Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

கேள்விகள் ஆயிரம்: 15

அத்யாயம் 15: கேள்விகள் ஆயிரம்

கண்களை மெல்ல திறந்த மதியின் முன் குற்ற உணர்ச்சியோடு அவள் கைகளைப் பிடித்தபடி அமர்ந்திருந்தான் சித்தேஷ். அவளின் கண்மணிகள் அசையும் போதே கரங்களை இறுக்கிப் பிடித்த சித்தேஷ் நிமிர்ந்து அமர அவன் பின் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்த காலாவும் கட்டில் அருகில் வந்தான்.

காலா " பாப்பா இப்போ எப்டி டா இருக்க? "

" எனக்கு என்ன ஆச்சு அண்ணா? "

" உனக்கு அந்த பெயின் வந்த கொஞ்ச நேரத்தில நீ மயங்கீட்ட மதி, "

" மயங்கீட்டேனா...? எவ்ளோ நேரமா அண்ணா நான் மயக்கத்துல இருக்கேன்? "

" ரொம்ப நேரம் இல்ல... ஒரு அரைமணி நேரமா... "

" நீ ஏன் அண்ணா என்ன எழுப்பல? "

" நான் எழுப்பலாமுன்னு தான் இருந்தேன். மச்சான் தான் உனக்கு ரெஸ்ட் வேணும்னு சொல்லீட்டு உன் கையப் புடிச்சிட்டு அப்படியே உக்காந்துட்டாரு, " என தோளை குலுக்கியவனிடமே மதியின் பேச்சு இருக்க அவள் கண்கள் அவளை நேராக பார்க்க இயலாமல் நின்றிருந்த இளவரசன் மீதே இருந்தது.

" அதுக்கப்பரம் என்ன ஆச்சுன்னு கேட்டியா அண்ணா? "

" மச்சான் நீ எந்திரிக்காம சொல்ல மாட்டேன்னு சொல்லீட்டாரு டா மதி, "

இவ்வாறு அனைத்தையும் சாதாரணமாக புட்டுபுட்டு வைத்தவனை சித்தேஷ் பாவமாக பார்க்க காலாவோ அவனுக்கு கண்ணடித்தான்.

பெருமூச்சோடு அவள் அருகில் இருந்து எழுந்த சித்தேஷ் அவர்கள் ஒன்றிணைந்து இருந்த கரங்களை பார்த்தபடி மன்னிப்பு கேட்டான்.

" எம்மை பொருத்தருளும்... எம் மனவலியை தம்மை பாதிக்க யான் அனுமதித்திருக்கக் கூடாது... அத்தகைய வலியை தம்மை அனுபவிக்க வைத்தமைக்கு எம்மை பொருத்தருளும்... "

" உங்க பெர்மிஷன் கேட்டுத் தான் அது அப்போ எனக்கு வந்துச்சா? "

முதலில் அவள் கேள்வியில் விழித்தவன் பின் வேகமாக இல்லை என தலையசைக்க, அவர்களின் கரங்களை பார்த்துக் கொண்டே

" அப்போ இயற்கையா நடக்குறதுக்கு நீங்க ஏன் ஸாரி கேக்கனும்? "

மதி கண்களை சுருக்கி கேட்ட அழகில் அவன் வாயடைத்து நிற்க காலா இதை எதிர்பார்த்தது போலவே தோளை குலுக்கிவிட்டு மதியின் மறுபுறம் வந்து அமர்ந்தான்.

" இவ்ளோ கஷ்டமா இருக்குறப்போ...ஏன் அத செஞ்சீங்க? எப்டி இத்தன வர்ஷமும் இந்த வலிய தாங்கிக்கிட்டு இருந்தீங்க? "

சித்தேஷ் அவர்களின் இணைந்திருந்த கரங்களைப் பார்க்க தன் மறு கரத்தால் அதை மென்மையாக தட்டிக் கொடுத்த மதி பதிலுக்காக காத்திருந்தாள்.

" செய்யவேண்டிய நிலை... அன்று அதையடுத்து வேறு வழி பார்க்க இயலவில்லை... வெண்மதியின் மரணத்தில் சித்தத்தை இழந்த ஆதவனை மேலும் ஒரு நொடியேனும் நான் அவ்வாறு செய்யாதிருந்தால் அவனது அழல் அருகிலிருந்தோர் உயிரை குடித்திருக்கும்... அன்று தொடங்கி மாயலோகம் ஆதவனையும் மதியையும் இழந்து என்னொருவனது பாதுகாப்பிலே இருக்கிறது. "

காலா " இந்த ஆதவன் வெண்மதி இவங்க இரெண்டுப் பேரும் உங்க உலகத்துக்கு சூரியனாகவும் சந்திரனாகவுமே வாழ்ந்து இருக்கப்போ அவங்க இல்லாம எப்டி இந்த உலகம் இன்னும் நிலையா இருக்கு? "

சித்தேஷிற்கு பதிலாக மதியிடம் இருந்து பதில் வந்தது.

" இங்க செயற்கையான சூரியனும் சந்திரனும் இருக்குறதால தான் அண்ணா. மஞ்சள் சூரியன் அப்பரம் கருப்பு நிலா... "

" கருப்பு நிலாவா? "

" ஆம்... மஞ்சள் கதிரோனும் கருநிலவும் ஆதவனை நித்திரையில் ஆழ்த்தியதும் நிலத்தில் சிதறியிருந்த அவனது எஞ்சிய சக்திகளால் உருவானது. "

சகோதரர்கள் இருவரும் உன்னிப்பாக கதையை கவனிக்க சித்தேஷும் விட்ட இடத்தில் இருந்து கதையைத் தொடர்ந்தான்.

" அவனை அவ்வாறு அடைத்தப் பிறகு மிருதேஷ்வரனின் கொடூர கொலையாட்டத்தில் மறைந்த மாயலோக வாழ்வியலை நிலைப்படுத்தவும் நூறாண்டுகள் மேலானது... பிற உயிர்களின் உதவியோடு ஒளிவேந்தர்கள் மாயலோகத்தைப் புதிப்பித்தனர். ஆதவன் இருவது வருடம் முன்பு கண்விழித்தப் பின் அவனையும் என் இளவல்களிடத்தில் அனுப்பினேன். "

மதி " இரெண்டாயிரம் வர்ஷத்துக்கு எழுந்திரிக்காத மனுஷன் எப்டி இருவது வர்ஷம் முன்னாடி எந்திரிச்சாரு ஹீரோ? "

" வெண்மதி ஈராயிரம் ஆண்டுகள் பின் வெண்ணிலா என்ற நாமத்தோடு மானிடத்தியாய் பூவுலகில் உயிர் பெற்றதால். "

பெயரைக் கேட்ட அடுத்த நொடி மதியின் கண் முன் பூ போல் சிரித்த பெண்ணொருத்தியின் முகம் படம் போல் தோன்றி மறைய " அடடே ஹீரோயினும் பொறந்தாச்சா? " கால் மேல் கால் போட்டுக் கொண்டு அவன் டைரி பக்கங்களைத் திருப்பிக் கொண்டிருந்த காலாவிற்குத் தான் கதை கேட்க கேட்க ஆர்வமாக இருந்தது.

மதி " இப்போ...இப்போ நாம என்ன பண்றது? "

" காத்திருப்போம்... வெண்ணிலா அவள் பிறப்பின் அர்த்தத்தை உணர்ந்து தாம் மாயலோகம் வந்தது போலே மீண்டு வர வேண்டும். தாம் இந்த ஞாலத்தையும் எம் மக்களையும் என்னையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதற்கு எத்தனை வருடம் வேண்டுமானாலும் தாம் எடுத்துக் கொள்ளலாம். " என முகத்தில் ரியக்ஷனே இல்லாமல் கூறியவனை மதியும் காலாவும் ஙவென பார்த்தனர்.

காலா " மதி பாப்பா உன் ஆளு சைடு கேப்புல ப்ரொப்போஸ் பண்றாரா என்ன? "

மதி அவனையும் ஒரு மாதிரி பார்த்து வைக்க, சித்தேஷின் காதுகள் திடீரென அசைந்தது. திறந்திருந்த ஜன்னல் வழியே எதையோ திரும்பி பார்த்தவன் எழுந்து நின்று " மதிய உணவிற்கு யாரையேனும் அனுப்பி வைக்கிறேன். தாம் தற்போது ஓய்வு கொள்ளுங்கள். தமது தமையனாருக்கு தனி அறை அமைக்க கூறட்டுமா? "

காலா " நோ நோ மச்சான் நான் கிளம்பீடுவேன் எனக்கு இன்னும் வேலை இருக்கு... "

சித்தேஷ் அதற்கு தலையசைத்துவிட்டு மதியை ஒரு முறை பார்த்தப்பின் அவர்களிடம் இருந்து விடைப்பெற்றுக் கொண்டான்.

திருவிழாவில் தொலைந்த குழந்தை போல் அவன் சென்று மறைந்த கதவையே பார்த்திருந்த மதியை பார்த்து புன்னகைத்த காலா

" மதி என்ன டா? அமைதியா இருக்க? "

ஏதோ மந்திரத்தில் இருந்து விடுப்பட்டது போல் அவன் குரலில் தெளிவடைந்தவள் இன்னும் பாவமாக முகபாவத்தோடு அவனை பார்க்க

" அண்ணா எனக்கு ஒன்னுமே புரியல டா... "

" எல்லாம் போகப்போக உனக்குத் தானா புரியும்... இந்த உலகம் நமக்கு கொஞ்சம் புதுசா இருந்தாலும் கொஞ்சமே கொஞ்சம் தெரிஞ்சது தான். "

" அப்போ இந்த மாயலோகம்... "

" ஆதவமதியோட சரித்திரமே அண்ணி எனக்கு ரொம்ப முன்னாடி சொன்ன ஒரு சின்ன கதை... அது இவ்வளவு ஆழமா இருந்துருக்குன்னு எனக்குத் தெரியல, "

" அப்போ அந்த பொண்ணு வெண்மதி? முக்கியமா நான்? மச்சான் மச்சான்னு வேற நீ அவர ஏத்திவிட்டுட்டு இருக்க? " என மதி படபடக்க

" ஒன்னும் இல்ல டா... வெண்மதி மச்சான் சொன்ன மாதிரியே இந்த மாயலோகத்தோட மதி. உனக்கு ஒரு தங்கச்சின்னு வச்சிக்கோயேன். "

" நானே உனக்குத் தங்கச்சி, எனக்கு ஒரு தங்கச்சியா? டேய் அண்ணா நான் நம்புனதுக்கு அப்பரம் மாத்திப் பேச மாட்டல்ல? எனக்கே எனக்குன்னு ஒரு தங்கச்சியா?! "

" உனக்கே உனக்கு மட்டும் இல்ல. உனக்குத் தங்கச்சின்னா எங்க எல்லாருக்கும் தங்கச்சி தான், அத அப்பரமா பார்த்துக்குவோம் நீ மச்சான் கூட இங்கேயே இரு. "

மீண்டும் மதியின் கண்கள் விரிந்தது.

" ஏதே? அப்போ நீ என்ன கூட்டீட்டுப் போ மாட்டியா? "

காலா வாய் திறப்பதற்குள்ளாகவே கதவைத் திறந்து கொண்டு எங்கிருந்தோ குதித்த தீரா

" உன்ன இங்க வர வைக்க இரெண்டு வர்ஷமா நான் படாதபாடு பட்டுட்டு இருக்கேன் நீ என்னன்னா வந்த இரெண்டு நாள்ள போறேங்குற? அதெல்லாம் போகக் கூடாது பப்பிமா நீ! "

" அடியேய் உன்னத் தான் தேடீட்டு இருந்தேன்? என்ன சர்கஸுல டி என்ன மாட்டி விற்றுக்க? " என மதி பொரிய வாயெல்லாம் பல்லாக காலா அவளை நோக்கி கையசைத்தான். " ஹாய் அண்ணி எப்டி இருக்கீங்க? "

மதிக்கு பதிலடி கொடுக்க வந்த தீரா இந்த புது முகத்தை கண்டு ஸ்தம்பித்தாள்.

" யார்ரா நீ? என் கதைல எனக்கேத் தெரியாம? இவ்ளோ அழகான பையன நான் கவனிக்காம இருந்துருக்க மாட்டேனே? "

" என்ன அண்ணி என்ன அடையாளம் தெரியலையா? நான் தான் உங்க காலா, "

" காலாவா? ஆமா நீ ஏன் என்ன அண்ணின்னு கூப்புடுற? "

" அதெல்லாம் அப்டித்தான். சரிங்க அண்ணி நீங்க என் தங்கச்சியப் பார்த்துக்கோங்க எனக்கு நிறைய வேலை இருக்கு. நான் கிளம்புறேன் மதி. "

" ஹே மேன் யாரு டா நீ? அடேய் நில்லு நில்லு! " என தீரா கத்திக் கொண்டிருந்த போதே காலா அவர்களுக்கு டாட்டா காட்டிவிட்டு காற்றோடு காற்றாய் மறைந்துவிட்டான். " பப்பிமா யாரு பப்பிமா இவன்? "

" என் அண்ணன் தான் அவன விடு நீ என்ன டி பாப்பு என்னென்னமோ பண்ணி வச்சிருக்க? "

அவளைப் பார்த்து இளித்த தீரா மதி அவளைப் பிடிக்கும் முன்பாக " இரு பப்பிமா யாரோ என்ன கூப்புடுறாங்க நான் பார்த்துட்டு வந்துடுறேன். " என சிட்டாகப் பறந்துவிட்டாள்.

பெருமூச்சோடு மெத்தையில் பொத்தென அமர்ந்த மதி அப்படியே கண்கள் மூடி படுத்துவிட்டாள்.

#

மதிய வேளை நேர பாடங்கள் ஆரம்பமாகியிருக்க கழிவறை சென்ற தோழியை காணாமல் கல்லூரி வளாகத்தில் அலைந்து கொண்டிருந்தாள் இசை.

" இவளுக்கு கைல ரிங்க மாட்டி விட்டதும் மாட்டுனாங்க இவ என் தலையை உருட்டிவிட்டுட்டு சுத்தீட்டு இருக்கா? இப்போ எங்கப் போனாளோ தெரியலையே... அடியே நிலா எங்க டி இருக்க? "

இவள் பொலம்பலுக்கு காரணமான நிலாவோ அவர்கள் துறையினர் அனைவரும் இருக்கும் கட்டிடத்தின் மொட்டை மாடியில் சூரியனை வெறித்துக் கொண்டு நின்றிருந்தாள்.

காரணமில்லாமல் ஒரு ஜோடி கண்களும் அவளுக்கு வெகுவாகவே தெரிந்திடாத அவள் அண்ணன் நண்பனின் முகமும் அவளை இம்சித்துக் கொண்டிருந்தது.

நிலா ஏதோ நினைவு வந்தது போல் அவள் புறங்கையை பார்க்க, அழகாய் மின்னிய அந்த பெரிய கல் பதித்த வைர மோதிரம் பார்க்க பார்க்க அவளுக்கே ஏதோ போல் தோன்றத் தொடங்கியது. நிலாவின் மனதிற்கு இவை எதுவும் சரியாகப்படவில்லை.

நிச்சயம் முடித்து திருமண தேதியே நிச்சயிக்கப்பட்டதும் என்ன செய்வாய் என விதி அவளைப் பார்த்து சிரிக்க, அமைதியாலே வெற்றியை ஈட்டும் நிலாவின் விடாமுயற்சி பழகிய குணம் பிடிவாதமாய் மாற தயாராகியதை அவள் அறியவில்லை.

#

அந்த உயர்ரக அலுவலகத்தின் பார்வையாளர்கள் அறையில் பொருமையின்றி ஆதவனுக்காக காத்துக் கொண்டிருந்தான் வினோத். ஆனால் எத்தனை முறை அழைத்தாலும் அவர்களின் நண்பன் அழைப்பையும் ஏற்கவில்லை, ஆபீஸுக்கே வந்திருப்பவனை நேரில் வந்தும் பார்க்கவில்லை.

வினோத் கடந்த ஒரு மணி நேரத்தில் நான்காவது முறையாக ஆதவனுக்கு அழைத்தபோது திடீரென அழைப்பு ஏற்கப்பட, இவன் திடீரென அட்டெண் செய்ததால் தடுமாறிய வினோத் வாய் திறப்பதற்குள் அந்த பக்கம் ஆதவன் சரவெடியாய் வெடிக்கத் தொடங்கினான்.

" என்ன டா வேணும் உனக்கு? நான் ரொம்ப முக்கியமான வேலையா வெளியூர் வந்துருக்கேன். இப்போவெல்லாம் பேச முடியாது! ஆயிரத்தெட்டு வேலை கிடக்கு எனக்கு தலைமேல! கேட்டா கேழு இல்ல அங்கேயே இரு! எனக்குத் திரும்ப ஃபோன் பண்ணாத! என்னத் தேடாத! "

அழைப்பு தானாக துண்டிக்கப்பட பாவமாய் தன் செல்பேசியை பார்த்தான் வினோத்.

" நான் என்ன பெரிய தப்பு பண்ணீட்டேன். ஆளாளுக்கு என்ன கரிச்சு கொற்றானுங்க, "

ஆதவனின் வெண்மதி அவளா...

DhiraDhi ❤

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro