Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

காதலும் காவலும்: 13

அத்யாயம் 13: காதலும் காவலும்

தாடையில் வைத்திருந்த கையை எடுக்காமலே தலையை மட்டும் லைட்டாக தன் டைரியில் இருந்து உயர்த்தி இமைகள் முடிச்சிட மிகவும் சீரியசாக சித்தேஷைப் பார்த்தான் காலன்.

அவனை கண்ட உடனே துள்ளி எழுந்த மதி சித்தேஷை தள்ளிவிட்டுவிட்டு காலாவை ஓடிச் சென்று பிடித்துக் கொண்டாள்.

" டேய் அண்ணா இங்க இவனுங்க என்னென்னமோ சொல்றானுங்க டா! எனக்கு ஒன்னும் புரியல, நீ ஏன் இவ்ளோ லேட்டா வந்த? "

" இரு டா மதி நானும் அதான் கதை கேட்டுட்டு இருக்கேனே, "

" ஏதே? கதை கேட்டுட்டு இருக்கியா? எப்போ வந்த நீ இங்க? "

காலா " ஆமா இதோ நம்ம மச்சான் கதை சொல்ல ஆரம்பிச்சதுல இருந்து நான் இங்க தான் டா இருக்கேன். " என சித்தேஷை கை காட்டி சாதாரணமாய் கூற மதி கண்களை உருட்டி உருட்டி அவனைப் பார்த்தாள்.

" அண்ணா என்ன டா மச்சான் கிச்சாங்குற? அவன் வேற என்னையே பார்த்துட்டு இருக்கான், நீ என்ன கூட்டீட்டுப் போவன்னு பார்த்தா என்ன கட்டிக் குடுத்துட்டுப் போய்டுவ போலருக்கே. " என சித்தேஷை ஓரக்கண்ணால் பார்த்தபடி காலாவின் காதை கடிக்க லேசாக சிரித்த காலாவோ மதியின் பதற்றத்தை ஒதுக்கிவிட்டு அவளை அருகில் இருந்த இன்னோரு கதிரையில் அமர்த்தினான்.

" எல்லாம் கரெக்ட்டா தான் இருக்கு மதி. நானே இப்போ தான் அதை புரிஞ்சிக்கிட்டேன், எல்லாம் எப்போவோ நான் பண்ண வேலை போல, "

" அப்போ உண்மையாவே இவரு எனக்குத் தானா? நீ இத உன் டைரில எழுதி வச்சிருக்கியா? "

மதி விழி விரித்து அவன் நாட்குறிப்பில் எட்டிப் பார்க்க படக்கென அதை மூடிய காலா

" அதெல்லாம் நீ பார்க்க வேணாம் ஆனா அதான் உண்மை... நான் உனக்கு அப்பரமா வெளக்காம் தரேன் டா மா. இப்போ மச்சான பர்ப்போம் வா, " என மிகவும் அசால்ட்டாக சொல்லிவிட்டு பனிக்கட்டிப் போல் உறைந்த மதியைத் தொடர்ந்து சித்தேஷை நோக்கித் திரும்பினான்.

" ஹாய் மச்சான். நான் மதியோட அண்ணன், தங்கச்சி கூப்டவும் கொஞ்ச நேரம் முன்னாடி தான் இங்க வந்தேன். நீங்க சீரியசா பேசீட்டு இருந்ததால டிஸ்டர்ப் பண்ண வேணாமேன்னு நானும் கதை கேட்டுட்டு இருந்தேன். அப்பரம் கதைய கொஞ்சம் கன்ட்டின்யூ பண்ணீங்கன்னா நல்லா இருக்கும். "

சகோதரர்கள் இருவரையும் விசித்திரமாய் பார்த்துக் கொண்டிருந்த சித்தேஷிற்கு அவர்களின் பேச்சே புரியவில்லை. அவன் அமைதியாக முகத்தில் எந்த ஒரு உணர்ச்சியும் காட்டாமல் இருவரையும் அளவிடும் பார்வை பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த அண்ணன் தங்கை இருவருக்கும் அவன் முகத்தில் இருக்கும் ரியக்ஷனை எப்படி படிப்பதென்று தெரியவில்லை.

காலா " மதி உன் ஆளு ஏன் நம்மள இப்டி பாக்குறாரு...? கொஞ்சம் நீயும் எதாவது சொல்லேன். " என மதியின் தோளை இடிக்க அவள் பேந்தபேந்த முளித்துவிட்டு வாய்க்கு முதலில் வந்ததை கூறினாள்.

" ஆமாப்பா இவன் என்னோட அண்ணன் காலா... எனக்கு இன்னும் ஒரு அண்ணனும் ஒரு அக்காவும் இருக்காங்க... அவங்கள பத்தி இப்போ எதுவும் கேக்காதீங்க, "

ஆனால் சித்தேஷின் முகத்தில் தான் எந்த ரியக்ஷனும் வரவில்லை.

ஒரு நீண்ட அமைதிக்குப் பின் அவனே காலாவைப் பார்த்து தலையை மட்டும் அசைத்தான். " தம்மை சந்திப்பதில் மகிழ்ச்சி. "

காலா " உன் ஆளு உன்கிட்ட தான் பக்கம் பக்கமா பேசுவாரு போல மதி... எங்ககிட்ட பேசுறதுக்கே காசு கேப்பாருன்னு நினைக்கிறேன். நல்ல மாப்பிள்ளை தான் அண்ணி பார்த்துருக்காங்க. "

" ஏதே? அப்போ எல்லாம் தெரிஞ்சு அவ ஏன் என்கிட்ட சொல்லல? "

காலா " அத அண்ணி வந்ததும் அவங்ககிட்டயே கேளு... இப்போ உன் ஆள கதை சொல்ல விடு, நீங்க சொல்லுங்க மச்சான். "

சித்தேஷ் குழப்பத்தில் இருந்த மதியையே பார்த்திருக்க அவள் அவனைப் பார்த்து தலையசைத்தப் பிறகு தான் அவன் பேச ஆரம்பித்தான்.

" ஆதவமதி சரித்திரத்தில் குறிப்பிட்டபடியே கதிரோனின் அம்சங்கள் மொத்தமும் பெற்றுப் பிறந்தவன் ஆதவன். வெண்மதியின் மரணத்தால் தன் உயிர்நாடியை இழந்து ஆழ்ந்த நித்திரையுள் தள்ளப்பட்டிருந்தான். இருவது வருடம் முன்பே விழிப்புற்றான். "

" அப்போ ஹீரோ ஸார் எங்க? " கேள்வி கேட்ட காலாவை விசித்திரமாக பார்த்தபடியே சித்தேஷ் விளக்கம் தந்தான்.

" கடந்த இருவது வருடங்களாக பூலோகத்தில் என் இளவல்களின் அருகே அவன் வரலாற்றின் நினைவுகளை இழந்து மானிடனாய் வாழ்ந்து வருகிறான். "

" சக்திகளும் அற்றா வாழ்கிறான்? " காலா அவன் தாடையில் ஒரு விரலால் தட்டிக் கொண்டே கேட்க சித்தேஷ் அமைதியாக அமோதித்தான்.

" சக்கியும் நினைவுகளும் அல்லாமல் உயிர்நாடியையும் இழந்திருக்கிறான் என்றால் உயிர்க்கும் திராணியற்ற மிருகமாகத் தானே அவன் இருத்தல் வேண்டும்? இங்க ஏதோ இடிக்கிதுல்ல டா மதி? "

" என்னண்ணா சொல்ற? எனக்கு ஒன்னுமே புரியல, "

அவர்கள் இருவரையும் அர்த்தம் பொதிந்த பார்வை பார்த்திருந்த சித்தேஷ் பெருமூச்சோடு இடது புறமாகத் திரும்பினான். அவனுக்கு நேராக மாயலோகத்தின் நீல வாணை காட்டும் ஒரு கண்ணாடி ஜன்னல் திறந்து வைக்கப் பட்டிருக்க, அவன் விழிகள் செயற்கையாய் ஜொளித்துக் கொண்டிருந்த மஞ்சள் சூரியன் மீது நிலைத்தது.

" வெண்மதியின் மரணத்தில் ஆதவன் உயிர்நாடியை மட்டுமல்ல அவன் சித்தத்தையும் இழந்தான். உலகம் மொத்தத்திற்கும் இருளை விரட்டி அனலென ஒளி பரப்பும் கதிரோன்...ஆதிக்கத்திற்கும் அழிவிற்கும் பெயர்போனது. அன்று ஆதவனை யான் தடுக்காமல் இருந்திருப்பின் இன்று மாயலோகமென்ற ஒரு ஞாலம் உயிர்த்திருக்க வாய்ப்பில்லை. "

மதிக்கு லேசாக ஏதோ புரிந்து அவள் சித்தேஷை கூர்ந்து நோக்க காலாவோ தீவிரமாக அவன் நாட்குறிப்பை பார்த்துக் கொண்டிருந்தான்.

மதி " அதனால அவன என்ன செஞ்சீங்க? "

சித்தேஷ் இப்போது தலையைத் திருப்பி அவனையே உருத்தி நோக்கிக் கொண்டிருந்த அவனவளைப் பார்த்தான். அவன் முகத்தில் துளி உணர்வும் தெரியவில்லை. ஆனால் கண்கள்...

மதி ஆராய்ச்சி செய்யும் முன்பாகவே அவன் குரல் அவள் செவிமன்றத்தைத் தீண்டியது.

" ஒரு சகோதரனுக்கு இன்னோறுவன் செய்யக் கூடாத ஒன்று... எமது கரத்தாலே... அவன் உயிர்நாடியை அறுத்து... ஆதவனின் உயிரொளியையும் கொன்று அவனை உயிருள்ள பிணமாக அடைத்தேன். "

மதி பேரதிர்ச்சியோடு அவள் நெஞ்சைப் பிடித்துக் கொண்டாள். சொல்லேனா வலி... துயரம்... குற்ற உணர்ச்சி... யாதென்று கூற இயலாத ஒரு பெயர் தெரியா வலி அவள் இதயத்தை குத்திக் கிளிக்க, அவள் வலியில் தடுமாறிய போதும் சித்தேஷ் அவன் நின்ற இடத்தைவிட்டு நகரவில்லை.

அதே வலி. மாய விசையில் மதி யாரோ ஒருவனின் நிழல் விம்பம் மறையும் போது உணர்ந்த பெயர் தெரியாத அதே வலி.

பட்டென தன் நாட்குறிப்பில் இருந்து தலையை தூக்கிய காலா மதியைப் பிடிக்க " மதி பாப்பா... என்னடா ஆச்சு? அண்ணன பாரு, ஒன்னுமில்ல மா, "

" அண்...ணா... அ...அண்ணா வலி...வலிக்கி...து "

காலாவுக்கே அனைத்தும் குழப்ப அவன் பதற்றமாக சித்தேஷைப் பார்த்தபோது அப்படியே உறைந்துவிட்டான்.

சித்தேஷின் சிகப்பு விழிகள் மதியின் மீதே நிலைத்திருக்க அதில் சொல்லேனா துயர் ஒன்று மனதில் நினைத்துப் பார்க்க இயலாத ஆழத்தில் வேரூன்றியிருந்தது.

மதி அனுபவித்துக் கொண்டிருந்தது அவளுடைய வலியை அல்ல. அது சித்தேஷ்வர் அனுபவித்துக் கொண்டிருந்த வலி...

#

சில்லென்ற இரவு காற்று தொலைதூர நண்பன் போல் அன்பாய் அவர்களை அரவணைக்க, குளுகுளுவென்ற பனியில் இருந்து தப்பி ஓடி ஒருவழியாக மயில்விழியின் வீட்டின் முன் நண்பர்கள் இருவரும் நின்றிருந்தனர்.

வீட்டின் கதவை வினோத் தட்டிக் கொண்டிருக்க ஏதோ ஒரு யோசனையிலே தன் தொலைப்பேசியை தட்டிக் கொண்டிருந்தான் ஹர்ஷன்.

நெடுநேரமாகியும் கதவு திறக்கப்படாததால் வினோத் மூகமூடி கொள்ளைகாரன் போல கதவின் அருகில் இருக்கும் ஜன்னலில் முகத்தைப் பதித்து " மயிலு! மயில்விழி! என் தங்க மயிலு! " என ஹஸ்கி வாய்சில் கத்திக் கொண்டிருந்தான்.

அவன் நான்காவது முறை கத்தியதிலே யோசனையில் இருந்து விடுபட்ட ஹர்ஷன் அவன் முதுகிலே படாரென ஒரு போடு போட்டான்.

" வீணாப் போனவனே, கண்ட நேரத்துல வந்து ஒரு வீட்டுக்குள்ள எட்டிப் பார்த்துட்டு சைக்கோ கொலகாரன் மாதிரி கத்துனீன்னா வாட்ச்மேன் வந்து புடிச்சிட்டுப் போய்டுவான். வா டா இந்த பக்கம் எரும, "

வினோத் பாவமாக வலிக்கும் முதுகை தடவிக் கொண்டே கதவைப் பார்க்க, அருகில் இருந்த ஒரு பூ ஜாடிக்கு கீழ் இருந்து வேறொரு சாவியை எடுத்து கதவைத் திறந்தான் ஹர்ஷன்.

" ஒருவேளை அக்கா தூங்கீட்டாளா இருக்கும்... நீ பதறாம செத்த பொருமையா போய் பாரு. நான் ஒரு காள் பண்ணீட்டு வந்துடுறேன், " என ஹர்ஷன் கதவைத் திறந்ததுமே உள்ளே ஓடிய வினோத்தைப் பார்த்து கத்த, உள்ளே ஓடியிருந்தவனின் மனம் திடீரென பதைப்பதைக்கத் தொடங்கியிருந்ததால் அவனுக்கு ஹர்ஷனிடம் யார் என்னவென்று கூட கேட்க தோன்றவில்லை.

விருவிருவென உள்ளே விரைந்தவனை பார்த்தபடி ஆதவனின் எண்ணிற்கு அழைப்புவிடுத்தான் ஹர்ஷன். ஆனால் அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்பட்டதாக ஒரு இயந்திர குரல் கொண்ட அக்கா அவனுக்கு சொல்லிவிட்டுச் செல்ல, இன்னும் ஹர்ஷனுக்கு யோசனைத் தீவிரமானது.

" டேய் ஹர்ஷா! ஹர்ஷா இங்க வா! "

வீட்டின் உள்ளிருந்து கேட்ட வினோத்தின் அலறலில் திடுக்கிட்ட ஹர்ஷன் வேகமாக உள்ளே நுழைய இருண்டு கிடந்த ஹாலின் ஒரு மூளையில் காய்ந்திருந்த இரத்தத்தோடு மயங்கிக் கிடந்த மயிழ்விழியின் மீது பதிந்தது அவன் கண்கள்.

" அக்கா! "

அவன் ஓடி வந்து வினோத்தின் அருகே மண்டியிட, தன் நெஞ்சில் அவளை சாய்த்து அவளை எழுப்புவதற்கு படாதபாடு பட்டுக் கொண்டிருந்தான் வினோத்.

" எ...என்ன...ன்னு உடனே உடனே பாரு ஹர்ஷா... கண்ண முளிக்க மாற்றா டா... என்னன்னு பாரு சீக்கிரம்! "

ஹர்ஷனுக்கு பதட்டத்தில் படபடவென இருக்க அவன் மருத்துவம் பார்க்கும் அளவிற்கு வினோத் அவனுக்கு வாய்ப்பே கொடுக்கவில்லை. என்ன தான் அவளுக்கு என்னவென்று பார் என அவன் கத்திக் கொண்டிருந்தாலும் ஹர்ஷன் அவர்களின் அருகே வந்ததுமே மயிழ்விழியை அவனுக்கேத் தெரியாமல் அவன் நெஞ்சோடு இறுக்கிக் கொண்டான்.

அதை கவனித்த ஹர்ஷனுக்கு சிந்தனை இருவேராய் இருக்க, வினோத்தை மீறி தன் தமக்கையிடம் நெருங்குவது சரியா என அவன் யோசித்துக் கொண்டிருந்த போதே வினோத்தின் கண்கள் மிளிரத் தொடங்க, எச்சிலை கூட்டி விழுங்கினான் இவன்.

கோபம் கொஞ்சம் கொஞ்சமாக பயத்தை மறைக்க வினோத்தின் மூச்சு உஷ்னக்காற்றாய் அவன் நெஞ்சில் கிடந்தவளை தீண்டியது.

" சொல்றது கேக்குதா இல்லையா?! அவளுக்கு என்னன்னு பாரு! " வினோத் உறுமிய உறுமில் கைகள் இரண்டையும் படக்கென மேலேத் தூக்கிய ஹர்ஷன்

" மச்சான் நான் சொல்றத பொருமையா கேளு... உன்னோட உள்ளுணர்வுகள் உன்ன இப்போ கன்ட்ரோல் பண்ணுது. நான் அக்கா பக்கத்துலப் போனா நீ என்ன பிரிச்சு மேஞ்சுருவங்குற ரேஞ்சுல இருக்க... கொஞ்சம் அமைதியாகு டா... ப்லீஸ் நான் அவள சரி பண்ண தான் போறேன். உன்னோட துணைவிக்கு நான் ஆபத்தானவன் இல்ல... என்ன நம்பு, "

ஆம்... மயில்விழி வினோத்தின் விதி அவனுக்களித்த அவனது காதல் துணைவி. அவளை காயப்படுத்தும் நோக்கில் அவன் கண் முன் யாராலும் மூச்சு கூட விட முடியாது. அதற்கு காதலாலும் விதியாலும் அவளோடு ஒன்றியிருக்கும் ஒளிவேந்தன் என்ற அவனது உள்ளுயிர் அனுமதியும் அளிக்காது.

அவள் காதலனும் அவனே... அவளது காவலனும் அவனே...

ஆதவனின் வெண்மதி அவளா...

DhiraDhi ❤

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro