மீண்டு வந்த காதல்: 3
மீண்டு வந்த காதல்: 3
அந்த நீண்ட... மிகவும் நீண்ட... அளவின்றி நீண்ட வரலாறு பாடத்தில் அரை தூக்கத்தில் அமர்ந்திந்த இளைஞர்களுள் கொட்டாவி விட்டபடி பச்சை பலகையை தன் மலர் போன்ற கண்கள் சுருங்க நோக்கிக் கொண்டிருந்தாள் அவள். அவளின் உறக்கத்தை கலைப்பதை போலவே ட்ரிங்ங்ங்ங்ங்ங்ங் என கல்லூரி மணி அடிக்க அவர்களின் பாட வாயிலை தாண்டி முதல் ஆளாய் வெளியே ஓடினாள் நிலா.
அவளின் முகத்தில் ஒரு பெயரில்லா மகிழ்ச்சி குடி கொண்டிருக்க பார்க்கும் பெரியோர் அனைவரிடமும் ஓரிரு வார்த்தை பேசிவிட்டு கல்லூரியின் வாயிலுக்கு ஓடப் போனவளை " பைத்தியம்லாம் இல்லைங்க... என் ஃப்ரெண்டு தான், " என வேறொரு சகமாணவி யாருமில்லாத இடத்தை பார்த்து கூறியபடி இழுத்து நிறுத்தினாள்.
திடீர் நிறுத்தத்தால் தலை திருப்பி தன் தோழியை ஒரு பார்வை பார்த்த நிலா ஒரு பெருமூச்சுடன் " என்ன டி வேணும் உனக்கு? " என சினுங்க
" இப்போ பறந்து பறந்து வீட்டுக்கு போய் கல்யாணமா டி பண்ணிக்க போற...? " என அவள் கேட்டு முடிப்பதற்குள்ளாக அக்கல்லூரியின் வாயிலில் வந்து நின்ற தன் அத்தானின் மகிழுந்தை அடையாளங்கண்ட நிலா
" ஹே உனக்கு இன்னைக்கு வீட்ல ஒரு வேலையும் இல்ல தான? ஆமா இல்லதான்... வா என் கூட, " என மற்றையவளை வாயே திறக்க விடாமல் தரதரவென இழுத்துச் சென்று அவளோடு அந்த மகிழுந்தில் ஏற்றினாள்.
ஏற்றுகிறேன் என காருக்கு உள்ளே தள்ளிவிட்ட தோழியை கதவில் இடித்து கொண்டே மண்டையை தேய்த்தபடி திரும்பி நோக்கினாள் இசையினி. நிலாவின் ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு என்ற ஒரே உற்றத் தோழி...
நிலாவிற்கு ஏற்ற வாயாடி தான் இசை. அன்னை தந்தை வெளிநாட்டில் இருப்பதால் பாட்டியுடன் வாழ்ந்து வருகிறாள். அரைத்த மாவையே அரைத்தாலும் வாயை மூட மாட்டாள். கடனே என கல்லூரிக்கு வருபவளாக இருந்தாலும் படிப்பில் தேரிவிடுவாள். கள்ளம் கபடமற்று அனைவருக்கும் உண்மையுடன் நடந்து கொள்பவள்.
" ஹாய் மா எப்டி இருக்கீங்க? " என இசையை அடையாளங்கண்டதுமே வினோத் கேள்வி எழுப்ப தினம் பார்க்கும் முகம் தானே என்பதை போல் அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு மறுபுறம் திரும்பி கொண்டான் ஹர்ஷன்.
இசை " அட அண்ணா! எப்போ ஊருக்கு வந்தீங்க? இவ சொல்லவே இல்லையே! " என அவள் ஒரு கேள்வி எழுப்ப நிலா தன் செல்பேசியை எடுத்தவளாக " சொல்ல தான் வந்தேன்... ஆனா மறந்துட்டேன் டி, " என பதில் கூறியபடியே யாருக்கோ அழைத்து காதில் வைத்தாள்.
இசை " யாருக்குண்ணா அடிக்கிரா இவ? " என வினோத்திடம் கேட்க ரியர்வ்யூ மிரரினால் தன் தங்கையை கேள்வியாய் நோக்கிய வினோத் அவள் எடுத்த எடுப்பிலே " பாட்டி! " என்கவுமே யாரென யூகித்துக் கொண்டு இசைக்கு புன்னகையை மட்டும் அளித்தான்.
" பாட்டியா...? வீட்டுக்கு தானே போற அங்க போய் நேராவே பேசிக்களாமே டி, " என பச்சைபிள்ளையான இசை ஒன்றும் புரியாது அவளிடமே கேட்க நிலா பதில் கொடுக்கவில்லை.
" பேக்கு அவ பேசுறது உன் பாட்டிக்கிட்ட, " என ஹர்ஷன் அவளை பார்க்காமலே குரல் கொடுக்க " ஏதே என் பாட்டிக்கா?! " என நிலாவை நோக்கினாள் இசை.
நிலா " பாட்டி... இசைய நான் வீட்டுக்கு கூட்டீட்டு போறேன் பாட்டி..."
" ஏன் டி? " என இசை கத்த அதை பொருட்டாக நிலா எடுக்க வேண்டுமே.
நிலா " ஒரு சின்ன ஃபங்ஷன் பாட்டி... வேற எங்கையும் கூப்டல, எனக்கு துணையா இசைய மட்டும் அழச்சிட்டு போறேன் "
" பங்ஷனா என்ன பங்ஷன்? " என இசை மீண்டும் கேள்வி எழுப்பினாள்.
நிலா " ம்ஹும் இல்ல பாட்டி நம்ம வீட்ல தான் ஃபங்ஷன்... பாட்டி வீட்லையே தான் அரேஞ் பண்ணீர்க்காங்க.. "
" என்னது வீட்டுக்குள்ளையே ஃபங்ஷனா? " தெரிந்திருக்குமே யார் கேட்டதென்று.
நிலா " இன்னைக்கு லேட் ஆனாலும் ஆகும்... அப்டி இருட்டீடுச்சுன்னா நான் அவள இங்கையே வச்சிக்குறேன் பாட்டி, "
" என்னது இங்கையே வச்சிக்கப் போறியா?! ஹே என்ன டி நெனச்சிட்டு இருக்க நீ?! என்ட்ட எதாவது கேளேன் டி! " என இசை காட்டு கத்து கத்த வினோத் சத்தமாய் சிரிக்க படாதுபாடுபட்டுக் கொண்டிருந்தான்.
நிலா " அப்டியா... ஹ்ம்ம் சரி பாட்டி அவ தூங்கீடுவா... அப்டி அதிசயமா தூங்காம இருந்தா நான் ஹர்ஷன் அத்தான் கூட வீட்டுக்கு அனுப்பி வச்சிடுறேன், " என்றதும் அப்புறம் இசையின் பாட்டி " ஹர்ஷன் தம்பி இருந்தா சரி டா மா... நீங்க பத்திரமா இருங்க.. வச்சிடுறேன், " என மேற்கொண்டு ஒரு வார்த்தையும் இன்றி அழைப்பைத் துண்டித்தார்.
தன் கேள்விகள் அனைத்தும் மண்ணுக்கே சமம் என தெரிந்ததால் வாயை இழுத்து மூடிக் கொண்டு இசை ரோட்டை முறைத்தபடி எப்போதோ திரும்பி அமர்ந்திருந்தாள். இசை பார்வையாலே கொலை மிரட்டல் விடுத்துக் கொண்டிருப்பதை கண்டு கொள்ளாமல் நிலா " அத்தான் அந்த பூக்கடைல நிறுத்துங்க... " என கூறினாள்.
ஏதோ மறுத்துப் பேச வாயெடுத்த ஹர்ஷன் அந்த பூக்கடையைப் பார்த்த உடனே இவளிடம் இன்று பேசி ஜெய்க்க முடியாதென அறிந்தவனாய் மகிழுந்தை ஓரம் கட்டினான்.
அவனின் க்ரெடிட் கார்டை பெற்றுக் கொண்டு நிலா சில நொடிகளிலே காரை விட்டிறங்கி அந்த கடைக்குள் சென்றிருக்க இறுதி வரை தன்னை பார்ப்பாளென கடினப்பட்டு முறைத்துக் கொண்டு அமர்ந்திருந்த இசையோ " என்னண்ணா இவ என்ன ஒரு ஆளா கூட மதிக்காம போய்ட்டா? " என முளித்தாள்.
" அவ பூக்கடைய பாத்ததும் கார விட்டு குதிக்காம என் கிட்ட நிறுத்த சொன்னதே எனக்கு அதிசயமா இருக்கு... நீ வேற, " என ஹர்ஷன் எந்த ஒரு அலட்டலும் இல்லாது தன் செயல்பேசியை நோண்டத் தொடங்கினான்...
இசை " இவர ஏன் தான் நிலாக்கு பாடிகார்டா பாட்டி போட்டு வச்சிர்க்காங்களோ தெரியல, வேற ஆளேவா கிடைக்கல? " என தலையிலடிக்காத குறையாக இவள் கூறியதும் " எதே பாடிகார்டா? ஏய் யார்ட்ட பேசீட்டு இருக்கன்னு தெரியிதா இல்லையா உனக்கு?! " என ஹர்ஷன் பொங்கி எழவும் " ஏன் தெரியாம? நல்லா ஆறடிக்கு உசரமா வளந்துருக்குர நிலாவோட பாடிகார்டு அத்தான் கிட்ட தான் பேசீட்டு இருக்கேன், " என முகத்தை திருப்பி கொண்டாள் இசை.
இங்கு இவ்விருவரும் ஒரு மினி போர் நடத்த முயன்று கொண்டிருக்கும் போது அதில் கவனம் செலுத்த இயலாமல் அந்த புதிதாக உயர்ந்திருந்த பூக்கடையில் புகுந்து இன்னமும் வெளிவராமல் இருந்த தங்கை மீதே இருந்தது வினோத்தின் கண்கள்.
வினோத் " டேய்... டேய் மச்சான்... டேய் எரும, டேய் வெண்ணெய்! " என ஒரு கத்த கத்தவும் " என்னாடா? " என இசையை முறைப்பதை ஒதுக்கி வைத்துவிட்டு இவனை நோக்கினான் ஹர்ஷன்.
" இதென்ன புதுசா இருக்கு? இங்க ஒரு புது கடை வந்ததே எனக்கு தெரியாதே, " என சந்தேகமாய் கேட்க " ஆமா இவரு பெரிய இவரு... இவரு கிட்ட கேட்டுட்டு தான் மும்பைல பூக்கடை வரப் போகுது, " என வாய்க்குள்ளே முனுமுனுத்து விட்டு ' லட்டிப்யூல் ' என்ற பெயரைக் கொண்ட அப்பூக்கடையை நோக்கிய ஹர்ஷன் " இது ஒரு ஆறு மாசமா இங்க தான் டா இருக்கு... நிலாக்கு பூன்னா தான் காதல் பறந்து வந்துடுமே. இங்க வந்து தான் பூ வாங்குவா, " என்றான் ஹர்ஷன் எங்கோ பார்த்தபடி.
" ஒரு மொளம் மல்லியும் முல்லைப் பூவும் வாங்குறதுக்கு மெனக்கெட்டு இங்க வருவாளா இவ? " என ஆச்சர்யமாய் இசை கேட்க " நான் சொன்னனா அப்டி? இங்க உலகத்துல இருக்க பாதிக்கும் மேலான பூக்கள் இருக்கு... நமக்கு அதுல கால்வாசி பூக்களோட பேர் கூட தெரியாது, நிலாக்கு இந்த கடை கண்ல பட்டுட்டா இரெண்டு பர்ப்புல் டெய்சி வாங்காம இந்த ரோட்ட அவளும் தாண்டமாட்டா... நம்மளையும் தாண்ட விட மாட்டா, " என ஹர்ஷன் சிரிப்போடு கூறுவதை போலிருந்தாலும் " பர்ப்புல் டெய்சி " என கூறிய போது அவனின் விழிகள் வினோத்தின் விழிகளை தீண்டி வந்ததை வினோத்தும் கவனிக்கத் தவறவில்லை.
" பர்ப்புல் டெய்சி... வாவ்... " என இசையின் முகம் மலர அதே நேரம் அந்த பூக்கடையிலிருந்து வெளியே வந்தாள் நிலா.
தங்களை நோக்கி வருபவளின் கரத்தில் பர்ப்புல் டெய்சி பூவை எதிர்பார்த்த இசை வினோத்தோடு ஹர்ஷனது கண்களும் நிலாவின் கைகளில் இருந்த வித்தியாசமான மலரை கண்டு சுருங்க, ஒரே நேரத்தில் ஆண்களின் முகபாவனை போல் மாறியது.
மகிழுந்துள் ஏறி அமர்ந்த நிலா எடுத்துச் சென்ற க்ரெடிட் கார்டை ஹர்ஷனிடம் கொடுத்துவிட்டு அந்த பூவை பார்த்தபடி இருக்கையில் சாய்ந்தமர்ந்தாள்.
" ஏன் டி இங்க வந்தா ஏதோ நீ பர்ப்புல் டெய்சிய தூக்கீட்டு வருவ, அதில்லாம வரவே மாட்டன்னு உங்க அத்தான் பில்டப் விட்டாரு? நீ என்ன வேற கலர்ல ஏதோ எடுத்து வந்துர்க்க? இது என்ன டெய்சி? " என இசை இப்போது ஹர்ஷனின் காலை வாரிய போது கூட ஹர்ஷனுக்கு எதிர்த்துப் பேச தோன்றவில்லை.
" இன்னைக்கு இந்த பூ வாங்கனும்னு தோனுச்சு டி அவ்ளோ தான்... "
தன் குரலை ஒரு முறை சரி செய்து பேச மறந்த நாவை உள்ளிழுத்து தன் நிலையை பிடித்து கொண்ட வினோத் " ஏன் அம்மு, எதுக்கு பர்ப்புல் டெய்சி டெய்லி வாங்குர? ஹர்ஷன் சொன்னான்... ஏன் குறிப்பா பர்ப்புல் டெய்சி? " என தன் சந்தேகத்தை உறுதி செய்வதற்காக கேள்வி எழுப்பியவனை அலட்சியமாய் பார்த்தான் ஹர்ஷன்.
அவன் பார்வை ' ஆயிரம் முறை கேட்டு சொல்லாதவ ஆயிரத்தியோரு முறையா சொல்லவா போறா? ' என எடுத்துரைக்க வினோத்தின் கேள்விக்கு பதிலின்றி அப்படியே விட எத்தணித்த நிலாவின் கரத்தைப் பிடித்தாள் இசை.
" ஏய் பதில் சொல்லு டி.. ஏன் அது வாங்குர? " என கேட்கவும் இசையை அடக்க முடியாதென நினைத்தாளோ என்னவோ...
" நான் ஒரு இரெண்டு வர்ஷத்துக்கு முன்னாடி ஒரு மகஸின் படிச்சேன் இசை... அதுல தான் பர்ப்புல் டெய்சி லாங் டிஸ்டன்ஸ்ல உள்ள ஒரு உறவுக்கு அனுப்புறதுன்னு தெரிஞ்சிக்கிட்டேன்... நாங்க உங்கள மறக்கல, எங்க வேண்டுதல்கள்ளையும் மனசுலையும் எப்பவும் நீங்க இருப்பீங்கன்னு நாம சொல்றது தான் பர்ப்புல் டெய்சி ஒருத்தருக்கு நாம குடுக்குறதுக்கான அர்த்தம், " என நிலா கூறி முடிக்க இதை சற்றும் எதிர்பார்க்காது பேயறைந்ததை போலான இரு ஆண்களுக்கு மத்தியில்
இசை " ஏன் மச்சீ உனக்கு லாங் டிஸ்டன்ஸ் ரிலேஷன்ஷிப் இருக்குன்னு சொல்லவே இல்லையே டி நீ, " என விழி விரித்து நோக்கியவளை மூவருமே விசித்திரமாய் நோக்கினர்.
" எரும எனக்கு இன்னைக்கு எங்கேஜ்மென்ட்டு டி. இதுல லாங் டிஸ்டன்ஸ் லவ் வேறையா? "
" என்னது எங்கேஜ்மென்ட்டா?! சொல்லவே இல்ல! பாவி நான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டேன் போடி! எனக்கு குடுத்த பின்க்கி ப்ராமிஸ நீ ஏமாத்தீட்ட! " என்றதும் ஹர்ஷனும் வினோத்தும் ஆரம்பிச்சிட்டாங்கையா என சத்தமாய் பெருமூச்சு விட்டனர்..
அது ஒன்றுமில்லை... இசை மற்றும் நிலா ஆறாம் வகுப்பு படிக்கையில் தங்களின் பனிரெண்டாம் வகுப்பு அண்ணன்கள் மற்றும் அக்காக்கள் பலரும் ஒருவர் மற்றவருக்கு ரூட் விடுவதை எல்லாம் பார்த்து ஏழாம் எட்டாம் வகுப்பினரும் அதை காப்பி பேஸ்ட் செய்ய, அதை தெய்வகுத்தம் போல் தினமும் தலையிலடித்து புலம்பும் இசையை சமாளிக்க நிலா அவளுக்கு தான் ஒரு குறிப்பிட்ட வயது வரும் வரை காதலிக்க மாட்டேனென வாக்குக் கொடுக்க இசை ஒரு படி மேல் சென்று " நிலா உனக்கு நான் தான் மாப்பிள்ளை பாப்பேன்... நா ஓக்கே சொல்லாத வர நீ யாரையும் கல்யாணம் பண்ணிக்கக் கூடாது. " என மற்றொரு சத்தியத்தையும் வாங்கியிருந்தாள்.
" அதெல்லாம் நீ ஒத்துக்கவ, " என
அதை எண்ணி சிரித்தபடியே கூறினாள் நிலா.
" முடியாது. முடியாது. முடியவே முடியாது. அமித்தாபச்சனோட பேரனே மாப்பிள்ளையா இருந்தாலும் நா ஒத்துக்கமாட்டேன்! " என முகத்தை திருப்பிக் கொண்டாள் அவள்.
" ஹான் ஹாஹ் பாக்களாம்... "
" ஆமா இதென்ன டி பூ? " என இசை கேட்டதும் ஹர்ஷனும் வினோத்தும் ஒருவரை ஒருவர் பார்த்து எச்சிலை கூட்டி விழுங்க அம்மலரின் மென்மையான இதழை தன் பூவிரலால் வருடிய நிலா " அம்ப்ரோசி " என மென்மையாய் கூறினாள்.
" அதுக்கான அர்த்தம்? " என இசை கேட்டுக் கொண்டிருந்த போதே சரியாக நிலாவின் வீட்டின் முன் அவர்களது மகிழுந்து நிற்க அந்த பூக்களோடு கதவை திறந்து அவள் கீழே இறங்கவும் வினோத் காற்றை விடவும் மெல்லிய குரலில் " மீண்டு வந்த காதல்... " என கூறினான்.
காரை விட்டிறங்கிய நிலா நிமிரவும் அவள் முன் வீட்டின் கதவைத் திறந்து சரியாக கீழே இறங்கி வந்தான் ஆதவன்.
நிலாவின் வால் போல அவளோடே சேர்ந்திறங்கிய இசை ஆதவனை கண்டதும் அவன் பார்வை நிலாவின் மீதே மயலிட்டிருப்பதையும் கண்டதும் வீலென கத்தத் தொடங்கியதோடு " ஹே மச்சி மச்சி நான் சொன்னத வாப்பஸ் வாங்கிக்கிறேன் டி! எனக்கு உன் கல்யாணத்துல ஓக்கே, இந்த மாப்பிள்ளை சூப்பர்! மிஸ்டர் மாப்பிள்ளை! உங்க பேரு என்ன?! " என ஆதவனிடமே ஓடியிருந்தாள்.
நிலா பேயறைந்ததை போல் அவளை பார்க்க ஹர்ஷன் தலையிலே அடித்துக் கொண்டான்.
ஆதவன் குனிந்து இசையைப் பார்த்துவிட்டு மாப்பிளையா? நானா? மீ? என கேட்பதை போல அப்பாவியாய் ஆள்காட்டி விரலால் தன்னையே சுட்டி காட்டி கேட்க அவள் டிங்குடிங்குவென தலையாட்டியதும் " ஆதவவிருஷ்ஷாளன் " என்றான் அவன் குழப்பமாய்.
" யம்மா இசை! அவன் மாப்பிள்ளை இல்லம்மா... நீ குடும்பத்துல குழப்பத்த உண்டாக்குர! " என ஹர்ஷன் கத்தியபடி முன்னே செல்ல இன்னும் ஆதவனிடம் இருந்து கண்களை பறிக்க இயலாமல் நின்ற தங்கையின் தோள் பற்றி நிலைக்கு கொண்டு வந்தான் வினோத்.
"அம்மு அது விருஷ்ஷாள்... நான் சொல்லுவேன்ல? " என மெதுவாய் கேட்க தலையசைத்த நிலா கண்களில் தெரிந்த குழப்பத்தை மறைக்க எண்ணாமலே " வாங்க... " என அழைத்துவிட்டு ஹர்ஷன் கூறிய கூற்றால் ஆதவனை விழிக்க விழிக்க பார்த்திருந்த இசையை உள்ளே இழுத்துச் சென்றாள்.
ஆதவன் " அது.... அம்ப்ரோசி தானே... " என குரலை சரி செய்து ஒரு நீண்ட மௌனத்திற்குப் பிறகு நிலாவின் கரத்திலிருந்த மரலை காட்டி கேட்க மற்ற இருவர் அவனுக்கு பதில் அளிக்கும் முன்பாகவே காம்ப்பௌண்டை தாண்டி உள்ளே வந்தது ஒரு டெஸ்லா கார்...
இரண்டு மணி நேரத்திற்கு பின்பு
ஆதவனின் வென்மதி அவளா...
DhiraDhi❤️
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro