🌻 அழகி 90
"முகில்ம்மா.... வேண்டாம் முகில்ம்மா; வாங்க நாம முதல்ல வீட்டுக்குப் போயிடலாம்! ஜெயன் சரியானதும் அவனா கெளம்பி நம்ம வீட்டுக்கு வரட்டும்!" என்று அத்தையிடம் சொல்லி சின்ன குழந்தை போல அடம் பிடித்து கையை உருவிக் கொண்டு ஓட நினைத்த மருமகளை தன்னுடைய குடங்கைக்குள் அவள் கைகளை விட்டு அழுத்திப் பிடித்துக் கொண்டு நின்றிருந்தார் முகிலமுதம்.
"பழசயெல்லாம் மறக்கணும் வதனிக்கண்ணு! அம்மாவையும் வினோத்தையும் இழந்த வலி
ஒனக்கு காலம்பூரா இருக்கத்தா செய்யும்.... அதுக்காக இந்த ஆஸ்பத்திரிக்குள்ள காலயே எடுத்து வைக்க மாட்டேன்னு சொன்னா இதென்ன சின்னப்புள்ள தனமா இருக்குன்னு நான் ஒங்கிட்ட கேப்பேன்!"
"நாளப்பின்ன நீ புள்ள பெத்துக்கணும்... கரு தரிச்சதுல இருந்து புள்ள கையில கெடைக்குற வரையில ஆயிரத்தெட்டு தடவ நம்மள இங்கதா நடையா நடக்க உடுவாய்ங்க! அப்பல்லா இங்க வர மாட்டேன்னு சொல்லுவியா நீயி?" என்று கேட்ட மாமியாரிடம் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டு நின்றவள்,
"ஹலோ மிஸஸ் ஜெயன்!" என்ற ஒரு கட்டைக் குரலில் பயந்து பின்னால் திரும்பினாள்.
"ஐம் ஷ்யூர்! நா ஜெயனோட மொபைல் வால்பேப்பர்ல பாத்தது உங்கள தான்... நீங்க தான் மிஸஸ் ஜெயன் ரைட்?" என்று கேட்டவன் முதல் பார்வையிலேயே ஒரு காவல்துறை அதிகாரி என்பது அவனுடைய மிடுக்கான பார்வையிலும், அளவெடுத்து ஒட்டி வைத்தது போன்ற மீசையிலும், ட்ரிம்டு ஹேர்கட்டிலும் தெரிந்தது.
"யெஸ் ஸார்.... ஐ'ம் பர்வத வர்த்தினி ஜனமேஜயன்! என் ஹஸ்பெண்ட் மிஸ்டர் ஜெயனோட புல்நேம்!" என்று அவனிடம் சின்ன புன்னகையுடன் சொன்னவள் தன் அத்தையிடம் திரும்பி,
"முகில்ம்மா இந்த ஸார்தா ஜெயன் ஹெல்ப் பண்ண எஸ்ஐ ஆ இருப்பாருன்னு நெனைக்குறேன்!" என்று மெதுவான குரலில் சொன்னதும் அவனுக்கு கேட்டு விட்டது போலும்!
"ஸாரிம்மா.... ஸாரி சிஸ்டர்! உங்க ரெண்டு பேரையும் நேத்து நைட் பூரா டென்ஷன்ல வச்சிருந்தது என்னோட பேமிலி தான்! நான் லோகேஷ்..... சப் இன்ஸ்பெக்டர் ஆஃப் போலீஸ்!" என்று சொல்லி இருவருக்கும் பொதுவான ஒரு வணக்கத்தை செலுத்தினான்.
"ஏபுள்ள... ஜெயனு சவாரிக்குப் போகலன்னு நேத்து நைட்டே ஒனக்கு தெரிஞ்சுடுச்சா....? அதேன் அப்டி மொகத்த தொங்க போட்டுக்கிட்டு மேல ஓடிட்டியாக்கும்?" என்று கேட்ட முகிலிடம்,
"ச்சூ....சும்மாயிருங்க முகில்ம்மா! நம்ம கஷ்டத்த எல்லாம் இப்டி அடுத்தவங்க முன்னால பேசக்கூடாது!" என்று சொன்ன வதனியைப் பார்த்து அவளுக்கு எதிரில் நின்றவனின் இதழ்கள் சின்னக்கோடு போல விரிந்தது.
"உள்ள வாங்க மிஸஸ் ஜெயன்! உங்க ஹப்பிய பாக்க வேண்டாமா நீங்க?" என்று கேட்டவனிடம் சலிப்படைந்த குரலில்,
"அதத்தான் அப்பத புடிச்சு சொல்லிக்கிட்டு இவகிட்ட இருக்கேன் போலீசு தம்பி.... காதுலயே வாங்க மாட்டேங்குறா! வதனிக்கண்ணு..... நீ நல்ல புள்ளையாம்! அடம் பிடிக்காம முகில்ம்மா கையப் புடிச்சிக்கிட்டே உள்ள வந்துரு ராசாத்தி!" என்று வதனியிடம் சொல்லி அவளை மருத்துவமனைக்குள் கிட்டத்தட்ட இழுத்து வந்தார் முகிலமுதம்.
"ம்மா.... இவுங்க என்ன அக்யூஸ்டா? ஹேண்ட்கப் போட்டு இழுத்துட்டு வர்ற மாதிரி புடிச்சு இழுத்துட்டு வர்றீங்க? அவங்கள விடுங்க. அவங்களாவே வருவாங்க! உங்களுக்கு என்ன ப்ராப்ளம் மிஸஸ் ஜெயன்?"
"ஹாஸ்பிட்டல்ல பெரிய ஊசி வச்சுருப்பாங்க; நீ ஒரு டெவில் டாடி..... எனக்கு ப்ளட் வருதுன்னு சொல்லிட்டு என்னைய இங்க போயி கூட்டிட்டு வந்துட்டன்னு எம்பையன் சொல்ற மாதிரியே நீங்களும் சொல்வீங்க போலருக்கு?" என்று கேட்டவனை ஒரு பார்வை பார்த்தாள் பர்வதவர்த்தினி.
"அம்மாடியோவ்! ஸ்டே இன் யுவர் லிமிட்.... அதுதான இந்த பார்வைக்கு அர்த்தம்? ஒரு சில பேருக்கு தான் வாயால பேசாம கண்ணாலயே எதிர்ல நிக்குறவங்கள எட்டி நிறுத்துற கேபபிளிட்டி இருக்கும்! அது உங்களுக்கு இருக்குதுங்க! உள்ள வாங்க!" என்று என்னவோ அந்த ஹாஸ்பிட்டல் முழுவதுமே அவனது ராஜாங்கம் போல அவர்களை ஜெயன் இருக்கும் வார்டுக்கு அழைத்துச் சென்றான் லோகேஷ்.
ஜெயன் படுத்திருந்த ஹாலுக்குள் சென்று ஜெயனைப் பார்த்ததும் முகிலமுதம் தவிப்புடன் "யய்யா ஜெயனு!" என்றார். வதனி கண்ணெடுக்காமல் தன் கணவனின் முகத்தைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்.
சில நாட்களாக தூக்கம் பாராமல் உழைத்த அதிக உழைப்பும், இப்போது காய்ச்சலுமாக அவன் முகத்தில் சோர்வும், களைப்பும் குடியேறி பார்க்கவே பாவம் போல் காட்சியளித்தான் ஜெயன்.
"நீங்க இவர் கிட்ட பேசிட்டு இருங்க. நா இதோ கொஞ்ச நேரத்துல வந்துடுறேன்!" என்று சொல்லி விட்டு சென்ற அந்த எஸ்ஐ வராமலே இருந்தாலும் கூட வதனிக்கு ஒரு பிரச்சனையும் இல்லை.
அவளது இப்போதைய தேவையெல்லாம் அவளை குறும்பு மின்ன பார்க்கும் ஜெயனுடைய ஒற்றைப் பார்வை தான்! அதுவே கிடைக்கவில்லை என்று ஆன பிறகு எவன் வந்தால் என்ன எவன் போனால் என்ன என்ற மனநிலையில் இருந்தாள்.
சொல்லாமல் கொள்ளாமல் காணாமல் போனதற்கு ஒரு மன்னிப்பாவது கேட்பான் என்று பார்த்தால் ம்ஹூம்.... அதெல்லாம் அவனுடைய நியாபகத்திலேயே இல்லை.
"எப்ப சொல்லி உட்டா எப்ப வாரீங்க ரெண்டு பேரும்? அமுதாம்மா நீ என்ன வெறுங்கைய வீசிக்கிட்டா வந்த? ரசசாதம் கொண்டு வந்தியா இல்லையா? எங்க கூட தூக்கு ஒன்னத்தயும் காணும்? எனக்கு வயிறு ரொம்ப பசிக்குதே?" என்று சொன்னவனை அன்னை, மனைவி இருவரும் கொலை செய்து விடவில்லை. அந்த வரையில் தப்பித்தான்.
"ஏன்டா.... ராத்திரில ஊருசுத்தப் போனத எங்கிட்ட சொல்லல; கீழ விழுந்து பொழந்துகிட்டு கெடந்தவங்களுக்கு ஒத்தாச பண்ணப் போனதையும் சொல்லல. இப்டி எதுவுமே சொல்லாம நீயி காணாமப் போயிருவ. அலுப்பு தாங்காம காச்ச வந்தும் படுக்கையில கெடப்ப..... இதுல ஒனக்கு ரசசாதம் கேக்குதோ? பின்னால கட்ட வண்டியில கட்டி எடுத்துட்டு வாராய்ங்க ஒனக்கு சோற....!" என்று முகத்தை நொடித்துக் கொண்டு சொன்ன முகிலமுதம் தன்னுடைய மருமகளிடம் எதையோ சமிக்ஞையில் கேட்ட அவளும் வெளிப்புறமாக கைகாட்டினாள்.
"நான் செத்தனோடம் வெளிய போயிட்டு வாரேன்! நீ ஒம்புருஷங்கிட்ட பேசிக்கிட்டு இரு! பல்ல பல்ல காட்டாத..... ஒன்னியால தான்டா காலையில நா மயங்கி உழுந்தேன்னு சொல்லு!" என்று சொல்லி விட்டு அங்கிருந்து சென்றார்.
"பொண்....டாட்டி! என்ன நீங்க? மயக்கமடிச்சு வேற விழுந்தீங்களாக்கும்? நா ஹாஸ்பிட்டல்ல இருக்கேன்னு தெரிஞ்சதாலயா.... இல்ல இந்த ஹாஸ்பிட்டல்ல இருக்கேன்னு தெரிஞ்சதாலயா?" என்று கேட்டவன் கையைப் பற்றிக் கொண்டு கண்ணீர் உகுத்தாள் வதனி.
"அட இவளுக்கு வேற வேலயில்ல? எப்ப பாரு மூக்க உறிஞ்சிக்கிட்டு! ஏய் ஹெட்லைட்டு..... இன்னிக்கு என்னோட ஹெட்லைட்டு ரொம்ப எரியுதுடீ! மூச்செல்லாம் சூடா வருது! காச்ச இன்னும் எறங்கலன்னு நெனைக்குறேன்! ரொம்ப பக்கத்துல வந்து ஒக்காராத! பெறவு எங்காச்ச ஒனக்கும் ஒட்டிக்கிடப் போவுது!" என்று சொன்னவனிடம்,
"அவங்களோட பையன் எப்டி இருக்கான் ஜெயன்? ப்ளெட் எல்லாம் குடுக்க வேண்டியது இருந்ததாமே? நஸார் ஸார் சொன்னாங்க.....!"
"முன்ன ஒருதடவ நீ எங்கிட்ட இம்ச பண்ணி உயிர வாங்குனப்ப இருடா ஒன்னைய போலீஸ்ல புடிச்சு குடுக்குறேன்னு ஒரு கோபத்துல சொன்னேன். நீயும் எஸ்ஐ நம்ம ப்ரெண்டுதா பேசுறியா....? அவரோட நம்பர் இருக்குன்னு எங்கிட்ட கேட்டியே? அவரு தானா இவரு.... சச் அன் இர்ரெஸ்பான்ஸிபிள் பாதர்; அறிவில்ல அந்த ஆளுக்கு? நாலு பேர ஒரே வண்டியில வச்சு ட்ரைவ் பண்ணிட்டு போறதுக்கு அவன் என்ன கார்லயா போறான்? அப்டி பேமிலியா போய் தான் ஆகணும்னா ஆட்டோவுல போறது இல்ல ரெண்டு வண்டியில போறது....!" என்று பொரிந்தவளை பதற்றத்தோடு பார்த்தவன்,
"ஏய் சும்மாயிருடி! எங்கயோ போனவரு மறுபடியும் இங்க வந்துடப் போறாரு... எப்பவும் வெறப்பா சுத்துற மனுஷன்
நேத்து எவ்ளோ தவிச்சுப் போயிட்டாரு தெரியுமா...... அந்த பொடுசு; ஒடம்புல இருந்து அம்புட்டு ரத்தம் கொட்டியும் கூட அந்தப்பய கேள்வி கேக்குறத நிறுத்தவே இல்லம்மா.....!"
"ஸாரு அவங்க சம்சாரம்தா ஒங்களுக்கு கல்யாணம் ஆகி எத்தன வருசமாச்சுன்னு கேட்டாங்க. அவங்க பாப்பாவ நைட்டு பூரா அழ விடாம கத சொல்லி பத்திரமா நா பாத்துக்கிட்டேனாம்! உங்க கொழந்தைங்களையும் இப்டிதா பொறுமையா அக்கறயா கவனிச்சுப்பீங்களான்னு கேட்டாங்க!"
"கல்யாணம் ஆகி ரெண்டுநாத்தா ஆகுதுன்னு சொன்னேன் பாரு.... ஒருமாதிரி வருத்தமாகிட்டாங்க! நா நம்ம பாப்பாங்களுக்குல்லா நல்ல அப்பாவா இருப்பேனாம்.... மறைமுகமா எனக்கு சர்ட்டிபிகேட் குடுத்துருக்காங்க தெரியுமா?" என்று காலரை தூக்கி விட்டுக் கொண்டு சொன்னவனிடம்,
"ஆமா... இவ்ளோ செஞ்சதுக்கு
அவங்க ஒனக்கு வாயால சர்ட்டிபிகேட் குடுத்துருக்காங்க.... நீ அத ஃப்ரேம் போட்டு வீட்ல மாட்டு.... லூசுப்பயலே.... ஒரே ஒரு கால் பண்ணி ரெண்டு பேருல யார் கிட்டயாவது விஷயத்த சொல்லியிருக்கலாம்ல? நிம்மதியா இருந்துருப்போம்! இளங்கோ கூட நீ எப்பவும் வர்ற நேரத்துக்கு ஒன்னைய தேடுச்சு தெரியுமா?" என்று சொன்னவளிடம் அனைத்து பற்களையும் காட்டி சிரித்தவன்,
"ஸாரிம்மா.... அங்க இங்கன்னு ஓடி வீட்டுக்கு ஒரு வார்த்த சொல்லணும்னு எனக்கு நியாபகமே இல்லாமப் போச்சு!" என்று சொன்னவன் பசியில் தன் வயிற்றைப் பிடித்துக் கொண்டான்.
அவன் தன்னுடைய வயிற்றில் கைவைத்த நேரம் அவன் கைகளில் ஒரு குவளை திணிக்கப்பட்டிருந்தது. கரைத்து எடுத்து வரப்பட்ட ரசசாதமும் ஒரு சிறிய தட்டில் தேங்காய் துவையலையும் பார்த்தவனுக்கு தெய்வம் கண்களுக்கு தெரிந்தது.
"சாப்டு ஜெயன்.... கெளம்பணும்னு முடிவு பண்ணிட்டவொடனே
முகில்ம்மா ரசமும் சாதமும் ரெடி பண்ணிட்டாங்க! ஒன்னைய நல்லா புரிஞ்சுக்கிட்ட எம் மாமியார் அவங்க; எப்டி வெறுங்கையோட வருவாங்க சொல்லு? சும்மா உன்னைய டென்ஷன் பண்ணனும்ட்டு நாந்தான் இந்த ரூமோட வாசல்லயே பைய வச்சுட்டு வந்தேன். பொறுமையா சாப்டு!
யூ வில் பீ ஆல்ரைட்!" என்று மெதுவான குரலில் அவள் சொல்லி முடிப்பதற்குள் அங்கு பாதி தூக்கு ரசசாதம் காலியாகி இருந்தது.
"ராத்திரி பூரா ஒண்ணுமே சாப்புடாம சுத்திக்கிட்டு இருந்துருப்பான் போலருக்கு கண்ணு!" என்று மெதுவான குரலில் சொன்ன முகிலிடம் ஆமோதிப்பாக தலையசைத்தாள் வதனி.
முகிலும் வர்த்தினியுமாக சென்று லோகேஷின் குடும்ப உறுப்பினர்களையும் பார்த்து நலம் விசாரித்து விட்டு அவர்கள் சொன்ன அத்தனை நன்றிகளையும் மூட்டை கட்டி கொண்டு வந்து ஜெயனை டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அழைத்து சென்றனர்.
"அமுதாம்மா...... இந்த நஸாருப்பய என்னிய பத்தி ஏதாவது கேட்டானா சொன்னானா?" என்று சந்தேகம் கேட்ட தன்னுடைய மகனிடம்,
"ஆஸ்பத்திரியில இருந்து வீட்டுக்கு வரட்டும்..... அப்புறம் பேசிக்குறேன் அவனன்னு மட்டும் சொன்னான்! ஊடயில ரெண்டு கெட்ட வார்த்தையும் சொன்னான்டா தம்பி!" என்று அறிவித்த தாயை முறைத்தவன்,
"நீயெல்லாம் ஒரு அம்மாவா அமுதாம்மா?" என்று அவர்களிடம் கேட்டான்.
"அப்புறம் அம்மா இல்லாம நான் என்ன ஒனக்கு சித்தியா.... சீக்கிரத்துல வந்து சேருங்க ரெண்டு பேரும்; நா முதல்ல போயி வீட்ல இருக்கேன்!" என்று சொல்லி விட்டு ஆட்டோ ஸ்டாண்ட் நோக்கி போனார் முகில்.
"ஜெயன்.....பைக் ஓட்டிடுவியா? கஷ்டமா இருந்தா சொல்லு. நாம கூட இப்ப ஆட்டோவுலயே போயிட்டு அப்புறமா ப்ரெண்ட்ஸ் யாரையாவது அனுப்பி வண்டிய எடுத்துக்கலாம்!" என்று பரிவான குரலில் சொல்லி அவனுடைய நெற்றியை கழுத்தை தொட்டு தொட்டு காய்ச்சல் இருக்கிறதா என்று பரிசோதித்து பார்த்தவளிடம்,
"வதனி மேடம்..... உங்களுக்கு நியாபகம் இருக்கா? இங்க தான் நாம மொத மொதல்ல மீட் பண்ணிக்கிட்டோம்! என் வீட்டுக்கு வேணுன்னா வாரீங்களான்னு கேட்டு இங்கதா வச்சு உங்க கிட்ட நம்ம அட்ரஸ் கொடுத்தேன். இப்ப என்னயவே குடுத்துட்டேன்!"
"இப்ப சொல்லு அழகி.... நீ ஆதியா அகதியா? என் வாழ்க்கையில யாரு நீ?" என்று குறுஞ்சிரிப்புடன் கேட்டவனின் கையைப் பிடித்துக் கொண்டவள்,
"நான் ஆதியான்னு எல்லாம் தெரியாது. கண்டிப்பா அகதி இல்ல. அது மட்டும் தெரியும்! ஜனமேஜயன் வாழ்க்கையில பாதி அதாவது பாதி மேஜைன்னு வேணும்னா வச்சுக்கலாமே?" என்று கண்சிமிட்டி சொன்னவளை,
"ஏய்.... மேஜை, டெஸ்க்குன்னு ஸ்கூல்ல தான்டீ உயிர வாங்குனானுவ! நீ மறுபடியும் பாதி மேஜை, முக்கா மேஜைன்னு ஆரம்பிக்காத..... ரொம்ப தெம்பா இருக்கு ஹெட்லைட்டு! அப்டியே அவலாஞ்சி வரையில இல்ல பைக்காரா வரையில ஒரு ரவுண்ட்ஸ் போயிட்டு வருவமா?" என்று தன் மனைவியிடம் கேட்டான் ஜெயன்.
"ஏன்டா.... ஒரு தூக்கு ரசசாதத்துக்கு இவ்ளோ பேச்செல்லாம் பேசக்கூடாது நீ! மரியாதயா வீட்டுக்குப் போ; ரவுண்ட்ஸ் போறதெல்லாம் ஒரு வாரம் கழிச்சுப் போகலாம்..... எடம் எங்கயும் ஓடிடாது. மொதல்ல ஒடம்ப பாக்கணும்!" என்று சொன்ன வர்த்தினியிடம்,
"சரிங்க பொண்டாட்டி!" என்று சொன்னவன் அவளை தன்னுடைய பைக்கில் அமர்த்திக் கொண்டு வீட்டிற்கு கிளம்பினான்.
அழகி வருவாள்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro