ஆனந்தம் - 11
திருமணம் முடிந்து மூன்று நாட்கள் வீட்டிலே மனைவியோடு இருந்த தேவா மதுரை சுற்றி சில இடங்களுக்கு அவளை அழைத்துச் சென்று அவளோடான தன்னுடைய பிணைப்பை சற்று அதிகமாக்கினான்.
மனைவியோடு என்னரமும் சற்றும் மகனை நாயகி பார்த்து முறைத்தாலும் கண்டுகொள்ளும் ரகமா அவன்? தன் போக்கிலே வளைய வந்தான்.
அதன் பிறகு நான்கு நாட்கள் விருதுநகர் அழைத்து சென்று அவர்கள் குடும்பத்தோடு நேரம் செலவிட்டு அவள் முகம் சற்று நிம்மதி காட்டவும் தான் தேவாவிற்கு மூச்சே வந்தது.
திருமணம் முடிந்த உடனே தன்னுடைய வேலைக்காக அவள் மனதை பார்க்காமல் வீட்டிற்கு அவசரமாக அழைத்து வந்தது தன்னுடைய பிழை தான் என வருந்தி தவித்தவனுக்கு அந்த நான்கு நாட்கள் மாற்றம் போல் இருந்தது. நிறைவான மனதோடு வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.
அடுத்த நாள் தேவா தன்னுடைய வேலையை கவனிக்க அயன்தென்கரை சென்றிட ஞாயிற்று கிழமை என்பதால் நாயகி, ராஜரத்தினம் என அனைவரும் வீட்டில் தான் இருந்தனர்.
காலை தேவா ஊருக்கு கிளம்புவதால் நாயகிக்கு முன்பே எழுந்து அவனுக்காக எளிமையான உனைவை அவசரமாக தயாரித்து உண்ண வைத்து பைரவி அனுப்பியிருக்க அவன் சென்றதும் வீட்டினருக்கு சற்று சிரத்தை எடுத்து உணவை தயாரித்தாள்.
விடுமுறை நாள் என்பதால் மெதுவாக எழுந்து வந்தார் நாயகி. அவர் வருவதை பார்த்து பைரவி அவர் குடிக்கும் தேநீரை கலந்து கொடுக்க அவளை புறக்கணித்து தனக்கான தேநீரை தானே தயாரித்து எடுத்து சென்றார்.
அவர் செய்வது வேதனையை தர, மௌனமாக அடுத்த வேலையை செய்ய துவங்கினாள். மகன் இருந்த பொழுது அவள் செய்யும் அனைத்தையும் ஏற்றவர் இன்று ஏன் இப்டி உள்ளார் என்ற சந்தேகம் அவளுக்கு.
சில நிமிடங்களில் அவள் மாமாவும் இஷாவும் வர அவர்களுக்கும் காலை தேநீரை கொடுக்க வர, அதற்குள் சமையலறை வந்த நாயகி அதை தானே வாங்கினார்.
"சூடா புதுசா தான் என் வீட்டுல எல்லாரும் குடிப்பாங்க" என்றார் அதிகாரமாக.
தான் வேண்டாம் என்றதை அப்படியே கணவனுக்கும் மகளுக்கும் கொடுக்க பார்கிறாளோ என்ற சந்தேகம் அவருக்கு.
"புதுசா தான் அத்தை போட்டேன்" அவர் எண்ணம் புரிந்த பைரவிக்கு பேசவே கடினமாக இருந்தது.
"ஓ அப்போ அந்த டீயை வேஸ்ட் பண்ணிருக்கியா நீ?" அதற்கும் கோவம் அவருக்கு.
"இல்ல அத்தை, அத நான் குடிச்சிட்டேன்" - பைரவி
கழுத்தை வெட்டி, "பரவால்ல, உன் இடம் என்னனு தெரிஞ்சு தான் வச்சிருக்க"
இகழ்ச்சியான பாராட்டோடு அவர் வெளியே செல்ல கணவன் கொடுத்த தைரியம் எல்லாம் வடிய துவங்கியது பெண்ணுக்கு.
வெளியேறிய கண்ணீரை துடைத்து சமையலை முடித்தவளால் சமையலறை விட்டு வெளியே செல்ல மனம் வரவில்லை.
அங்கு சென்றால் மீண்டும் ஏதாவது நாயகி பேசிவிடுவாரோ என்ற பயம். அவள் மாமா இருக்கும் பொழுது நாயகி அதிகம் பேச மாட்டார் தான் இருந்தாலும் அவளுக்கு தயக்கம்.
"பைரவி ம்மா"
ராஜரத்தினம் அழைக்கவும் வெளியே பைரவி எட்டி பார்க்க, "என்ன ம்மா இன்னுமா வேலை பாக்குற? சிம்பிளா ஏதாவது செய் ம்மா, ரொம்ப ரிஸ்க் எடுத்தெல்லாம் செய்ய வேணாம். வந்து ஒக்காரு" என்றார் அக்கறையாக.
"சரி மாமா" சன்னமான சிரிப்போடு அவள் வர அதற்குள் எழுந்த நாயகி பாத்திரங்களை துலக்க சென்றார்.
டீப்பாயின் மேல் இருந்த டம்ளர்களை பார்த்த பைரவி அதை எடுத்து சென்று சமையலறை போக அவள் வரவை பார்த்த நாயகி, "வீட்டுக்கு வந்த மருமக ஒரு வேலை பாக்குறதில்ல. எஜமானி மாதிரி இவா உக்காந்திருக்க இவளுக்கு நான் வேலை பாக்கணுமா?" என்றார் மெல்ல கணவன் காதுகளுக்கு கேட்காதவாறு.
"நான் பாத்துக்குறேன் அத்தை" என்றவள் கையிலிருந்த பாத்திரங்களை சிங்கிள் போடடாள்.
"ம்ம் போடுமா, என்ன என்ன இருக்கோ எல்லாத்தையும் வந்து போடு. எனக்கு லீவு விட்டதே உனக்கு வேலை செய்ய தான?" என்றார் மேலும் கோவமாக.
தூக்கிவாரி போட்டது பைரவிக்கு, "அதை நானே பாத்துக்குறேன், நீங்க ரெஸ்ட் எடுங்க"
இதற்காகவே காத்திருந்தவர் பாத்திரங்களை அப்படியே போட்டு, "உன் வீட்டுல சொல்லி குடுத்து தான அனுப்பிருப்பங்க? மாமியார் வீட்டுல கால் மேல கால் போட்டு வேலை வாங்கணும்ங்கிற எண்ணத்தை மாத்திக்கோ"
காரணமே இல்லாமல் பலியை போட்டு சென்றவரை எதிர்த்து பேசும் தைரியம் உள்ளுக்குள் வலுவாய் இருந்தாலும் அமைதியாக கடந்தாள் பெண்.
அதன் பிறகு காலை உணவு, மதிய உணவு என அனைத்தும் பைரவி சமையல் தான்.
நாயகி ராணி போல் அமர்ந்து ஒரு வேலையும் பார்க்காமல் இருக்க ரத்தினம் கேட்டுவிட்டார், "என்ன நாயகி மருமக வந்ததும் வேலை செய்ய வச்சு வேடிக்கை பாக்கறியா?" என.
"அம்மா டெய்லி காலேஜ் போயிட்டு வர்றாங்க, அவங்க வீட்டுல சும்மா தானே இருக்காங்க. வேலை பாக்கட்டும் ப்பா" என்றால் இஷா.
"அதுக்குன்னு எல்லா வேலையும் பைரவியே பாக்கணும்னு அவசியம் இல்ல இஷா, நாயகி நைட் நீ தான் சமையல் பாக்கணும். சொல்லிட்டேன்"
தங்கள் அறையிலிருந்து அனைத்தையும் கேட்ட பைரவி கணவனுக்கு குறுந்செய்தி அனுப்பினாள், "சாப்டீங்களா?" என.
அரை மணி நேரம் பதிலே இல்லை. அமைதியாக படுத்திருந்தவள் கண்ணயர்ந்த நேரம் நோட்டிபிகேஷன் சத்தம்.
திறந்து பார்க்க புகைப்படம் வந்தது அவனிடமிருந்து. மண்சட்டியில் மிதந்தது அயிரை மீன்கள் பல. பார்க்கவே பைரவிக்கு அதை ருசி பார்க்கும் ஆவல். அவனிடம் கேட்க கூச்சம்.
"ஓகே சாப்புடுங்க" என செய்தி அனுப்பி வைக்க உடனே அதை பார்த்திருந்தான்.
அடுத்த நிமிடம் அழைப்பு வந்தது.
"ஹலோ சக்கரை" என்றான் ஆவலாக.
அவன் சக்கரையில் இனித்தது அவள் மனம், "ம்ம்ம் ஹலோ" என்றாள் சிரிப்பை அடக்கி.
"இப்ப தான் சாப்பிட்டேன், நீ சாப்பிட்டியா?" - தேவா
"சாப்பிட்டேன்" - பைரவி
"என்ன கொளம்பு?" - தேவா
"கொளம்பு இல்லை, இன்னைக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் கிரேவி வச்சேன்" - பைரவி
"பார்ரா, என் பொண்டாட்டி சமயலா இன்னைக்கு?" அவளோடு பேசிக்கொண்டே அவன் உண்பது தெரிந்தது.
"ம்ம் ஆமா" என்றாள் அமைதியாக.
"இங்க அயிர கொளம்பு. தோட்டத்துக்கு வர்ற ஒரு கெழவி வச்சு தரும். ருசி அருமையா இருக்கு" உசுப்பேத்திய அவனை அடிக்க தோன்றியது பைரவிக்கு.
"ஓ சரி" என்று மட்டும் சொன்னவள் குரலில் சிறு கோவம்.
சில நொடிகள் அவன் இன்னும் கொஞ்சம் குழம்பு கேட்டு வாங்கி உண்பது கேட்க அத்தை முன்பு மிகவும் கம்மியாக உண்ட பைரவிக்கு நாவில் எச்சில் ஊறியது.
"எனக்கு பிரியாணி வேணும், மிச்சம் இருக்குமா?" சந்தேகமாக தேவா.
'அதான் அங்க கொட்டிக்கிட்டியே தர மாட்டேன் போடா' சண்டைக்கு நிற்க துடித்தது பைரவியின் நா, "ம்ம் இருக்கு" என்றாள் அமைதியாக.
"ஹே பாரேன், கெண்டை மீன் வறுவல் பண்ணோம், அத போட்டோ எடுத்து அனுப்ப மறந்துட்டேன். குளத்து பக்கம் போயிருந்தேன் பைரவி, வாண்டு பசங்க எல்லாம் மீன் புடிச்சிட்டு இருந்தாய்ங்க. சரி உதவி பண்ணலாம்னு போனப்போ எனக்கு ரெண்டு மீனு சிக்குச்சு. புடிச்சு வறுத்தெடுத்துட்டேன்ல. அப்டியே புடிச்சு அப்டியே வறுத்து சாப்புடுற ருசியே தனி. அப்டியே பஞ்சா கரையிது சக்கரை"
பைரவிக்கு மீன் அதிகம் பிடிக்காது தான் ஆனால் அயிரை மீன் மட்டும் விதிவிலக்கு இப்பொழுது அவன் மண்சட்டியில் அனுப்பிய அயிரை மீன் குழம்பும், குளத்தில் பிடித்து அதன் ருசி மாறாமல் அவன் உண்பதை கூறவும் அவளுக்கும் ஆசை துளிர்த்தது.
"நல்லா சாப்புடுங்க" என்றவள் குடல் இங்கு எரிந்தது.
"சொல்லவே தேவையில்ல சாப்பாடு சாப்புடுறேனோ இல்லையோ கொளம்ப கண்டிப்பா குடிச்சிடுவேன்" என்றான்.
"நீங்க சாப்புடுங்க நான் வக்கிறேன்" - பைரவி
"ம்ம்ஹ்ம் இருடி. உன்கிட்ட பேசிக்கிட்டே சாப்டா அது தனி ருசியா இருக்கும்" என்ற தேவாவின் குரலில் இருந்த ஆசை அவளை அமைதியாக்கியது.
"என்ன பேச்சையே கானம்?" - தேவா
"இருக்கேன்" - பைரவி
"என்ன பண்ற?" - தேவா
"சும்மா தான் இருக்கேன், போர் அடிக்கிது" - பைரவி
"சரி அப்டியே எந்திரிச்சு என்னோட கபோர்டு திற" - தேவா
யோசனையோடு அவன் சொன்னதை செய்து, "ம்ம் தொறந்துட்டேன்" - பைரவி
"அதுல உள்ள லாக்கர் ஓபன் பண்ணு" உணவை முடித்து கை கழுவி அங்கிருந்த கயிற்று கட்டிலில் படுத்தான்.
சிறிய, மிக சிறிய பரிசு பெட்டி ஒன்று இருந்தது. அதனை பார்த்ததும் அது தனக்கு தான் என உறுதியானது பெண்ணுக்கு.
ஆனாலும் தெரியாதது போல் சிரிப்போடு, "ம்ம் தொறந்துட்டேன்" என்றவள் கைகளில் அந்த சிறிய பெட்டி அழகாய் வீற்றிருந்தது.
"அங்க ஒரு கிபிட் பாக்ஸ் இருக்கா?" - தேவா
"ம்ம்ம்..." தேடுவது போல் பாவனை செய்தவள் கட்டிலில் படுத்து அந்த பெட்டியை ஆசையாய் வருடினாள், சிறிதும் கணம் இல்லை.
ஏனோ இப்பொழுதெல்லாம் அவன் வாங்கி தரும் சிறு சிறு விஷயங்கள் கூட அவளுக்கு பிடித்திருந்தது. "கெடைச்சிடுச்சு" குரலில் ஆர்வத்தை காட்டாமல் தவிர்க்க பெரும்பாடாக இருந்தது.
"ம்ம் அது உனக்கு தான். ஓபன் பண்ணி பாரு" - தேவா
அவன் கூறுவதற்கு முன்பே பாதி திறந்தது பைரவியின் கைகள். ஆர்வமாக திறந்து பார்த்த பைரவி இறுதியில் தெரிந்த மோதிர டப்பாவை பார்த்ததும் அத்தனை மகிழ்ச்சி.
"ஆனந்த்... ரிங் பாக்ஸ் இருக்கு" - பைரவி
"ம்ம். உனக்கு தான் வாங்குனேன். அன்னைக்கு மோதிரம் மாத்துனது ஏதோ ஒரு குறை இருக்குற மாதிரியே பீல் ஆச்சு அதான் வாங்குனேன்" - தேவா
அந்த மோதிரத்தை அவனே கையில் கொடுத்திருக்கலாம் என பைரவி யோசித்திருக்க அவன் திறந்து பார்க்க கூறினான்.
அத்தனை ஆசையாக பைரவி திறந்து பார்க்க உள்ளே எதுவும் இல்லை. பயந்தாள், அவன் வாங்கிய கடையில் பொருளை வைக்க மறந்து போனார்களோ என, "ஆனந்த் உள்ள எதுவும் இல்லை"
அவள் பதிலை கேட்டு அந்த பக்கம் தேவா வாய் விட்டு சத்தமாக சிரிக்க, "ஆனந்த் சிரிக்காதிங்க, கடைல உங்கள ஏமாத்திருக்காங்க, முதல கடைக்கு போய் என்னனு பேசுங்க" என்றாள் வேகமாக.
அவனோ சிரிப்பை நிறுத்திவிட்டு, "ஹே செல்ல பொண்டாட்டி, பொறுமை பொறுமை. நான் எதாவது வாங்கிருந்தா தானே உள்ள இருக்கும்" பைரவி பக்கம் அமைதி.
"உனக்கு போர் அடிக்கிதுன்னு சொன்னியே அதான்..." இன்னும் சிரித்தான், "இப்ப என்ன திட்டவே உனக்கு நேரம் பாத்தது... டாட்டா பொண்டாட்டி"
அவளிடம் கைபேசியிலேயே அடி வாங்கும் முன் இணைப்பை துண்டித்துவிட்டான் தேவா.
பைரவிக்கு கோவம் தான் சிறிது வந்தது, அவள் பயந்து போயிருக்க இவனோ விளையாண்டுளன் என எளிதாக கூறி சிரிக்கிறான் என்ற கோவம். 'எதிர் பாக்கவே இல்ல நீ?' மனம் கேட்ட கேள்வியில்,
'சரி ரொம்பவே கொஞ்சம் எதிர் பாத்துட்டேன் தான்' ஒத்துக்கொண்டது அவளும் தான்.
அதன் பிறகு கணவன் சொன்னது போல் மாலை வரை அவனை திட்டிக்கொண்டே வேலை ஓடியது.
"பைரவி, கார்ல எதுவும் திங்ஸ் இருக்கானு செக் பண்ணிக்கோ ம்மா, நான் கொஞ்சம் வெளிய போகணும்" எனவும் ஒருமுறை சென்று சோதித்து பார்க்க ஒரு பையை எடுக்காமல் வைத்திருந்தான் தேவா.
அவள் அன்னை கொடுத்தது தான். திருமணத்தன்று வெள்ளி பொருட்களை கொடுக்க மறந்து போக நேற்று கொடுத்து அனுப்பியிருந்தார்.
"உன் அத்தைகிட்ட மறக்காம குடுத்துடு" என. அதனை எடுத்து சென்று பைரவி வரவேற்பறைக்கு செல்ல அங்கு அமர்ந்திருந்த அவன் அன்னையிடம் கொடுத்தாள்.
"என்ன இது?" ஆர்வமில்லாமல் கேட்டார் நாயகி.
"வெள்ளி ஜாமான் அத்தை. அம்மா அன்னைக்கு மறந்துட்டாங்கனு இப்ப குடுத்தாங்க" அவருக்கு பதில் சொல்ல, இஷா அத்தை ஆவலாய் பிரித்து பார்த்தாள்.
"நீயே வச்சுக்கோ, எங்க இருந்தா என்ன?" என்றவர், "யாருக்கு வாங்குனதோ என் பையனுக்கு வந்துருக்கு" நாயகி வார்த்தைகளின் தாக்கம் புரியாமல் பேசிட பைரவிக்கு கண்கள் கலங்கி வலித்தது.
ஆசையாய் அவரிடம் காட்ட எடுத்து வந்து, இறுதியில் இதயத்தில் வேதனையை சுமந்து நின்றாள்.
தன்னுடைய மகனுக்கு உன்னை திருமணம் செய்ததே பெரிய பிழை என அவளை பார்க்கும் நொடி ஒவ்வொன்றும் அழுத்தி அழுத்தி கூறும் அவர் செயல்கள்.
"என் ப்ரன்ட் கவிதா தெரியும்ல இஷா உனக்கு?" மகளின் கேட்க, "ம்ம்ம் தெரியும் ம்மா"
"அவ மகளுக்கு ஒன்றை கிலோ வெள்ளி, ஒரு கிலோ தங்கம் தர்றேன் உன் பையனுக்கு தான் என் பொண்ணுன்னு சொன்னா. நானும் சரி உன் கல்யாணத்தை முடிச்சிட்டு பேசலாம் நினைச்சேன்" - நாயகி
"தப்பு பண்ணிட்டீங்க ம்மா, அப்ப நீங்க தெளிவா முடிவு எடுத்திருந்தா இந்நேரம் அண்ணன் ரொமான்ஸ் பண்ணிட்டு சுத்திருப்பான்"
இருவரும் மாறி மாறி ஜாடை பேச்சுகள் பேச உயிர் இல்லாத உடல் போல் தங்கள் அறைக்கு நடந்தாள்.
மதியம் முதல் கணவன் இனிமையாக அவளை ஆட்டிப்படைக்க இப்பொழுதும் அவன் அன்னையின் உபயத்தினால் அவனே ஆட்டிப்படைதான் ஆனால் இம்முறை அவன் எதிர்காலத்தையும் சேர்த்து வருத்திவிட்டோமோ என்ற பயம்.
தன்னால் அவன் சுகங்களை அனுபவிக்க முடியாமல் உள்ளதோ?
ஏராளமான எண்ணங்கள் வியாபிக்க இரவு உணவை மறந்து தங்கள் அறையின் பால்கனியில் இரவின் இருட்டை வெறித்து அமர்ந்திருக்க அவன் வாகனம் வீட்டினுள் நுழையும் சத்தத்தினால் தான் சுயம் பெற்று கீழே வந்து கதவை திறந்தாள்.
மழையில் நனைந்திருப்பான் போலும். உடை எல்லாம் உடம்போடு ஒட்டி, சிகையினுள் அவன் விரல்கள் சென்ற தடம் கூட அப்படியே இருந்தது.
எதுவும் பேசாமல் வழி விட்டு சமையலறை செல்ல அவளை பார்த்தவன் எப்பொழுதும் இருக்கும் அவள் அமைதி தானே என மேலே சென்று குளித்து உடை மாற்றி வந்த சமயம் அவன் ஆசைப்பட்டு கேட்ட பிரியாணியை சூடு செய்து வைத்து, இரண்டு தோசை வார்த்து தாயாராக இருந்தாள்.
"சாப்பிட்டியா?" இல்லை என தலை ஆட்டி ஏற்கனவே அவள் அத்தை மீதம் ஹாட்பாக்சில் வைத்திருந்த தோசையை எடுத்து தன்னுடைய தட்டில் வைத்தாள்.
அவள் அமைதிக்கு காரணம் மதியம் தன்னுடைய சேட்டையால் இருக்குமோ என சந்தேகம். ஆறி போன தோசையை அவள் சாப்பிடுவதை பார்த்தவன் அத்தை தான் எடுத்துக்கொண்டு அவள் தன்னுடைய தட்டில் சூடாக இருந்ததை அவளிடம் வைத்தான்.
தட்டையே மௌனமாக பார்த்தவள் மீண்டும் அவனிடமிருந்து எடுக்கப்போக, "இப்ப என்ன பைரவி உனக்கு?" என்றான் புரியாமல்.
"எனக்கு ஒன்னும் இல்ல, உங்களுக்கு என்ன நான் அத சாப்டா?" - பைரவி
"அது ஆறி கெடக்குடி" - தேவா
"அப்போ நீங்க ஆறுனத சாப்பிடலாமா?" - பைரவி
"அப்போ நீ சாப்புடலாமா? எனக்கு பிரியாணி சூடா இருக்கு, அதுனால நான் இத எடுத்துக்குட்டேன்" - தேவா
"நீங்க வேலைக்கு போயிட்டு உழைச்சிட்டு வர்றவங்க. நான் வீட்டுல சும்மா தானே இருக்கேன்? சாப்பிடலாம்" - பைரவி
அவள் மனநிலை இப்பொழுது சரியில்லை என புரிந்தவன் அவள் போக்கிலே விட்டு உணவை கவனிக்க தலையை தூக்கி தேவா முகத்தை கூட பார்க்கவில்லை அவன் மனைவி.
"பைரவி சாப்புடாத" பதறியடித்து எழுந்தவன் எதற்கு தடுத்தான் சொல்ல வருகிறான் என யூகிக்கும் முன்பே கணவன் கதவை திறந்து வெளியேறியிருந்தான்.
போன வேகத்தில் வந்தவன் அடுப்பை உயிர்ப்பித்து ஏதோ வேலை செய்ய பைரவி தட்டையும் அவனையும் மாறி மாறி பார்த்தாள்.
'இப்ப இத நான் சாப்புடனுமா வேணாமா?' என குழப்பத்தில் இருக்க அவன் செய்த ஏதோ ஒன்றின் வாசனை கூட பைரவி இருந்த நிலையில் எட்டவில்லை.
சுட சுட இருந்த தோசை மேலும் ஆறிப்போயிருக்க ஊத்தப்பம் பதத்தில் சுட சுட ஒரு தோசையை அவள் தட்டில் வைத்து, அதை விட சூடாக நன்கு சுண்டியிருந்த அயிரை மீன் குழம்பை மனைவியின் தட்டில் பரிமாறினான் தேவா.
"ஏன்?" என்றாள் அந்த குழம்பில் கண்ணை வைத்து.
"என்கிட்டையே புடிக்கும்னு சொல்ல என் பொண்டாட்டிக்கு தயக்கம். அவளுக்கு புடிக்கும்னு தெரிஞ்சு அதுக்கு மேல என்னால சாப்புட முடியல.
அதான் மொத்தத்தையும் எடுத்து வச்சு ரசம் ஊத்தி பொரிச்ச மீன் வச்சு சாப்பிட்டேன், கெண்டையை எதிர் பாத்துடாத" என்ற எச்சரிக்கையோடு தேவா மேலும் தன்னுடைய உணவில் கவனமாகினான்.
ஏற்கனவே குற்ற உணர்ச்சியில் தவித்தவள் அவனிடம் நன்றி சொல்ல கூட அவனை பார்க்கவில்லை. கண்கள் எல்லாம் கரித்தது, முன்னாள் இருந்த உணவு மங்கலாக துவங்க, கொள்ளை ருசியாக இருந்த உணவின் சுவையை நா உணர மறுத்தது.
சிறிதும் பாசத்தை காட்டாத தனக்கே இவ்வளவு ஆசையாக ஒவ்வொன்றையும் செய்கிறானே, அவனை முழு மனதோடு ஏற்று கணவனாகியிருக்கும் பெண்ணை மனந்திருந்தால் அவன் வாழ்க்கை செழுமையாக இருந்திருக்குமோ என்ற எண்ணமே பெண்ணை குத்தி கிழித்தது.
எத்தனை முயன்றும் முட்டி வந்த அழுகையை அவளால் அடக்க முடியவில்லை, "சக்கரை செம்ம டேஸ்ட் பிரியாணி, இம்புட்டுகாண்டு க்ரேவி எடுத்து வச்சிருக்கலாம்ல ங்கொக்கா மக்க டக்கரா இருந்துருக்கும்"
காரம் அதிகம் போட்டிருந்த காரணத்தால் அவன் வீட்டினர் பிரியாணியை சிறிதளவே எடுத்திருக்க தன்னுடைய மனத்திற்காக பார்த்து பேசுபவன் சுயநலமில்லா அன்பினில் அவள் அழுகை விசும்பலாய் வெடித்தது.
திடீரென அழுகும் மனைவியை பார்த்து பதறிய தேவா, "ஹே பைரவி என்ன ஆச்சு?" என்றான்.
பதில் சொல்லாமல் மேலும் அழுபவளின் கண்ணீரில் பதட்டமானவன் கை கழுவி வேகமாக அவள் அருகே வந்து நின்றான், "பைரவி என்னடி இது எதுக்கு இப்டி அழகுற? நான் ஏதாவது உன்ன ஹர்ட் பண்ணிட்டேனா? சாரி டா. ப்ளீஸ் அழுகாத"
அவனால் தான் அழவில்லை என தலை ஆட்டி இன்னும் அழுவதிலே மும்முரமாய் இருந்த மனைவி அமர்ந்திருந்த நாற்காலியை 90 கோணத்தில் தன்னை பார்த்து திரும்பியவன் அவன் முன் மண்டியிட்டு, "அம்மா ஏதாவது சொன்னாங்களா?" என்றான் சற்று கோவமாக.
உடனே பைரவி அழுகை நின்று அவனை கவலையோடு பார்த்தாள், "ஏன் ஆனந்த் நான் அழுதா அதுக்கு மத்தவங்க தான் காரணமா இருப்பாங்களா?
என்னோட நிலைமைக்கு என்னைக்கும் நான் மட்டும் தான் காரணமா இருந்துருக்கேன். எனக்காக எவ்ளோ யோசிக்கிறீங்க நீங்க, ஆனா என்னால உங்கள சந்தோசமா வச்சுக்க முடியலையே. சின்ன சந்தோசத்தை கூட குடுக்காம நான் என்னனு உங்களுக்கு மனைவி ஆனந்த்?"
"சந்தோசம் மீன்ஸ் எத சொல்ற நீ?" புருவங்கள் உயர்ந்து பார்வை உன்னிப்பானது தேவாவுக்கு.
தயங்கியவள் கண்ணீர் இன்னும் அதிகமானது, "ஒரு மனைவி கணவன எப்படி சந்தோசமா வச்சுக்கணுமோ அப்டி" என்றாள் திக்கி திணறி.
"அப்போ செஃக்..." பைரவி கண்கள் வேதனையில் மூட அதை கவனித்தவன் உடனே வார்த்தையை விழுங்கினான்,
"தாம்பத்யம் குடுத்தா தான் என்ன சந்தோசமா வச்சுகிட்டாதா அர்த்தமா?"
மூடிய அவள் கண்கள் இன்னும் கசிந்தது மனைவிக்கு, "ஆமா" என்றாள் வேதனையோடு.
"சரி அப்போ நான் உன்ன தொடுறேன் பைரவி, ஆனா உன்னால முகம் சுளிக்காம, மனசு வலி இல்லாம என்னோட நெருங்கியாவது நிக்க முடியுமா?"
அவளிடம் அமைதி தான் பதில், "உன் மனச தெரிஞ்சும் உன் வேதனையை கொளுத்துறேன்னு வை, நான் ரேப் பண்ணதுக்கு சமம்" பற்களை கடித்து மனைவியை முறைத்தான்.
உடையை இறுக்கமாக பற்றிய பைரவியின் கைகளில் வலி, "நீங்க என்னோட ஹஸ்பன்ட்..."
"மயிறு..." அவளை முடிக்க விடாமல் தடுத்தான் தேவா.
"பேச வைக்காத பைரவி. புருஷனா இருந்தாலும் ஒரு பொண்ணுக்கு விருப்பம் இல்லாம பக்கத்துல வந்தாலே அது பேர் ரேப் தான். நான் ஆம்பளடி. கட்டில்ல ஜெய்கிறத விட உன் மனச ஜெயிக்கிறது தான் எனக்கு முக்கியம்.
அதையும் மீறி கண்டதையும் யோசிச்சு தேவையில்லாதது கேட்டு உன் இஷ்டத்துக்கு தான் எல்லாம் நடக்கும்னு ஆசைப்பட்டா, உன் எண்ணம் மாறுற வர நான் இந்த வீட்டு பக்கம் எட்டியே பாக்க மாட்டேன்"
அங்கிருந்து நகரப் போனவனின் கையை பிடித்தவள் பிடித்த வேகத்தில் அவன் கையில் தலை வைத்து தேம்பி அழ அவள் நிலையை பார்த்து தேவாவுக்கு கூட கண்ணீர் வந்தது.
"உங்களுக்காக என்ன மாத்திக்கணும்னு தான் ஆனந்த் நினைக்கிறன். ஆனா என்னால முடியல... முடியல ஆனந்த். காதுல கேக்குற ஒவ்வொரு வார்த்தையும் மூளைக்கு தப்பா போகுது" திக்கி திணறி பேசியவன் கண்ணீர் அவன் கையை நனைத்திருந்தது.
"என்னால உங்க சந்தோசம் எல்லாம் பாலா போகுதோனு மனசு தவிக்கித்து" அவள் தலையை ஆதூரமாய் வருடியது.
நாற்காலியை எடுத்து போட்டு அவளோடு நெருங்கி அமர்ந்தான். "சந்தோசம் எனக்கு இல்லனு யாரு உங்கிட்ட சொன்னா? வெறும் செஃக்.."
வேதனையில் சுருங்கிய அவள் முகத்தை பார்த்து அந்த வார்த்தையை விழுங்கினான், "முக்கியம்னு இல்ல பைரவிம்மா. அதுக்கும் மேல புருஷன் பொண்டாட்டிக்குள்ள என்ன என்னமோ இருக்கு.
அந்த வகைல மட்டும் தான் உன்னால எனக்கு சந்தோசம் குடுக்க முடியும்னு இல்லையே. எனக்காக எவ்ளோ நேரம் ஆனாலும் காத்திருந்து எனக்கு பரிமாறுறது சந்தோசம்.
நான் வாங்கி தந்த அந்த சின்ன பன்ன ருசித்து நீ சாப்பிட்டது எனக்கு சந்தோசம். நடு ராத்திரில எனக்காக எதுவும் யோசிக்காம என் கூடையே வந்தது சந்தோசம். மதியம் கூட உனக்கு அயிர மீன் புடிக்கும்னு சொல்லாம உன் கோவத்தை மறைச்சு 'நீங்க சாப்புடுங்க நீங்க சாப்புடுங்கனு' மறைமுகமா கோவத்தை காட்டுனியே அது கூட எனக்கு அவளோ சந்தோசமா இருந்துச்சு"
தலை தாழ்த்தி தான் பேசுவதை கேட்பவள் முகத்தை கைகளில் ஏந்தி ஆறுதல் கூற துடித்தது அவனுக்கு.
"என்ன பாரு பைரவி" அவள் கைகளில் தேவா அழுத்தம் கொடுக்க அவனை பார்த்தாள் அவன் மனைவி.
"இத்தனை சந்தோசம் குடுத்த என் பொண்டாட்டி கிட்ட நான் இதுக்கும் மேல வேற என்ன எதிர் பாப்பேன்?"
அவள் அமைதியாக இருக்க, "இனிமேல் இந்த மாதிரி பேசுவியா? உன் வீட்டுல இன்னும் ஒரு வாரம் விட்டுட்டு வரவா?"
இரண்டுக்கும் வேக வேகமாக பைரவி தலையை ஆட்ட அவளை சீண்டவே, "எதுக்கு இந்த வேணாம் தலையாட்டல்?"
"ரெண்டுக்கும்" அவளுக்கு தங்கள் வீட்டை விட, அவனோடு இருந்து அவனுக்காக தங்கள் வாழ்க்கையை சீராக்க அவனோடே இருக்க வேண்டும் என ஆசைகொண்டது.
"அப்போ என்ன விட்டு போக மனசில்லையா?" பதில் சொல்லாமல் கணவன் பார்வையை தவிர்த்தாள்.
"அப்றம் அன்னைக்கே சொல்லணும்னு நினைச்சேன், நிவியை நமக்குள்ள நீ இழுக்க கூடாது. அவ மேல ஒரு இன்டெரெஸ்ட் இருந்தது, ஆனா அதுக்கும் மேல அவளை யோசிக்க கூட இல்லை.
அதையும் மீறி அவ மேல எனக்கு ஆசை இருந்ததுன்னு வை இந்நேரம் நமக்கு கல்யாணம் நடந்துருக்காது. ஒருத்தி மேல ஆசைய வச்சிட்டு இன்னொருத்திக்கு என் தங்கச்சிக்காக வாழ்க்கை குடுக்குற நல்லவன் நான் இல்லை. ரொம்பவே சுயநலவாதி தான் காதல்னு வந்துட்டா" - தேவா
"சரி என்னை இன்னைக்கு ரொம்ப திட்டிருப்ப போல? அடிக்கடி புரையேறுச்சு" - தேவா
"நான் எதுக்கு உங்கள திட்ட போறேன்" கண்ணீரை துடைத்து சகஜமாக முயன்றாள்.
"அந்த மோதிரம் மேட்டர்" - தேவா
"ஓ அது மோதிரம் டப்பாவா?" தெரியாதது போல் பைரவி.
"மேடம்க்கு அது மோதிரம் வைக்கிறதுன்னு தெரியாது அப்டி தான?" - தேவா
"எங்க ஊர்ல அந்த மாதிரி டப்பால கோல்ட் காயின் வச்சு தருவாங்க. சரி யாருக்கோ கிபிட் வாங்கிருக்கிங்களோனு..." வார்த்தையை இழுத்து சென்று ஓரக்கண்ணால் அவனைப் பார்த்தாள்.
"ஆஹான்?" - தேவா
"ம்ம்" - பைரவி தேவா அமைதியாக இருக்க,
"அப்றம் ஏன் அது எனக்காக வாங்குனதுன்னு சொன்னிங்க?"
ஒரு ஆர்வத்தில் கேட்டுவிட்டாள், அதன் பிறகே தான் பேசியது புரிய மனம் துள்ளி திரும்ப, மீண்டும் நாற்காலியை தன்னை பார்த்து இழுத்தான் மெல்லிய சிரிப்போடு.
"என்ன கேட்ட என்ன கேட்ட?" ஆர்வமாக அவளிடம் கேட்டான்.
"இல்ல ஒன்னுமில்ல" - பைரவி "இல்ல ஏதோ சொன்ன" - தேவா
தன்னையும் மீறி அவன் செயல்கள் மேல், அவன் மேல் உரிமையும் எதிர்பார்ப்பும் தனக்கு வந்ததை பைரவி இன்னும் உணராமல் இருந்தாள்.
"பசிக்கிது சொன்னேன் ஆனந்த்" வெட்கத்தை கட்டுப்படுத்தி பைரவி தலையை வேறு பக்கம் திருப்பியிருக்க கை பிடித்து அவள் மோதிர விரலை சொடக்கிட அதிர்ந்து திரும்பி அவனை பைரவி பார்க்கவும்,
அந்த கண்களின் அழகை ரசித்தவன் "ஏன்னா கண்ணுடி சக்கர இது" வியந்தான் அவள் கணவன்.
ஆசையாய் அவன் பேசிய வார்த்தையில் மெல்ல புன்னகை எட்டி பார்க்க தான் பிடித்திருந்த அந்த விரலில் வைரங்கள் மின்ன பூக்கள் கோர்த்திருந்த பிளாட்டினம் மோதிரத்தை அவள் விரல்களுக்கு வலிக்காமல் மாட்டிவிட்டான்.
"நீயா போட்டுக்கவா வாங்கி வச்சேன்? என் பொண்டாட்டிக்கு ஆசையா அவ கண்ண பாத்துட்டே போட்டு விட தான் வாங்குனேன்"
அதனை போட்டுவிட்டு அவள் கையை திருப்பி திருப்பி ஒவ்வொரு கோணங்களில் அழகு பார்க்க அவன் ஆசையே அவளை அதிகமாக புன்னகைக்க வைத்தது.
"ரொம்ப அழகா இருக்குங்க" என்றாள் அவன் புன்னகை பார்த்து.
"உனக்கு தாலி செயின் எடுக்குறப்போவே எடுத்துட்டேன். இப்போ தான் குடுக்க நேரம் வந்துருக்கு போல... சரி எனக்கு எப்போ வாங்கி தர போற?" - தேவா
"என்கிட்ட காசு இல்லையே..." - பைரவி
"என் காசு உன் காசு தான், ஆனாலும் நீ உன் காசுல தான் எனக்கு மோதிரம் வாங்கி தரணும். மோதிரம் இல்லைனாலும் பரவால்ல ரொம்ப நாள் செயின் வாங்கணும் ஆசை" - தேவா
"அதான் போட்டிருக்கிங்களே" அவர்கள் திருமணத்தின் பொழுது அவள் வீட்டின் சார்பில் போட்ட சங்கிலியை காட்டினாள்.
"அது என் மாமா எனக்கு போட்டது. என் பொண்டாட்டி எனக்கு பிளாட்டினம் போடுவா" - தேவா
"அப்போ நான் உங்க கூட தோட்டத்துக்கு வேலை பாக்க வரவா?" - பைரவி
"பார்றா என் பொண்டாட்டிக்கு மரம் எல்லாம் ஏற தெரியும் போலயே" - தேவா
"மரம் ஏறணுமா?" - பைரவி
"பின்ன, தென்னந்தோப்புல மரம் ஏறி தானே இளநி பறிக்கனும்?" - தேவா
"இளநி பறிக்கணுமா?" - பைரவி
"சரி அப்போ என் காளைகளை பாத்துக்குறியா?" - தேவா
"காளையா?" - பைரவி
"என்னடி எதுக்கு எடுத்தாலும் இம்புட்டு ஷாக் ஆகுற?"
"பின்ன எனக்கு வர்ற மாதிரி ஈஸியான வேலை சொல்லுவிங்கனு பாத்தா இவ்ளோ கஷ்டமானதா சொல்றிங்க" - பைரவி
"இதெல்லாம் கஷ்டமா? எங்க ஊர்ல பல்லு போன கிழவி கூட அழகா மரம் ஏறும்" - தேவா
"ம்ம்ம் அவங்க எல்லாம் அங்கையே இருந்து வேலை செய்றாங்க, எனக்கு அப்டி இல்லையே" - பைரவி
"சரி அப்போ உனக்கு வர்ற மாதிரி ஈஸியான வேலைனா என்ன வேலை?" - தேவா
"இந்த கணக்கு பாக்குறது" - பைரவி
"நாளைக்கே வா, அங்க இருக்க கணக்குபிள்ளைய நான் அனுப்பி விட்றேன்" - தேவா
"ஆஆ... வேணாம் வேணாம். அவர் பாவம்" வேகமாக மறுத்தாள் தனக்காக மற்றவர் வேலை போவதை எண்ணி.
"உங்க மில்ல?" - பைரவி
"அங்கெல்லாம் வேணாம், ஆம்பளைங்களா வருவாங்க. என்னால எந்நேரமும் அங்கையே இருக்கவும் முடியாது" - தேவா
சோகமாக முகத்தை தூக்கி வைத்திருந்த மனைவியை பார்த்தவன், "பேசாம வயலுக்கு வந்தரியா? ஒரு நாளைக்கு நானூறுல இருந்து ஐநூறு வர காசு வரும்" - தேவா
"ம்ம்ம் ம்ம்ம்" ஆர்வமாக அவன் மனைவி தலையை ஆட்ட, "பாம்பு, நண்டு அதெல்லாம் வரும் பரவல்லையா?" பயத்தில் விழிகள் பெரிதாகி நடனமாட மாட்டவே மாட்டேன் என ஆட்டினாள்.
பெருமூச்சை விட்டு, "இனி என்கிட்ட வேற வேலை இல்லப்பா" என்றான் சோகமாக.
ஆனாலும் அதோடு விடாமல், "எது எப்டியோ எனக்கு நீ செயின் வாங்கி தரணும். பிளாட்டினம் செயின் தான் வேணும்" தூரத்தில் இருந்த தட்டை எடுத்து பிரியாணியை உண்ண துவங்க, அவனையே பாவமாக பார்த்தாள் அவன் மனையாட்டி.
"நல்லா யோசி டைம் இருக்கு. இப்ப சாப்புடு" என்றான் அவள் நாற்காலியை உணவை நோக்கி திருப்பிவிட்டு. யோசனையிலே உணவு உள்ளே இறங்க தேவா அந்த மீன் குழம்பை எடுக்க சென்ற நேரம் அவன் கையை தட்டிவிட்டு,
"அது எனக்கு" என்றாள் காட்டமாக.
"ஏய் எனக்கும் அதுல பங்கு இருக்கு, தா டி" என்றான்.
"மாட்டேன்" குழம்பை அவன் கை எட்டாவகையில் தள்ளி வைத்து, "மசாலா அம்மில அரைச்சிங்களா?" கணவனிடம் கேட்டாள்.
"ஆமா ஆமா, தோப்புல எல்லாம் மிக்சி, கிரைண்டர் இருக்காது. அங்க என்ன இருக்கோ அந்த பொருள் வச்சு தன் செய்வாங்க" என்றான் தேவா.
"ரொம்ப பிரெஷா இருக்கு" ரசித்து ரசித்து இரண்டு தோசையை விழுங்கியவள் மாலை மீதம் இருந்த சாதத்தையும் கொஞ்சம் வைத்து விறல் சூப்பி உண்டாள்.
"நீ அழுதுட்டு இருந்தப்போவே நான் கமுக்கமா எடுத்துருக்கணும்" சின்ன சிரிப்போடு இருவரும் இதமான மன நிலையில் உறங்க சென்றனர்.
காலை எழுந்தவுடன் கிராமத்திற்கு செல்லாமல் நிதானமாக நடைப்பயிற்சி சென்று வந்த மகனை அதிசயமாக பார்த்த அவன் தந்தை, "என்னடா வேலை இல்ல போல. எந்நேரமும் சும்மாவே சுத்துற?" "நான் என்ன வாத்தியாரா சும்மாவே இருக்க" - தேவா
"வாத்தியாரா ஆகிருந்தா இந்நேரம் ஊரே மதிசிருக்கும்" - ராஜரத்தினம்
"நீங்க படிச்ச காலத்துல உங்க வாத்தியாரை நீங்க முதல மதிச்சிருக்கீங்களா?" - தேவா
"டேய் என்ன தான் இருந்தாலும் ஊருக்குள்ள எனக்கு இருக்க மரியாதை உனக்கு வருமா?" - ராஜரத்தினம்
இருவரும் பேசிக்கொண்டிருந்ததை சமையலறையிலிருந்து கேட்ட பைரவி இருவருக்கும் தேநீர் கொடுத்து, "காலேஜ்ல பசங்ககிட்ட மரம் நடுங்க, விவசாயம் பண்ணுங்க சொல்ற நீங்க உங்க வீட்டுல ஒருத்தர் விவசாயம் பண்ணா ஏன் மாமா ஏத்துக்க மாட்டிக்கிறீங்க?"
"அப்பாவும் மகனும் தான் பேசிட்டு இருக்காங்க, நீ எதுக்கு இப்ப நடுல வந்து நிக்கிற?" பைரவியை அங்கு வந்த நாயகி அதட்டினார்.
"நாயகி என் அக்கா மக என்கிட்ட உரிமையா கேக்குறா" மனைவியை தடுத்தவர் அவளிடம் திரும்பி,
"கஷ்டப்பட்டு எம்.பி.எ வர படிக்க வச்சு மாட்டு சாணத்தையும், சேத்தையும் அள்ளுறத பாக்கவா ம்மா? இவன் நல்லா படிப்பான். இவன விட மக்கா இருந்தவனுங்க எல்லாம் இன்னைக்கு பெரிய பெரிய வேலைல இருக்கப்போ என் மகன் காசுக்கு கஷ்டப்பட்டு இருக்குறத என்னால பாக்க முடியுமா சொல்லு?" அவருக்கு ஆதங்கம் அவன் வாழ்க்கையை எண்ணி.
"நீங்க அசிங்கமா நினைக்கிற அதே மாட்டு சாணத்தை தான் மாமா ஒரு காலத்துல தினமும் மிதிச்சு வீட்டை விட்டு வெளிய போவோம். அன்னைக்கு மருந்தா தெரிஞ்சது இன்னைக்கு அசிங்கமா இருக்கா? நீங்களும் தான் பெருமையா சொல்லுங்களேன் எல்லார்கிட்டையும் என் மகன் விவசாயம் பாக்குறான்னு.
நீங்க சொல்ற பெரிய பெரிய வேலைல இருக்கவன் இன்னைக்கு வேணா கை நிறையா காசு சம்பாதிக்கலாம். இன்னும் இருவது வருசத்துல நிலம் இருக்கவேணும் விவசாயம் பண்றவனும் தான் கோடீஸ்வரன்.
எனக்கு என்னைக்கும் பெருமை தான் மாமா, அவங்க உழைச்சு நாலு பேர் அந்த சாப்பாடை சாப்பிடுவாங்கன்னு. ஏன் உங்களுக்கு நேத்து நைட் குடுத்தேனே அந்த மிளகு பால் கூட இவர் தோட்டத்துல விளைஞ்ச மிளகு தான்"
மனைவி பேசியதை சுவாரஸ்யமாக கேட்டு வந்த தேவா ஒரு கட்டத்தில் அவளது வார்த்தையை தவிர்த்து அவளையே அணு அணுவாக ரசிக்க துவங்கினான்.
கோவத்தை சிறிதும் காட்டாமல் கோவமாய் பேசினாள், "வீட்டை சுத்தி வச்சிருக்க அந்த பத்து செடியை ஆசையா பாத்துக்கணும்னு நினைச்சு டெய்லி ஒரு மணி நேரம் அத ரசிச்சு ரசிச்சு பாக்குறப்போ வர்ற சந்தோசம், உங்க மகன் ஆயிரம் மரத்த, லட்சம் பயிரை ரசிக்கிறப்போவும் வரணும் மாமா.
நாலு வார்த்தை தெரிஞ்சா மட்டும் போதுமா? நாளும் தெரிஞ்சிருக்கணும்னும், நாலு மனுசங்க மனசையும் படிக்க தெரிஞ்சிருக்கணும்னும்"
"அடடே", இல்லாத தேநீரை உறிஞ்சி உறிஞ்சி குடிக்கும் கணவன் கையிலிருந்த டம்ளரை வலுக்கட்டாயமாக பிடுங்கியவள் அத்தை தன்னை எதுவும் பேசும் முன் சமயலறைக்குள் ஓடிவிட்டாள்.
மகனை எவ்விடத்திலும் விட்டுக்கொடுக்காத மருமகள் கிடைத்ததில் மகிழ்வதை விட்டு, கணவனை எதிர்த்து நின்று கேள்வி கேட்கும் மருமகளை நாயகி கோவமாக முறைத்து அறைக்குள் சென்றிருக்க, ராஜரத்தினம் எதுவும் பேசாமல் வழக்கம் போல் மகனை முறைத்து வேலைக்கு தயாராக சென்றுவிட்டார்.
Hi makkale...
Chapter epdi irukunu comment panitu ponga plzz...
Bye take care
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro