Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

🌻 அழகி 62

"நஸார் ஸார்..... உங்க ரெண்டு பேர் கிட்டயும் நான் கொஞ்சம் பேசணும்; இங்க வந்து ஒக்காருங்க ரெண்டு பேரும்!" என்று அழைத்தவளை எதற்காக அழைக்கிறாள், என்ன பேசப் போகிறாள் என்ற யோசனையுடன் கணவனும் மனைவியும் ஒருவரது முகத்தை மற்றொருவர் பார்த்துக் கொண்டே
வதனியின் எதிர்ப்புறமாக அமர்ந்திருந்தனர்.

"ஒங்களோட சைனப் டிராவல்ஸ்ல இன்னுங்கொஞ்சம் பெட்டரான இன்கம் வர்ற அளவுக்கு நான் சில ப்ளான்ஸ் யோசிச்சு வச்சுருக்கேன். நீங்க ரெண்டு பேரும் ஓகே சொன்னா, அத நான் இப்ப இங்க சொல்லுவேன்!" என்றவளிடம்,

"சொல்லுங்க மேடம்! மத்தவங்க முன்னேறணும்னுங்கற நல்ல எண்ணத்துல ஐடியாவெல்லாம் குடுக்குறீங்களே? நீங்க சொல்றது
நல்ல ஐடியாவா இருந்து, அது மூலமா இன்னுங்கொஞ்சம் சம்பாதிச்சா எங்களுக்கு என்ன கசக்கவா செய்யுது... இல்ல மரியம்?" என்று கேட்டவனிடம் புன்னகைத்த படி தலையாட்டினாள் அவனுடைய பீவி.

"மொதல்ல உங்க ட்ராவல்ஸ்ல இருக்குற வண்டிங்க..... நான் ஏற்கனவே சொன்ன மாதிரி கொஞ்சம் பழைய வண்டிங்கள டிஸ்போஸ் பண்ணிட்டு, நல்ல கண்டிஷன்ல இருக்குற வண்டிங்கள மட்டுமே கஸ்டமர்ஸ்க்கு குடுக்க யூஸ் பண்ணுங்க!"

"அப்புறமா.... உங்க ட்ராவல்ஸ்க்குன்னு ஒரு லோகோ கூட நீங்க டிஸைன் பண்ணலாம்; உங்களோட ட்ரைவர்ஸ் எல்லாரும் ஒரு ட்ரெஸ் கோடே இல்லாம, கையில கிடைக்குற ஷர்ட்ட எடுத்துப் போட்டுட்டு ட்ரிப்புக்கு வர்றாங்க..... அதுக்குப் பதிலா அவங்களுக்கு ஒரு எலிகெண்ட் லுக்ல நீங்க யூனிஃபார்ம் குடுக்கலாம்!" என்று சொன்னவளிடம்

"ஹா.....ன்! யூனிஃபார்மா? அப்ப அத நானும் போடணுமா மேடம்?" என்று திருட்டுமுழி முழித்த படி கேட்ட நஸாரைப் பார்த்து வாயை மூடிக் கொண்டு சிரித்தாள் மரியம்.

"இந்த யூனிஃபார்ம் ஐடியா முழுக்க முழுக்க உங்க இஷ்டம் நஸார் ஸார்..... நீங்க சொல்றத அப்டியே சரிங்க ஸார்ன்னு கேக்காத சில எம்ப்ளாயீஸ் இருப்பாங்கல்ல..... அவங்க கிட்ட எல்லாம் ஒப்பீனியன் கேட்டுட்டு இத நீங்க பாத்துக்கோங்க!" என்று சொன்னவளிடம் நமுட்டுச் சிரிப்புடன்,

"அதென்னங்க மேடம்.... நான் சொல்றத அப்டியே சரிங்க ஸார்னு
கேக்காத எம்ப்ளாயீ? ஏன் இவ்ளவு சொல்றவங்க அவன் பேரயே சொல்லிர வேண்டியதுதான? யூனிஃபார்ம் போடச் சொன்னா நம்ம பயலுக எல்லாம் அத ஒத்துக்குவாங்களோ இல்லயோ தெரியல.... பாக்கலாம்! மேல மேடம்?" என்று கேட்டவனுக்கு பதிலளிக்காமல் திரும்பி மேலே பார்த்தாள் வதனி.

"ஏங்க..... மேலன்னா மேல ஒண்ணும் இல்லங்க! அடுத்து பேசுங்கன்னு சொல்றத தான் இவேன் அப்டி கேக்குறான் வதனி..... நீங்க சொல்லுங்க!" என்று சொன்னாள் மரியம்.

"ஸாரி மரியம்! எனக்கு டக்குன்னு புரியல!" என்று சொல்லிப் புன்னகைத்தவள் அடுத்த யோசனையைப் பேசலானாள்.

"நஸார் ஸார்.... ஒருதடவ கஸ்டமர் உங்க வண்டியில ஏறிட்டாருன்னா, அந்த ட்ரிப் முடியுற வரைக்கும் அவரோட லக்கேஜ்க்கும் நீங்க தான் பொறுப்பு! ஸோ கஸ்டமர்ஸோட பெர்ஸனல் இன்ஃபர்மேஷன வாங்கும் போதே, அவங்களோட லக்கேஜ் பத்தியும் நீங்க ரெக்கார்ட் பண்ணனும். ஒரு Identification Tag மாதிரி கூட யூஸ் பண்ணி அவங்களோட லக்கேஜ பத்திரப்படுத்தி குடுக்க வேண்டியது உங்களோட ட்ராவல்ஸோட பொறுப்பு!"

"அதுக்கப்புறம் நீங்க கூட்டிட்டுப் போற டூர்ஸ சும்மா பொத்தாம்பொதுவான ஊர்களா சொல்லாம அத தனித்தனி வெரைட்டியா classify பண்ணிக் காமிக்கலாம்!"

"அது எப்டின்னா எக்கோ டூர்ஸ்னு ஒரு வெரைட்டி எடுத்துக்கிட்டோம்னா கூட்டம் கும்பல் இல்லாம சில இடங்கள ரசிக்கணும்னு நினைக்குற மக்களுக்கு இந்த ப்ளான் சூட் ஆகும்!"

"இந்த டிஸ்ட்ரிக்ட்ல யாரும் ரொம்ப பாக்காத புது எடங்கள, சுற்றுப்புற சூழல் அழகா இருக்குற மாதிரி எடங்கள காட்டணும். இந்த டூர் அந்த பகுதியில இருக்குற லோக்கல் ஜனங்களுக்கும் ஏதாவது ஹெல்ப்புல்லா இருக்கும்.... திரும்ப திரும்ப எல்லாரும் பாத்ததையே நாமளும் பாக்குறோம்ங்குற சலிப்பும் ட்ராவல் பண்றவங்களுக்கு வராம இருக்கும்!"

"இல்ல.... எங்களுக்கு இந்த ஆப்ஷன் வேண்டாம்னு க்ளையண்ட்ஸ் நெனச்சா, அவங்களுக்கு நாம அட்வென்ஜர் டூர் அப்படிங்கிற ஆப்ஷன குடுக்கலாம்! இது மோஸ்ட்லி ப்ரெண்ட்ஸ் கேங்கோட கிளம்பி வர்ற பேச்சுலர்ஸ்க்கு செட் ஆகும்!
இதுல அவங்கள Off Road drive, அனிமல்ஸ் சஃபாரி ரைடு இதெல்லாம் கூட்டிட்டுப் போயி எங்களுக்கு த்ரில் வேணும்னு எதிர்பார்க்குறவங்களோட தேவைய நாம பூர்த்தி செய்யலாம்!"

"இல்ல... இது எதுவுமே எங்களுக்கு வேண்டாம்; நாங்க வந்தது பேமிலியோட ரெண்டு மூணு நாள் சந்தோஷமா இருக்குறதுக்கு தான் அப்டின்னு சொல்ற பேமிலி டைப் ஆளுங்களுக்காக இருக்கவே இருக்கு பட்ஜெட்டட் டூர்"

"ஊட்டி, குன்னூருக்கு வழக்கமா நீங்க காட்டுற அஞ்சாறு எடத்த காட்டிட்டு, அவங்களுக்கு இந்த ட்ரிப் ஓரளவுக்கு ஓகேங்குற இமேஜ குடுத்துட்டு கூட்டிட்டு வந்துட வேண்டியதுதான்!"

"இந்த மாதிரி நம்ம தர்ற சர்வீஸையே கொஞ்சம் வேல்யூ ஆடட் சர்வீஸா எஃபிஷியண்டா
குடுத்தோம்னா, உங்களோட ப்ராஃபிட் இன்னுங்கொஞ்சம் அதிகமாகும்!"

"ஜெயன மாதிரி ஆளுங்க வண்டிய எடுத்தாங்கன்னா, நீங்க உங்க கஸ்டமர்ஸ் கிட்ட உங்களுக்கு
Tour Guide ம் நாங்க ஃப்ரீயா ஆஃபர் பண்றோம்னு சொல்லுங்க! இது ஒங்க ட்ராவல்ஸ்க்கு கஸ்டமர்ஸ் கிட்ட சின்னதா ஒரு கவனிப்ப வாங்கித்தரும்......!"

"எப்டியும் அவன் கார்ல ஏறுனதுல இருந்து இறங்குற வரைக்கும் டிஸ்ட்ரிக்டோட மொத்த ஹிஸ்டரியையும் அவங்க கிட்ட ஒப்பிக்க தான் போறான்! அத ஒரு ஃப்ரீ சர்வீஸா செய்யுறோம்னு நீங்க சொன்னா உங்களுக்கு அது ஒரு விளம்பரம் தான நஸார் ஸார்?" என்று கேட்டவளிடம் கிடுகிடுவென மண்டையை நாலாபுறமும் ஆட்டி வைத்தான் நஸார்.

"ஏய் நஸாரு..... ஒம்ப்ரெண்டு இவங்களுக்கு எப்டி ப்ராக்டீஸ் குடுத்து வச்சுருக்கான் பாத்தியா? ஏங்க வதனி..... நீங்க டூரு போறப்ப எல்லாம் ஒரு பென்சிலயும் நோட்டையும் கையிலயே கொண்டு போயிடுவீங்களாங்க? பொறந்ததுல இருந்து இதுங்க ரெண்டும் இங்க தான் குப்பை கொட்டிக்கிட்டு இருக்குதுங்க.....!"

"நஸாரோட வாப்பா ஆரம்பிச்ச இந்த பிஸினஸூம் இவியிங்க ரெண்டு பேருக்கும் பதினாறு, பதினேழு வயசுல இருந்து பரிச்சயம்..... ஆனாலும் உங்கள மாதிரி productive ஆ இதுங்களுக்கு யோசிக்கத் தெரியுதான்னு பாருங்க!" என்று நஸாரையும், ஜெயனையும் வாரியபடி
வதனி கொடுத்தது சிறப்பான யோசனை என்று வேறுவிதமாக பாராட்டிக் கொண்டிருந்த தன்னுடைய மனைவியை முறைத்துக் கொண்டிருந்தான் நஸார்.

"ஆமாம்மா தாயி.... நாங்க இந்த மேடம் மாதிரி வித்தியாசமா எதையும் யோசிக்காம பதினாறு வயசுல இருந்து புல்லு புடுங்கிட்டு இருந்தோம் தான்.... ஆனா என் 24 வயசுல என்னோட பீவியா வாழ்க்கையில காலு எடுத்து வச்சியே மேரிஜான்..... இத்தன வருஷத்துல சைனப் டிராவல்ஸுல நீ என்னத்த பண்ணுன? வந்துட்டா..... பெரிசா எங்கள திட்டுறதுக்கு?" என்று கோபமாக மரியத்தைப் பார்த்து அவன் பேச வதனி இருவரையும் பார்த்துக் கொண்டு ஒன்றும் பேசாமல் அமர்ந்திருந்தாள்.

தான் ஏதோ யோசனை சொல்லப் போய் அது கணவன் மனைவி சண்டையாக உருமாறி விட்டதே என்ற கவலை அவளுக்கு!

"ஒன்னோட பீவியா நான் என்னத்த பண்ணுனனா? இத்தன வருஷத்துல நான் என்னடா பண்ணல ஒனக்கு? எல்லா சந்தர்ப்பத்துலயும் ஒங்கூடவே இருந்து, ஒன்னோட ஆசைக்கெல்லாம் உன் அம்மி கிட்ட வாயா இருந்துருக்கேன்.....!"

"எப்படா சான்ஸ் கெடைக்கும்; ஒன்னைய கொஞ்ச நேரம் எம்பக்கத்துல நிக்க வச்சுக்கலாம்னு ஒனக்காக வேலைய தேடி தேடி குடுத்துருக்கேன்; உங்களுக்குப் பிடிக்காதுன்னுட்டு பொறந்த வீட்டுல இருந்து நான் வேற அவங்க வேறன்னு சொல்லி அப்பப்ப கழண்டுக்கிட்டு வந்துருக்கேன். இதெல்லாம் போக எட்டுவருஷமா மாசம் பதினைஞ்சாயிரமுன்னு கிட்டத்தட்ட பதினாலு லட்சத்து சொச்ச ரூபாய ஒன்னோட வியாபாரத்துக்குன்னு யாருக்கும் தெரியாம தனியா ஒதுக்கி வச்சுருக்கேன்!"

"எம்பக்கத்துல வந்தாலே எஞ்சட்டயில இருந்து காச களவாங்க தான் வருவியாடீன்னு அடிக்கடி கேப்பியே? இப்டி கொஞ்சம் கொஞ்சமா ஒங்கிட்ட இருந்து உருவி எடுக்கலயின்னா அதுவும் இப்ப வெட்டியா தான் செலவழிஞ்சு போயிருக்கும்!"

"நீ தண்ணியடிச்சு தறுதலயா போறத தாங்காம, மனசுகேக்காம என்னிக்காவது ஒனக்கு உதவும்னு உங்கிட்ட இருந்து கெடச்ச சில்றரையவும், என் சம்பளத்தையும் போட்டு சேத்து வச்சிருக்குற காசு அது.....!"

"இப்ப நீ ஒரு புது வண்டி வாங்கணும்னு நெனச்சா அத எடுத்துக்க முடியும்ல? இதுக்கு மேல நான் என்னடா செய்யணும் ஒனக்கு?" என்று கேட்ட மரியத்தைப் பார்த்து சின்னதாக சிரித்த வதனி அவளிடம் தன்னுடைய பெருவிரலை உயர்த்திக் காட்டினாள்.

"என் பீவி காசு விஷயத்துல ரொம்ப ஸ்ட்ரிக்டா இருக்காடா ஜெயனு!" என்று நிறைய தடவைகள் தன்னுடைய நண்பனிடமே புலம்பி இருக்கிறான் நஸார். அவளும் தானே தன் தேவைக்கு சம்பாதிக்கிறாள்... பின்பு பணத்துக்காக நைநை என்று எதற்கு இப்படி அனற்றி எடுக்கிறாள்? என்று சிலநேரங்களில் ஆயாசமாக பேசியது நினைவிற்கு வந்தது நஸாருக்கு.

அந்த ஆயாசம் எல்லாம் இப்போது ஆச்சரியமாக உருமாறியிருந்தது.

"பெஸ்ட் விஷ்ஷஸ் நஸார் ஸார்! நான் ஏதோ கேஷுவலா தான் உங்களுக்கு சில ஐடியாஸ தருவோம்னு பேச்ச ஆரம்பிச்சேன். ஆனா இப்ப அது எங்க போயி நிக்குது பாருங்க! உங்க அப்பாவ நம்பாம, நீங்க ஃபாரினுக்கு எல்லாம் போகாம, இங்கயே நீங்க ராஜா மாதிரி வாழுறதுக்கு தேவையானது எல்லாத்தையும் ஒங்க வொய்ஃப் பக்காவா ப்ளான் பண்ணிட்டாங்க; ஸோ இதுக்கு மேல ஒங்களோட பீவிய பத்தி தப்பா ஒரு வார்த்த பேசுனீங்க? நானே சும்மா இருக்க மாட்டேன் பாத்துக்கோங்க. மரியம் நான் போய் சாம்பார் வைக்குறதுக்கு வேலைய பாக்கட்டுமா?" என்று கேட்ட வதனியிடம்,

"இருங்க மேடம்! இன்னும் ஒரு ப்ரச்சன வேற இருக்கு! என் ட்ராவல்ஸ்ல டெவலப் பண்றது, அதுக்கு நீங்க சொன்ன ப்ளான், திடீர் ஆச்சரியமா என் பட்.... பொண்டாட்டி கிட்ட இருந்து வந்த எதிர்பார்க்க முடியாத பேச்சு...... இதெல்லாம் சந்தோஷம் தான்; ஆனா இன்னைக்கு ஜெயன் கவுச்சிய கையில தொட மாட்டேன்னு சொல்லிட்டுப் போயிருக்குறது எங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப வருத்தம்..... இல்ல மரியம்?" என்று கேட்ட தன்னுடைய கணவனிடம்,

"ஆமா நஸாரு.... எனக்கெல்லாம் ரொம்ப ரொம்ப வருத்தம்; நாம ஜெயனு அண்ணாவ இங்கணக்குள்ள கூப்புடுறதே ஒரு பெரிய பாடு.... அந்த மாதிரி ஒரு அருமையான வாய்ப்பும் கெடச்சு, இவுங்க ரெண்டு பேரும் கெளம்பி இங்க வந்துருக்குற நேரம் சாம்பாரு, ரசமுன்னு பேசிக்கிட்டு இருந்தா கடுப்பாகுமா..... ஆகாதா?" என்று கேட்டாள் மரியம்.

"பாருங்க மேடம்! இந்த விஷயத்துல எம்பீவிக்கும் எனக்கும் ஒரே கருத்து தான்....!" என்று சொன்ன நஸாரிடம் உச்சுக்கொட்டிய வதனி,

"அவன் சாப்டலையின்னா, அவங்கிட்ட உனக்கு என்ன பிரச்சனன்னு கேளுங்க நஸார் ஸார்.....? இந்த விஷயத்துல நான் என்ன பண்ண முடியும்?" என்று எரிச்சல்பட்டாள்.

"நீங்க எவ்ள கோபப்பட்டாலும், எவ்ள எரிச்சப்பட்டாலும் நீங்க தான் இந்த விஷயத்துல ஏதாவது செய்ய முடியும் மேடம்! அது எங்களுக்கு நல்லாத் தெரியும். வினோத் அளவுக்கு இவனையும் பிடிச்சிருக்குன்னு இவங்கிட்ட சொன்னீங்களாமே நீங்க? உங்க மனசுக்கு யார ரொம்ப பிடிச்சுருக்குன்னு தெளிவா ஒரு முடிவெடுங்க! சும்மா ஒரு சாப்பாட்டு விஷயந்தானன்னு நெனைக்காதீங்க மேடம்..... ஒங்க தெளிவ நாங்க தெரிஞ்சுக்குற விதமா காட்டுங்க!" என்று அவளிடம் சொன்னவன்,

"வா மரியம் நமக்கு வேலையிருக்குது!" என்று சொல்லி விட்டு திகைத்து அமர்ந்திருந்த வதனியை கண்டு கொள்ளாமல் தன் மனைவியுடன் சமையலறைக்குள் சென்றான்.

"ஜெயனுண்ணா வந்தவொடனே நீ அவரு கையால ரெண்டு அற வாங்கப்போற பாரு.... எதுக்கு வதனி கிட்டப் போயி நீ இப்டியெல்லாம் பேசி வக்கிற?" என்று கேட்டவளிடம் பல்லைக் கடித்தவன்,

"எப்டியெல்லாம்டீ பேசிட்டேன்? இந்தப்புள்ள கவுச்சிய கையில தொடாம இருக்குறதால தான் அவனும் நெதம் வெரதம் விட்டுக்கிட்டு அலையுறான்னு..... எங்களுக்கு தெரியாதாக்கும்? எங்கயாவது அப்டியே காட்டுப் பக்கத்துல சுத்தயில நாங்க ஓசியா புடிக்குற கோழியாகட்டும்.... இல்ல மீனாவட்டும்; அத எப்டி அனுபவிச்சு சமச்சு நம்மள சாப்புட வச்சு பாப்பான் தெரியுமாடீ அவேன்? அவன் ஏன் இந்தப்புள்ளக்காக அப்டி ரசிக்கிற விஷயத்த விட்டுத்தரணும்? ஏன் இந்தப்புள்ள அவனுக்காக கறிய சாப்புட ஆரம்பிச்சா என்ன கொறஞ்சிடும்?" என்று கேட்டவனுடைய வாயைப் பொத்தியவள்,

"மெதுவாப் பேசித் தொல! நீ கத்துறதெல்லாம் வதனி காதுல விழுந்து தொலைக்கப் போவுது!" என்று பதறினாள் மரியம்.

"இங்கரு பட்டனு! ஒனக்காக நான் தண்ணியடிக்குறத உட்டேன்ல! அது தப்பான பழக்கம்னாலும் ஒனக்குப் பிடிக்கலயின்னு தான உட்டேன்? அந்த மாதிரி இந்தப்புள்ளயவும் ஜெயனுக்காகன்னு எதையாவது செய்யச் சொல்லு! அவங்க காதுல இது விழுந்தாலும் பரவாயில்ல.... எனக்காகவும் சேத்து அவங்கள இந்த உதவிய செய்யச் சொல்லு!" என்று சொன்னவன்,

"ஏய் ஒங்கிட்ட ஒரு சந்தேகம் கேக்கணும்டீ! எனக்கு நீ புள்ளைங்களயே மூணு தான் குடுத்த! லச்சம் மட்டும் எப்டீறீ பதினாலு குடுக்கப்போற?" என்று ஆச்சரியமாக கேட்டான்.

"அதுக்குன்னு ஒனக்கு புள்ளையுமா பதினாலு பெத்துத் தர முடியும்?" என்று கேட்டவள் அவனுடைய முறைப்பைக் கண்டு புன்னகைத்து,

"நீ குடுத்த பணத்த குடும்ப செலவுக்காக வச்சுக்கிட்டு, என்னோட சம்பளத்த கிட்டத்தட்ட முழுசாவே நிறுத்துனது தான் நஸாரு! அப்பப்ப பத்தாததுக்கு தான் உங்கிட்ட பீராஞ்சது!" என்று சொன்னவளை பின்புறமாக அணைத்துக் கொண்டு அவள் பின்கழுத்தில் ஒரு பற்தடத்தை பரிசளித்தான் அவளுடைய காதல் கணவன்.

"டேய் என்ன வேல பாக்குற.... வீட்டுக்கு நம்ம ஆளுங்க எல்லாம் வந்துருக்குற நேரத்துல?" என்று முணங்கியவளிடம்,

"தடமெல்லாம் ஒண்ணுந்தெரியல; நீ பயப்படாதடீ பட்டனு!" என்று சொல்லி அவள் கன்னம் கிள்ளி விட்டு தன்னுடைய பிள்ளைகள் இருவரையும் கூட்டி வருவதற்காக வீட்டிலிருந்து கிளம்பிச் சென்றான் நஸார்.

அவன் சென்றவுடன் மரியம் தயக்கமாக வதனியின் அருகில் வந்து,

"ஜெயனுண்ணா எங்கள மாதிரியில்லங்க வதனி! ரொம்ப அழுத்தம்.... ஆனா மனசு கேக்காம இவங்கிட்ட என்னிக்காவது அரகுறயா பேச ஆரம்பிச்சு நிப்பாட்டியிருப்பாரு! அதத்தான் இந்த லூசுப்பய உங்க கிட்ட பேசி வந்து உங்களோட பழைய நெனப்பயெல்லாம்....!" என்று சொல்லி தயங்கி நிறுத்த வதனி மரியத்தின் தயக்கத்தைப் பார்த்து சின்னதாக புன்னகைத்தாள்.

"இட்ஸ் ஓகே மரியம்! நஸார் ஸார் பேசுனதுல எதுவுமே தப்பில்ல.... அவர் பேசுனத நான் ஒண்ணும் தப்பா நெனச்சுக்கல; இப்ப  உங்களுக்கு கிச்சன் வேலையில ஏதாவது ஹெல்ப் பண்ணி தரட்டுமா?" என்று கேட்டாள்.

"இல்லங்க வதனி! வெஜிடேரியன்ல எம்ப்டி சால்னா வேணும்னா ஒங்க ரெண்டு பேருக்கும் வச்சுக்கலாமா?" என்று கேட்டவளிடம்,

"அவ்ளோ கஷ்டமெல்லாம் படாதீங்க மரியம்; ஒங்க ப்ரெண்ட் நான்வெஜ் சாப்புடணும்னா, கண்டிப்பா நானும் நான்வெஜ் தான் சாப்புடணும்..... புருஷனுக்காக பொண்டாட்டியும், பொண்டாட்டிக்காக புருஷனும் எப்டி விட்டுக் குடுத்துப் போகணும்னு எனக்கு உங்க வீட்ல ப்ராக்டிகலாவே புரிஞ்சது. எனக்கு பிடிச்ச விஷயத்த நான் செய்றதுனால வினோத் என்னை ஒண்ணும் தப்பா எடுத்துக்க மாட்டான்; ஸோ இன்னிக்குல இருந்து நான்வெஜ் சாப்ட ஆரம்பிக்கிறேங்க மரியம்; போய் வேலையப் பாப்போமா?" என்று கேட்ட படி ஒரு உத்வேகத்துடன் அந்த வீட்டின் சமையலறைக்குள் நுழைந்தாள் வர்த்தினி.

அழகி வருவாள்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro