வான்மதி: 5
வான்மதி: 5
தடதடவென்ற சத்தமான ஏதோ ஒரு அரவத்தில் வெகு நேரம் பின் கண் திறந்தாள் வான்மதி. அவள் முன் நேராக ஒரு சிறிய ஜன்னலிருக்க அதன் வழியே ஒரு நீண்ட கடல் அவளைப் பார்த்து மின்னியது.
நொடியில் அனைத்தையும் நினைவு பெற்று விருட்டென அமர்ந்திருந்த இடத்தில் இருந்து எழுந்தவள் வேகவேகமாய் சுற்றி முற்றி நோக்கிவிட்டு தனக்கு எதுவும் ஆகவில்லையே என தன்னையே ஒரு முறைக்கு இரண்டு முறை பரிசோதித்துக் கொண்டாள்.
அவள் கரத்தில் என்றுமே இருக்கும் ஒரு சிகப்பு தாட்டியத்தை மட்டும் காணவில்லை. அது நினைவு தெரிந்ததில் இருந்தே அவளோடு அவள் கைகளில் வளம் வருகிறது. அதை காணாமல் பதைபதைப்பாய் முதலில் தன் சுற்றுவட்டாரத்தை நோட்டமிட எண்ணி முன்னேறியவளை காணவே அங்கிருந்த ஒரு இரும்பு கதவைத் திறந்து கொண்டு வந்து நின்றான் ஒருவன்.
" யாரு இவன்? பணை மரத்துல பாதி இருக்கான், " என வான்மதி தீவிரமாய் அவனை ஏறிட்டபடியே விழிக்க அவனோ இவள் விழித்ததை கண்டதும் " மதி விழித்து விட்டாள். விரைந்து வா! " என யாருக்கோ திரும்பி நின்று உறக்கக் குரல் கொடுத்தான்.
" மதியா அது யாரு? " என குழப்பமாய் தன்னையும் விடுத்து வேறெவரையேனும் தூக்கிக் கொண்டு வந்துள்ளனரோ என அங்குமிங்கும் சுற்றிப் பார்த்த வான்மதியின் முன் வேகமாய் வந்து நின்றது ஒரு நிழல்.
நிமிர்ந்து அவ்விருவரையும் கண்ட வான்மதி அவர்களிருவரது கண்களையும் கண்டு புருவத்தை சுருக்க " நான் வினோத், அவன் ஹர்ஷன், " என கூறினான் புதிதாய் வந்தவன்.
" என்ன எதுக்கு தூக்கீட்டு வந்தீங்க நீங்க? " என வான்மதி ஆச்சர்யமாய் கேட்டுவிட்டு மீண்டும் " ஆமா உங்களுக்கு என்ன எப்படி தெரியும்? " என மற்றொரு கேள்வி கேட்டாள்.
" உங்களுக்கு எல்லாத்தையும் கண்ணாலையே காட்டத் தான் அலைச்சிட்டு வந்துருக்கோம். நாங்க சொல்லப் போற விஷயங்கள் சொன்னா நம்புற மாதிரி இருக்காதும்மா, " என அமைதியாய் கூறிய வினோத் அங்கிருந்த ஒரு கதிரையில் போய் அமர்ந்தான்.
" ஏங்க, என்ன நினைச்சிட்டு இருக்கீங்க நீங்க? ஏதோ காட்டனுங்குறீங்க, சொல்லனும்ங்குறீங்க, நான் வீட்டுக்கு போகனும். கொலம்பு வைக்கனும். சாம்பார்ல மீன் போடனும்! " என வான்மதி சற்று பதட்டத்தில் உளற ஹர்ஷன் குறுநகையுடன் அவளை ஒரு கதிரையை காட்டி அமரக் கூறினான்.
" நான் உக்கார மாட்டேன். என்ன நீங்க எதாவது செஞ்சிட்டா?! " என தற்காப்பிற்கு தயாராய் நின்றபடி கூறியவளுக்கு ஹர்ஷன் அல்லது வினோத் ஏதேனும் பதில் கூறும் முன்பாக வந்தது ஒரு குரல்.
" தமக்கேதும் தீங்கு விழைவிப்பதாய் இருப்பின், தாம் மூர்ச்சையற்ற போதே அதை புரிந்திருப்போம். யாம் தான் தம்மை கட்டிக் கூட வைக்கவில்லையே, இன்னுமா தமக்கு எம் மீது சந்தேகம்? "
வான்மதி அந்த குரலை கேட்டு அதன் புறம் திரும்யிப போது அவளின் விழிகள் அந்த தங்க கண்களோடு நேர் கோட்டில் சங்கமித்தது. வினோத் மற்றும் ஹர்ஷன் மிருதேஷ்வரனை கண்டு புருவத்தை சுருக்கினர். இருவரும் அவனை அங்கு எதிர்பார்த்திருக்கவில்லை போலும். ஆனால் அதை அந்த இரத்தக்காட்டேரி பெரிதாய் எடுத்துக்கொள்ளவில்லை. அவன் ஏதோ பிக்னிக் வந்தது போல் கருப்பு நிற ஓவர் கோட் அணிந்து அதில் இரண்டு கைகளையும் மறைத்துக் கொண்டு கூலாக நின்றிருந்தான்.
அதிர்ச்சியில் ஒரு ஐந்து நிமிடம் உறைந்தே நின்றிருந்த வான்மதி சிலையாகி விட்டாளோ என்ற அம்மூவருக்கு சந்தேகம் வந்தப் பின் தான் " மிரு டார்லிங்?!!!!!! " என கத்திக்கொண்டே கண்களை இமைத்து மூடினாள் அவள்.
மூவரும் ஒரே நேரத்தில் அவளது சத்தத்தினால் திடுக்கிட்டாலும் ஹர்ஷன் மற்றும் வினோத் தலையிலே அடித்துக் கொண்டனர்.
" என் கூறினாய்? " என மீண்டும் வினவினான் மிருதேஷ்வரன்.
" ஹையோ மிரு டார்லிங், இந்த மனுஷப் பசங்க கிட்டேந்து என்ன காப்பாத்தி கொஞ்சம் வேதபுரத்துல விற்றுங்களேன்!! நீங்க தான் ரீசென்ட்டா அங்க விசிட் வந்தீங்களே? " என அவனிடமே ஓடியிருந்தாள் வான்மதி.
' ஹையோ நாங்க தான்மா உன்ன அவன் கிட்டேந்து காப்பாத்தனும்! ' என நினைத்து நொந்து கொண்ட ஹர்ஷனும் வினோத்தும் அவளது இரண்டாவது கூற்றில் மிருதேஷ்வரனை உருத்து நோக்கினர்.
மிருதேஷ்வரன் அதை பொருட்படுத்தாமல் வான்மதியை மேலும் கீழுமாக பார்த்தவன் எதுவும் கூறாமல் அங்கிருந்து நகர முயற்சிக்க, நான் விடுவேணா என வான்மதி அவன் பின்னேயே ஓடினாள்.
" என்ன மிரு டார்லோ! என்ன தனியா விட்டுட்டு போய்டாத! என்ன பாப்பு கிட்டையாவது விட்டுடேன், "
வினோத் குரலை சரி செய்தபடி " மதி உனக்கு ஒரு உண்மைய சொல்லத் தான் நாங்க உன்ன அழச்சிட்டு வந்தோம். "
" எங்க என்ன அழச்சிட்டு வந்தீங்க? கை கால கட்டாத குறையா என்ன எங்க ஊர்லேந்து கடத்தீட்டு வந்துருக்கீங்க! என் அண்ணனுக்கும் என் பாப்புக்கும் மட்டும் இது தெரியட்டும் நீங்க காலி! உங்கள பீஸ் பீஸாக்கி... "
இவ்வாறு நம் வான்மதி அவர்களை பீஸாவாக்குவேன் பர்கர் ஆக்குவேன் என வசனம் பேசிக் கொண்டிருந்த போது அவள் கூறியவையை அலசியிருந்த வினோத் மற்றும் ஹர்ஷன் மிருதேஷ்வரனை அவன் ஏதோ கொலை குத்தம் செய்தது போல் சுட்டெரிக்கும் பார்வை பார்த்தனர்.
அதை கவனித்த மிருதேஷ்வரன் சற்றும் சலைக்காமல் அவன் ஒரு புருவத்தை உயர்த்தி " நீவிர் இப்பாவையை யான் கூறக்கேட்டு அழைத்து வரவில்லை என்றென மறந்தீரா? என்னழகை இரசிப்பதை நிறுத்தி கூறியவளைச் சென்று எரிக்க முயலும், "
வினோத் பட்டாசாய் வெடித்த அதே நேரம் ஹர்ஷன் திவீரமாக யோசிக்கத் தொடங்கினான்.
வினோத் " இரத்த பந்தம் இல்லா ஓர் உயிரே மாயலோக ராஜ பரம்பரையின் இருள் தாட்டியத்தை அழிக்க இயலும். இவள் கூறும்— "
ஹர்ஷன் திடீரென வினோத்தை நிறுத்தி " யாம் அழைத்து வந்திருக்கும் மதி தான் தமையனின் விதி குறிக்கும் அவன் ஒளி. அதில் தவறேதுமில்லை வினோத். மதி உண்மையில் மிருதேஷ்வரனை வேதபுரத்தில் பார்த்திருக்கிறாள் என்றால்... நாம் தேடிக் கொண்டிருந்தது இந்த வான்மதியைத் தான். "
இவர்கள் பேசுவதை ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த வான்மதிக்கு ஒரு சில விஷயங்கள் புரிந்தாலும் இவை அனைத்திற்கும் உள்ள இணைப்பு புரிபடவில்லை. எங்கே தொடங்கியது இது என தெரியாமல் குழப்பத்தோடு திரும்பியவளின் கண்கள் அந்த சிறிய ஜன்னலில் பதிய இவ்வளவு நேரமும் மின்னிக் கொண்டிருந்த கடல் படாரென கருமையைத் தத்தெடுத்துக் கொண்டு கரடுமுரடான காடாய் மாறியது.
" டேய் என்னாடா நடக்கிது இங்க?! "
நெஞ்சைப் பிடித்துக் கொண்டு பத்தடி பின்னே வந்த வான்மதியின் கண் முன்னே அந்த ஜன்னலின் வெளியே தெரிந்த காட்சிகள் நொடிக்கு நொடி மாறிக் கொண்டே இருக்க இவ்வளவு நேரமும் தனக்கும் அருகில் உள்ள யாருக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என நின்றிருந்த மிருதேஷ்வரனின் உடல் தானாக இறுக கண்களுக்கு அகப்படா ஊதா நிறத்தில் இருந்த மெல்லிய கதிர்கள் அவனை மெல்ல சூழத் தொடங்கியது.
வினோத் பட்டென யோசனையில் இருந்து வெளியே வந்து வான்மதியைப் பிடிக்க, அவர்கள் கண்ணிமைக்கும் நேரம் மிருதேஷ்வரன் அங்கிருந்து மறைந்திருந்தான்.
" ஹர்ஷா டைமாச்சு! எங்கன்னு பாரு உடனே, "
" நீ அவள புடிச்சு உக்கார வை! "
" டேய் மரியாதை! "
" எனக்குத் தெரியும் நீ போ டா! "
வினோத்தும் ஹர்ஷனும் மாற்றி மாற்றி கத்திக் கொண்டே ஒரு ஒரு பக்கம் ஓட, வினோத்திடம் மாட்டிக் கொண்ட வான்மதி தான் அங்குமிங்கும் ஆடிக் கொண்டிருந்தாள். எப்படியோ அவளை ஒரு கதிரையில் அமர்த்திய வினோத் அவள் அருகிலே வான்மதிக்கு காசில்லா பாடிகார்டாக நின்று கொள்ள அவனை நிமிர்ந்து பார்த்தவளுக்கு நடக்கும் ஒன்றும் விளங்கவில்லை.
" அண்ணா என்ன உங்க பக்கத்து வீட்டு பச்சப்புள்ளையா நினைச்சு எங்க வீட்டுல இறக்கி விற்றுங்கண்ணா! "
வான்மதி அவனுக்கு அவளால் முடிந்த மட்டும் பாவமான நாய் குட்டி போல் அவனைப் பார்க்க ஒரு பெருமூச்சோடு அவள் தலையை கோதிய வினோத்
" கொஞ்ச நேரம் அமைதியா இங்க உக்காரும்மா... எல்லாமே உனக்குப் புரியும். "
" என் பப்பி பேஸ் யாருக்கிட்டையும் ஒர்க் ஆக மாட்டுதே. என் பாப்புவ தான் ஏமாத்த முடியும் போல, ஐயோ என் அண்ணன் கூட எங்க என்னத் தேடீட்டு இருக்கானோ தெரியல... தேடுறானான்னே தெரியலயே, "
வினோத்திடம் இருந்து முகத்தைத் திருப்பித் தூக்கி வைத்துக் கொண்டாள்.
இவர்களின் இந்த பரபரப்பான அலப்பறையில் தான் வான்மதிக்கு வேறு ஒன்றும் புரிந்தது. அவர்கள் ஏதோ ஒரு நகரும் விஷயத்திற்குள் இருந்தனர். கிட்டத்தட்ட நடமாடும் அறையோ என ஒன்றும் புரியாமல் அமர்ந்திருந்தவளுக்கு திடீரென உடல் தூக்கிப் போட வினோத் அவள் கீழே விழும் முன் அவளை பத்திரமாகப் பிடித்துக் கொண்டான்.
" இதுக்குத் தான் உக்கார சொன்னேன். "
வான்மதி அவனை ங என பார்க்க அதே நேரம் ஹர்ஷன் அவர்களை நோக்கி வந்தான். அவனை கண்டதும் வினோத் முகத்தில் இருந்த மேன்மையும் மறைய வான்மதியின் இறு புறமும் அவர்கள் நின்று கொண்டு அங்கே இருந்த இன்னோரு கதவின் புறமாக அவளை அழைத்துச் சென்றனர்.
" டேய் டேய் எங்கடா கூட்டீட்டுப் போறீங்க? அடேய் மிரு டார்லிங் என்ன இவனுங்ககிட்ட விட்டுட்டு எங்க டா போன? என்ன விற்றுங்க என்ன விற்றுங்க ப்லீஸ் ப்லீஸ் நான் பாவம்! ஐம் வெரி பாவம், " என இரண்டு காவலர்களிடம் மாட்டிக் கொண்ட பூனை குட்டி போல் அவள் அவர்கள் இடையில் தொங்கிக் கொண்டே வந்தாள்.
ஆனால் பாரைப் போல் இறுகி இருந்த வினோத் மற்றும் ஹர்ஷன் அதை கவனிக்கும் மனநிலையில் இல்லாமல் அந்த இறும்பு கதவைத் திறந்து அவளை வெளியே அழைத்துச் சென்றனர்.
அதுவரை திமிறிக் கொண்டிருந்த வான்மதி பட்டென அடங்கிவிட்டாள். அவளுக்கு முன் விரிந்திருந்த கரும்போர்வை போர்த்திய இருள் வாணம் அவர்களை வரவேற்க இரவின் நிலவின்றி அந்த இரவு மயான அமைதியுடன் மிளிர வான்மதிக்கு நேராக இளஞ்சிவப்பு நிறத்தில் ஒரு புள்ளி மெதுமெதுவாக வளர்ந்து ஒரு கதவின் வடிவை எடுத்துக் கொண்டிருந்தது.
அவளின் கண்கள் அதன் மீதே நிலைத்திருக்க, ஆளை மயக்கும் அந்த இளஞ்சிவப்பு நிறம் ஒரு நொடிக்குப் பின் திடீரென கரிய நீல நிறத்தைத் தத்தெடுத்து அவளை வேகமாக வந்து சூழ்ந்து கொண்டது.
வினோத் மற்றும் ஹர்ஷன் ஒருவரை ஒருவர் அர்த்தம் பொதிந்த பார்வை பார்க்க இருவரின் கண்களும் இரத்தினக்கல்லாய் பளபளக்க அந்த மகிழ்ச்சியோடே ஹர்ஷன் பின்னே திரும்பி பார்த்தான்.
இருளின் கருமைக்குள் தன்னை மறைத்திருந்த மிருதேஷ்வரனின் தங்க கண்கள் இவர்கள் மீதே நிலைத்திருக்க அவனிடம் இருந்து பரவிய சிகப்பு நிற கண்ணிற்கெட்டாத அலைகள் கவசம் போல் அம்மூவரையும் சுற்றிக் கொண்டது.
" என்ன இடம் இது? "
வான்மதியின் அதரங்கள் தானாக நகர ஹர்ஷன் வினோத்தின் பிடியில் தான் இல்லை என்பதை கவனியாமல் ஓரடி முன்னோக்கி எடுத்து வைத்தாள்.
" மாயலோகம் "
மிருதேஷ்வரனின் குரல் அம்மூவரையும் சூழ்ந்த நேரம் வான்மதியின் கண் முன்னே இருளுக்கு இடையில் அவன் மறைந்து போனான்.
அகன்ற மலைமுகட்டுகள் ஓங்கி நிற்க இரவின் ஆளுமையிலும் ஒளிர்ந்தது அந்த உலகம். கண்ணிற்கெட்டிய தூரம் வரை காடுகளும் மலைகளும் சூழ்ந்திருக்க, கரிய நிறம் பூசிய வானத்திற்கு அழகாய் வண்ணம் சூட்டிக் கொண்டிருந்தது மெல்லிய நீல நிறத்தில் ஒளிர்ந்த நிலா.
அந்த நிலாவை கண்ட மாத்திரமே ஏதோ ஒன்று வான்மதியின் மூளையில் இடிக்க அவள் ஏதும் கேட்கும் முன்பாக அந்த நிலவு கரும்போர்வைப் போர்த்திக் கொண்டது.
எங்கிருந்தோ எழுந்த பளிச்சிடும் வெளிச்சம் அவள் கண்களை கூசிட " அடேய் என்ன தான் நடக்குது இங்க?! " என கண்களை மூடிக் கொண்டு கத்தினாள்.
அந்த ஒளியால் பெரிதும் பாதிப்பின்றி நின்றிருந்த ஹர்ஷனும் வினோத்தும் ஆளுக்கு ஒரு கையை வான்மதியின் தலைக்கு மேல் உயர்த்தி அந்த ஒளியிலிருந்து அவளுக்கு சிறிய கேடயம் போல் உருவாக்கினர்.
" இது தான் மாயலோகம். ஒளிவேந்தர்கள் மற்றும் நிழல்வேந்தர்களின் சாம்ராஜ்ஜியம். " ஹர்ஷன் அமைதியான குரலில் சொல்ல
" என்ன? "
" உனக்கு புரியிற மாதிரி சொல்லனும்னா ஒளிவேந்தர் அப்டீங்குற மனித ஓனாய்கள் அண் நிழல்வேந்தர் அப்டீங்குற இரத்தக்காட்டேரிகளோட உலகம் தான் மாயலோகம். " வினோத் பொருமையாக விளக்கினான்.
" ஏதே?! வம்ப்பையரும் வேர்வுல்ஃபுமா? "
" அதே தான். இப்போ நாம பல்லாயிரம் ஆண்டுகள் முன்னாடி இருந்த மாயலோகத்துல இருக்கோம். நீ முக்கியமா தெரிஞ்சிக்க வேண்டிய இரெண்டு விஷயம் இங்க இரெண்டு அரச குடும்பம் இருக்கு. எப்பவும் போல சிம்பிலா சொன்னா, நாங்க எல்லாம் இருக்குற ஒளி பகுதி, ஓனாய்களின் பகுதி அஸ்த்திரஞாலம். இருளோட பகுதி தான் இரத்தக்காட்டேரிகளோடது. நம்மளோட எதிரிகள். அவங்களோட ராஜ்ஜியம் பேரு அமரராஜ்ஜியம். மத்தது இனிமே தானா உனக்கே புரியும். "
வினோத்தின் விளக்கம் முடிந்த அதே நேரம் அந்த வெளிச்சம் தானாக மறைய அந்த இடத்தில் புதிதாக இரு உருவங்கள் தோன்றியது. எண்ணற்ற நிறங்களில் கதிர்களும் கண்ணிற்கெட்டா அலைகளும் மாய விசைகளும் அந்த இரு உருவங்களையும் சூழ்ந்து அவ்விருவரையும் இரண்டாய் பிரித்து வெவ்வேறு திசையில் சுழற்றி அடித்தது.
இரு வேறு திசையில் தூக்கி எறியப்பட்ட இரு உருவங்களும் பலத்த அதிர்வுகளுடன் விழுந்தாலும் மீண்டும் கண்ணிமைப்பதற்குள்ளாக காற்றுக்கு இடையில் புகுந்து மின்னல் வேகத்தில் தூக்கி எறியப்பட்ட அதே புள்ளியில் வந்து நிற்க, முன்பு உருவான அந்த மாயங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து அவர்களின் இடையே ஒரு தடுப்பாய் அமைந்தது. ஒரு சில வினாடிகளில் தங்க நிறத்தில் அந்த மாயம் ஒளிர்ந்ததோடு அந்த உலகம் முழுவதையும் இரண்டாய் பிரித்தது.
அதிர்ச்சியில் வான்மதியின் உடல் சிலிர்த்தது. அவள் வாயை இரு கைகளாலும் மூடி தலையை இடவலதாய் ஆட்ட ஹர்ஷனுக்கும் வினோத்திற்கும் கேட்டிறாத ஒரு மென்மையான குரல் அவளை தீண்டியது.
" ஆதவனின் நிழலில் மதி வாழ அஸ்த்திரஞாலமும், மதியின்றி நிழலை ஆதவன் ஆழ அமரராஜ்ஜியமும் உருவானது. "
ஆதவனின் வெண்மதி அவளா...
DhiraDhi❤️
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro