🌻 அழகி 38
"டேய் மச்சி..... என்னடா அந்தப்புள்ள கிட்ட போயிட்டு,
இப்டி பேசிட்டு வந்துருக்க.....?
லவ் பண்ணு, லவ் பண்ணுன்னு ஒரு பொண்ணு மேல உழுந்து அதப் போட்டு பொராண்டுறது ரொம்பவே தப்புடா! அவ மனநிலையில நாம இருந்தா என்ன செய்வம்னு யோசிச்சுப் பாத்தியா நீயி? அந்தப்பொண்ணுட்ட இன்னுங்கொஞ்சம் பொறுமையா பேசி, ஒம்மனச புரிய வைடா!" என்று மாங்கு மாங்கென தனக்கு அறிவுரை வழங்கிக் கொண்டிருந்தவனின் பேச்சை தன் காதிலேயே ஏற்றிக் கொள்ளாதவன் போல் அருமை நண்பனுக்கு எதிரில் அமர்ந்து தன்னுடைய காதைக் குடைந்து கொண்டிருந்தான் ஜெயன்.
"அடேய்.... இவனே! நான் உங்கிட்ட தான்டா பேசிக்கிட்டு இருக்கேன்!" என்று சொன்ன நஸாரிடம்,
"அப்டியா.....? எங்கிட்ட தான் பேசிக்கிட்டு இருக்கியா? என்ன சொல்லிக்கிட்டு இருந்த?" என்று உன் பேச்சில் ரிவர்ஸ் போய் விட்டு மறுபடியும் முதலில் இருந்து வாவென்று சொன்ன ஜெயனை இரண்டு மூன்று கெட்ட வார்த்தைகளால் திட்டினான் நஸார்.
"டேய்.... இதெல்லாம் நல்லாயில்ல; நீ இப்டி எல்லாம் பேசுறத நான்
உம்பொண்டாட்டி கிட்ட போட்டு குடுத்துவேன் பாத்துக்க!" என்று சிறுபிள்ளைத்தனமாக மிரட்டியவனிடம் எரிச்சலுடன்,
"ஐயோ.... கொஞ்ச நேரம் வெளையாடாம அடுத்து என்ன செய்றதுங்கறத பத்தி பேசித் தொலையேன்டா ஜெயனு!" என்றான் நஸார்.
"இங்கருடா நஸாரு; இந்த அழுமூஞ்சிங்கள எல்லாம் கண்டாலே நமக்கு ஒவ்வாம; கிள்ளி விட்டு அடுத்தவிய்ங்கள வேணும்னா அழுவ வப்பமே தவிர நமக்கெல்லாம் சோகமா கன்னத்துல கைய வச்சுக்கிட்டு ஒக்காந்துருக்குறது, காதலுக்காக அழுது தவிக்குறது இதெல்லாம் வரவே வராது பாத்துக்க!"
"அவளோட மனநிலையில நாம இருந்தா என்ன செய்வம்னு கேட்டல்ல? ரெண்டு நாள் அந்தப் பொண்ணுக்காக அழுவோம். மூணாவது நாள் எந்தப்பிள்ள நம்மள கட்டிக்கிடுறேன்னு சொல்லுதோ அந்தப் புள்ளையோட நல்லாத்தே வாழ்ந்துக்கிட்டு இருப்போம். உணர்வுகள் அழுத்தமா இருக்குறதும், ஆழமா இருக்குறதும் பொண்ணுங்க கிட்ட தான்......! அதுனால தான் நம்ம ஏஎம் அம்மா அந்த வினோத்தோட நியாபகத்தையே புடிச்சுக்கிட்டு தொங்குறா!"
"இவ இப்டி தனியா நிக்க வேண்டியவளே இல்லடா; இத்தன மாசமா அவளோட கொணத்த தான் நான் பாத்துருக்கேனே..... நம்மள விட ஜாலியா இருக்கணும்னு நெனைக்குறவ; கொழந்த மாதிரி
சின்ன சின்ன சேட்ட பண்றவ; வாழுற நாள அனுபவிச்சு வாழணும்னு நெனைக்குறவ! அந்த கொணத்தயெல்லாம் கூட மத்தவங்க கிட்ட காட்டாம ஒளிச்சுக்கிட்டு வாழுறாடா; கூட இருந்த ரெண்டு பேர் போயிட்டாங்கன்னுட்டு இவ எதுக்குடா வாழ்க்க முழுக்க இப்டி சந்நியாசினியா வாழணும்?"
"பொறுமையா புரிய வைக்கிற கதையெல்லாம் இங்க வேலைக்காகாது. அவ எம்பக்கத்துல வர்ற வரைக்கும் அவளுக்கு ரெண்டடி பக்கத்துல நின்னு, அவளை நான் கொடைஞ்சிக்கிட்டே தான் இருப்பேன்!" என்று நஸாரிடம் தன்னுடைய முடிவை தீர்மானமாக உரைத்தான் ஜெயன்.
"ஒண்ணு உங்க அம்மிய, இல்ல என்னைய, எனக்கு அடுத்ததா அந்தப்புள்ள பர்வதவர்த்தினிய இப்டி யாரயாச்சு நீ குடைஞ்சுக்கிட்டே கெட! போன ஜென்மத்துல நண்டா கண்டாப் பொறந்தியோ என்னவோ?
எப்டியோ உன்னோட வாழ்க்கையில நீ நெனைக்குறது உனக்கு கெடச்சா ரொம்ப சந்தோஷந்தான் எங்களுக்கு!" என்று சொன்னவன்,
"மரியத்த இதுக்குள்ள இழுக்காதடா மாப்ள..... நீ சொல்றதுக்கெல்லாம் நா வேணுமின்னா மண்டைய ஆட்டலாம்! அவளுக்குத் தெரிஞ்சா என்னைய மாதிரியே மண்டைய ஆட்டுவான்னு சொல்ல முடியாது. நீ செய்யுறது பிடிக்கலன்னு சொல்லி நாம ரிஸாட்டுக்குப் போற நேரம், ஒன்னைய தனியா கூப்ட்டு கிழிச்சாலும் கிழிப்பா பாத்துக்க!" என்று சேர்த்தே சொல்லி வைத்தான்.
"மரியத்த தான? விடுடா மாப்ள பாத்துக்கலாம்! அவ நம்மள திட்டுனாலும் அதுல ஒரு நியாயம் இருக்குமுடா; அதுனால அவ பேச்ச எல்லாம் நான் கரெக்டா காதுல வாங்குவேன்!" என்று சொன்னவனிடம் நாக்கை துருத்திக் கொண்டு,
"அப்ப எம்பேச்ச கேக்கமாட்ட! காத கொடஞ்சிக்கிட்டே காதுல வாங்காம ஆடிக்கிட்டு இருப்ப; அப்டித்தான?" என்று கேட்டவனிடம் ஈ என்று பல்லைக் காட்டினான் ஜெயன்.
"அவளுக்கு பேங்க் முடியுற நேரம்டா மாப்ள.... நான் கெளம்பவா?" என்று கேட்டவனிடம்,
"அப்ப நெசமாவே நீ இம்புட்டு நேரமா என்னைய வச்சு காமெடி தான் பண்ணிட்டு இருக்க? என்ன?" என்று கேட்டவனிடம் மறுபடியும் ஈ என்று பல்லைக் காட்டி விட்டு அவனுக்கு கையசைத்து விட்டு அங்கிருந்து கிளம்பினான் ஜெயன்.
தான் செய்வது தவறோ சரியோ நஸாரிடம் அனைத்தையும் சொல்லி விட்டதில் இருந்து ஒரு நிம்மதி கிடைத்தது ஜெயனுக்கு.
தான் அவளை கட்டாயப்படுத்துவது தவறு என்றால், அவள் அவளுடைய வாதத்திலேயே நிற்பதும் தவறு தான் என்று நினைத்த படி அவளுடைய வங்கி இருக்கும் ஏரியாவை நோக்கி தன்னுடைய வண்டியில் புறப்பட்டான்.
இன்று காலையிலும் அவன் தான் அவளை இறக்கி விட்டான்.
"ஏன் இப்டியெல்லாம் பண்ற? எதுக்கு புதுசா இதெல்லாம்?" என்று அடுக்கடுக்காக கேள்விகளை கேட்டவளை வாயில் விரல் வைத்துக் காட்டி, வலுக்கட்டாயமாக பைக்கில் அமர்த்தி கொண்டு வந்து சேர்த்திருந்தான்.
முகிலமுதமும் அவனது செய்கைகளை பற்றி குற்றப்பத்திரிக்கை வாசிக்காமல் இல்லை.
"டேய் ஜெயனு.... என்னய்யா இது? அந்தப்புள்ள பாவமுடா; நீ செய்யுறத எல்லாம் ஏத்துக்கவும் முடியாம, எங்கிட்டும் ஓடவும் முடியாம பாடாப்படுது!" என்று சொன்னவரிடம்,
"அப்ப ஒம்மகன் ஒத்தையிலயே கெடந்து பாடாப்பட்டா பரவாயில்லயா அமுதாம்மா? அவளப் பாத்ததுல இருந்து மனுசனுக்கு அடியில இருந்து மேல வரைக்கும் ஜிவ்வுன்னு கரண்ட் வச்ச மாதிரியில்ல இருக்கு? இன்னும் எத்தன மாசத்துக்கு நானும் இந்த இம்சயெல்லாம் பொறுத்துக்கிட்டே சுத்துறது? நீ இப்டி சடைச்சுக்குற அளவுக்கு அவள நா என்ன பண்ணிட்டேன்? காலையில வேல முடிஞ்சு வந்த கேப்புல பேங்க்ல கொண்டுட்டுப் போயி விட்டுட்டு வந்தேன்! சாயந்தரமும் சும்மாயிருந்தா அந்தப் பக்கமாப் போயி அவள கூட்டிட்டு வரப்போறேன். அவ்வளவுதான?" என்று கேட்டவனிடம் ஒன்றும் சொல்லாமல் தலையை ஆட்டி விட்டு சென்று விட்டார் முகிலமுதம்.
மாலையில் வேலை முடிந்து பேங்கில் இருந்து வெளியேறிய வதனி, வாசலிலேயே நின்றிருந்த
அவனைப் பார்த்து விட்டு அவனை கண்டுகொள்ளாதவள் போல் நடந்து கொண்டிருக்க தன்னுடைய பைக்கை தள்ளிக் கொண்டு அவளின் அருகே நடந்து வந்தான் ஜெயன்.
"ஜெயன்.... என் கொலீக் ஒருத்தரோட பேமிலி இங்க ஸ்டே பண்ண வர்றாங்க. ஒன் வீக், டென் டேஸ் இருப்பாங்கன்னு நெனக்குறேன். நீ அவங்களுக்கு ரூம் அரேன்ஜ்மெண்ட், சைட் சீயிங் எல்லாம் அரேன்ஜ் பண்ணி குடுக்க முடியுமா? உன்னோட நம்பர நான் என் கொலீக் கிட்ட குடுத்துட்டேன்!"
"என்னை கூட்டிட்டுப் போனா, எப்டி கூட்டிட்டுப் போவியோ அத மாதிரியே ஸ்பெஷல் கேரோட அவங்க பேமிலியில இருக்குறவங்களையும் இந்த ஏரியாவ சுத்திப் பாக்க கூட்டிட்டுப் போயிட்டு வா ஜெயன்! உனக்கும் ஒரு பெரிய வேல கிடைச்சது மாதிரியாச்சு..... எனக்கும்!" என்று சொல்லி விட்டு நாக்கை கடித்தவளிடம்,
"ம்ம்ம்! பரவாயில்ல சொல்லி முடி; எனக்கும் வேல வந்த மாதிரியாச்சு; உனக்கும் ஒருவாரத்துக்கு ஒங்கழுத்த சுத்துன தொல்லை விட்டுச்சு..... அதத்தான சொல்ல வந்த?" என்று கேட்டவனிடம் வேகமாக இல்லையென தலையாட்டினாள் வதனி.
"வேல வெட்டிய உட்டுட்டு ஒம்பின்னால சுத்துற அளவுக்கு எல்லாம் நான் பெரிய ஆளு இல்லம்மா! இன்னிக்கு ஒழைச்சா தான் எனக்கு நாளைக்கு சோறு..... ஒங்கூட வேல பாக்குறவங்களோட குடும்பத்த தான கூட்டியார சொல்ற? வரச்சொல்லு.... இத மாதிரி என்னைய ஒங்கிட்ட இருந்து தள்ளி நிறுத்துறதுக்கு இன்னும் எத்தன வேலைய எனக்குத் தாரன்னு பாக்குறேன். இன்னும் பத்து நிமிஷத்துல வீடே வந்துடும். வண்டியில ஏறுறியா? இல்ல உருட்டிக்கிட்டே வரட்டுமா?" என்று கேட்டவனிடம்,
"நீ போ ஜெயன்.... நான் வந்துடுறேன்!" என்றாள் வதனி.
வண்டியில் முட்ட முட்ட பெட்ரோல் நிரப்பியிருந்தவன் வீடு வரை அவளுக்கு இரண்டடி தள்ளி நடந்து வண்டியை உருட்டிக் கொண்டே வீடு வந்து சேர்ந்தான்.
அழகி வருவாள்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro