35
அந்த கதவில் இருக்கும் வெவ்வேறு வண்ணத்திலான எழுத்துக்கள் என்ன கூற வருகிறதென்று தெரியாமல் இருவரும் முழிக்க அந்த தீப்பந்தம் எப்பொழுது வேண்டுமென்றாலும் அணைந்து விடுவதை போல் இருந்தது . ஆராதனாவோ இது வேறா என்று நினைத்தவள் அருகே ஏதேனும் குடுவை போல் இருக்கிறதா என்று தேட அங்கே கதவின் இரு புறமும் எண்ணெய் நிறைந்து திரியுடன் இரு பெரிய ஆளுயர விளக்குகள் இருந்தது .
அதை கண்டு நிம்மதி பெருமூச்சு விட்ட சகோதரிகள் அந்த கதவை அப்பொழுதே ஊன்றி கவனிக்க ஆரம்பித்தனர் .யோசித்துக்கொண்டே இருந்த ஆராதனாவின் மொழியில் அவளின் பாட்டி உதிர்த்த "காக்கும் தெய்வமான விஷ்ணுவும் அழிக்கும் தெய்வமான சிவனும் ஒரே கோட்டில் சந்திக்கும் போதே அவனை காக்க வழி பிறக்கும் "என்ற வார்த்தைகள் மூளைக்குள் ரீங்காரமிட்டு அந்த கதவையே ஆழ்ந்து நோக்கினாள் ஆதிரா .
சற்று நேரம் அதை உற்று நோக்கியவளிற்கு ஏதோ தோன்ற பின் எதையோ கண்டுபிடித்த பாவனையை கொண்ட ஆதிரா ஆராதனாவின் தோளை சுரண்டினால் ."அக்கா அக்கா அக்கா இங்க பாரேன் "என்று அவள் முதுகிலேயே அடிக்க
ஆராதனாவோ "அடியேய் அடியேய் என்னடி என்னடி ஏண்டி அடிக்குற?" என்று கேட்க ஆதிராவோ அதிவேகமாய் அந்த ஒரு கதவிலிருந்த எழுத்துக்களை மாற்றி மாற்றி பொறுத்த ஆரம்பித்தாள் .
ஒற்றை கதவில் அவள் ஐந்து நிமிடமாய் எழுத்துக்களை மாற்றி மாற்றி வைக்க கொஞ்சம் கொஞ்சமாய் அந்த கதவின் ஒரு பாதி பெருமாளின் பாதி உருவத்தை போல் ஓம் நமோ நாராயணா என்று வாக்கியம் திரும்பி திரும்பி வர அதை பார்த்தவள் மூலையில் மின்னல் வெட்ட இந்த கதவில் ஓம் நாம சிவாய என்று எழுத்துக்களை மாற்றி அமைக்க ஆரம்பித்தாள் .அந்த கதவு மிகவும் பெரிதாய் இருக்க ஐந்து நிமிடத்திற்கு ஒரு வரியில் பாதியை தான் இருவராலும் அடுக்க முடிந்தது .
விடாது முயன்று அவர்களும் ஆறு மணி நேரமாய் உணவின்றி தண்ணீரின்றி விடாமுயற்சியோடு அந்த கதவுகளின் எழுத்துக்களை வரிசை படுத்த இதோ கடைசி எழுத்தை இருவரும் ஒரே நேரத்தில் முடிக்க ஒருபுறம் பாதி உடலில் சிவனும் ஒரு புறம் பாதி உடலில் விஷ்ணுவும் இருக்க அந்த கதவின் நடுவே அமைந்திருந்த திருகு ஒன்று தானே சுழன்று அந்த கதவு தானாய் திறந்தது .அந்த ஆளுயர விளக்கின் அருகில் தொங்கிக்கொண்டிருந்த ஓர் சிறு விளக்கை கையில் ஏந்தியவர்கள் முன்னே நடக்க அங்கே அந்த விழுதுகள் மண்டிய இடத்தின் நடுவே கசிந்த வெளிச்சமும் அங்கிருந்த வந்த சத்தமும் அவர்கள் தேடி வந்தது அங்கே தான் இருக்கிறதென்று உணர்த்த வேக வேகமாய் அந்த இடத்தை அடைந்தவர்கள் அங்கிருந்த விழுதுகளை அங்கே இருந்த ஒரு கட்டையால் பிய்த்தெடுக்க அந்த விழுதுகளில் முளைத்திருந்த முற்கள் அவர்களின் மேனியின் பல இடங்களை வஞ்சனை இன்று பதம் பார்த்தது .
எனில் அவர்கள் இருவரும் அதை உணரும் நிலையில் சுத்தமாய் இல்லை .இருவரின் மனத்திலும் மூலையிலும் இருந்த எண்ணம் ஒன்றே ஒன்று தான் அது தங்களின் தந்தையை காணப்போகிறோம் என்ற நினைவு தான் .அந்த விழுதுகள் மொத்தத்தையும் பெயர்த்தெடுத்தவர்களின் முன்னே இருந்தது வெள்ளை நிறத்திலாலான ஒரு பெட்டி .
அதை பார்த்தாலே தெளிவாய் தெரிந்தது எழும்பினால் செய்யப் பட்டிருந்ததென்று .அந்த பெட்டியை பார்த்ததுமே இருவரின் கண்களிலும் கண்ணீர் நிறைந்துவிட்டது தங்கள் தந்தையின் எலும்பில் செய்ததல்லவா எந்த பிள்ளையால் சகிக்க முடியும் இப்படி ஒரு நிலையில் தன்னை ஈன்றவனை பார்க்க .
இத்தனை நேரமாய் தடதடத்துக்கொண்டிருந்த அந்த பேட்டி அவ்விருவரின் கையின் ஸ்பரிசம் பட்டதும் அமைதி ஆகிட அந்த பேட்டியின் விளிம்பிலிருந்து நீர் வெளியேறியது தன் மகவுகள் ஸ்பரிசத்தில் ஆனந்த கண்ணீரை வெளியற்றுகிறானோ விஷாகன்?அந்த பெட்டியை இருவரும் திறக்க போக அது இவர்கள் தொடும் வரை ஒன்றும் காட்டாது இருந்தது இவர்கள் பலம் கொண்டு இழுக்கவும் மின்சாரம் தாக்கியதை போல் இருவரையும் தூக்கி அடித்தது .
இருவரும் புரியாது பார்க்க மீண்டும் மீண்டும் அவர்கள் பலம் கொண்டு இழுக்கும் போதெல்லாம் மின்சாரம் தாக்குவதை போல் தூக்கி அடித்தது .என்ன இது என்று இருவரும் புரியாமல் பார்க்க அந்த பெட்டிக்கருகில் சென்று ஆராதனை மீண்டும்இழுக்க போக ஆதிராவோ அவள் கையை பற்றியவள் வேண்டாம் என்பதை போல் இருபுறமும் தலை அசைத்தாள் .
பின் அந்த பெட்டியை ஆராய அதன் மேற்பகுதியில் இரு கைகளை போல் இருந்தது அதனுள் ஒரு ஓட்டை போல் இருக்க என்ன என்று புரியாமல் யோசித்தனர் இருவரும் அப்பொழுது ஆதிராவின் சிந்தையில் திடீரென வந்தது அந்த முதியவர் கூறிய வரிகள் "பிற்பாதி நீ செல்ல முற்பாதியுடன் உணர்வுடன் உயிரை சேர்த்திடு வழி அது கிடைத்திடும் "
உணர்வுடன் உயிரதை சேர்த்திடு அந்த இரு ஓட்டைக்குள்ளும் ஒரு சிறிய முயற்சியாய் தயக்கத்திடன் அந்த விழுதிலிருந்த ஒரு முல்லை பிய்த்தெடுத்தவள் தனது கையை கீறி ஒரு ஓட்டையில் தன் ரத்தத்தை விட அதை குழப்பத்துடன் பார்த்த ஆராதனாவிடம் விழியால் செய் என்று கூற அவளும் அதே போல் செய்ய இருவரின் ரத்தத்துளியும் சேர்ந்த நொடி அந்த இடத்தையே கண்கள் கூசும் அளவிற்கு ஒளி நிறைத்தது.
இருவரும் கண்களை மூடிக்கொள்ள அந்த பேட்டி தானாய் திறந்து அதிலிருந்து கரும்புகை உருவமொன்று வெளியில் வந்தது .அந்த ஒளி கொஞ்சம் கொஞ்சமாய் மறைய கண்களை திறந்து பார்த்தவர்களின் முன்னே இருபது வருடங்களுக்கு முன் இருந்த யவ்வனம் மாறாமல் அப்படியே அதே உருவத்தில் அவர்களை நோக்கி பாசம் பொங்கும் கண்களோடு நின்றிருந்தான் விஷாகன் .விஷாகனின் ப்ரேதாத்மா .
தன் கண்களையே நம்பாது மீண்டும் மீண்டும் கசக்கி பார்த்த இருவரும் ஆனந்தத்தில் கால்கள் அவ்விடத்தே உறைய கண்களில் கண்ணீர் பெறுக வாய் அப்பா என்று முணுமுணுக்க அப்படியே நிற்க அவனோ ஆனந்த கண்ணீர் பொங்கும் விழியோடு தன் இருகைகளையும் விரித்து இருவரையும் அழைத்தான் "குட்டிமா "என்று .
ஏதோ மந்திரத்திற்கு கட்டுப்பட்டவர்கள் போல் அவனிடத்தில் ஓடியவர்கள் அவனை இருபுறத்திலிருந்தும் ஐந்து வயது சிறுமியாய் மாறி அணைத்துக்கொண்டனர் அப்பா என்ற கூவலுடன் .
உயிருள்ள மனிதனோ உயிரற்ற ஆன்மாவோ பாசம் மாறுவதில்லையே .தன் மகள்களை காண முடியாதா? அவர்களை அன்புடன் அணைக்க முடியாதா? அப்பா என்ற கூவலை கேட்க முடியாதா ?என்று உள்ளில் வெந்துருகியே உள்ளே அடைபட்டு கிடந்தவனிற்கு அவ்விருவரின் அணைப்பு மயிலிறகால் வருடுவதைப்போல் இருந்தது .இருவரையும் பிரித்தவன் அவர்களின் முகவடிவை பாசத்தோடு வருடினான் அவனின் மனைவியின் ப்ரதிபிம்பமாய் நின்றிருந்தனர் இருவரும் .
இருவரையும் உச்சி முகர்ந்து முத்தமிட்டவனின் கண்களில் அடுத்த நொடி வெறியேறிட கரும் நிற கண்களின் கருவிழிகள் பழுப்பு நிறமாய் மாறிட இருபது வருடங்களுக்கு முன் நிகழ்ந்த நினைவுகள் முழுதும் மனதின் முன் படமாய் விரிய நீலகாந்தா என்று கத்தியவன் ஆதிராவையும் ஆராதனாவையும் அழைத்துக்கொண்டு அவ்விடம் வந்து சேர்ந்தான் .
(flash back ஓவர் )
கண்களில் அரண்ட தோற்றத்துடன் நின்றுகொண்டிருந்த நீலகாந்தனோ கொஞ்சம் கொஞ்சமாய் ஏளனத்தை பூசிக்கொண்டவன் "வா வா இளவனே வா வரவேற்கிறேன் .நீ எதிர் வந்தால் பயந்து ஒடுங்கி சரணடைவேனென நினைத்தாயோ "என்று கூறியவன் தன் இரு கைகளையும் விரித்து ஆங்காரமாய் கத்தினான் "சம்ஹித்த வம்சத்தின் சிம்ம சொப்பனமடா நான் நீலகாந்தன் "என்று கத்தியவன் கையில் கண்ணை பின்னே காட்ட அங்கே நூறு காவலர்கள் நால்வரையும் சுற்றி வளைத்தனர் .
அருள்மொழியும் ஆதேஷும் ஆராதனா மற்றும் ஆதிராவின் கையில் வாளை தூக்கி போட்டவர்கள் அந்த காவலர்களுடன் சண்டை இட துவங்க இங்கு விஷாகனிற்கும் நீலகாந்தனிற்குமோ பேரும் போரே நடந்து கொண்டிருந்தது .
நீலகாந்தன் முதலில் தனது சக்தியை ப்ரோயோகித்து ஓர் பேரும் தீப்பந்தை உருவாக்கியவன் விஷாகனை நோக்கி அதை ஏவி விட விஷாகனோ சிரித்தவன் உதடு குவித்து காற்றை ஊத அந்த நெருப்பு பந்து அணைந்து நீலகாந்தனே இரு அடி தள்ளி நின்றான் .
ஒரு மெச்சுதல் பார்வை பார்த்தவன் அடுத்த அஸ்திரமாய் மந்திரத்தின் மூலம் அடுத்த சக்தியை அனுப்ப விஷாகன் எதிர் தாக்குதல் புரிய என்று அவர்களுக்குள் சக்திகள் நிறைந்த போர் நீடித்துக்கொண்டே சென்றது .ஆதேஷும் அருள்மொழியும் ஆராதனாவும் ஆதிராவும் வாள்பயிற்சியில் தாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்று நிரூபிக்க அந்த காவலர்களை வாழை தாரை போல் வெட்டி சாய்த்துக் கொண்டிருந்தனர் .(அப்பறம் சொல்ல மறந்துட்டேன்ல ஆதிரா sword fight முறையா கத்துக்கிட்டவப்பா அவன் அவன் சம்மர் கிளாஸ்க்கு drawing போனா இவ மட்டும் horse riding ,sword fighting , archerynu போவா )
சரியான போர் மூள ஆராதனாவின் பின் ஒரு காவலன் குத்த வர விஷாகன் "ஆராதனா "என்று கத்தி கவனத்தை சிதற விட நீலகாந்தனோ அந்த இடைவேளையில் தன் சக்தியை விஷாகனின் மேல் பாய்ச்ச உடல் அங்கங்கள் எரியும் உணர்வை பெற்றவன் வலி தாளாமல் கீழே விழுந்தான் .அவன் கத்தலில் திரும்பிய நால்வரும் அவனின் நிலை கண்டு பதற அவர்கள் அங்கே செல்ல முடியாதவாறு அந்த காவலர்கள் சுற்றி வளைத்திருந்தனர்.
அவனின் அருகே ஏளனச்சிரிப்புடன் வந்த நீலகாந்தனோ அவனின் வயிற்றில் காலை வைத்தவன் அவன் வலியில் கத்த கத்த"என்னை எதிர்கிறாயோ? முட்டாளே உன் மனைவியை உன் கண்முன்னே துடிக்க துடிக்க கொன்றேனே,உனது தலையை துண்டாக்கி கொன்று உன்னை எரித்து உன் எலும்புகளாலே உனக்கு விலங்கு பூட்டினேனே இன்னுமா உனக்கு புத்தி வரவில்லை ?"
என்றவன் பின் சிரித்து "பரவாயில்லை இரண்டாம் முறையாய் என் கைகளால் அழிந்து போ என்ற மந்திரம் உச்சரிக்க உச்சரிக்க விஷாகன் உடலில் எரிச்சல் அதிகமாக அவன் ஆஆஆ என்று கத்த அதை கண்டு "அப்பா "என்று ஆராதனாவும் ஆதிராவும் கத்த நொடியில் சண்டை இட்டுக்கொண்டே அருள்மொழி ஏதோ மந்திரம் உச்சரிக்க அவன் கையில் ஒரு வாள் போன்ற ஒன்று உருவாக விஷாகனை நோக்கி ஓடிக்கொண்டிருந்த ஆராதனாவிடம் "கண்ணம்மா "என்று கூவலுடன் தூக்கி போட்டு சண்டையை தொடர்ந்தான்.
அதை கையில் பிடித்த ஆராதனா ஆதிராவின் கையையும் அந்த வாளோடு பிணைத்தவள் நீலகாந்தன் எதிர்பாரா நேரம் அவனை பக்கவாட்டிலிருந்து மிதித்தவர்கள் விஷாகனை தூக்கி அவன் திரும்பி சுதாரிக்கும்முன் மூவரும் சேர்ந்து நீலகாந்தனின் வயிற்றில் குத்த மேகக்கூட்டத்திலிருந்து வெளிவந்த முழுமதியின் ஒளி அந்த வாளை நிறைக்க நீலகாந்தன் கண்கள் ரேத்த நிறம் கொள்ள அவனின் உடலில் இருந்து ரெத்தம் வெளியேற துவங்கிட அந்த வாளை உருவிய விஷாகன் ஆருத்ராவின் கதறல் ,கடைசியில் அவள் இறக்கும் தருவாயில் தந்த முத்தம், அவளுடன் வாழ்ந்த நாட்கள், அவளின் சிரிப்பு என்று அனைத்தும் நினைவில் வந்து அவனை இம்சிக்க வெறிபிடித்தவன் போல் கத்தியவன் அந்த வாளை உருவி உருவி அவன் உடலெங்கும் சதக் சதக் என்று நீலகாந்தன் நிலத்தில் சரியும் வரை அவன் உடல் சல்லடை சல்லடையாய் ஆகும் வரை குத்தினான்.
நீலகாந்தன் உயிர் அவன் உடலை விட்டு பிரிய அவன் நிலத்தில் சரிந்த அடுத்த நொடி அவன் ஆன்மாவும் உடலும் தீ பற்றிக்கொள்ள எரிந்து சாம்பலாகி காற்றில் கரைந்தான் அந்த அயோக்கியன் .அவன் முடிந்ததும் அவர்கள் போரிட்டுக்கொண்டிருந்த காவலர்களும் மண்ணோடு மண்ணாய் மாறிப்போக அருள் மொழியும் ஆதேஷும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டவர்கள் விஷாகனை பார்த்துக்கொண்டிருந்த ஆதிரா மற்றும் ஆராதனாவின் பக்கம் வந்து நின்றனர் .
அவன் கரைவதை பார்த்து ஆனந்தமாய் சிரித்த விஷாகன் தன் கையிலிருந்த வாளை கண்ணீர் திரையிட வருடினான் அந்த வாள் நீலகாந்தனின் மரணத்தின் ஆயுதம் வேறு எதுவும் அன்று ஆருத்ராவின் முதுகெலும்பில் இருந்து செய்யப்பட்டது தான் .அதை நெஞ்சோடு அணைத்தவமன் ஆரு என்று சன்னமாய் முனங்க அவனின் தலை முடியை யாரோ கோதும் உணர்வை பெற்றான்.யாரென்று நிமிர்ந்து பார்க்க அவனின் காதல் மனைவி ஆருயிர் ஆருத்ரா தான் அவனை நோக்கி காதல் கசியும் கண்களோடும் மந்தகாசப்புன்னகையோடும் நின்றுக்கொண்டிருந்தாள் ஒளி உருவமாய்.
அவளை கண்டதில் பேரானந்தம் அடைந்தவன் "ஆரு "என்று அவளை தாவி அணைத்துக்கொள்ள தன் கணவனை தானும் காதலோடு அணைத்துக்கொண்டவள் சன்ன குரலில் அவன் காதோரம் கிசுகிசுத்தாள் "என்னங்க நமக்கான வேலை இப்போ முடிஞ்சுருச்சு இனி நம்மள யாராலயும் பிரிக்க முடியாது.இனி நமக்கு இங்க வேலை இல்ல போலாமா ?"என்று அவன் முகத்தை நிமிர்த்தி கேட்க
அவனோ அவளின் முகத்தை இருக்கைகளில் ஏந்தியவன் அவள் நெற்றியில் முத்தமிட்டு "போலாம்டா "என்று கூற இருவரும் கை கோர்த்தவாறு ஒருமுறை ஆதிராவையும் ஆராதனாவையும் நோக்கி சிரித்தவர்கள் கை அசைத்தவாறே கொஞ்சம் கொஞ்சமாய் மறைய துவங்கினர் .
அதுவரை நடப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஆதிராவும் ஆராதனாவும் இருவரும் மறைய துவங்க அம்மா அப்பா என்றருகில் செல்ல போக அவர்கள் இருவரையும் கை பிடித்து தடுத்தனர் அருளும் ஆதேஷும் "அவுங்க அவுங்க உலகத்துக்கு போறாங்க விடுங்க "என்று இருவரும் இயலாமையுடன் கண்ணீர் நிறைந்த கண்களுடன் தனது அன்னை தந்தையரை கண்ணில் நிறைத்தவாறே அவ்விடத்தை வெறித்தவாறே நின்றிருந்தனர் .
அவர்களின் தோளை பற்றிய ஆதேஷும் அருளும் செல்லலாமா? என்று கண்களாலே கேட்க கண்ணீரை துடைத்து முயன்று புன்னகைத்தவர்கள் செல்லலாம் என்று ஒற்றை தலை அசைப்பாள் பதிலளிக்க இந்த நிமிடம் அதர்மம் அழிந்து தர்மம் மீண்டும் ஸ்தாபிக்கப்பட்டிருக்க மந்திரக்கட்டில் இருந்த தெய்வங்கள் அனைத்தும் தமது சக்தியை மீண்டும் பெற பாழடைந்த ஆதவக்குலத்து அரண்மனை தன்னை தானே சீர் செய்தபடி ஒலியுடன் மின்ன துர்சக்திகள் நிறைந்ததென்று ஒதுக்கப்பட்ட ஆதவக்குலத்தின் குளக்கோவில் தமது தெய்வீக சக்தியை மீண்டும் பெற்றது .ஆதவக்குலம் தமது இளவரசிகளை அதீத சக்தியுடன் மீண்டும் பெற்றது .
shobaaaa muduchuten muduchuten oru vazhiyaa muduchuten kadhaya .naalaiku epilogue ungalai thedi varum makkale
Other works
1. கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா
2. தோழியா என் காதலியா
3.solace in solitude
4. உன் அன்பில் சுகமாய் தொலைந்தேனடி
5. மறப்பதில்லை நெஞ்சே
6. தாலாட்டும் சங்கீதம்
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro