காதலை மறைக்கும் கோபம்: 17
அத்யாயம் 17: காதலை மறைக்கும் கோபம்
தப்பி ஓடிய ஆதவனத் தேடி அலைந்து கொண்டிருந்த நண்பர்கள் இருவருக்கும் ஏகப்பட்ட விடையறியா கேள்விகள் மூளையை வட்டமடித்துக் கொண்டிருந்தது.
இவர்களுக்கு பதிலே கிடைக்காதது போல் ஆதவனும் இவர்களின் பிடியிலிருந்து விலகி ஓடிக் கொண்டே இருக்க வேறு வழியே இல்லாமல் நான்காவது நாள் மயில்விழியின் காலிலே விழுந்தனர்.
ஹர்ஷன் " அக்கா முடியலக்கா! அந்த பாலாப்போனவன் ஒரு இடத்துல கூட நிக்க மாற்றான்க்கா! "
வினோத் " எங்களால முடியல டி... ப்லீஸ் டி! கண்டகண்ட வார்த்தைல பேசுறான் இல்லனா தூக்கிப் போட்டுட்டு போயிடுறான், அவனுக்கு எல்லாம் நியாபகம் வந்துருச்சாம், ஐயோ என்ன எழவுன்னே புரியல தங்கம், "
கதிரை ஒன்றில் அமர்ந்திருந்த மயில்விழி தன் காலில் விழுந்திருந்த தன் துணைவனையும் சகோதரனையும் சலிப்போடு பார்த்துவிட்டு அவள் செல்பேசியை எடுத்து அமைதியாக ஆதவனுக்கு அழைப்புவிடுத்தாள்.
" என்ன சத்தத்தையே காணும்? " என வினோத்தும் ஹர்ஷனும் தரையிலிருந்து தலையை மட்டும் தூக்கிப் பார்க்க, தன் நகங்களை கூராக்கிக் கொண்டே அழைப்பு ஏற்கப்பட வேண்டி காத்துக் கொண்டிருந்தவளைப் பார்த்ததும்
" நாங்க ஓராயிரம் தடவ ஃபோன் பண்ணியும் எடுக்கல நீ இப்போ பண்ணா எடுத்துருவானா? " என ஹர்ஷன் அவளை கேட்க
வினோத் " ஆமா பன்னு அந்த அறிவுகெட்டவன் நம்ம ஃபோனெல்லாம் எடுக்க மாட்டான். வேற எதாவது பண்ணு, "
தரையில் படுத்துக் கொண்டு தலையை ஒரு கையால் தாங்கியபடி தனக்கு அறிவுரை சொல்லிய இருவரையும் அப்போதும் அவள் அமைதியாகப் பார்க்க, மயில்விழியின் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் அந்த அழைப்பு ஏற்கப்பட்டது.
" ஆதவா... "
ஆண்கள் இருவரும் அதிர்ச்சியாக தலையைத் தூக்கிப் பார்க்க ஸ்பீக்கரை ஆன் செய்த மயில்விழி
" நான் மயில்விழி பேசுறேன், "
நீண்ட அமைதிக்குப் பின் ஆதவனிடம் இருந்து பதில் வந்தது.
" சொல்லு அக்கா, "
" சூப்பர் நான் பேசுறது ரொம்ப நல்லா உனக்குக் கேக்குது. நீ மும்பைல தான் இருக்கன்னு எனக்குத் தெரியும். ஒழுங்கா பத்து நிமிஷத்துக்குள்ள நீ வீட்டுக்கு வரனும். இல்லனா நான் அங்க இருப்பேன். "
அதற்குமேல் எதுவும் பேசாமல் அழைப்பைத் துண்டித்த மயில்விழி புருவத்தை உயர்த்தி அவள் காலில் விழுந்து கிடந்தவன்களை பார்க்க " நீங்க பலே கில்லாடி தான் எஜமானி! " என அவளுக்கு கும்புடு போட்டு எழுந்து நின்றனர்.
" மிரட்டுனதெல்லாம் சரி... அவன் கண்டிப்பா வந்துருவான் தானக்கா? "
மயில்விழி தலையசைத்துவிட்டு சமையல் அறைக்குள் நுழைந்து கொள்ள எண்ணி பத்தாவது நிமிடம் கதவைத் திறந்து கொண்டு மெதுவாக உள்ளே வந்தான் ஆதவன்.
சமையல் அறையிலிருந்து தேனீர் மற்றும் குலம்பிகளோடு வந்த மயில்விழி ட்ரேவை டேபில் மீது வைத்துவிட்டு ஆதவனை இழுத்து சோபாவில் அவளருகிலே அமர்த்திக் கொண்டாள்.
" எல்லாரும் அவங்கவங்க கப்-அ எடுத்துக்கோங்க, "
ஆண்கள் மூவரும் அவஸ்த்தையாய் தரையை பார்த்துக் கொண்டே இருக்க, மயில்விழி மீண்டும் அழுத்திக் கூறினாள்.
" கப்-அ எடுத்துக்கோங்க. "
தானாக மூன்று கப்புகளை பட்டென அவன்கள் மூவரும் தூக்கிய பின்னே மயில்விழி முகத்தில் கீற்றென புன்னகை விரிந்தது.
" சரி இப்போ பேசலாம்... சொல்லு ஆதவா, ஏன் திரும்ப ஓடி ஒழிஞ்சிட்டு இருக்கியாம்? ஏன் அவனுங்க பேசுறத கேக்க மாற்றியாம்? "
எல்லாம் தெரிந்தும் தெரியாதது போல் கேட்பவளையும் அவன் முறைத்து வைக்க, அங்கிருந்த நாழ்வருக்குமே தெரியும் ஆதவனின் எந்த முறைப்பும் மயில்விழியிடம் எடுபடாதென்று.
" சொல்லு ஆதவா... அவனுங்களும் கேட்டுக்கட்டும், "
பெருமூச்செடுத்த ஆதவன் டீ கப்பை பார்த்துக் கொண்டே பேசத் தொடங்கினான்.
" நான் இப்போ இங்க பக்கத்துல இருக்குறது சரி இல்ல... "
" யாரு பக்கத்துல? தெளிவா சொல்லுப்பா, எல்லாரும் கேட்டுட்டு இருக்கோம்ல, "
ஆதவன் அவளை முறைத்தாலும் மீண்டும் தொடர்ந்தான்.
" அவ பக்கத்துல இருக்க நான் விரும்பல... நான் இந்த நேரத்துல இருக்குறது சரியும் இல்ல... எனக்கு இன்னும் நிறைய வேலை இருக்கு. "
வினோத் " ஆதவா... நிலாவ பத்தி உன்கிட்ட இருந்து நாங்க மறச்சது தப்பு தான்... ஆனா நீ அவள தண்டிக்கிறது...
" என்னப்பத்தி ஒன்னும் தெரியாத அவளுக்கு எப்டி இது தண்டனையாகும்? அவள காதலிச்சதுக்கு நான் தான் தினம் தினம் இத்தன வர்ஷமாகியும் தண்டனை அனுபவிச்சிட்டு இருக்கேன். "
அமிலமாய் ஆதவனின் வார்த்தைகள் அவர்களின் மனதை சுட, அவர்களுக்கு வலித்தாலும் பரவாயில்லை என வீம்பாக நின்றான் அந்த கல்நெஞ்சன்.
" ஒரு வாழ்நாள் முழுக்க அவள நினைச்சு நான் என்னையும் தொலச்சு அவளையும் தொலச்சு என்ன சுத்தி உள்ள எல்லாத்தையும் தொலச்சது போதும். அந்த கொடூரமான நரகம் எனக்கு வேண்டாம். அவளும் எனக்கு வேண்டாம். "
ஹர்ஷனும் வினோத்தும் பேச மறந்ததை போல் அப்படியே அமர்ந்திருக்க அவன் கண்களில் கொதிக்கும் தீயையும் வார்த்தையில் தெறித்த வெறியையும் உள்வாங்கிக் கொண்டிருந்த மயில்விழி
" சரி... உன் இஷ்டப்படியே நிலா உனக்கு வேண்டாம். இந்த முறை நிலா மனுஷியா மட்டும் தான் பிறந்துருக்கா அவளுக்கு உன் மேல எந்த ஃபீலிங்ஸும் வராது. அவளுக்கு கூட வேற கல்யாணம் பண்ணப் போறாங்களே, "
வினோத் கூட இப்போது தன்னவளை அதிர்ச்சியோடு பார்த்தான். நிலா ஆதவனுக்காய் பிறந்தவள் என்பது எழுதப்படாத சட்டம். அதை மாற்ற நினைப்பது நடக்கும் காரியமா?
" நிலா உனக்கு முக்கியம் இல்லன்னாலும் மாயலோகத்த பாதுகாக்குறது உன்னோட பொருப்பு. மிருதேஷ்வரனையும் சீக்கிரம் அழிக்கனும்ல, " மயில்விழி அவனுக்கு பாய்ன்ட்டு எடுத்துக் கொடுப்பது போலவே எடைப்போடும் பார்வையுடன் அமர்ந்திருக்க, ஆதவனும் சலைக்காமல் சலனமின்றி தலையசைத்தான்.
" அவன அழிக்கிறது மட்டும் தான் இப்போ என் குறிக்கோள். "
" சரி அப்படியே இருக்கட்டும் இனிமே நாங்க யாரும் உன்ன நிலா கூட சேர்த்து வைக்க எதுவும் பண்ண மாட்டோம். நீ தயவுசெஞ்சு ஓடி ஒளியுறத நிறுத்திக்கோ ஆதவா... "
ஆதவன் தன் அக்காவைப் பார்ப்பதை தவிர்த்துவிட்டு வார்த்தைகளை இழுக்க " இல்ல... நான் கொஞ்ச நாள் அப்டியே... "
" அப்டியே போறேன்னு சொல்லீட்டு உன் வீட்டுக்குள்ள தான இருக்கப் போற? அதுக்கு பதிலா நிலா கல்யாணத்துக்கு போய் இவனுங்களுக்கு ஹெல்ப் பண்ணு. ஆல்ரெடி வினோத் கேட்டுக்குட்ட மாதிரி அவன் ஃப்ரெண்டா மட்டும் போய் நில்லு... அவளுக்கு வேற கல்யாணம் நடக்குறதுல தான் உனக்குப் பிரச்சனை இல்லல்ல அப்பரம் என்ன டா தம்பி போயிட்டு வாயேன், "
முடியவே முடியாது என்ற தோரணையில் ஆதவன் வீம்பாய் இறுகிய முகத்தோடு அவன் அக்காளைப் பார்க்க, அவள் மட்டும் சலைத்தவளா என்ன?
மயில்விழியும் ஆதவனும் நேருக்கு நேர் பார்த்துக் கொண்டே அமர்ந்திருக்க, ஐந்து நிமிட அமைதிக்குப் பின்னும் சலைக்காத அவள் கண்களைவிட்டு தலையைத் திருப்பிய ஆதவன் மெதுவாக தலையை மட்டும் ஆட்டினான்.
" அம்புட்டு தான் என் வேலை முடிஞ்சிது. கிளம்புங்க எல்லாரும், " மயில்விழி வேலை முடிந்ததாய் அவளுக்கும் இவன்களுக்கும் சம்மந்தம் இல்லாதது போல் எழுந்து சென்று விட, வினோத் மனதுக்குள்ளே அவன் மனையாளை மெட்சிக் கொண்ட அதே நேரம் ஹர்ஷன் ஹப்பாடா என பெருமூச்சுவிட்டான்.
இதற்கு மேல் தப்பித்து செல்ல முடியாதென அறிந்த ஆதவனும் தன் நண்பர்கள் இழுத்த இழுப்புக்கு நடந்தான்.
அதுவே இரண்டு வாரம் களித்து மீண்டும் அவனை நிலாவின் முன் அன்று மாலையே நிறுத்தியது.
கல்லூரி நேரம் முடிந்ததும் ஹர்ஷனே சென்று நிலாவை காரில் அழைத்து வர என்றும் அவள் நச்சரிப்பது போல் பூக்கடைக்கு கூட அழைக்கவில்லையே என ஹர்ஷன் யோசித்துக் கொண்டே தான் வந்தான். நிலா பேச்சற்று சாலையில் கடந்து செல்லும் வாகனங்களை பார்த்தபடி அமைதியாக வந்தாள்.
" நிலா என்ன ஆச்சு உனக்கு? "
" சும்மா தான் அத்தான், "
ஹர்ஷனும் நிலாவின் நடவடிக்கைகளை ஒரு வாரமாக பார்த்துக் கொண்டு தான் இருக்கிறான். அம்பிகா பாட்டியிடம் கூட பேசுவதை நிறுத்திக் கொண்ட நிலா அவள் அறையே கதியென தான் கிடந்தாள். அவள் கல்லூரியிலும் உயிர்ப்பில்லாமலே சுற்றிக் கொண்டிருப்பதாக தெரிவித்துவிட்டு ஒழுங்கு மரியாதையாக இந்த திருமணத்தை நிறுத்த வேண்டியும் இசை இவனுக்கு தனியாக கொலை மிரட்டல் விடுத்துக் கொண்டிருந்தாள்.
" நிலா... எதாவது ப்ராப்லமா? நான் வேணும்னா வினோத்-அ ஃபோன் பண்ணி வர சொல்லவா? இல்லனா இசைய வீட்டுக்கு வர சொல்லட்டுமா? "
" வேணாம் அத்தான்... நான் நல்லா தான் இருக்கேன். "
கண்களில் உயிரே இல்லாமல் அவள் உதிர்த்த வார்த்தைகளிலும் உயிர் தெரியவில்லை.
சரியாக வீட்டிற்குள் ஹர்ஷனின் கார் நுழைய, மறுபேச்சின்றி நிலா கீழே இறங்கி வீட்டிற்குள் நுழைந்தாள். தரையைப் பார்த்துக் கொண்டே வந்தவள் திடீரென தடைப்பட்டு ஒரே இடத்தில் நிற்க, அவள் நிமிர்ந்த பார்த்த அந்த நேரம் நிலாவின் கருவிழிகள் அவனை கண்டுகொண்டது.
ஏதோ கலகலத்து பேசிக் கொண்டிருந்த ஷேஷாவின் அருகில் அவன் பேசுவதையெல்லாம் கேட்டுக் கொண்டு அமர்ந்திருந்த ஆதவனின் கண்கள் தானாகவே அவளின் புறம் நகர, அவனை நேர் கோட்டில் கட்டி இழுத்த அவள் கண்களை கண்டதும் ஒரு பெயர் தெரியா கோவம் அவன் முகத்தை ஆட்கொண்டது.
துணுக்குற்ற நிலா அவன் சட்டென முகத்தைத் திருப்பவும் கண்களை சுருக்கினாள்.
அவள் பின்னோடே வந்த ஹர்ஷன் ஆதவன் வெடுக்கென முகத்தைத் திருப்பிக் கொண்டதை கவனித்தவன் தலையிலே அடித்துவிட்டு அசையாமல் அவனைப் பார்த்துக் கொண்டே நின்ற நிலாவை உலுக்கினான்.
" நிலா என்ன டா? "
" ஒன்னும் இல்ல அத்தான்... நான் ரூமுக்கு போறேன். " என ஹர்ஷனிடம் கூறிவிட்டு ஆதவனைத் தாண்டிச் செல்லும் போது பொதுவாக எப்போதும் போல் " வாங்க, " என கூறிவிட்டு அவள் நகர, அதை காதிலே வாங்காமல் தன் செல்பேசியில் தன் தலையை புகுத்திக் கொண்டான் அந்த கதிராளன்.
அதை அவளே அறியாமல் கடைக்கண்ணால் கவனித்த நிலாவின் மனதில் ஏதோ மாற்றம் ஏற்பட்டது. ஆனால் திடீரென கேட்ட கௌஷிக்கின் குரல் நிலாவை அந்த உணர்வில் வெளியே இழுத்துக் கொண்டு வந்தது.
" ஹாய் நிலா வந்துட்டியா? வா வா, நானும் இப்போ தான் வந்தேன். ஹே கொஞ்சம் ஒரு கப் காஃபீ போட்டுக் குடேன், நீ நல்லா காஃபீ போடுவன்னு உங்க பாட்டி சொன்னாங்க. வா வா நான் இப்போ பாக்குறேன் நீ எப்டி காஃபீ போடுறேன்னு, "
எங்கிருந்தோ வந்த கௌஷிக் நம் நாயகிக்கு பேச வாய்ப்பே கொடுக்காமல் அவளை சமையலறைக்குள் தள்ளிவிட்டுவிட்டு தான் மீண்டும் ஹாலுக்கே வந்தான்.
கௌஷிக் புதிதாக இருந்த ஆதவனை பார்த்துவிட்டு சாதாரணமாக கேட்டான். " ஹாய் பாஸ் ஆமா யார் நீங்க? "
தன் செல்பேசியில் இருந்து அப்போதே அவனை கவனிப்பதை போல் நிமிர்ந்த ஆதவன் " வினோத் ஃப்ரெண். ஹெல்ப்க்காக வந்துருக்கேன். ஆதவன், " என சொல்லிவிட்டு மீண்டும் அவன் செல்பேசியைப் பார்க்க அவன் அருகிலிருந்த ஷேஷா கௌஷிக் அருகில் வந்ததுமே அவன் ரேடியோவை ஆஃப் செய்ததை அவனும் கவனித்தான்.
" ஓஹோ... ஆனா பெருசா உங்கள பார்த்ததே இல்லையே... ஹ்ம் குட் குட், உங்களுக்கும் காஃபீ வேணுமா? இருங்க நான் உங்களுக்கும் காஃபி சொல்றேன். நோ நோ ப்லீஸ் வேணாம்னு சொல்லதீங்க, கண்டிப்பா எங்க வீட்டுக்கு வந்துட்டு நீங்க காஃபீ குடிக்காம போகக் கூடாது. நிலா ஆதவனுக்கும் ஒரு கப் காஃபி, "
தன் தாராள மனதை ஆதவனின் தோளைத் தட்டி உலகுக்கு காட்டிக் கொண்டிருந்த கௌஷிக்கை ஹர்ஷன் ஏறஇறங்க பார்த்துக் கொண்டிருக்க, கொஞ்சம் கொஞ்சமாக ஆதவனின் முகம் இறுகியதை அந்த தாராள மனம் கொண்டவன் அறியவில்லை.
ஷேஷா அமைதியாக கௌஷிக்கையும் ஆதவனையும் பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்க, பாதகமில்லாமல் அனைவரையும் காப்பாற்றுவதற்காக தன் தலையை அடமானம் வைக்க முடிவெடுத்த ஹர்ஷன் கௌஷிக்கின் அருகில் போய் அமர்ந்தான்.
அவனை பார்த்ததுமே கௌஷிக் மீண்டும் ஏதோ கத்தப் போக, கை உயர்த்தி அவனைத் தடுத்த ஹர்ஷன் " போதும் உன் தாராளபிரபு மனச உன்னோட நிறுத்திக்கோ. எனக்கு எதுவும் வேணாம், "
கௌஷிக் தோளை குலுக்கிவிட்டு ஆதவனிடம் ஏதோ கேட்க திரும்ப அங்கிருந்து சட்டென எழுந்து கொண்ட ஆதவன் " ஒரு காள் பேசனும்... எக்ஸ்யூஸ் மீ, " என யாரையும் பார்க்காமல் கூறிவிட்டு விருவிருவென நடந்து தோட்டத்தின் பக்கம் சென்றுவிட்டான்.
ஆதவனின் வெண்மதி அவளா...
DhiraDhi ❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro