ஆதவமதி: 1
ஆதவமதி: 1
நீல நிற நீண்ட வாணின் விரக்தியில் தேகம் கருக்க உலகை பரப்பி கொண்டிருந்தது வெண்மேகம். கருமேகங்களின் எண்ணிக்கை சிறிது சிறிதாய் கூட, மழை சாரலாக பூமித்தாயின் நிலத்தில் கால் பதிக்கத் தொடங்க, மெல்லிய கொலுசு சினுங்கும் ஓசையுடன் கயல் விழிகள் மழையை இரசிக்க தளிர் கரங்கள் மழையினில் நனைந்து விளையாடிட, தார் ரோட்டில் கால் பதிய குண்டுங்குழியினை தாண்டி அழகு பதுமையென அந்த இரம்மியமான நேரத்தில், வெண்ணிலவை போன்ற அழகிய வதனத்தில் மென்னகையுடன் மழை மேகத்தை போல நீல நிறமும் வெண்ணிறமும் கலந்த ஆடையில் நடந்து வந்தாள் நம் கதாநாயகி வெண்ணிலா.
இருவது வயது பாவை. அதிர்ந்து பேச தெரியாத சாது. ஒன்றில் இறங்கினால் அமைதியினிலே ஜெயித்து காட்டும் அனுபவசாலி. என்றும் ஒரு புன்னகையுடனே வலம் வரும் சாந்த சொரூபினி. எந்த ஒரு ஒப்பனையுமின்றி பேரழகுடன் நிலவாய் ஜொளிக்கும் நிலவவள். கார் கூந்தல் அசைந்தாட துடித்திடும் இடை தாண்டிய நீண்ட கருங்கூந்தலுடன் அழகே பொறாமை படும் பேரழகவள்.
கல்லூரியில் இருந்து தன்னந்தனியாய் நடந்த வந்து கொண்டிருந்தாள் அவள். ஒளியினை விரட்டி இருள் ஆக்ரமித்த அந்த விகார தருணத்தில் தன் எண்ணங்கள் ஏதோ ஒன்றை சுற்றி வர, சாலையை கூட கவனிக்காமல் நடந்து வந்தவளின் நடை திடீரென தடை பட, நிலாவின் உடல் ஏதோ ஒன்றை கண்டதில் நடுங்கத் தொடங்கியது.
இவ்வளவு நேரமும் இரசிக்கத் தூண்டிய கருமேகங்கள் இப்போது நடுக்கத்தை பயிற்று வைக்க, நினைவு தெரிந்தது முதலிலிருந்தே இருளுக்கு அஞ்சிப் பழகிய பாவையவளின் வெண்முகம் தானாய் வெளிரியது.
சாந்தம் குடி கொண்டிருக்கும் அவளின் பூ முகம் இப்போது வாட, மேகத்தினிடையில் கண் இமைக்கும் நொடிக்குள் பயணித்த பெரும் மின்னலொன்றின் ஒளியினில் தெரிந்த இருள் நிறைந்த உலகையும், அதனூடே கேட்ட அதிபயங்கர இடியின் ஓசையிலும் மிரண்டு விழித்தவளின் கண்கள் மருக, சில நொடிகளிலே தன் உடலில் ஆயிரமாயிரம் வகை மின்சாரம் பாய்வதை போல் உணர்வெழ, அவளது மென்னிடையை வளைத்த இரும்பு கரத்தின் அதீத அனலினில் கண்களை திறக்க முயன்றும் முடியாமல், நிகழ்வதை பகுத்தறிய முயன்றும் முடியாமல் கண்கள் சொருக மயங்கி விழுந்தாள்.
ஆராவாரமற்ற அந்த தார் ரோட்டில் ஒரு உயர்ரக கருப்பு நிற காரில் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டாள் நிலா.
காரின் கருப்பு ஜன்னல் வழியே தெரிந்த நிலாவின் வதனத்தை ஆழ்ந்து நோக்கி கொண்டிருந்த அந்த கண்களில் விவரிக்க இயலா உணர்வொன்று நிறைந்திருக்க, அந்த மகிழுந்து கிளம்பிய சில நொடிகளிலே இருளில் தெரிந்த அந்த கண்களும் மாயமாய் மறைய, இருளின் ஆட்சிக்கு சாமர்த்திய இடைவெளி விட்டதாய் வேகவேகமாய் உதயமாகினான் ஆதவன்.
விடியற்காலை வாடை காற்றின் வேத்தினை மீறிக் கொண்டு சீரிப் பாய்ந்தது அந்த மிதிவண்டி. மலைமகளின் மடியை விட்டு எழ மறுத்து உறங்கிக் கொண்டிருந்த சூரியன் அந்த மிதிவண்டியை கண்ட வேகத்தில் உதயமாக, பல வண்டிகளின் இடையே புகுந்து சீரிப் பாய்ந்த அந்த மிதிவண்டி எங்கும் நிற்காமல் அந்த மலை ராணியின் உச்சிக்கும் பயணிக்க, அந்த உச்சியிலிருந்த மரத்தினை சில நொடிகளிலே தொட்டு விட்டு மீண்ட மதிவண்டியிலிருந்தே மரத்தினை பிடித்து ப்ரேக்கில்லாமல் சீரிக் கொண்டு நிறுத்தினான் நம் கதாநாயகன் ஆதவன்.
நெற்றி பொட்டில் வேர்வை பூக்க, அதை கட்டை விரலினால் துடைத்தெடுத்தவனின் தீப்பொறி போன்ற கண்களில் செஞ்சூரியனின் கதிர்கள் பட்டு தெறிக்க, உலகின் மறு சூரியனாய் காட்சி அளித்தான் அந்த இளஞ்சூரியன்.
இறுவத்தியேழு வயதினை தொட்ட இளங்காளை. செந்நிறத்தில் இன வேறுபாடின்றி பார்ப்போர் அனைவரினையும் கண்ணிமைக்காது ஈர்த்திடும் பேரழகன். பார்வையிலே மிரட்டும் விகத்தன். அகன்ற கட்டுமஸ்த்தான உடல் கொண்ட வீரன். தைரியத்திற்கு பஞ்சமில்லாது எதற்கும் துனிந்திடும் துனிச்சல் மிக்கவன். பார்ப்போரை பார்வையினிலே மண்டியிட செய்திடும் மாவீரன்.
புஜத்தில் டகுடன் மாட்டப்பட்டிருந்த ஃபோன் சினுங்க, அதை ப்லூட்டூத்துடன் கனெக்ட் செய்து ' ஆதவன் ஹியர் ' என்றான் அவனது கனீரென்ற குரலில்.
அப்புறம் என்ன கூறப்பட்டதோ சில நிமிடங்கள் கூறுவதை மட்டும் செவி சாய்த்து கொண்டிருந்தவன் இறுதியாக 'ஓக்கே' என்றதோடு காளை கட் செய்தான்.
அந்த உச்சி வெயிலில் மிதிவண்டியில் சாய்ந்தமர்ந்தவனின் தேகத்தில் வேர்வை துளிகள் சர்கஸ் விளையாடிட, கண்ணிமைக்காது சூரியனை வெறித்து கொண்டிருந்தவன் மிதிவண்டியில் ஏறி அவ்விடத்திலிருந்து சூறாவளியாய் எங்கோ மறைந்தான்.
வெறிச்சோடி கிடந்த பங்களாவின் வராண்டிவில் ஓங்கி ஒலித்து கொண்டிருந்தது ஒரு பெண்மணியின் வயதொடிந்த ஆவேசம் நிறைந்த குரல். அந்த அகல விரிந்த மாபெரும் மகாலின் மூன்றாவது மாடியில் நாழு அறைகளை சேர்த்து வைத்ததை போல் இருந்த அந்த அறையில் இடை வரை போர்த்திக் கொண்டு தலை தாழ்த்தி விரல்களை பிண்ணிக் கொண்டு அமைதியாய் மெத்தையில் அமர்ந்திருந்தாள் நிலா.
அவளருகில் அறுவது வயது மதிக்கத்தக்க பெண்ணொருவர் கண்கள் நிறைந்த வாழ்கை அனுபவத்துடன், கூந்தல் நறைத்திருக்க, முகத்தில் அங்கங்கு சுருக்கங்களுடன், இருந்தும் நிமிர்வு குறையாது கவலையுடன் அமர்ந்திருந்தார்.
அவர் அந்த பெரும் குடும்பத்தின் தலைவி அம்பிகாண்டேஷ்வரி. அவரருகில் அவரது மருமகள்கள் மூவர் வரிசை கட்டி முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு நின்றிருந்தனர்.
மூத்த மருமகள் தேவி,
இரண்டாவது மருமகள் மாதூரி,
மூன்றாவது மருமகள் மேகலை.
அவர்களின் பின் அறையின் ஓரத்தில் இரண்டு ஆடவர்கள் இறுகி நின்றிருக்க, அதிலும் ஒருவனின் கண்கள் சற்று கலங்கியிருக்க, அதே நேரம் மருத்துவரை வழியனுப்பி வைத்து விட்டு உள்ளே வந்தனர் மேகலை மற்றும் மாதூரியின் கணவர்கள் நந்திகேஷ்வர் மற்றும் குப்தகேஷ்வர்.
அம்பிகா பாட்டிக்கு நான்கு பிள்ளைகள், முதல் மூன்றும் ஆண் பிள்ளைகள். முதல் மகன் வருணகேஷ்வர், நிலாவின் மீது அலாதி பிரியம் கொண்டவர். ஆனால் விதியின் விளையாட்டினால் நிலாவின் ஆறாம் வயதிலே அவர் இயற்கை எய்தினார். இரண்டாவது மகன் குப்தகேஷ்வர், மூன்றாவது மகன் நந்திகேஷ்வர். குடும்பத்தின் கடைகுட்டி நிலாவின் தாய் இந்திரவிகா.
இந்திரவிகா அக்குடும்பத்தின் ஒரே பெண்பிள்ளை ஆதலால் மிகவும் அன்போடும் பன்போடும் சீராட்டிப் பாராட்டி வளர்க்கப்பட்டவர். இவர்கள் அனைவரின் பூர்வீகமும் தமிழ்நாடாய் இருப்பினும், அம்பிகா பாட்டியின் கணவர் இறந்ததும் அக்குடும்பத்தை மேல் கொண்டு வர வழியில்லாது அம்பிகா பாட்டி அவர் பிள்ளைகளுடன் குடி புகுந்தது குஜராத்தில்.
அங்கு துணி வியாபாரம் செய்ய தொடங்கியவர் படி படியாய் அவரது கணவரின் தொழிலை மேம்படுத்தி சில வருடங்களிலே பெரும் உயரத்தினை அடைந்தார். அதிலும் வருணகேஷ்வர் வேலைக்கு சென்று தன் தம்பிகள் மற்றும் தங்கையை படிக்க வைத்தார்.
அவரது உழைப்பில் அவர்களின் தொழிலின் லாபம் பன்மடங்கானது... இந்திரவிகா செல்லப்பிள்ளையாய் வளரத் தொடங்கினார்... தமிழ் நாட்டிலிருந்த அவர் அத்தை மகன் வீரபாண்டியிற்கே மகளை கட்டி கொடுத்து அழகு பார்த்தார் அம்பிகா.
வீட்டிற்கு வந்த மூன்று மருமகளுக்கும் இந்திரவிகாவின் மீது பயங்கர பொறாமை... இருந்நும் அதை அவர் புகுந்த வீடு செல்லும் வரை பொருத்துக் கொண்ட மூவரும் அவர் சென்றதும் ராஜ்ஜியத்தை ஆழ போவதை போல் காத்திருந்தனைர்...
இந்த மருமகள்கள் கணவு கண்ட நேரமே இந்திரவிகாவின் மாமியார் குடும்பத்தினர் அனைவரும் அவருடன் ஒரு சாலை விபத்தில் மரணமெய்தினர்...
அதை வெற்றியாக கருதிய நேரம் தான் அவர்களின் திட்டங்களில் மண்ணையள்ளி போடுவதைப் போலவே வரவளித்தாள் இந்திரவிகா தவமிருந்து பத்து வருடங்கள் பின் பெற்ற வெண்ணிலா...
அதிலிருந்தே அம்பிகா தான் நிலாவை அன்பாய் வளர்த்து வருகிறார்... மற்ற மூன்று பெண்மணிகளுக்குமே நிலாவை அறவே பிடிக்காது... அவளும் அவர்களை எதற்கும் எதிர்பார்க்க மாட்டாள்... அதனாலே என்னவோ தனிமையை பழகி கொண்டவளுக்கு தைரியமும் உடன் வராது பயமென்னும் தோழியை பரிசளித்திருந்தது... அமைதி என்றும் திரையினால் அதை கச்சிதமாய் மறைத்து வருகிறாள் நிலா.
அம்பிகா பாட்டி " ஏன் மா இப்டி தனியா போன? " என நிலாவின் தலையை வாஞ்சையாய் கோதி அன்பாய் கேட்க... நிலா பதிலளிக்காது தலை தாழ்த்தி அமர்ந்திருக்க, அம்பிகாவின் பின் நின்றிருந்த மாதூரி பொங்கி எழுந்நதார்.
மாதூரி " ஏன் டி அதான் அத்த கேக்குறாங்கல்ல! எங்க போய் எவன் கூட ஊர் சுத்தீட்டு வந்தன்னு சொல்லு! " என காட்டமாய் சொல்ல, அதில் தானாகவே நிலாவின் உடலில் நடுக்கம் எழுந்தது.
அம்பிகா பாட்டி கை நீட்டி தடுக்க அதே நேரம் சரியாக அந்த அறையில் ஓங்கி ஒலித்தது சித்தி என்று இறுகி போன குரல்...
அனைவரும் யாரதென திரும்பி பார்க்க... உடனே கட்டிலை விட்டு இறங்கிய நிலா அண்ணா என வந்தவனை அணைத்துக் கொண்டாள்.
ஆறடிக்கு சற்றே உயரம். கருத்த நிறம் அவனுக்கு இன்னும் கம்பீரமூட்ட அக்மார்க் தமிழண்டா என நிரூபிப்பதை போல் இருந்தது முருக்கு மீசையும் அவனது வெள்ளை பட்டு வேஷ்டியும். சிரித்தால் இரசிக்க தூண்டும் முகம். கத்தியை விடவும் கூர்மை வாய்ந்த கண்கள். கட்டுடல் மைந்தன் அசல் காவல்காரன். கண்கள் கோபத்தை பிழிய, கரங்கள் நிலாவை காத்திருக்க, அவனது பார்வையோ மாதூரியை விலாசிக் கொண்டிருந்தது. அவன் நிலாவின் பாசமிகு தமையன் வினோத்வலிங்கேஷ்வர்...
நிலா தந்தையின் உடன் பிறந்த தம்பியின் மகன். நிலாவிற்கு தந்தை வழி இருக்கும் ஒரே இரத்த சொந்தம்.
அவன் அருகில் இவ்வளவு நேரமும் அந்த அறையிலிருந்த இரு ஆடவன்களில் ஒருவன் கத்தியதற்கு அடையாளமாய் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க நின்றிருந்தான் நிலாவின் மூத்த மாமா மகன் மட்டுமல்லாது அக்குடும்பத்து இளைய பரம்பரையின் முதல் வாரிசு ஹர்ஷவர்தன்...
மேகலை " என்ன ஹர்ஷா, அக்கா என்ன தப்பா சொல்லிட்டாங்கன்னு நீ கத்துர...? "
ஹர்ஷா " நீங்க ஒன்னும் சொல்ல தேவையில்ல சித்தி... நிலா ரெஸ்ட் எடுக்கனும், நீங்க கீழ போகலாம்... "
மாதூரி " எனக்கு இது தேவ தான் பா... தேவ தான்... ஆஸ்பத்திரில படுத்து கெடந்துட்டு வந்துர்க்காளேன்னு பாக்க வந்தோம்ல தேவ தான்... நல்லா பேசுறான்க்கா உங்க மகன்! " என தேவியை ஏவி விட...
தேவி " டேய் பெரியவங்க கிட்ட இப்டி தான் பேசுவியா?! பெருசா சப்போர்ட் பன்ற... அவள பாக்க தான நாங்க வந்தோம்? "
ஹர்ஷா " நாங்க ஒன்னும் உங்கள வந்து பாக்க சொல்லி கூப்டல... " என தலை நிமிர்த்தி கூற... செருப்பால் அடித்ததை போல் உணர்ந்த மூன்று மருமகள்களும் விறுவிறுவென கீழே இறங்கி சென்று விட்டனர்.
மனைவி வாக்கே வேதவாக்கு என்பதை போல் குப்தகேஷ்வரும் நந்திகேஷ்வரும் அவர்களை பின் தொடர்ந்து சென்றிருந்தனர்.
வினோத் " என்னாச்சு டா... ஏன் இவ்ளோ பயந்து போய்ர்க்க? "
நிலா " அண்ணா " என தேம்பிக் கொண்டே அவன் தோள் சாய்ந்து கொண்டாள்.
அம்பிகா " என்னாச்சு நிலா? எதாவது சொல்லு... ஏன் டா மயங்கி விழுந்த? "
நிலா " தெ...தெரி..யல பாட்டி... நா... நா... போ...போகும் போ...து ஒரே இ...ருட்...டா இருந்...துச்சு.. அ...அது...ல ரொம்ப பயந்துட்டேன்... அப்பரம் என்னாச்சுன்னே நியாபகமில்ல... " என அழுகையுடனே கூறிமுடித்தாள்.
ஹர்ஷா " நான் தான உன்ன வந்து பிக்கப் பன்னிக்குவேன்? நீ ஏன் நிலா தனியா வந்த? " என கோவமாய் கேட்டாலும் அவன் கோவத்தின் பின் தவிப்பு தெரிந்தது.
நிலா " சாரி அத்தான்... மழை வர மாதிரி இருந்துச்சேன்னு ஆசையா வந்தேன்... ஆ...ஆனா... " என கூற தொடங்கும் போதே மீண்டும் அவள் உடல் நடுங்க
வினோத் " சரி குட்டிமா... வேண்டாம் நீ தூங்கு... எதுவும் இல்ல சரியா? " என பெட்டில் படுக்க வைத்து தலை கோத, கண்ணீருடன் தலையாட்டியவள் அம்பிகாவின் கரத்தை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள்.
நிலா " பாட்டி... "
அம்பிகா " என்ன நிலா? "
நிலா " என் கூட கொஞ்ச நேரம் இருங்களேன்... " என கெஞ்சலாய் கேட்க
அம்பிகா " சரி டா நா இங்கையே இருக்கேன் நீ தூங்கு, " என அவளருகிலே அமர்ந்து கொண்டார்.
ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட வினோத்தும் ஹர்ஷாவும் ஒரு சேர திரும்பி பின் நின்றிருந்தவனை பார்க்க, அங்கு ஆறடிக்கு ஒரு இரண்டு இன்ச் கம்மியான உயரத்தில் மாநிற கன்னங்களில் கண்ணீர் கோடாய் வழிய கண்ணீரை கட்டுப்படுத்த வழி அறியாமல் உதட்டை கடித்துக் கொண்டு நின்றான் ஹர்ஷாவின் தம்பியும் மேகலையின் மகனும் அக்குடும்பத்தின் இறுதி வாரிசுமான பதினெட்டு வயது ஆடவன் ஷேஷ்யவர்தன்.
சில நொடிகளில் கண்ணீரை துடைத்து விட்டு அங்கிருந்து அவன் வெளியேற, இவன்களிருவரும் நிலாவை ஒரு முறை பார்த்துவிட்டு அங்கிருந்து வெளியேறினர்.
மணி இரவு பனிரெண்டை தொட்டு சில நிமிடங்கள் கடந்த நேரம்... பௌர்ணமியின் பிரகாச ஒளி மறைந்து மறைந்து நிலாவின் அறை ஜன்னல் வழி அவள் மென்மையான இமைகளில் மஞ்சம் கொண்டு அவளது கன்னங்களில் ஆசையாய் தஞ்சமடைய... நிலவின் ஒளியில் பேரழகென தெரிந்தாள் அவள்.
இடையிடையே கருமேகங்கள் நிலவினை சூழ முயன்று அதனிற்கு நேரெதிரில் தெரிந்த சூரியனின் கதிர்களால் தள்ளி ஓடிட... தெளிந்த நீரோடையாய் தெரிந்த இருள் வாணின் அழகிய நட்சத்திரங்களின் இடையே அவ்வப்போது மின்னல்கள் புகுந்து விளையாடிக் கொண்டிருந்த தருணமது....
ஜன்னலின் வழி...
வந்து விழுந்தது...
மின்னலின் ஒளி...
அதில் தெரிந்தது...
அழகு தேவதை...
அதிசயமுகமே...
என பீஜியம் ஓடாத குறையாக... பால்கெனியில் நின்று இவளை ஊடுருவி பார்த்து கொண்டிருந்தது இரத்த சிவப்பில் சிவந்திருந்த இரு விழிகள்...
ஆறடிக்கும் மேலான உயரத்தில் கரும்போர்வை போர்த்தியதை போலான ஆடை உடுத்தி, முகமும் எதனாலோ மறைத்திருக்க... வெண்ணிற தேகமதனில் அங்கங்கு குங்குமத்தால் அலங்கரித்ததை போல் இரத்தம் தெறித்திருக்க... காது மடல் மெலிந்து பெரிதாய் நீண்டிருக்க... தேக உயரத்திற்கும் ஒன்றரை மடங்கு நீலமதிகமுள்ள நீண்ட செம்மை சாயம் பூசிய இறெக்கைகள் சாந்தமாய் ஒடுங்கியிருந்தது. இருளிலும் அந்த கட்டுடல் மிக கம்பிரமாய் காட்சி அளிக்க... ஒரு முறை பார்த்தால் பயத்திலே மரணம் வரை அழைத்து செல்லும் அபார சக்தி படைத்ததை போல் ஆளுமையிலும் திமிர் நிறைந்த குரூரத்தை வெளிகாட்டிட... நிமிர்ந்த தோற்றத்தை கண்டால் உடல் நடுங்கி கீழ் விழுவர் என்பதை எடுத்து காட்டும் விதமாய் தலை நேராய் நிமிர்ந்திருக்க... எவ்வித பயமும் அறிந்திடா கண்கள் தீவிரத்துடனிருக்க... இதயம் மாத்திரம் அதிவேகத்துடன் துடிக்க... நிலாவினை கண்கள் முழுதும் நிறம்பிய ஏதோ ஒரு உணர்வுடன் பார்த்து கொண்டு நின்றிருந்தான் அந்த மனித இரத்தக்காட்டேரி...
ஆதவனின் வெண்மதி அவளா...
DhiraDhi ❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro