🌻 அழகி 78
"ஜெயனு.... கோவிலுக்குப் போயிட்டு அப்புறமா வீட்டுக்கு போலாமுடா!" என்று சொன்ன தாயிடம்,
"கண்டிப்பா கோவிலுக்குலா போகணுமா அமுதாம்மா.... அவ கோவிலுக்குன்னு சொன்னாலே மூஞ்சிய தூக்குவாளே?" என்று யோசனைக் குரலில் பேசினான் ஜெயன்.
"அதெல்லாங்கெடையாது ஜெயனு.... மத்த நாளுன்னாவாச்சு பரவாயில்ல, போவுதுன்னு உட்டுடலாம்; வந்துருந்தவிய்ங்கள்ல பாதி பேரு ஒன்னைய பாத்து
ஆ ன்னு வாயப் பொளந்துச்சுக.... மீதி பேரு வதனிப்புள்ளய பாத்து பெருமூச்சு உட்டுச்சுக! நம்ம பேங்க்கு ஸாரு பேசுனத கூட கேட்டுப்புட்டு ரெண்டு பேரு கொமட்டுல கைய வச்சுக்குடுச்சுக!"
"அதுக கண்ணெல்லாம் கரிஞ்சு போவ.... எனக்குத் தெரியாது! கோயிலுக்குப் போயே ஆவணும். வழக்கம்போல நீ அவ கிட்ட போயி ஏதாவது கத சொல்லி அவள மேல இருந்து எறக்கி கூட்டியா!" என்று சொன்னவரை ஒருமாதிரியாக முறைத்தவன்,
"லூசம்மா.... அவ எங்க மேல இருக்கா? ரூமுக்குள்ளார இல்ல இருக்கா?" என்று கேட்டான்.
"இ...ஹி! ஆமால்ல.... நம்ம வீட்ல சொல்லி சொல்லி எனக்கு அது அப்டியே பழக்கமாயிடுச்சுடா ஜெயனு.... சிறுசுக ரெண்டும் கொஞ்சம் அனத்த ஆரம்பிச்சதால மரியம் கெளம்பிட்டா; ஒங்கிட்ட சொல்லிடச் சொன்னா..... நஸாரு எங்கள வீட்ல எறக்கி உட்டுட்டு போறேன்னு சொல்லிட்டு மண்டபத்துல எல்லாருக்கும் செட்டில் பண்ணிக்கிட்டு இருக்கான்! அவேங்கிட்ட நீதானய்யா காச குடுத்து உட்ட?" என்று கேட்டவரிடம்,
"ஆமா.... அமுதாம்மா! மொத்த ஸெட்டுக்கும் ரெண்டுநா லீவு உடச் சொல்லி, அவனையும் கூடவே இழுத்துப் புடிச்சு வச்சுருக்கோம். அவேன் எனக்கு செய்யுற இந்த சகாயமே ரொம்ப பெரிசு..... நம்ம அவலாஞ்சி பெர்சு, நஸாரு கிட்ட எல்லாம் நா செய்முறய எதிர்பாக்கல அமுதாம்மா! நிக்கலசுன்னு ஒரு பெர்சு லவ்டேலுல இருக்குது.... அந்த ஆளு கிட்டயும் எனக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு தாக்கல் சொல்லிட்டு ஏதாவது வாங்கித் தரணும் அமுதாம்மா!" என்று சொன்னவனிடம்,
"ஒருநா வதனிப்புள்ளயவும்
அங்கணக்குள்ள கூட்டிட்டுப் போயிட்டு அவருக்கு ஏதாச்சு வாங்கிக் குடுத்துட்டு வா சாமி; இன்னொரு காமன்னேரத்துல கெளம்புனா, கோயிலுக்குப் போயிட்டு வீட்டுக்குப் போவ சரியா இருக்கும்! நீ போயி புள்ளய கூப்டுய்யா!" என்று சொன்ன அன்னையிடம்,
"கஷ்டமான வேலைன்னா மட்டும் நீயி நேக்கா என்னைய அதுக்குள்ள தள்ளி உட்ரு!" என்று சடைத்துக் கொண்டு தன்னுடைய மனைவி இருந்த அறைக்குள் நுழைந்தான் ஜெயன்.
"ஹாய்....! கெளம்பலமா?" என்று கேட்டவளின் அருகில் குதித்து அமர்ந்தவன் அந்த அறையின் கட்டிலில் விரிக்கப்பட்டிருந்த மெத்தையின் தூசி நாசியில் ஏறிக்கொள்ள "ச்சூ.... ச்சூ; ச்சூ!" என்று மூன்று நான்கு முறை தும்மினான்.
"எந்த விஷயத்துலயாவது நிதானம் இருக்கா ஒங்கிட்ட? நானும் தான் இவ்ளோ நேரம் இந்த ரூம்ல ஒக்காந்துருந்தேன். அப்ப எல்லாம் டஸ்ட் வந்துச்சா? ஒன்னைய யாரு இங்க வந்து துள்ளி குதிக்க சொன்னாங்க? பட் பரவாயில்ல.....
ஊட்டி ரேஸ் கோர்ஸ்ல, லேக் சைடுல இருக்குற ஒன்னோட தம்பிங்க தும்முற மாதிரியே அழகா தும்முற ஜெயன்!" என்று கிண்டல் செய்து சிரித்தவள் அவனது கண் உருட்டலில் வாயை மூடிக் கொண்டாள்.
"என்னைய குதிரங்கறியா?" என்று மூக்கில் புகை விட்டவனிடம் சிரித்து உதடு சுழித்தவள்,
"ஒங்கள எங்க நான் குதிரைன்னு சொன்னேன் ராஜா? குதிரைங்க உங்களோட தம்பின்னு தான சொன்னேன். கெளம்பலமான்னு கேட்டேன். எழுந்திரிக்க மாட்டேங்குற?" என்று கேட்டாள்.
"பொறு போவம். இந்த மண்டபத்துல எல்லாம் ஒருத்தன் பர்ஸ்ட் நைட் கொண்டாடனும்னு நெனச்சான்....? செத்தான்! தும்மல், அரிப்பு, டஸ்ட் அலர்ஜி, மூட்டப்பூச்சி கடி, இப்டி எல்லாமே ஒண்ணா சேந்து பொண்ணு மாப்புளய
ஒருவழியாக்கி நேரா ரெண்டு பேரும் ஆஸ்பத்திரி பெட்டுல போயி சேர வேண்டியதுதான்! நல்லவேளப்பா.. நம்ம இன்னும் செத்த நேரத்துல இங்கருந்து எஸ்ஸாகிடுவோம்!"
"நஸாருப்பய எல்லாம் இந்த மண்டபத்த பத்தி ரொம்ப கொற சொல்லிக்கிட்டே கெடந்தான்! நீ எப்டிறீ ஒண்ணுமே சொல்லாம இந்த ரூமுக்குள்ள அமைதியா இம்புட்டு நேரம் ஒக்காந்துருந்த?" என்று மனைவியிடம் கேட்டான்.
"இந்த எடத்துல கம்ப்ளையிண்ட் பண்ற மாதிரி எனக்கு ஒண்ணும் தெரியல ஜெயன்.... கொஞ்சம் பழசாயிருக்கு; அழுக்கா இருக்கு! அவ்ளோதான்?" என்று அவனிடம் சொல்லி விட்டு தோளைக் குலுக்கினாள்.
"அது சரி.... நான் செய்யுற எல்லாத்துக்கும் நீ இப்புடி தோளக்குலுக்கிட்டே இருந்தா நமக்குள்ள சண்டயே வராம போரடிக்கும் போலருக்கே?" என்று சொன்னவனிடம்,
"இல்ல.... ஒரு விஷயத்துல நான் உங்கிட்ட சண்ட பிடிக்கணும்! அப்பத ஏன்டா அப்டி கேட்ட?" என்று கேட்டு அவனைக் கோபமாக பார்த்தாள்.
"எப்பத எப்டி கேட்டாய்ங்க?" என்று கேட்டவன் தன்னுடைய உள்ளங்கையால் மூக்கை தேய்த்துக் கொண்டான்.
"நடிக்காத! நான் எதக் கேக்குறேன்னு ஒனக்கு நல்லாவே தெரியும்!" என்று சொன்னவளிடம்,
"ம்ப்ச்! டஸ்ட்டு மூக்குல ஏறுன நேரத்துல இவ வேற கேள்வி கேட்டு இம்ச பண்ணிக்கிட்டு....? கையில
கைக்குட்ட வச்சிருந்தா குடுறீ!" என்று அவளிடம் கேட்டவன் அவள் நீட்டிய கைக்குட்டையின் அளவைப் பார்த்து விட்டு "என்னாது இது?" என்று கேட்டான்.
"ஏய்.... நான் யூஸ் பண்ற கர்ஃசீப் குட்டியா தான் இருக்கும். ஒம்மொகத்த மூடுறதுக்கு அத யூஸ் பண்ணிக்கணும்னு நெனச்சன்னா, நான் என்ன செய்ய....? இரு வர்றேன்!" என்று சொன்னவள் தன்னுடைய புடவைத் தலைப்பை எடுத்து அவனுடைய மூக்கைச் சுற்றி கட்டி விட்டு அவனுடைய வலப்புறமாக அமர்ந்து கொண்டாள்.
கோமதியின் கழுத்தில் இணைக்கப்பட்டிருக்கும் பெரிய கயிறு திடீரென நியாபகம் வந்தது அவனுக்கு.
"ஏன்டீ.... கல்யாணம் ஆன மொதநாளே புருஷன இப்டி பொடவைக்குள்ள கட்டி வச்சுக்கிட்டியே? எங்கயும் ஓடக்கூடாதுன்னா? ஜெயனு ஒன்னைய விட்டு எங்கயும் ஓடிட மாட்டேன்டா ஹெட்லைட்டு!" என்று சொல்லி அவளுடைய நெற்றியை முட்டியவனிடம் உச்சுக்கொட்டியவள்,
"இம்ச புடிச்சவனே; நீதானடா மூக்க மூடச் சொன்ன? தும்மி கஷ்டப்படுறியேன்னு நெனச்சு ஹெல்ப் பண்ணா அதுக்கும் கிண்டல் பண்ணுறான் லூசு!" என்று அவனைத் திட்டிக் கொண்டிருந்தாள்.
"ஆமா தாயி! நா லூசு தான்.... நீ ரொம்ப டைட்டு தான்!" என்று சொன்னவன் தன்னுடைய மூக்கை மறைந்திருந்த புடவைத் தலைப்பை அவிழ்த்து இப்போது இருவருடைய உடம்பையும் முழுதாக சேலை தலைப்பிற்குள் பொத்திக் கொண்டான்.
"என்ன பண்ற ஜெயன்?" என்று சிரிப்புடன் கேட்டவளிடம்,
"லவ் பண்றேன்.... வெளையாட்டுல நீயும் என்னோட சேந்துக்கலாம் தப்பில்ல!" என்று கூறி கண்சிமிட்டினான்.
அவனுடைய மார்பில் தன் விரலால் கோலம் போட்டுக் கொண்டிருந்தவள் அவனிடம்,
"ஒன்ன என் ஹஸ்பெண்டா பாக்குறது ஏதோ புதுசா வித்தியாசமா தெரியுது ஜெயன்....! கல்யாணம்னா இவ்ளோ சந்தோஷமா இருக்கும்னு தெரியாது எனக்கு; இந்த ஒரு நாளுக்காக நீயும் முகில்ம்மாவும்
எத்தன விஷயத்த யோசிச்சு யோசிச்சு செஞ்சுருக்கீங்க?"
"நீ இருக்குற இடத்துல எப்பவுமே குட் வைஃப் இருக்குடா... அது
ஒன்னோட மோனாலிசா மாதிரி இயல்பா அப்டியே உங்கூட ட்ராவல் ஆகுது! இனிமே ஒங்கன்னத்த கிள்ளி வைக்கலாம்; உதட்டுல இப்டி முத்தம் குடுக்கலாம்.... முதுகுப் பக்கத்துல கைய விட்டுக்கிட்டு கட்டிப் புடிச்சு ஒக்காந்துக்கலாம்; எனக்கு ரொம்ப பிடிச்ச இந்த கன்னத்துல லேசா கடிச்சுக் கூட வைக்கலாம்..... வைக்கலாம் தான?" என்று கேட்டவாறு கிள்ளி, முத்தமிட்டு, அவனை கட்டிப்பிடித்து, செல்லமாய் கடித்து என அவள் அத்தனையையும் அவனிடம் ஆராய்ச்சி செய்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
"இப்டி ஒரசிக்கிட்டு மடியில தொத்திக்கிட்டா கண்ணாடியெல்லாம் கழட்டி ஒரு ஓரமா வச்சுடணும் ஏஎம் அம்மா; இல்லையின்னா அது வேற அதோட பங்குங்கு நமக்கு கொடச்சலக் குடுக்குது பாரு!" என்று சொன்னவன் அவளுடைய கண் கண்ணாடியை கழற்றி சைட் டேபிளில் பத்திரப்படுத்தி விட்டு அவளுடைய கன்னங்களை இதமாக கிள்ளி மசாஜ் செய்வது போல கையில் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தான்.
"நம்ம கப்புள் ஆனதுல நீ சந்தோஷமா இருக்கியா?" என்று கேட்டவளை அணைத்துக் கொண்டு அவளுடைய கழுத்தில் துருத்திக் கொண்டு தெரிந்த எலும்பில் தலை வைத்துப் படுத்திருந்தான் ஜெயன்.
"தயவுசெஞ்சு என்னைய உட்டுடுங்க ஸார்; இதெல்லாம் சரியே வராதுங்க ஸார்.... உங்கள கல்யாணம் பண்ணிக்கறத பத்தி யோசிக்கவே முடியாது ஸார்னு வார்த்தைக்கு வார்த்த என்னைய எப்டியாவது வெட்டி விடணும்னு நெனச்சு பேசிக்கிட்டு இருந்த நீயே எம்மூஞ்சியில முத்தம் குடுக்குற அளவுக்கு சந்தோஷமா இருக்கன்னா, ஆதியில இருந்து கட்டுனா ஒன்னைய தான்டீ கட்டுவேன்னு புடிச்சு தொங்கிட்டு இருந்த நா எவ்ள சந்தோஷமா இருப்பேன்?"
"எனக்கு கல்யாணம் நடந்ததுல சந்தோசம்! ஒங்கூட நடந்ததுல தலைசுத்தி கீழ உழுவுற அளவுக்கு சந்தோசம்..... போதுமா? நீ ஒன்னோட சந்தோசத்த கட்டிப் புடிக்குறது, முத்தம் குடுக்குறது, கிள்ளி வைக்குறது, கழுத்த கட்டிக்கிட்டு ஒக்கார்றதுன்னு நெறய விதத்துல காமிச்ச தான? அப்ப நானும் எஞ்சந்தோசத்த ஒங்கிட்ட கொஞ்சம் காட்டணும்..... என்ன நம்பளோட ஆசையெல்லாம் வெளிய சொல்லிக்குற மாதிரி நல்லதனமா இருக்காது! நாக்க நீட்டேன் செல்லம்!" என்று சொன்னவனிடம்,
"எதுக்குடா இப்ப திடீர்னு?" என்று குழம்பிப் போய் ஒரு கேள்வி கேட்டாள் வதனி.
"நீட்டுனா என்னிய நம்பி நீட்ட மாட்டியா? ஏன் என்னத்துக்குன்னு எதுக்கு கேள்வி கேக்குற?" என்று கேட்டு அவளுடைய நெற்றியில் தன் மீசையால் குத்தி அவள் கேட்ட கேள்விக்கு தண்டனை வழங்கினான் ஜனமேஜெய ராஜா.
சற்றே வெட்கச் சிரிப்புடன் இளஞ்சிவப்பு நிறத்திலான தனது நாவை அவனிடம் நம்பிக் கொடுத்தவளின் நம்பிக்கையை மோசம் செய்து வதனியின் இதழ்களையும் நாவுடன் சேர்த்து கபளீகரம் செய்து கொண்டவன் ஐந்து நிமிடங்களுக்குள் இருபது முறையாவது அவளது இதழ்களை தன்னுடைய உமிழ்நீரால் நனைத்து முடித்திருப்பான்.
"ஏய்..... அடி வாங்குவ எங்கிட்ட! ஐயோ சும்மாயிரேன்டா கடங்காரா!" என்று சிணுங்கியவளின் மறுப்பையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் அன்றொரு நாள் அவன் முன்பு தன் உள்ளாடைகளை கழற்ற முனைந்த போது கண்ணியம் காத்து வேண்டாம் என தடுத்து நிறுத்தியவன் இப்பொழுது முத்தத்திலும் மும்முரம் செலுத்தி அவளது மார்பை தொடும் ஆடையையும் கையில் வைத்திருந்தான்.
"சொல்லு... இதல்லா நம்ம வீட்ல நீ
எங்க காயப் போடுவ? நான் ஒருதடவ கூட பாத்ததேயில்லயே? நல்ல வெயில்ல தான் இதல்லா ஒனத்தி எடுக்கணும்னு சொல்றாய்ங்க! இனிமே எங்கிட்ட இதக் காட்டுறதுக்கு வெக்கப்படுவியா?" என்று கேட்டவனை இடுப்பில் கிள்ளியவள்,
"கேக்குற கேள்விய அப்டியே கேக்க வேண்டியதுதான கொரங்கே..... கட்டில்ல தாவி பொடவையால பொத்தி இத கழட்டி கையில வச்சுட்டு தான் கேப்பியா?" என்று கேட்டாள்.
"பெறவு.... பொண்டாட்டி பொண்டாட்டி ஒன்னைய கட்டிப் புடிக்குறதுக்கு, முத்தம் குடுக்குறதுக்கு, கிள்ளி வைக்குறதுக்கு, கழுத்த கட்டிக்கிட்டு ஒக்கார்றதுக்கெல்லாம் எனக்கு நீ எப்பம்மா பெர்மிஷன் தருவன்னு கேட்டு கெஞ்சிட்டு இருக்க சொல்றியா? அதெல்லாம் இனிமே செய்ய முடியாதுடீ செல்லம்!"
"மொத தடவ மண்டையில கொட்டி வச்ச! ரெண்டாவது தடவ இடுப்புல கிள்ளுன.... இன்னோரு தடவ கடிச்சு கூட வச்சுக்க.... ஆனா பதில் சொல்லு!" என்று வீம்பாக தன் பிடியில் நின்றவனை பார்த்து தலையில் கைவைத்தவள்,
"ஆமா.... இத்தன நாளா என்னோட இன்னர் வியர் எல்லாத்தையும் நான் பாத்ரூமுக்குள்ளயே தான் போடுவேன், ஒனக்கும் எனக்கும் எம்பாரஸிங்கா இருக்கக்கூடாதுன்னு தான் அப்டி செய்வேன். இனிமே அப்டி செய்யல போதுமா.....?" என்று சொன்னாள்.
"ம்ம்ம்..... கேக்குற விதமா கேட்டா தான்யா பதில் வருது!" என்று சொல்லி அவளை அழுந்த முத்தமிட்டவன்,
"சரியா எல்லாத்தையும் போட்டுட்டு வா கெளம்பலாம்!" என்று சொல்லி விட்டு அவளுடைய முந்தானை மூடலில் இருந்து வெளியில் வந்தான்.
"குன்னூர் ரவுடி....!" என்று அவனைக் கொஞ்சி அவன் தலை முடியை லேசாக கலைத்து விட்டு எழுந்து சென்று தன் புடவையை சரியாகக் கட்டிக் கொண்டிருந்தாள் வதனி.
கோவிலுக்குப் போக வேண்டும்! உன் மனைவியிடம் பேசி அவளை சம்மதிக்க வைத்து அழைத்து வா என்று சொல்லி அமுதாம்மா அவனை அனுப்பி வைத்திருந்த வேலை அப்படியே அந்தரத்தில் நின்று கொண்டிருந்தது.
அழகி வருவாள்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro