🌻 அழகி 50
"யேய்.... நான் நேத்து நைட் எப்டி என் ரூம்ல வந்து படுத்தேன்? கீழ ஸோஃபாவுல தான அப்டியே சாஞ்சேன்? நீ தான் என்னைய மேல தூக்கிட்டு வந்தியாடா?" என்று காலை வேளையில் அவனுக்கு ஒரு டம்ளரில் பாலையும், தனக்கு ஒரு டம்ளரில் சாக்லேட் டீயையும் பக்கத்தில் பிஸ்கெட்டுகளையும் எடுத்து வைத்திருந்தவள் அவனிடம் விசாரணையை தொடங்கினாள்.
"ஆரம்பிச்சுட்டா...... காலையில எழுந்திரிச்சு பல்லு வெளக்க ஆரம்பிக்கும் போதே என்னிய இன்னிக்கு என்ன சொல்லிடா திட்டலாம்னு நெனச்சுக்கிட்டே ரெடியா இருப்பா போல...... மேல ஏறி வந்தவொடனே சட்டியில போட்டுத் தாளிக்க ஆரம்பிச்சுடுறா!" என்று மனதிற்குள்ளாக நினைத்துக் கொண்டவனுக்கு நேற்றைய இரவு அவள் அவனது நெஞ்சுடன் ஒட்டிக் கொண்ட கிறக்கமும், அவளை கைகளில் ஏந்திக் கொண்டே நான்கு முறைகள் படிகளில் ஏறி இறங்கிய கிறக்கமும் இன்னமும் முழுதாக தீரவில்லை.
வர்த்தினி தன்னுடைய அருகாமையை அவ்வளவாக ஏற்க மறுக்கிறாள்; வினோத்திடம் இருந்து அவள் மனம் சற்றே பிரிந்து தன்னிடம் ஒன்றும் வரை அமைதியாக இருப்போம் என்று நினைத்த ஜெயனின் நினைப்புகளில் எல்லாம் தெரிந்தோ, தெரியாமலோ அவளால் மண் தான் விழுந்து கொண்டிருக்கிறது.
நேற்றிரவு நெற்றி முத்தத்தை வேறு அவளது உறக்கத்தால் தவற விட்டு விட்டான்...... அவளைப் படுக்கையில் கிடத்தும் போது ஒருபக்கமாக சாய்ந்து தாடை அருகே கையை முடக்கிக் கொண்டு மெழுகு பொம்மை போல் தான் உறங்கிக் கொண்டிருந்தாள்.
அப்போது அவளுக்கு முத்தம் வைக்கலாம் என்று நினைத்தால் அவனது மனம் அந்த தடுமாற்றமான வேளையிலும் அந்தச் செயலை தவறென்று சொல்லி அவனைத் தடுத்தது.
"சரி...... நேத்து கோட்டாவுக்கு ஒனக்கு குடுத்து வைக்கல..... என்னைய பொரண்டாம சும்மாக் கெட!" என்று இப்போது உடலிடம் அறிவுரை சொன்னால் அதுவும் அவன் பேச்சைக் கேட்க மறுத்தது.
"ஏய்.... நான் உங்கிட்ட தான் பேசிட்டு இருக்கேன்; கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம என்ன இப்டி சாமியார் மாதிரி வீட்டோட ரூஃப பாத்துட்டு ஒக்காந்துருக்க?" என்று கேட்டவளிடம்,
"பின்ன ஒன்னைய மாதிரி ஒரு புள்ளைய காதலிச்சா சாமியாரக் கணக்கா இப்டி மோட்ட பாத்துட்டுத்தே ஒக்காந்துருக்கணும்.... வேறென்ன செய்யுறது?" என்று நினைத்தவன் அவளை சற்றே முறைப்பாக பார்த்தான்.
"எதுக்குடா என்னை இங்க தூக்கிட்டு வந்தன்னு கேட்டா என்ன மொறைக்குற?" என்று அவனுடைய பார்வையைப் பார்த்து விட்டு அவனிடம் கேள்வி கேட்டாள் வதனி.
"இங்க தூக்கிட்டு வராம, ஒன்னிய ஸோஃபாவுலயே போட்டுட்டு, நீ எப்டியோ போன்னு எதையும் கண்டுக்காம ரூமுக்குள்ள போயி படுக்கணுமா நானு? அப்டி நான் போயிருந்தா நேத்து ராத்திரி அடுப்பங்கரையில நிக்குற ரெண்டு மூஞ்செலிங்க ஹாலு வரைக்கும் வந்து ஒன்னைய கட்டிப்புடிச்சி, கைகுலுக்கிட்டுப் போயிருக்கும்....? ஐயோ அம்மான்னு கத்தி பாதி குன்னூரவே எழுப்பி உட்ருப்ப நீயி? நெசமா..... பொய்யா? இல்ல தெரியாம தான் கேக்குறேன்...... மேல ஏறிப் போக கூட முடியாம
அப்டி என்ன தூக்கம் ஒனக்கு? தப்ப செஞ்சது நீ; இப்ப எங்கிட்ட வந்து ஏன் என்ன தூக்குன? எதுக்கு தூக்குன? எப்டி தூக்குனன்னு கேட்டு திட்டிக்கிட்டு இருந்தா என்ன அர்த்தம்? நீ மேல இருக்குறப்பவே நமக்கு அப்பப்ப சரியா பேலன்ஸ் கெடைக்க மாட்டேங்குது; ஒரே வீட்டுக்குள்ள படுத்துருந்தா என்ன ஆகும் நெலம?" என்று பாதி வார்த்தைகளை அவளிடமும், பாதியை முணங்கலாகவும் பேசியவனுக்கு எந்த பதிலையும் சொல்லாமல் காலி டம்ளர்களையும், பிஸ்கெட் பாக்கெட்டையும் எடுத்துக் கொண்டு கிச்சனுக்குள் போனாள் வதனி.
"பதில் சொல்றா, பதில் சொல்றான்னு பெரிசா கத்த வேண்டியது..... நல்லா நடுமண்டையில கொட்டுற மாதிரி ஒரு பதிலச் சொன்னா, சத்தங்காட்டாம எழுந்திரிச்சு ஓடிட வேண்டியது...... இதே வேலையாப் போச்சு இவளுக்கு!" என்று சலித்துக் கொண்டிருந்தவன் ஒரு முடிவுடன் அவளது சமையலறைக்குள் நுழைந்தான்.
"கீழ போயிட்டு ட்யூட்டிக்கு ரெடியாகலயா நீ? சீக்கிரம் கிளம்பு; நீ போனதும் நான் குளிச்சுட்டு கீழ எறங்கி வரணும்! இன்னிக்கு கொஞ்சம் சீக்கிரமா வேற கெளம்பணும்!" என்று அவனிடம் சொன்னவள் டம்ளர்களை துடைத்து அதனுடைய இடத்தில் வைத்து விட்டு, வெளியே போகும் வழியை மறைத்துக் கொண்டு நின்றவனைப் பார்த்தாள்.
"வர்த்தினி...! நஸாரு ஷெட்ல இருக்குற எல்லாப் பயலுகளும் டெய்லி காலையில ஒண்ணா ஒக்காந்து டீ அடிப்பானுங்க..... ஜெயனு தான் டீ குடிக்க மாட்டானுல்ல; அதுனால அவன உட்டுட்டு நாம மட்டும் டீய குடிப்போம்னு ஒருநாளும் அவனுங்க சொன்னதில்ல தெரியுமா? நாங்க டீய குடிக்குறமா.... நீ பாலக் குடின்னு என் கோட்டாவ எனக்கு கரெக்டா குடுத்துருவானுங்க; அப்டி குடுக்கலேயின்னா எனக்கு ரொம்ப கோவம் வேற வரும்! இதுல இருந்து ஒனக்கு எதாவது புரியுதா?" என்று என்றுமில்லாத ஒருமாதிரியான அழுத்தமான குரலில் அவளிடம் பேசினான் ஜெயன்.
"இதுல என்ன புரியணும் ஜெயன்? நீங்க எல்லாரும் நல்ல ப்ரெண்ட்ஷிப்போட இருக்கீங்க.... அவ்ளோதான? கொஞ்சம் தள்ளிக்கோ..... நான் வெளிய போகணும்!" என்று அவனுக்கு பக்கவாட்டில் வந்தவளுடைய கையைப் பற்றி அவளை நிறுத்தினான் ஜெயன்.
"மணி இன்னும் ஏழு கூட ஆகல; நாம கெளம்புறதுக்கு இன்னும் ரெண்டர மணி நேரம் இருக்கு! அதுனால இப்ப நீ குளிக்கப் போறதுக்கு எல்லாம் ஒரு அவசரமுமில்ல; நான் ஏன் இப்ப என்னோட பால் கோட்டா கதைய உங்கிட்ட சொன்னேன்......? அதுக்கு பதில் சொல்லு முதல்ல!" என்று கேட்டான்.
"டேய்..... சம்பந்தமே இல்லாம ஏதோ ஒரு இன்ஸிடண்ட் பத்தி சொல்லிட்டு அத எதுக்கு சொன்னேன்னு சொல்லு பாப்போம்னு கேட்டா என்ன சொல்றது? எனக்கு ஒண்ணும் புரியல ஜெயன்!" என்று சொன்னவளுக்கு எந்த பதிலும் வாயால் சொல்லாமல் அவளுக்கு நேராக சற்றே குனிந்து நின்றான் ஜெயன்.
"நானும் நேத்து குடுக்காம விட்டது காத்தோட போச்சுன்னு திரும்ப திரும்ப எனக்குள்ளயே சொல்லிப் பாக்குறேன்...... ஆனாலும் என்னால..... முடியல வர்த்தினி; எனக்கு நேத்து ராத்திரி நீ குடுக்காம விட்டத இப்ப குடு!" என்று ஏக்கமாக கேட்டவன் இவ்வளவு நேரமாக எதற்காக இப்படி அழுத்தமான குரலில் பேசி தனக்கு எதை உணர்த்த முயற்சி செய்தான் என்று ஒருவாறாக வதனிக்கு இப்போது புரிந்தது.
"நானா..... உனக்கு? அதையெல்லாம் தரணும்? எப்பவும் நீ தான.....தருவ?" என்று கேட்டு தரையைப் பார்த்துக் கொண்டிருந்தவளின் தாடையைப் பற்றி நிமிர்த்தியவன்,
"ஏன் ஒருநா நீ எனக்குத் தந்தா கொறஞ்சு போயிருவியா? எனக்கு இப்ப ஒங்கிட்ட இருந்து வேணும்; ராத்திரில இருந்து ஒடம்பு ஒருமாதிரி சொன்ன பேச்சு கேக்காம எதோ அதுபாட்டுக்கு என்னைய இழுக்குது; எவ்ளோ நேரமா இப்டி குனிஞ்சுக்கிட்டே நிக்குறது; குடு!" என்று ஏதோ காலை சாப்பாட்டை தட்டில் வைத்துக் குடு என்று கேட்பது போல மிக எதார்த்தமாக அவளிடம் முத்தம் கேட்டான்.
"அது வந்து.... நீ கேக்குறது என்....னால முடியாது ஜெயன்! ஸாரி!" என்று சொன்னவளை கண்ணிமைக்கும் நேரத்தில் இடை வளைத்து தூக்கி சமையல் மேடையில் அமர வைத்தவன்,
"நாங்கேட்டத ஒன்னால குடுக்க
முடியாதுன்னா, அப்ப என்னைய பிடிச்சு நிறுத்த என்னாலயும் முடியாது வர்த்தினி...... மன்னிச்சுக்க!" என்று அவளிடம் சொன்னவன் அவளுடைய பூவிதழில் தன்னுடைய இதழை சேர்த்தான்.
அழகி வருவாள்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro