வெண்ணிலாவின் விதி செய்யும் மாயம் என்ன?: 9
அத்யாயம் 9: வெண்ணிலாவின் விதி செய்யும் மாயம் என்ன?
இடியும் மழையும் போட்டிப் போட்டுக் கொண்டு மும்பையை பயத்தில் நடுங்க வைக்க, மக்கள் அனைவரும் இரவு நேரம் நெருங்கியதை கூட உணராமல் இரத்தமும் சதையுமாய் முழுதாக வீட்டிற்குச் சென்றால் போதுமடா சாமி என எண்ணிக் கொண்டு உருவாகத் தொடங்கிய புயல் காற்றில் முயன்ற அளவு சிக்கிக் கொள்ளாமல் அவரவர் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
வீட்டைத் தேடி ஓடிக் கொண்டிருந்த மனிதர்களின் இடையே சம்மந்தமே இல்லாமல் ஒரே ஒரு மிதிவண்டி மட்டும் எதிர் திசையில் புயல் உருவான கடலை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது. ஆதவன்... சுட்டெரிக்கும் உண்மையின் கண்களில் இருந்து தப்பி ஓட முயன்ற ஆதவன்.
மிதிவண்டியை ஓட்டிக் கொண்டிருந்தவனின் வசீகரிக்கும் முகம் இறும்பு போல் இறுகியிருக்க அவன் கைகள் விட்டால் அந்த சைக்கிலின் தலையை முறுக்கியிருக்கும். பாவம் யார் வாங்கிக் கொடுத்த சைக்கிலோ அவன் கையில் படாதபட்டுக் கொண்டிருந்தது அந்த கொட்டும் மழையில்...
ஆனால் அந்த கொட்டும் மழையிலும் ஒரு முறை கூட அவன் இமைகள் மூடித் திறக்கவில்லை. உடலின் உஷ்னம் அழலாய் அவன் கண்கள் வழி விண்ணைச் சென்றடைய குத்திக் கிளிக்கும் முற்கள் மேலும் மேலும் அவன் இதயத்தை புண்ணாக்கிக் கொண்டிருந்தது.
அத்தனை மழையிலும் அவன் கண்கள் எதிலோ நிலைக்குத்தி இருக்க கால்கள் விடாமல் அந்த இலக்கை நோக்கி வேகமெடுத்துக் கொண்டிருந்தது.
ஆதவனின் மன உளைச்சலுக்கு ஏற்ப அந்த வானமும் பெருமழையுடன் மும்பை மாநகரை மழை முகில்களால் புடை சூழ்ந்தது. கார்மேகங்களின் இடையே பயணித்து பேரிடியுடன் மின்னல் ஒன்று அந்த மாநகரை ஆக்ரமித்த இருளை ஒரு முறை விரட்டிவிட்டு மீண்டும் இலக்கில்லா இருளுக்குள் மறைய, அந்த ஒரு நொடி இடைவேளையில் அவளின் வென்முகம் அவன் கண் முன் தோன்றி மறைந்தது.
புயலும் மழையும் சாய்த்திராத அந்த இளங்காளையை காரிகை அவளின் புன்சிரிப்பு நொடியில் தடுமாறச் செய்ய, ஆதவனின் ஒரு நொடி தடுமாற்றத்தால் இவ்வளவு நேரமும் தாக்குப்பிடித்த மிதிவண்டி சருக்கிக் கொண்டு அதை பாடாய் படுத்தியதால் பழிவாங்குவது போல அவனையும் கீழே தள்ளிவிட்டது.
கணநேரத்தில் தன்னிலை அடைந்தவன் சைக்கிளைத் திருப்பி யாருமற்ற தார்ரோட்டில் பொத்தென விழுந்தான். அவன் தற்காப்பிற்காக கை ஊன்றியதால் ஒரு கை சீராய்ப்போடு பெரும் சேதமின்றி தப்பித்தான்.
ஆனால் மழைமகன் ஆட்டம் நிற்பேனா என அவன் முன் சேட்டை செய்து கொண்டிருந்தான். கணத்த இதயம் மேலும் மேலும் சொல்லா வலியை அதிகரிக்க, குத்திக்கிளித்த வலியை வாய்விட்டு அவன் கதறவில்லை.
அவனுக்கு பதிலாக மழைமகன் அவன் துயரத்தை நிலமகளான அவன் வெண்மதிக்கு உணர்த்த முயன்று தோற்றுக் கொண்டிருந்தான் போலும். அவள் தான் அந்த மாயவன் விட்டுச் சென்ற மாயத்தில் நித்திராதேவியை துணை அழைத்துக் கொண்டாளே...
அவ்வளவு தான் அவன் கட்டிக்காத்த பொருமை... இருவது வருடம் பிணமாய் நடமாடிக் கொண்டிருந்தவனின் மொத்த உணர்வுகளும் மடை திறந்த வெள்ளமாய் அவன் இதயத்தைச் சுற்றிக் கட்டிய இறும்பு அணையை உடைத்துக் கொண்டு முன்னேறியது.
தலை தாங்கி முட்டிக் காலிட்டு அந்த தார் ரோட்டிலே அமர்ந்தவன் விண்ணை நோக்கி தன் மொத்த வலியையும் தேக்கி உலகை உலுக்குவது போல் கோரமாய் அலறினான். அந்த அலறல் சுற்றுவட்டாரத்தில் இருந்த சின்னஞ்சிறு உயிர்கள் முதற்கொண்டு அனைத்தையும் நடுநடுங்க வைக்க, அவன் நெஞ்சின் அடி ஆழத்தில் இருந்து எழுந்த அந்த வலி மிகுந்த உறுமல் உயிர்கள் அனைத்தையும் அவனைவிட்டு தூர நிறுத்தியது.
மழையின் ஆட்டம் ருத்ரதாண்டவமாட இயற்கை அன்னை வலியில் பாடுபடும் தன் பிள்ளையை பாதுகாக்க இயலாத இயலாமையோடு பூமியை இருளால் அணைத்துக் கொண்டாள்.
#
வேர்த்துவிருவிருத்து நெஞ்சாங்கூட்டில் துடித்த இதயத்தைப் பிடித்துக் கொண்டு தன் கட்டிலில் அரண்டு எழுந்தமர்ந்த நிலாவிற்கு ஒரு சில நிமிடத்திற்கு தன் சுற்றமே தெரியவில்லை.
இருளுக்குள் மூழ்கிய அவள் அறையில் பேய்மழை பேய்து கொண்டிருந்த இரைச்சலும் புயல்காற்றின் அசைவுகளுமே ஆட்சி செய்ய எழுந்த உடனே வேகமாக சென்று இவ்வளவு நேரமும் இழுத்து மூடப்பட்டிருந்த பால்கெனி கதவுகளை அழுத்தித் திறந்தாள்.
மேல் மூச்சும் கீழ் மூச்சும் வாங்கியவளுக்கு ஒன்று மட்டும் தான் புரிந்தது. ஆனால் அது சித்தத்தில் உரைக்கவில்லை. செய்வதறியாது வெறுச்சோடி இருந்த வீதியைப் பார்த்தவளுக்கு இதயம் நெஞ்சாங்கூட்டையும் தாண்டி எங்கோ ஓட வேண்டி துடித்துக் கொண்டிருந்தது.
" ஒ...ஒன்னுமில்ல... ம்ஹும்... ஒன்னு... இல்ல... ஒன்னும் இல்ல... நான்... நான் நல்லா... நல்லா இருக்கேன்... நான் நல்லா இருக்கேன். "
நிலாவின் அதரங்கள் வார்த்தைகளை தந்தியடிக்க, தான் நலமாய் உள்ளதாய் அவள் தனக்கே ஆறுதல் சொல்லிக் கொள்வதன் காரணம் தெரியாவிட்டாலும் அவள் மீண்டும் மீண்டும் அதையே உச்சரிக்க, அவள் கன்னத்தைத் தாண்டி குதித்த கண்ணீர் துளிகள் இரண்டு தரையில் வீழ்ந்த அதே நேரம் மெல்ல மெல்ல மழையும் புயலும் மந்திரமாய் அவள் கண் முன்னே அடங்கத் தொடங்கியது.
எதையோ எதிர்பார்த்து நிலா அங்குமிங்கும் பார்க்க மெல்ல மெல்ல மட்டுப்பட்ட மழையோடு நிலாவின் மனமும் அமைதியாக திடீரென அவளை சூழ்ந்த கரும்போர்வை போர்த்திய உருவம் அவளைத் திடுக்கிடச் செய்தது.
இவ்வளவு நேரமும் மறைந்திருந்து அவளை பார்த்துவிட்டு இப்போது அவள் முன்னேயே நின்று ஊடுருவும் பார்வை பார்த்த மிருதேஷ்வரனின் தங்க விழிகள் அவளோடு சங்கமிக்க அந்த மாய விழிகளை கண்டு சப்தநாடியும் ஒடுங்கிய நிலா இறுதியாய் கேட்டதென்னவோ அவன் விரக்தியான கேள்வி தான்...
" உமக்காய் ஈராயிரம் வருடம் தகிக்கும் எம்மை விடுத்தும் உம்மை விட்டுச் செல்லும் அவன் தான் மீண்டும் உம் மனதை ஆக்ரமித்துள்ளான் அல்லவா...? "
மருண்டு விழுந்தவளை அவன் கைகள் வளைத்து அணைக்க நிலாவின் தலை தானாக அவன் நெஞ்சில் மையல் கொண்டது. பூப்போல் அவளை தன் கைகளில் ஏந்தியிருந்த மிருதேஷ்வரனின் துடிப்பில்லா இதயத்தில் மீண்டும் ஓர் பிரளயம் வெடித்துக் கொண்டிருந்தது.
வெகு தொலைவில் இவ்வளவு நேரமும் கண்களை இறுக்க மூடி மூர்க்கத்தனமாய் மிருகம் போல் அந்த இடமே நடுங்கும்படி அலறிக் கொண்டிருந்த ஆதவன் சட்டென நிமிர அவன் மூடிய இமைகள் திறந்து தங்க நிறத்தில் ஜொளித்த அவன் சிகப்பு விழிகளுக்கு வழிவிட்டது.
மிருதேஷ்வரன் நிலாவின் வதனத்தில் இருந்து பார்வையை அகற்றி நேராக பார்க்க, மிளிர்ந்த அவன் கண்களும் தீப்பிழம்பை போல் கொதித்தது.
ஆதவனின் அதரங்கள் இறுக " நின் தவறு செய்கிறாய்... "
மிருதேஷ்வரனின் பிடி நிலாவை சுற்றி இறுக, உரிமையோடு அவளை தன்னோடு அணைத்துக் கொண்டவன் ஏளனமாய் புன்னகைத்தான்.
" இருவது ஆண்டுகளை வீணடித்த உமக்கு இதில் எச்சொல்லும் இல்லை. நின் செய்திருக்க வேண்டிய வாய்ப்பை என்றோ இழந்துவிட்டாய். "
ஆதவனின் உடல் அனலாய் எரிய மிருதேஷ்வரனின் விஷம் தடவியச் சொற்கள் மேலும் பற்றி எரியும் அவன் இதயத்தில் கிருஷ்ணா ஆயில் ஊற்றியது போல அவனை ஜெகஜோதியாய் எரிய வைத்தது. என்ன தான் ஏறக்குறைய அவர்கள் இருவருக்கும் இடையில் இருவது மைலையும் தாண்டிய இடைவெளி இருந்தாலும் அவ்விருவரின் கண்கள் அனைத்தையும் தாண்டி ஒன்றை மற்றொன்று சரியாக கண்டுபிடித்துக் கொண்டது.
" நீ அவளுக்கானவன் அல்ல. "
அடக்கப்பட்ட அவன் கோபம் ஆதவனின் குரலில் அப்பட்டமாய் தெரிந்தது. ஆனால் மிருதேஷ்வரன் பின் வாங்குவதாய் இல்லை. ஆதவனுக்கு தெள்ளத்தெளிவாய் தெரியும் என்று தெரிந்தே நிலாவை அவனோடு இறுக்கிக் கொண்டு அவள் அறைக்குள் திரும்பி நடந்தான்.
" அதை கூறத் தகுதியற்றவனடா நீ, "
பூ போல் மென்மையாய் நிலாவை அவள் மெத்தையில் கிடத்தியவன் பிறை நெற்றியில் தவழ்ந்த கற்றை முடிகளை ஒதுக்கி அவள் நெற்றியில் மிருதுவாய் இதழ் பதித்தான். நிலாவின் தேகம் மொத்தமும் சிலிர்த்து அடங்க, அனலென அவளைத் தீண்டிய அவனின் மூச்சுக் காற்று உடலை நடுக்கிய குளிர் காற்றில் இருந்து அவளைக் காத்துக் கொண்டது.
இங்கு நடக்கும் அனைத்தையும் அறிந்திருந்த ஆதவனுக்கு கோவத்தில் நரம்புகள் புடைத்தது. அவன் நெஞ்சிலிருந்து கழுத்திற்கு கருநீல நிறத்தில் நரம்புகள் வளர்ந்து கொண்டே இருக்க, நெருப்பாகவே பற்றி எரியத் தொடங்கியவனின் தேகத்தை குளிர்விப்பது போல் மழை மேகங்கள் மீண்டும் புடைசூழ்ந்தது.
" நினைவில் கொள்... நின் அழிவின் தொடக்கம் என்பதெத்தனை அளவு உண்மையோ அதை ஒத்ததே அவள் உம்மவளாய் என்றும் இருக்க இயலாது என்ற உண்மை. வேண்டாம்... எல்லை மீறும் முன் நிறுத்திக் கொள் உம் வீண் உபயத்தை... உம்மை வெற்றியடைய என்றும் யான் அனுமதிக்க மாட்டேன். "
உறங்கிய நிலாவின் வதனத்தில் பூத்த புன்னகையை கண்டு மென்னகையோடு எழுந்த மிருதேஷ்வரன் ஏதோ ஆதவன் ரோட்டில் எப்படி ஆதிருத்ரனாகவே நிற்கிறானோ அதை அப்படியே கண் முன் பார்த்தது போல் திமிராக சிரிக்க அதை தன் உள்ளுணர்வுகளில் உணர்ந்து கொண்ட நம் நாயகன் செயலற்று அழலையும் இழந்தவனாய் கால்போன போக்கில் நடக்கத் தொடங்கினான்.
" எம்மை நீ அழிக்கப் போவதுமில்லை. என்னவளிடத்தில் இருந்து எம்மைப் பிரிக்கப் போவதுமில்லை. " அவளின் வதனத்தில் அவன் விரல்களால் பட்டும் படாமல் கோலம் போட்டுக் கொண்டே மெலிதாக புன்னகைத்தான். " இவ்விரண்டையும் செய்யக்கூடிய வெறொரு உயிர் என்றும் இந்த பிரபஞ்சத்தில் ஜனிக்கப் போவதும் இல்லை... "
மிருதேஷ்வரனின் தொடுகையில் நிலாவின் தேகம் நடுங்க அவள் மூடிய இமைகள் இரண்டும் அழகாய் சுருங்கியது. ஏதோ தன்னுடைய பொருள் தன்னைவிட்டு விலகிச் செல்வதை உணர்ந்தவளாய் போராடி கண்களைப் பிரிக்க முயன்ற நிலாவிற்கு இருளுக்கு மத்தியில் அவன் விழிகள் மட்டும் தான் தெரிந்தது.
அவள் மயக்கத்தோடு போராடுவதை கண்டு தன்னவளை சோர்வுபடுத்த மனமில்லாமல் அவளை சுற்றியிருந்த அவன் சக்திகளை மீண்டும் இழுத்துக் கொண்டான் அவன். மெல்ல மெல்ல நிலாவின் மயக்கம் தெளிவதை உணர்ந்து மிருதேஷ்வரன் அந்த அறையைவிட்டு மறைந்த அடுத்த நொடி துடித்துப் பிடித்து சரியாக எழுந்த நிலா அவள் அறையை சுற்றி முற்றிப் பார்த்தாள்.
தான் கண்டது கனவா அல்லது நினைவா என என புரியாமல் தன்னையே தொட்டுப் பார்த்துக் கொண்டவளுக்கு மீண்டும் உடல் சிலிர்த்தது. அனலாய் கொதித்த அவள் தேகத்தை குழப்பமாய் தொட்டுப் பார்த்த நிலாவிற்கு மின்னலென அந்த தங்க விழிகள் கண் முன் சென்று மறைய... அவள் மனதில் தோன்றியது எல்லாம் ஒரே விஷயம் தான்.
மீண்டும் வந்த மாயவன் தான் கை நீட்டினால் தொடும் தூரத்தில் விழிகளை மாத்திரம் காட்டிவிட்டு கானலாய் மறைந்துவிட்டானோ?
ஆதவனின் வெண்மதி அவளா...
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro