சகோதரர்கள்: 21
அத்யாயம் 21: சகோதரர்கள்
" இரு இரு இளா... நீ என்ன ரொம்ப கொழப்புற... உங்க அத்தான் தான் சொன்னாரு. அவரு பொய் சொல்லீருப்பாருன்னு எனக்குத் தோனல, "
மதி எழுந்து நின்று குறுக்கும் நெடுக்கும் நடக்க, அவள் கூற்றை அமோதித்த இளவொளியும் சிந்தனையோடே அவளைப் பார்த்தாள்.
" இளா... எனக்கு இந்த அருள்வாக்கப் பத்தி சொல்லேன். இறைவியோட அருள்வாக்கு. மதி பத்தினது இல்ல... இரண்டு அரசகுல வாரிசுகள் பத்தின அருள்வாக்கு. "
கொஞ்சம் தயங்கிய இளவொளி " இறைவியின் அருள்வாக்கைப் பற்றி உயிர்கள் எவையும் பேச அனுமதியன்று தேவி... யாழிதப்போரின் பின் அத்தான் இட்ட முதல் கட்டளையே அது தான். "
" சரி அப்போ... நான் கேள்வி கேட்டா பதிலாவது சொல்றியா டா? "
" தம்மிடம் கூறுவதனால் அதில் இடரேதுமன்றெனவே எண்ணுகிறேன்... விதியிட்டது அத்தான் தானே... தாம் வினவுங்கள் தேவி, "
அவள் கூறிய விதத்தில் சிரித்த மதி
" சரி இளா... நான் கேட்ட அருள்வாக்குல இரெண்டு வாரிச குறிப்பிட்டாங்க. ஆனா ஏன் அந்த வாரிசு வந்தாங்க ஏதுன்னு ஒன்னுமே சொல்லல... உங்க அத்தான் தான் ஒளிவேந்தரோட வாரிசுன்னா நிழல்வேந்தரோட வாரிசு யாரு? "
" யான் அறியேன் தேவி. நிழல்வேந்தர் பற்றிய எவ்வொரு விசனத்தையும் ஒளிவேந்தர்கள் கற்றறியவில்லை. "
" சரி ஏன் குறிப்பிட்டு இரெண்டு வாரிசுன்னாங்க? இதுனால அப்போ என்ன கிளற்சி ஏற்பட்டுச்சு? "
" கிளற்சியா... என்ன கிளற்சியென்றும் யான் அறியேன் தேவி. இரண்டென குறிப்பிட்டதன் விசனம் ஈராய் இருக்கும் மாயலோகத்தின் காவலர்களாய் இருப்பரென்றே. அத்தானைப் போலே நிழல்வேந்தர்களின் வாரிசும் அதீத சக்தி படைத்தோனென்றே எண்ணுகிறேன். "
நன்கு அவளை கவனித்த மதி ஏதோ யோசனையோடே தலையை மட்டும் ஆட்டினாள்.
" நான் மிருதேஷ்வரன் தான் அந்த வாரிசுன்னு நினைச்சேன். "
" இஞ்ஞன கோணத்தில் யாவரும் சிந்தித்ததாய் எமக்கு உள்ளவில்லை தேவி. ஏனெனில் மரணனவன் தோன்றியதே வெண்மதியின் மரணத்தின் பின் கதிரவக்குறி கொண்ட அருளாளன்— "
" இளா கொஞ்சம் கோச்சிக்காம இந்த எக்ஸ்ற்றா பில்டப்பு இல்லாம டக்குன்னு சொல்லேன், " மதி ஒரு கட்டத்தில் அவள் நகங்களை கடிக்கிறேனென கையை கடித்திருப்பாள் போல
அவள் அவசரம் புரியாமல் விழித்த இளவொளி முளித்துக் கொண்டே சொல்ல வந்ததைத் தொடர்ந்தாள்.
" யான் கூற வந்ததென்னவென்றால் ஆதவக்குறி கொண்ட ஆதவனே விழ்ந்த பிறகு தான் மிருதேஷ்வரன் மாயலோகத்தில் எழுச்சி கொண்டான். யான் அறிந்த வரையிலும் அவர் ஒருவரால் மாத்திரமே கேதவனான மிருதேஷ்வரனை அழிக்க இயலும். அன்று வெண்மதியின் இறப்பில் ஆதவனையும் மாயலோகம் இழந்ததாலே மிருதேஷ்வரனின் கரங்களில் சித்திரவதைக்கு ஞாலங்கள் அனைத்தும் உள்ளானதாக அத்தான் கூற கேட்டிருக்கிறேன். "
" சோ... இந்த ஆதவன்ங்குற ஹீரோவால தான் மிருவ அழிக்க முடியும். இல்லன்னா மிரு எல்லாத்தையும் அழிச்சிருவான்... ஆனா இப்போ சிம்மலோகனத்தோட என்ன பண்றான்னும் தெரியல, வெண்மதிக்காக தான் அவன் எழுந்திருக்கான்... இப்போ அவளும் இருக்கா, ஆதவனும் இருக்காருங்குற பட்சத்துல மிரு என்ன செய்யப் போறான்? அந்த குரல் அப்போ நிழல்வேந்தன் வாரிசுன்னு யார தான் சொல்லுச்சு? "
பாதியை தனக்கே முனுமுனுத்துக் கொண்ட மதி தலையில் கை வைத்துக் கொண்டு அவள் மெத்தையில் அமர இளவொளிக்கு ஒன்றும் விளங்கவில்லை.
" ஏன் இளா... அருள்வாக்குப்படி ஒளிவேந்தர்களோட வாரிசான உங்க அத்தானோட மதி நான்னா... ஆதவனோட மதி வெண்மதியா இருந்தா... நிழல்வேந்தரா யார தான் இங்க சொன்னாங்க? "
இப்போது அவள் கேட்க வருவது அவளுக்கே புரியாமல் வெளியே ஒலிக்க இளவொளி தான் மதிக்கு நீர் கொடுத்து அவளை அமைதியாக்கினாள்.
" யாம் அத்தானிடமே வினவலாம்... சற்று அயரும் தேவி, "
#
விரைந்து தன் வீட்டிற்குள் நுழைந்த ஆதவன் இருளில் மூழ்கியிருந்த அவன் அறையை கண்டு திடுக்கிட்டு நிற்க, வேர்த்து விருவிருத்து ஓடி ஒழிந்த நாயகனின் வெளிறிய முகத்தில் மெல்ல குழப்ப ரேகைகள் படரத் தொடங்கியது.
அவன் வீடு அவன் விட்டுச் சென்றது போல அப்படியே இருந்தாலும் ஒரு அமானுஷ்ய குளிர் அங்கே சூழ்ந்திருப்பதை கவனித்தவனுக்கு கனபொழுதில் மிருதேஷ்வரன் அங்கே வந்துச் சென்றுள்ளான் என புரிந்தது.
தொப்பென கதிரை ஒன்றில் அமர்ந்த ஆதவன் ஒருவழியாக இறுகியிருந்த அவன் முஷ்டியை விடுவிக்க, அவன் மூச்சு சீரான ஒரு சில வினாடிகளுக்கெல்லாம் கருநீல நரம்புகள் அவன் கரங்கள் தொடங்கி அவன் கழுத்தின் விழும்பு வரை நிறைக்கத் தொடங்கியது.
தன் சக்திகளுக்குள் மூழ்கிய ஆதவனின் நினைவுகள் மெல்ல பின்னோக்கியது.
தன்னவளின் மரணத்தில் தன் மனிதத்தை இழந்த ஆதவனின் வீழ்ச்சியில் அவனை சித்தேஷ்வர் முழுவதுமாய் முடக்கி ஆழ்ந்த நித்திரைக்குள் அடைத்திருக்க, அப்போழ்தே ஞாலங்கள் அஞ்சிய மிருதேஷ்வரன் காட்சி கொடுத்தான்.
மிருதேஷ்வரன். எண்ணற்ற ஆண்டுகள் ஆதவன் அவன் சக்திகளுக்கு அடியில் கட்டிக்காத்த இரகசியம் அவன். நிழல்வேந்தர் அரச குலத்தின் வாரிசாய் தோன்றிய மிருதேஷ்வரனின் பிறப்பை எண்ணி அருள்வாக்கின் போழ்தே மொத்த மாயலோகமும் அஞ்சி நடுங்கியது.
அவனை எண்ணிலடங்கா வருடங்கள் அடக்கி ஆழ்ந்த ஆதவன் தன் ஈருதயம் சுக்குநூறாய் உடைந்த வலியில் ஞாலத்தை காக்கும் தன் கடமை உணர்வை மொத்தமாய் இழந்த ஒரு சில வினாடிகள் அந்த நிழல்வேந்தன் வெளிவருவதற்கு வழி வகுத்துக் கொடுத்துவிட்டது.
அவன் அக்காளிடம் கேட்டு அறிந்த வரை ஏழாண்டு கால தீவிர போராட்டத்தின் பின் இணைந்த மூலோக சக்திகளால் தற்காலிக சிறையில் மிருதேஷ்வரன் அடைக்கப்பட்டுள்ளான். இதில் பெரும் பங்கு வகித்த அவன் சகோதரன் சித்தேஷ்வரின் நூறாண்டு கால விடாமுயற்சியின் பலனால் மாயலோகம் சற்று பழைய நிலையை அடைந்துள்ளது. பின் சித்தேஷ்வர் யாவராலும் கலைக்க இயலாத தியானத்தில் தன்னை புகுத்திக் கொண்டுள்ளான்.
ஆதவன் எழும் வரை நீடித்திருந்தது அந்த தியானம்.
தான் விழித்ததை அவர்களின் இரத்த பந்தம் வழியே அறிந்தே தன் சகோதரன் தியானத்தை கலைத்திருக்க வேண்டும் என ஆதவன் அறிந்திருந்தாலும், ஈராயிரம் வருடம் பின் கண் திறந்த இருவது வருடத்தில் ஒரு முறையும் ஆதவன் அவனை சந்திக்கவில்லை.
மாயலோகம் கண்ட பேரழிவு அனைத்திற்கும் தானே காரணம் என்ற குற்ற உணர்சியினால் தன்னுள் மருண்ட ஆதவனுக்கு அவன் சகோதரனை மேற்கொள்ள இன்னும் சக்தி கிடைக்கவில்லை.
" எம்மை மன்னித்துவிடு தமையா... இன்னமும் உன் இளையவனுக்கு உம்மை காணும் திராணி கிடைத்தாகவில்லை. "
சித்தேஷ்வரும் தன்னை வற்புருத்தாதது தன்னால் தான் என அறிந்திருந்த ஆதவன் தன் தமையன் நெடுகாலம் அவ்வாறு அமைதி காக்க மாட்டான் என தெரிந்தே தான் இந்த மௌன போராட்டத்தை நீடித்துக் கொண்டிருந்தான்.
அவ்வாறாக ஆதவனின் மௌனப் போராட்டம் இன்று முடிவுக்கு வந்தது.
" உமக்கு காலம் கொடுக்க எண்ணி நான் காத்திருந்தேன். ஆயின் விதி எமக்கு காலம் வைத்திருக்கவில்லை போலும் இளவா... "
இரண்டாயிரம் வருடங்களுக்குப் பின் கேட்டாலும் அவன் தமையனின் குரலில் இருக்கும் அந்த அமைதி இன்னமும் நிலைத்திருப்பதை ஆதவனால் உணர முடிந்தது. மெல்ல தன் தலையை தூக்கியவன் அவனுக்கு முன் வாணை வெறித்துக் கொண்டு திரும்பி நின்றிருந்த சித்தேஷைப் பார்த்தான்.
" உம்மை தேடி வரும் அளவில் இந்த இருவது ஆண்டுகள் எமக்கு நேரா விதி யாதென்று அறிவாயா? "
சித்தேஷ் தன் கடைக்கண்ணால் ஆவனைப் பார்க்க, பார்வையை மாற்றிக் கொண்ட ஆதவன் லேசாக புன்னகைத்தான்.
" இத்தனை ஆண்டிற்குப் பின் ஒருவழியாக உன் கரம்பிடித்த உம் மதியாளை காக்கும் பொருள் எம்மை காண வந்திருக்கிறாய் அல்லவா? "
சித்தேஷ் முழுதாக திரும்பி ஆதவனைப் பார்த்தான். அவர்களுக்கு இடையில் பரஸ்பர விசாரிப்புகளுக்கு எல்லாம் இடம் தேவையில்லை. இருவேறு லோகங்களில் இருந்த போதிலும் நித்தமும் ஒருவர் மற்றவரை அவர்களின் இரத்த பந்தத்தின் மூலம் உணர்ந்து கொண்டு தான் இருந்தனர்.
சித்தேஷ்வருக்கு இரத்த சொந்தமாய் ஆதவனும், ஆதவனுக்கு இரத்த சொந்தமாய் சித்தேஷ்வர் மட்டுமே எஞ்சி இருக்கின்றனர்.
ஒளிவேந்தர்களின் முந்தைய அரசர் ராகவேந்திர அரசாளனின் இளைய சகோதரர், இளவரசர் தியாகராஜ அருளாளனின் ஒரே புதல்வனாவான் ஆதவன். இந்த அரச குலத்து இரகசியம் இளவரசர் தியாகராஜனின் மரணத்தோடு ஒளிவேந்தர்களின் வரலாற்றில் மறைந்துவிட்டது.
ஆயினும் இரத்தமும் சதையுமாய் இல்லை எனினும் இரத்த பந்தத்தின் துணையுடன் ஒளியும் நிழலுமாய் வளர்ந்த சகோதரர்கள் இருவருக்கும் இடையேயான அன்பும் பிணைப்பும் அனைவருக்குமான காட்சி அல்லாமல் போனது.
ஆதவன் " உம் வதனம் நிறைக்கும் புன்னகையை என்னவென யான் எடுத்துக் கொள்ளட்டும் தமையா? "
" நின் கூறியது சரி தான் என்று எடுத்துக் கொள், "
ஆஹான் என்பது போல் ரியக்ஷன் கொடுத்த ஆதவன் அந்த கதிரையில் சாய்ந்து அமர அவன் அசைவுகளை அமைதியாய் பார்த்திருந்த சித்தேஷ்
" சொல் இளவா... மிருதேஷ்வரனின் விசை அசைவை உணர்ந்தும் நின் அமைதி காத்திருப்பதை யான் எவ்வாறு எடுத்துக் கொள்ள? "
" மிருதேஷ்வரனா? அவன் விசை அசைவை என் அறையில் யான் ஏன் உணரப் போகிறேன் தமையா? "
" எனின் தம் இருவரது மாறுபட்ட சக்தியின் உஷ்னத்தை நின் உணரவில்லையோ? "
பதில் பேசாத ஆதவன் தன் இருக்கையின் பிடியில் விரலால் கோலம் போடத் தொடங்கினான்.
சித்தேஷ் " சரி மிருதேஷ்வரன் கதையை பிறகு பார்க்களாம். வெண்ணிலாவின் வாழ்வில் என் மாயம் செய்ய இருக்கிறாய்? "
" வினோத்திற்கு இப்போதைய தங்கையாய் தோன்றியுள்ள மானிடத்தியோடு எவ்வகையிலும் யான் தொடர்புபடுத்திக் கொள்ள விரும்பவில்லை தமையா... நின் அறியாதது ஒன்றுமல்லவே... இத்துனை வருட வாழ்வில் யான் கண்ட பேரழிவுகள் போதாதா? "
இம்முறை சித்தேஷ் அவனை ஆழ்ந்த பார்வை பார்க்க, அவன் உதிர்த்த அடுத்த வாக்கியத்தை கேட்ட ஆதவனுக்குத் தான் தன் பொருமையை இழுத்துப் பிடிக்க போராட்டமாய் இருந்தது.
" மரண வாசத்தில் மூழ்கி பிறவி ஞாலங்களில் எத்தனை உயிர் மாண்டாலும் அது உம் ஆருயிர் ஒருத்தியின் நாடிக்கு ஈடாகாதென வீருகொண்ட என் இளையவனின் காதலுக்கு அழிவுகளை காண திடீர் ஞான உதயம் என்னவோ? "
" அவன். நான். இல்லை. "
" பின் யாரவனாம்? "
" மக்களைக் காக்கப் பிறந்தோன் நான். நானே உயிர்குடிக்கும் எமனன் ஆகப்பெறுவது எவ்வகையில் உமக்கு சரியென்றானதென அறியேன். என் சித்தம் இழக்கக் காரணமான அவள்...எமக்கு வேண்டா. "
தரையை வெறித்துக் கொண்டிருந்த ஆதவனின் முன் வேறொரு கதிரையில் அமர்ந்த சித்தேஷ் அவன் பார்வையை நேருக்கு நேராகப் பார்த்தான்.
" உன் சித்தம் இழக்க காரணமானது அவள் அல்ல. உன் வாழ்வை துச்சமென்றெண்ணி நீயே உம்மை காணிக்கையாய் கொடுத்துக் கொண்ட அமரராஜ்ஜியம் தான் நீ சித்தம் இழந்ததன் காரணம். தன் உடையவனை பாதுகாக்க தன்னுயிர் துறந்த அவளை பழி சொல்லாதே இளவா, நீ வேண்டாவென பிடிவாதம் பிடிப்பதொன்றும் எமக்கு புதிதல்ல... "
ஆதவனின் வெண்மதி அவளா...
DhiraDhi ❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro