அத்யாயம் 7: பதிலில்லா கேள்விகள்
அத்யாயம் 7: பதிலில்லா கேள்விகள்
அவள் கண் முன்னே மறைந்த நீராவி இரயிலை ஆவென வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்த மதிக்கு பின் மண்டையில் ஏதோ பல்பெரிந்தது.
" முரசு இரயில்... இந்த பேர எங்கையோ கேற்றுக்கோமே, எங்க கேட்ட பேரு இது? முரசு... முரசு ட்ரெயின்... "
மதி ஐன்ஸ்டெயினுக்கு போட்டியாக செல்வதற்கு ஸைன்டிஸ்ட் ஆனதைப் போல் தீவிரமாக அவள் ஏழாம் அறிவை குடைந்து சிந்திக்க ஹர்ஷனே அவளுக்கு பதிலைத் தேடி தந்தான்.
" அதான்ம்மா நூரு வர்ஷமா உலகம் முழுக்க டைம் ட்ரவெல் பண்ணீட்டு இருக்க ட்ரெயினு... உனக்கு கூட இந்த ட்ரெயின நல்லா தெரியுமே, அப்டித் தான் சொன்னாங்க... நியாபகம் இல்ல? "
அவன் நூரு வருடம் என குறிப்பிட்டது தான் போதும் கண்களில் ஆயிரம் வாட்ஸ் பல்பு பிரகாசமாய் மின்ன இரயில் சென்று மறைந்த பாதையை அதிசயமாய் பார்த்த மதி
" ஹேஹே முரசு ட்ரெயினா அது? "
" ஹ்ம் ஆமா... இப்போ வா மதி கிளம்பலாம், நமக்காக முக்கியமான ஒருத்தர் காத்துக்குட்டு இருப்பாங்க. " வினோத் புன்சிரிப்போடு திரும்பி திரும்பி முரசு இரயில் சென்ற பாதையையே பார்த்துக் கொண்டிருந்தவளை பொருமையாக அழைத்துச் செல்ல
' இப்டி இவனுங்க கைல தனியா மாட்டிவிட்டுட்டுப் போய்ட்டானே இந்த பாவி மிரு! ஹையோ! ' என மனதில் புலம்பிக் கொண்டே அவன் காட்டிய திசையில் நடந்தாள்.
மதி பார்க்காத நேரம் பார்வை பரிமாறிக் கொண்ட ஆண்கள் இருவரின் மனதிலும் ஒரே விஷயம் தான் ஓடிக் கொண்டிருந்தது.
_கால மாயத்தில் மிருதேஷ்வரன் ஏதோ ஓர் மாற்றம் செய்திருக்க வேண்டும். அரச வாரிசுகளைப் பற்றி மதி அறிய வேண்டில்லை என எண்ணியிருப்பின் இவளை தற்போது தமையனிடம் அழைத்துச் சென்றதும் என்ன சொல்லி சமாளிப்பது?_
#
மதிய உணவை முடித்துவிட்டு நிலாவின் அறையில் அமர்ந்து இசையும் ஷேஷாவும் ஒன்றாக கடந்த நான்கு மணி நேரமாக படம் பார்த்துக் கொண்டிருக்க நிலா ஏதோ ஒரு யோசனையில் ஆழ்ந்திருந்தாள்.
இசையும் அவளை பல முறை அழைத்து அழைத்து அலுத்துப் போன பின்பு தான் ஷேஷாவோடு படம் பார்க்க இறங்கியிருந்தாள்.
இப்போது விட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்த நிலாவின் கவனத்தை அவள் பால்கெனியில் தெரிந்த ஏதோ ஒன்று ஈர்க்க, அவள் சட்டென திரும்பி பார்க்கும் முன்பாக அது அங்கிருந்து மறைந்திருந்தது.
எழுந்து பால்கெனிக்கு விரைந்து ஓடியவள் அங்குமிங்கும் சுற்றிப் பார்க்க, கருமேகங்களின் பின் ஒளிந்து மறைந்து அவளிடம் கண்ணாமூச்சி விளையாடிய ஆதவனின் சாயலின்றி மழை முகில்கள் நிலாவை வரவேற்க தயாரானது. மழை முகிலின் முதல் துளி அவள் வென்பஞ்சு கண்ணத்தில் பட்டுத் தெறிக்க, நிலாவின் இமைகள் தானாக மூடிக் கொண்டது.
சட்டென மீண்டும் இமைகளைப் பிரித்தவளின் கண்கள் வீட்டின் வாயிலை அலச அங்கு நின்று இவளை உருத்து நோக்கிக் கொண்டிருந்தவனின் கண்களும் அவள் விழிகளோடு ஒரே கோட்டில் சங்கமித்தது. முழுதாய் இருளுக்குள் மறைந்த உருவத்தில் தெரிந்த அந்த அழகான கண்கள் நொடியில் அவளை சிறை வைத்தன.
ஆனால் நிலா ஒரு முறை கண் மூடி திறப்பதற்குள் அங்கிருந்தவன் கனா போல் மறைந்திருந்தான். யாரவன்? முதலில் இது கனவா நிஜமா? நிஜ வாழ்வில் அத்தகைய மாயக்கார கண்கள் ஒரு மனிதனுக்கு இருக்கும் என்ற எண்ணத்தை நிலாவால் ஏற்க முடியவில்லை. ஆனாலும் அதை எங்கோ முன்பே பார்த்தது போல் விசித்திரமான உணர்வு அவளை இம்சிக்க
" எங்க போனாரு...? " யாரென தெரியாத மாயவனின் கண்களை மீண்டும் அந்த இருளடையத் தொடங்கிய சாலையில் தேட முயன்றாள்.
" ஏய் நிலா உன் உட்பி உன்ன தேடி இங்க நிக்கிறாரு நீ அங்க யார தேடீட்டு இருக்க? " இசை அறைக்குள் இருந்து கொண்டு குரல் கொடுக்க வேகமாக திரும்பி கதவருகில் நின்றிருந்த கௌஷிக்கைப் பார்த்தாள் நிலா.
" ஹாய் நிலா, " அவன் சினேகமாய் புன்னகைக்க இவளும் தலையை ஆட்டி வைத்தாள்.
ஷேஷா அவனை பார்த்ததுமே அட்டென்ஷன் சொன்னது போல் எழுந்து நிலாவின் அருகில் வந்து நின்று கொள்ள இசை அவன் நிலாவின் கைகளை கெட்டியாக பிடித்துக் கொண்டதுமே வாய் மூடி சிரித்துக் கொண்டாள்.
என்ன தான் தன் நண்பி தன்னிடம் சொல்லாமல் மாப்பிள்ளையை முடிவு செய்ததில் கொஞ்சம் கோபித்துக் கொண்டிருந்தாலும் என்றும் அவள் நலனை மட்டும் எதிர்நோக்கும் இசை " டேய் ஷேஷா குட்டி! வா நாம போய் அணகோண்டா படம் பார்க்களாம், "
" இல்ல இசை அக்கா! நான் வரல நீங்க தனியா பாருங்க, "
" சரி இல்லனா அவதார் பாப்போமா? "
நிலாவை மேலும் கெட்டியாகப் பிடித்துக் கொண்ட ஷேஷா " வேணாம் இசைக்கா! நான் வரல, "
" அக்கா மேல பாசம் இல்லையா தம்பி குட்டி உனக்கு? "
ஷேஷா சற்றும் யோசிக்காமல் இல்லவே இல்ல என தலையை ஆட்ட இசைக்கு புஸ்ஸென்று ஆகிவிட்டது. இருந்தாலும் கௌஷிக் முன் மேலும் இமேஜை டமேஜ் செய்ய விரும்பாமல் நிலாவைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்தவனின் கழுத்தைச் சுற்றிப் பிடித்து
" அட வா டா அவதார் குட்டி நாம போய் இப்போ கொரியன் ஸீரீஸ் பார்க்கப் போறோம்! " என வம்படியாக வந்து அவன் திமிற திமிற அவனை வெளியே இழுத்துச் சென்றிருந்தாள்.
கௌஷிக்கையே திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே செல்லும் ஷேஷாவை கண்டு புன்னகைத்த நிலா
" சொல்லுங்க. உங்களுக்கு என்ன வேணும்? "
" என்னப் பேரு சொல்லி கூப்பிடு நிலா இதென்ன வாங்க போங்கன்னு, கால் மி கௌஷிக், " அவன் மிகவும் கஷ்வலாக சொல்லிக் கொண்டே உள்ளே வந்து நிலாவின் கதிரை ஒன்றில் அமர்ந்தான்.
" அது வந்து... பாட்டி... பாட்டி வந்து கட்டிக்கப்போறவங்க பேரு சொல்லக் கூடாதுன்னு சொல்லியிருக்காங்க... " நிலா சற்று தயக்கத்தோடே அவனை நேராக பார்க்காமல் பதில் கூற
" அதெல்லாம் அவங்க காலத்து லாஜிக் நிலா. நீ என் கூட உன் இஷ்டப்படியே இருக்களாம். என் பேரு சொல்லியே கூப்பிடு, "
மேலும் மேலும் மறுத்துப் பேசி வார்த்தையை வளர்க்க வேண்டாம் என்ற எண்ணத்தில் அவள் தலையை மட்டும் ஆட்ட கௌஷிக் அவள் அறையை சுற்றி நோட்டமிட்டான்.
பால்கெனிக்கு அருகிலே கட்டிலும் இரண்டு அலமாரிகளுடன் ஒரு சின்ன ட்ரெஸ்ஸிங் டேபிலும் அழகாய் சுவரோடு ஒட்டி அமைக்கப்பட்டிருக்க, மற்றொரு ஓரத்தில் ஒரு மேஜையும் இரண்டு கதிரைகளும் கிடந்தது. நேர்த்தியாய் எடுத்தப் பொருளை எடுத்த இடத்தில் வைக்கும் பழக்கம் கொண்ட நிலாவின் அறை சிறிதாக இருப்பினும் அவளின் மேன்மை தன்மையால் சுத்தமாகவும் அழகாகவும் இருந்தது.
" புக் படிக்கிற பழக்கம் இருக்கா நிலா? என்ன மாதிரி புக்ஸ் படிப்ப? " என எழுந்து அவளின் மேஜையை அவன் ஆழம் பார்த்தபடி கேட்க
" அ...இ...இல்ல பெருசா புக் படிச்சு... ப...பழக்கம் இல்ல... வரையப் புடிக்கும், "
" ஓஹ்... "
" உங்களுக்கு? உங்களுக்கு என்ன புடிக்கும்? "
" ம்ம் எனக்கு வெளிய ஊரு சுத்துனா புடிக்கும். வாயேன் பக்கத்துல எங்கையாவது போயிட்டு வரலாம், "
" இல்ல... அது...அ மழை... மழை வர மாதிரி இருக்கு. "
" ஓஹ் ஆமால்ல... சரி அப்போ இங்கேயே பேசலாமே. வா இங்க உக்காரு, "
இன்னமும் நிலாவின் முகத்தில் லேசான பயம் தெரிய அவளது கட்டிலின் நுனியில் அமர்ந்தவளின் கைகள் அவளது துப்பட்டாவை ஒரு வழி செய்து கொண்டிருந்தது.
" ஏன் நிலா உனக்கு வெளிய சுத்துறது பிடிக்குமா? ஏன் கேக்குறன்னா கல்யாணத்துக்கு அப்பரம் நாம நிறைய இடம் சுத்திப் பார்க்கனும் அதான், "
நிலா படபடக்கும் தன் மனதை அமைதிப் படுத்திக் கொண்டு தான் கட்டிக்கொள்ளப் போகும் மாப்பிள்ளை தான், பயப்படுவதற்கு அவசியமில்லை என தனக்குத் தானே கூறிக் கொண்டு தலையை மட்டும் ஆட்டினாள்.
" அப்போ நான் எங்க கூப்பிட்டாலும் எதுவும் சொல்லாம வருவ தான? " என கௌஷிக் மர்மமான புன்னகையோடு கேட்க முதலில் முளிமுளியென முளித்த நிலா
" அஹ்... நான் அத்தான் கூட தான் எப்பவும் வெளிய... வெளிய போவேன்... அதுனால... அதுனால தனியா இல்லாம இருந்தா...நான் வருவேன். "
" அத்தானா? ஓஹ்... ஹர்ஷன சொல்றியோ... ஹே நீ ஏன் அப்போ என்ன அத்தான்னு கூப்டல? நான் தான மொறப்படி உனக்கு அத்தான்? " என திடீரென கௌஷிக் தாடையில் கைவைத்து யோசிக்க மலங்கமலங்க விழித்த நிலாவிற்கு எங்கு அத்தான் என்று கூப்பிடு என சொல்லிவிடுவானோ என பயத்தில் கண்கள் நான்கு சென்ட்டிமீட்டருக்கு விரிந்த நேரம்
" இல்ல இல்ல கௌஷிக்குன்னு நீ கூப்பிடு மொதல்ல... கல்யாணத்துக்கு அப்பரம் அத்தான் மாமான்னு மாத்திக்கலாம், " என கௌஷிக் நிலாவைப் பார்த்து கண்ணடித்து சிரித்தான்.
நிலா பதில் ஏதும் சொல்லாமல் மண்டையை மட்டும் ஆட்டிவிட்டு வேறேதேனும் கிடைக்காதா பேச்சுக் கொடுக்க என அவள் பதினைந்து வருடத்திற்கும் மேலாக இருக்கும் அறையை புதிதாய் அஸ்திவாரம் போட்ட தாஜ்மஹாலைப் பார்ப்பது போல் சுற்றி முற்றிப் பார்த்தாள்.
அதையெல்லாம் கவனித்திராத கௌஷிக் " சரி ஹர்ஷன விடு அவன் எல்லா நேரமும் உன் கூடவா வருவான்? அவன்லாம் உன் கூட இருக்கப் போறதில்ல. நான் தான் கண்டிப்பா இருப்பேன். நீ நான் எங்க கூப்ட்டாலும் வருவ தான? "
ஏனோ அவன் ஹர்ஷன் அவள் வாழ்வில் இருக்க மாட்டான் என கூறியது நிலாவின் முகத்தை வாடவைக்க அதை கட்சிதமாய் மறைத்த பாவை பார்வையை அவனிடம் இருந்து திருப்பிக் கொண்டாள்.
" அது அப்போ பார்க்கலாம்... மே பி... "
" நீ கண்டிப்பா வருவ, அப்போ அத நாம அத என்ஜாய் பண்ணுவோம். சரி நிலா எனக்கு ஒரு வேலை இருக்கு... நான் அப்போ கிளம்புறேன், " என எழுந்து நிலா தலையசைத்ததும் அவள் அறையிலிருந்து பொருமையாக வெளியேறினான் கௌஷிக்.
அவன் போகும் வரை தரையை அளந்து பார்த்துக் கொண்டிருந்த நிலா பெருமூச்சோடு அவள் கட்டிலில் சரிய, மனம் ஏனோ போல் இருந்தது அவளுக்கு.
வாழ்கையை பெரிதும் பார்த்து வாழ்ந்திராத நிலாவிற்கு பாட்டி திருமணம் என்ற பேச்சை எடுத்ததும் முதலில் பெரிதாக தெரியவில்லை. இப்போது ஒரு புதியவன் தன் வாழ்வில் நீலகிரி மலை போல் நடுவே உதித்திருக்கிறான் என புரிந்ததும் மெல்ல இப்போது தான் ஏதோ ஒரு பயம் அவள் மனதை ஆட்டிவைக்கத் தொடங்கியது போலும்.
முதல் முறை கௌஷிக்கை நிச்சயதார்த்தம் நடக்கும் இரண்டு மணி நேரம் முன் பார்த்தது முதற்கொண்டு நேற்று முழு நாளும் அவளுக்கு இத்தகைய பயம் வரவில்லை. பின் தனியே அவன் மீது என்ன பயம்?
ஒருவேளை கூட்டமாக பார்த்துவிட்டு திடீரென இப்போது நானும் நீயும் தான் என அவன் வந்து நின்றதால் வந்த நடுக்கமா? தான் திருமணம் என்ற பந்தத்திற்கு இன்னமும் தயாராகவில்லையோ?
பதிலில்லா கேள்விகளோடு குழப்பத்தின் ஊடே கண்களை மூடிய நிலாவை நித்திராதேவி தற்காலிகமாக வந்து அணைத்துக் கொண்டாள்.
ஆதவனின் வெண்மதி அவளா...
DhiraDhi ❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro