🌻 அழகி 52
வதனி இன்னும் குளிக்க வேண்டியிருந்தது; கீழே சென்று முகில்ம்மாவிற்கு கொஞ்சம் உதவிகளை செய்து கொடுக்க வேண்டியிருந்தது...... ஆனால் அவை எதையுமே சிந்திந்து கூடப் பார்க்காமல் கால் முட்டியை கட்டிப்பிடித்துக் கொண்டு கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள்.
சுவர் கடிகாரத்தை நிமிர்ந்து மணியைப் பார்த்தாள். இன்னும் கால் மணி நேரத்திற்கு பிறகு போய் குளித்துக் கொள்ளலாம் என்று நினைத்து அமர்ந்திருந்த நிலையே அப்படியே இருந்து விட்டாள்.
மேல் இதழ், கீழ் இதழ், தாடை, நாக்கு, பின்கழுத்து, மார்பு என அவளது எல்லா உடல் பாகங்களும் அவனுடன் இவ்வளவு நேரம் போராடியதால் வலியை சுமந்து கொண்டிருந்தன.
"என்னைய பாத்து பயப்படாதடீ!" என்று சொன்ன சொல்லில் கண்களில் அவ்வளவு வலியைக் காட்டினான். இப்போது இவளுக்கு வலிப்பதை விட நிச்சயமாக அவனுடைய அந்த வலி அதிகமாக தான் இருந்திருக்கும்!
"நீ என்ன இப்பயும் அவனுக்குத் தான் ஸப்போர்ட் பண்ற? அவன் செஞ்சதெல்லாம் சரியா?" என்று அவனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய தன்னுடைய மனதிடம்,
"அது வந்து..... ஜெயன் செஞ்சது எல்லாமே தப்புன்னு சொல்ல முடியாது!" என்று யாரிடமோ பேசுவது போல் சற்று சத்தமாகவே சொன்னாள் வதனி.
"அப்ப இப்டியே வாயத் தொறக்காம அழுவு!" என்று சொல்லி விட்டு போய்விட்டது அவளது மனது.
"வேற யார்ட்ட போயி இதெல்லாம் பேசச் சொல்ற? ப்ரெண்ட்ஸ், அம்மா அப்பா, பெஸ்ட்டீஸ் இந்த மாதிரி தான் யாருமே இல்லயே எனக்கு; முகில்ம்மாட்ட போய் பேசுனா, அவங்களுக்கு வர்ற கோபத்துல அவங்க ஜெயன ஏதாவது செஞ்சுடுவாங்க! அதுனால நான் இப்டியே இருந்துக்குறேன். போ!" என்றவள் ஜெயனுடைய உரிமை உணர்வையும், ஒரு ஆணாக அவன் தன் மீது கொண்டிருந்த ஆசையையும் புரிந்து கொள்ள முயற்சி செய்தாள்.
"கைய விடு..... நான் என்ன சின்னப்புள்ளயா? நானே நடந்து வருவேன்!" என்று சொன்னாலும் அவள் பேச்சைக் கேட்காமல் சாலைகளைக் கடக்கும் போது, கூட்ட நெரிசலின் போதெல்லாம் முகிலமுதத்தின் கையை ஒரு பக்கமும், வர்த்தினியின் கையை ஒருபக்கமும் பிடித்துக் கொண்டுதான் நடப்பான்.
இத்தனைக்கும் அவர்கள் வெளியே செல்வதெல்லாமே கார்ப்பயணங்கள் தான்; அதிலும் காரை பார்க் செய்வதில் இருந்து, பார்க்க வேண்டிய இடம் வரை செல்வதற்கு தான் இத்தனை பாதுகாப்பு!
"மூணு பேரா கைய புடிச்சுக்கிட்டு நடக்க முடியாது ஜெயன்; நீ முகில்ம்மாவ மட்டும் பாரு! நான் உன் பின்னாலயே தான் வர்றேன்!" என்று சில நேரங்களில் அவன் கையை விடுவிப்பவளிடம்,
"சரி.... அப்ப எஞ்சட்டைய புடிச்சுக்குறியா ஹெட்லைட்டு?" என்று கேட்டு அவளை பல்லைக் கடிக்க வைப்பான்.
இப்படியான அவனது உரிமை உணர்வு இன்று சற்றே எல்லை மீறி இருக்கிறது அவ்வளவு தான்......
கண்களை மூடியவள் தன்னுடைய மனதிற்குள் ஒரு ஓரமாக சப்பணமிட்டு அமர்ந்திருந்த ஒருவனிடம்,
"வினு.... எனக்கு இப்ப நடந்த பிரச்சனைய எப்டி ஹாண்டில் பண்றதுன்னு தெரியல; அதுனால நீயே இதுக்கு ஒரு பதில் சொல்லு!
ஜெயன் செஞ்சது தப்பா வினு?" என்று கேட்டாள்.
பர்வதவர்த்தினியால் யோசிக்க முடியாத விஷயங்களுக்கு எல்லாம் வினோத் தான் அழகாக ஒரு தீர்வு கொடுப்பான்.
"வது.... ஒங்க ரெண்டு பேரோட தனிப்பட்ட விஷயத்துல நீ என்னை கருத்து சொல்ல கூப்டாத! உனக்கு அவன பிடிச்சுருக்கு தான?" என்று கேட்ட குரலிடம்,
"ஆமா; எனக்கு ஜெயன பிடிச்சிருக்கு வினு!" என்றாள்.
"அப்போ இப்ப நடந்ததையும் நீ தப்பா சரியான்னு யோசிக்கக்கூடாது வது; பிடிச்சிருக்கா பிடிக்கலயான்னு மட்டுந்தான் யோசிக்கணும்; போ வது.... டைமாச்சு; எழுந்திரிச்சு போய் ரெடியாகு பாப்போம்!" என்று மனதிற்குள் பேசி அவளை தெளிவுபடுத்திய வினோத்திடம்,
"தேங்க்ஸ் வினு; தேங்க்யூ சோ மச்!" என்று சொல்லி விட்டு முகத்தை துடைத்துக் கொண்டு எழுந்து சென்றாள் வதனி.
"குட்மார்னிங் முகில்ம்மா! ரொம்ப ரொம்ப ஸாரி; இன்னிக்கு நான் கீழ வர்றதுக்கு கொஞ்சம் லேட் ஆகிடுச்சு..... காலையில வேலை ஏதாவது முடிக்கணுமா முகில்ம்மா?" என்று கேட்டவளின் முகத்தை பிடித்து இப்படியும் அப்படியுமாக உற்று நோக்கினார் முகிலமுதம்.
"ஒன்னைய மேல உட்டுட்டு கீழ இருந்தா, எனக்கு என்ன காது கேக்காதுன்னு நெனச்சியா வதனிம்மா? ஒங்கண்ணெல்லாம் வீங்கிப் போய் கெடக்கு? முகத்துல கூட அங்கங்க......!" என்று சொல்லி விட்டு பேச்சை நிறுத்திய முகிலமுதம் வதனியை குறுகுறுவென பார்த்துக் கொண்டிருந்தார்.
"நீங்க நினைக்கிற அளவுக்கு மேல பெரிசா ஒண்ணும் நடக்கல முகில்ம்மா; நான் அவங்கிட்ட இன்னும் மனசால நெருங்கி வரமாட்டேங்குறேனாம்; அதான் ஜெயனுக்கு எம்மேல கொஞ்சம் கோபம்..... நான் உன்னை நெருங்கி வந்தா நீ எங்கிட்ட பயப்படாம இருக்கியான்னு பாப்போம்னு சொல்லி கையப் புடிச்சு, கட்டிப் புடிச்சு இன்னைக்கு டேவ கொஞ்சம் கத்தி கலாட்டா செஞ்சு ஆரம்பிச்சு வச்சுருக்காரு; வேற ஒண்ணுமில்ல!" என்று புன்னகையுடன் சொன்ன வதனியின் பேச்சைக் கேட்ட முகிலமுதம் தன் தலையில் அடித்துக் கொண்டார்.
"இவன் என்ன சரியான பைத்தியமா இருப்பான் போலிருக்கு; ஒரு பொண்ண மனசுல நெனக்குறான்னாலும், அந்த பொண்ணுக்கு ஒரு வலி இருக்குன்னா, அது ஆறுற வரையில கொஞ்சம் பொறுமையா இருக்க வேணாம்? இப்டி கடிநாய் கணக்கா மேல உழுந்து பொரண்டுனா இவன பாத்து பயப்புடாம, சங்கிலியில புடிச்சு கட்டி வைக்காம இருப்பாய்ங்களா? சாயந்தரம் வீட்டுக்கு வரட்டும். நா அவங்கிட்ட பேசுற விதத்துல பேசிக்குறேன்!" என்று சொன்னவருடைய குரலில் கொலைவெறி இருந்ததைக் கண்டு வதனி பயந்து போனாள்.
என்றைக்காக இருந்தாலும் தன்னுடைய முடிவை அவர்களிடம் சொல்லித் தானே ஆக வேண்டும்? அதை இன்று செய்தால் ஜெயனிடம் முகில்ம்மா கொண்ட கோபம் சற்றே சரியாகி விடும் என்று நினைத்தவள் இடுப்பில் கைவைத்துக் கொண்டு முகிலமுதத்தை முறைத்தாள்.
"ஹலோ மாமியார்..... என்ன நீங்க? பையன், மருமகளுக்குள்ள நடக்குற சின்ன சின்ன விஷயத்த எல்லாம் பெரிசு பண்றீங்க? கல்யாணம் ஆன புதுசுல புருஷன் பொண்டாட்டி கொஞ்சம் அப்டி இப்டி இருக்குறது சகஜந்தான? அதுவே லவ் பண்றவங்க செஞ்சா ஒத்துக்க மாட்டீங்களா? ஜெயன நீங்க திட்டுனத எல்லாம் நான் வன்மையா கண்டிக்கிறேன் பாத்துக்கோங்க! சீக்கிரமா அவன எனக்கு கல்யாணம் பண்ணி வைங்க; அவன நான் ஒரு வழிக்கு கொண்டு வந்துக்குறேன்!" என்று சொன்ன வதனியை மகிழ்ச்சி தாங்காமல்,
"நெசமாவா தங்கம்?" என்று கேட்டு தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டார் முகிலமுதம்.
"ஆமா... முகில்ம்மா! எனக்கு ஜெயன மேரேஜ் பண்ணிக்க சம்மதம்; சென்னை போய்ட்டு என்னை பெத்தவர் கிட்ட மட்டும் ஒருவார்த்த சொல்லிட்டு வரணும்; சம்மதம் கேக்குறதுக்காக இல்ல..... எனக்குன்னு பேருக்கு இருக்குற ஒரு சொந்தம்; அதுனால ஒரு மரியாதைக்கு கல்யாணம்னு சொல்லிட்டு செய்யலாம்னு நெனைக்குறேன்! மத்தத நீங்க தான் சொல்லணும்!" என்று சொன்னவளின் கன்னம் தடவி நெட்டி முறித்து விட்டு,
"நான் என்னத்த சொல்றது வதனிம்மா? ஒங்கொணத்துக்கும்,
படிப்புக்கும், தகுதிக்கும் ஜெயன விட நூறு மடங்கு நல்ல மாப்ளய கட்டலாம் நீயி; ஏதோ தடுக்கி விழுந்த இடத்துல வைரத்த கண்டெடுத்த மாதிரி அந்தப் பயலுக்கு ஒன்னைய வச்சு வாழணுங்குற யோகம் கெடச்சிருக்கு..... அவன் ஒரு கூறுகெட்டவன்; அவனோட கோதாபத்த கொஞ்சம் அனுசரிச்சு போ தங்கம்!" என்று கேட்டு வதனியிடம் கைகூப்பினார் முகிலமுதம்.
"என்ன முகில்ம்மா.... நீங்களே இப்டி பேசுறீங்க? நான் என்னமோ வானத்துல இருந்து குதிச்சவ மாதிரியும், ஜெயன் என்னமோ குப்பையில கெடந்தவன் மாதிரியும் இது என்ன பேச்சு?"
"கொறையும், நிறையும் எங்க ரெண்டு பேர் கிட்டயுமே இருக்கு. அவன் மட்டும் இல்லையின்னா
என்னால இவ்ளவு சீக்கிரத்துல என்னோட இழப்புகள்ல இருந்து வெளிய வந்துருக்க முடியாது! நான் இல்லையின்னா உங்க புள்ளையால கத்தாம, கோபப்படாம வாழ முடியாது. ஸோ ஜெயனுக்கு நானும், எனக்கு அவனும் ஒருத்தருக்கொருத்தர் கண்டிப்பா தேவ.......!"
"இனிமே என்னால அவன் ஹவுஸ் ஓனர்; நான் டெனன்ட்டுங்குற எல்லைக்குள்ள நிக்க முடியாது! கல்யாணம் கொஞ்சம் சிம்பிளா இருந்தா நல்லாயிருக்கும் முகில்ம்மா! அத மட்டும் நீங்க கொஞ்சம் அவங்கிட்ட சொல்லுங்களேன்!" என்று சொன்ன வதனியிடம்,
"இப்பவே என்னமா அவனுக்கு வரிஞ்சுக்கிட்டு பேசுறடீ எந்தங்கம்? அவனுக்கு எப்டியோ தெரியல;
ஒன்னைய மாதிரி ஒரு பொண்ணு மருமவளா கெடைக்க நான் ரொம்ப குடுத்து வச்சுருக்கணும்! சாப்புடுறியா கண்ணு?" என்று கேட்டார் முகில்.
"ம்ம்ம்; நீங்க சாப்ட்டாச்சா? இன்னிக்கு என்ன டிஃபன்? ஜெயன் சாப்ட்டு போனானா முகில்ம்மா?" என்று விசாரித்தவளிடம்,
"அதெல்லாம் சட்டி நெறய வச்சிருந்த நேத்து சோற தயிர ஊத்தி ஊறுகாய தொட்டு கொழச்சு முழங்கிட்டுத் தான் போறான்; காலையில செஞ்ச ரவத்தோச தொண்டைக்குள்ள எறங்கலையாம் தொரைக்கு..... நானும் அவன் போட்டு போன தோசய சாப்ட்டு முடிச்சுட்டேன், நீ சாப்புட உக்காரு வா!" என்று அழைத்தவரிடம்,
"இருக்கட்டும் முகில்ம்மா! நானே போய் தோச ஊத்திக்குறேன்!" என்று சொன்னாள் வதனி.
"சாப்ட்டு முடிச்சுட்டு மொகத்த கொஞ்சம் கண்ணாடியில பாத்து ஏதாச்சு மேக்கப்பு போட்டுட்டு போ வதனிம்மா! கவனிச்சு பாத்தா அந்தப் பயலோட கைவரிச எல்லாம் ஒம்மொகத்துல தெரியுது!" என்று சொன்ன தன்னுடைய வருங்கால மாமியாரின் பேச்சில் வெட்கியவள்,
"சரி முகில்ம்மா!" என்று சமையல் அறைக்குள் இருந்தே அவரிடம் சொல்லி விட்டு தன்னுடைய காலை உணவை தயார் செய்ய ஆரம்பித்து இருந்தாள்.
அழகி வருவாள்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro