3
அடுத்த நாள் காலை கதிரவன் தன் வேலையே செவ்வனே செய்திட கதிரவனின் தாக்கத்தால் கண்கள் கூச சிறிது சிறிதாய் நித்திரா தேவியின் அணைப்பிலிருந்து வெளியே வந்தாள் ஆதிரா. கண்களை கசக்கி எழுந்தவள் தன் அறையின் ஜன்னல் திரையை விளக்கி விட்டு மேலே வானில் இருக்கும் சூரியனை நோக்கி தன் அரைத்தூக்க பார்வையை செலுத்தியவள் ஒரு கையால் கண்ணை கசக்கிக்
கொண்டே மற்றொரு கையால் சல்யூட் அடித்தவள் "வணக்கம் தலைவா "என்று சூரியனுக்கு முதல் காலை வணக்கத்தை வைத்து விட்டு குளித்து விட்டு வந்தாள் .
குளித்துவிட்டு வெளியே இரவாடையோடு வந்தவள் cupboardai திறந்து "என்ன போடலாம்" என்று அலச அவள் கையில் சிக்கியது ஒரு கருப்பு நிற சுடி .அதை எடுத்தவள் "ஹான் இது தான் perfectuh" என்று அதை தன் மேல் வைத்து கண்ணாடியில் தன் பிம்பத்தை பார்த்தவள் ஒரு கையால் சூப்பர்டி ஆதி என்று கூறிவிட்டு அவளின் கன்னத்தை கிள்ளி தனக்கு தானே முத்தம் வைத்துக்கொண்டவள்"கருப்பு தான் எனக்கு புடுச்ச கலரு அவன் கண்ணு ரெண்டும் என்ன மயக்கும் தௌஸண்ட் வாட்ஸ் பவரு"என்று பாடிக்கொண்டே அந்த சுடிதாரை அணிந்து தயாரானாள்.
பின் வெளியே வந்து தன் அன்னை தந்தையுடன் வழக்கம் போல் கதை அளந்துவிட்டு கல்லூரிக்கு சென்றவள் வாசலிலேயே தன் தோழி வேதித்யாவையும் கண்டுவிட இருவரும் கதை அளந்து கொண்டே வகுப்பை நோக்கி சென்றுகொண்டிருக்க அவர்களை "excuse மீ "என்ற ஒரு கம்பீரக்குரல் தடுத்து நிறுத்தியது .
அந்த குரலை வைத்தே அழைத்தது யாரென்று அறிந்து கொண்ட ஆதிராவிற்கு வழக்கம் போல் கை கால்கள் உதறலெடுக்க இதயத்துடிப்பு எகிற திரும்பியவள் கண்டது தன் எண்ணத்தை பொய் ஆக்காது அவனிற்கே உரிய கம்பீரத்தில் சற்றே உதட்டில் ஒரு சிறு புன்னகையுடன் இருந்த ஆதேஷை தான்.
அவன் அவர்களை அழைத்ததை அவள் கனவா நிஜமா என்பதை போல் பார்க்க வேதித்யாவோ அவன் அறியாது அவள் கரத்தை கிள்ளியவள் அவள் வலியில் லேசாய் அலற அவள் காதருகில் குனிந்தவள் "வாய கிளோஸ் பண்ணுடி "என்றுவிட்டு ஆதேஷிடம் திரும்பியவள் "என்ன ஆதேஷ் சொல்லுங்க "என்க
அவனோ அவளை நோக்கி திரும்பியவன் "சோ யு ஆர் வேதித்யா ரைட் ஒன்னுமில்லை ப்ரொஜெக்ட்ல நம்மள ஒரே டீம்ல பிரிச்சுருக்காங்க as you know நாம மங்கலாபுரிக்கு போகனும். சோ நா தனியா நீங்க தனியா போறதுக்கு மூணு பெரும் சேர்ந்து போனா communication ப்ரோப்லேம் இருக்காதுன்னு நெனச்சேன் அதான் நீங்க எப்போ கெளம்புறீங்கன்னு கேட்கலாம்னு வந்தேன் "என்க ஆதிராவிற்கோ அவன் தங்களுடன் வருகிறான் என்ற செய்தியே இன்ப தேன் வந்து பாயுது காதினிலே என்றிருக்க அவனையே இமைக்காது பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவன் கூறியதை கேட்டு ஆதிராவின் புறம் திரும்பிய வேதித்யா அவள் உடல் மட்டும் இங்கிருக்க ஆவி எங்கோ ஆதேஷுடன் கனவில் டூயட் பாடுவதை அவள் நின்றிருந்த தோரணையிலேயே அறிந்து கொண்டவள் மானசீகமாய் தலையில் அடித்துக்கொண்டு "ஹான் ஓகே ஆதேஷ் actually நாங்களே இதை பத்தி உங்க கிட்ட பேசலாம்னு நெனச்சோம் நாங்க நாளைக்கு மாலை 5 மணிக்கு ட்ரைன்ல கெளம்பலாம்னு இருந்தோம் ஆர் யு ஓகே வித் இட் ?"என்க
அவனோ தோள் குலுக்கியவன்"ஹான் ஐ அம் ஓகே வித் இட் வேதித்யா அப்போ நாளைக்கு ஸ்டேஷன்ல மீட் பண்ணலாம் என்று அவளுடன் கை குலுக்கியவன் ஆதிராவின் அருகில் வந்து அவள் கையை பற்றி அதை குலுக்கி "பை ஆதிரா" என்க ஆதிராவிற்கோ அவனின் அந்த முதல் ஸ்பரிசம் ஷாக் அடித்ததை போல் இருந்தது .
அவன் சென்றபின்னும் கையை அந்தரத்திலேயே வைத்துக்கொண்டு நின்றிருந்த ஆதிராவை தலையில் தட்டி நிஜ உலகிற்கு கொண்டு வந்த வேதித்யா அவளை கண்டு இடுப்பில் இரு கைகளையும் வைத்துக்கொண்டு முறைக்க ஆதிராவோ அசடு வழிய தலையை சொறிந்தவள்" ஈஈஈஈ மச்சி அவன் என்ன ஆதிரானா கூப்பிட்டான் "என்க
வேதித்யாவோ அவளை மேலும் முறைத்தவள் "ஆங் இல்ல கொல்லங்குடி கறுப்பாயினு கூப்பிட்டான் எரும எரும இப்டி அநியாயத்துக்கு ஜொள்ளு ஊத்துற.உனக்கு அவனை புடிக்கும் தான் அதுக்காக இப்படியா? "என்க
ஆதிரா "அவ்ளோ பச்சையாவா தெரிஞ்சுச்சு ?"என்க
வேதித்யாவோ அவளை முறைத்தவள் "மூடிட்டு வந்துருடி ஏதாச்சும் சொல்லிற போறேன் "என்று விட்டு முன்னே நடக்க இளித்துக்கொண்டே ஆதிராவும் அவளுடன் நடந்தாள்.
இங்கோ ஓங்கி உயர்ந்து இருந்த அந்நீர் வீழ்ச்சியின் ஆரம்பம் ஆகாயத்தில் இருக்கின்றதோ என்று எண்ண வைக்க அந்த நீர்வீழ்ச்சியை சுற்றி இருந்த மரங்களும் செடிகளும் மெல்ல அங்கே வீசிய தென்றலின் தாளத்திற்கேற்ப தலை அசைக்க அந்த அடர்ந்த வனப்பகுதியின் தரையில் மனிதனின் உயரத்தையும் மிஞ்சிய புல்வகைகள் என்னுள் வராதே என்று எச்சரிக்கை விடுப்பதை போல் ஒன்றோடொன்று பின்னி அடர்ந்து வளர்ந்திருக்க இரவின் இருளும் அந்த இடத்தை அதன் அழகையும் மீறி பார்த்ததும் அச்சமூட்டுவதாய் சித்தரிக்க அங்கிருந்த புற்களை வெட்டி தள்ளிக்கொண்டு உள்ளே ஒரு கையில் டார்ச்சுடனும் மறுகையில் அருவாளுடனும் அரைக்கால் பாண்டுடனும் ஒரு ட்ஷர்ட்டுடனும் ஒரு ஆடவன் முன்னே நடக்க அவனை போன்றே ஆடை அணிந்திருந்த இன்னொரு ஆடவனோ "அக்ஷய் வேணாம்டா போயிரலாம்டா ராத்திரி நேரம் இந்த இடத்துக்கு மேல போக வேணாம்டா .அந்த ஊர் காரங்க சொன்னதை கேட்டாலே பயமா இருக்குடா பிலீஸ்ட்டா திரும்பி போயிரலாம்டா"என்க
அவன் கூறிய அக்ஷய் என்பவனோ "ஜஸ்ட் shut up டா அந்த ஊர் காரங்க சொல்றத எல்லாம் வச்சு பயந்துகிட்டு இருந்தா எதுவும் பண்ண முடியாது டா"என்க
அந்த இன்னொருவனோ "வேணாம் அக்ஷய் இது வர அங்க அந்த நீர் வீழ்ச்சியோட அடுத்த பக்கத்துக்கு போன யாருமே உயிரோட வந்ததில்லன்னு சொல்றாங்க வேணாம்டா"என்க
அக்ஷயா "என்ன அவுங்க சொல்ற மாறி பேயோ பிசாசோ இருக்கும்னு பயப்புடுறீயா ?அப்டியே இருந்தாலும் பிரச்னை இல்ல அங்க என்ன இருக்குனு தெருஞ்சுக்காம நா போக மாட்டேன்டா "என்று முன்னே நடந்தான்.
அவனுடன் வந்த இன்னொருவனோ "டேய் காரணம் இல்லாம ஏதாச்சும் சொல்லுவாங்களா டா?அதுமட்டுமில்லாம இந்த ஊருல பொறந்து வளந்தவுங்களே அந்த பக்கத்துக்கு போக ட்ரை கூட பண்ணதில்ல நமக்கு ஏன்டா வம்பு போயிரலாம்டா "என்க
அக்ஷயா "இந்த காலத்துல போய் பேய் பிசாசு அமானுஷ்யம்ன்னுகிட்டு அதெல்லாம் சுத்த கட்டு கதை "என்று கூறிக்கொண்டே முன் நடந்து செல்ல அவர்கள் இருவரும் விட்டு சென்ற கால்தடம் இருந்த இடத்தில் இருந்த மண்ணோ புதை மணலாய் மாற அதிலிருந்து குமிழ் குமிழாய் ரத்தம் வர துவங்கியது .
இது எதையும் அறியாத அவ்விருவரும் முன்னே சென்றுகொண்டிருக்க திடீரென்று அவர்கள் சென்ற திசையில் எங்கிருந்தோ தோன்றிய ஓர் கரும் உருவம் அவர்களையே வெறித்து நோக்கி சிரித்தது .
முன்னே பேசிக்கொண்டே சென்ற அக்ஷய் அந்த இன்னொருவனின் பேச்சு சத்தம் ரொம்ப நேரமாய் கேட்கவில்லையே என்று திரும்பி பார்க்க அங்கோ அவனை காணவில்லை .
அதிக தூரம் பயணித்ததில் களைத்திருப்பான் என்றெண்ணிய அக்ஷய் "வருண் வருண் "என்று அழைக்க அவன் குரல் அந்த இரவின் நிசப்தத்தில் அந்த காட்டில் எட்டு திசையிலும் எதிரொலித்தது எனில் அவன் உடன் வந்தவனிடமிருந்தோ ஒரு பிரதிபலிப்பும் இல்லை.
சற்றே புருவத்தை சுருக்கிய அக்ஷய் "வருண் எங்கடா இருக்க பயந்துட்டியாடா பயந்தாங் கோழி"என்று சிரித்துக்கொண்டே அவர்கள் வந்த வழியில் நடக்க சற்று தூரத்தில் அவன் காலில் ஏதோ தட்டுப்பட்டது.என்ன என்று கீழே தன் கையிலிருந்த டார்ச்சை அடித்தவன் அதை எடுக்க அதுவோ வருண் அணிந்திருந்த தோள் பை.
அதை குழப்பத்தோடு எடுத்தவன் "என்ன பை இங்க இருக்கு இவனை காணோம் "என்று யோசிக்க அவன் தோளை ஏதோ ஓர் கரம் அழுத்தியது. அந்த கரத்தை பிடித்த அக்ஷய் டார்ச் லைட்டோடு "இங்க தான் இருக்கியாடா "என்று திரும்ப அவன் டார்ச் லைட் வெளிச்சத்தில் கண்ட உருவத்தை கண்டு விழிவிரிய சிலையாய் சற்று நேரம் உறைந்து விட்டான்.
அவ்வுருவம் பாதி முகம் அழுகி கண்கள் இன்றி அந்த இடத்தில் துளை இருக்க அதிலிருந்து புழுக்கள் வெளியேறிக்கொண்டிருந்தது .பாதி முகம் அழுகி இருக்க மீதி முகமோ பாதி எரிந்தும் எரியாமலும் தீக்கங்குடன் இருக்க அதன் தலையில் தலை முடிக்கு பதில் அட்டை பூச்சிகள் ஒட்டிக்கொண்டிருந்தது .கையின் நகங்களோ கத்தியை விட கூர்மையாய் நீண்டு இருக்க அவ்வுருவதில் இருந்து அழுகிய பிணத்தின் வாடை வர எங்கிருந்தோ ஒர் அலறல் சத்தம் அவன் காதுகளை துளைக்க அவ்வுருவம் அவன் முகத்திற்கு நேரே குனிந்து தன் கத்தி போன்ற பற்களை தன் ரத்தம் சொட்டும் வாயை திறந்து காட்டியது.
அவன் கண்ட காட்சியில் சப்த நாடியும் ஆட்டம் காண ஆஆ என்று அலறிக்கொண்டே ஓடினான் அக்ஷய் .ஓடி ஓடி களைத்தவன் தன் முட்டியை பிடித்துக்கொண்டே குனிந்து நின்றான் நெற்றியில் விழுந்த வியர்வையை துடைத்தவன் தாகத்துடன் நிமிர அவன் கண்ட காட்சியில் இருவிழியும் தெறித்து விழுமளவு உறைந்து நின்றான்.
அவன் முன் அவன் கீழே விட்டு சென்ற வருணின் பை இருக்க அவன் ஓட துவங்கிய இடத்திலேயே நின்றிருந்தான்.பயத்தில் கை கால்கள் எல்லாம் செயலிழந்துவிட அந்த இடத்திலிருந்து வந்த பிணத்தை எரிக்கும் வாடையும் ஓநாய்களின் ஊளையும் ஆந்தையின் அகவலும் அவ்விடத்தை அச்சுறுத்த முன் அழகாய் தெரிந்த அவ்விடத்து மரங்கள் அனைத்தும் ஒவ்வோர் கரும் உருவங்களாய் தெரிந்து ரத்தநாளங்கள் அனைத்தையும் உரையச் செய்ய எங்கிருந்தோ வந்த ஓர் அலறல் சத்தம் அவன் காதுகளை துளைக்க அவன் தொண்டைக்குழிக்குள் வார்த்தைகள் பயத்தில் சிக்கிக்கொள்ள நா வறண்டது .
பயத்தை சற்று தணித்து "வ........ வருண் எங்கடா இருக்க "என்று அவன் கத்த அவனின் காதிற்கு அருகிலேயே "இங்க தான் அக்ஷய் இருக்கேன் "என்று வருணின் குரல் கேட்க தனக்கு அருகில் டார்ச்சை அடித்த அக்ஷய் "எங்....... எங்கடா ?"என்க
"இங்க தான் அக்ஷய் இருக்கேன் "என்று அவனிற்கு எதிரே இருந்த ஓர் மை இருட்டான பாதையிலிருந்து குரல் வந்தது ..
தன் பயத்தை தன்னுள்ளே புதைத்தவன் நண்பனை காக்க வேண்டுமென்று குரல் வந்த திசையில் டார்ச்சை அடித்த அக்ஷய் "எங்.... எங்கடா இருக்க ?"என்று கேட்டுக்கொண்டே முன்னேற அந்த திசையிலிருந்து அவன் முன்னே நடக்கும் ஒவ்வொரு அடிக்கும் வருணின் குரல்"வா வா" என்று அவனை விட்டு தூரமாய் எதிர் திசையில் அவனை அழைத்தது .
கிட்ட தட்ட அரைமணி நேரமாய் நடந்தும் அந்த குரல் இன்னும் தன்னை விட்டு விலகி செல்வதாகவே இருக்க "வருண் விளையாடாதடா எங்கடா இருக்க ?"என்று நடுங்கும் குரலில் கேட்டவன் முன்னே செல்ல அவன் முகத்தில் ஏதோ ஒரு திரவம் போல் இரு துளி விழுந்தது.
தன் முகத்தில் ஏதோ விழும் உணர்ச்சியில் தன் கன்னத்தை துடைத்தவன் தன் கையை டோர்ச்சின் வெளிச்சத்தில் பார்க்க அவன் கையில் இருந்ததோ ரத்தம்.
தன் கரத்தில் ரத்தத்தை கண்டவன் நடுங்கும் கரத்தோடு மேலே டார்ச்சை அடிக்க தலைகீழாய் உயிரை இழந்த ஜடமாய் முகத்தில் ரத்தம் கசிய தொங்கிக்கொண்டிருந்தான் வருண் .
அவனின் பிரேத உடலை கண்ட அக்ஷய் "ஆஆ "என்று கத்திக்கொண்டே ஓடப்பார்க்க அங்கிருந்த மரத்தின் இடுக்குகளிலிருந்து வெளிவந்த இரு பாதி எறிந்திருந்த கைகள் அவனது காலை பிடித்திழுத்தது.இரு கைகள் இழுத்ததில் நிலை தடுமாறிய அக்ஷய் கீழே விழ அக்கைகளோ மின்னல் வேகத்தில் அவனை அந்த மரத்தின் வேரிற்கும் நிலத்திற்கும் நடுவில் அமைந்திருந்த பொந்திற்குள் இழுத்துக்கொள்ள அக்ஷயின் மரணஓலத்தில் அந்த காடே அதிர்ந்தது ..........................................
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro