🌻 அழகி 48
"உன் வேண்டுதல் பலிக்குமான்னு எனக்குத் தெரியல!" என்று தோள்குலுக்கியவளை பார்த்து முறைத்தவன்,
"வாயில அடி மொதல்ல..... கண்டிப்பா உன் வேண்டுதல் பலிக்கும்னு சொல்லி நீயும் வேண்டிக்கிட்டு வந்து பொருள் வாங்கிக் குடு வா!" என்று சொல்லி அவளை அழைத்துச் சென்றான்.
முகிலமுதத்திடம் சொல்லி விட்டு கோவிலுக்குப் பக்கத்தில் இருந்த நிறைய கடைகளுக்குள் ஒன்றில் இருவரும் நுழைந்தனர்.
சின்னதில் இருந்து சற்று பெரிய வகை வரையிலான பிள்ளையார் சிலைகளை பார்த்துக் கொண்டிருந்த அவளிடம் இல்லை இல்லை என தலையை ஆட்டியவன்,
"அது வேணும் வர்த்தினி!" என்று ஓரிடத்தில் கையைக் காட்டினான்.
"எது வேணும் உனக்கு?" என்று கேள்வியாக திரும்பியவளிடம்,
நடுவில் ஆரஞ்சு நிறத்தில் பிளாஸ்டிக் பிள்ளையாரும், இருபக்கம் ஸ்வஸ்திக்கும் போட்ட கருப்புக் கயிறை தான் காட்டியிருந்தான்.
"இப்பயும் கருப்புக் கயிறு தானா வேணும்?" என்று கேட்டவளிடம்,
"ஆமா..... கையிலயே புள்ளையாரு இருந்தா நம்ம கைக்கு அப்டியே பவரு கெடக்கும் பாரு!" என்று சொன்னவனைப் பார்த்து லேசாக சிரித்தவள் அவன் கேட்ட கயிறையே அவனுக்கு வாங்கிக் கொடுத்தாள்.
"உனக்கு ஏதாவது வேணும்னா பாரும்மா; இது வேணும், அது வேணும்னு நீ எதையுமே எங்கிட்ட கேக்க மாட்டேங்குற? இந்த கம்மல் வேணுமா, பொட்டு, ஹேர்பின், கண்மை..... ஏய் இப்ப சமீபத்துல குன்னூர்ல ஷாப்பிங் போகயில கலர் கலரா ஹேர்பேண்ட் வாங்குனோமே.... அது!" என்று ஒவ்வொன்றாக கையை நீட்டிக் காட்டிக் கொண்டிருந்தவனிடம்,
"அது வேணும் ஜெயன்!" என்று அவனைப் போலவே கேட்டு அவனைப் போலவே கை காட்டியிருந்தாள் வதனி.
"எது...... ஃபேனா? அதெல்லாம் விக்குறதுக்கு இல்ல! சும்மா அழகுக்கு வச்சுருக்காங்க!" என்று அவளிடம் சொன்னான்.
"இல்ல... அந்த ஃபேன் விக்குறதுக்கு தான் வச்சுருக்காங்க! நீ போய் வாங்கிட்டு வா; எனக்கு அதுல நாலு வேணும்.....!" என்று கேட்டவளை விசித்திரமான ஒரு பார்வை பார்த்து விட்டு இரண்டு கடை தாண்டி பக்கத்து கடைக்காரரிடம் சென்றான்.
"யண்ணா.... அந்த ஃபேன்ல ஒரு நால நம்ம பக்கம் நகட்டுங்கண்ணா!" என்று கேட்டவனிடம்,
"ஸார்.... அது ஃபேன் இல்ல! பபுள்ஸ்! மூடியில சும்மா அழகுக்கு ஃபேன வச்சிருக்கோம்!" என்று சொன்ன கடைக்காரரிடம் தலையை ஆட்டியவன்,
"இந்த சோப்புநொரையவா காசு குடுத்து வாங்கச் சொன்னா? அதுவும் நாலு டப்பாவ?" என்று தன் தலையில் கை வைத்துக் கொண்டு கடைக்காரரிடம் பணம் கொடுத்து விட்டு அதை வாங்கி வந்தான்.
"எதுக்கு சோப்புநொர?" என்று அவளை அதட்டியவனிடம்,
"பிள்ளைங்களுக்கு.... நாளைக்கு நஸார் அண்ணா ஷெட்டுக்கு போகயில அவர்ட்ட கொண்டு போய்க் குடு! பிள்ளைங்க வெளையாடுவாங்க!" என்றாள்.
"புள்ளைங்க மூணு தான இருக்குதுங்க? நாலாவது ஒண்ணு யாருக்கு?" என்று முறைத்தவனிடம்,
"ஏதாவது வாங்கிக்க சொன்ன... எனக்கு ஒண்ணு சேத்து வாங்கிக்கிட்டேன்! அதுக்கு ஏன் இப்டி மொறைக்குற? கத்துற? வா கெளம்புவோம்!" என்று சொல்லி முறைப்புடனே இருந்தவனை அவளோடு அழைத்துச் சென்றாள்.
கோவிலுக்குப் பிறகு, மதிய உணவை ஒரு ஹோட்டலில் முடித்தவர்கள் மாலை ஒரு சினிமா தியேட்டருக்குள் நுழைந்தனர்.
"என்னடா மவனே.... திடீர்னு படத்துக்கு எல்லாம் கூட்டிட்டு வார?" என்று கேட்ட தாயிடம்,
"ஏதோ குடும்பத்தோட ஒக்காந்து படம் பாக்கணும்னு தோணுச்சு அமுதாம்மா! அதான் இங்க கூட்டிட்டு வந்தேன்!" என்றான் லேசாக புன்னகைத்த படி.
எப்படி பார்த்தாலும் ஜெயன் மற்றும் முகிலால் வதனியை ஒரு வெளியாள் என்று பிரித்துப் பார்க்கவே முடியவில்லை. அவர்களையே அறியாமல் அவளும் நம்முடைய உறவு தான் என்று நிறைய நேரம் பேசி விட்டு அவளிடம் முழித்தார்கள்.
இப்போதும் குடும்பத்தோட என்ற ஒரு வார்த்தையை சொல்லி விட்டு வதனியிடம் முழித்துக் கொண்டு இருந்தான் ஜெயன்.
"படத்துக்குப் போகணும்னு நெனச்சுருந்தா மதியமாவது இங்க வந்துருக்கலாம்ல? எதுக்கு ஜெயன் எங்கள ஈவ்னிங் ஷோவுக்கு கூட்டிட்டு வந்த? படம் முடிஞ்சு நாம கிளம்பவே ரொம்ப நேரம் ஆகிடும். நைட்ல குன்னூர் வரைக்கும் ட்ராவல் பண்றது ஸேஃபா?" என்று கேட்டவளின் கையை அழுந்தப் பற்றியவன்,
"நான் எவ்ளோ முயற்சி பண்ணியும் இன்னமும் கார்ல ஏறுனவுடனே வர்ற ஒம்பயத்த மட்டும் என்னால ஒண்ணுமே பண்ண முடியலம்மா; நமக்கு ஒண்ணும் ஆகாது! நிதானமா, ரொம்ப கவனமா வண்டிய ஓட்டிட்டுப் போறேன். படம் மொக்கையா இருந்தா, அப்டியே லேசா தூங்கிக் கூட முழிச்சுக்குறேன். நீ நிம்மதியா படத்த பாரு வர்த்தினி!" என்று சொன்னவனிடம் லேசாக தலையாட்டியவள் திரையின் புறம் தன்னுடைய கண்களை திருப்பினாள்.
கோவையில் கிளம்பியதில் இருந்து தன்னுடைய பள்ளிப்பருவம், கல்லூரி நாட்கள், அப்பா, அவருடைய குடும்பம், சண்டை, பிரச்சனை, மனோம்மாவுடன் தனியாகவே வாழ்ந்தது என்று அனைத்தையும் குட்டி குட்டி கனெக்ஷன் பாயிண்ட்டுகளாக ஜெயனிடம் சொல்லிக் கொண்டே வந்தாள் வதனி.
அவனுக்கு தூக்கம் வரக்கூடாது என்று ஆரம்பித்தவள் மெல்லிய குரலில் அனைத்தையும் அவனிடம் சொல்லி விடும் நோக்கத்தில் பேசிக் கொண்டிருக்க ஜெயன் அவளிடம்,
"எங்களோட கஷ்டம் எங்களோடவே இருக்கட்டும்னு நீயும் அம்மாவும் முடிஞ்ச வரைக்கும் தனியாவே இருக்க நெனச்சது ரொம்ப தப்பு வர்த்தினி..... சொந்தம் கிடையாது, நட்பு கிடையாது, கொறஞ்சபட்சம் பக்கத்து வீட்டுக்காரவுங்க கிட்ட கூட சின்னதா ஒரு சிரிப்போட நகந்துடுவோம்னு நீ சொன்னது எனக்கு ரொம்ப தப்பா படுது!" என்று சொன்னவனைப் பார்த்து லேசாக சிரித்தவள்,
"மைலாப்பூர் வீடு நாங்க மாறுன எங்களோட மூணாவது வீடு ஜெயன்.... அவரோட சண்ட, சண்டைக்கு அப்புறம் வர்ற பிரச்சன, வீட காலி பண்றது, அதுக்கப்பறம் ஒரு நிலைப்பாடுன்னு மனோம்மாவும், நானுமாவே ரொம்ப நாள் ஓடிடுச்சு! அப்புறம் அதுவே பழகிடுச்சு!"
"குன்னூர்ல உன் கூட நான் எங்கயாவது நடந்து வந்தா கொறஞ்சது நாலஞ்சு தடவ இவரு நம்ம ப்ரெண்ட் வர்த்தினி; ஒரு நிமிஷம் பேசிட்டு வந்துடுறேன்னு எங்கிட்ட சொல்லிட்டு ஓடிட்டு வருவ.... ஒன்னோட அந்த கேரக்டர் ரொம்ப பிடிச்சிருந்தது; ஒனக்கு ஊர் பூரா ப்ரெண்ட்ஸ்; எனக்கு ஒருத்தர் கூட ப்ரெண்ட் இல்ல! இவ்வளவு ஏன் நீ என்கிட்டயே ப்ரெண்ட்லியா தான வந்து பேச ஆரம்பிச்ச..... அப்புறந்தான் இப்டியெல்லாம்!" என்று சொல்லிக் கொண்டிருந்தவளை பார்த்து குறும்பாக புன்னகைத்தவன்,
"அப்புறந்தான் எப்டியெல்லாம் வர்த்தினி?" என்று கேட்க அவள் அவனுடைய அந்த வார்த்தை காதில் விழாதது போல் திரும்பி ஜன்னல் கண்ணாடியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
அழகி வருவாள்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro