🌞 ஆதவன் - 7 🌞
நான் நினைக்கவில்லை அன்றைய பயணம் அவ்வளவு இனிமையாக அமையும் என்று.....
ரம்மியமான மாலை நேரம்
சாமந்தி இதழ்கள் சிதறியதை போல இருந்தது வானம்....
செங்காந்தள் இதழ்கள் முழுவதும் அணிந்திருந்த சூரியனோ மலைக்கு பின்னால் இருக்கும் தன் வீட்டிற்கு விரையும் நேரம் அது......
சிறிது நேரத்தில் இரவின் மடியில்...
தென்றல் காற்று மெல்லிசையாய் தாலாட்டுப் பாட...
சிறு பரவசத்துடன் அந்த நிலாவோடு நானும் பயணிக்கிறேன்.....
அதிகாலை நேரம் என்னை சுற்றி வெண்பணிமேகம் சூழ்ந்திருக்க மெல்ல முன்னேறினேன்...
ஒரு பெரிய மலை உச்சி அங்கு செல்லும் வழி எங்கும் கண்ணிற்க்கு குளிர்ச்சியாக பச்சை பசேலென்று சிறு சிறு செடிகள்......
அந்த செடிக்கு மேலும் அழகு சேர்க்கும் விதமாக அவற்றின் பிள்ளைகள் போன்ற பூக்கள் பல வண்ணங்களில் ரம்மியமாக காட்சியளித்தன......
இவற்றை கடந்து அந்த பாறை...
முழு காட்டையும் பார்க்கும் விதமாக தூரத்தில் நேற்று விடை பெற்று கொண்ட அதே ஆதவன் இன்று தரிசனம் தருகிறான்......
வாழ்வின் துன்பங்கள், கவலைகள், குழப்பங்கள் அனைத்தையும் மறைந்து என் அடிவயிற்றில் இருந்து கத்துகிறேன்....
நான் போடும் சத்தத்திற்க்கு எதிர் சத்தம் தருகிறான் அந்த மலை....
இந்த நொடியில் உணர்கிறேன் சொர்கம் இதுதானோ ?????
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro