பேருந்தில் பயணம்: 24
அத்யாயம் 24: பேருந்தில் பயணம்
ஹர்ஷனின் நடவடிக்கையை கண்டு ஏதோ சரியில்லை என புரிந்தது போல் எதுவும் சொல்லாமல் கதவைத் திறந்து நிலா கீழே இறங்கியிருக்க, அதை காணாமல் ஹர்ஷனும் காரை கிளப்பிக் கொண்டு பறந்திருந்தான்.
இன்னோறு காரை கௌஷிக் ஓட்டிச் சென்றதால் அங்கு வினோத் ஓட்டி வந்திருந்த மீதம் ஒரு கார் மாத்திரமே தனியாக நின்றிருந்தது. அதன் ஒரு புறம் சாய்ந்து நின்றிருந்த ஆதவன் அவன் அடர்ந்த கேசத்தை அழுந்த கோதி, சிகரெட் ஒன்றை எடுத்து பற்ற வைத்தான்.
அதை பார்த்துக் கொண்டே அவன் அருகே சென்ற நிலா திடீரென அவன் கையை பிடிக்க, முன்பே அவளை எதிர்பார்த்திருந்தது போல் ஆதவன் அலட்டாமல் இடது கையால் சிகரெட்டைப் பிடித்து வாயில் வைத்தான்.
அவன் இடது புறங்கையில் மிளிர்ந்த பிறைநிலவை பார்த்து அவள் வில் புருவங்கள் மீண்டும் வளைந்தது.
சித்தேஷிடமிருந்து தப்பித்த வினோத் இன்னும் காரை வந்து சேரவில்லை.
வேர்த்து விருவிருத்து ஹர்ஷன் பரபரத்துப் போய் இருந்ததன் காரணம் சாட்சாத் சித்தேஷே தான். ஆதவனையும் அவனுடன் நிலாவையும் பார்த்த நிறைவோடு மாயலோகம் திரும்ப முணைந்த சித்தேஷ் அவனை இத்தனை காலத்திற்குப் பின் பார்த்த அதிர்ச்சியில் நடுரோட்டில் சிலையாய் சமைந்து நின்றிருந்த ஹர்ஷன் மற்றும் வினோத்தை கண்டு அவன் திட்டத்தை மாற்றிக் கொண்டான்.
பல வருடம் பின் காணும் பாசத்தில் அண்ணன் அன்பை பொழிவான் என எதிர்பார்த்த இருவரின் எண்ணங்களுக்கும் நேர்மாறாக ' எத்தனை காலமடா இன்னும் மெய்களை எம்மிடமிருந்து மறைக்க நினைத்தீர்கள்? ' என கண்கள் சிவக்க அமைதியாக கேட்ட சித்தேஷ் இருவருக்கும் ஒரு காட்டு காட்டிவிட்டுத் தான் மாயலோகம் திரும்பினான்.
பின்ன தோளைத் தாண்டி வளர்ந்துவிட்டதால் வளர்த்தவனை மதிக்காமல் செல்லும் இரண்டு தடியன்களையும் மொட்டை வெயிலில் மண்தரையில் முட்டியிட வைத்துவிட்டானே அவன்.
இவன் ஒருவனிடம் மாட்டியது போதாமல் ஆதவனிடம் வேறு சிக்கிக் கொள்ள விரும்பாமலே ஹர்ஷன் தப்பித்து ஓடியிருக்க வினோத் இன்னமும் முட்டியிட்டபடி அவன் பனிஷ்மென்டை அனுபவித்துக் கொண்டிருந்தான்.
ஆனால் இதை அறியாத நிலா ஆதவனை முறைத்துக் கொண்டே
நிலா " என் அத்தான என்ன பண்ணீங்க நீங்க? "
" நான் எதுவும் பண்ணல, "
" அப்பரம் ஏன் பேய பார்த்த மாதிரி இருந்தாராம் அவரு? "
ஆதவன் தோளை குலுக்கிவிட்டு மறுபுறமாக திரும்பி புகையை இழுத்துவிட, அவன் கையை உதறிவிட்டு நிலாவும் இன்னோறு புறமாக திரும்பிக் கொண்டாள்.
ஆதவன் இரண்டு முறை புகையை இழுத்துவிட்டு அமைதி காக்க, நிலாவின் காரணமில்லா அமைதி அவனை ஏதோ செய்தது.
" என்ன வேணும் உனக்கு? "
அமைதி
" உன்ன தான் கேக்குறேன். என்ன வேணும்? உன்ன திரும்பவெல்லாம் தூக்கீட்டுப் போக முடியாது. உன் அண்ணன் வரும் வர வேணா வெயிட் பண்ணு. "
அமைதி
" என்ன தான் டி வேணும் உனக்கு? "
இப்போது சத்தமாகவே ஆதவன் நறநறவென பல்லை கடிப்பது வெளியே கேட்க, நிலா அசட்டாமல் முகவாயை தோளுக்கு இடித்துவிட்டு அவனுக்கு முதுகை காட்டி நின்று கொண்டிருந்தாள்.
" நிலா! "
" என்ன நிலா நிலான்னா என்ன? என்ன வேணும் உங்களுக்கு? நான் எதாவது உங்கள கேட்டனா? இல்ல தான? அமைதியா தான என் வேலையப் பார்த்துட்டு நிக்கிறேன், நீங்களும் கேக்காம இருங்களேன். என்ன இப்போ? "
" ரொம்ப நல்லது. நீ உன் வேலையப் பார்த்துட்டே நில்லு நான் என் வேலையப் பார்த்துட்டுப் போறேன். " என கூறிய ஆதவன் அவன் பாதைக்கு திரும்பும் முன் காலை நிலத்தில் அழுத்தி உதைத்த நிலா
" ரோட்ல தனியா பேசீட்டு நிக்கனும்னு எனக்கு என்ன நேரமா? நான் போறேன் மொதல்ல, ஹ்ம்! "
காரை தாண்டி சாலையின் புறமாக செல்லும் நிலாவை பார்த்து பெருமூச்சுவிட்ட ஆதவன், சிகரெட்டை பிடித்திருந்த கையாலே அவன் நெற்றியில் பொருமையாக தட்ட அவன் பொருமை தான் வருவேணா என இன்னோறு பக்கம் ஓடிக் கொண்டிருந்தது.
" என் உயிர வாங்கவே திரும்ப வந்து பொறந்துருக்கல்ல நீ... கடவுளே, "
வேகவேகமாக நடந்து சென்று கொண்டிருந்த நிலா சாலையோரமாக தெரிந்த ஒரு ஓரமான பேருந்து நிருத்தத்தில் போய் அமர்ந்து கொள்ள அவள் நேரமோ என்னவோ, நெடுஞ்சாலையில் இருந்த அந்த சாலையோரமாக பெரிதாக ஆள் நடமாட்டமும் இல்லை வாகனங்களும் கூட இல்லை.
கைகளை நெஞ்சுக்கு குறுக்கே கட்டிக் கொண்டு நின்ற நிலா கண் முன்னே ஏதோ ஒரு பேருந்து வந்து நிற்கவும் யோசிக்காமல் அதில் ஏறி விருவிருவென நடந்து ஒரு காலி சீட்டில் அமர்ந்து கொண்டாள்.
கோபம்.
காரணம் புரியாத கோபம் கண்களை மறைக்க, அடுத்த ஸ்டாப்பிங்குகளுக்கு இடையே வேறுபாடு கூட தெரியாமல் சொல்லப் போனால் கருகருவென தாடி வைத்திருந்த கண்டக்டர் அவள் சீட்டை வந்து தட்டும் வரை வேறெதுவும் அவள் சிந்தையில் பதியவில்லை.
" யம்மா உன்ன தான் கூப்புடுறேன். எங்க இறங்கனும்? " என அவர் ஹிந்தியில் வெடுக்கென கத்த, பேந்த பேந்த முளித்த நிலாவிற்கு பேச்சே வரவில்லை.
இருவது வருட வாழ்கையில் ஒரு முறை கூட நினைவு தெரிந்தது முதலாக பேருந்தில் பயணித்ததில்லை. அதுவும் தனியாக எங்குமே அவள் சென்றதில்லை. ஹர்ஷன் நிழல் போல் நிலாவின் பின் என்றும் இருப்பதாலோ என்னவோ பயணங்கள் போலான நேரத்தில் நிலா பெரிதாக எதையும் கவனித்ததும் இல்லை.
இப்போது எங்கு இருக்கிறோம் என்றே தெரியாமல் கையில் டிக்கெட் வாங்கவும் பணம் இல்லாமல் நம் நாயகியால் முளிக்க மட்டும் தான் முடிந்தது.
" உன்ன தான் மா கேக்குறேன் எங்க போகனும்? டிக்கெட் எடு வேகமா, "
நிலா பதில் சொல்லாமல் அமைதியாக அவரையே பார்த்திருக்க, திடீரென எவனோ ஒருவன் ஓடும் பேருந்தில் ஓடி வந்து ஏற பின் சீட்டின் அருகே இருந்த பயணிகள் திடுக்கிட்டனர். அந்த கலோபரத்தில் கண்டக்டர் நெஞ்சில் கை வைத்துக் கொண்டு என்ன என்று திரும்பிப் பார்க்கும் முன்பாக மூச்சு வாங்கிக் கொண்டே அவர் முன் வந்து நூரு ரூபாய் தாள் ஒன்றை நீட்டினான் ஆதவன்.
கருகரு தாடி வைத்த கண்டக்டரும் நிலாவும் அவனை ஆவென வாயைப் பிளந்து கண்கள் விரிய பார்க்க, இரண்டு நிமிடம் மூச்சு வாங்கிக் கொண்ட ஆதவன்
" மலபார்ஹில் இரெண்டு, "
" ஏம்ப்பா... ஒரு டிக்கெட் வாங்கவா இவ்வளவு தூரம் ஓடி வந்து ஏறுன? " என தாடி கண்டக்டர் இன்னும் ஆச்சர்யத்திலே கேட்க, ஆதவன் அதற்கு நிலாவை ஒரு பார்வை பார்த்தான்.
அதிசயத்தைப் பார்த்தது போல் அவனை பார்த்துக் கொண்டிருந்த நிலா கப்பென வாயை மூடிக் கொண்டு ஜன்னல் புறமாக வேகமாக திரும்பி அமர்ந்து கொள்ள, அதை கவனித்த கண்டக்டர்
" ஓகோ லவ் மேட்டரோ... இப்போ இருக்க புள்ளைங்கல்லாம் என்னமா இருக்குதுங்க... இந்தப்பா மீதி, " என அவருக்கே பேசிக் கொண்டு மீதி பணத்தையும் டிக்கெட்டுகளையும் ஆதவனின் கையில் திணித்துவிட்டுச் செல்ல, நிலா முகத்தை சுருக்கிக் கொண்டு தலையில் அடித்தாள்.
அவரை அமைதியாக பார்த்த ஆதவன் டிக்கெட்டை எடுத்து பாக்கெட்டில் வைத்துவிட்டு அவன் ஃபோனில் யாருக்கோ அழைத்து " என் கூட தான் இருக்கா. ஹ்ம் வீட்டுல விட்டுடுறேன். " என தகவல் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.
நிலா கடைக்கண்ணால் அவனை பார்த்துவிட்டு அவள் சீட்டில் தள்ளி அமர்ந்து கொள்ள அதை பார்த்த ஆதவன் பார்க்காதது போல் திரும்பி கொண்டான். அடுத்த இரண்டு நிருத்தத்திற்கும் இருவரும் ஒருவர் பக்கம் மற்றவர் திரும்பாதது போல் இருந்தாலும் ஆதவனது கண்களை அவளை சுற்றி தான் வந்து கொண்டிருந்தது.
நேரம் செல்ல செல்ல மெல்ல மனம் அமைதி அடைந்த நிலா எதிர்காற்றில் கண்கள் மூடி அவள் சீட்டில் சாய்ந்து கொண்டாள்.
ஒரு சில வினாடிகளில் கூட்டம் அதிகரிக்க, அந்த சத்தத்தில் கண்களை பிரித்த நிலா இன்னும் அவள் இருக்கை அருகிலே பாடிகார்ட் போல் நின்றிருந்த ஆதவனை பார்த்து புருவத்தை சுருக்க சரியாக ஒரு ஆடவன் ஆதவனை கடந்து செல்லும் நோக்கில் நிலா அருகில் இருந்த இருக்கையைப் பார்த்துவிட்டு வாயெல்லாம் பல்லாக அவள் அருகில் வந்தான்.
" எக்ஸ்யூஸ் மி, இந்த ஸீட் ஃப்ரீயா? "
நிலா அவனை நிமிர்ந்து பார்க்கும் முன்பே " இல்ல இந்த சீட்டுக்கும் டிக்கெட் எடுக்கனும். நான் எடுத்துட்டேன். தன்க் யூ, " என கூறிய ஆதவன் அடுத்த நொடி நிலாவின் அருகே அமர்ந்திருந்தான்.
அந்த ஆடவனும் முளித்துக் கொண்டே அவர்களைவிட்டு நகர, எள்ளும் கொள்ளும் வெடிக்க இருக்கையின் இரும்பு பிடியை விட்டால் முறித்துவிடுவது போல் உடும்பாகப் பிடித்திருந்த ஆதவனை பார்த்த நிலா
" இவ்வளவு நேரம் உம்முனா மூஞ்சான் மாதிரி நிக்காம இதுக்கு அப்போவே உக்காந்து இருக்கலாமே, எதுக்கு வெட்டி பந்தா? "
ஆதவன் அவளை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு " நீ நினைக்கிற மாதிரி எல்லாம் ஒன்னும் இல்ல, "
" நான் என்ன நினைக்கிறேன்னு உங்களுக்கு எப்டி தெரியும்? "
" தேவையில்லாம ஏன் பேசுறோம்? வேடிக்கை தான பார்த்த? பாரு, "
" ஒரே பக்கமா பார்த்தா கழுத்து வலிக்குமாம். கொஞ்சம் இந்த பக்கமும் பார்த்துக்குறேனே, "
" பார்க்க வேற வேலை இல்லையா? "
" இல்ல நிறைய வேலை இருக்குன்னு சொல்லீட்டுப் போறேன்னு சொன்னவரு இரெண்டு ஸ்டாப்பிங் பஸ் பின்னாடியே ஓடி வந்து ஏறி இருக்காரே அவர பார்க்குறத விட பெரிய வேலை இப்போ இல்ல பாருங்க. "
அவ்வளவு தான். அதற்கு மேல் நிலா பேசியது தன் காதுக்கு கேட்பதற்காக அல்ல என ஆதவன் அவன் முடிவை தீர்மானித்துவிட்டு அவளை பார்க்காமல் திரும்பி அமர்ந்துகொண்டான்.
ஆனாலும் நம் நாயகி அப்படியே விட்டுவிடுவாளா என்ன? அவள் என்ன பேச்சு கொடுத்தாலும் ஆதவன் என் காது கேட்காது என ஒரு பலகையில் எழுதி கழுத்தில் மாட்டிக் கொள்ளாத குறையாக எங்கோ பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.
அவன் பொருமையை சோதிக்கவே பிறந்த அவளும் அவள் வேலையில் சரியாக இருந்தாள்.
" சரி உங்க மொக்கையான அக்டிங் ஸ்கில்ஸ் பத்தியெல்லாம் கேக்கல... வீட்டுக்குப் போக எவ்வளவு நேரம் ஆகும்னாவது சொல்லுங்க, "
இதை சொல்லாவிட்டால் இன்னும் தான் நம் காலை வாருவாள் என நினைத்துக் கொண்ட ஆதவனின் இதழ்கள் ஒரு வழியாக பதில் கூற பிரிந்தது.
" ஒரு மணி நேரம். "
அவன் சொன்னது தான் போதும் தாம்தூமென நிலா குதிக்க
" என்ன ஏமாத்தி எங்கையும் கூட்டீட்டு போய்டலாம்னு ப்லன் போற்றுக்கீங்களா? நான் நம்ப மாட்டேன்! டௌனுக்கும் வீட்டுக்கும் மினிமம் பதினஞ்சு நிமிஷம் தான் டிஸ்டன்ஸே! யாருகிட்ட கதவிடுறீங்க! "
" அத நீ டௌன தாண்டி போற பஸ்ல ஏறுறதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கனும் " அவன் ஏறஇறங்க நிலாவை ஒரு லுக்கு விட்டதில் அவள் பேய் முளி முளித்துவிட்டு வாயை மூடிக் கொண்டாள்.
இப்போதாவது உலகம் தனக்கு கொஞ்சம் நிம்மதியை கொடுத்துவிடாதா என மனதுக்குள்ளே நொந்து கொண்டவன் பெருமூச்சுவிட்டு முடிக்கும் முன் நிலா முந்தி கொண்டாள்.
" சரி ரொம்ப போர் அடிக்கிது எதாவது பேசுங்களேன்... "
நம் நாயகன் தன் வேண்டுதல் இப்போதைக்கு நிறைவேறாது என தெரிந்து கொண்டு ' இவ்வளவு நேரத்துல எப்போ நீ பேசாம வாய மூடுன? ' என்ற லுக்கோடு மீண்டும் பெருமூச்சுவிட
" ஏன் யாரு கிட்டயும் பேச மாட்டீங்களா நீங்க? "
" அப்போ யார்ட்ட தான் பேசுவீங்க? "
" எப்டி எங்க அண்ணனுக்கும் அத்தானுக்கும் நீங்க ஃப்ரெண்டானீங்கன்னு சுத்தமா புரியல எனக்கு. ஒருவேளை நீங்களா ஃப்ரெண்டாகலையா? அவங்க இரெண்டுப் பேரும் உங்கள கொடும படுத்தி ஃப்ரெண்டா ஆக்கிக்கிட்டாங்களா? " என நிலா கண்களை விரித்து ஆச்சர்யமாக கேட்கவும் ஆதவன் அவளை பார்த்தான்.
" என்ன? நீங்க பண்றதெல்லாம் அப்டி தான் இருக்கு? ஒரு வார்த்தை பேச ஓராயிரம் தடவ யோசிக்கிற மாதிரி தான் சீரியசா மூஞ்ச வச்சிருக்கீங்க... முன்னப்பின்ன கண்ணாடில பார்த்துருக்கீங்களா உங்க உம்முனாமூஞ்ச? "
கண்களை உருட்டி கேட்ட நிலா திடீரென விழிக்க, அவள் திடீர் ஆச்சர்யத்திற்கு காரணமான அவன் தன்னையும் மீறி அரும்பிய நகையை மறைக்க விரும்பாமல் முதல் முறையாக அவளை கண்டு சிரித்தான்.
ஆதவனின் வெண்மதி அவளா...
DhiraDhi ❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro