Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

மாயலோகம்: 10

அத்யாயம் 10: மாயலோகம்

வண்ண வண்ண மரங்கள் அழகாய் நீண்டு நிற்க, வரிசைகட்டி அமைக்கப்பட்ட நேர்த்தியான குடில்களை உள்ளடக்கி மக்களுக்கு அவசியமான சில பல மையங்களோடு அமைக்கப்பட்டு இருந்தது அஸ்த்திரஞாலத்தில் உள்ள அந்த ஒரு நகரம்.

இருள் கவ்வத் தொடங்கி இருந்தாலும் மக்கள் இன்னும் வீதிகளில் அலைமோதியபடி இருக்க, மென்மையான பஞ்சால் நெய்த ஆடைகள் அணிந்த குழந்தைகள் கைகளில் குட்டி குட்டி மரத்தாலான பொம்மைகளுடன் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தனர். பெண்மணிகள் பலர் எண்ணற்ற கடையோரங்கள் நின்று வியாபாரம் செய்ய அந்த நகர வீதிகள் இரவிலும் மிகவும் பிசியாக இருந்தது.

தலை முதல் இடை வரை மறைத்த மாயவஸ்த்திரத்தின் உதவியினால் கண்கள் மட்டும் வெளியே தெரியும்படி பொருமையாக அந்த வீதியை கடந்து வந்து கொண்டிருந்தது மூன்று உருவங்கள்.

மாயவஸ்த்திரம் பாதி உடலை மறைக்க, திருவிழாவில் தனியே விடப்பட்ட குழந்தை போல் வாயைப்  பிளக்காத குறையாக சுற்றிப் பார்த்துக் கொண்டே மதி முன்னே நடக்க, ஹர்ஷன் மற்றும் வினோத் அசல் காசில்லாத பார்டிகார்டாகவே தங்களை நினைத்துக் கொண்டு ஒரு கண்ணை மதி மீதும் மற்றொரு கண்ணை சுற்றத்திலும் வைத்தபடி அவளைப் பின் தொடர்ந்து கொண்டிருந்தனர்.

இரவு நேரம் என்பதால் மூன்று முக்காடிட்ட உருவத்தையும் பெரிதாக யாரும் கவனிக்கவில்லை. வழிவிட்டு பலர் ஒதுங்கிக் கொள்ள வீதிக்குள் நுழைந்த அரை மணி நேரத்திற்கெல்லாம் மதி மூன்று விஷயத்தை கவனித்திருந்தாள்.

முதல் விஷயம் அங்கிருந்த மக்களின் கண்கள். குறிப்பிட்டு கூறவேண்டுமானால் ஒளிவேந்தர்கள் எனப்படும் ஓனாய் மனிதர்களின் கண்கள் மூவேராக இருந்தது. குழந்தைகள் பெரும்பாலும் சாதாராண கண்கள் பெற்றிருக்க, ஆண்பெண் ஒரு சிலர் பலுப்பு மற்றும் லேசான பச்சை நிற கண்கள் பெற்றிருந்தனர்.

கடை வீதிகளில் நின்ற பல வியாபாரிகள் பெண்களாய் இருந்தனர்.

மூன்றாவது அவளுக்கே கொஞ்சம் சந்தேகம் கொடுக்கும் விஷயமாகத் தான் இருந்தது. இரண்டு ஜோடி கண்கள் வெகு நேரமாய் இவர்களை பின் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறதோ என்னும் சந்தேகம் தான் அது.

" யோவ் ப்ரோ... " மதி ஹஸ்கி வாய்சில் வினோத்தின் தோளை சுரண்ட அவளை என்ன என்பது போல் பார்த்தான் அவன். " ரொம்ப நேரமா நடந்துட்டு இருக்கோமே, எங்க தான்ப்பா போறோம்? "

" கோட்டைக்கு, "

" பக்கத்துல அப்படி ஒன்னும் கண்ணுக்குப்படலையே... "

" அதுக்கு இன்னும் ஒரு இரெண்டு கிலோமீட்டர் போனா தான் தெரியும் மதி, "

வினோத் மிகவும் எளிதாய் தோளை குலுக்கவும் சடன் ப்ரேக் போட்ட மதி இடுப்பில் கை வைத்துக் கொண்டு அவர்களை முறைத்தாள்.

" இன்னும் இரெண்டா? இரெண்டு இரெண்டுனு சொல்லி என்ன இரெண்டு மணி நேரமா நடக்கவிட்டுட்டு இருக்கீங்கடா நீங்க? பாவமா இல்லையா என்னப் பார்த்தா? இனிமேலாம் நடக்க முடியாது! எனக்கு குலோப்ஜாமுன் வாங்கிக் குடுங்க! "

" ஏதே குலோப் ஜாமுனா? அதுக்கெங்க போறது? " ஹர்ஷன் தலையை சொரிய வினோத் அவளை சமாதானம் செய்ய முயன்றான்.

"  இன்னும் கொஞ்சம் தூரம் தான் மதி. இந்த நகரத்த தாண்டினா காட்டுக்கு அடுத்து—

" நட்டநடு ராத்திரில காட்டுக்குள்ள வேற நடக்கனுமா? அடப் போங்கயா, "

ஆண்கள் இருவருமாக தரையில் தலையில் கை வைத்துக் கொண்டு அமர்ந்தவளை எப்படியோ கெஞ்சி கொஞ்சி காலில் விழாத குறையாக இழுத்துக் கொண்டு நகரத்தைத் தாண்டினர். நகரத்தின் எல்லையில் பரந்து விரிந்திருந்த கானகம் அவர்களை வரவேற்க அந்த அடர்ந்த கானகத்தின் மேல் ஜொளித்துக் கொண்டிருந்தது சிகப்பு நிறத்தில் இருந்த நிலா.

ஆனால் அது முழுமையான நிலா இல்லை என்பது பார்த்த உடனே மதிக்கு புரிந்துவிட அதன் மீது இவள் பார்வை பதிவதை கண்ட இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு  கானகத்திற்குள் நுழைவதற்காக நகர அவர்கள் முன் இரு காவலர்கள் வந்து நின்றனர்.

" தமது அடையாளப் பதக்கம்? " காட்டமான குரலில் பெண் காவலாளி அவர்களை நோக்கி கையை நீட்டினாள்.

ஹர்ஷனும் வினோத்தும் மதிக்கு முன் வந்து அவளை மறைத்தபடி அரணாய் நின்று கொள்ள

"  ஐயையோ ஆதார் கார்ட நான் மறந்து வச்சிட்டு வந்துட்டேனே, " இந்த இரு போஸ்ட்கம்பங்களை தாண்டி பார்க்க இயலாமல் மதி அவர்களுக்கு இடையே தலையைவிட்டாள். " தூக்கீட்டு வர்ரதுக்கு முன்னாடி அதெல்லாம் எடுத்து வைச்சிருக்கனான்னு பார்க்க மாட்டீங்களா டா நீங்க? "

காவலாளிகள் இருவரும் அவளை விசித்திரமாய் பார்க்க ஹர்ஷன் அவள் தலையில் கொட்டி அவளை அவன் பின்னே மறைத்தான்.

அதே நேரம் காவலர்களின் கவனத்தை தன் புறம் இழுத்த வினோத் அவன் வஸ்த்திரத்தை மட்டும் லேசாக நகர்த்தி " வினோத்வலிங்கேஷ்வர். " என கூறினான்.

இருளிலும் ஜொளித்த அவன் பச்சை கண்களை கண்டதுமே அந்த பெண் நீட்டிய கையை மடக்கி பணிந்து அவனுக்கு தலை வணங்கினாள். அவளுடன் இருந்த மற்றையவனும் இவர்களுக்கு பணிந்து நிற்க, பதிலேதும் இன்றி ஒரு தலையசைப்புடன் வினோத் வழிநடத்த ஹர்ஷன் மதியை அழைத்து- இல்லை இல்லை, திரும்பித்திரும்பி பார்த்துக் கொண்டிருந்தவளை இழுத்துச் சென்றான்.

" என்னப்பா உங்க ஊர்ல ஆதார்கார்ட் தேவயில்லையா அப்போ? " மதி மீண்டும் மீண்டும் எல்லை வாயிலை காவல் காத்து நின்ற அந்த காவலாளிகளை பார்க்க ஹர்ஷன் அவள் தலையைப் பிடித்து காட்டின் பக்கமாக திருப்பினான்.

" எங்கையாவது இடிச்சிட்டு விழுந்துராத... இங்க எல்லாம் இதான் ஆதார்கார்டு மாதிரி, " என அவன் வஸ்த்திரத்தில் இருந்து வட்டமாய் இருந்த ஒரு சிகப்பு பதக்கத்தை எடுத்து அவளிடம் காட்டினான்.

உள்ளங்கைக்கு அடக்கமாய் தங்கத்தில் செய்யப்பட்டு சிவப்பு நிறத்தில் ஒரு ஓனாயின் தலையை குறியீட்டாய் கொண்டிருந்தது அந்த பதக்கம்.

" எப்பா ஏய் என்ன ஐடி கார்டுன்னு சொல்லீட்டு இப்டி கோல்டுலையே வச்சிருக்கீங்க...? உங்க நாட்டோட பொருளாதாரம் எப்டி இதெல்லாம் தாங்கும்? "

மதிக்கு போகப் போக எண்ணற்ற சந்தேகங்களும் கேள்விகளும் மழையாய் குடையின்றி பொழிந்தது. அவள் விடாது கேள்வி கேட்டுக் கொண்டே வர பதக்கத்தை இவளிடம் காட்டிய பாவத்திற்கு வினோத் ஹர்ஷன் தலையில் அவளை கட்டிவிட்டான்.

" ராஜ குடும்பத்த சேந்தவங்களுக்கு மட்டும் தான் தங்கத்துல பதக்கம் இருக்கும் மதி. மத்தவங்க எல்லாரோடதும் செம்புல இருக்கும். "

இப்படி மதி ஒவ்வொன்றாய் ஏதேதோ கேட்டுக்கொண்டே எவ்வளவு நேரம் நடந்தார்களோ தெரியவில்லை. வாழ்வில் இத்தனை தூரம் நடந்தே வந்திருக்கிறாளா என்று அவளுக்கே தெரியவில்லை. அவளை இந்த வலையில் தள்ளிவிட்ட ஜீவன்களை வாயில் அர்ச்சித்துக் கொண்டே ஒருவழியாக இரண்டு மைலையும் அவர்கள் தாண்டிய நேரம்

" இப்போ நாம மேல போகப் போறோம், " என வாணத்தை நோக்கி கை காட்ட மதி விட்டால் அங்கேயே அமர்ந்து ஒப்பாரி வைத்திருப்பாள்.

ஆனால் ஹர்ஷன் தலையை சிலிப்புக் கொண்டு அவர்களின் கண் முன்னே ஓனாயின் உருவத்திற்கு மாறி உறுமினான். கிட்டத்தட்ட தன்னுடைய உயரத்திற்கு அஜானுபாகுவாய் கூரான பற்களோடு காட்டையே அதிர வைத்த உறுமலுடன் தனக்கு மிக அருகில் நின்ற மிருகத்தை கண்டு மதி விக்கித்துவிட்டாள்.

இவ்விருவரும் மனிதர்கள் இல்லை என்பதை சிறிது நேரத்தில் மறந்திருந்தவள் நான்கடி பின் நகர்ந்து " ஆத்தாடி! " என நெஞ்சில் கை வைத்துக் கொள்ள புன்சிரிப்போடு அவள் அருகே வந்த வினோத்

" உனக்கு இத சொல்ல மறந்துட்டோம் பாத்தியா? எங்களால உருமாறவும் முடியும். இப்போ நீ ஹர்ஷன் மேல ஏறிக்கோ, நாங்க ஓடப் போறோம். " என அவள் திமிற திமிற மசியாமல் மதியை அலேக்காக ஹர்ஷனின் ஓனாய் உருவின் மீது அமர வைத்துவிட்டான்.

" ஐயோ அண்ணா அண்ணா அண்ணா அண்ணா நான் உங்களுக்கு என்ன அண்ணா பாவம் செஞ்சேன் அண்ணா? என்ன கீழே உற்றுங்க அண்ணா நான் இன்னும் எவ்ளோ நூரம் வேணா நடந்தே வரேன் அண்ணா ப்லீஸ் ப்லீஸ் அண்ணா இது மட்டும் வேணாம் அண்ணா " என மூச்சுக்கு முன்னூறு அண்ணா போட்டு மதி வினோத்தின் கரத்தை விடுவேணா என கெட்டியாக பிடித்துக் கொள்ள ஹர்ஷன் ஒரு உறுமு உறுமவும் பயத்தில் அவனை விட்டுவிட்டாள்.

" மதி நீ ஒன்னும் பயப்புடாத... கொஞ்ச நேரத்துல நாம கோட்டைக்கே போய்டலாம்... உன்ன அவன் கீழ தள்ளி விற்ற மட்டான். அப்டி தள்ளிவிட்டுட்டா என்ன ஆகும்னு அவனுக்குத் தெரியும் அதனால பயப்புடாம அவன நல்லா புடிச்சிக்கோ, " என அழும் குழந்தையை முதல் நாள் பள்ளியில் சிரித்துக் கொண்டே விட்டுச் செல்லும் அம்மாவைப் போல் சொல்லிவிட்டு அவனும் மதி கண் மூடித் திறப்பதற்குள் ஓனாயாக மாறி அந்த நண்பர்கள் இருவரும் ஒருசேர உறுமினர்.

மதி இந்த சத்தங்களில் திடுக்கிட்டது தான் மிச்சம்.

இரு ஓனாய்களின் கண்களும் இரவிலும் பளபளவென ஜொளிக்க மதிக்கு தான் அல்லு இல்லை. லேசாய் உறுமிய ஹர்ஷன் அவன் காலை மண்ணில் தேய்க்க வினோத்தும் அதற்கேற்றார் போல் திரும்பி இவர்களை பார்த்து தலையை அசைக்க, " வேணாம் வேணாம் வேணாம் வேணாம் என்ன இந்த ஜுராசிக் மடையன்களுட்ட இருந்து யாராவது காப்பாத்துங்களேன்! " என்ற மதியின் கூக்குரலோடே ஆண்கள் இருவரும் அதிவேகத்தில் சீரிப் பாய்ந்தனர்.

" நான் யாருக்கும் எந்த பாவமும் செய்யாத பச்ச மண்ணு! என்ன ஏன் டா சாவடிக்கிறீங்க! பிள்ளையாரப்பா ப்லீஸ் என்ன அழகா வீட்டுல கொண்டு போய் விற்றுப்பா, உன் கொலுகட்டைய கூட திருடி திங்காம மொத்தத்தையும் உனக்கே குடுத்துடுறேன், " என வாய்விட்டே அப்லிகேஷன் போட்டபடி கண்களை இறுக்கி மூடிக் கொண்டாள்.

இவள் செய்வதை எல்லாம் கேட்க ஹர்ஷனுக்கு சிரிப்பு தான் வந்தது. ஆனால் வினோத் சொன்னது போல அவளை பயமுறுத்தும் மனமில்லாமல் மிதமான வேகத்திலே அவன் வினோத்தை பின் தொடர்ந்து ஓட காலையில் இருந்து நடக்கும் களோபரங்களால் சோர்வுற்ற மதி அவள் முகத்தில் அடித்த காற்றின் அசைவுகளில் சிறிது நேரத்திலே ஹர்ஷன் முதுகில் சாய்ந்து உறங்கிப் போனாள்.

தன் முதுகில் பாரம் கூடியதை உணர்ந்த ஹர்ஷன் மெல்ல மெல்ல தன் ஓட்டத்தின் வேகத்தை சீராக்க வினோத் அவர்களுக்கு காவலாய் வேகமாய் சென்று வழியில் எந்த இடையூறும் இல்லாதவாறு பார்த்துக் கொண்டான்.

ஏதோ ஒரு அமைதியான கனாவில் இருந்த மதியின் முகத்தில் பட்டுத் தெறித்த சூரியனின் கதிரால் மெல்ல விழிப்புத் தட்டி எழுந்தமர்ந்தவள் கண்களை தேய்த்துக் கொண்டே " யப்பா விடுஞ்சிடுச்சாப்பா ஒருவழியா? " என கொட்டாவியின் நடுவிலே கேட்க அவள் கேள்விக்கு பதில் தான் கிடைக்கவில்லை.

" மாயலோகத்திற்கு தம்மை வரவேற்கிறேன். "

மதியின் செப்பு இமைகள் பட்டென திறந்து கொள்ள அவள் இருந்த மாபெரும் அறையை அவள் கவனிக்கும் முன்பே அவள் முன் சில அடி தூரத்தில் நின்றவனின் மீது விழுந்தது அவள் விழிகள்.

சிகப்பு நிற விழிகள் பளபளக்க, ஒரு கரத்தை இடையில் பொருத்தப்பட்ட வாளின் மீது வைத்துக் கொண்டு பிறப்பிலே உண்டான அமைதி அழகிய முகத்தில் குடிகொள்ள நின்றிருந்தான் அஸ்த்திரஞாலத்தின் முடிஇளவரசன் சித்தேஷ்வர்.

ஆதவனின் வெண்மதி அவளா...

DhiraDhi ❤

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro