🌞 ஆதவன் - 3 🌞
தினமும் தான் நான் மறைகிறேன் அந்த மலையடிவாரத்தில்....
அன்றொரு நாள் அவளை முதல் முதலில் பார்த்தேன்...
அன்றிலிருந்து அவளை காண வேக வேகமாக மலையடிவாரம் சென்றேன்....
என்னை கண்டதும் அவள் மேனி எங்கும் செவ்வனே சிவந்தது...
என்னை கண்டவுடன் ஏற்பட்ட வெட்கமா இல்லை அவள் நாணத்திற்க்கு புது வார்த்தை தேடுகிறேன்......
என்னை அறியாமல் அவளின் அந்த சிரிப்பில் என்னை பறிகுடுத்தேன்....
அவளிடம் விளையாட எண்ணி சற்று தாமதமாக வந்தேன்...
அப்போதும் கூட இன்னும் அழகாக என்னை பார்த்து சிரித்தாள்....
அந்த சிரிப்பிற்க்காக சற்று தாமதமாக சென்று பழகினேன்....
என்றுபோலவே அன்றும் அவளை காண ஓடிச் சென்றேன் அவள் அங்கு இல்லை....
பல நாட்கள் ஆனது மாதங்கள் முடிந்தது.....
அவளை காணாமல் என் செங்கதிர்களை யாரும் காண முடியாத நிலையில் மேகத்தில் என்னை மறைத்துக்கொண்டேன்....
மாறி மழையாக கண்ணீர் சிந்தினேன்.....
சில மாதங்கள் கண்ணீரில் தவழ்ந்து சோர்ந்து போய் மறுபடியும் அவள் இருப்பாளா என்று காண சென்றேன்...
அவளை முதல் நாள் பார்த்தது போலவே அழகாக என்னை பார்த்து வெக்கித்து சிவந்தாள் அவள் வேற யாரும் இல்லை
அழகிய அந்திமத்தாரை பூக்கள் ....... 😍😍😍
.................................................................
Intha update suriyan pani kaalathula sekirama maranjurum kodai kaalathula late ah marium aduku aduthu malaikathula surayani pakkarthy kastama erukum so atha base panni write pannathu.......
Unga comments ah share pannunga frds 😊😊😊
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro