🌻 அழகி 58
"நீ எங்கிட்ட கேட்டதயாவது முழுசா வாங்கிட்டுப் போயிருக்கலாம்ல? என்னைய இப்டி தனியா விட்டுட்டுப் போயிட்டியே? இப்ப நான் என்ன செய்றதுன்னு கேட்டியே? ஏன் அப்டி பேசுன?" என்று கேட்டவனுடைய கேள்வியில் அவன் தலையை துடைப்பதை நிறுத்தி விட்டு வதனி ஜெயனுடைய கண்களைப் பார்த்தாள்.
"என்னை இப்டி பாக்காத ஹெட்லைட்டு! நாம ரெண்டு பேரும்
இப்ப வேற ஒருத்தரோட வீட்ல இருக்கோம்...... நம்ம வீட்ல இருக்குற மாதிரியெல்லாம் இங்க நாம இருக்கக்கூடாது.....
என்னைய தேடி ஒரு பொண்ணு வருவாய்யான்னு நான் நிக்கலசு கிட்ட சொன்னா, ஓ ஒன்னையும் தேடி ஒரு பொண்ணு வரப் போவுதா அப்டின்னு நக்கலா கேக்குறான் அவன்....!"
"அவனோட நெனப்பு எதையும் நாம உண்மையாக்கிட கூடாது வர்த்தினி; ஒன்னைய அவேன் அப்டி பேசுனதுல எனக்கு செம கடுப்பு; அதுனால தான் அவனுக்கு சாப்பாடு கெடையாதுன்னு சொல்லிட்டு கூடைய அவங்கிட்ட இருந்து புடுங்கிட்டு வந்துட்டேன்!" என்றான் உறுதியான குரலில்.
"ஒழுக்கம்ங்குறது நம்ம வாய்ப்பேச்சுல இருக்கக்கூடாது; நம்மளோட செயல்கள் மூலமா வெளிப்படணும்னு எவ்ளோ நாசூக்கா சொல்ற ஜெயன்.....? ஆக்சுவலி இந்த மாதிரியெல்லாம் நீ பேசும் போது தான் ஜெயன் எனக்கு ஒம்மேல நெறய மரியாத வருது. தேங்க்யூ!"
"நம்மளோட நைட் டைம் ரெகுலர எப்பவும் போல நம்ம வீட்லயே போய் பாத்துக்கலாம். தலைல ஈரம் நல்லா போயிடுச்சா பாரு?" என்று கேட்டவளிடம் புன்னகைத்து தலையை ஆட்டியவன் அவளுடன் எழுந்து சென்று தரையில் அமர்ந்து கொண்டு காலை உணவை சாப்பிட ஆரம்பித்தான்.
"இவ்ளோ பெரிய வீட்டையும், வெளிய இருக்குற அவ்ளோ பெரிய ஏரியாவையும் தனியாளா எப்டி ஜெயன் க்ளீன் பண்ணி முடிக்கிற? அது ரொம்ப கஷ்டமான வேலை இல்ல.....?" என்று தன் முகத்தில் ஆச்சரியத்தையும், மலைப்பையும் காட்டி அவனிடம் கேட்டாள் வதனி.
"ஏன்.... உன்னோட வேல கஷ்டமான வேல இல்லையா ஏஎம் அம்மா? வர்த்தினியா நீ என்ன செய்வ, ஏது செய்வன்னு எனக்கு கொஞ்சம் தெரியும்..... ஆனா ஒரு பேங்க் ஆபிசரம்மாவா என்ன செய்வ, உன் வேல எப்டிப்பட்டதுன்னு எனக்குத் தெரியாதுல்ல?"
"காலையில இருந்து சாயந்தரம் வரைக்கும் நீயுந்தான் எத்தன பேர பாக்கணும்? எத்தன பேரோட கேள்விக்குப் பதில் சொல்லணும்? பத்தாயிரம் கேட்டு வந்தவனுக்கு ஒரு லச்சத்த தூக்கி குடுத்தேன்னு வையி.... என்ன ஆகுறது நெலம?" என்று கிண்டலாக கேட்டவனுடைய ப்ளேட்டில் இன்னுங்கொஞ்சம் குழம்பை ஊற்றியவள் அவனுக்கு இரண்டு இட்லிக்களை எடுத்து வைத்து விட்டு,
"என்ன ஆர்க்யூ பண்ணனுங்குறதுக்காக பேசுற? பணம் குடுக்குறதெல்லாம் என்னோட வேலையில்ல; காஷியரோட வேல! அப்படியே அது என்னோட வேலையா இருந்தாலும்
பத்தாயிரம் கேட்டவங்களுக்கு எப்டி ஒரு லட்சம் குடுக்க முடியும்? அது முதல்ல எப்டி சாத்தியம்? ம்ஹூம் வாய்ப்பேயில்ல.....!" என்றவள்,
"என் வொர்க்க விட உன்னோடது கஷ்டமானது தான்; அத மொதல்ல
ஒத்துக்கோ!" என்றாள் கட்டளைக்குரலில்.
"சரிம்மா.... ஒத்துக்குறேன்! ஒன்னோட வேலய விட என்னோட வேல கொஞ்சம் கஷ்டமானது தான்; போதுமா?" என்று சொன்னவனிடம்,
"நல்லா சாப்டு!" என்று சொல்லி விட்டு தன்னுடைய கையை கழுவ எழுந்திரிக்கப் போனாள் வதனி.
"எங்க போற அதுக்குள்ள? ஒக்காரு. நான் சாப்ட்டு முடிச்சதுக்கப்புறம் தான் நீ எழுந்துரிக்கணும்!" என்றவன் சிறிது நேர தயக்கத்திற்கு பிறகு சிறிதாக ஒரு இட்லி விள்ளலை கையில் எடுத்துக் கொண்டு அதை வாயிலும் வைக்காமல் திருதிருவென்று விழித்து தடுமாறிக் கொண்டிருந்தான்.
"மிஸ்டர் ஜனமேஜயன்...... உங்களுக்காக கஷ்டப்பட்டு ஒரு பொண்ணு சாப்பாடு எடுத்துட்டு வந்துச்சே? அந்தப் பொண்ணு சாப்ட்டுச்சா இல்லையான்னு கேட்டீங்களா நீங்க?" என்று சிரிப்புடன் அவனது தடுமாற்றத்தைப் பார்த்து விட்டு அவனிடம் கேட்டாள் வதனி.
"அதேதான்.... அதேதான்; அதத்தான் இப்ப ஒங்கிட்ட கேக்க நெனச்சேனா? அதுக்குள்ள நீயே கேட்டுட்ட..... எங்க ஆ சொல்லு பாப்போம்!" என்று அவசர அவசரமாக சொன்னவனிடம்,
"இப்டி ஒரு பொண்ணுக்கு சாப்பாடு ஊட்டப்போறது மட்டும் தப்பில்லயா மிஸ்டர் ஜனமேஜயன்?" என்று தலைசரித்து அவனிடம் கேட்டாள் வதனி.
"ம்ஹூம்; ஒனக்கு குடுக்காம ஒத்தையா நானே எல்லாத்தையும் கொட்டிக்கிட்டா அதுதான் பெரிய தப்பு..... பிடிக்காத சாப்பாடுன்னாலும் இத நீ
எனக்காக ரெண்டு வாய் வாங்கிக்குவியாம்.....!" என்று சொன்னவனிடம் இல்லையென தலையாட்டியவள் தனக்கென தனியாக இருந்த ஒரு டப்பாவில் நான்கைந்து தோசைகளை அவனிடம் திறந்து காட்டினாள்.
"அட வில்லத்தனமே; இங்கயுமாடீ ஒங்குண்டு தோசய கொண்டு வந்த?" என்று கேட்டு அவளை முறைத்தவன் அவனது இட்லியை தன் தட்டிலேயே போட்டு விட்டு அவளுக்கென கொண்டு வந்ததை கையால் பிய்த்து அவள் வாயில் திணித்திருந்தான்.
வாயில் வைத்த தோசை தொண்டைக்குள் இறங்கும் முன் கண்களைக் கரித்துக் கொண்டு வர அவனுக்கு முதுகைக் காட்டிக் கொண்டு அமர்ந்து தன் விழிநீரை சுண்டி விட்டாள்.
"ம்ஹூம்..... அதுக்குள்ள மனோம்மா நியாபகம் வந்துடுச்சாக்கும்? என் முன்னால நீ அழுவுறது என்ன புதுசா நடக்குறதா? நான் பாக்கக்கூடாதுன்னு திரும்பி ஒக்கார்றதுக்கு? இந்தா.... நல்லா சாப்ட்டுட்டு அப்புறமா சாவகாசமா அழுது முடி!" என்று சொன்னவன் அவளது மறுப்பை எல்லாம் காதிலேயே வாங்கிக் கொள்ளாமல் குழந்தைக்கு ஊட்டுவது போல் அவளது வாயில் உணவைத் திணித்துக் கொண்டிருந்தான்.
சாப்பிட்டு முடித்து கண்ணீரைத் துடைத்துக் கொண்டு நிமிர்ந்தவளிடம்,
"வெளிய பெரிய ஸ்விம்மிங் பூல் இருக்கு, ரெண்டு மரத்துக்கு நடுவால நெட்ட கட்டி, அதப் பிடிச்சுக்கிட்டு கொஞ்ச தூரம் வரைக்கும் கயித்துல ஏறுற வெளையாட்டு இருக்கு! அப்டியே அந்த எடத்துல இருந்து இடதுபக்கமாவே கொஞ்சதூரம் போனயின்னா பெரிய லேக்வ்யூ இருக்கு! அது பக்கமா மரணக்கெணறு வெளையாட்டு வெளையாடுற பள்ளம் கூட இருக்கு! இந்த வீட்டோட ஓனர் ஒரு பல்லிக்குப் பொறந்த பயபுள்ள..... தாவுறது, ஓடுறது, குதிக்குறதுன்னு அதுக்கு என்னல்லாம் தேவையோ அதெல்லாம் கரெக்டா செஞ்சு வச்சுருப்பான்; ஒனக்கு அந்த மரணக்கெணத்துல பைக்க ஓட்டத் தெரியுமா ஹெட்லைட்டு?" என்று புருவம் உயர்த்திக் கேட்டவனை முறைத்தவள்,
"நான் ஒண்ணும் இந்த வீட்டோட ஓனர் மாதிரி இங்க வந்து தங்கி எல்லாத்தையும் பாத்து ரவுண்ட்ஸ் அடிச்சுட்டுப் போறதுக்கு வரல. ஒன்னோட வேலைக்கு ஹெல்ப் பண்றதுக்கு, ஒங்கூட இருக்குறதுக்கு தான் வந்தேன்!"
"இத சுத்திப் பாக்குறதெல்லாம் அப்புறமா.... ஒனக்கு வொர்க் முடிஞ்சதுக்கப்புறம்! இப்ப என்ன வேல பாக்கணும்னு சொல்லு; நானும் அத ஒங்கூட சேந்து பாக்குறேன்!" என்று சொல்லி தன்னுடைய ஷாலை கழற்றி விட்டு ஏப்ரனைக் கட்டியவளை கொலைவெறியுடன் முறைத்தவன்,
"இதெல்லாம் செய்யணும்னு ஒனக்கு என்ன தலையெழுத்தா? மனுஷன கஷ்டப்படுத்தாத வர்த்தினி!" என்றான் அடிபட்ட குரலில்.
"ஒன்னோட சேந்து நான் வேல செய்றது ஒன்னைக் கஷ்டப்படுத்துற மாதிரியா? ஏன்.... நஸார் ஸார் கூட எல்லாம் சேந்து நீ வேல பாப்ப தான? அப்போ என் கூட அத செஞ்சா என்ன தப்பு?" என்று கேட்டவள்,
"எனக்கு கை, காலுல தூசி பட்டா ஓகேதான். பட் கண்ணுல தூசி பட்டா தான் கஷ்டம் ஜெயன்.... அதுக்கு ஏதாவது செய்ய முடியுமா?" என்று கேட்க அவளிடம் எதுவும் பேசாமல் அமைதியாக எங்கோ சென்றவன் ஒருநிமிடத்தில் திரும்பி வந்த போது அவன் கையில் Eye Protection Glass இருந்தது.
"தேங்க்யூ.... எங்க இருந்து வேலைய ஆரம்பிக்கணும் ஜெயன்?" என்று கேட்டவளை மாஸ்க்கும், க்ளவுஸூம் போட வைத்து தான் பிறகு அவளுடைய கையில் காம்பேக்ட் க்ளீனிங் மிஷினை தந்தான் ஜெயன்.
"கீழ எல்லா பர்னிச்சருக்கும், ஜன்னல்லயும் தூசி தட்டி உடு. எல்லாத்தையுமே ரெண்டுதடவ செய்யணும் வர்த்தினி..... முதல்தடவயில கொஞ்சம் கவனக்குறைவா நாம ஏதாவது தூசிய விட்டுருந்தோம்னாலும், ரெண்டாவது தடவ க்ளீன் பண்ணும் போது அது நல்லா சுத்தமாகிடும்!" என்று சொன்னவனிடம் பவ்யமாக தலையாட்டி விட்டு லேசாக சிரித்தாள் வதனி.
"ஏய்..... இப்ப என்னத்துக்கு பல்லக் காட்டுற?" என்று அவள் சிரிப்பைப் பார்த்து விட்டு கடுப்பாகி அதற்கு காரணம் கேட்டான் ஜெயன்.
"இல்ல.... பூக்கர் டீ வாஷிங்டன்னு ஒரு அமெரிக்கன் கல்வியாளர் இருந்துருக்காரு! அவரும் இப்டித்தானாம்..... ரூம க்ளீன் பண்ணி வைன்னு சொல்லிட்டுப் போனதுக்கு, ஏழு தடவ அந்த ஒரே ரூம கூட்டிப் பெருக்கி க்ளீன் பண்ணி அதுல நாந்தான் பெஸ்ட்னு காமிச்சுருக்காரு..... அதே மாதிரி நானும் இப்ப எனக்கு நீ குடுத்த வொர்க்க பெர்பெக்டா செஞ்சு உங்கிட்ட நல்ல பேரு வாங்குறேன் பாரு!" என்று சொன்னவளின் குரலில் மருந்துக்குக் கூட கிண்டலோ, ஏளனமோ தெரியவில்லை.
இந்த வேலையை எப்படியாவது சிறப்பாக செய்து முடிக்க வேண்டுமென்ற முனைப்பு தான் அதிகமாக தெரிந்தது.
"ஜெயன் சொல்லிட்டானேன்னு இழுத்துப் போட்டுக்கிட்டு இத செய்யாதம்மா; முடியலன்னா அப்டியே வச்சுட்டு என்னைய கூப்டு; நான் வெளிய போயி ஒனக்கு குடிக்க ஏதாச்சு வாங்கிட்டு வந்து தாரேன்!" என்று சொன்னவனிடம்,
"அதுவும் எங்கிட்ட இருக்கே? ஒனக்கு ரெண்டு, எனக்கு ரெண்டுன்னு உன்னோட பேவரைட் மில்க் ஷேக் பாட்டில் வாங்கிட்டு தான் வந்துருக்கேன் ஜெயன் ஸார்; லெட்ஸ் ஸ்டார்ட் த வொர்க்! கரெக்டா பனிரெண்டு மணிக்கு மில்க் ஷேக் குடிக்க கீழ எறங்கி வாங்க!" என்று சொன்னவளின் கன்னம் கிள்ளி கண்சிமிட்டி விட்டு மாடிப்படிகளில் ஏறினான் ஜனமேஜயன்.
அழகி வருவாள்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro