ஆனந்தம் - 12
அன்று காலை தந்தை ஏதோ முக்கிய திருமணம் இருப்பதாய் கூறி கல்லூரிக்கு விடுமுறை எடுத்து நண்பர்களோடு திருச்சி சென்றிருக்க அன்னையை கல்லூரியில் விடுவது தேவாவின் பொறுப்பானது.
அவனுடைய இருசக்கர வாகனத்தில் செல்வதை எப்பொழுதுமே நாயகி பயத்தோடு தவிர்த்துவிடுவார். அதற்காகவே அவன் தந்தையின் காரினை எடுத்து எப்பொழுதும் கிளம்பும் நேரத்திற்கு முன்பே அன்னையை விரட்டி வாகனத்தினுள் ஏற்றிக்கொண்டான்.
"என்னடா உனக்கு அவசரம் வேலை எல்லாம் முடிச்சிட்டு வர வேணாம்?" அலுத்துக்கொண்டார் நாயகி.
"என்னமோ நீங்க தான் எல்லா வேலையும் பாக்குற மாதிரி தான் பேசுறீங்க?" சீண்டினான் அன்னையை தேவா.
"உன் பொண்டாட்டி வேலை பாக்குறா தான், அதுக்குன்னு நான் வேலை பாக்கலைனு அர்த்தம் இல்லை தேவா" கோவமாக பதில் கொடுத்தார்.
"சரி கோவம் வேணாம்" வாகனத்தை ஒரு கடையின் முன்பு நிறுத்தினான்,
"இங்க என்ன தேவா?" குழம்பினார் நாயகி.
"ஒரு பெட் வாங்கணும் ம்மா" என்றான் தேவா.
"ஏன் உன் ரூம்ல இருந்த பெட் என்னாச்சு?" கேள்வி கேட்டுக்கொண்டே கீழே இறங்கி வந்தார் அவன் அருகில்.
"அது கேவலமா தான் இருக்கு. ஆனா நான் இப்போ என் பொண்டாட்டிக்கு பெட் வாங்க வந்தேன்" அன்னையிடம் பேசிக்கொண்டே கடையினுள் நுழைந்தான்.
"ரெண்டு பேரும் ஒரே பெட்ல படுக்கலையா தேவா?" கோவமாக பேசியவர் சுற்றம் கருதி அவன் கையை பிடித்து நிறுத்தினார்.
"எம்மா அதான் கல்யாணம் அன்னைக்கே சொன்னேன்ல, இத பத்தி எல்லாம் பேச வேணாம்னு" கோவத்தோடு இருந்தவர் படுக்கை ஒவ்வொன்றையும் எது சிறந்தது என கேட்டு கேட்டு அவர் கூறியதை தான் இறுதியாக வாங்கினான்.
மெத்தையை தான் இன்னும் அரை மணி நேரத்தில் எடுத்துக் கொள்வதாக கூறி வந்தவன் வாகனத்தை எடுக்க, "அப்டி என்னடா உன் அத்தை மகளுக்கு திமிரு, என் பிள்ளையை இப்டி தவிக்க விடுறா?" எரிமலையாய் வெடித்தது அவர் கோவம்.
"நாயகி பொறுமை பொறுமை" அன்னையை தடுத்து நிறுத்தினான் சிரிப்போடு.
"சிரிக்காத தேவா, இவ வேணாம் வேணாம்னு நான் சொன்னத கேட்டியா நீ?" காய்ந்தார் மகனிடம்.
"நீங்க சொல்றதுக்கு ஆப்போசிட்டாவே செஞ்சு பழகுன எனக்கு இன்னும் அந்த பழக்கம் போகல ம்மா" மகனிடம் அதே சிரிப்பு இன்னமும்.
"இப்ப அவ தான் உனக்கு வேணும் சொல்றேன். டிவோர்ஸ் குடுக்குறியா?" அந்த எண்ணமே அவருக்கு இல்லை ஆனாலும் நாயகி கேட்டார் மகனை வெறுப்பேற்ற.
தேவானந்த் எதற்கும் அசரவில்லை அதே வற்றாத சிரிப்பு அவனிடம், "வாய்ப்பில்லை மம்மி. இப்போ எனக்கு அவளை புடிச்சு போச்சு. விடுற ஐடியா அய்யாக்கு இல்லை" என்றான்.
"அப்டி என்ன தான்டா பண்ணி அவ உன்ன மயக்கி வச்சிருக்கா?" சுளித்த முகத்துடன் மகனை மட்டுமே பார்த்தார் நாயகி.
"எதுவுமே பண்ணல ம்மா, என் பைரவி என் பைரவியே இல்லை" புரியாமலே பேசினான் தேவா.
"இந்த புதிர் போட்டு பேசுற வேலை என்கிட்டே வேணாம் தேவா" கண்டித்தார் அன்னை.
"சரியா என் பாய்ண்டுக்கு வந்துட்டீங்க. இத தான் நானும் சொல்லணும்-னு யோசிச்சேன். நீங்களும் வீட்டுல தேவையில்லாம பேச வேணாம்" என்றான் சலனமே இல்லாமல்.
மகனை ஆழ்ந்து பார்த்தவர், "ஓ மஹாராணி எல்லாத்தையும் பத்த வச்சிட்டாளா? ஆமாடா நான் சொன்னேன் தான். எவனுக்கோ வாங்கி வச்ச பொருளை எல்லாம் என் மகனுக்குனு வந்து நிக்கிறப்போ கோவம் வரும் தானே?" உண்மையை அவனிடமே உடைத்துவிட்டார்.
அன்னையை நம்பாமல் பார்த்தவன், "இத அவக்கிடையே சொன்னிங்களா ம்மா?"
"ஆமாடா, சொன்னேன். எனக்கு என்ன உன்ன மாதிரி உன் பொன்டாட்டினா பயமா?" என்றார் நாயகி, "தெரியாத மாதிரியே நடிக்கிறது பாரு" முணுமுணுத்தார்.
"இந்த மாதிரி எல்லாம் பேச்சு வரும்னு தான் அத்தை எல்லா பொருளையும் மறுபடியும் புதுசா வாங்கி குடுத்தாங்க. எப்படி ம்மா இப்டி கூசாம ஒருத்தர் மனச நோகடிக்கிறிங்க?" என்றான் மெதுவாக. அன்னையிடம் பதிலே வரவில்லை.
"ஏன் பைரவிகிட்ட கேட்ட அதே கேள்வியை நீங்க போன் பண்ணி அத்தைகிட்ட கேக்க வேண்டியது தானே? கேக்க மாட்டீங்க, எப்படி கேப்பிங்க? அதான் உங்க மக அங்க வாழப் போறாளே. ஏதாவது பேசி நாளைக்கு இஷாவ பேசிடுவாங்களோனு பயம்.
உங்க பொண்ணு சந்தோசமா இருக்கனும். ஆனா உங்க வீட்டுக்கு வந்த பொண்ணு சந்தோசமா இருக்க கூடாது. உங்களுக்கு அடிமையா நீங்க சொல்ற எல்லாத்துக்கும் தலை ஆட்டிக்கிட்டே இருக்கணுமா?" கோவமாக பேசியவன் கையில் வாகனமும் வேகமெடுத்தது.
"நான் ஒன்னும் என் பசங்கள ஒழுக்கம் இல்லாம வளர்கல தேவா. பொம்பள புள்ளைய பத்தி பேசுறப்போ பாத்து பேசு" என எச்சரித்தவர் அவன் கையில் அடித்து வேகத்தை குறைக்கவும் சொன்னார்.
அவளோ அசையவே இல்லை, எதற்கும் அடங்காமல் திமிறுபவன் மனைவியை எவரிடமும் விட்டுக்கொடுக்க தயாராக இல்லை. "பொண்ணுங்கள பத்தி பேசுறப்போ பாத்து பேசணும், அடுத்தவனுக்கு உபதேசம் பண்றதுக்கு முன்னாடி நமக்கும் அது பொருந்துதான்னு யோசிச்சு பேசணும் மம்மி" என்றான் கேலியாக.
"தேவா..." அன்னையின் மிரட்டலை கை காட்டி தடுத்தான்,
"உங்க வளர்ப்பு தப்பாது, அத்தை வளர்ப்பு தான் தப்பிடுச்சே. இன்னும் ஏன் உங்க மகளை சந்தோஷ்க்கு குடுக்க துடிக்கிறிங்க. விட்ருங்க. நல்ல குடும்பத்துல பொண்ணு எடுத்துக்கலாம்"
"சந்தோஷ் நல்ல பையன்" என்றார் நாயகி வேகமாக.
"இருக்கட்டும். அதுக்காக எல்லாம் கல்யாணம் அன்னைக்கு ஓடி போனவ அண்ணனை என் தங்கச்சிக்கு கட்டி குடுக்க கூடாது"
வேண்டும் என்றே பேசும் மகனிடம் என்ன வாதாட முடியும் அவராலும்? பொறுமையாய் விளக்க முடிவெடுத்தார், "அதெல்லாம் நீ சொல்ல கூடாது தேவா, அவன் குணம் தங்கம். இஷாக்கு சந்தோஷ் புடிச்சிருக்கு"
"சந்தோஷ வளர்த்த மாதிரி தான் சீதா அத்தை பைரவியையும் வளர்த்தாங்க ம்மா. அண்ணனோட குணம் அப்டியே தங்கச்சிக்கு இருக்கும்" கோவத்தை குறைத்து அவரை போலவே எடுத்துரைத்தான் தேவா.
"குணத்தை விடு தம்பி, நல்ல பொண்ணு தான். ஆனா ஒழுக்கம் தவறிட்டாலே" என்றார் இழுவையாக.
பற்களை கடித்து கோவத்தை கட்டுப்படுத்தியவன் ஓரமாக வாகனத்தை நிறுத்தி அன்னையை பார்த்தான் முறைப்போடு.
"ஏன் ம்மா, நீங்கலாம் ஒரு ப்ரோபஷர் தான? இல்ல எங்களுக்கு தெரியாம நாங்க இப்டி இறக்கி விட்டதும் அப்டி போய் ஊசி பாசி வித்துட்டு வர்றிங்களா?"
"டேய்" மகனை அதட்டினார் நாயகி.
"என்ன டேய்? நல்லது சொல்ல வேண்டிய நீங்க இப்படியா பேசுவீங்க? உங்களுக்கு தெரியுமா பைரவி ஒழுக்கம் தவருனவ-னு? அவளுக்கு என்ன நடந்ததுன்னு இப்போ வர என்கிட்டே ஒரு வார்த்தை சொல்லல. மொத்தமா உள்ள வச்சு அழுதுட்டே இருக்கா. பயம் பயம் மட்டும் தான் இருக்கு.
அவளை எப்படி இதுல இருந்து நான் வெளிய கொண்டு வர்றதுன்னு யோசிச்சிட்டு இருக்குற நேரத்துல நீங்க அத இன்னும் இன்னும் பேசியே மோசமா மாத்துறிங்க ம்மா. நீங்க நினைக்கிற மாதிரி ஒப்பாரி வச்சு என்ன தூண்டி விடுற ஆள் அவ இல்ல. என்ன விட்டு போறேன்னு அழுகுறா லூசு..."
மகனின் கண்களில் இருந்த வேதனையை பார்த்தவர் எதுவும் பேசவில்லை, அவனை பேச விட்டார், "முன்னாடி அவ வாழ்க்கை அவ விருப்பம் போல தப்பா இருந்ததோ இல்லையோ, எனக்கு கவலை இல்ல ம்மா. இனிமேல் அவளோட வாழ்க்கை என்கூட சந்தோசமா இருக்கும். இருக்க வைப்பேன்.
உங்கள அவளை தலைல தூக்கி வச்சு கொண்டாட சொல்லல ம்மா. அவ மனச நோகடிக்காம இருங்க. நான் அவளை பாத்துக்குறேன், எப்படி தேத்தணுமோ அப்டி தேத்தி சந்தோசமா நாங்க வாழ்ந்துக்குறோம்" என்று சொன்னவன் அவர் பதிலை கூட எதிர்பார்க்கவில்லை.
அதே அழுதத்தோடு அன்னையை கல்லூரியில் விட்டு வீடு திரும்பும் வரை பேசவே இல்லை தேவா.
வீடு திரும்புகையில் அன்னை தேர்ந்தெடுத்த படுக்கையை வீட்டிற்கு எடுத்து வர கேள்வியோடு அவனை தொடர்ந்தாள். அறைக்குள் வந்ததும் கட்டிலில் இருந்த மெத்தையை கீழே தூக்கி போட்டவன் புதிதாக வாங்கியதை கட்டிலில் போட்டான்.
"உங்க பெட்ல படுக்குறதுக்கு நான் தரைல படுத்துடுவேன் ஆனந்த்" என்ற அவன் மனைவி கைகள் புதிதாக வாங்கிய மெத்தையின் தரத்தை சோதித்தது.
"பத்து வருசமா என்கிட்ட இந்த பெட் தாங்குனதே பெருசு. அப்றம் என் பெட்ட உனக்கு நான் தர்றேன்னு யார் சொன்னது?" என்றான் மனைவியிடம்.
"அப்றம் ஏன் அத கீழ போட்டீங்க?" கணவனிடம் கேட்டாள்.
"நான் கீழ படுக்க போறேன். நீ என்ன பன்றனா ஆறு மாசத்துல அந்த பெட்ல உருண்டு புரண்டு மெத்து மெத்துன்னு மாத்தி வைக்கணும். அப்றம் நான் அத அழகா யூஸ் பண்ணிக்குவேனாம்"
அவனது ராஜதந்திரத்தின் பின் அர்த்தம் புரிந்தவள் மௌனித்துவிட அந்த மெத்தையை வாங்கிய கதையை சொன்னவன் வார்த்தைகள் கேட்காமல் விட்டாள் பைரவி.
அவளை உலுக்கி, "பெட் கவர் வாங்கணும் வர்றியா கூட?" என்றான்.
"ஆன்லைன்ல ஆர்டர் பண்ணலாமே" என்றாள் பயத்தோடு.
"இன்னைக்கு நைட்க்கு வேணும்" என்றான் தேவா. "இல்ல நீங்க போய் வாங்கிட்டு வாங்க" என்றாள் பைரவி.
"ஏன் வீட்டுல அப்டி என்ன முக்கியமான வேலை இருக்க போகுது?" மனைவி அருகே வந்து அவள் பயந்த விழிகளை பார்வையிட்ட கேட்டான்.
"இல்லங்க எனக்கு வேலை இல்லை ஆனா கூட்டத்தோட என்னால ரொம்ப நேரம் இருக்க முடியல" என்றாள் இல்லாத வேலையை செய்வது போல் பாசாங்கு செய்து.
"ஏன் முடியல?" என்றான்.
"வரலன்னு சொன்னா விடுங்களேன்" வேண்டினாள் அவனை மட்டும் சென்று வர கூறி.
"சொல்லுடி, அப்டி என்ன பயம் வேண்டி இருக்கு உனக்கு நான் தான் இருக்கேன்ல?" அவள் கை பிடித்து தேவா வேகமாக திருப்பியதில் கோபமடைந்த மனைவி,
"நீங்க இருக்கீங்கன்னு நம்பி தான் அன்னைக்கு பட்டு எடுக்குறப்போ வந்தேன். என்ன பண்ணீங்க நீங்க? என்ன விட்டு தான போனீங்க? எவ்ளோ பயந்தேன் தெரியுமா? சுத்தி எல்லாரும் என்னையே ஒரு மாதிரி வித்யாசமா பாக்குற மாதிரியே இருந்தது. உங்கள நம்பி என்னால மறுபடியும் கடைக்குலாம் வர முடியாது"
அன்று தன்னை கண்ணீர் தேங்கி நின்ற விழிகளோடு மனைவி பார்த்ததற்கான அர்த்தம் இன்று தான் தேவாவிற்கு புரிந்தது.
எதையோ தோற்றது போன்ற உணர்வு அவனுக்கு. எந்த நிலையிலும் அவள் சுயம்புவாய் எழுந்து நிற்கும் வரை மனைவியை தனித்து நிற்க விட கூடாதென தங்கள் உறவு நிச்சயயித்த நாளில் முடிவெடுத்தவன் அடுத்த நாளே அதை தவறவிட்டிருந்ததை உணர்ந்து வேதனையடைந்தான்.
இன்று மனைவி சாதாரணமாக கூறினாலும் அவள் குரல் நடுக்கம் இன்னும் அதிலிருந்து அவள் வெளி வரவில்லை என தான் கூறியது. துணிகளை மடித்துக்கொண்டிருந்த பைரவியின் கையை பற்றியவன் அவள் கண்களை பார்த்து,
"சாரி சாரி சக்கரை. இனி நீயா என்ன போக சொன்னா தான் நான் உன்ன விட்டு போவேன் தவற, என் பொண்டாட்டிய விட்டு தனியா நான் எங்கையும் போக போறதில்லை" அழுத்தமாய் ஆழமாய் அவளை பார்த்து தேவா கூறிய பிறகும் ஒரு பயத்தோடே அவனோடு கிளம்பினாள்.
முதலில் பெரிய ஜவுளி கடைக்கு அழைத்து சென்றவன் வீட்டிற்கு தேவையான சில பொருட்கள், மெத்தை விரிப்பு வாங்க, அவன் சகோதரி ஒரு மணி நேரத்தில் சகோதரனுக்கு ஐந்தாயிரம் செலவு வைத்துவிட்டாள்.
"என்ன இது கடைய வாங்கிட்டியா?" கை நிறையா உடைகளோடு வந்து நின்ற சகோதரியிடம் கேட்டான் தேவா.
"டேய் வாங்கி தாடா. இத விட உனக்கு என்ன வேலை? கல்யாணம் ஆனதும் உங்கிட்ட நான் வர மாட்டேன்"
சகோதரனை உதறி தள்ளி சென்றவள் கை பிடித்து, "சரி உன் அண்ணிக்கு இதுல எது எடுத்திருக்க?" என்றான்.
பைரவியை பார்த்தவள் சகோதரனை முறைத்து, "அவங்க அவங்களுக்கு தேவையானதை அவங்க அவங்க தான் எடுத்துக்கணும். அடுத்தவங்களுக்கு சேவை செய்றது தான் என்னோட வேலையா?"
பட்டென பேசியவள் சகோதரன் கையில் துணியை திணித்து, "பில் போடுடா. நான் பார்க்கிங்ல நிக்கிறேன்" என சென்றாள்.
"திமிரு புடிச்சவ, நீ இப்போ ஒரு டிரஸ் எடுத்துட்டு உன் அண்ணிகிட்ட குடுக்கணும், இல்லையா இதெல்லாம் அப்டியே போட்டு கெளம்பிட்டே இருப்பேன்" என்றான் வேகமாக.
"பண்ணுடா பாக்கலாம்" தேவாவின் தங்கை சுற்றம் மறந்து சண்டைக்கு நின்றாள்.
இருவரும் செய்வது குழந்தை போல் தான் காட்சியளித்தது பைரவிக்கு, ஆனால் தேவா இந்த முறை தீர்க்கமாக இருந்தான் சகோதரி மனைவிக்கும் ஓர் உடையை தேர்வு செய்ய வேண்டுமென.
இவன் விடப்போவதில்லை என உணர்ந்தவள், சென்று கண்ணில் முதலில் தென்பட்ட ஓர் உடையை எடுத்து வந்து அவன் கையில் திணித்து, "போடா" என்றாள் எரிச்சலோடு.
தேவா சகோதரி முதலில் பார்த்து பார்த்து தேர்வு செய்திருந்த உடையில் மேல் இருந்ததை மனைவி கையில் கொடுத்து இப்பொழுது இஷா தேர்வு செய்திருந்த உடையை அவளது உடையோடு வைத்தான்.
"டேய் அது என்னோடதுடா" பைரவியிடமிருந்து பறிக்க போன சகோதரி கை பிடித்து நிறுத்தினான்.
"தெரியும், இதுவும் நீ எடுத்த துணி தானே. வச்சுக்கோ" என்றான் தேவா நகைப்போடு.
அவன் கையை உதறி, "இருடா இன்னைக்கு உனக்கு சீனி சட்னி தான்" சகோதரனிடம் கருவி சென்றவளை பார்த்து பைரவிக்கு வருத்தம் கூட, "ஏன் அவளை இப்டி பண்றீங்க, அப்றம் என் மேல கோவம் தான் வரும்" கணவனிடம் வேதனையோடு கேட்டாள்.
"தப்பு செஞ்சா அப்டியே விட கூடாது சக்கரை. எது தப்புனு சொல்லி புரிய வைக்க வேண்டியது நம்ம கடமை. அப்பா அம்மா அவளுக்கு அளவுக்கு அதிகமா செல்லம் குடுகுத்துட்டாங்க.
இப்ப அவங்களே நினைச்சாலும் அவளை கண்டிக்க முடியல. அதான் நான் இப்டி மிரட்டி மிரட்டி பண்ண வைப்பேன். இனி அவ டிரஸ் எடுத்தா உனக்கு ஒன்னாவது எடுப்பா"
கணவன் சொன்னதை போலவே இரண்டு உடையை எடுத்து வந்தவள் ஒன்றை பைரவியிடம் கொடுக்க அவன் சொல்வதன் அர்த்தம் அப்பொழுது தான் புரிந்தது பைரவிக்கு.
நல்ல குணம் தான் இவளுக்கும். ஏதோ தன்னோடு ஏற்பட்ட ஒரு மன கசப்பில் தான் தன்னோடு ஒன்ற பிடிக்காமல் விலகி நிற்கிறாள் என புரிந்து கொண்டாள்.
வந்த வேலை முடிந்து வீடு செல்ல புறப்பட்ட வாகனம் வீட்டு வாசலில் நிற்காமல் மஹேந்திரா ஷோ ரூம் முன்னால் நின்றது.
"ஆனந்த்..." அவன் நோக்கம் உணர்ந்து மகிழ்வதா, உணர்ச்சிவச படுவதா என தெரியாமல் விழித்திருக்க அவள் மகிழ்வையும் சேர்த்து காட்டிவிட்டாள் அவன் தங்கை.
சந்தோசமாக, "டேய் தேவா கார் வாங்க போறோமா?" சகோதரனிடம் ஆசையாக கேட்டவள், "புதுசா XUV ஒரு மாடல் வந்துருக்காம். அத வாங்கலாம் சரியா?" என்றவள் ஏதோ நினைவோடு,
"ஆமா நீ தான் கியா வாங்கணும் சொல்லுவ இப்ப என்ன மஹேந்திரா ஷோரூம் வந்துருக்க?" என்றாள் கேள்வியாக.
"லூசு, ஒளறிட்டே இரு" சகோதரியை மதிக்காமல் கீழே இறங்கி மனைவிக்காக காத்திருந்தவன் அவள் வந்ததும் உள்ளே செல்ல, "டேய் xuv தானே வாங்க போறோம்?"
சகோதரன் கையை சொரிந்துகொண்டே கேட்டாள். அவள் தொல்லை தாங்காமல், "நீ எது கேக்குறியோ அத தவற வேற என்ன வேணாலும் நான் வாங்குவேன்" பற்களை காட்டி சிரித்த சகோதரனை சுற்றம் மறந்து அடிக்க வெறியேறியது இஷாவிற்கு.
வரவேற்பு பலமாக கிடைத்தது தேவாவிற்கு. காரணம் அந்த ஷோரூம் ஓனர் தேவாவின் நண்பன். அனைத்து வாகனத்தையும் காட்டி அதன் சாராம்சங்களை விளக்கி முடித்து மீண்டும் ஆபீஸ் வர, "என்னடா டிசைட் பண்ணிருக்க?" என்றான் அவன் நண்பன்.
"XUV XUV" என்றாள் அவன் தங்கை வேகமாக.
"அவளுக்கு கல்யாணம் ஆகி போனாலும் அவ புருஷன் காசுல எதையும் செலவழிச்சிட கூடாதுன்னு என் பர்ஸை எம்ட்டி ஆக்குறா" அவளை கிண்டல் செய்வதே என் முதல் வேலை என்பது போல் இருந்தது தேவாவின் செயல்க.
"ஹிஹி... வீட்டுக்கு வா உனக்கு இருக்கு" சகோதரனுக்கு சிரிப்போடு பதில் தந்தாள் இஷா.
"டேய் நான் ஸ்கார்பியோ எடுத்துக்குறேன்" எனவும் பைரவிக்கு விழிகள் விரிந்தது இன்ப அதிர்ச்சியில். மனைவியை பார்த்து திரும்பிய தேவா கண்ணடித்து மீண்டும் நண்பனிடம் பார்வியை செலுத்த அவனது சிறிய அசைவில் சொல்ல முடியாத உணர்வுகள் பைரவியினுள்.
அவளுக்கு பல வருடங்கங்களாக ஸ்கார்பியோ தான் வாங்க வேண்டும் என ஆசை. அத்தை வாங்க தந்தையோ அண்ணனோ பெரிதும் விருப்பம் காட்டாத காரணத்தினால் அவளும் கேட்டு, பிறகு கேட்பதையே விட்டுவிட்டாள்.
வரி முதல், லோன் வரை வாகனம் சார்பாக தனக்கு இந்த சந்தேகங்களை தீர்க்கவே தேவாவிற்கு ஒரு மணி நேரம் பிடித்தது. அதன் பிறகு டெஸ்ட் டிரைவ் சென்று அதையே பதிவு செய்துவிட்டான்.
"சரி டா ஒரு மாசத்துல டெலிவரி எடுத்துக்கலாம். நான் வண்டி வந்ததும் தகவல் சொல்றேன். அப்றம் கல்யாணத்துக்கு கூப்பிடவே இல்ல" என்றான் அவன் நண்பன்.
"விருதுநகர்ல நடந்தது, வைக்கலாம் ஒரு நாள் பார்ட்டி" இரண்டு பெண்களை வைத்து பேச்சுகளை பெரிதாக வளர்க்கவில்லை தேவா, அளவோடு பேசி விடைபெற்று வந்தான்.
சகோதரியிடமும் மனைவியிடமும் கார் பற்றிய எந்த பேச்சையும் வீட்டில் பேசவே வேண்டாம், அன்னைக்கும் தந்தைக்கும் இன்ப அதிர்ச்சியாக இருக்கட்டுமென பல முறை பாடம் எடுத்தான்.
ஷோரூமில் சொன்னதை விட பத்து நாட்கள் அதிகம் தான் ஆகியிருந்தது வாகனம் வர. எடுத்தவுடன் வீட்டினரை அழைத்து சென்று கோவிலில் வைத்து பூஜை போட்டு மன நிறைவோடு வீட்டிற்கு வந்தான் தேவா. அவன் முன்னேற்றத்தை எண்ணிய அவன் அன்னை எதுவும் பேசவில்லை.
அவன் தந்தை தான், "வாங்குறது எல்லாம் சரி தான். ட்யூ கட்ட முடியுமா?" என்றார் எடுத்த எடுப்பிலே.
"ட்யூ கட்ட என்னால முடியும். அப்டியே முடியாளானாலும் வண்டிய விப்பேனே தவற உங்ககிட்ட வந்து நிக்க மாட்டேன்" கத்திவிட்டு அறையை நோக்கி சென்றுவிட்டான்.
"அவனும் எத்தனை நாள் ப்பா உங்க வண்டிய எடுத்துட்டே இருப்பான்? அவனுக்கும் ஆசை இருக்கும்ல?" இஷா சகோதரனுக்காக தானே முன் வந்து பேசினாள் முதல் முறையாக.
"என்ன அவனுக்கு சப்போர்ட்?" மகளிடம் சண்டைக்கு நின்றார்.
"ப்பா ரியாலிட்டி ப்பா" தந்தையின் பேச்சில் திருப்தியடையாத மகள் தலையை ஆட்டி சென்றுவிட்டாள்.
மகன் இரவு உணவை உண்ணாமல் செல்வதை கவனித்த அவன் அன்னை பைரவி கையில் அவனது உணவை திணித்து எதுவும் பேசாமல் சென்றவேளை பார்த்து பைரவிக்கு அதிர்ச்சி.
அவளும் ஒரு மாதமாக கவனித்து தான் வருகிறாள், அவரிடம் மொத்தமும் மாற்றம் இல்லை என்றாலும் தன்னை அதிகம் வார்த்தைகளால் வதைக்கவில்லை. அதை விட தேவாவை அதிகம் பேசுவதில்லை. அதே சமயம் கணவன் பேசுவதையும் தடுக்கவில்லை.
கணவன் உணவோடு தனக்கும் உணவை எடுத்து அறைக்கு சென்றாள். ஷோரூமில் இருந்து வாங்கி வந்த பில்லை பார்த்துக்கொண்டிருந்தவன் மற்றொரு கையில் கேள்குலேட்டர் இருந்தது.
அதை வாங்கி ஓரமாக வைத்து அவன் கையில் உணவை திணித்தாள். மறுக்காமல் உணவை உண்டு மீண்டும் அதே வேலையை செய்ய அவன் அருகில் அமர்ந்திருந்த பைரவி கண்கள் கணவனை விட்டு அகலவில்லை.
"என்ன பார்வை?" என்றான் அவளை பார்க்காமல்.
"சும்மா பாக்குறேன்" என்றாள் கன்னத்தில் கை வைத்து.
ஓரப்பார்வை பார்த்தவன், "போய் படு" என்றான்.
அவளோ நகரவில்லை இரண்டு மாதங்களாக அவனை பேச விட்டு கேட்டவளுக்கு இன்று அவன் பேச்சு இல்லாமல் தூக்கம் வரவில்லை.
"என்னடி உனக்கு வேணும்?" மனைவியின் குறுகுறு பார்வையில் தேவாவிற்கு வெட்கம் வந்துவிட ஒரு கை வைத்து முகத்தை மறைத்தான்.
மனைவியின் குறுகுறு பார்வையை தவிர்க்க அவன் காட்டும் வெட்கம் பெண்களின் வெட்கத்தை விழுங்கி உண்ணும் அளவு அளப்பரியதாய் இருந்தது.
மீசையை முறுக்கிக்கொண்டு செல்லும் கணவனின் முகத்தில் குறுஞ்சிரிப்பு கலந்த வெட்கத்தில் சிவந்திருக்கும் அவன் செவிமடல் கூட பைரவிக்கு குதூகலத்தை தந்தது.
"ஹே அப்டி பாக்காதடி. ஒரு மாதிரி இருக்கு" என்றான் மேலும் சிரித்தவாறே.
"ஆனந்த் நீங்க வெக்கப்படிங்க" என்றாள் மகிழ்ச்சி செய்தியாக.
கன்னத்தை தேய்த்து காதுமடலை சொரிந்தான், "இல்லையே. கொசு கடிச்சா எனக்கு அப்டி தான் சிவந்துகுமாம். அம்மா சொல்லுவாங்க" என்றான்.
அவன் சமாளிப்பு அழகாய் தான் இருந்தது, "ஏன் திடீர்னு கார்? அதுவும் ஸ்கார்ப்பியோ?" கேட்டாள் கணவனிடம்.
தோளை குலுக்கினான் சர்வ சாதாரணமாக, "சும்மா தான். எனக்கு புடிக்கும்" என்றான்.
மீண்டும் மீண்டும் ஒரே கணக்கை போடுபவன் கையிலிருந்த பொருட்கள் அனைத்தையும் ஓரமாக ஒதுக்கி வைத்து, "எனக்கு தெரியும் உங்களால இந்த கார் மட்டும் இல்லை. இதே மாதிரி பத்து சார் ட்யூ கூட கட்ட முடியும்"
மனைவி சொன்ன அந்த ஒரு வார்த்தை போதாதா கணவனுக்கு? யானையையே தூக்கி சுழற்றும் தைரியம் வந்தது தேவாவிற்கு.
"மாமா பேசுனது வருத்தமா உங்களுக்கு?" அவன் கையை பற்றி ஆறுதலாய் கேட்டாள் பைரவி. இல்லை என தலையை அரை மனதாய் ஆட்டிய தேவா நன்றாக அவள் முகம் பார்க்கும்படி திரும்பி அமர்ந்தான்,
"இந்த ரூம் உள்ள அம்மா அப்பா இஷா யாருமே வர வேணாம். நீயும் நானும் மட்டும் தான். நமக்கான பேச்சு மட்டும் தான் இருக்கனும்" என்றவன் விரல்கள் அவள் கையின் மென்மையை சோதித்தது.
"அது மிஸ்டர் தேவானந்த்க்கும் பொருத்தம் தானா?" தலை குனிந்து அவன் விழிகளை பார்த்து அவள் கேட்ட தினுசில் தேவா சிரித்துவிட்டினான்.
"சும்மா கணக்கு பாத்துட்டு இருந்தேன் சக்கரை" என்றான்.
"ம்ம்ஹ்ம் இந்த தேவா நல்லா இல்லை. எனக்கு என்கிட்ட முதல் நாள் சண்டை போட்ட தேவானந்த் தான் வேணும்"
"அவன் கோவக்காரன் ஆச்சே" - தேவா
"இருந்துட்டு போகட்டும்" சாதாரணமாக தோளை குலுக்கினாள் பைரவி.
"அவன் முரடன் சக்கரை" சக்கரை மிகவும் தித்திப்பாக வந்தது தேவாவின் குரலில்.
"இருக்கட்டும்" என்றாள் அதற்கும்.
"சரி எங்கையாவது வெளிய போகலாமா நம்ம கார்ல?" ஆசையாக கேட்டான்.
"ம்ம்ம் ம்ம்ம்" அவனை விட ஆசையாய் தலையை ஆட்டிய பைரவி, "என்ன உங்க தோப்புக்கு கூட்டிட்டு போறிங்களா?" என்றாள்.
"அவ்ளோ தானே? நாளைக்கு மூணு நாள்க்கு டிரஸ் எடுத்து வச்சு ரெடியா இரு. நம்ம தோட்டத்துக்கு போகலாம்" நம்ம தோட்டத்தில் என தேவா கொடுத்த அழுத்தம் அவளுக்கு எச்சரிக்கை செய்தி அவனது அனைத்தும் அவளுடையதென.
எப்பொழுதும் தேவா இன்பமாக சுற்றி திரிய அன்று இரவு பைரவிக்கு அத்தனை மகிழ்வு, நகரத்தின் காற்றை மட்டுமே சுவாசித்த மக்களுக்கு கிராமங்களின் சாயல் கூட சொர்கமாய் தான் தெரியும்.
அது போல் தான் பைரவிக்கு எங்கு திரும்பினும் பச்சை செடிகளை பார்த்து கண்கள் மூலம் பூக்கள் பூத்து குலுங்கிட வேண்டும்.
காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து சென்று சமையல் வேலையை முடித்து ஏழு மணிக்கு தயாராகி நிற்க, அவள் கணவனோ தன்னுடைய அறையில் இருக்கும் ஸ்பீக்கரை உயிர்ப்பித்து எந்த பாடலை போடலாம் என சிந்தனையோடு நின்றான்.
"ஆனந்த் வேகமா" அவள் அவசரப்படுத்த, "இருடி காலைல சில்லுனு பாட்டு கேக்க வேணாம்?"
இளையராஜாவின் இசை பின்னணியில் தவழ, "இந்த பாட்டு வைப் பண்ணிட்டு இரு சக்கரை. மச்சான் அரை மணி நேரத்துல வந்துடுவேன்" என கூறி குளியலறையினுள் மறைந்து கொண்டான்.
என் இனிய பொன் நிலாவே...
பொன்நிலவில் என் கனாவே...
நினைவிலே புது சுகம்... த ர ர ரா த தா...
தொடருதே தினம் தினம்... த ர ர ரா த தா...
கணவனுடைய உடைகளையும் சில எடுத்து வைத்து ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை, "குளிச்சிட்டிங்களா?"
"போகலாமா?"
"வண்டில பேக் வச்சிடவா?"
"பிரஷ் எடுக்கல அங்க வாங்கிக்கலாமா?" கேள்வி மேல் கேள்வி கேட்டு கேட்டு தேவாவை கால் மணி நேரத்தில் வெளியே இழுத்து வந்திருந்தாள்.
"ஏன்டி உனக்கு இந்த அவசரம்? எப்போ போனாலும் அந்த ஊர் அதே மாதிரி தான் இருக்கும்"
தலையை கூட சரியாக துவட்டாமல் இருக்க, "டிரஸ் மாத்துங்க மாத்துங்க" கையில் துணியை திணித்து அவசரப்படுத்த அவனோ அவளை மதிக்காமல் அவள் கையை பிடித்து உல்லாசமாக சுற்றிவிட்டு, பின்னால் பாடும் பாடலை ஆசையாக பாடினான் சிரிப்போடு.
கைகள் இடைகளில்
நெளிகையில் இடைவெளி
"ஆனந்த்..." பைரவி வெட்கத்தை மறைத்து அவனை தடுக்க, அவனோ மனைவியின் நாடியை ஒற்றை விறல் கொண்டு ஸ்பரிசித்து குனிந்து அவளிடம் மீண்டும் பாடலை பாடினான்.
குறைகையில் எரியும் விளக்கு
சிரித்து கண்கள் மூடும்
பனிவிழும்
மலர்வனம் உன்
பார்வை ஒரு வரம்
பனிவிழும் மலர்வனம்
வசந்த காலத்தின் பூக்களை தலையில் கொட்டியது போல் உற்சாகம் நிற்காமல் அவளை சுற்றி சுற்றி ஆடியவன் ஆட்டத்தை தடை செய்ய ஸ்பீக்கரை நிறுத்திவிட்டாள் பைரவி.
"சக்கரை..." ஏமாற்றத்தில் சிணுங்கினான். "என்ன தோட்டத்துக்கு கூட்டிட்டு போங்க. அங்க போனதும் தாராளமா இப்டி ஆடுவீங்களாம் அதை நான் ரசிச்சிட்டே பாப்பேனாம் சரியா?" என்றாள்.
"கொடுமைக்காரி" மனைவியை திட்டி சிகையில் சொட்டும் நீரை வேண்டும் என்றே அவள் முகத்திற்கு நேராக வைத்து ஆட்டினான்.
"ஆனந்த்..." என்று அவன் சேட்டையில் மெல்லிய சத்தத்தோடு சிரித்தவள் அவன் முகம் பற்றி திருப்பிவிட்டு தன்னுடைய முகத்தையும் மறு பக்கம் திருப்ப முனைய அவளே எதிர் பாராமல் தன்னுடைய பலம் கூட்டி தேவாவை தள்ளியிருந்தாள்.
மனைவியை சுற்றிவிட்டு தானும் சுற்றி ஆடி இருவரும் அறையின் மத்தியில் நிற்க மனைவி தள்ளியதில் பிடிமானம் இல்லாததை உணர்த்த தேவா, தன்னுடைய ஒரே பிடிமானமாய் காட்சிதரும் செப்பு சிலையவளின் இடது பக்க இடையை வலக்கரம் கொண்டு யோசிக்காமல் அழுத்தமாய் பற்றிட சிலையாய் உறைந்து நின்றுவிட்டாள் பைரவி.
முகத்தை சுவற்றை நோக்கி திருப்பி வைத்திருந்தவள் அவன்தொடுகையையும் நெருக்கத்தையும் சடுதியில் உணர்ந்து தீயை தீண்டியவள் போல் தேவாவின் முகத்தை அதிர்ந்து பார்க்க, தேவாவின் பார்வையோ தன்னுடைய நெஞ்சமதை சூடேற்றும் மனைவியின் மோகனங்களில் காதலோடு கலந்திடத் துடித்தது.
அதில் மென்மேலும் அனலிட்ட புழுவாய் துடித்து நொடி பொழுதில் கணவனை உதறி தள்ளியவள், கரைகாணாது வடியும் கண்ணீரையும் கட்டுப்படுத்த முயன்று தோற்று ஓடோடி குளியலறைக்குள் நுழைந்து, "நான் நான் அசிங்கம் தேவா, உங்க கை என்மேல படக்கூடாது" என்று வாய்விட்டே கதறலானாள் ஆனந்தின் பைரவி.
"பைரவி..." தேவாவின் மென்மையான அழைப்பு அவளை மேலும் குற்றஉணர்ச்சியில் ஆழ்த்தியது.
"மன்னிச்சிடு சக்கரை" வெளியில் கேட்ட தேவாவின் குரலில் அவன் மனநிலையையும் கெடுத்திட கூடாதென வெளி வந்தாள், "கெளம்பலாமா?" என்று.
வேதனை படிந்த முகத்தை பார்த்தவன் சரி என கூறி அவள் எடுத்து வைத்திருந்த உடையை அணிய குளியலறை சென்ற சில நொடிகளில் அவன் கைபேசி அலறியது.
யார் என பார்க்க சென்ற பைரவி தொடுதிரையில் குணா என்ற பெயரை பார்த்ததும் அழைப்பை ஏற்று காதில் வைக்க அந்த பக்கம் காரமாக வார்த்தைகள்.
"டேய் மயிறு போன் எதுக்கு வச்சிருக்க? போன் பண்ணா எடுக்காம என்னடா பண்ற?" எடுத்த எடுப்பிலே உச்சக்கட்ட கோவத்தில் கத்தினான் குணா.
மேலும் அவன் பேசும் முன்பு, "அண்ணா நான் பைரவி" முந்திக்கொண்டு விழித்தாள்.
"சாரி சாரிம்மா. தேவா இருக்கானா?" என்றான் சங்கடமாக.
"டிரஸ் மாத்..." சரியாக தேவா வர, "தோ குடுக்குறேன் ண்ணா" அவனிடம் கைபேசியை கொடுத்து கட்டிலில் அமர்ந்துகொண்டாள்.
"சொல்லு குணா" என்றான் தேவா சட்டையின் பட்டனை மாறிக்கொண்டே.
"மாப்பிள்ளை, செந்தில் அண்ணே இறந்துடுச்சுடா" என்றான் குணா.
"என்னடா சொல்ற? எப்படி? நேத்து கூட பாத்தேனே மாப்பிள்ளை" பதட்டமாக பேசியவன் அணிந்துகொண்டிருந்த சட்டையை அவிழ்த்து சாதாரண டீ-ஷர்ட் ஒன்றை அணிந்தான்.
"எவ்வளவோ முயற்சி பண்ணியும் காப்பாத்த முடியல தேவா" கசப்பான செய்தியை தாங்க முடியாமல் குணாவிற்கு பேச்சு அடைத்தது.
ஊரில் உள்ள பெரிய புள்ளிகளில் அவரும் ஒருவர். உதவி என சென்று கேட்டால் தட்டாமல் செய்யும் குணமுடையவர் குணாவின் பள்ளி படிப்பு மொத்தத்தையும் ஏற்று உலகை கண்ணாடி கூண்டிற்கு வெளியில் வைத்து பார்க்க பழக்கியவர் இன்று இல்லை என்னும் பொழுது தாங்கி கொள்ள முடியவில்லை.
"சரி கிளம்பிட்டேன். எப்படி ஆச்சு?" என்றான் மெதுவாக நண்பனின் உணர்ச்சிகள் புரிந்து.
"குளத்துல விழுந்துடுச்சு டா" தடுத்து பார்த்தும் குணாவால் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் போக அழுகை வெடித்து கதறியவனை அமர்த்தி வெற்றி தான் சாந்தப்படுத்தினான்.
"நான் பாத்துக்குறேன்டா. நீ கெளம்பி வா"
வெற்றி பேசி முடித்ததும் மனைவியிடம் திரும்பியவன், "பெரிய காரியம் பைரவி" அவள் ஆசையாய் கிளம்ப அந்த ஆசையாய் நிறைவேற்ற முடியவில்லை என வருத்தம் தேவாவுக்கு.
"நான் வரட்டுமாங்க?" தேவாவின் வேதனை அவன் முகத்திலே தெரிய அவன் ஆறுதலுக்கு கேட்டாள்.
"இல்லடா இந்த நேரத்துல உன்ன அங்க கூட்டிட்டு போக எனக்கு மனசு வரல. நான் கிளம்புறேன்" என்றான் அவளை சாந்தப்படுத்தும் சிரிப்பை காட்டி.
கணவன் கை பற்றி, "பாத்து நிதானமா வண்டி ஓட்டுங்க" என்றாள் கலக்கமாக.
"நைட் வந்துடுவேன்" என்றவன் உடனே வெளியில் சென்றிருந்தான்.
Hi how is the chapter?
Comments solitu ponga plzz
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro