🌻 அழகி 81
"என்னடா கண்ணு..... காலையில எல்லாம் நல்லாத்தான இருந்த? கல்யாணம் முடிஞ்சதுல இருந்து ஒருமாதிரியா இருக்கியே என்ன?" என்று படுக்கையில் அமர்ந்திருந்த தன்னுடைய மருமகளிடம் கேட்டார் முகில்.
வதனியின் உற்சாகம், சந்தோஷம்,சோகம், வருத்தம் இவைகள் எல்லாம் எவ்வளவு டெஸிபலில் இருக்கிறது என்று அவள் கண்ணசைவிலேயே கண்டுபிடித்து விடுவார்.
"கல்யாணம் நடந்தத அப்பாட்ட சொல்லணும் போல இருக்கு முகில்ம்மா!" என்று சொல்லி விட்டு முகிலின் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள் வதனி.
"அட..... என் தங்கமே? இதுக்குத்தானா மருகிட்டு ஒக்காந்துருக்க? அப்பாட்ட தான பேசணும்? அதுக்கென்ன?
போனப் போட்டு பேசுடா அவருட்ட!" என்று சொன்னார் முகில்.
"வேண்டாம் முகில்ம்மா; இது தெரிஞ்சா ஜெயன் என்ன சொல்லுவாரோ தெரியல..... அவருக்கு ரொம்ப கோபம் வரும்!" என்று தலையாட்டி மறுத்தவளிடம்,
"இதென்ன புதுசா ஒம்புருஷன அவரு இவருங்குற..... இது நல்லாவேயில்ல! இப்டி கூப்டச் சொல்லி அவங்கேட்டானா உங்கிட்ட? அவங்கெடக்குறான் ஒரு ஓரத்துல..... நீ ஒங்கப்பாவ கூப்டு முதல்ல!" என்று சொன்னார் முகில்.
"இல்ல முகில்ம்மா.... ஹஸ்பெண்ட் ஆகிட்டாரு! இனிமே அவர எல்லார் கிட்டயும் மரியாதயா பேசணும்ல? எங்களுக்குள்ள பேசிக்குறது வேற... உங்க எல்லார்ட்டயும் சொல்றது வேற இல்லையா?" என்று தயங்கியவளிடம்,
"உங்க ரெண்டு பேரோட விஷயத்துல ஒங்க ரெண்டு பேருக்குள்ள பிரச்சன வராத வரைக்கும் நான் தலையிடவே மாட்டேன். அதுனால என்னையப் பத்தியெல்லாம் ஒண்ணும் யோசிக்காத! அவன பேரு சொல்லிக் கூப்டுறதுன்னா கூப்ட்டுக்க! இப்ப ஒங்கப்பாவ கூப்ட்டு பேசு!" என்றார்.
இப்படி எட்டு யோசனைகளுடன் தன்னுடைய தந்தையின் எண்ணுக்கு அழைத்தாள் வதனி. அவள் அழைத்தது என்னவோ தந்தைக்கு தான்.... ஆனால் அவள் செய்த அந்த அழைப்பை எடுத்தது அவளுடைய சகோதரன்.
"ஹலோ.....!" என்ற அவனது குரலைக் கேட்டதும், "அருண் நா வர்த்தினி பேசுறேன். அப்பா இருக்காங்களா? அவங்க கிட்ட ஃபோன குடேன். ஒரு ட்டூ மினிட்ஸ் நான் அப்பா கிட்ட பேசணும் அருண்..... ப்ளீஸ்!" என்றாள்.
"ஏய்.... ஏன்டீ சும்மா சும்மா கூப்ட்டு எங்கள டிஸ்டர்ப் பண்ற? எங்க அப்பாவுக்கு நாங்க ரெண்டு பேர் மட்டுந்தா பசங்கன்னு நெனச்சு கொஞ்சம் நிம்மதியா இருக்க விட மாட்டியா? அடிக்கடி நா ஒருத்தி இருக்கேன்னு நியாபகப் படுத்திக்கிட்டே இருக்க....?"
"ஒனக்கு எல்லாம் எத்தன சொன்னாலும் அறிவே வராதா? எங்கப்பாவ இன்னொருத்தி அப்பா அப்பான்னு சொல்றத கேக்குறதே எனக்கு பத்திக்கிட்டு வருது! அப்பாட்ட எல்லாம் தர முடியாது. மரியாதயா ஃபோன வைடீ!" என்று சொன்னவனிடம் ஆங்காரக் குரலில்,
"அடீ......ங்கு! யார் கிட்ட சவுண்ட் விடுற? டேய்.... என்ன சொன்ன? அவரு உங்கப்பாவா? நீங்க ரெண்டு பேரு மட்டுந்தா அவருக்கு பசங்களா? அப்ப நான் யாரு? ரோட்டுல கெடந்து எடுத்த கொழந்தயா? அவர நான் அப்பான்னு கூப்டுறத கேட்டு ஒனக்கு பத்திக்கிட்டு வருதா? வரும்டா.... வரும்! ஏன் வராது?"
"ஒங்க அம்மாவ கல்யாணம் பண்ணி, அவங்களோட குடும்பம் நடத்துனப்பவே எங்கம்மாவ ஏமாத்தி கல்யாணம் பண்ணுனவன்டா ஒங்கப்பன்!"
"நியாயமா நீ கோவிச்சுக்குறதுன்னா
ஒங்கப்பன தான் கோவிச்சுக்கணும்! ஸாரு அதெல்லாம் செய்ய மாட்டீங்களே? ஏன்னா என்னைய கேள்வி கேக்க நீ யாருடான்னு சொல்லி வெரட்டி விட்டுட்டார்னா போறதுக்கு எடம் கெடையாதுல்ல ஒனக்கு? ஒனக்கெல்லாம் எதுக்குடா மீச துடிக்குது?"
"அவனோட புள்ள ஒனக்கும், ஒந்தங்கச்சிக்கும் ஒரு கல்யாணம் நடந்ததுக்கு அப்புறம் தான் நான் கல்யாணம் பண்ணிக்கணும்னு எங்கம்மா சொன்னதுனால என்னைய காதலிச்சவர் கிட்ட கூட விஷயத்த புரிய வச்சுட்டு, மூணு வருஷம் பொறுமையா காத்துக்கிட்டு இருந்தேன்.....!"
"இன்னிக்கு வரைக்கும் உங்களோட சந்தோஷமான வாழ்க்கையில நானோ எங்கம்மாவோ குறுக்க வந்து நின்னுருப்பமா? எங்க வழியப் பாத்துக்கிட்டு போறோம்னு போன எங்கள எங்கையாவது
கண்காணாம போய் நாசமா போங்கன்னு ஒங்கப்பன் சொன்ன வார்த்தையால தான்டா எங்க அம்மாவும், என் வினுவும் நாசமாப் போயிட்டாங்க.....!"
"அவங்க ரெண்டு பேரும் அடைகாத்து பொத்தி வச்சதால நான் மட்டும் நல்லா தான் இருக்கேன். இனிமேலும்
நல்லாத்தான் வாழப் போறேன். எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு! அவரு ஆம்பள தான்னு ஒலகத்துட்ட நிருபிக்குறதுக்காக என்னைய பெத்தாரோ என்னவோ....? எனக்குத் தெரியாது. எப்டி இருந்தாலும் அவர் தான் என்னோட அப்பா! அத யாராலயும் மாத்தவோ மறுக்கவோ முடியாது!"
"அவரு மூலமா நான் பொறந்தேங்குற ஒரே ஒரு மரியாதைக்கு அவரு கிட்ட எனக்கு கல்யாணம் ஆன விஷயத்த சொல்லணும்னு எனக்குத் தோணுச்சு! ஃபோன எடுத்த ஒங்கிட்ட சொல்லிட்டேன்....!"
"இதுக்கு மேல எதாவது தேவையின்னு நான் உங்கள கூப்டாலோ இல்ல உங்க கிட்ட வந்து நின்னாலோ என்னைய நீ ஏன்டீன்னு கேளு! வைடா ஃபோன!" என்று அடங்காத ஆத்திரத்துடன் பேசிய அக்காவிற்கு ஒரு வாழ்த்து கூட சொல்லாமல் அலைபேசியை வைத்தான் வர்த்தினியின் தம்பி.
"இவ்ளோ நேரம் லைன்ல தான் முகில்ம்மா இருந்துருக்கான்..... இப்ப தான் வச்சான்! நான் பேசுனதெல்லாம் தப்பில்ல தான? சின்னப் பையன் கிட்ட போய் ரொம்ப கத்திட்டேனோ?" என்று கேட்டு குழம்பியவளிடம்,
"என்னடா வதனிக்கண்ணு.....? பேசுறத எல்லாம் டப்பு டப்புன்னு பாயிண்டு பாயிண்ட்டா பேசிட்டு கடைசில நாம்பேசுனது தப்பில்ல தானன்னு சந்தேகமா கேக்குற? நீ பேசுனதுல இத்தன வருஷமா உனக்குள்ள கெடந்த கோபம் ஆத்திரமெல்லாம் வெளிய வந்துடுச்சு கண்ணு!"
"இனிமே ஒங்கப்பன் விஷயத்துல ஒனக்கு இம்புட்டு கோபமோ, அளவிலாத ஆத்திரமோ வராது பாரேன்! எதயும் நெனக்காம கொஞ்ச நேரம் தூங்குடா தங்கம்...... எல்லாம் சரியாகிடும்!" என்று சொன்ன தன்னுடைய முகில்ம்மாவின் இடையைக் கட்டிக் கொண்டு மெல்லக் கண்மூடினாள் வதனி.
எப்போதும் பகலில் அரைமணி நேரத்திற்கு மேல் படுக்காதவள் இன்று மூன்று மணி நேரம் ஆகியும் அடித்துப் போட்டது போல் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள்.
திருமண அசதியோ, நெஞ்சில் வைத்ததை எல்லாம் கொட்டி விட்ட நிம்மதியோ தெரியவில்லை. ஜெயன் அறையை எட்டி எட்டிப் பார்த்து வியக்கும் அளவிற்கு உறங்கிக் கொண்டிருந்தாள்.
"இவளுக்கு என்னாச்சு அமுதாம்மா? ஏன் இன்னிக்கு இப்டி அடிச்சுப் போட்ட மாதிரி தூங்குறா?" என்று கேட்ட தன்னுடைய மகனிடம் அவள் அப்பாவிடம் பேச நினைத்து அழைப்பு விடுத்து அவளுடைய தம்பியிடம் பேசியது அனைத்தையும் சொன்னார் முகிலமுதம்.
"அவிய்ங்க குடும்பத்துல இவுகளால எதுவும் பிரச்சன வந்துரக்கூடாதுன்னு யோசிச்சு அந்த எமப்பக்கிகளுக்கு கல்யாணம் ஆகுற வரைக்கும் நம்ம வதனிப்புள்ள கல்யாணம் செஞ்சுக்க வேண்டாம்னு நம்ம சம்பந்தியம்மா நெனைச்சுருக்காங்கடா தம்பி; அதுக என்னடான்னா கொஞ்சங்கூட நன்றி, பாசம், மனிதாபிமானம் கூட இல்லாம நடந்துக்குதுக!" என்று சொல்லி ஆதங்கப்பட்டார்.
"என்ன பண்றது.....? கேவலமான எண்ணத்தோட இருக்காங்குறதுக்காக அவன அப்பனில்லன்னு சொல்லிர முடியுமா? கல்யாணம் ஆனத இவ அவங்கட்ட சொல்லிடுவோம்னு நெனச்சதுல ஒரு தப்பும் இல்ல!
அவேன் இவகிட்ட பேசுனது தான் ரொம்ப தப்பு..... நா போயி அவள எழுப்புறேன் அமுதாம்மா!" என்று அன்னையிடம் சொல்லி விட்டு தன்னுடைய அறையின் உள்ளே சென்றான்.
"இப்டி எந்நேரம் பாத்தாலும் குப்புறப் படுத்து தூங்குறாளே? கொஞ்ச நாளுல கொழந்த உண்டானா என்னடீ பண்ணுவ என் அழகி? இரு...... இனிமே நீ எங்கூட படுக்குறப்ப குப்புற படுத்துக்காத மாதிரி எதாவது ஐடியா பண்றேன்!" என்று நினைத்தவன் அவளுடைய இடப்புறத்தில் கட்டிலில் அமர்ந்து கொண்டு,
"வர்த்தினி... வர்த்தினி! சாயந்தரம் வெளக்கு வைக்குற நேரமாகிடுச்சு!
எந்திரிமா!" என்று சொல்லி அவளுடைய கன்னத்தை ஒற்றை விரலால் நிமிண்டிக் கொண்டிருந்தான்.
"கொஞ்ச.....நேரம் ஜெயன்; ப்ளீஸ்!" என்று சொன்ன படி அவனுடைய மார்பில் முகத்தை சாய்த்துக் கொண்டவளின் கன்னத்தில் முத்தமிட்டவன்,
"மணி ஆறு ஆகி பத்து நிமிஷம் ஆச்சு! மூணுமன்னேரமா அடிச்சுப் போட்ட மாதிரி தூங்கிட்டு இன்னுங்கொஞ்ச நேரங்குறியா..... ஒன்னைய என்னடீ செய்யலாம்?" என்று கேட்டவன் அவளுடைய காதுக்குள் தன் மூக்கை நுழைத்து வேகமாக சுவாசித்தான்.
காதுக்குள் திடீரென காற்று பட்டதால் அரண்டு அடித்துக் கொண்டு எழுந்தவள் "குட் ஈவ்னிங்! என்ன செம தூக்கம் போல?" என்று கேட்ட தன்னுடைய கணவனின் முட்டிகளில் முகத்தை சாய்த்துக் கொண்டாள்.
"என்னடா..... ஒங்கப்பன பாக்கணும்னு இன்னும் மனசு அடிச்சுக்கிடுதா? நீ மட்டும் ம்ம்ம் னு சொல்லு; இப்பவே அப்டியே கெளம்புவம்!" என்றான் அவள் தலையை வருடிய படி.
"ச்சீ.....ச்சீ! என்ன கேக்குற?
இனிமேட்டு ஒன்னோட வாசப்படியில வந்து நின்னா என்னைய என்னடீன்னு கேளுன்னு நா அந்தாளு புள்ள கிட்ட பேசியிருக்கேன். நீ வேற..... ஏதோ கல்யாணம் ஆனத சொல்லணும்னு தோணுச்சு. சொல்லியாச்சு! அவ்ளோதா! ஸாரி.... ரொம்ப நேரம் தூங்கிட்டனா? இந்தோ போயிட்டு ஃப்ரெஷ் ஆகிட்டு வந்துடுறேன்!" என்று சொல்லி விட்டு எழுந்தவளிடம்,
"அப்பத பவுடர் என்னோடத எடுத்த மாதிரி சோப்பும் என்னோடத எடுக்காதம்மா; வேணும்னா சொல்லு; ஒன்னோட சோப்ப மேல போயி எடுத்துட்டு வர்றேன்!" என்றவன் அவள் வெறும் தண்ணீரில் முகத்தை கழுவப் போவதாக சொல்லி விட யோசனையுடன் அமர்ந்திருந்தான்.
"என்ன ராஜா..... சும்மா நாள்லயே நம்ம பொண்டாட்டி மூக்க உறிஞ்சிக்கிட்டு அழுவாங்க..... இன்னிக்கு என்ன செய்யப் போறாங்களோன்னு நெனச்சு பயந்துட்டு ஒக்காந்துருக்கியா? பயப்படாத. அப்பாட்ட பேசிருந்தா கூட இவ்ளோ ஹார்ஷா பேசியிருப்பனோ என்னவோ? அருண்ட்ட எம்மனசுல ரொம்ப வருசமா அழுத்திக்கிட்டு இருந்த நிறைய விஷயத்த சொல்லிட்டேன். ரொம்ப ரிலாக்ஸ்டா, கம்பர்டபிளான மூடுல இருக்கேன். ஸோ டோண்ட் வொர்ரி!" என்றவளிடம்,
"ஒங்கிட்ட முக்கியமான ஒரு விஷயத்த கேக்கணும். இனிமே நம்ம ரெண்டு பேரும் ஒரே ரூமுக்குள்ள தான இருக்கணும்? நம்ம ரெண்டு பேரும் சேந்து இருக்கப் போறது மேலயா கீழயா?" என்று கேட்டான்.
"எனக்கு எங்க இருந்தாலும் ஓகே தான்.... நீ தான் ஹவுஸ் ஓனர்! நீ தான் நம்ம எங்க இருக்கப் போறோம்னு சொல்லணும்!" என்றாள் புன்னகைத்த படி.
"கடிச்சு வச்சா கத்துவியா? அப்டின்னா மேல போயிடலாம்! இல்ல சத்தம் வராம சமாளிச்சுக்குவன்னா இங்கயே இருந்துக்கலாம்!" என்று பெரிதாக திட்டம் போட்டவனின் முன்பாக தன் ஆள்காட்டி விரலை நீட்டி,
"ஏன் முகில்ம்மாட்ட வாங்குன அறை மறந்து போச்சா ஒனக்கு?புருஷனாகிட்ட! இனிமேல் எல்லாம்
கடிச்சு வச்ச....? மாமியார்ட்ட ஹெல்ப் கேட்டுட்டு இருக்க மாட்டேன். நானே கொன்னுடுவேன் உன்ன!" என்று சொல்லி கணவனை எச்சரித்தாள்.
"சரி வா! கடிக்குறது புடிக்குறதுக்கு எல்லாம் இன்னுங்கொஞ்ச நேரம் இருக்குல்ல....? அதுனால அத பெறவு வச்சுக்கிட்டு இப்ப குடிக்கறத யோசிப்போம். முதல்ல அடுப்படிக்குள்ள போயி ஒனக்கு என்ன வேணுமோ அதக் குடி! நான் கொஞ்ச நேரம் வெளிய போயிட்டு ஒரு ரவுண்ட்ஸ் அடிச்சுட்டு வாரேன்!" என்று அவளிடம் சொல்லி விட்டு முகிலிடமும் சொல்லி விட்டு வெளியில் கிளம்பி சென்றான்.
அழகி வருவாள்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro