மீண்டு வந்த நினைவுகள்: 16
அத்யாயம் 16: மீண்டு வந்த நினைவுகள்
கூண்டுக்குள் அடைப்பட்ட சிங்கம் போல அவன் அறைக்குள் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்த ஆதவன் அழுந்த அவன் தலை முடியை கோத, என்ன முயன்றும் அவனால் அவன் மனதை கட்டுப்படுத்த முடியவில்லை.
அவன் ஆதவன். மாயலோக ஆதவமதியின் சரித்திரத்தில் இடம்பெற்ற கதிரோனையே தன் உயிர்நாடியாய் கொண்டு பிறந்த சரித்திரத்தின் ஆதியவன். அவனின் வெண்மதி ஆதவனின் பாலைவனமாய் வரண்டிருந்த வாழ்வில் அவன் எதிர்பாராத நேரம் பூஞ்சோலையாய் வந்தவள். அவன் காதலி... அவன் சரிபாதி... அவன் உயிரின் மறு உருவம்... அவனது ஆருயிர்.
அவள் மாயலோகத்தில் பிறந்த நொடி முதல் எந்த எதிர்பார்ப்பும் இன்றி அவளது ஒரு கடைக்கண் பார்வைக்காக தவமிருக்கும் சீடனாய் திகட்ட திகட்ட கனாவிலே அவளை உயிராய் காதலித்த பித்தன் அவன்.
அந்த உலகையே புரட்டிப் போடும் சக்தி பெற்றவனாய் இருந்தாலும் அவனை காக்க அவள் அவன் கண் முன்னே புறமுதுகில் வாள் வாங்கி உயிர் நீத்த அந்த நொடி... நீட்டப்பட்ட உதவி கரத்தையும் பிடிக்க இயலாமல் உயிர்ப்பை இழந்த ஜடமாய் மண்ணில் வீழ்ந்தான்.
கண் முன்னே மறையும் அவள் உயிரோடு அவன் மனிதம் மறையவும் கொஞ்சம் கொஞ்சமாக தன்னாருயிரை இழந்த இழப்பின் வலி அவன் கனிவான கண்களை மறைத்து பிறவி குணமான கதிரோனின் சக்தியை உயிர்பெறச் செய்தது.
கண்களை சூழ்ந்த இரத்தவெறியிலும் ஆதவன் அவன் சகோதரனிடத்தில் கூறிய இறுதி வார்த்தைகள்
" நான் உம்மனைவருக்கும் பேரிடராகும் முன் எம்மை அழித்துவிடு தமையா... அழித்துவிடு. "
மீண்டும் ஆதவன் கண் விழித்த போது ஈராயிரம் வருடங்கள் கடந்தோடியிருந்தது. காலங்கள் மட்டுமல்ல ஞாலங்களும் வேறுபட்டு என்றும் அடைக்கப்பட்ட பூலோகத்தின் வாயிலும் திறக்கப்பட்டிருந்தது.
அவன் மீண்டெழுந்த போது மனிதன் போலவே சக்கியற்று இருந்ததால் அந்த ஆழ்ந்த நித்திரை அவன் சக்திகளை பறித்துக் கொண்டதென மற்றவர்கள் எண்ண, தன் உயிரை அணுஅணுவாய் அறிந்த ஆதவனுக்கு அது உண்மை இல்லை என நன்றாகத் தெரிந்தும் அவன் உண்மையை வேளிகொணராமல் தனக்குள்ளே புதைத்துக் கொள்ள அவன் நினைவுகளும் அவனுள்ளே புதைந்து கொண்டது.
பூலோகத்தில் கண் விழித்த முதல் நாள் இரவு தான் அவன் அவனவளை நினைவூட்டும் அந்த மதியை இராவானில் பார்த்தான். அது எந்த வகையிலும் அவனவளை போல் தெரியவில்லை.
ஆனால் அன்று தொடங்கி அவனுக்கு எல்லாமுமாய் ஆனது அந்த நிலா மட்டும் தான்.
ஆதவனின் தொலைப்பேசி மீண்டும் அலற அதை எரிப்பதை போல் அவன் பார்த்த பார்வையில் அதற்கு வாய் இருந்திருந்தால் அழுதிருக்கும். ஆனால் செல்பேசியை எரித்து என்ன பயன்?
அலறும் அந்த தொலைப்பேசியை பார்த்துக் கொண்டே அவன் அங்குமிங்கும் அலைய அது எட்டாவது முறையாக கதறி அடங்கிய நேரமே ஆதவனின் நெஞ்சு பெருமூச்சோடு மேல் சென்று இறங்கியது. ஆனால் இத்தனை சீக்கிரத்தில் அவனை நிம்மதியாகவிட்டுவிடவா இத்தனை களோபரம் நடந்து கொண்டிருக்கிறது?
அவன் அலைப்பேசி எட்டாவது முறையாக கதறி அடங்கிய அதே நேரம் அவன் வீட்டின் கதவை உதைத்துக் கொண்டு ஹர்ஷன் உள்ளே வர, அவன் அறை ஜன்னலை உடைத்துக் கொண்டு உள்ளே குதித்தான் வினோத்.
நண்பர்கள் இருவரும் நடுவில் நின்றிருந்த ஆதவனை முறைக்க அவன் அவர்கள் இருவரையும் கர்ண கொடூரமாக முறைத்தான்.
வினோத் " இதான் நீ வெளியூர்ல இருக்க லட்சனமா? இரெண்டு நாளா வீட்டப் பூட்டீட்டு உள்ள உக்காந்து என்னா டா பண்ணீட்டு இருக்க நீ? "
அதற்கு பதில் கொடுக்காமல் மேலும் அவனை ஒரு பார்வை பார்த்த ஆதவன் சட்டென ஹர்ஷன் புறம் திரும்பி " ஒழுங்கா ஒடச்ச கன்னாடிய சரி பண்ணீட்டு போய்டு. " என உறிமிவிட்டு விருட்டென அந்த அறையைவிட்டு வெளியேறினான்.
ஹர்ஷனை கடுப்பாகப் பார்த்த வினோத் " டேய்! " என கத்திக் கொண்டே அவனைப் பின் தொடர்ந்தான்.
என் காது கேட்காது என முதுகில் எழுதி ஒட்டியது போல் தன் நடுவீட்டில் நின்றிருந்த இருவரையும் பொருட்டாகவே மதிக்காமல் தன் செல்பேசியையும் சைக்கில் சாவியையும் எடுத்துக் கொண்டு ஆதவன் ஏற்கனவே ஹர்ஷன் பாதி உடைத்து வைத்திருந்த அவன் வீட்டின் கதவை நோக்கி நகர்ந்தான்.
ஒருவாராக அவனுக்கு முன்பே அந்த கதவை அடைந்த வினோத் அதை அறைந்து மூடிவிட்டு ஆதவனை திரும்பி முறைக்க அவனை பார்க்காமல் மறுபுறமாய் திரும்பிய ஆதவனின் முன் ஹர்ஷனும் நின்று அவனை முறைத்தான்.
ஆதவனுக்கு இப்போது அப்பட்டமாகவே ஆத்திரம் தலைக்கேற அதை இவன்கள் மேலும் ஏற்றிவிட்டனர்.
ஹர்ஷன் " என்ன தான் டா ஆச்சு உனக்கு? "
ஆதவன் " எனக்கு ஒன்னும் இல்ல. நகரு நான் ஆபீஸ் போனும். "
" அதான் நாழு நாளா அந்த பக்கமே போகலையே? இப்போ ஏன் போற? " என வினோத் கேட்க
ஆதவன் " எனக்கு நிறைய வேலை இருக்கு... நான் கிளம்புறேன். "
" இரெண்டு நாளா உனக்கு ஃபோன் பண்ண ட்ரை பன்றோம் ஆதவா... எங்க காள் எதையும் நீ எடுக்கல... ஊருக்குப் போயிருக்கேன்னு சொல்லீட்டு வீட்டுக்குள்ள ஏன் டா உக்காந்துருக்க? என்ன ஆச்சு உனக்கு? " ஹர்ஷன் பொருமையாக அவனை கண்களாலே பரிசோதித்தபடி வினவ ஆதவன் அவன் பொருமையை இழுத்துப் பிடிக்க பெரும்பாடுபட்டுக் கொண்டிருந்தான் என அவன் அறியவில்லை.
" எனக்கு நெடு நாள் வேண்டுதல் வீட்டுக்குள்ள பூட்டீட்டு இருக்கனும்னு... இப்போ முடிஞ்சிடுச்சு நான் வெளிய கிளம்புறேன் நீங்களும் வெளியப் போங்க. "
வினோத் " வெளியப் போன்னு இன்டேரக்ட்டா சொல்றியா மச்சான்? "
முகத்தை சலனமின்றி வைத்த ஆதவன் அவனைத் திரும்பி பார்த்து உணர்ச்சிகளைத் துடைத்தவனாய் " இல்ல ரொம்ப டேரக்ட்டா தான் சொல்றேன். கிளம்புங்க. "
' இந்த அசிங்கம் உனக்குத் தேவையா? ' என வினோத்தை கேவலமாக பார்த்தான் ஹர்ஷன்.
வினோத் " ஆதவா... நீ நீயாவே இல்லன்னு உனக்குப் புரியலையா? ஏன் டா எங்ககிட்ட இருந்து ஓடி ஒழியிற? " என மனம் துவண்டு கேட்டவனின் மூளையில் திடீரென ஒரு மின்னல் வெட்டியது.
விரக்தியாய் புன்னகைத்த ஆதவன் அவன் அறை நோக்கி மீண்டும் நடந்தான். " நான் இப்போ தான் நானாவே இருக்கேன். "
அவன் விலகி சென்றும் கூட வினோத் சிலைப் போல் நின்றிருக்க அவனை முதுகில் அடித்து ஹர்ஷன் உலகுக்கு அழைத்து வந்தான். உடல் தூக்கிப் போட வினோத்தின் இதயம் படபடக்க அவன் விரைந்து சென்று அறைக்குள் நுழைய இருந்த ஆதவனை இழுத்துப் பிடித்து அறை கதவில் சாய்த்தான்.
" உண்மைய சொல்லு... உனக்கு...உனக்கு நியாபகம் வந்துருச்சா? "
ஹர்ஷனும் இப்போது அவர்களை அதிர்ச்சியோடு பார்க்க ஆதவனின் முகத்தில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. வினோத்தின் வலிய கரங்களை மிகவும் எளிதாக அவன் மீதிருந்து அகற்றி " நீ இங்க எனக்காக வந்து நிக்கல... உன் தங்கச்சிக்காக வந்து நிக்கிற... அவளுக்காக வர்ரதா இருந்தா என் முன்னாடி வராத. "
தலையை சிலிப்பு தன் அதிர்ச்சியில் இருந்து வெளிவந்த ஹர்ஷன் பேரதிர்ச்சியில் உறைந்து நின்றிருந்த வினோத்தைத் தாண்டி ஆதவனைப் பிடித்தான்.
" டேய்! உனக்கு...உனக்கு எப்போ எல்லாம் நியாபகம் வந்துச்சு? எவ்ளோ...எவ்ளோ நியாபகம் வந்துச்சு? "
ஆதவன் இப்போது மௌனம் காத்து அவனை பார்க்க ஹர்ஷனே அவனுக்கு பதில் கூறிக் கொண்டான்.
" சரி விடு... நீ... நீ வா நாம வெளியப் போலாம். நீ தேவையில்லாத எதையும் யோசிக்காத ஆதவா... எனக்குத் தெரிஞ்சு நீ...நீ கொழப்பத்துல இருக்குறதால தான் உனக்கு இப்டி இருக்குதோ என்னவோ, "
" இல்ல. நான் எங்கையும் வரல. "
" அக்காகிட்ட போலாம்... வேற எங்கையும் வேண்டாம், "
அப்போதும் ஆதவன் மசியவில்லை. ஹர்ஷனின் கரத்தை அவன் மீதிருந்து எடுத்துவிட்டு அவன் மீண்டும் நகர முயற்சிக்க இப்போது வினோத் மற்றும் ஹர்ஷன் இருவருமாக சேர்ந்து அவனை கதவோடு தள்ளி சிறை வைத்தனர்.
கதவோடு மோதிய ஆதவனை இருவரும் முறைக்க அவர்களின் இறும்பு பிடி அவனை முறுக்கினாலும் அவர்களே எதிர்பார்க்காத வகையில் இருவரின் பிடியில் இருந்தும் லாவகமாக வெளியேறிய ஆதவன் ஹர்ஷன் எதிர்பார்க்காத நேரம் அவனை கீழே தள்ளி வினோத்தையும் சுவற்றோடு அடித்துச் சாய்த்தான்.
" தேவையில்லாம இங்க நேரத்த வீணடிக்கிறத விட்டுட்டு உங்க வேலையப் பார்த்துட்டு போங்க! என்ன அதிகாரம் பண்ற உரிமை உங்க யாருக்கும் கிடையாது. "
வினோத்திற்கும் ஹர்ஷனிற்கும் ஒன்றும் புரியவில்லை. அவர்கள் அறிந்த வரையில் நிச்சயமாக அவர்கள் இருவரையும் தள்ளிவிடும் அளவிற்கு ஆதவனுக்கு பலம் இல்லை. ஆனால்...
ஆனால் எள்ளும் கொள்ளும் வெடிக்க நின்ற ஆதவனின் தங்கமாய் ஜொளித்த கண்கள் அவர்கள் இருவரையும் பார்த்த அந்த பார்வையில் அனைத்தும் விளங்கியது அந்த நண்பர்களுக்கு.
வினோத் திறந்த வாயை மூட இயலாமல் அவன் கண்களையே பார்த்துக் கொண்டிருக்க ஹர்ஷனின் தந்தியடிக்கும் அதரங்கள் ஒருவழியாக அவன் மனதில் தோன்றியதை வெளியே உரைத்தது.
" உன்னோட பவர்ஸ்... ஆதவா... "
தீ சுட்டது போல் சட்டென கண்களை இறுக்கி மூடி இருவரிடம் இருந்து விலக முயன்றான். ஆனால் ஆனந்தமும் பேரதிர்ச்சியும் பெருகி இருந்த மற்ற ஆண்கள் இருவரும் அவனை சூழ்ந்து கொண்டனர்.
" நீ...நீ பழையபடி மாறீட்ட டா... உனக்கு எல்லா பவர்ஸும் திரும்ப வந்துடுச்சு! வா உடனே உடனே போய் அக்காவ பார்த்துட்டு நிலாவ பார்க்கப் போகலாம் வா, "
அது வரையும் இழுத்துப் பிடிக்கப்பட்டிருந்த பொருமை என்ற திரை அழிவ்ந்து விழ ஆதவனின் ஒரு அசைவு வினோத் ஹர்ஷன் இருவரையும் அவனிடம் இருந்து தூர நிறுத்தியது.
பூத்திருந்த செவ்வாணம் திடீரென மை பூசிக் கொள்ள கதிரவன் மெதுமெதுவாய் மேகமூட்டங்களுக்குள் மறைந்து கொள்ள உலகை பிரகாசித்து மின்னிய மின்னலின் வேகத்தோடு பயணித்த பேரிடியின் முழக்கம் மும்பை மாநகரை உலுக்கிவிட்டு அடங்கியது.
" ஒரு முறை சொன்னா புரியாதா உங்களுக்கு? நான் வர மாட்டேன். "
அவன் ஒவ்வொரு வார்த்தையும் அழுத்தி சொல்லி வாய் திறக்க வந்த ஹர்ஷனை சட்டென திரும்பி பார்த்த ஒரு பார்வையில் தானாக ஹர்ஷன் அவன் முட்டியில் விழுந்தான்.
" எம்மை அடக்கியாழும் சக்கி படைத்தோன் யாவரும் அல்லன். மீண்டும் மீண்டும் என் அழலுக்கு இரையாக முயலாதீர். "
சிங்கம் போல் அந்த வீட்டை அதிர வைத்த அவனின் உறுமல் இப்போது வினோத்தையும் மண்டியிடச் செய்ய, அவர்களை சுற்றி இருந்த காற்றும் ஆதவனின் கோபத்திற்கேற்றார் போல் சுடும் தீயாய் கொதித்தது.
தலை கவிழ்ந்திருந்த இருவரை சுற்றி திடிரென அனைத்தும் அமைதியாக மெல்ல அவர்கள் நிமிர்ந்து பார்த்த போது ஆதவன் அவர்கள் கண் முன் இல்லை.
வினோத் " நாம லேட் பண்ணீட்டோம் ஹர்ஷா... தப்பு பண்ணீட்டோம். நிலாவ பார்த்தா இவனுக்கு எல்லாம் நியாபகம் வருமுன்னு தான் இந்த கல்யாணத்துக்கே நான் ஒத்துக்குட்டேன். ஆனா இவனுக்கு எல்லாமே நியாபகம் வந்துருச்சு போல டா. இவன் எக்குத்தப்பா எதுவும் பண்றதுக்குள்ள நாம அவன நிறுத்தனும், "
பெருமூச்சுவிட்ட ஹர்ஷனுக்கும் மனம் கனத்தது.
அவனுக்கு எல்லாம் நினைவு வருவதற்கு முதலில் எதையாவது அவன் மறந்திருக்க வேண்டுமே என விதி தான் அவர்களைப் பார்த்து சிரித்தது.
" அக்காகிட்ட போலாம்... அவள மட்டும் தான் மனுஷியா மதிப்பான் இல்லனா அண்ணன் தான் ஒரே வழி... "
" அப்போ நிலா? "
இப்போது நண்பர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, மாயம் செய்யும் மாயைகள் என்றோ அவளின் வாழ்வை சூழத் தொடங்கியதை அவர்கள் அறியவில்லை.
ஆதவனின் வெண்மதி அவளா...
DhiraDhi❤️
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro