்பினாலும் எனக்கு ஓகே தான்டா நிவிமா, மச்சான் நீ ரைட் சொன்னா ரைட்ல போவேன், லெஃப்ட் சொன்னா லெஃப்ட்ல போவேன்" - தேவா
"ஐயோ மச்சான், நீங்க நல்லா பேசுறீங்க" என நிவேதா சிரிக்க,
"அறுபத்தி நாலு கலைகள்ல இதுவும் ஒரு கலை தானே?" என்றான் தேவானந்த்.
"எது கடலை போடுறதா?" கேலியாக நிவேதா.
"தப்பா சொல்லாதடா நிவிமா, நான் பாடல் கலைய சொல்றேன்"
"சரி தான் போங்க" - நிவேதா
"எங்க போறேன்னு உனக்கு வாட்ஸ்அப் பண்ணவா?" - தேவா
"என் நம்பர் உங்ககிட்ட இருக்கா? யார் தந்தாங்க?" வியந்தாள் சிறு பெண்.
"பொண்ணுங்ககிட்ட அவங்களா நம்பர் குடுத்தா தான் வீரனுக்கு அழகு" - தேவா
"சரி டயலாக் பேசாதீங்க, நம்பர் நோட் பண்ணிக்கோங்க" எதற்காக அடி போட்டானோ, அதுவே எளிதாக கிடைத்திட, "நைட் பேசுறேன் நிவிமா" என்க, மாமன் மகனின் ஈடுபாட்டில் அவளுக்கும் தயக்கமின்றி போனது.
"டாட்டா" குழந்தையை போல் சந்தோசமாக சென்றவன் வீட்டை விட்டு வெளியில் வந்து எதிர் வீட்டை பார்த்தான்.
அவர்கள் வீட்டை போல் பெரிதல்ல, சிறிய பார்க்கிங் வசதி தான் இருந்தது, சிறிய வீடென்பதால் தரைத்தளம் ஒரு வரவேற்பறை, ஒரு சமையலறை, ஒரு சிறிய அறை சீதா தம்பதிக்கு தான் இருக்கும்.
முதல் தளத்தில் மகனுக்காக பெரிய விசாலமான படுக்கரையையும் ஒரு சிறிய அறை பொருட்களை சேமித்து வைக்க இருந்தது, இரண்டாவது தளத்தில் இரண்டு அறைகள் மட்டுமே.
அதுவும் இரண்டு அறைக்கும் நடுவில் துணியை காய போட என வெட்ட வெளியாக இருக்க ஒரு ஓரத்தில் ஒரு பைப் மற்றும் துணி துவைக்க ஒரு கல் இருக்கும்.
வீட்டினை ஆவலாக பார்த்த தேவா கண்களுக்கு மேல் மாடி சுவற்றில் வைத்திருந்த செடியை பார்த்த பொழுது, குறிலிருந்த வேப்ப மரம் அவர்கள் வீட்டை ஒட்டி வளர்ந்திருப்பதை கவனிக்க, ஒரு குருவியின் சத்தம் அதிகமாக கேட்டுப்பதாய் உணர்ந்தான்.
கண்களை கூர்மையாக்கி பார்த்த பொழுது செடிகளுக்கு இடையில் ஒரு சிறு குருவி செடிக்கு இடையில் ஏதோ வலியால் துடிப்பதை பார்த்து வேகமாக அங்கு செல்ல அவர்கள் வீட்டின் கதவை கூட சரியாக மூடாமல் வீட்டிற்குள் நுழைய படியை தேடிய பொழுது அந்த சிறிய படியில் இரண்டு இரண்டு எட்டுகளாக எடுத்து வைத்து ஓடினான்.
முதல் தளத்தை தாண்டி இரண்டாவது தளத்திற்கு செல்ல எத்தனித்த பொழுது எதிர் பாரா விதமாக பைரவி கீழே இறங்கி வர யூ டர்ன் எடுத்த பொழுது அவள் மேல் தேவா மோதிவிட, அவள் கால்கள் தடுமாறி கீழே விழ இருந்த சமயம் உடனே சுதாரித்த தேவாவின் கைகள் அவள் இடையோடு அழுத்தமாய் பிடித்து நிறுத்தியது.
இரண்டு நொடிகளே இருக்கும், தன்னுடைய பிடியை தளர்த்தி, "ஹே பாத்து..." அவன் பேசி முடிக்கும் முன்பே தன்னை பற்றியிருந்த அவன் கையை உதறி தேவாவின் நெஞ்சில் கை வைத்து தள்ளிய பைரவி அடுத்த நொடி அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தாள்.
"ச்சீ பொறுக்கி" உடல் கூசியது போல் முகத்தை ரௌத்திரமாக வைத்து அருவருப்புடன் அவன் முகம் பார்த்து அவள் பேசியதை பார்த்த தேவாவின் ஆத்திரமும் இமாலயத்தின் உச்சியை அடைந்தது.
எந்த தொடுகையை அவள் வெறுத்தலோ அதே கை கொண்டு அவள் கழுத்தை சுவற்றோடு இறுக்கி பிடிக்க அவள் மற்றொரு கையை முதுகிற்கு பின்னால் கொண்டு வந்து நிறுத்தி அவள் கண்கள் பார்த்து தீயாய் முறைத்தான்.
"என்னடி ஓவரா துள்ளுற?"
பற்களை கடித்து பேசியவன் கண்கள் அதிகமாக மூச்சு வாங்கும் அவள் மேனியில் படர, அவன் பார்வையில் உடல் பதற, கண்களிலிருந்து நொடி தாமதிக்காமல் கண்ணீர் அருவியாய் வெளியேறியது.
"பொறுக்கித்தனம் பண்ற அளவெல்லாம் உன்கிட்ட ஒன்னும் இல்ல" அவன் கசப்பான பேச்சில் இன்னும் உடல் நடுங்கியது பைரவிக்கு.
தன் கன்னங்களை பதம் பார்த்த அவள் கைகளுக்கு இன்னும் வலியை கொடுக்கவென தேவா அவள் கையை இன்னும் அழுத்தமாக பிடிக்க கண்களை மூடி அவனிடமிருந்து திமிர முயன்று தோற்று நின்றாள் பேதை.
"பொம்பள புள்ள மேல கை வக்கிர அளவு வக்கிர புத்தி எனக்கில்லை, என்ன பேச்சுடி பேசுற நீ? பொறுக்கியாக்கோம்? ஆஹ்? இன்னொரு தடவ என்கிட்ட இந்த மாதிரி பேசுறதோ, கை ஓங்குற வேலையோ வச்சிக்கிட்ட..."
முதுகிற்கு பின்னால் கட்டியிருந்த அவள் கைகளை இன்னும் முறுக்க, ஒரு விசும்பல் அவள் இதிலிருந்து வெளிப்பட்டு அவள் உடலை சற்று உலுக்கியது. பெண்ணின் வேதனையை உணர்ந்தவன் உடனே அவள் கைகளுக்கு விடுதலை கொடுத்து விலகி நின்று,
"கைய ஒடச்சிடுவேன் ஜாக்கிரதை" அடங்காத சினத்தோடு அவன் படியை ஏறி வேகமாக சென்றுவிட்டான்.
அவன் சென்றதும் அதே படியில் அமர்ந்த பைரவி முகத்தை கைகளால் மூடி அழுதது படிகளில் ஏறி சென்ற தேவாவின் காதுகளுக்கு மிக தெளிவாக கேட்டாலும் அவள் மேல் இருந்த கோவத்தில் அவள் பக்கமே திரும்பவில்லை அவன்.
ஆனால் அவன் செயலில் கட்டவிழ்ந்த அவள் காயங்கள் மீண்டும் தோன்றி பைரவியை உயிரோடு கொன்றது. அவன் தொடுகை, அவன் பார்வை, அவன் பேச்சு என அத்தனையும் அவளுள் தீ போல் சுட்டெரிக்க எத்தனை நிமிடங்கள் சுற்றம் மறந்து அழுதாள் என அவளுக்கே தெரியாமல் போனது.
மேல் ஏறிய கோவத்தோடு முதலில் அவனுக்காக கொடுத்திருந்த அறைக்கு முன்பிருந்த அந்த செடிகளுக்கு இடையில் சிக்கியிருந்த குருவியை எடுத்தவன், அதன் கால் சற்று சிக்கியிருப்பதை பார்த்து அதனை கையிலெடுத்து காயத்தை ஆராய்ந்து அதன் காயம் பெரிதாக இல்லை, என உறுதி செய்து கொண்டிருந்த பொழுது பைரவியின் கொலுசொலி கேட்க திரும்பி பார்த்தான்.
இவன் நிற்பதை கூட கவனிக்காமல் பின்னால் இருந்த அறைக்குள் சென்று கதவை அடைத்த சில நொடிகளில் அறையினுளிருந்து ரேடியோ ஓடும் சத்தம் கேட்டது.
புருவத்தை சுருக்கி எரிச்சலை கட்டுப்படுத்தியவன் அந்த குருவியின் முதுகை தேய்த்துக்கொண்டிருந்த நேரம் அவன் கைபேசிக்கு அழைப்பு வந்தது.
"டேய் லூசு பயலே என்னடா சொல்லாம கொள்ளாம ஊருக்கு கெளம்பிட்ட?" அந்த பக்கம் எடுத்த எடுப்பிலே குணா காய்ந்தான் அந்த பக்கம்.
"அய்யப்பா வீட்டுக்கு விருதுநகர் வர வந்தேன்டா, சொல்லு என்ன விசியம்?" - தேவா
"இந்த அய்யனார் ஏதோ பன்றான் மாப்பிள்ளை, அவிங்க தோட்டத்து பக்கம் கூட்ட கூட்டமா அடிக்கடி புது புது ஆளுங்க வந்துட்டு போறானுங்க" - குணா
"எதுல வர்றாய்ங்க?" - தேவா
"டூ வீலர் தான், திண்டுக்கல் வண்டி மாதிரி தெரியுது" - குணா
"வண்டி நம்பர் நோட் பண்ணி வச்சுக்கோ, பின்னாடி யூஸ் ஆகும். காவாலிபய ஏதாவது தப்பு பண்ணட்டும், அது நல்லா செட்டாகுற வர நாம அமைதியா இருப்போம், அப்போ தான் அவனுக்கு சந்தேகம் வராது" - தேவா
"சரிடா மாப்பிள்ளை, அப்றம் உன் அத்தை மகளுக என்ன சொல்றாங்க?" குணாவின் கேள்விக்கு முதலில் நினைவு வந்தது பைரவின் அறை தான்.
தன்னிச்சையாக அவன் கைகள் கன்னத்திற்கு செல்ல ஒரு நொடி அமைதி காத்தவன் மனம் நிதானித்து நிவேதாவை நினைத்து சிரித்தது, "அதுக்கென்ன மாப்பிள்ளை, குளுகுளுன்னு இருக்கு. சரி இங்க ஒரு சிட்டு குருவிக்கு கொஞ்சமா கால்ல அடி பட்டாப்பல இருக்கு ஏதாவது கை வைத்தியம் இருக்கா?" என்றான் அதன் மேனியை மெதுவாய் தடவிக்கொண்டு.
துறுதுறுவென பறந்து திரியும் அதன் தன்மை தேவாவின் கைகளில் இருக்கும் பொழுதும் மாறாமல் இருக்க தலையை நொடிக்கொரு பக்கம் அசைத்து துறுதுறுத்தது.
"சவாலுக்கு பண்ற மாதிரியே இதுக்கு பண்ண முடியாதே மாப்பிள்ளை" ஒரு சில நொடிகள் யோசித்தவன், "அடிபட்டிருக்க இடத்த டெட்டால் வச்சு சுத்தம் பண்ணி, மஞ்சள், வேப்பெண்ணெய் வச்சு விடு காயம் வேகமா ஆறிடும்" என்றான் குணா.
"சரிடா நான் அத பண்றேன், நீங்க அய்யனாரை ரொம்ப நெருங்காதிங்க, நாம அவனை கொஞ்சம் தள்ளி நின்னே கவனிச்சுக்கலாம்" எனவும் சரி என குணா வைத்தான்.
Hi... chapter epdi iruku?
Comments please...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro