🌻 அழகி 42
தொடர்ச்சியாக நாலைந்து குழு விளையாட்டுகள் விளையாடும் போது ஒன்று ஜெயன் அவளது குழுவில் ஒட்டிக் கொண்டிருந்தான்; இரண்டு பேர் கொண்ட விளையாட்டு என்றால், அந்த விளையாட்டில் அவளுடைய pair ஆக இருந்தான். அந்த வேலை மிகவும் யதேச்சையாக நடப்பது போல மிகத்தெளிவாக திட்டம் தீட்டிக் கொண்டான்.
எந்த விளையாட்டை எடுத்துக் கொண்டாலும் ஜெயனுடைய கடும் முயற்சி வதனியுடைய மெத்தனத்தால் அவர்கள் இருவருடைய தோல்வியில் முடிந்தது.
"ஏன்டீ ஹெட்லைட்டு.... இப்டி வேணும்ட்டே தோக்குற? கொஞ்சம் ஒழுங்காத்தான் வெளையாடேன். அச்சுதன் ஸாரோட சித்தப்பா சித்தி தான் எல்லா வெளையாட்டுலயும் அடிச்சி பட்டையக் கெளப்பிக்கிட்டு இருக்காங்க..... மொத்தத்துல நாம மூணாவது எடத்துல இருக்கோம்; நீ கொஞ்சம் மனசு வச்சா நாம மொத எடத்த கூடப் புடிச்சுடலாம்!" என்று சொன்னவனிடம்,
"எங்கூட pair பண்ணனும்னு ரொம்ப ஆசப்பட்டீங்கல்ல மிஸ்டர் ஜெயன்? நீங்க மூணாவதுல இல்ல முப்பதாவது எடத்துல கூட இருங்க.... அதைப் பத்தி எனக்கு ஒரு கவலையும் இல்ல!" என்று கறாராக சொல்லி விட்டாள் வதனி.
"வெளையாடத் தெரியல, வெளையாட முடியலன்னா பரவாயில்ல..... எங்கூட கூட்டு சேந்தயில்ல? அப்ப தோத்துப்போன்னு வேணுமுன்னுட்டே கரம் வச்சு நம்மள போட்டுத் தள்ளுறா!
இவள வச்சுக்கிட்டு...... நாம எல்லா வெளையாட்டுலயும் ஜெயிச்சுட்டாலும்?" என்று நொந்து கொண்டாலும் தன்னுடைய ஏஎம் அம்மாவின் அருகாமை குளிர்கால பனிப்பொழிவு போல் ஜெயனுக்கு ஜில்லென்று தான் இருந்தது.
"ஓகே.... ஓகே.... மை டியர் பேமிலி மெம்பர்ஸ்! இவ்ளோ நேரமா எல்லா கேம்லயும் உங்களோட புல் எஃபர்ட் போட்டு நல்லா வெளையாடி முடிச்சீங்க; இப்ப நாம விளையாடப் போறது ஃபைனல் கேம்....இதுல ஜெயிக்குற ஒரே ஒரு pair க்கு மட்டுந்தான் நாங்க ஷீல்டு குடுப்போம். மத்தவங்க எல்லாருக்கும் சின்ன சின்ன கிப்ட் தான் கெடைக்கும்..... ஸோ உங்களோட முழு கவனத்தையும் கேம் மேல வைங்க.....!"
"இதுதான் கேம்..... இந்த விளையாட்டுல உங்க காலுக்கு கீழ நாலு இடத்துல முட்டை இருக்கும்! ரெண்டு இடத்துல கேக்கோட க்ரீம் இருக்கும்! நீங்க கண்ண கட்டிக்கிட்டு இது எது மேலயும் உங்க டீம்ல இருக்குற ரெண்டு பேரோட காலும் பட்டுடாம,
ரெண்டு பேரும் உங்களோட கையையும் விட்டுடாம, மினிமம் டைம்ல உங்களோட டீமுக்கு குடுத்த நம்பர் ஃபார்ம்ல நடந்து வரணும்!"
"யார் கம்மியான டைம்ல, நிறைய பொருள உடைக்காம கரெக்டா உங்களோட நம்பர் பார்ம்ல நடந்து வர்றீங்களோ அவங்க தான் கேமோட வின்னர்! ரூல்ஸ் புரிஞ்சதுல....? லெட்ஸ் ஸ்டார்ட்!" என்று சொன்னவளிடம் மறுப்பாக தலையசைத்து,
"ம்ஹூம் அனுபமா....! வீ ஆர் க்விட்டிங்க்! இந்த மாதிரி சாப்புடுற பொருள் மேல எல்லாம் நடக்கணும்னுங்குற
விளையாட்டோட ரூல நீங்க முதல்லயே சொல்லல.....! க்ரீம், முட்டையெல்லாம் ஒருவேள நாங்க கண்ணக் கட்டிட்டு நடக்கும் போது மிதிச்சிட்டா..... வேண்டாம்! இந்த கேம் எங்களுக்கு செட் ஆகாது!" என்று சொல்லி விட்டு விளையாட்டில் இருந்து விடுபடுவதாக சொல்லிக் கொண்டிருந்தாள் வதனி.
"அச்சச்சோ.... என்ன வதனி இப்டி சொல்லீட்டீங்க? ஜனா ப்ரோ பர்ஸ்ட் ப்ளேஸ்க்காக வந்ததுல இருந்து உரண்டு பொரண்டு ட்ரை பண்ணிட்டு இருக்காரு.... நீங்க என்னடான்னா ஈஸியா வீ ஆர் க்விட்டிங்னு சொல்லீட்டீங்க! நீங்க விளையாடலைன்னா அவரும் கேம்ல இருந்து தோத்துடுவார்! தெரியும்ல?" என்று கேட்டாள் அனுபமா.
"நான் என்ன பண்றது அனுபமா? முதல்ல இருந்து அவருக்கு என்னோட கூட இருக்குறது கஷ்டமா தான் இருக்கு; வேற யாரையாவது பார்டனரா சேத்துக்குங்க; என்னை விட்டுடுங்கன்னு அவர் கிட்ட சொல்லிட்டேன்; அதையும் கேக்க மாட்டேங்குறாரு..... அப்ப வெளையாடாமலே கேம்ல இருந்து அவுட் ஆகத்தான் செய்யணும்!" என்று சொன்னவளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் ஜெயன்.
ரூமுக்குள் சென்று சற்று நேரம் படுக்கிறேன் என்று சொல்லி விட்டுப் போயிருந்த முகிலமுதம் இந்தக் கடைசி விளையாட்டின் வாக்குவாதத்தின் போது தான் எழுந்து அங்கு வந்திருந்தார்.
"யாத்தே.... நல்லா வெளையாட்ட கண்டுபிடிச்சு வைக்குறீங்க பிள்ளைகளா.... எங்க வதனிப்புள்ள வாழைப்பழத்த பையில போட்டு கொண்டு வரயில, அது கொஞ்சம் கொழ கொழன்னு ஆகிடுச்சுன்னாலே அத பைய உட்டு வெளிய எடுக்காது! இப்ப இந்த மாதிரியான வெளையாட்ட எப்டி வெளையாடும்?" என்று நினைத்தவர் ஜெயனின் அருகில் வந்து நின்று,
"ஜெயனு.... இந்த வெளையாட்ட உட்டுடுடா தம்பி! அவுகளே ஜெயிச்சுட்டுப் போவட்டும்!" என்றார்.
"முடியாது அமுதாம்மா! ஜெயிப்போ, தோப்போ போட்டியில எறங்கி நிக்கணும்..... உங்க செல்லப்புள்ளய நான் இன்னிக்கு ஒருவழி பண்ணாம உடுறதா இல்ல!" என்று சொன்னவன் அவளுடைய அருகில் சென்று அமர்ந்து அவள் காதில் மென்குரலில் எதையோ முணுமுணுத்தான்.
அவன் பேசியதைக் கேட்டு அவனை முறைத்தவளிடம், "இந்த மொறப்பு எல்லாம் வேலைக்காகாது. உன் சம்பளத்துல எங்களுக்கு ஏதாவது பொருள வாங்கித் தருவேன்னு சொல்லிக்கிட்டே கெடந்தல்ல.....? அதுக்குப் பதிலா இந்தப் போட்டியில ஜெயிச்சு இந்த ஷீல்ட வாங்கிக் குடு! நாம தோத்துப் போனாலும் பரவாயில்ல..... ஆனா எங்கூட வெளையாட வா!" என்று சொல்லி விட்டு,
"கைய விடுறா கொரங்கு.... நான்லா இந்த கேமுக்கு கண்டிப்பா வர மாட்டேன்!" என்று சொன்னவளை இழுத்துச் சென்று விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்த இடத்திற்கு சென்று நின்றான் ஜெயன்.
அச்சுதனுடைய சித்தப்பாவும், சித்தியும் ஐந்தாவது டீம் என்பதால் அவர்களுக்கு ஐம்பந்தைந்து என்ற எண்ணை தரையில் எழுதி அவர் தன்னுடைய ஐந்திலும், அவரது மனைவி அவர்களுடைய ஐந்திலும் கையைக் கோர்த்துக் கொண்டு நடந்து வர வேண்டும் என்ற விதிமுறை விதிக்கப்பட்டிருந்தது.
"அடுத்த டீம் நடந்து முடிக்குறதுக்குள்ள ஒம்மனச மாத்திக்க வர்த்தினி.... நாம இதுல நிச்சயமா வெளையாடுறோம்! ஒரு விஷயத்த பாத்து பயந்து அருவருப்பு பட்டு இப்டி எதுக்காகவும் நமக்கு வேணுங்குற விஷயத்த நம்ம கைவிட்டுடக் கூடாது! நம்ம எட்டாநம்பரு; அதுனால நமக்கு குடுத்த நம்பரு எம்பத்தி எட்டா தான் இருக்கும்; சுளுவா அதக் கடந்து போயிடலாம்!" என்று சொன்னவனிடம்,
"விளையாட வர முடியாதுன்னு சொன்னா கோபிச்சுட்டு என்னை கார்ல ஏத்திக்காம இந்த ரிஸாட்லயே உட்டுட்டுப் போயிடுவியா?" என்று பயந்த படி கேட்டாள் வதனி.
அழகி வருவாள்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro