🌻 அழகி 33
"டேய்.... என்ன நீ? என்னமோ நான் தப்பு செஞ்ச மாதிரி இப்ப
எம்மேல கோபப்படுற? அருண் எங்கிட்ட பேசுனது மனசுக்கு கஷ்டமா இருந்துச்சு தான்; அத சரி பண்றேன்னு சொல்லி நீ எங்கிட்ட பேசுனது, செஞ்சதெல்லாம் ரொம்ப ஓவர் இல்லையா? இந்த மாதிரி என்னை தொடுறதெல்லாம் வேணாம், வேணாம்னு தான் நான் உங்கிட்ட சொல்றேன்; நீ தான் எம்பேச்ச கேக்கவே மாட்டேங்குற! அப்புறம் நான் உங்கிட்ட இருந்து ஓடாம என்ன செய்வேன்? நீயே சொல்லு!" என்று கேட்டவளை சேரின் கைப்பிடியில் கைவைத்து, அதைக் கன்னத்தில் முட்டுக்கொடுத்து ரசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் ஜெயன்.
"ம்ப்ச்! என்ன பாத்துட்டே இருக்க? ஏதாவது சொல்லு!" என்று அவனை அதட்டியவளிடம் புன்னகைத்தவன்,
"இன்னிக்கு நீ ரொம்ப அழகாயிருக்க வர்த்தினி!" என்றான் மென்குரலில்.
"அடே.......ய்! நான் என்ன கேட்டுட்டு இருக்கேன்? நீ என்னடா சொல்ற? ரோட்ல போற வர்ற எவனாவது எங்கிட்ட இப்டி பேசி டீஸ் பண்ணுனா அவன பாத்து மொறைக்கலாம்; நீயே இப்டி பேசுனா ஒன்னைய என்ன தான்டா செய்றது?" என்று கேட்டவளின் குரலில் மிகுந்த அலுப்பும், சலிப்பும் தென்பட்டது.
"ம்ம்ம்.... என்ன பண்ணலாம்? தெளிவா ஒரு முடிவெடுக்கலாம்! இங்க பாரு வர்த்தினி..... நான் ஒன்னைய மாதிரி கொழப்ப கேஸூ கெடையாது! எனக்கு நீ வேணும்; ஒன்னைய நான் கல்யாணம் பண்ணிக்கிட்டு ஒன்னைய சந்தோஷமா வச்சுக்கிட்டு, நானும் சந்தோஷமா வாழணும்! அது ஒண்ணு தான் ஒங்கிட்ட இருந்து எனக்கு தேவையான விஷயம்..... ஒன்னைய மாதிரி கிட்ட வந்தா திட்டுறதும், எட்டப்போனா தேடுறதும், நீ என் பக்கத்துலயே வேணும் ஆனா நீ என் ப்ரெண்டுன்னு சொல்ற கதையெல்லாம் எங்கிட்ட வேலைக்காகாது......!"
"ஒன்னைய உட்டுட்டு தனியா இருக்குறப்ப எனக்கு மனசெல்லாம் அப்டி அலுத்துப் போவுது தெரியுமா? ஒழுங்கா வேலைய கவனிக்க முடியல; எவனப் பாத்தாலும் கோவம் கோவமா வருது; விறுவிறுன்னு வேலைய பாக்க முடியாம ஒருமாதிரி மந்தமா அசையுறேன்!"
"எனக்கு எதுக்கு வீணா இந்த கஷ்டமெல்லாம்? இப்ப சொல்லு..... இப்பன்னா இப்பவே இல்ல; பின்னால என்னைக்காவது ஒரு நாள் ஒனக்கு எம்மேல காதல் வருமா? வராதா?" என்று உறுதியான குரலில் கேட்டவனிடம் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் அவனைப் பாவமாக பார்த்துக் கொண்டிருந்தாள் வதனி.
"ரைட்டு விடு..... நீ பாக்குற பார்வையிலயே எனக்குப் புரிஞ்சுடுச்சு! உனக்கு எம்மேல கடசி வரைக்கும் எதுவும் வராது அப்டித்தான? நல்லா தெளிவா மண்டையில ஏறிடுச்சு! அமுதாம்மாவ அப்பப்ப கீழ போயி நல்லா பாத்துக்க! இனிமே நீ இங்க இருக்குற வரையில நான் இந்த வீட்ல தங்க மாட்டேன்!"
"உள்ளுக்குள்ள காதல வச்சுட்டு வெளிய ப்ரெண்டுன்னு சொல்லிட்டு திரியுறது எனக்கு ரொம்ப கஷ்டமாயிருக்கு; என்னால முடியல! ஒன்னைய இனிமே நான் தொந்தரவு பண்ண மாட்டேன். போறேன் வர்த்தினி!" என்று சொல்லி சேரிலிருந்து எழுந்தவனுடைய பக்கத்தில் சென்று விரைவாக அவன் கையைப் பற்றியிருந்தாள் வதனி.
"ஏன் ஜெயன் என்னை இப்டி படுத்துற? நீ வெளியல்லாம் எங்கயும் போகக்கூடாது; எனக்கு நீயும் வேணும். முகில்ம்மாவும் வேணும். உங்க ரெண்டு பேரு மேலயும் நான் அவ்ளோ அன்பு வச்சுருக்கேன் புரியுதா? பியூச்சர்ல உனக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னா, உன்னோட வொய்ஃப் என்னை இங்க இருக்க விடுவாங்களா, மாட்டாங்களான்னு நெனச்சு எத்தன நாள் பயப்பட்டுருக்கேன் தெரியுமா? எனக்கு நீ தொந்தரவு இல்ல ஜெயன்..... உங்கூட இருந்தா தான் எங்களுக்கு ரொம்ப சந்தோஷமாயிருக்கும்!" என்று சொன்னவளை நம்பாத பார்வை பார்த்தவன் அவளிடம்,
"நீ என்னைய பிடிச்ச இம்சடான்னு எங்கிட்டயே நீ இதுவரைக்கும் நூறுதடவ என்னையப் பத்தி சொல்லியிருக்க; இம்ச எப்டி திடீர்னு சந்தோஷமா மாறுச்சு? என்னைய இங்க இருக்க விட்டன்னா, நீ என்னைய கல்யாணம் பண்ணிக்கணும். பண்ணிக்குவியா?" என்று கேட்டான்.
எப்போதும் போல விளையாட்டெல்லாம் இல்லாமல் அவனது உறுதியான குரலில் மட்டுமல்ல; அன்று அவனது பேச்சிலும் வர்த்தினி மிகவும் பயந்தாள்.
"என்னடா இவேன் நம்ம உயிர வாங்குறானேன்னு தப்பா நெனைக்காத வர்த்தினி; எனக்கு ரொம்ப பிடிச்ச பொண்ண பக்கத்துலயே வச்சுக்கிட்டு, ஒரு அளவுக்கு மேல என்னால நடிச்சுக்கிட்டே இருக்க முடியல. ஒண்ணு என்னைய முழுசா ஏத்துக்க; இல்ல முழுசா விட்டுடு! இந்த ரெண்டுல ஒண்ண கண்டிப்பா என்னால ஏத்துக்க முடியும்; அதுவும் இல்லாம, இதுவும் இல்லாம இருக்குற நெலைமய தான் என்னால ஏத்துக்கவே முடியல!" என்று சொன்னவனுடைய கூற்றில் அவ்வளவு நியாயம் இருந்தது.
"இப்டி திடீர்னு ஒரு முடிவு சொல்லுன்னா..... நான் என்ன ஜெயன் சொல்லட்டும்?" என்று திணறியவளின் கரம் பற்றி அவளுடைய கன்னத்தில் கைவைத்து அவளது கண்களில் தன்னுடைய பார்வையை கலந்தவன்,
திடீர்னு எல்லாம் ஒன்னைய முடிவு எடுக்க சொல்லல! நீ உன் அழுகைய நிப்பாட்டி, வினோத், அம்மாவ தாண்டி என்னையப் பத்தியும் யோசிக்குறதுக்கு வேணுங்குற நேரத்த ஒனக்கு குடுத்த பெறவு தான் ஒங்கிட்ட இதக் கேக்குறேன் வர்த்தினி! வர்ற திங்கக்கெழம வரைக்கும் நான் பேசுனத யோசி.... திங்கக்கெழம கண்டிப்பா நீ எனக்கொரு முடிவு சொல்லியாகணும் தெரியுதா? இப்ப வா கீழ போவம்!" என்று சொன்னவனிடம் மறுப்பாக தலையாட்டி,
"கொஞ்ச நேரம் கழிச்சு வர்றேன். நீ போய் சாப்டு ஜெயன்!" என்றாள் வதனி.
"ஏன் இத்தன நாள் என்னைய விட்டுட்டு ஒளிஞ்சு ஒளிஞ்சு சாப்டதெல்லாம் பத்தாதா ஒனக்கு? வாங்குறேன்; கூட வராம இப்பயும் தனியா கழட்டி உடவா பாக்குற? எந்திரி! போவம்!" என்று அவள் கையைப் பற்றி இழுத்தவனிடம் எரிச்சலுடன் உச்சுக்கொட்டியவள்,
"நீ என்னை ரொம்ப டார்ச்சர் பண்றடா கடங்காரா!" என்று முணங்கிய படி அவன் முகத்தைப் பார்த்தாள்.
"சொன்னது நல்லாவே காதுல விழுந்தது; உன்னால புதுசா நானு லவ்ஸூ பாட்டெல்லாம் கேக்க ஆரம்பிச்சுருக்கேன் தெரியுமா? என்னைய இவ்ளோ பாடுபடுத்துற என்னோட ஹெட்லைட்ட நானும்
இப்டித்தான் நல்லா டார்ச்சர் பண்ணுவேன்! நைட் சாப்ட்டுட்டு எங்கூட கடைக்கு வாரியா? திங்கக்கெழம நஸார் பசங்க ரெண்டுக்கும் பொறந்தநாளு! அவனுங்க ரெண்டு பேருக்கும் பொம்ம ஏதாவது வாங்கணும்!" என்று சொன்னவனிடம்,
"அப்போ மண்டே நீ எங்கயும் வேலைக்குப் போக மாட்டியா ஜெயன்? பசங்க பர்த்டே பங்ஷனுக்கு போகப்போறியா?" என்று சற்றே ஆர்வத்துடன் கேட்டாள் வதனி.
"நானும் போகப்போறேன். எங்கூட நீயும் வரப்போற; திங்கக்கெழம
சாயந்தரம் வேல முடிச்சு கொஞ்சம் சீக்கிரத்துல கெளம்பி வா! பொறந்த நாள் பங்ஷனுக்கு போயிட்டு, வேற எங்கயாவது போய்
நாம நம்மளோட முடிவப் பத்தி பேசிட்டு வீட்டுக்கு வரணும்!" என்றான் அவளையே பார்த்த படி.
"ஐய...யோ! இல்ல இல்ல; பர்த்டே பங்ஷன ஈவ்னிங் டைம்ல ஆரம்பிச்சாங்கன்னா, அது முடியவே எட்டு எட்டரை மணி ஆகிடும். அதுக்கு மேல சாப்ட்டு, அதுக்கு மேல வேற எங்கயாவது போயி பேசிட்டு அப்புறமா வீட்டுக்கு வர்றதுன்னா ரொம்ப டைம் ஆகிடும்!" என்று பரபரத்தவளிடம்,
"திங்கக்கெழம நைட்டு பனிரெண்டு மணியானாலும் நீ உன்னோட முடிவ எங்கிட்ட சொன்ன பிறகு தான் நாம வீட்டுக்கு வரப்போறோம்! அன்னிக்கும் ஏதாவது சொல்லி ஏமாத்த நெனைக்காத! அவலாஞ்சியில பெரிசு வீடு மாதிரி நெறய ஆள் நடமாட்டமே இல்லாத எடமெல்லாம் எனக்குத் தெரியும். சாவகாசமா அங்க தங்கியிருந்து ஒம்முடிவ சொல்லுன்னு சொல்லிட்டு ஒன்னைய அப்டியே காருக்குள்ள போட்டு தூக்கிட்டுப் போயிடுவேன்!"
"நீ தான் ஏதோ லீவெல்லாம் போட்டுக்கலாம்னு ஏற்கனவே சொன்னியே.... அத இப்ப போட்டுக்கலாம்!" என்று காஷூவலாக பேசியவனுடைய பேச்சைக் கேட்டு விக்கித்துப் போய் நின்று கொண்டிருந்தாள் வதனி.
அழகி வருவாள்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro