ஆனந்தம் - 1
🎶
ராத்திரி நேரத்து பூஜையில்
ராத்திரி நேரத்து பூஜையில்
ரகசிய தரிசன ஆசையில்
ஹான்...ஹான்...தினம் ஆராதனை
ஹான்...ஹான்...அதில் சுகவேதனை
🎶
பாட்டு சத்தமும், விசில் சத்தமும் எட்டுத்திக்கும் அந்த இருளை கிழித்து ஒழிக்க, அதை விட வர்ணம் பூசியது போல் நிறம் மாறி மாறி மிளிர்ந்தது மேகம்.
எண்ணென்ற துன்பங்கள் துயரங்கள் இருந்தாலும் இந்த ஒரு நாளுக்காக தான் உயிரோடு இருக்கின்றோம் என்ற ஆனந்த பூச்சை முகத்தில் ஒட்டி நின்றது அந்த பட்டாளம். சுமார் என்பது வயதுக்கும் மேற்பட்டோர் அவர்கள். முபத்துபேர் இருப்பர்.
கண்களில் ஆசை மின்ன, வாயிலிருந்து ஒரு பக்கம் சிலருக்கு எச்சில் கூட வழிந்தது அவர்கள் கண்ட காட்சியில். அவர்களுக்கு பின்னால் நாற்பது முதல் என்பது வயதுக்கு மேற்பட்டோர் முகத்தை மூடிக்கொண்டும், தலையில் துண்டை போட்டுக்கொண்டும் தங்கள் அடையாளத்தை மறைத்திருக்க, அவர்களை கவனிக்கும் நிலையிலா இருந்தனர் மற்றவர்?
இதில் விசில் சத்தமும், காதை செவிடாக்கும் கச்சேரி சத்தம் என எதுவும் மனதை உற்சாக படுத்த, அத்தனை மனிதருக்கும் முப்பதுகளில் இருந்தது போல் உற்சாகம். இருக்காதா பின்ன? பிறந்ததிலிருந்து ஆடலும் பாடலும் நிகழ்ச்சியை காண்பதற்காகவே தவமிருந்தவர்களின் வரமாய் இப்பொழுது தங்கள் கண் முன்னே விருந்து படைத்திருந்தனர் அவ்வூரின் இளைஞர்கள்.
ஊரில் திருவிழா என்று பேச்சை எடுத்த நாளிலிருந்து எதிர் எதிர் துருவங்களாக மீசையை முறுக்கி சுற்றிவந்த இளவட்டங்கள் தங்களுக்குள் இருந்த பாகுபாட்டை சில நாட்கள் ஒதுக்கி வைத்து, ஊர் பஞ்சாயத்தில் வாதாடி, சண்டையிட்டு பெண்களின் சாபங்களை எல்லாம் தாராளமாய் பெற்று அனுமதி வாங்கிவிட்டனர்.
அதன் பின்னரும் ஊர் மக்கள் விடவில்லை, "இந்தாருங்க காவாலி பசங்களா... இந்த கண்றாவி அம்புட்டும் ஊருக்கு வெளிய வச்சுக்கோங்க" என்றனர்.
"வெளிய தான கெழவி அதுக்கு மேல நாங்க பாத்துக்குறோம்" என்று அடுத்த வேலைகள் மடமடவென வேலைகள் களைகட்டியது ஊர் தலைவரின் தோட்டத்தில் வைத்து.
அது அயன்தென்கரை. மதுரை மாவட்டம் சோழவந்தான் என்னும் சிற்றூரின் அருகே அமைந்துள்ளது அந்த சிறிய கிராமம். எங்கு திரும்பினும் பசுமை நிறைந்த அழகிய வயல்விழிகள், நீண்ட நெடுத்த தென்னை மர தோப்புகள், மேய்ந்து திரியும் மந்தைகள், இயல்பான குணமுடைய மக்கள், சிறிய குட்டைகள், ஒரு பெரிய குளம் என அந்த ஊர் ஒரு அழகியல்.
தூய்மையான காற்றும், சற்று தூரத்தில் சீறிபாரிந்து ஓடும் வைகையாற்று நீரும் வற்றாத வளமையும், செழித்த செல்வமாய் நெற்பயிர் விளையும் அவ்வூரின் அழகை பாடாமல் போனது புலவர்களின் பிழையோ...?
"டேய் இங்க என்னடா பண்றீங்க?" வைக்கோலுக்கு பின்னர் இருந்து எட்டி பார்த்த இரண்டு சிறுவர்களை பிடித்த ராஜா என்றவன் அவர்களை நோக்கி நடக்கும் பொழுதே அவர்கள் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிட்டனர்.
"யார்ரா இவிங்க... அலும்பு தங்களை" தனக்குள்ளே புலம்பி ராஜா சிறுநீர் கழிக்க வந்த வேலையை முடித்து கூட்டத்திற்குள் ஒன்றிட நடந்தான்.
தூரத்திலிருந்து பார்க்கும் பொழுது மேடை தெரியவே இல்லை.
🎶
தேகம் எங்கும் தேனூருது
காமம் அவன் தேரோடுது
🎶
ராஜா மேடை பக்கம் சென்ற பொழுது கூட்டத்தை விலக்கிவிட்டு ஆறடி தேகம் ஒன்று நகர்வதை கண்டவன் முகத்தில் சிரிப்பு படர தானும் வேகமாக நடந்து அவனோடு இணைந்துகொண்டான்.
"என்ன மாப்பிள்ளை இம்புட்டு நேரம்?"
நண்பனின் குரலில் திரும்பாமல் மேலே நடந்தவன், "தலைவரை பாத்தாறேன் டா" பதிலோடு நடந்தான். கூட்டத்தை கடந்து சென்றவன் அங்கு அமர்ந்திருந்த பெரியவர்களை கண்டுகொள்ளாமல் மேடையை நெருங்கினான்.
அரைகுறையான ஆடையில் ஒரு ஆணோடு நெருக்கமாக ஆடும் அந்த பெண்ணை சிரிப்போடு ஏறிட்டான்.
இவனை ஏற்கனவே பார்த்துக்கொண்டிருந்தவள் கண்ணடிக்க வெட்க சிரிப்போடு பின்னந்தலையை தேய்த்து மைக்செட்டை நோக்கி நடக்க அவன் பின்னால் வந்த ராஜா மேடையை மட்டுமே கண் சிமிட்டாமல் பார்த்த நேரம்,
முன்னாள் சென்ற அவன் நண்பனோ அசையாமல் நின்று வேட்டியை மடித்து கட்டி மேடையில் மூலையில் நின்று தன்னை பார்த்து கவர்ச்சியான இதழ் அசைப்பை கொடுத்த அந்த பெண்ணுக்கு பறக்கும் முத்தம் கொடுக்க எத்தனித்த நேரம் ராஜா இடிக்க முன்னாள் இருந்த இரும்பு கம்பியை பற்றி நின்றவன் திரும்பி நண்பனை முறைக்க, "சாரி மாப்பிள்ளை" என்றான் ராஜா கண்களை சுருக்கி கெஞ்சலோடு.
மேடையில் காமத்தை தூண்டும் எண்ணத்தோடு ஆடிய அந்த பெண்ணோ இவன் அசிங்கப்பட்டதில் சிரிக்க, இவனும் பார்த்து சிரித்து வைத்தான் சமாளிப்பாக.
"யப்பா போ ப்பா... வழிய விடுடா"
"அளப்பறைய கூட்ட வந்துட்டானுங்க"
"போங்கடா அங்குட்டு" மாறி மாறி பின்னாலிருந்து குரல் கேட்க, அதுவரை அமைதியாகவே செல்ல நினைத்த அவன் எண்ணங்களோ மாறாக செயல்பட துவங்கியது.
பாதி மேடையை தாண்ட இருந்த அவன் கால்கள் அப்படியே நின்று மைக்செட் பக்கம் திரும்பினான் தெனாவெட்டாக.
"தேவா வாடா போவலாம்" ராஜா நண்பனை பிடித்து இழுக்க, ராஜாவின் கையை உதறி அப்படியே நின்றுவிட்டான்.
"என்ன பாக்க முடியாதுன்னு போக சொல்றாய்ங்க பங்கு"
ஆசிரியமாய் கூறியவன் கண்ணில் இருந்த அழுத்தம், அவன் ஏதோ முடிவோடு தான் உள்ளான் என்று உணர்த்த, "இப்ப அதுக்கு என்னங்குற?" என்றான் ராஜா கேள்வியாக.
இடது காலை பின்னால் தூக்கி வேஷ்டியை எடுத்து மடித்தது கட்டியவன், "அப்போ என்ன பாக்க வக்கிறது தான சரியா இருக்கும்?" திமிராக அவன் இதழ்கள் வளைய, அங்கு மைக்செட் பக்கம் அமர்த்தியிருந்த தன்னுடைய ஆளை பார்த்து புருவத்தை உயர்த்தி லேசாக தலையை அசைக்க, அடுத்த பாடல் ஒலித்தது.
🎶
இஸ் ஆஆ நான்
ஆளான தாமரை ரொம்ப
நாளாக தூங்கல நான்
ஆளான தாமரை ரொம்ப
நாளாக தூங்கல
🎶
பாட்டு துவங்க, மறித்து நின்ற இடத்திலிருந்து நகர்ந்த தேவானந்த், மேடை படியை நோக்கி முன்னேற, அவன் எண்ணத்தை புரிந்த அவன் நண்பர்கள் சிலர் வேகமாக தாங்களும் அவன் பின்னே சென்றனர்.
"டேய் என்னடா பண்றீங்க?" கூட்டத்திலிருந்த ஒரு கிழம் தன்னுடைய சத்தை மீறி கத்தியும் பயன் இல்லை. பத்து பேர் மேடையை அடைந்திருந்தார் அந்த சிறிய நேரத்தில்.
🎶
அம்மி மிதிச்சும்
நேக்கு எதுவுமில்ல அந்த
கவல நோக்கு புரியவில்ல
🎶
இவர்கள் வருவதை பார்த்த அந்த பெண் தான் ஏற்கனவே ஆடிக்கொண்டிருந்தவனோடு ஆட்டத்தை நிறுத்தி நின்றுவிட்டாள். அதற்குள் மேடையேறிய தேவ் மற்றும் அவன் நண்பர்கள் பாடலின் ராகத்திற்கு ஏற்றார் போல் தங்களுக்குள்ளேயே ஒட்டி உரசி ஆட,
ஒருவன் தன்னையே பெண்களாய் பாவித்து தன்னுடைய கைலியை தலையில் முக்காடை போல போட்டு ஆட, அவனை சுற்றி ஆடியது மற்ற ஆண்கள் கூட்டம். அவர்கள் ஆடியதை பார்த்து கூட்டத்திலிருந்த இளைஞர்கள் சிலர் ஆரவாரம் செய்ய, ஆட்டத்தின் வீரியத்தை கூடவும் நண்பர் கூட்டம் ஆட்டத்தின் சூட்டை ஏற்றியது.
சூடு பறக்க அவர்கள் ஆடியதை பார்த்த அந்த நடன பெண் இவர்களை நெருங்கி வந்து ஆட, அதுவரை ஒரு மயக்க நிலையில் இருந்த ஊர் மக்கள் அத்தனை பேரும் உற்சாகத்தில் எழுந்து ஆட துவங்கினர். தேவா நண்பன் ஒருவன் பாட்டை மாற்றுமாறு சைகை செய்ய அடுத்த பாடலும் ஓடியது.
🎶
உப்புக் கருவாடு
ஊரவெச்ச சோறு ஏ உப்புக்
கருவாடு ஊரவெச்ச சோறு
ஊட்டிவிட நீ போதும் எனக்கு
முத்தமிட்ட நெத்தியில மாா்புக்கு
மத்தியில செத்துவிடத் தோணுதடி
எனக்கு
🎶
"டேய் நம்ம பாட்டு" தேவாவின் மற்றொரு நண்பன் குணா இறங்கி குத்த அவனோடு ஆடிய தேவ், "டி.ஜே நல்லா பன்றான் மச்சான்" பாராட்டி நாக்கை மடித்து ஆடினான்.
கை கால்கள் வலிக்க அனைவரும் ஆட, கீழே இருந்த சிலர் இதற்காகவே கொண்டு வந்த செய்தித்தாள்களை தூள் தூளாக கிழித்து காற்றில் பறந்து ஆரவாரத்தை கூட்டியது. சிலர் கைபேசியில் வீடியோ எடுக்க, சிறியது முதல் பெரியது வரை அத்தனைக்கும் அடக்க முடியாத இன்பத்தில் கீழிருந்தே ஆட துவங்கினர்.
மேடையின் பின் பகுதியில் அடுத்த பாடல்களுக்காக காத்திருந்த சில நடன பெண்கள் தங்களையும் மறந்து மேடையில் இணைய சில இளைஞர்கள் மேடையில் ஏறி அவர்களோடு ஆட்டத்தில் மிதந்தனர்.
அதில் ஆரம்பத்தில் இருந்தே தேவ் மேல் கண்ணை பதித்திருந்தவள், கூட்டத்தில் மெதுவாக நழுவி அவனோடு சில நிமிடங்கள் ஆடிய பின்னர் எதிர்பாரா சமயம் அவன் கையை பிடிக்க, தீ சுட்டது போல் விலகி, "இந்தா புள்ள என்ன பண்ற நீ?" உறைநிலையில் விக்கித்தான்.
உதட்டை கடித்தவள், "என்ன மாமா நான் தொட்டா சந்தோசப்படுவன்னுல நினைச்சேன்"
"என்னது மாமாவா? போடி அங்குட்டு" எகிறிக்கொண்டு அவளை தீயாய் தேவ் முறைத்தான்.
உதட்டை சுளித்து, "போயா" என அந்த பெண்ணும் மீண்டும் கூட்டத்தில் இணைந்துவிட அப்படியே நின்ற தேவாவை பார்த்து அவன் நண்பன் பாட்டை மாற்ற கூறிவிட அடுத்த பாடல் ஒலிக்கவும் மீண்டும் துள்ளலுடன் களத்தில் இறங்கிவிட்டான்.
பெண் தொடவும் சுட்டது போல் விலகியவன் தான் நம் கதையின் நாயகன். தேவானந்த். இருபத்தி ஏழு வயதுடைய ஆண்மகன். பட்டப்படிப்பு முடித்து அது தொடர்பான வேலையில் போகாமல் இந்த ஊரே கதி என எந்நேரமும் இங்கேயே தங்கிவிடுவான்.
ஊரில் உள்ள முக்கால்வாசி வயது பெண்கள் அவனின் முறைப்பெண்கள் தான், தன்னை கடந்து செல்பவர்கள் அனைவரையும் விசிலடித்து சீண்டிய பிறகு தான் அடுத்த வேலையே துவங்கும்.
கிராமத்தினுள் மாநிறமாய் இருந்தாலும் ஸ்டைலாக, புல்லட்டில் செல்லும் நேரமெல்லாம் கூலிங் கிளாஸ் அணிந்து, தேவைப்படும் நேரத்தில் மட்டும் வேஷ்டி சட்டையோடு தங்களை பார்க்கும் நேரம் அழகாக விரியும் அவன் இதழ்களோடு, கண் சிமிட்டி வசப்படுத்துபவனை தங்கள் பக்கம் ஈர்த்ததில் அந்த பெண்களுக்கும் உள்ளூர குளிர்ச்சியாகவே இருக்கும் ஆனால் வெளியில் முகத்தை திருப்பிக்கொண்டு செல்வார்கள்.
"மாப்பிள்ளை ஊரே நம்மள பாக்குதா?" விக்கி விக்கி தேவ் ஆட, அவன் நண்பன் கை கால்களை வெட்டி ஆடிக்கொண்டே கூட்டத்தை பார்த்து ஒரு முறை சுற்றினான்.
"பங்கு மொத்த கண்ணும் இங்கன தான்" என குணா கூறவும் அப்படியே மூச்சு வாங்க நிற்காமல் இன்னும் சக்தியை திரட்டி ஆடியவனின் ஆட்டத்திற்கு ஈடாக அங்கு எவரும் இல்லாமல் போயினர்.
பரபரப்பும், உற்சாகமும் உச்சக்கட்டத்தில் இருந்த நேரம் பதட்டமாக கூட்டத்தினுள்ளே அத்தனை மனிதர்களையும் பிரித்து விட்டு ஓடி வந்த வேலு என்னும் வயதான ஒரு மனிதர் மேடையை நோக்கி பதட்டத்துடன் ஓடி வர, அவரை பார்த்துவிட்ட தேவ் ஆட்டத்தை நிறுத்திவிட்டு நண்பனின் தோளில் இருமுறை தட்டி கீழே இறங்கினான். அவனிடம் வந்து நின்ற மனிதர் முகத்தில் அப்பட்டமான பயம்.
"என்ன ண்ணே ஆச்சு?"
அவர் முகத்தில் வழிந்த வியர்வையை கேள்வியாய் பார்த்து, "ஏன் இந்த பதட்டம்?" நடுங்கிய அவர் கையை பிடித்து கூட்டத்திலிருந்து இழுத்து செல்ல பார்க்க அவர் அவன் கையை கெட்டியாக பிடித்துக்கொண்டார்.
"தம்பி... த... தம்பி" தயங்கியவரை பார்த்த பொழுதே புரிந்தது பெரிதாக ஏதோ ஒன்று நடந்துள்ளதென்று. கீழே நடப்பவற்றை பார்த்த நண்பர்களும் அமைதியாக கூட்டத்தை விட்டு நழுவி வந்தனர்.
"அண்ணே இப்போ சொல்ல போறியா இல்லையா?"
தேவ் சற்று குரலை உயர்த்த, "தம்பி நம்ம நம்ம வேந்தனுக்கு எந்த எடுபட்ட பயலோ ஒடம்பு மொத்தமும் வெட்டி போட்ருக்கானுங்க தம்பி" தலையில் அடித்து அவர் அழுகையை துவங்கும் முன்பு புயல் வேகத்தில் அவ்விடத்தை விட்டு ஓடினான் தேவா.
மொத்த உடலும் செயலற்ற உணர்வோடு வாகனத்தை உயிர்பித்தவன் நெற்றி வியர்வையால் நனைந்திருந்தது. அவன் பின்னால் குணா வந்து அமரலாம் என ஓடி வரும் முன்பே தேவாவின் வாகனம் இரவை கிழித்துக்கொண்டு காற்றில் பறந்தது.
"டேய் தேவா... தேவா" என கத்தியும் பயனிமால் போனது. அதற்குள் அந்த பெரியவர் இவனை கடந்து தேவாவை பின் தொடர்ந்து ஓட, ராஜா தன்னுடைய வண்டியை எடுத்து, "ஏற்றா சட்டுனு" வந்து நிற்க, அந்த பெரியவரையும் ஏற்றி தேவாவின் தோட்டத்திற்கு சென்றனர்.
உள்ளே நுழையும் பொழுதே முழுதாய் திறந்து கிடந்த தோட்டத்து கதவும் தாறுமாறாக சரிந்து கிடக்கும் தேவாவின் வாகனம் இன்னும் உயிரோடு இருப்பதாய் பார்த்த ராஜா வேகமாக வாகனத்தை உள்ளே செலுத்த காதை கிழிக்கும் நாய்கள் குரைக்கும் சத்தம் வேறு அவர்கள் அச்சத்தை அதிகரித்தது.
பண்ணை வீட்டை சுற்றி பின்னாலிருந்த மாட்டு தொழுவத்திற்கு விரைந்தனர்.
அவர்களை தடுத்த பெரியவர், "தம்பி மாடு இந்த பக்கம் இருக்குது" என தோட்டத்தினுள் அழைத்து சென்றார்.
"எதுக்கு அந்த பக்கம் போச்சு?"
"அதான் தம்பி எனக்கும் தெரியல காளையன் கத்துற சத்தம் கேட்டுச்சு ஓடி வந்து பாத்தா வேந்தன் ஒடம்புல அருவா வெட்டோட கெடக்குறான்" என்றார் கமறிய குரலில்.
"டேய் டாக்டர் நம்பர் இருந்தா கால் பண்ணு" ராஜாவிற்கு ஆணையிட்டு விரைந்தான் குணா. மருத்துவருக்கு அழைப்பு விடுக்க, ஏற்கனவே தேவா அழைத்துவிட்டதாக சொல்லி தான் பாதி தூரம் வந்துவிட்டதை கூறினார்.
நண்பர்கள் வேகமாக காளைகளின் சத்தம் வந்த திசையில் ஓடிய பொழுது தூரத்தில் தெரிந்த நண்பனையும், காளையையும் பார்த்த ராஜாவுக்கு உடலே நடுங்கியது.
வேந்தன் தரையில் மடிந்து சரிந்த காளை அந்த இடமே அதிரும் வகையில் கத்திக்கொண்டிருக்க, தேவா அதன் அருகே அமர்ந்து ஏதோ உடைந்த முகத்தோடு பேசிக்கொண்டிருந்தான்.
"டேய் குட்டி புலி... ஏன்டா இப்டி கத்துற? என்னாச்சு டா தம்பி உனக்கு?" ரத்தம் உடலில் ஆங்காங்கு வழிந்தோடியதை பார்த்து தனக்கே அடி விழுந்தது போல் துடித்தான் தேவா.
அவனோடு காளையனும் அருகிலிருந்து நண்பனின் குரலுக்கு சரி சமமாக காத்த அவன் கோவத்தை பார்த்த நண்பர்களும், பெரியவருக்கு அவன் அருகில் செல்லவே பயமாக இருந்தது.
தேவானந்த் காளையனை கவனிக்கும் நிலையே இல்லை, இப்பொழுது அவன் கவனம் மொத்தமும் புலி வேந்தனிடம் தான், "கொஞ்சம் பொறுத்துக்கோடா தம்பி. இதோ இப்போ அண்ணன் டாக்டர கூட்டிட்டு வர்றேன்" தன்னுடைய பிள்ளை போல் அதன் முகத்தை தடவி கொடுத்தவன்.
"ராஜா டாக்டர வேகமா வர சொல்லுடா" நண்பன் அதிக குரலெடுத்து கத்த மௌனத்தை தவிர வேறு பதில் இல்லாமல் போனது நண்பர்களிடம். இருவரின் அமைதியை பார்த்தவன் தான் அவசர கதியாக எழுந்து தன்னுடைய சட்டையை அவிழ்த்து ரத்தம் வழிந்தோடும் இடங்களில் அழுத்தி பிடித்தான்.
"துணி எடுத்தா" தேவா கர்ஜிக்க ஆளாளுக்கு தங்கள் சட்டையை எடுத்து ரத்தம் வழிந்த இடத்தில் எல்லாம் அழுத்தி பிடித்தனர்.
"அண்ணே தண்ணி எடுத்துட்டு வா, குணா நீ டீ தூள் வீட்டுல போய் எடுத்துட்டு வா" மாறி மாறி கட்டளையிட்டு அந்த பெரியவரின் தோளில் இருந்த துண்டை எடுத்து வேந்தனின் கண்களுக்கு அருகே இருந்த வெட்டு காயத்தை துணி வைத்து மெல்ல அழுத்தினான்.
வலியை அதிகம் உணர்ந்த அந்த காளையோ அவன் அழுத்தியதில் இன்னும் குரலெடுத்து கத்த அதன் கண்களில் இருந்து வந்த கண்ணீரை பார்த்த தேவாவிற்கும் கண்ணீர் வந்தது.
உடனே அதன் அருகில் அமர்ந்தவன் அதன் உடலை தடவி, "ஒண்ணுமில்லடா... ஒன்னுமில்ல கொஞ்ச நேரம் வலிக்கும் பொறுத்துக்கோ" அவன் வார்த்தைகள் புரிந்த அவன் தம்பி கண்களை மூடி வேதனையை அடக்கிக்கொண்டான்.
ஆனால் காளையனோ கட்டுக்கடங்காமல் கயிற்றை அறுத்துக்கொண்டு செல்பவனை போல் திமிறிக்கொண்டு சத்தமிட, "காளையா அமைதியா இரு இல்லனா வெட்டிபோட்டுடுவேன்"
தேவாவின் சிம்ம கர்ஜனை குரலில் அடங்கி போனவன் அமைதியாக நின்றுவிட, நண்பனின் முன்னாள் வந்து டீ தூளை குணா கொடுக்க, அதே நேரம் அந்த பெரியவரும் குளிர்ந்த நீரை கொடுத்தார் வாளியில்.
வாங்கியவன் துணிகளை அகற்றி வேந்தனின் முகத்தில் சற்று அழுத்தமாய் கையை வைத்து தடவி, "எரியும்டா குட்டி புலி, எனக்காக கொஞ்ச நேரம் பொறுத்துக்கோ" என்றவன் தண்ணீரை அதன் மேல் ஊற்ற, அந்த வாயில்லா ஜீவன் அமையாய் இருந்தது தேவாவின் வேண்டுதலின் பெயரில்.
அடுத்து டீ தூளை அள்ளி இன்னும் ரத்தம் கசியும் இடங்களில் போட்டுக்கொண்டிருந்த நேரத்தில் மருத்துவர் வந்தததும் எழுந்து சற்று தள்ளி நின்றவன் அமைதி நண்பர்களுக்கு பயத்தை உருவாக்கியது.
சட்டையில்லா அவன் மேனியில் தெரிந்த கடினமான இறுகிய புஜங்கள் அவனின் கோவத்தை கூற, அருகில் செல்ல கூட மூவருக்கும் பயம்.
தேவானந்த் சிறு வயதிலிருந்தே விளையாட்டு போட்டிகளில் அதிகம் ஆர்வமுடையவன், அதிலும் மதுரையில் பிறந்து வளர்ந்தவனுக்கு வீர விளையாட்டுகள் என்று பெயரை எடுத்தாலே அவ்வளவு மலர்ச்சி முகத்தில் இருக்கும்.
அதிலும் அவனுடைய தாத்தா தோட்டம், வரப்பு என இருக்க அடிக்கடி அவர் இல்லம் வந்துவிடுவான். அதை தவிர நண்பர்களுடன் மதுரையை சுற்றி பார்க்க செல்பவனுக்கு விழா காலங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டும் சேவல் சண்டையும் அவன் மொத்த கவனத்தையும் ஈர்த்தது.
அதன் பிரதிபலிப்பே கடந்த இரண்டு வருடங்களாக ஜல்லிக்கட்டு போட்டிகளில் தன்னுடைய காளையை களமிறக்கி நெஞ்சை நிமிர்த்தி நிற்கிறான். காளையன். தேவாவின் உயிர் என்றே கூறலாம்.
ஐந்து வருடங்கள் முன்பு அவனுடைய தாத்தா வீட்டில் புளியகுளம் வகையை சேர்ந்த ஒரு காளையை கேரளாவிற்கு செல்லவிருந்ததை தடுத்து தானே வாங்கிய செய்தியை கேட்டு மகிழ்ச்சி ஆர்ப்பரிக்க வந்தவனுக்கு எல்லையற்ற மகிழ்ச்சி.
அந்த நாள் முதல் அந்த காளைக்கு காளையன் என பெயரிட்டு மொத்த பொறுப்பையும் தானே ஏற்றுக்கொண்டு விட்டான்.
"இந்த காளைய விட எந்த மனுஷனுக்கு தான் கூறுகெட்டு போச்சோ? ஆம்பள புள்ள மாதிரி நிக்கும்யா" என கூறி அந்த காளையை அவர் வருடும் பொழுதே சிலிர்த்து திமிறிய காளையை சாதாரண காளை போல் வளர்க்க விரும்பவில்லை தேவா.
தாத்தனிடம் மாட்டின் கழுத்தில் கட்டியிருந்த கயிற்றை வாங்கி குலத்திற்கு அழைத்து சென்றான் அதனோடிருந்த நெருக்கத்தை அதிகரிக்க. அதன் பிறகு கல்லூரி இறுதி காலத்தை கூட அதிகம் பொருட்படுத்தாமல் ஜல்லிக்கட்டிற்கு தேவையான அத்தனை நடவடிக்கைகளையும் அவனே ஊர் ஊராக சென்று சிறந்த ஜல்லிக்கட்டு மாடுகளை வளர்பவர்களிடமிருந்து கற்றுக்கொண்டான்.
அதோடு நில்லாமல் தமிழ்நாட்டின் மிக சிறந்த ஜல்லிக்கட்டு நடைபெறும் மாவட்டங்களுக்கு சென்று பல தகவல்களை திரட்டி காளையனுக்கு அத்தனை பயிற்சிகள் கொடுத்து அதன் மூன்றாவது வயதில் அலங்காநல்லூர் வாடிவாசலை தாண்டிய காளையின் கம்பீரத்திற்கு முன்பு ஒருவரும் நிற்க கூட பயந்து ஓடினர்.
அந்த நாளிலிருந்து தேவாவின் காளையன் என்றால் ஒரு பயம் மாடு பிடி வீரர்களுக்கு தன்னாலே வந்து ஒட்டிக்கொள்ளும். கடந்த வருடம் ஒரு ஜல்லிக்கட்டின் பொழுது அதிருஷ்டமாக கிடைத்தது தான் காங்கேயம் வகை காளையான புலி வேந்தன்.
தேவாவின் கைகளுக்கு வந்த பொழுது பதினாறு நாள் குட்டி அவன். இரண்டும் தேவாவின் சகோதரர்களாகிவிட, என்ன வேலை இருந்தாலும் இருவரையும் காணாமல் அவன் நாள் அன்று ஓடாது. அதே நேரம் ஊரே அருகே செல்ல பயம் கொள்ளும் அந்த இரண்டு ஜீவன்கள் தேவா முன்னாள் சிறு குழந்தையாகி போவார்கள்.
இரண்டு காளைகளோடு மட்டும் நில்லாமல் மூன்று சண்டை சேவல்களை வளர்த்து அதனையும் சேவல் சண்டைக்கு எடுத்து செல்வான் தேவா.
அது அல்லாமல் பாசத்திலும் வீரத்திலும் சளைக்காத கோம்பை வகை நாய், வேங்கையன் என பெயர். வீரம் விஸ்வாசம் என தன்னுடைய எஜமானருக்கு ஆபத்து ஒன்று நிகழ்ந்தால் உயிரையே விடும் ராஜபாளையம் வகையறா ஒன்றையும் வளர்க்கிறான். அதன் பெயர் பைரவன்.
"யாரு தேவா இப்டி காட்டுமிராண்டி மாதிரி வெட்டுனது?" காயத்தை பார்த்த மருத்துவருக்கே ஆத்திரம் அதிகம் வந்தது.
"தெரியல டாக்டர்" என்றான் அமைதியான குரலில்.
"மனுஷ தன்மையோட இருக்கறவன் இந்த மாதிரி வேலைய பாக்கவே மாட்டான். இன்னும் கொஞ்சம் ஆழம் போயிருந்தாலும் ரத்தம் வெளியேறிய மாடு இறந்துருக்க கூட வாய்ப்பிருக்கு தேவா"
எதுவும் பேசாமல் அமைதியாக மருந்தின் வீரியத்தில் கண் அசரும் காளையை பார்த்தான் தேவா. குழந்தையாய் தெரிந்தது அந்த காளை அவன் கண்களுக்கு. இதன் மேல் அரிவாள் வீசும் அளவிற்கு என்ன வஞ்சகம்? மனம் கோவத்தில் கொதித்தது.
"நாளைக்கு காலைல வந்து பாக்குறேன், மழை வர்ற மாதிரி இருக்கு, மருந்து நின்னா தான் காயம் ஆறும்" தகவல் கூறி அவர் கிளம்பிவிட்டார்.
சில நொடிகள் நின்ற தேவா வாசலை நோக்கி நடக்க, "நீ இருடா நான் பக்கத்துல ஆளுங்க யாரவது இருந்தா கூட்டிட்டு வர்றேன்" குணா தடுத்தும் தேவா நிற்கவில்லை.
எங்கு சென்று இவரை அழைக்க இயலும்? அனைவரும் தான் ஊர் தலைவரின் தோட்டத்தில் உள்ளனரே. வாயிலை நெருங்கிய சமயம் இளநீருடன் கிடந்த அரிவாளை எடுத்ததை பார்த்ததும் நண்பர்கள் பீதியாகினர்.
"தேவா என்னடா பண்ண போற?" என ராஜா பதற அந்த பெரியவரும் பயத்தில் அவனை தொடர்ந்தார். அவனோ கதவின் அருகே கிடந்த புதிய ப்லக்ஸ் என்றும் பாராமல் அரிவாள் கொண்டு அந்த மூலைகளில் கீறிவிட்டான்.
"அது திருவிழாக்கு அடிச்ச பேனர் தேவா நாளைக்கு வைக்கணும் டா" என நண்பன் தடுக்க எதையும் காதில் வாங்கவில்லை அவன்.
"போர்ட்ல இருக்க பிளக்ஸ கிழி அப்டியே மில் வாசல்ல இருக்க ப்ளக்ஸையும் கிழிச்சு எடுத்தா" தன்னை கேள்வி கேட்ட நண்பன் கையில் வேலையை கொடுத்தான்.
அவனும் தேவாவை வித்யாசாகமாக பார்த்து தனக்கு கொடுத்த வேலையை செய்ய உதவுமாறு குணாவை அழைத்தான்.
"அண்ணே தொழுவம் பக்கத்துல கம்பு இல்லனா குச்சி இருந்தா வேகமா எடு"
அவரும் எடுக்க ஓட, கிழித்த பிளக்ஸை எடுத்து வேந்தன் இருக்கும் திசைக்கு செல்லும் வழியில் இருந்த டாட்டா ஏஸ்ஸில் லோட் ஏற்ற வைத்திருந்த கயிற்றை எடுத்து ஓடியவன் நெற்றியில் ஒரு சொட்டு மழை நீர் சிதறியது. கம்பிற்காக காத்திராமல் தென்னை மரத்தினில் கயிற்றை கொண்டு நாலாபக்கமும் கட்டினான்.
அடுத்த சில நிமிடங்களில் நண்பர்கள் வர வேலை மின்னல் வேகத்தில் நடந்தது. வேந்தனை சுற்றி மூன்று பக்கமும் பேன்னர்களை முழுதாய் மாட்டும் முன்னரே மழை வெளுத்து வாங்க துவங்கியது, வேலை முடியும் முன்னரே நால்வரும் நனைந்திருந்தனர் தேவாவிற்கு எதுவும் பொருட்டாகவில்லை.
புலி வேதன் மட்டுமே கண்ணில் தெரிந்தான், சற்று தொலைவில் தொப்பலாக நனையும் காளையன் கூட பார்வையிலிருந்து மறைந்து போனான்.
"தேவா மழை அதிகமாகிட்டே இருக்கு வா வீட்டுக்கு போகலாம்" - ராஜா
"ஆமா தம்பி நான் கவனிச்சுக்குறேன், நீங்க ஓய்வெடுங்க" என பெரியவரும் அவனை அப்புறப்படுத்தும் முயற்சியில் இருக்க, அவனோ, "ஏன் வேங்கையனையும் பைரவனையும் அவுத்து விடல?" அவன் குரலில் இருந்த பேதம் அந்த பெரியவரை நடுங்க செய்தது.
"நாய அவுத்து விட தானுங்க தம்பி போனேன் ஆனா அதுக்குள்ள நீங்க தான் அய்யா என்ன வர சொன்னாருன்னு சொல்லி அனுப்புனீங்க தம்பி அதான் பாக்க போன்னேன்" என்றார் நடுக்கத்துடன்.
தேவாவின் கண்கள் கூர்மையானது, "நான் உங்கள கூப்பிட்டேனா?" அவரை நெருங்கி வந்து மீண்டும் கேள்வி எழுப்பினான் தேவா.
"ஆமாங்க தம்பி உங்க கூடயே ஒரு பொடியன் இருந்தான்ல அவன் தான் நீங்க சொன்னதா சொன்னான்" - ராமசாமி (பெரியவர்)
உடனே தன் கைபேசியை எடுத்து அந்த சிறுவன், விஜய்யின் தந்தைக்கு அழைத்தான்.
"சொல்லு தேவா" ஓங்கிய குரலில் அவர் கேட்க தேவாவின் காதுகளுக்கு பாட்டின் ஒலி தான் அதிகம் கேட்டது.
"உன் பையன கூட்டிட்டு என் தோட்டத்துக்கு ஒடனே நீ வரணும்" மறு வார்த்தை பேசாமல் ஆணையிட்டு வைத்தான்.
அடுத்த பத்தாவது நிமிடம் மொத்தமும் ஈரமான ஆடையோடு டீ.வி.எஸ் பிப்டியில் வந்து மகனோடு நின்றார் அவர்.
"ண்ணா தூங்கிட்டு இருந்தேன் ஏன் வர சொன்ன?"
"நான் உன்ன ஏதாவது வேலை சொன்னேனா?" - தேவா
"நீ சொல்லல ண்ணே, நீ சொன்னதா மயில் அண்ணே தான் சொல்லி அனுப்பிச்சு"
அவ்வளவு தான் அந்த ஒரு துப்பிற்காக காத்திருந்தவன் போல் பதில் வந்த அடுத்த நொடி வேட்டியை எடுத்து மடித்து கட்டி சீரிய வேகத்தோடு சரிந்து கிடந்த வாகனத்தை எடுத்து உயிர்பித்தவனை எவராலும் நிறுத்த முடியவில்லை.
"தேவா அவசரப்படாத பஞ்சாயத்தை கூட்டலாம்"
தடுக்க முயன்ற குணாவை பார்த்து முறைத்தவன், "கூட்டி என்ன மசுர புடுங்கவா?" என கேட்க, "அதுக்குன்னு நீ போய் அந்த ஆள்கிட்ட பேச போறியா?"
திமிராக பார்த்த அவன் விழிகள், "அவன்கிட்ட பேச போறேன்னு நான் உன்கிட்ட சொன்னேனா?" என அவன் வாகனத்தை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டான்.
வேகமாக செல்லும் அவனை தடுத்து நிறுத்த மீண்டும் தங்கள் வாகனத்தில் சென்றனர் குணாவும் ராஜாவும். மயிலப்பன் என்பவன் அந்த ஊர் தலைவர் அய்யனாரிடம் வேலை பார்ப்பவன்.
அவருக்கு மிக பெரிய விசுவாசியும் கூட, எந்த வேலையும் பின்னால் வரும் பிரச்சனைகளை எல்லாம் ஒரு நொடி கூட யோசிக்காமல் துணிந்து செய்பவன். அய்யனாரும் ஜல்லிக்கட்டு காளையை பல வருடங்களாக வளர்ப்பவர் தான்.
எப்பொழுது தேவானந்த் தானாக காளையை வளர்த்து பெயர் வாங்க துவங்கினானோ அந்த நாளிலிருந்து அய்யனார் மறைமுகமாக அவனோடு வன்மதத்தை வளர்க்க துவங்கினார்.
அதிலும் காளையை வாடிவாசலில் விட்ட முதல் முறையே வெற்றி பெற்று மாலையும் கழுத்துமாக காளையோடு மொத்த ஊரையும் பெருமையாக அவன் சுற்றி வர, அய்யனாரின் காளை அந்த முறை தோல்வியை சந்தித்தது.
"என்ன அய்யனாரே உங்க காளை எந்த பரிசு அடிச்சுச்சு?"
தகவல் தெரியாமல் தேவா அன்று கேட்ட ஒரு கேள்வி அவன் மேல் மொத்த வன்மத்தையும் இறக்கியது. அதன் பிறகான நேரங்கள் பல மயிலப்பன் காளையனை வம்பிற்கு இழுப்பான்.
குளத்து கரையில், கோவில்களில் அல்லது அய்யனாரின் தோட்டத்தை தாண்டி செல்லும் பொழுது என அத்தனை நேரமும் தன்னை சீண்டுகையில் அமைதியாக நடப்பவனால் இன்று தன்னுடைய உடன் பிறந்த தம்பியாக இருக்கும் அந்த வாயில்லா ஜீவனுக்கு துயரம் நேர்ந்ததை பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
ஊரினுள் இருந்த அந்த பெரிய வீட்டிற்கு செல்லும் வழி எங்கும் தன்னுடைய ஆத்திரத்தை கட்டுப்படுத்த முயன்று தோற்று போனான் தேவா.
பெரிய வீட்டின் வாயிலை தொட்ட பொழுதே உள்ளே தன்னுடைய கூட்டாளிகளோடு மகிழ்ச்சியாக சிரித்து பேசிக்கொண்டிருந்த மயிலப்பனை பார்த்து வண்டியை நிறுத்தாமல் வேகத்தை குறைந்தவன் உதட்டில் சிரிப்போடும் கண்களில் க்ரோதம் மின்ன, "என்ன மயிலப்பா எதையோ சாதிச்சாப்ல ரொம்ப சந்தோசமா இருக்க?"
கேள்வியை வைத்து மேலும் தேவா வீட்டை நோக்கி வாகனத்தை ஓட்ட அவன் பின்னே மயிலப்பனும் வீட்டினுள் அமைந்த சிறிய தோட்டத்தில் நடந்து வாயிலை அடைந்திருந்தான்.
இரவு உணவை முடித்து வாசலில் கயிற்று கட்டிலில் உறக்கத்தை தழுவியிருந்த அய்யனார் வண்டி சத்தத்தை கேட்டு விழிக்க, வெறும் வெள்ளை பனியன், வெள்ளை வேஷ்டியோடு நிற்பவனை சிறிதும் எதிர்பார்க்கவில்லை, அதுவும் சாமத்தை நெருங்கிய பொழுது.
புல்லட்டின் விளக்கை அணைக்காமல் சரியாக அய்யனாரின் கண்களை கூச செய்து அடிக்குனாரு ஹாண்ட்பாரை திருப்பி வைத்தான்.
"என்ன தேவா ஏதாவது கச்சேரிக்கு தேவனா மயிலுகிட்ட சொல்ல வேண்டியது தானே? வயசானவன் கண்ண அசைந்தேன் இப்ப தான்" குளிரை தாங்க முடியாமல் போர்வையை எடுத்து போர்த்தினார் எழுந்து நின்று.
தேவா வண்டியிலிருந்து இறங்காமல், "எலி அம்மணமா ஊருக்குள்ள சுத்துனப்பவே சந்தேகம் பட்ருக்கணும்"
"டேய் யாரை பாத்து பேசுறன்னு யோசிச்சு பேசு"
ஆக்ரோஷமாக குரலை உயர்த்தி சண்டைக்கு வந்த மயிலப்பன் கழுத்திலிருந்த துண்டை பிடித்து அவன் கழுத்தோடு ஒரு சுற்று சுற்றி தேவா நெறிக்க அய்யனாரின் ஆட்கள் மொத்தமும் அவ்விடத்தில் வந்து தேவாவை பிரிக்க முயன்று தோற்று போயினர்.
"ஏலேய் முனியாண்டி போன் போட்றா போலீஸ்க்கு" அய்யனார் குரல் கொடுக்க உடனே அந்த வேலையை அவன் செய்தான்.
"வீரமானவனா வாடிவாசல் தாண்டி என் தம்பி வர்றப்ப அவனை அடக்கிருகனும், அத விட்டு எச்ச மாதிரி அருவா வீசுற?" துண்டை இன்னும் கழுத்தையொய்டி நெருக்கி பிடிக்க மயிலப்பன் துடித்தான் மூச்சு காற்று விட முடியாமல்.
"என்ன தேவா இங்க வந்து லந்த கூட்டிற்றுக்கியா?" - அய்யனார்
"கச்சேரிய உன் தலைல நீ போட்டப்பவே சந்தேகம் வந்துச்சு ஆனா இந்த மாதிரி கீழ்தரமா இருப்பன்னு நான் நினைக்கல அய்யனாரே"
"சும்மா இற்ரா, நானு அப்பள இருந்து பாக்றேன் வந்ததுல இருந்து சம்மந்தமே அதிகமா பேசிட்டே போற?"- அய்யனார்
"சும்மா ரூட்டை குடுக்காத அய்யனாரே உன்ன பத்தி எனக்கு தெரியும், ஆள் இல்லாத நேரத்துல உள்ள புகுந்து உன் வீரத்தை காட்டிட்டா பெரிய மயிறுன்னு என்னமோ?"
"எளந்தாரி பயலேன்னு சும்மா பேச விட்டா ரொம்ப தான் துள்ளுற நீ? டேய் தூக்குங்கடா"
தன்னுடைய ஆட்களுக்கு ஆணையிடும் நேரத்திலே வாகனத்தை விட்டு இறங்கிய தேவா இடையில் சொருகியிருந்த அந்த சிறிய அரிவாளை எடுத்து மயிலப்பனின் கழுத்தில் ரத்தம் கசியும் அளவு சற்று அழுத்தம் கொடுத்து வைக்க அவனை நெருங்க விரும்பவில்லை அய்யனாரின் ஆட்கள்.
"எளந்தாரி பயன்னு எண்ணம் இருக்கத்தால தான் உன் முகத்துக்கு முன்னாடி வந்து நிக்கிறேன், உன்ன மாதிரி படம் காட்டிட்டு பின்னாடி நின்னு கத்திய சொருகுற ஆள் இல்ல"
அய்யனாரிடம் பேசியவன் மயிலப்பனிடம் திரும்பி துண்டை கழுத்தோடு பிடித்து இழுத்து வாசலில் தள்ளியவன் அவன் அணிந்திருந்த வேட்டியை ஒரே இழுப்பில் உருவி போட்டான்.
"வீரத்தையெல்லாம் கட்டிபோட்ருக்க மாட்டுகிட்ட மட்டும் தான் காட்டுவியா? எங்க இப்ப என்கிட்டே காட்டு பாக்கலாம்"
கன்னத்தோடு ஓங்கி ஒரு அடி கொடுத்தான் தேவா.ஆணாய் முதல்முறை பலத்த அடிவாங்கியது மயிலப்பனின் கர்வம்.
தெருவில் ஒரு ஆள் நடமாட்டம் கூட இல்லை ஆனால் உடலில் துணியே இல்லாமல் நிற்பது போல் கூசியது அவனுக்கு. அதிலும் தன்னை விட ஐந்து வயது சிரியவனிடம் அடி வாங்கியது செருப்பால் அடித்தது போல் அவமானமாய் இருந்தது.
"எந்நேரமும் சிரிச்சிட்டே சுத்துறானே தலைல மொளகாய அரைச்சு தேய்க்கலாம்ன்னு நெனப்பு இருக்கோ? மவனே என் வேந்தனுக்கு சின்ன அடியோட நின்னதால இதோட விடுறேன்.
இதுவே அவனுக்கு ஏதாவது ஆகியிருந்தது வையி ஒரு செகண்ட் கூட யோசிக்க மாட்டேன். பகலு, ராத்திரி, பொண்டாட்டி பாக்குறா, புள்ள பாக்குறான்னு எல்லாம் கண்டுக்கவே மாட்டேன் ஒட்டு துணி இல்லாமல் அம்மணமா ஊருக்குள்ள நடக்க வப்பேன்"
மயிலப்பன் கண்களில் மொத்தமும் வன்மம் புகுந்தது. இதுவரை அய்யனாருக்காக தான் செய்வதாக மனம் கூறியது ஆனால் இந்த நொடி தேவா மயிலப்பனின் எதிரியானான்.
அப்பொழுது தான் வந்த குணாவும் ராஜாவும் நண்பனை தடுக்க மனமில்லாமல் நின்றுவிட்டனர்.
அதோடு நிறுத்த தேவாவிற்கு மனம் வரவில்லை, 'ம்மா ம்மா' என அன்னையை அழைப்பது போல் புலி வேந்தன் தவித்தது நினைவு வர, நடு தெரு என்று கூட பார்க்காமல் கையிலிருந்த தங்க காப்பை முறுக்கியவன் மொத்த கோபத்தையும் மயிலப்பனின் முகத்தில் குத்தி குத்தியே குறைத்தான்.
தேவாவின் ஆக்ரோஷத்தை பார்த்த மற்ற நபர்கள் அவனை பிரிக்க படாத பாடு பட்டனர்.
"யோவ் விடுயா விடுயா"
"போலீஸ் வருது தேவா இதோட விட்டுடு"
"அடிக்காத டா" ஆளுக்கு ஒன்று கூறியும் அவன் கேட்கும் தருவாயில் இல்லை.
மயிலப்பனின் முகம் எல்லாம் வீங்கி ஆங்காங்கு ரத்தம் வழிந்தது, "ஆஆ..." அவன் அலறுவதை கேட்டும் மனம் ஆறவில்லை தேவாவிற்கு.
முகத்தோடு நிற்காமல் வெட்டுக்காயத்தை கொடுத்த அவன் கையை பிடித்து அதிலும் சரமாரியாக குத்த நிச்சயம் எலும்பு முறிவு உண்டாகியிருக்கும் என மயிலப்பன் துடித்த துடிப்பிலே தெரிந்திருக்கும். வியர்வை துளிகள் நெற்றியிலிருந்து வழிந்தோட, திருப்த்தியானவன் தானே எழுந்து அங்கிருந்த கல்லில் அமர, அந்த நேரம் அய்யனாரின் மொத்த குடும்பமும் வாயிலில் வந்து நின்றிருந்தது.
"ரொம்ப தான் துள்ளிட்டு இருக்க... மனுசனா இல்ல மிருகமாடா நீயி? இந்த அடி அடிச்சிருக்க?"
"உன்ன சும்மா விட மாட்டேன்டா... ஒரு மாடு உயிரோட தான இருக்கு, செத்தா போச்சு? ஒருத்தனோட உசுரையே எடுத்துடுவ போல"
"டேய் இன்னைக்கு அவனா நாமளானு பாக்கணும்டா... எடுங்கடா அந்த அருவாளை" என ஒரு குரல் கத்தியது.
"இவ்ளோ நேரம் சும்மா தான நின்னு வேடிக்கை பாத்துட்டு இருந்த இப்ப மட்டும் எங்கன இருந்துயா உனக்கு வீரம் மொளச்சதாம்? யோவ் மயிலு யாருக்காக இவ்ளோவும் பண்ணியோ அந்த ஆளே வேடிக்கை தான் பாக்குறான்" அதுவரை அமைதியாக வேடிக்கை பார்த்த குணா நண்பனிடம் நடந்துவர, உடன் ராஜாவும் வந்தான்.
"யோவ் ரெண்டு வெட்டு காயத்துக்கே அவன் மூஞ்சி மொகரைய கிழிச்சு போட்ருக்கான், உயிருக்கு ஏதாவது ஆகியிருந்தது கூண்டோட வைகுண்டத்துக்கு அனுப்பிருப்பான்"
ஹார்ன் சத்தம் தெருவெங்கும் ஒலிக்க அந்த தெருவினில் நுழைந்தது காவல்துறையின் வாகனம் ஒன்று.
அதை பார்த்ததும் வாயிலியில் நின்ற ஊர் தலைவரை பார்த்த தேவா, "பழக்க வழக்கம் பாத்து இத்தனை நாள் அமைதியா இருந்தேன். அதுக்கு காரணம் உன் வயசும், ஊர் தலைவருன்னு உனக்கு குடுத்த பதவி, ஆனா அதெல்லாம் என் காளைக மேல நீ கை வச்ச அந்த நொடி போச்சு. இனிமேல் வேற மாறி ஆயிரும் உன்கிட்ட ஓராண்ட இழுக்குறது மட்டும் தே என் வேலையாவே இருக்க போகுது"
"ஓ துறை பெரிய லார்டு மாதிரி பேசிட்டா ஜில்லாக்கு கலெக்டர் நீங்கன்னு முடிவாகிடுமா?"
தேவாவின் பனியனை பிடித்து இன்ஸ்பெக்டர் இழுக்க அசையாது அமர்த்திருந்தவன் அய்யனாரிடம், "என்ன மாமே வர்ட்டா?" மந்தகாச புன்னகையோடு தானாக சென்று காவல்துறையினரின் வாகனத்தில் அமர்ந்து கொண்டான்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro