கோவக்காரக்கிளி: 14
அத்யாயம் 14: கோவக்காரக்கிளி
துணைவன் அல்லது துணைவி ஒளிவேந்தர்கள் ஒவ்வொருவரின் பிறப்பிலே நிச்சயிக்கப்படும் அவரவரது வாழ்நாள் துணையை குறிக்கிறது.
ஆதவனுக்கு மதி போல, ஆழிக்கு நிலம் போல, இருளுக்கு ஒளி போல, நெருப்புக்கு நீர் போல, பகலுக்கு இரவு போல ஒருவருக்கு ஒருவர் என இறைவியின் அருளோடே அவர்களது விதிகள் பிணைக்கப்படுகிறது.
இவ்வாரு பிணைக்கப்படும் இரு ஒளிவேந்தர்கள் ஒருவரை ஒருவர் பெரும்பாலும் அவர்களது இருவது வயதிற்குப் பிறகு கண்டுகொள்வர். அவர்களின் உயிரோடு பிணைந்துள்ள அவர்களின் ஓனாயின் சக்தி அவரவரது துணைவரையும் கண்டுப்பிடித்து அருகே அழைத்துவரும். அவ்விருவரும் ஒருவர் மற்றவருக்கு வாழ்வின் மருந்தாகவும் காவலாகவும் இருப்பர். அவ்வாறு ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டுகொண்ட துணைவர்களை பிரிக்க எந்த சட்டமும் மாயலோகத்திலும் அல்லது பிறலோகங்கள் எதிலும் இல்லை.
அது நடக்கவும் நடக்காத காரியமாகும்.
மயங்கி கிடந்த மயிழ்விழியின் மெதுவான இதயத்துடிப்பை உணர்ந்த சில நொடிகளிலே வினோத்தின் இதயம் எக்குத்தப்பான வேகத்தில் எகிறிக் கொண்டிருக்க முடிந்தமட்டும் ஹர்ஷன் தன் பதட்டத்தை மறந்து தன் நண்பனை அசுவாசப்படுத்த முயன்று கொண்டிருந்தான்.
வினோத்தின் அருகாமை மயில்விழியை சூழ்ந்திருந்த விஷக்காற்றை அவளிடம் இருந்து தூர விரட்டி அடிக்க, இவர்கள் இருவரும் வாதாடிக் கொண்டிருந்த போதே வலியின் முனகலோடு கண்களை திறந்தாள் மயில்விழி.
தலையைப் பிடித்துக் கொண்டு முதலில் அவள் வினோத்தைப் பார்க்க அவளது சிறு முனகலுக்கே படக்கென அவளை குனிந்து பார்த்த வினோத்
" மயில்விழி... என்னாச்சு டா? இப்போ எப்டி இருக்க? " என பதட்டமாய் கேட்க, பளபளவென ஜொளித்துக் கொண்டிருந்த அவன் கண்கள் இப்போது கண்ணீர் குளமாய் அவளை நோக்கியது.
ஆனால் ஹர்ஷன் அவளின் கை பிடிக்க முனையவும் கண்ணீரை மறந்தவன் உடனே அவனை கண்டு வீட்டை உலுக்குவது போல் கோபமாய் உறுமினான்.
மீண்டும் ஹர்ஷன் அட்டேன்ஷென் என்று சொன்னது போல் இரண்டு கையையும் தூக்கிக் கொண்டு நிற்க, வினோத் அவனவளை இறுக்கி அணைத்துக் கொண்டு அவனை முறைத்தான்.
ஹர்ஷன் " நான் பாவம். "
" வினோத்... வினோத் அவன விடு ப்லீஸ்... "
மயில்விழியின் கெஞ்சலால் வேறு வழி இல்லாமல் ஹர்ஷனை அவளருகல் வர வினோத் அனுமதிக்க, ஹர்ஷன் அவளின் கரத்தைப் பிடித்த அடுத்த நொடியே அவனது கண்களும் ஒளிரத் தொடங்கியது. அவன் முகம் கொஞ்சம் கொஞ்சமாக பாரை போல் இறுக, கண்கள் இரண்டும் தீப்பிழம்பாய் தகித்தது.
" மிருதேஷ்வரன் இங்க வந்துருக்கான். "
அந்த பெயரை கேட்டதிலே மயில்விழியின் உடல் சிலிர்த்து அடங்க வினோத்திற்கு அவளின் நடுக்கம் உயிர் வரை தீண்டிவிட்டு வந்தது.
" அக்கா அவன் உன்ன என்னக்கா பண்ணான்? "
" ஹர்ஷா எனக்கு இந்த காயத்த மட்டும் குணப்படுத்து... என்ன எதுவும் கேக்காத, "
என்ன தான் மயில்விழி சோர்வுற்று இருந்தாலும் அவள் வார்த்தைகளில் தெரிந்த பிடிவாதத்தின் காரணத்தால் தன் உடன் பிறந்தவளை எப்படியும் சரிகட்ட முடியாதென அறிந்த ஹர்ஷன் கண்கள் மூடி அவளின் தலையைப் பிடித்தான். அவன் கைகள் இரண்டும் மஞ்சள் நிறத்தில் ஒளிர அந்த ஒளி மெதுமெதுவாக அவளின் காயத்தில் படரத் தொடங்கியது.
மெதுமெதுவாய் வினோத்தின் நெஞ்சிலே சாய்ந்த மயில்விழிக்கு வலி மட்டுப்பட ஆரம்பித்தது.
" கொஞ்சம் பொருத்துக்கோ அக்கா... நான் வந்துடுறேன், " என எழுந்து அவர்களுக்கு தனிமை கொடுத்துவிட்டு மயில்லிவிழியின் சமையல் அறைக்குள் நுழைந்தான்.
கண்களை மெல்ல திறந்த மயில்விழி அவள் இமைகள் பிரியவே காத்துக் கிடக்கும் பரமபக்தனாய் இமைக்க மறந்திருந்தவனை கண்டதும் அவளையும் மீறி மென்மையாய் புன்னகைக்க, அவள் தளிர் கரங்கள் அவன் கன்னத்தை மிருதுவாய் வருடியது. தன் கன்னத்தை வருடிய வெண்பஞ்சு விரல்களை பட்டும்படாமல் பிடித்த ஆணவன் அதில் அழுத்தி முத்தம் பதித்தான்.
மேலும் அவளின் இதழ்கள் விரிந்தது. " என்ன காதலே, உனைவிட்டு சென்றிடுவேன் என ஐயமோ? "
அவள் உள்ளங்கையில் தன் முகத்தை புதைத்துக் கொண்டு அதிலே முனகினான். " கனாவிலும் உம் கரத்தை இழந்தால் யான் மாய்ந்துவிடுவேனம்மா... "
குண்டு குண்டு மணியாய் கண்ணீர் துளிகள் அவன் இமை தாண்டி கன்னத்தில் புரண்டோடியது.
" அவ்வாறென்றும் எனை அழைத்துக் கொள்ள வேண்டாமென இறைவியிடம் மன்றாடினாயோ நீ? "
" ம்ம் என்ன தான் என் உடையவள் அனுதினம் இனிக்கும் அமுதென்றிருப்பதால் அவளை அதிகமாக விரும்பி எமக்கு முன் என்னவளை அழைத்திடாதீர் என அவரிடம் தினம்தினம் வாதம் செய்து கொண்டிருக்கிறேன். " என குழந்தை போல் பொய் கோபத்தோடு வினோத் சொல்ல அதை கேட்டு சிரித்த மயில்விழி அவன் நெஞ்சிலே மையல் கொண்டாள்.
ஒரு சில நிமிடங்களில் ஒருவர் மற்றவரின் அருகாமையில் அந்த காதலர்கள் இருவரும் பதைபதைத்த மனதினை அமைதிப்படுத்தினர். ஹர்ஷனும் வெகு நேரம் பின் சிகப்பு நிறத்தில் இருந்த ஒரு நீரை எடுத்து வந்து மயில்விழியிடம் நீட்ட, அதை கண்டு பெருமூச்சுவிட்டாலும் வினோத்தின் முகத்தில் தெரிந்த கலக்கத்தை போக்குவதற்காக மறுக்காமல் அதை வாங்கி குடித்தாள்.
ஹர்ஷன் " டேய் ரிலக்ஸ் ஆய்ட்டல்ல? இனிமே என் கழுத்த கடிக்கிற மாதிரி பாத்து வைக்க மாட்ட தான? " என ஒன்றுக்கு இரண்டு முறை எச்சரிக்கையாக கேட்டுக் கொண்டே இவன் மயில்விழிக்கு சில அடிகள் தள்ளி அமர அவனை கடுப்பாக பார்த்த வினோத்
" எனக்கும் ஒரு காலம் வரும் டா... உன் ஆளு வந்ததுக்கு அப்பரம் நீ மட்டும் என்ன விதிவிலக்கா இருக்கியான்னு பார்க்குறேன். " என அவனை இன்னும் கடிப்பதை போலவே பார்த்துவைக்க பெண்ணவளே அவள் சகோதரனுக்கும் உடையவனுக்கும் இடையே வெள்ளைக்கொடியை அசைத்தாள் சமாதான புறாவாக.
" சரி சரி போதும் ஹர்ஷா அவன் ஒன்னும் செய்ய மாட்டான். நீ வா, "
" சரி நீ இப்போவாவது சொல்லு டி. என்ன ஆச்சு இங்க? "
" கேக்காதீங்கன்னு தானே சொன்னேன்? வேணாம் விடுங்க, "
" அக்கா என்னக்கா? காலைல கூட என்கிட்ட நல்லா தான பேசுன? ஆதவன் கூட இங்க வருவான்னு நினைச்சு தான் நான் முக்கியமா உன்கிட்ட கேட்டேன். ஆனா அந்த நாசமாப் போனவன் எதுக்கு இங்க வந்தான்? "
" டேய் சும்மா இரு டா... நீ வேற ஏன் போனவன இழுக்குற? எனக்கு ஒன்னும் இல்ல விடுங்க. "
மருந்து தந்த தெம்பு அவள் கால்களுக்கும் உதவ வினோத்தின் பிடியில் இருந்து எழுந்து நேராக குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள் அவள். ஹர்ஷன் குழப்பமாக வினோத்தைப் பார்க்க அவனோ தள்ளி ஓடியவளின் மீதே அர்த்தம் பொதிந்த பார்வையைப் பதித்திருந்தான்.
முகத்தில் தண்ணீரை அடித்து கழுவிய மயில்விழி கண்ணாடியில் அவள் முகத்தைப் பார்க்க, மிருதேஷ்வரனின் கைககள் அவள் கழுத்தில் விட்டுச் சென்ற அச்சு அவளைப் பார்த்தது. அதை மெதுவாக தொட்டுப் பார்த்தவள் பின் தலையை சிலிப்பிக் கொண்டு எதுவும் நடக்காதது போலவே குளியலறையை விட்டு வெளியேறினாள்.
ஹர்ஷன் எதுவும் பேசும் முன்பாகவே வினோத்தின் அமைதியான குரல் அவளை அடைந்தது.
" ஏன் எதையோ மறைக்கிற நீ? "
அவள் நின்ற இடத்திலே உறைந்து நிற்க வினோத்தின் கூர்பார்வை அவளை சுட்டெரித்தது. அவன் கேள்விக்கு பதில் தராத அவள் மௌனம் மேலும் வினோத்தின் கோபத்தை கிளறியது.
" நீ அவனுக்காக இறங்கிப் போறது சரியே இல்ல மயில்விழி... அவன் என்னவெல்லாம் செஞ்சான்னு மறந்துட்டியா? "
மயில்விழி சுவருக்குத் தான் காது என எங்கோ பார்த்துக் கொண்டு நின்றாலும் அவன் கேள்வியில் கை முஷ்டியை இறுக்கினாள்.
ஹர்ஷன் " டேய் சும்மா இரு, பழசெல்லாம் ஏன் கேளறுற? "
" நீ இரு ஒரு நிமஷம். சொல்லு டி மறந்துருச்சா உனக்கு? உன்னோட பாட்டி இப்போ உயிரோடையே இல்லாததுக்கு காரணம் அவன் தான்! "
அவன் சொன்ன அடுத்த நொடி மயில்விழி அவனை தீப்பார்வை பார்க்க, வினோத்திற்கு பட்டென கோபம் எங்கோ ஓடீப் போய் ஒளிந்து கொண்டது. அவள் கோவத்தில் இவன் இதயம் ஜெர்க்கடிக்க, ஹர்ஷன் அவனை கேவலமாக பார்த்து மனதுக்குள்ளே காரித் துப்பிக் கொண்டான் ' தேவையா உனக்கு? ' என்ற மைண் வாய்சுடன்.
" நான் எதையும் மறக்கல. எனக்கு எதுவும் மறக்காது. " அவள் உக்ரமாய் ஒவ்வொரு வார்த்தையையும் கர்ஜிக்க வினோத் அவளை சமாதானம் செய்யும் நோக்கில் அவளருகில் வர முயன்றான்.
ஆனால் ஆசை வார்த்தைக்கு உடனே உருகிவிடும் பைங்கிளி அல்லவே அவன் கோவக்காரக்கிளி.
விருட்டென அவனைவிட்டு இரண்டடி நகர்ந்தவள் அருகில் என்றோ அவள் ஆப்பில் வெட்டி கொரித்துவிட்டு மறந்து வைத்த கத்தியை எடுக்க ஹர்ஷன் தன் தமக்கையின் தீவிரத்தை உணர்ந்து அப்படியே சிலை போல் நின்று கொண்டான்.
வினோத்திற்கு பீதியாக மயில்விழி கத்தியை தூக்கிப் பிடித்து அவனை முறைத்தாள்.
" அதப்பத்தி பேசுனா எனக்குக் கெட்டக் கோவம் வருமுன்னு தெரிஞ்சு ஏன் பேசுற? நான் மட்டும் என் சொந்தம் எல்லாரும் கஷ்டப்படுறத பார்த்துட்டு சந்தோஷமாவா இருக்கேன்? "
வினோத் " ஹே செல்லம் பேசி தீத்துக்களாம் டி, கத்திய கீழ வை டா மா, "
" செல்லம் தங்கம்னு கிட்ட வராத! " என அவள் கத்திய கத்தில் அவளவனுக்கு கண்கள் வெளியே வந்து விழும் அளவிற்கு விரிந்தது.
" வார்த்தைக்கு வார்த்தை என்ன கேள்வி கேக்குறியே, இத்தன வர்ஷமாகியும் உன் தங்கச்சிகிட்ட உண்மைய மட்டும் சொல்லாம நீ ஏன் மறச்சு வச்சிருக்க? ஆதவன் உயிரோட இரத்தமும் சதயுமா இருக்குறப்போ அவன் கண்ணு முன்னாடியே அவள வேற ஒருத்தனுக்கு நிச்சயம் பண்ணி வச்சிட்டு வந்து நிக்கிற? "
வினோத் ஏதோ மறுத்துப் பேச முயற்சிக்க அவள் கத்தியை அவன் முகத்திற்கு நேராக உயர்த்தினாள்.
" பேசாத! அந்த கல்யாணம் நடக்கவே நடக்காதுன்னாலும் எப்டி அப்டி ஒரு காரியத்த நீ செய்யலாம்? "
வினோத் அவன் காதலி முன் கைதி போல் நிற்க விழி விரிய நின்றிருந்த ஹர்ஷனுக்கோ எப்போது கோபக்கனைகள் அவன் புறம் திரும்பப் போகிறதோ என மனதில் பயபந்து உருண்டு கொண்டிருந்தது.
' ஐயோ இதுக்கே இந்த கத்து கத்துறா அவன கல்யாணம் மேடை வரைக்கும் இழுத்துட்டுப் போலாம்னு ப்லன் பண்ணோம்னு தெரிஞ்சா என்ன ஆகுமோ? ' ஹர்ஷன் மனதுக்குள்ளே படபடக்க வினோத்திற்கோ அவள் கைகளில் இருந்த கத்தியைவிட்டு கண்கள் அகல மறுத்தது.
" சொல்லு வினோத்! அதே மாதிரி என்ன வேற யாருக்காவது நிச்சயம் பண்ணா நீ ஒத்துக்குவியா? இல்ல உன் மனசு தான் தாங்குமா? "
" மயில்விழி! "
வினோத்தின் பச்சைக் கண்கள் இப்போது தகதகவென எரிய அவன் ஒற்றை உறுமலில் திடுக்கிட்டு அடங்கினாள் மயில்விழி.
கத்தி தானாக கையைவிட்டு நழுவ அந்த உறுமலில் சர்வமும் அடங்கிய மயில்விழிக்கு இதயம் அச்சத்தில் நடுங்கியது. தான் செய்ததை செய்த பின்பே அறிந்த வினோத் அவளின் முகத்தில் தெரிந்த பயம் மற்றும் வலியோடு கன்னத்தை கோலமிட்ட கண்ணீரை கண்டு துனுக்குற்றான்.
" அது... நான்... மயில் "
அவனுக்கு பேச வாய்ப்பளிக்காமல் வேகமாக கண்ணீரைத் துடைத்தவள் தரையைப் பார்த்தபடி, " ஸா...ஸாரி அப்டி...அப்டி சொன்னது தப்பு. நான் சொல்லியிருக்கக் கூடாது. "
வேகமாக உயர்ந்த வினோத்தின் கரம் அவள் இமைத் தாண்டிய கண்ணீரை துடைத்தது. " ஹே ஹே ஒன்னும் இல்லம்மா... நானும் ஸாரி டி... "
அவன் மிருதுவான குரலில் இளகிய மனதை இழுத்துப் பிடித்தவள் வேகமாக பின்னே நகர்ந்தாள்.
" நான் கோவமா தான் இருக்கேன். என்கிட்ட பேசாத. என் தம்பி வாழ்கைய சரி செஞ்சு அவன உன் தங்கச்சி கூட சேத்து வச்சிட்டு வந்து என்ட்ட பேசு. "
காட்டமாய் அவனைப் பார்த்து கூறிய மயில்விழி விருட்டென அவள் அறைக்குள் ஓடிச் சென்று ஒளிந்து கொண்டாள்.
சோகமாக அவள் அறையையே பார்த்திருந்தவனின் தோளை ஹர்ஷன் ஆதரவாகப் பற்றினான். அறை கதவையே பார்ப்பதால் மட்டும் ஏதும் ஆகிவிடாது என்று அவனும் தான் அறிவானே.
வினோத் " என்னாடா இவ இவ்ளோ ஈசியா மாமா வேலைப் பார்க்க சொல்லீட்டுப் போய்ட்டா? நான் என்ன டா பண்ணுவேன்? "
" இருவது வர்ஷமா எத பண்றியோ அதையேத் தான்... வா, "
" டேய்... "
" கொஞ்ச நேரம் அக்காக்கு ரிலக்ஸாக டைம் குடு மச்சான். அவளே ஃபோன் பண்ணி கூப்டுவா அப்போ வந்து தயவுசெஞ்சு நாழு அடி வாங்கிக்கோ அப்பரம் அவளே உன்ன விற்றுவா... " என எப்படியோ ஏதேதோ சமாதானம் கூறி மயில்விழியின் அறை கதவையே பார்த்திருந்தவனை இழுத்துச் சென்றான்.
ஆதவனின் வெண்மதி அவளா...
DhiraDhi ❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro