Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

ஆதவனின் மனம்: 8

அத்யாயம் 8: ஆதவனின் மனம்

மாலை மங்கும் நேரத்தின் இரம்மியம் இல்லாமல் இடி மின்னல்களின் கோர தாண்டவத்தால் மும்பையே இருள் சூழ்ந்திருக்க, இப்போவா அப்போவா என மழை கார்முகில்களின் பின் நின்று எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது.

பெயர் தெரியா வெறுமை மனதை நிறைக்க, வேலையில் கவனம் செலுத்த இயலாமல் தன் அறையில் நின்று கண்ணாடியாலான சுவர் வழியாக இருள் சூழ்ந்த வாணை வெறித்துக் கொண்டிருந்தான் ஆதவன்.

அவன் மேஜை மீதிருந்த மடிக்கணினி ஆதவனைப் பார்த்துக் கொண்டே அரை மணி நேரமாக காத்துக் கொண்டிருக்க, அவன் தான் அதை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

ஆழ்ந்திருந்த அவன் கருவிழிகள் இலக்கின்றி எதையோ துளைத்தெடுக்க மனம் தான் நில்லாமல் ஏதோ ஒன்றை சுற்றி வந்து கொண்டிருந்தது.

வெண்ணிலா...? யாரிந்த நிலா? அவன் இவ்வுலகில் வாழ்ந்த வருடங்களில் வினோத் ஹர்ஷனுடன் தன் 20 வருடத்தை ஒன்றாக களித்த ஆதவன் ஒரு முறை கூட நிலாவை பார்த்ததில்லை.

ஆனால் அவன் கேட்டிராத பெயரல்ல அது.

எத்தனை முறை அப்பெயரை கனாவில் கேட்டு நித்திரையை தொலைத்திருப்பானோ?

தூங்கா இரவாக களியப் போகும் இன்றைய இரவையும் தனியே களிக்க மனமின்றி உணர்வற்ற சிலையாய் அவன் நின்று கொண்டிருக்க அவன் அறையைத் திறந்து கொண்டு உள்ளே வந்தாள் ஒரு பெண்.

" ஆதவா... வெளிய போறியா? "

" இல்ல அக்கா, எங்கையும் போகல... "

" ஹர்ஷன் நீ வீட்டுக்கு வந்ததும் ஃபோன் பண்ண சொன்னான். நான் ஃபோன் பண்ணி சொல்லட்டுமா? "

ஆதவன் அந்த கேள்விக்குப் பிறகு அமைதி காக்க, அவன் அருகே வந்து அவன் தோளைத் தொட்டுத் திருப்பினாள் மயில்விழி.

மயில் நிறத்திலே அவள் அழகிய விழிகள் அவனை பார்க்க, மென்மையாய் அவன் கன்னம் ஏந்தி அன்னையாய் அவனைத் தாங்கினாள் அந்த அன்பு தமக்கை. தன்னுடன் பிறக்காவிட்டாலும் தான் வளர்த்த முதல் குழந்தையாய் அவனைப் பார்க்கும் அவள் அவனுக்கு இரத்த பந்தமின்றி கிடைத்த இன்னோரு அம்மா தான்.

" என்ன பாருடா, "

ஆதவன் பெருமூச்சோடு அவள் கரத்தை மென்மையாய் அகற்றிவிட்டு மீண்டும் அந்த இருள் வாணை பார்க்களானான்.

" ஹர்ஷனுக்கு ஃபோன் பண்ணலன்னா அவனே வந்துடுவான் ஆதவா... " மயில்விழி கூறுவது உண்மை தான் என தெரிந்தாலும் அவன் தோளை குலுக்கிவிட்டு

" நான் வந்தேன்னு சொல்லாதக்கா... "

" எவ்ளோ நாளுக்கு டா இப்டியே இருக்கப் போற? நேத்தே நீ வீட்டுக்கு வருவன்னு நினைச்சேன்... "

ஆதவனின் இதழ்கள் விரக்தியாய் விரிய கண்களை இறுக மூடிக் கொண்டவனுக்கு அவள் முகம் அப்போதும் இருளில் ஒளிரும் நிலமகளாய் தெரிந்தது.

" உனக்கு நேத்து எதுவுமே தோனலையா? என் கிட்ட கூட சொல்ல மாட்டியா? ஏன் ஆதவா இப்டி இருக்க? "

ஆதவன் மயில்விழியின் எந்த கேள்விக்கும் பதில் கொடுக்காமல் அவள் மென்வதனத்தை கற்பனையிலே பார்த்து இரசிக்க, மயில்விழி தான் பெருமூச்சுவிட்டாள்.

" அவளுக்கு கல்யாணம் பண்ணப் போறாங்களாம்... நீ கூட நின்னு பூ போட்டுட்டு வந்து இருக்க? தியாக வள்ளலா டா நீ? "

" அக்கா, " என்ற ஆதவனின் ஒற்றை அழைப்பு புசுவானம் போல் பொங்கிய மயில்விழியின் ஆதங்கத்திற்குத் தடை போட்டது.

" என்ன டா? நான் அவள மறந்துட்டேன், அவ வாழ்கைல நான் இல்ல, நான் அவள இழந்துட்டேன்னு சொன்னதையே சொல்லப் போறியா? இந்த முறையும் அதத்தான் சொல்லப் போறியா? இன்னும் எத்தன ஆயிரம் வர்ஷத்துக்கு சொல்லீட்டுத் திரியப் போற அதையே? "

" அவ உயிரோட இருக்கான்னு உனக்கு எப்போலேந்து அக்கா தெரியும்? "

மயில்விழி சட்டென அமைதி காக்க, அவளை திரும்பிப் பார்த்த ஆதவனின் கண்கள் இரண்டும் சிவந்திருந்தது.

" இருவது வர்ஷமாவே உனக்குத் தெரியும் தான? ஆனா அவ இவ்வளவு பக்கத்துல தான் இருந்தான்னு எனக்குத் தெரிய வந்தே இருவத்தி நாழு மணி நேரம் தான் அக்கா ஆகுது, அவ இல்லன்னு தெரிஞ்சு சுயநினைவோட நான் வாழ்ந்த இந்த இருவது வர்ஷத்துல ஒரு முறை கூட அவ உயிர்ப்போட இருக்கான்னு எனக்குத் தெரியாதுன்னு நினைச்சீங்களா இல்ல என்னால அத உணர முடியாதுன்னு நினைச்சீங்களா? "

அவன் கேள்வி ஒவ்வொன்றும் மயில்விழிக்கு அதிர்ச்சியை கூட்ட, அந்த கேள்விகளின் வீரியம் எதுவும் அவன் குரலிலோ முகத்திலோ தெரியவில்லை.

" ஆதவா... "

" அவ என்னோட சரிபாதி... என்ன முழுமையாக்கப் பிறந்தவ... அவ எப்போ என்னவிட்டுப் போனாளோ அப்போ தான் நான் என்ன இழந்தேன். இரெண்டாயிரம் வர்ஷம் உணர்வில்லாத ஜடமா இருந்த என்னோட உணர்வுகள் ஏன் திரும்ப வந்துதுன்னு கூடவா எனக்குத் தெரியாம இருக்கும்? "

மயில்விழியைத் தாண்டி சென்று ஒரு கதிரையில் சாய்ந்து அமர்ந்த ஆதவனின் மூடியிருந்த இமைகளைத் தாண்டி கண்ணீர் துளிகள் எட்டிப் பார்க்க அதை நாசூக்காய் அவள் பார்க்கும் முன் துடைத்தவன்

" எனக்கு எதுவும் தெரியாததாவே இருக்கட்டும். நான் எதையும் இப்போ நாசமாக்க விரும்பல... ஹர்ஷன் கிட்ட நான் வந்ததா எதுவும் சொல்லாதக்கா... எப்பவும் போல விற்று, "

அவனை வலுக்கட்டாயமாக தன் காட்டமான கண்களை பார்க்க வைத்த மயில்விழி " இன்னும் எத்தன நாளைக்கு ஓடி ஒழிஞ்சிக்குவ? உனக்கு எல்லாமே தெரியும் நியாபகம் இருக்குன்னு எனக்கு மட்டும் தான் தெரியும். ஆனா இதுக்கு மேலையும் உன்னால அதை மறைக்க முடியுமா? அவன் திரும்ப வந்துட்டான்னு எல்லாருக்குமே இப்போ தெரிஞ்சிருக்கும். "

இவ்வளவு நேரம் ஒரு விரக்தியில் சோர்ந்திருந்த ஆதவனின் உடல் இறுகியது. ஏதோ ஒரு வேகத்தில் அந்த அவனின் பேச்சை எடுத்ததை எண்ணி மயில்விழி மனதுக்குள்ளே தன்னை கேவலமாக திட்டிக் கொண்டாலும் முழுதாக நனைந்த பின் முக்காடு எதற்கு என பேசிய ஃப்லோவையே தொடர்ந்தாள்.

" உனக்கும் எல்லாம் தெரியும்ங்குற உண்மை வெளிய வர்ரதுக்கு ரொம்ப நாள் இல்ல கண்ணா... நீ என்ன மறுத்தாலும் விதிய மறுக்க முடியாது. "

" அதே விதி தான் என்ன அவக்கிட்ட இருந்து பிரிச்சி மிருதேஷ்வரனுக்கு உயிர் கொடுத்துச்சு அக்கா. "

ஆதவனின் கண்கள் மேலும் சிவப்பேற ஆழம் பார்க்காமல் காலைவிட்ட பாவத்திற்கு மயில்விழியின் தலை மேல் ரெட் பல்பு ஆயிரம் வாட்ஸ் பல்பு போல் பிரகாசமாய் மின்னினாலும் இதற்கு மேல் பின்வாங்கி பிரயோஜனம் இல்லை என தனக்குத் தானே பற்பல வீரவசனங்களை கூறிக் கொண்டு தூங்கும் சிறுத்தையை சுரண்டி எழுப்பினாள்.

" அன்னைக்கு உலகத்த அவன் கைல அழியவிட்ட மாதிரி இப்போ அவ வாழ்கையையும் அவன் கைல அழிய விடப்போற அப்டி தான? "

அவ்வளவு தான். மயில்விழியின் கண்கள் முன்பு இவ்வளவு நேரமும் சிவந்திருந்த ஆதவனின் கண்கள் கருமையைத் தத்தெடுக்க அவள் தைரியமாக இருப்பது போல் நின்றாலும் அவள் கண்களை பயத்திரை ஒன்று மெல்ல ஆக்ரமித்தது. அது அவள் முன் நின்ற ஆதவனால் மட்டுமல்ல அவன் பின்னிருந்த கன்னாடி சுவரின் வழியாக கொஞ்சம் கொஞ்சமாக கருமையைத் தத்தெடுத்து விகாரமாய் மாறிக் கொண்டிருந்த இராவாணின் மாற்றத்தாலும், உலகை உலுக்கிக் கொண்டு எங்கோ விழுந்த பேரிடியின் சத்தத்தாலும் தான்.

ஆதவனின் உடல் மேலும் இறுகிய பாரையாய் மாற மயில்விழி தடுமாறினாள்.

அந்த அறை முழுவதும் ஒரு மயான அமைதி நிலவ, மயில்விழியின் படபடக்கும் இதயத்தின் துடிப்பு சத்தம் மட்டும் தான் அந்த அறை முழுவதையும் நிறைத்திருந்தது. ஆதவனின் கோபம் ஏற ஏற அது மயில்விழியின் உடலில் ஏகப்பட்ட மாற்றத்தை கொடுத்தது. அழல் கக்கும் அவன் பார்வையின் வீச்சை ஒரு கட்டத்திற்கு மேல் தாங்க இயலாமல் அவள் தானாக தலை குனிய, சட்டென அவளைவிட்டு இரண்டடி பின்னே நகர்ந்த ஆதவன் திரும்பி பாராமல் விறுவிறுவென அந்த அறையில் இருந்து வெளியேறினான்.

அவன் சென்று மறைந்த அடுத்த இரண்டாவது நொடி மயில்விழியின் உடல் தூக்கிப் போட நெஞ்சைப் பிடித்துக் கொண்டு அவள் சரிந்து கீழே அமர்ந்தாள். மூச்சுவிட கூட வளியற்றுப் போய் இருந்த அந்த அறையில் வேகமாக காற்று வீச, வேகபெருமூச்சுக்களை எடுத்த மயில்விழி

" நீ இன்னும் மாறல ஆதவா... நீ இன்னும் மாறல... உன் சக்தியெல்லாம் தி...திரும்ப வந்துடுச்சு. நான்... நான் உ...உடனே சீத்தேஷ்கிட்டையும் பேசனும். "

அவள் தட்டுத்தடுமாறி அருகில் இருந்த கதிரையை பிடித்து எழுந்து நிற்க திடீரென அந்த அறையில் எரிந்து கொண்டிருந்த மின்விளக்கு பட்டென வெடித்து சிதறியது. காற்றின் வேகம் கூட, திடுக்கிட்ட மயில்விழி எழுந்து தன்னை பாதுகாக்கும் முன்பாக காற்றை கனத்துக்கொண்ட ஒரு விதமான மரண சூழல் அந்த அறையை ஆக்ரமிக்க யார் வந்தது என நொடியில் புரிந்து கொண்டவளுக்கு அதிர்ச்சியில் இருந்து மீள வாய்ப்பு கிடைக்கவில்லை. காற்றைக் கிளித்துக் கொண்டு அவள் அறைக்குள் நுழைந்திருந்தவனின் கைகள் அவள் கழுத்தை இறுக்கிய காரணத்தால்...

மூச்சுத் தடைப்பட அந்தரத்தில் தூக்கப்பட்ட மயில்விழி அவள் முன் ஜொளித்த தங்க நிற கண்களை கண்டு மேலும் பதற ஏளனமான நகை ஒன்று அவன் இதழை அலங்கரித்திருந்தாலும் எள்ளும் கொள்ளும் அவன் கண்களில் பிரளயமாய் வெடித்துக் கொண்டிருந்தது.

கண்களை அகல விரித்தவழ் அவன் கரங்களில் மூச்சுவிட இயலாமல் திமிற அவள் அதரங்கள் அவன் பெயரை தந்தியடித்தது. " மிரு...மிருதே...ஷ்... மிரு...தேஷ்வரா... "

கடுமை விழிகளில் அதிகரித்திட அவளை நேருக்கு நேராக பார்த்தான் மிருதேஷ்வரன்.

" மயில்விழி... மயில்விழி... எத்தனை அகங்காரம் உம் கண்களில்...? "

அவன் இளக்காரமாய் அவளை கண்டு சிரித்த சிரிப்பில் அவளின் உடல் நடுங்கியது. ஆனால் மேலும் அவனை நேராக பார்க்க இயலாமல் அவன் கண்களைவிட்டு தலை தாழ்த்திய மயில்விழி மூச்சுவிட இயலாமல் திமிறினாள். ஆதவனின் கோபத்தில் அவளை சூழ்ந்த சக்தியை காட்டிலும் மிருதேஷ்வரனின் விஷசக்தி அவளை நிலைகுலையச் செய்ய

" என்னவளை என்னிடமிருந்து பிரிப்பது ஏன் உம் தலையாய கடமையானதோ யான் அறியேன்... உம் நாடியை கிளித்தெறிய வெகு நேரம் ஆகுமென எண்ணுகிறாயோ? என்னவளை என்னிடமிருந்து பிரித்துவிடுவாயா என்ன? "

பதில் கிடைக்கப் போவதில்லை என அறிந்தவனாய் மிருதேஷ்வரன் அவள் அசந்த நேரம் வேகமாய் அவள் உடலை சுவர் ஒன்றில் அடித்து சாய்க்க, வலியில் கதறிய மயில்விழியின் அலறல் அவள் குரல் வளையத்தைத் தாண்டவில்லை.

" தெரிகிறதா இவ்வலி? இதற்கே தாங்காதோ உம் மானிட உடல்? " ஏளனமாய் சிரித்தவனின் புன்னகை நொடியில் மறைய, கண்ணீர் தேங்கிய அவள் விழிகளை உருத்து நோக்கியவன் " ஈராயிரம் வருடாந்திரம் எம் உயிர்நாடியில் தகிக்கும் அக்னியின் உக்ரத்தை அறிந்தால் என் செய்வாய்? "

" நீ... நின்...நின் செய்வது தவறு... "

மயில்விழிக்கே ஆச்சர்யம். இத்தனை ஆண்டுகள் பின் அவள் குடும்பத்தார் மட்டுமல்லாது அவள் உலகின் மொத்த துயருக்கும், இன்றளவிலும் அவன் குரோதத்தால் எழுப்பப்பட்ட இடைவிடாத மரண ஓலங்கலால் எண்ணற்றோரின் தூக்கமற்ற இரவிற்கும், அனுதினமும் தன் உயிரான குடும்பத்தை இழந்து அவள் தவிக்கும் தவிப்பிற்கும் காரணமான அவனே அவன் சுயஉருவில் திமிரோடு தன் கண் முன் வந்தும் அவனையே எதிர்த்துப் பேசும் தைரியம் தனக்கு எங்கிருந்து வந்ததோ என்ற ஆச்சர்யம்?

ஆனால் திமிரோடு அவளைப் பார்த்திருந்த மிருதேஷ்வரனுக்கு அவள் கண்களில் கொதித்த வெறுப்பு துச்சமாய் தெரிந்தது. மயில்விழியின் குரலில் தெரிந்த வீரம் பிடிக்காமல் மீண்டும் இரக்கமின்றி அவள் தலையை பலமாக சுவற்றில் இடித்தான். அவளின் வலி மிகுந்த அலறல் என்ன, அவள் நெற்றியில் கோடாய் வலிந்த இரத்தம் கூட அவன் மனதை கரைக்கவில்லை.

வலியில் வலுவிழந்து சரிந்தவளின் கழுத்தை நெறித்து சுவற்றில் சாய்த்தவன் சொருகும் அவள் விழிகளை ஒரு முறை பார்த்துவிட்டு " மீண்டுமோர் முறை எந்தன் ஆருயிரை என்னிடத்திலிருந்து பிரித்துப் பார்க்க கனாவிலும் நினைத்திராதே... "

இருமிக் கொண்டே சரிந்து விழுந்த மயில்விழி காற்றோடு காற்றாய் மறைந்தவனோடே மறைந்த மரணத்தின் சாயல் கானலாய் விட்டுச் சென்ற கடுங்குளிரில் நடுங்கிப் போய் சுவற்றோடு ஒன்றினாள்.

துவண்ட மலராய் அவன் கைத்தடங்கள் பதிந்த தன் கழுத்தை பிடித்துக் கொண்டு சாய்ந்தவளுக்கு அணைக்கட்டிய கண்ணீர் தடைப்புரண்டு ஓட வலியில் யாரையேனும் உதவிக்கு கத்தி அழைக்கக் கூட இயலாமல் அங்கேயே மயங்கி சரிந்தாள்.

ஆதவனின் வெண்மதி அவளா...

DhiraDhi ❤

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro