Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

🌻 அழகி 37

"முகில்ம்மா கீழ என்ன பண்றாங்க? சாப்டாங்களா? நான் இப்ப
அவங்கட்ட போணும்!" என்று சொல்லி கீழே கையைக் காட்டியவளின் சிறுபிள்ளைத்தனத்தைப் பார்த்து ஜெயன் லேசாக சிரித்துக் கொண்டு தன்னுடைய தலையைக் கோதிக் கொண்டான்.

"ஒம்முகில்ம்மா அப்பவே மாத்தரயப் போட்டுட்டு ஒறங்கிட்டாங்க.... அவங்க ரூமுக்குள்ள விடிவெளக்கு தான் எரியுது; எம்பேச்சுல நம்பிக்கையில்லன்னா நீயே கீழ போய் ரூமுக்குள்ள பாத்துட்டு வா!" என்று படிக்கட்டுகளின் பக்கமாக கையைக் காட்டினான் ஜெயன்.

முகிலமுதத்தின் சாப்பாட்டு நேரம், தூங்கும் நேரம், காலையில் அவர்கள் எழுந்து கொள்ளும் நேரம், அவர்களுடைய தோழியிடம் கதையடிக்கும் நேரம், அவரது
பிடித்தங்கள், பிடிக்காத விஷயங்கள் என்று எல்லாமே வந்த இத்தனை மாதங்களுக்குள் வதனிக்கு அத்துப்படி!

இன்று அவனை விட்டு எங்கேயாவது தூரமாக ஓட வேண்டுமென்பதற்காக தூங்கிக் கொண்டிருப்பவர்களிடம் போய்ப் பேசப் போகிறேன் என்று சொன்னால் இவளை என்ன செய்வது என்று நினைத்து தான் அவன் சிரித்தான்.

"இங்க வந்து ஒக்காரு வர்த்தினி!" என்று அவன் அமர்ந்திருந்த மொட்டை மாடியின் பக்கவாட்டு சுவரை தட்டிக் காண்பித்தான்.

"இல்ல.... மலையப் பாத்துக்கிட்டு நின்னுட்டே பேசுறேன்; ராத்திரில மாடி சுவத்துல ஒக்கார்றதுக்கு எனக்கு பயமாயிருக்கு! கீழ விழுந்துட்டேன்னா என்ன பண்றது?" என்று சொன்னவளை உன்னை அப்படியா விழ விட்டு விடுவேன் என்று கேட்பது போல
ஒருமாதிரியாக பார்த்தவன், சுவற்றில் இருந்து கீழே குதித்து தரையில் வந்து அமர்ந்து அவளையும் கண்களால் "இங்கு வா" என்று அழைத்தான்.

"ஒக்காந்து பேசுற அளவுக்கு என்ன இருக்கு? அப்டியே சொல்லுன்னா சொல்ல மாட்டியா?" என்று சின்னக்குரலில் கேட்டவளிடம்,

"இங்க வான்னு கூப்ட்டேன்! வரச் சொல்றதுக்கே என்னைய இவ்ளோ பேச வச்சன்னா என்னால ஒங்கிட்ட கடசிவர இவ்ளோ பொறுமையா பேச முடியாது!" என்று குரலை அழுத்தியவனின் முன்னால் வந்து சற்று பயத்துடனேயே அமர்ந்தாள் வதனி.

"நேரா விஷயத்துக்கு வர்றேன் வர்த்தினி! என்னைய கல்யாணம் பண்ணிக்குறதுல ஒனக்கு என்ன தான் பிரச்சன? நான் ஒன்னோட அளவுக்கு படிக்கல; அழகாயில்ல; எங்க வசதி கம்மியாயிருக்கு.... இந்த மாதிரியெல்லாம் நீ எதையுமே யோசிக்கலயே? நீ எங்கிட்ட காட்டுற அன்பே ஒருமாதிரி தனியா தெரியுதும்மா.... அது எனக்குப் பிடிச்சிருக்கு! என் வாழ்நா பூராவும் உன் அன்பு எனக்கு வேணும் வர்த்தினி; நான் பாத்த பொண்ணுங்கள்லயே என்னைய தங்கமா தாங்குற ஒரே பொண்ணு நீதான்; பெறவு நாம சேர்றதுல உனக்கு என்னம்மா தயக்கம்?" என்று கேட்டவனிடம்,

"முதல்ல இருந்து நான் அதத்தான் உங்கிட்ட புரிய வைக்க முயற்சி பண்ணிட்டு இருக்கேன் ஜெயன்! நீ எப்டி இருந்தாலும், என்ன செஞ்சாலும் எனக்குப் பரவாயில்ல. ஏன்னா நான் உன்னோட லைஃப் முழுசுக்கும் கூட வரப்போறதில்ல! உங்கிட்ட எனக்கு வேணுங்குறது ஜஸ்ட் ப்ரெண்ட்ஷிப் தான்; இது ஏன் உனக்குப் புரிய மாட்டேங்குது?"

"ஒன்னைய மட்டுமில்ல, நாளைக்கு நீ கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணையும், உங்களுக்குப் பெறக்கப் போற குழந்தைகளையும் கூட தங்கமா தாங்குறதுக்கு நான் தயார் தான்.....!"

"நாம சேரணும், என்னைக் கல்யாணம் பண்ணிக்கணும், அதுக்கு நீ சரின்னு சொல்லலயின்னா தனியா போயிடுவேன்னு எல்லாம் எங்கிட்ட பேசாதன்னு தான் நான் ஒன்னைய கெஞ்சிக் கேட்டுக்குறேன்!" என்று சொன்னவளிடம் எதுவும் பேசாமல் இரண்டு நிமிடங்கள் அமைதியாக இருந்தான் ஜெயன்.

"ஒன்னைய கல்யாணம் பண்ணிக்கணும்னு நான் ஏன் ஆசப்படக்கூடாது வர்த்தினி?" என்று மறுபடியும் ஆரம்பித்தவனிடம் பதில் சொல்லாமல் தன் தலையில் கைவைத்துக் கொண்டாள் வதனி.

இப்படிப் பேசாதே, இந்த விஷயம் மட்டும் பேசாதே என்று நூறு முறைகள் அவனிடம் சொல்லி விட்டாள். அவன் சுற்றி சுற்றி அங்கேயே வந்து நின்றால் என்ன தான் செய்வது?

"ஜெயன்..... என்ன பண்றதுன்னே தெரியாத ஒரு இக்கட்டான நேரத்துல எனக்கு நீ பண்ணுன ஹெல்ப் ரொம்ப பெரிசு; என் சோகத்த கடக்க நீயும், முகில்ம்மாவும் எனக்கு ரொம்ப ஸப்போர்ட்டா இருந்தீங்க! பட் அதுக்காக என்னால உன்னை கல்யாணம் பண்ணிக்க முடியாது ஜெயன்; ஐ ஸ்டில் லவ் வினோத்.... ஒருவேள ஆக்ஸிடெண்ட்ல அவனுக்குப் பதிலா நான் போயிருந்து, இப்ப அவன் உயிரோட இருந்து வேற பொண்ண கல்யாணம் பண்ணிக்கனும் நினைச்சுருந்தான்னா..... ம்ஹூம் இப்டி நினைச்சுப் பாக்குறதே எனக்கு ரொம்ப கஷ்டமாயிருக்கு; மனசுல இருக்குற அவன ஓரமா நகர்த்தி வச்சுட்டு, உன்னை கல்யாணம் பண்ணிக்கணும், உங்கூட வாழ ஆரம்பிக்கணும்னு ஜஸ்ட் லைக் தட் கேக்குற? இது எப்டி ஜெயன் சாத்தியம்?" என்று அவனுக்குப் புரிய வைத்து விடும் வேகத்தில் கேள்வி கேட்டாள் வதனி.

"எல்லாம் சரித்தாம்மா; நீ வினோத்த தான் லவ் பண்ணுன; பண்ற, பண்ணுவ; ஆனா அவந்தான் போயி சேந்துட்டானே? ஒரு பேச்சுக்கு சொல்றேன். அவன் சாவாம கை, கால் ஒடைஞ்சு, இல்ல நம்மள மாதிரி தலையில மூஞ்சியிலன்னு கிழி வாங்கி உயிரோட இருந்துருந்தான்னா வேணும்னா நீ உன்னோட தெய்வீக காதல புரிய வைக்க அவனையே கல்யாணம் பண்ணியிருக்கலாம்; இப்போ...... கடைசி வரைக்கும் யாரயுமே கல்யாணம் பண்ணிக்காம ஒத்தையாவே இருந்து அவனுக்கு காட்டப் போறியா உன் தெய்வீகக் காதல? இதக் கேக்குறதுக்கே பைத்தியக்காரத்தனமா இல்ல?" என்று கத்திப் பேசியவனுக்கு வந்ததைக் காட்டிலும் அவளுக்கு அதிகமாகவே கோபம் வந்தது.

"இங்க பாரு ஜெயன்.... நீ எனக்கு ரொம்ப பிடிச்ச ப்ரெண்ட்; பட் நான் எப்டி இருக்கணும், என்ன செய்யணும்னு சொல்ற உன்னோட டாமினேஷன் தான் உங்கிட்ட எனக்கு பிடிக்காத காரெக்டர்! பர்த்டேவுக்கு வரச் சொன்ன.... வந்துட்டேன்; பேசணும் ஏதோ முடிவுக்கு வரணும்ன.... பேசிட்டேன்! இதுக்கு மேல உங்கிட்ட பேச எனக்கு ஒண்ணுமில்ல ஜெயன்! கெளம்புறேன்!" என்று சொல்லி விட்டு எழுந்தவளை கையைப் பிடித்து இழுத்து அமர்த்தினான் ஜெயன்.

"நூத்தியெட்டு தடவ, ஆயிரத்து எட்டு தடவன்னு நீ எங்கிட்ட எத்தன தடவ தான் முடியாதுங்குற ஜெபத்த ஜெபிச்சாலும் நான் ஒன்னைய ஒம்போக்குல விடுறதா இல்ல வர்த்தினி..... நீ பாட்டுல பேசிட்டு போய்ட்டே இருந்தா என்ன அர்த்தம்? நான் பேசுறதையும் கேட்டுட்டுப் போ! நாளைக்கு காலையில இருந்து நான் ஒன்னைய காதலிக்கப் போறேன். இம்புட்டு நாளுல ஒம்மனசு நல்லாவே தேறி அந்த சம்பவத்துல இருந்து நீ மீண்டு வந்துட்ட! அதுனால நாளையில இருந்து ஒன்னோட மனசுல ஏற்கனவே இருக்குற வினோத்துக்கு போட்டியா இந்த ஜெயனும் எடம்பிடிக்க வர்றேன்!"

"மயிலே மயிலே மயிலாப்பூருல இருந்த மயிலேன்னு கெஞ்சுனா எல்லாம் ஒங்கிட்ட எதுவும் வேலைக்காகாது. உசுரோட இருக்குறவனயே கழட்டி உட்டுட்டு அடுத்தவன தேடிப் போயிக்கிட்டு இருக்குதுங்க..... இவ என்னடான்னா மனசுல ஒருத்தன் இருந்தான்; அவன நவத்தி வச்சுட்டு ஒன்னைய எப்டி உள்ள எடுத்து வைக்குறதுன்னு பெனாத்திட்டு இருக்கா!" என்று அவன் பாட்டில் பேசியவன்,

"என்ன ஏஎம் அம்மா! நம்ம பேச்சக் கேட்டு அப்டியே மலைச்சுப் போயி ஒக்காந்துருக்கீங்க? இத நீங்க நம்ப கிட்ட எதிர்பாக்கலையில்ல? இப்ப எங்க ஓடப் போறீங்க.....? உங்க பேங்க்க்கு பாகிஸ்தான் பக்கத்துல ஒரு ப்ராஞ்ச் இருக்காம்.... அங்க போறீங்களா?" என்று கிண்டலாக கேட்க வதனி அவனைப் பாவமாக ஒரு பார்வை பார்த்தாள்.

"ப்ளீஸ் ஜெயன்.... இப்டியெல்லாம் பண்ணாத!" என்றவளிடம் மறுப்பாக தலையசைத்தவன்,

"இதுவும் பண்ணுவேன்; இதுக்கு மேலயும் பண்ணுவேன்! நா ஒம்பக்கத்துல ஆசையோட வந்தா என்ன ஆகுதுன்னு ஒரு சாம்பிள் பாக்கலாமா?" என்று கேட்டவன் அவளது புரியாத பார்வையை பார்த்து சிரித்தபடி அவளருகில் சென்று பாவையின் பிறை நெற்றியில் தன் இதழ்பதித்தான்.

அவனது இந்த செயலை சற்றும் எதிர்பாராத வதனி, "ஏய்..... ச்சீ!" என்று கத்தி அவனை தள்ளி விட்டு எழுந்து தன்னுடைய நெற்றியை அத்தனை முறை தேய்த்துக் கொண்டிருந்தாள்.

"ரொம்ப ஓவரா போயிட்டு இருக்க ஜெயன்.... உன் இன்னொரு கன்னத்தயும் கிழிச்சு உட்டுடுவேன் பாத்துக்க!" என்று எச்சரித்தவளிடம்,

"உம்பல்லால கிழிக்கிறதா இருந்தா குடல கூட கிழிச்சுக்க; ஆனா கிழிக்கிறதுக்கு முன்னால நான் குடுத்த மாதிரி ஒரு முத்தம் குடுத்துட்டு கிழி..... காலையில டீ குடிக்கறப்ப பாக்கலாம்! கதவ பூட்டிக்கிட்டு பாக்காத வெரதமெல்லாம் இருந்த, கதவ தெறந்துட்டு வீட்டுக்குள்ள வருவேன். நல்லிரவு!" என்று சொன்னவன் இரண்டு விரல்களால் அவள் கன்னம் வருடி விட்டு அவளுக்கு ஒரு சல்யூட் வேறு வைத்து விட்டு கீழிறங்கினான்.

"கடவுளே.... கடவுளே; இவங்கிட்ட இருந்து இந்த மாதிரி பிரச்சனைய எல்லாம் நான் எதிர்பாக்கவேயில்லயே? இப்ப நான் என்ன பண்ணுவேன்?" என்று இருகைகளாலும் தலையைப் பிடித்துக் கொண்டு நின்றவளை கீழ்ப்படிக்கட்டில் நின்று திரும்பிப் பார்த்தவன்,

"மாமா வேணும்னா வீட்டுக்குள்ள தூக்கிட்டுப் போய் உன்னைய படுக்க வைக்கட்டா செல்லம்?" என்று கேட்டு அவளுடைய வசவுமொழிகளை வாங்கிக் கொண்டு சென்றான்.

அழகி வருவாள்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro