🌻 அழகி 71
"இவ்ள நேரமா உள்ள என்னத்த நோண்டிக்கிட்டு இருந்த நீயி?" என்று கேட்ட தன்னுடைய மகனிடம் லேசாக புன்னகைத்தவர்,
"இன்னிக்கு நம்ம வதனிப்புள்ளைக்கு ஏதாவது பரிசு குடுக்கணும்டா ஜெயனு.... அதான் உங்கப்பா என்னைய வெளிய கூட்டிட்டுப் போகயில எனக்குன்னு வாங்கிக் குடுத்த சில பொருளுல ரொம்ப நல்லத தேடிப் பிடிச்சு எடுத்தாந்தேன்.... வதனிக்கண்ணு; இத வாங்கிக்கடா தங்கம்!" என்று அவளிடம் சொன்னார்.
ஒரு மயிலின் வடிவில் அமைந்திருந்த வெள்ளியிலான நகைப்பெட்டியில் மயிலின் வயிற்றுப் பாகத்தை திறந்தால் அதில் இரண்டு மூன்று தங்க நகைகளை பத்திரப் படுத்திக் கொள்ளலாம் போன்ற அமைப்பில் இருந்தது.
"மாமா உங்களுக்குன்னு வாங்கி தந்த பொருள்ல இது மட்டும் அப்டி என்ன ஸ்பெஷல் முகில்ம்மா?" என்று கேட்டவளிடம்,
"அத இங்க குடு! எனக்கெல்லாம் எங்க அமுதாம்மா இத்தன வருஷத்துல ஒருநா கூட
இத மாதிரி ஒரு பொருளக் காட்டுனதேயில்ல!" என்று சொல்லி விட்டு மயிலின் வயிற்றை திறந்து திறந்து மூடி விளையாடிக் கொண்டிருந்தான் ஜெயன்.
"ஒன்னையமாரி திருவாத்தன் கையில எல்லாம் எங்க வீட்டுக்காரர் எனக்குன்னு ஆசையா வாங்கிக் குடுத்தத ஏன்டா குடுக்குறேன் நானு? அத கொண்டா இங்க!" என்று அவனிடமிருந்து வெடுக்கென்று அந்தப் பொருளைப் பறித்து மகனுடைய முறைப்பை கண்டுகொள்ளாமல் திரும்ப அதை வதனியின் கைகளில் கொடுத்தார்.
"அவரு வாங்கித் தந்ததுல இது மட்டும் என்ன ஸ்பெசலுன்னு கேட்டல்ல வதனிக்கண்ணு.....? முந்தி எல்லாம் நா அவரு கூட வெளிய போகயில சின்னப் புள்ளத்தனமா எனக்குப் புடிச்சத வேணுங்குறத வாங்கிக் குடுக்கணும்னு கேட்டு அந்த எடத்துலயே அப்டியே ஒக்காந்துருவேன்டா தங்கம்!" என்று சொன்ன தன்னுடைய அன்னையிடம்,
"எல்லாப் பொண்ணுங்களும் இப்டித்தே போல..... இங்கயும் அதே கத தான்! வாங்குறது அவளுக்கு
தேவையா இல்லையான்னு கூட பாக்குறது கெடயாது; சின்னப் புள்ளத்தனமா தான் சாமான வாங்கிக் குடுன்னு கேக்குறது!" என்று அன்னையிடம் சொல்லி விட்டு சிரித்துக் கொண்டான்.
அவள் அவனிடம் சோப்பு நுரையை கேட்டு வாங்கி அதை ஒற்றை ஆளாய் ஊதி ஊதி காலி செய்ததை நினைத்து தான் அப்படி சிரித்தான்.
"யம்மா.... இது நல்லாருக்கும் போலிருக்கே? எனக்கு ஒருக்கா வெளையாட குடேன்!" என்று அவளிடம் கேட்ட போது முடியவே முடியாதென்று மறுப்பாக தலையாட்டியவள்,
"இத வாங்குனப்ப என்னைய நீ லூசு மாதிரியே பாத்த; இப்ப மட்டும் எதுக்கு நீ வெளையாட கேக்குற? போடா ஒனக்கெல்லாம் இத தர முடியாது!" என்று அவனிடம் சொல்லி விட்டாள்.
அந்த நாள் நியாபகத்தில் புன்னகை முகமாக நின்று கொண்டிருந்தவனிடம்,
"நாங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருக்கோம்ல ஜெயனு? நீ வெளிய எங்கனா போயிட்டு வர்றதுன்னா போயிட்டு வா!" என்று சொன்ன அன்னையிடம்,
"எ...தே? நீங்க பேசயில ஊடால புகுந்து நா பேசுனா அதுக்காக
பெத்த புள்ளய வெளிய போன்னு சொல்லுவியா அமுதாம்மா நீயி?
பேசுங்க தாயி.... நல்லாப் பேசுங்க! நா ஒங்க ஆட்டைக்கே வரல!" என்று சொல்லி விட்டு அமைதியானான் ஜெயன்.
"இந்த பொருள வாங்குற அன்னிக்கும் அப்டித்தான்டா வதனிப்புள்ள.... இதோட வெலயே தெரியாம அழகாயிருக்குன்னு மட்டும் பாத்துட்டு ஒங்க மாமாட்ட நானு இது வேணும்னா வேணும்னு கேட்டு அடம்பிடிச்சேன்....!"
"இங்கரு அமுது..... இப்ப இத வாங்க நம்ம கிட்ட காசு இல்லம்மான்னு சொன்னவரு நாங்க ஒவ்வொரு வாட்டியும் வெளிய போகையிலயும் வரயிலயும் அந்தக் கடையில அதே சாமான் இன்னும் இருக்கா இருக்கான்னு கேட்டுட்டு கிட்டத்தட்ட ரெண்டு மாசம் கழிச்சு தான் அத எனக்கு வாங்கிக் குடுத்தாரு!" என்றார்.
"அடடா...... கட்டுனவ மேல என்ன ஒரு காதலு!" என்று உச்சுக்கொட்டியவனிடம் எரிச்சலுடன்,
"டேய்... எரும! இதுக்குத் தான்டா நான் ஒன்னைய வெளிய போகச் சொன்னேன்!" என்றார் முகில்.
"இவங்கெடக்குறான்.... நீங்க சொல்லுங்க முகில்ம்மா! ரெண்டு மாசம் கழிச்சு மாமா இதே கிப்ட்ட உங்க கையில வாங்கி குடுத்தவுடனே நீங்க எவ்ளோ ஹாப்பி?" என்று ஆர்வமாக கேட்ட வதனியிடம்,
"ஆமா.... ஹாப்பி இன்று முதல் ஹாப்பின்னு பாட்டு பாடுற அளவுக்கு எங்கம்மா ஹாப்பி; இதெல்லாம் ஒரு கத..... இத கன்னத்துல கைய வச்சுக்கிட்டு உம் கொட்டி வேற கேட்டுக்கிட்டு கெட...... அமுதாம்மா ஏதோ சந்தனம் தடவணும்னியே? அது என்னாச்சு?" என்று கேட்டவனை இருவரும் ஒரே நேரத்தில் அனல் பார்வையால் முறைத்தனர்.
"என்னங்கடா இது? இப்ப நா என்ன சொல்லிட்டேன்னு ரெண்டு பேரும் என்னைய இப்டி மொறக்குறீங்க?" என்று கேட்டவனிடம் வாயில் விரல் வைத்து காட்டினர்.
"ஆமாடா வதனிப்புள்ள....
இந்த மயில உங்க மாமா எனக்கு வாங்கிக் குடுத்த அன்னிக்கு எனக்கு அவ்ளவு சந்தோஷமா இருந்துச்சு! ஏம்மாமா நான் என்ன கேட்டாலும், கேக்குற சாமான் வெல ஒசந்ததா இருந்தாலும் அத கஷ்டப்பட்டாவது வாங்கித் தர்றீகளே? எம்மேல ஒங்களுக்கு அம்புட்டு இஷ்டங்களான்னு அவர்ட்ட கேட்டதுக்கு சொன்னாரு பாரு ஒரு பதிலு.....!"
"பொண்டாட்டி கேக்குறது நம்மளால வாங்க முடிஞ்ச பொருளா இருந்தா, அத அவளுக்கு வாங்கிக் குடுத்து அவள சந்தோஷப்படுத்துறது தான்டீ ஒரு புருசனோட கடம! இத நம்ம வாங்குறதுக்குள்ள வேற யாரும் பிடிச்சுப் போயி வாங்கிட்டு போயிருவாங்களோன்னு நான் பட்ட கவல எனக்குத்தா தெரியும்.... இத எப்பவும் பத்திரமா வச்சுக்க அப்டின்னு சொல்லிட்டு எங்கையில குடுத்தாரு!"
"இது வெறும் ஒரு வெள்ளிச்சாமா... ஒங்கையில குடுத்து இத நீ பத்திரமா வச்சுக்குவியா மாட்டியான்னு எனக்குத் தெரியாது வதனிக்கண்ணு; அது ரொம்ப முக்கியமும் இல்ல..... ஆனா எம்புள்ளய நீ ரொம்ப ரொம்ப பத்திரமா வச்சுக்கணும்; அது ரொம்ப முக்கியம்!" என்று சொல்லி விட்டு ஜெயனுடைய கையைப் பிடித்து அவளுடைய வலக்கையில் இணைத்த போது "வாவ்... வாட் அ மொமண்ட்!" என்று இருந்தது வதனிக்கு.
இவ்வளவு நேரம் வெள்ளி மயில் நகை டப்பாவின் கதை கேட்டு காதைக் குடைந்து கொண்டிருந்தவன் இப்போது நிகழ்ந்த நிகழ்வால் திகைத்துப் போய் தன்னுடைய அன்னையையும் வதனியையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனுடைய கையைப் பற்றி காதல் பொங்க அவனைப் பார்த்துக் கொண்டிருந்தவளிடம்,
"அமுதாம்மா ஒங்கிட்ட எதோ சொல்லுச்சு..... அதுக்கு இன்னும் பதிலே சொல்லல!" என்று அவளுக்கு நினைவு படுத்தினான்.
"ஹா....ன்! அது வந்து..... நான் ஜெயனையும் இந்த பாக்ஸையும் ரொம்ப பத்திரமா கைக்குள்ள மூடி வைக்குற மாதிரி வச்சு காதலிக்குறேன் மாமியார்!" என்று முகிலிடம் சொன்னாள் வதனி.
"அட்ராசக்க..... அமுதாம்மா; நம்ம ஆளு சொன்னத கேட்டுக்கிட்டியா? அம்மாவும் பொண்டாட்டியும் நம்ம மேல இப்டி பாசத்த காட்டுனா இதுக்கு மேல ஒனக்கு என்ன வேணும்டா ஜெயனு? நீ ராஜாடா!" என்று சொல்லி கைகளை தலைக்குப் பின்னால் கோர்த்துக் கொண்டவன் ஒரு மர நாற்காலியில் அமர்ந்து
கால் மேல் கால் போட்டுக் கொண்டான்.
"போஸ் எல்லாம் நல்லாத்தான் இருக்கு; கால கீழ போடு!" என்று சொன்ன முகில் அவனது கன்னங்களில் சந்தனம் பூசி அவனது நெற்றியில் குங்குமம் வைத்து விட்டார்.
"என்னம்மா இவளுக்கு செய்யப்போறேன்னுட்டு மொதல்ல எனக்கு செய்யுற?" என்று கேட்டவனிடம்,
"ஏன்....? எனக்கு ஏன் மொதல்ல பூசலன்னு இதுலயும் நீ சண்ட புடிக்குறதுக்கா?" என்று கேட்டவர் வதனியின் கன்னங்களிலும் சந்தனம் பூசி அவளுக்கும் குங்குமம் வைத்து விட்டார்.
"அமுதாம்மா.... நானு நானு!" என்று பரபரத்தவனிடம்,
"இந்தா போயி கோமதிக்கு பூசு போ!" என்று சொன்னார் முகில்.
"நீ என்ன சும்மா அவ கிட்டவே நிக்க உடாம என்னைய வெரட்டிக்கிட்டே இருக்க....? தள்ளு அங்கிட்டு!" என்று சொன்னவன் சந்தனத்திற்கும் வலிக்காமல் அவள் கன்னங்களுக்கும் வலிக்காமல் அவனது இருவிரலால் அவளுடைய கன்னத்தில் கோலம் போட்டான்.
இருவருக்கும் சற்று தனிமையை தர நினைத்த முகிலமுதம்,
"ஜெயனு எங்கயும் போயிடாத ஆரத்தி கரைச்சு எடுத்துட்டு வர்றேன்!" என்று சொல்லி விட்டு சமையலறைக்குள் சென்றார்.
அன்னை தனக்கு சற்று தூரமாக போய் விட்டதை உறுதி செய்து கொண்டவன் தன்னவளின் காதருகில் வந்து,
"ஒருவழியா என்னைய மொறச்சுக்கிட்டே இருந்த மேடத்த ஓகே பண்ணி கல்யாணம் வரைக்கும் கூட்டிட்டு வந்தாச்சு!
நமக்கு நிச்சயதார்த்தம் முடிஞ்சதுக்காக உங்களுக்கு வாழ்த்துகள் மிஸஸ் பர்வதவர்த்தினி ஜனமேஜயன்!" என்று மெதுவான குரலில் சொல்ல வதனியும் புன்னகைத்து,
"ஹேப்பி என்கேஜ்மெண்ட் மிஸ்டர் ஜனமேஜயன்!" என்று சொல்லி விட்டு அவனிடம் கைகுலுக்க தன் கையை நீட்டினாள்.
அவளுடைய கையைப் பற்றி தன்னுடைய உதட்டில் வைத்துக் கொண்டவன் மெல்ல அவளது தோலை பற்களால் இழுத்து பின்னர் கையில் முத்தமிட்டான்.
"இங்க பாரு! கிஸ் குடுக்கும் போது
சும்மா சும்மா சதைய கடிக்காத! அப்புறம் நானும் ஒனக்கு திருப்பி குடுப்பேன்.....!" என்று எச்சரித்தவளிடம்,
"சந்தோசமா இருக்கியா வர்த்தினி?" என்று திடீரென ஒரு கேள்வியை கேட்டான் ஜெயன்.
"என்ன ஜெயன் திடீர்னு இப்டி கேக்குற? சந்தோஷம் தான்.... ரொம்ப சந்தோஷந்தான்; நாளைக்கு கூட நம்ம மூணு பேரும் இப்டி மனசு விட்டு பேசிக்குறதுக்கு நேரம் இருக்காதுன்னு நெனைக்குறேன்..... யாருமே இல்லாம எப்பவும் வீட்ல இருக்குற மாதிரியே ஒரு ஃபீலோட இந்த நிச்சயதார்த்தம் ரொம்ப புதுசாவும், அழகாவும் இருக்கு ஜெயன்!" என்று சொன்னவளிடம்,
"ஒனக்கு ஓகே தான..... அப்படின்னா ஒண்ணும் கவலயில்ல விடு!" என்றவன் அவளிடம் ரகசியக் குரலில்,
"நைட்டு எங்கயாவது வெளிய ஊரு சுத்துவமா?" என்று அவளிடம் கேட்டான்.
"ம்ஹூம்! முகில்ம்மா என்ன சொல்லுவாங்கன்னு தெரியல!" என்று சொல்லி அவனது ஆசையை மறுத்துக் கொண்டிருந்தாள் வதனி.
"இவ ஒருத்தி..... கூட வாடீன்னு கூப்ட்டா நைஸா கழண்டு வராம எந்நேரம் பாரு முகில்ம்மாட்ட கேக்கணும், அவங்க கிட்ட சொல்லணும்னு புராணம் பாடிக்கிட்டு!" என்று அவன் சடைத்துக் கொள்ள முகிலமுதம் அவர்கள் இருவரையும் ஒன்று சேர்த்து நிறுத்தி ஆலம் கரைத்த பின்னர் டீவியைப் போட்டு பார்த்துக் கொண்டிருந்தான்.
அவன் அப்படி காலாட்டிக் கொண்டு தொலைக்காட்சியைப் பார்ப்பதை பொறுக்காமல் அவனுடைய அலைபேசி அழைக்க ஜெயன் அழைப்பை ஏற்று
"சொல்றா மாப்ள!" என்று தன் நண்பனிடம் கேட்டான்.
"என்னடா புதுமாப்ள; எங்கடா இருக்க? என்ன செஞ்சுட்டு இருக்க? ஷெட்டு பக்கம் ஆளயே காணும்? மேடத்த கூட்டிக்கிட்டு சாயந்தரம் இந்தப்பக்கம் வா! நாங்க ஒன்னைய ஸ்பெஷலா கவனிக்கணும்னு நெனச்சுருக்கோம்!" என்றான் நஸார்.
"அதென்னடா ஸ்பெஷலா கவனிக்குறது? நான் வீட்ல சும்மாத்தா காலாட்டிக்கிட்டு படுத்துக் கெடக்கேன்; என் ஆளு தான் வெளிய வர மாட்டேன்னு சொல்லி ஸ்ட்ரைக் பண்ணிட்டு இருக்கா! அமுதாம்மாட்ட கேட்டுட்டு அவளும் நானும் அங்க வாரோம்.... நீ வையி!" என்று சொன்னவன்,
"வர்த்தினி கொஞ்ச நேரத்துல நாம
நஸார் ஷெட்டுக்கு கெளம்பணும்! அமுதாம்மா... சும்மா இருந்தன்னா நீயும் எங்க கூட வா!" என்று சொன்னவன் மூன்று பேருமாக அங்கு செல்வதென்றால் ஆட்டோவில் செல்வோம் என்று நினைத்து கிளம்பிக் கொண்டிருந்தான்.
அழகி வருவாள்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro