Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

🌻 அழகி 31

நான்கு மாதங்களில் இந்த மாதிரியான சுமூகமான வாழ்க்கைமுறையை மட்டுமே அவர்கள் சந்திக்கவில்லை. சில பல இடர்களும் நேர்ந்தது. அந்த ஞாயிற்றுக்கிழமை ஜெயன் வேலை எதுவும் இல்லாமல் வீட்டில் இருந்ததால் மேலே ஏறிச் சென்று,

"ஏங்க மேடம்! தயிர், பாலாடை, கடலமாவு, அரிசி மாவு இந்த மாதிரி
வெள்ளயா இருக்குற ஐயிட்டத்த எல்லாம் சேத்துப் பூசி என்னைய கொஞ்சம் வெள்ளையாக்கி உட்டா என்னங்க? எனக்கு குடுத்த வாக்க காப்பாத்தாம நீங்க மட்டும் அந்த பேக்கு, இந்த பேக்குன்னு ஒளிச்சு ஒளிச்சு வச்சு செஞ்சு மொகத்துல பூசிக்குறீங்க?" என்று கேட்டு அவளாகவே வீட்டில் சில பொருட்களை வைத்து தயாரித்த பேஸ்பேக்கில் கொஞ்சம் பங்கு கேட்டு அதை அவனுடைய முகத்தில் பூசிக் கொண்டு அங்கேயே படுத்திருந்தான்.

இதெல்லாம் அவளை சந்திக்க செல்வதற்கான சாக்குகளில் ஒரு வகை தான்.... இருந்தாலும் இப்போது அவள் இதெயெல்லாம் பெரிதாக கண்டுகொள்ளாமல் இருப்பதால் ஜெயன் அவன் நினைத்த நேரத்திற்கு வதனியுடைய பகுதியில் சுதந்திரமாக உலவிக் கொண்டிருந்தான். அப்போது வர்த்தினியின் இளைய சகோதரன் அவளுக்கு அலைபேசி வாயிலாக அழைப்பு விடுத்திருந்தான்.

"ஹலோ அருண்.... எப்டிப்பா இருக்க? உங்க பேமிலியில எல்லாரும் நல்லாயிருக்காங்களா?" என்று கேட்டவளிடம் தலையை தூக்கிப் பார்த்தவன் யாரென்று வதனியிடம் கண் ஜாடையால் கேள்வி கேட்டான்.

அவளுக்கு ஒரு தம்பியும், தங்கையும் இருக்கிறார்கள் என்று தெரியும்! இந்த அருண் தான் அவளுடைய தம்பி என்று தெரியாது அவனுக்கு!

"பேசுறது என்னோட தம்பி ஜெயன்!
நான் கொஞ்ச நேரம் வெளிய போயி அவர் கூட பேசிட்டு வர்றேன்!  நீ இரு!" என்று ஜெயனிடம் சொன்னவள் அவளுடைய போர்ஷனுக்கு வெளியில் சென்று மொட்டைமாடியில் நின்று கொண்டு அவளை அழைத்தவனிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

"ஓடிட்டாளா? நம்ம விஷயத்த எல்லாம் ஒண்ணுவிடாம
இவ கிட்ட தான் மொதல்ல ஓடியாந்து ஒப்பிக்கிறோம்.... ஆனா இவ மட்டும் இன்னும் இவ குடும்ப விஷயத்த எல்லாம் ரகசியமாத்தான் வச்சுக்கிட்டு இருக்கா!" என்று முணங்கியவன் முகத்திற்கு கிடைத்த பேஸ்பேக்கின் குளிர்ச்சியினால் கண்கள் சொருகி இப்போது நான் தூக்கத்திற்கு செல்லப்போகிறேன் என்ற நிலையில் இருந்தான்.

பத்து நிமிடங்களுக்குள் வீட்டிற்குள் வந்த வதனியிடம்,

"என்ன அவ்ளோதானா பேச்சு? என்ன வேணுமாம் ஒந்தம்பிக்கு? ஒண்ணுமில்லாம கூப்ட்டுருக்க மாட்டானுவளே?" என்று கிண்டல் தொனியில் கேள்வி கேட்டான்.

"இங்க பாரு ஜெயன்.... என் ரிலேட்டிவ்ஸ் கூட பேசுறது என்னோட பர்சனல்! நீ முதல்ல எழுந்திரிச்சு கீழ போ..... உன்னை முகில்ம்மா கூப்டுற மாதிரியிருக்கு பாரு!" என்றாள் அவனுக்குப் பதில் சொல்ல தெம்பில்லாத
அசதியான குரலில்.

"என்ன பத்து நிமிசம் பேசுனதுக்கே ஒம்மொத்த சத்தையும் உறிஞ்சுட்டானுங்களா? ஒன்னைய உங்கப்பன் உட்பட எவனும் நிம்மதியா இருக்க உட மாட்டாய்ங்க போலிருக்கு! அமுதாம்மா என்னைய கூப்டல வர்த்தினி; அது உன் மனப்பிராந்தியா இருக்கும்; இங்க வா..... என்ன பிரச்சனையின்னு எங்கிட்ட சொல்லு; அப்புறமா நாம சாப்ட போவோம்!" என்று கேட்டவனிடம்,
ஒன்றும் பேசாமல் அமைதியாக அமர்ந்து எதையோ யோசித்துக் கொண்டிருந்தாள் வதனி.

"என்ன ஒரே யோசன? நீயும் உங்கம்மாவும் தான் எங்கப்பா வேணாமுன்னு போயிட்டிங்களே.... அத எழுத்துப்பூர்வமா எழுதிக் குடுக்க முடியுமான்னு கேட்டானுவளா உங்கிட்ட?" என்று காலாட்டியபடி பேசியவனை முறைப்புடன் நிமிர்ந்து பார்த்தாலும் அவளது பார்வையில் ஆச்சரியம் தெரிந்தது.

"என்னா இப்டி லுக்கு உடுற? அப்ப நான் சொன்னதையே தான் அந்தப்பய கேட்டானா?" என்று சிரிப்புடன் வதனியிடம் கேட்டான் ஜெயன்.

"எனக்கு அவர் கிட்ட இருந்து ஒண்ணும் வேண்டாம்.... ஆனா என்னைய பெத்த பாவத்துக்கு அவர் பெயர என் இனிஷியலா போட அவர் சம்மதிச்சே ஆகணும்.... மத்தபடி இந்த சொத்து பிரச்சனை, நான் அவர் மகளா இல்லையாங்குற பிரச்சன, அவங்க ரெண்டு பேரும் என்னைய அக்காவா ஏத்துக்குறாங்களா இல்லையாங்குற பிரச்சன இதெல்லாம் எப்டி முடியப்போகுதுன்னே எனக்குத் தெரியல. தைரியமா இருக்குற மாதிரி நடிக்கவாவது செய்வோம்னு நெனச்சா அதுகூட முடியல!" என்று சொன்னவளை அமைதியாக பார்த்துக் கொண்டே நின்றவன் அவளருகில் வந்து அமர்ந்து
அவள் முகத்தை தன்னுடைய தோள் வளைவில் சாய்த்தான்.

"என்னை விடு; என் கையத் தவிர ஒடம்புல எங்கயும் பிடிக்கக்கூடாதுன்னு உங்கிட்ட சொல்லியிருக்கேனா இல்லையா?" என்று கேட்டவளின் முதுகை தன் கைகளால் அணைத்துக் கொண்டவன்,

"சொல்லியிருக்க; சொல்லியிருக்க! கைய தவிர வேற எங்கயும் பிடிக்கக்கூடாது; ஒன்னயவே குர்ன்னு பாக்கக்கூடாது; தலைய தடவிக் குடுக்கக்கூடாது; தோள்ல சாச்சுக்க கூடாது.....இப்டி வரிசையா ஆயிரெத்தெட்டு கூடாது சொல்லியிருக்க.... ஆனா அது ஒன்னையும் அப்டியே கேட்டுக்குறதா ஒங்கிட்ட நான் சொல்லவேயில்லயே? ஒனக்கு எப்ப என்ன செய்யணும்னு தோணுதோ அத நான் செய்வேன் வர்த்தினி..... இது எனக்கு ரொம்ப புடிச்ச வேல வேற; கொஞ்சநேரம் அப்டியே நில்லு; ஒன்னைய முதுகுல தடவிக்குடுத்தா நீயே செத்த நேரத்துல சரியாயிடுவ!" என்று அவளிடம் சொன்னவன் அவளுடைய அனுமதி என்ற ஒன்றை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அவளுடைய முதுகில், தோளில், முகத்தில் மெது மெதுவாக வருடிக் கொடுத்துக் கொண்டிருந்தான்.

"எங்கூட வர்றியா? ஒருக்க சென்னைக்குப் போயிட்டு வருவோம்! இது என் ஆளுடா; எவனாச்சு இவள அழ வச்சீங்க; அது எவன் என்னன்னுலாம் பாக்க மாட்டேன்; எவனா இருந்தாலும் தூக்கிப் போட்டு குறுக்குலே ரெண்டுமிதி தான்னு சொல்லிட்டு வருவோம்!" என்று குழந்தையிடம் பேசுவது போல அவளிடம் இந்த வார்த்தைகளைக் கேட்டான் ஜெயன்.

எப்படியும் பதிலுக்கு அவனை திட்டுவாள் என்று நன்றாகத் தெரியும்; ஆனாலும் சுணங்கிய அவளது முகத்தை ஏறிடுவதற்கே அவ்வளவு வருத்தமாக இருந்தது அவனுக்கு!

இவளுக்காக தான் ஏன் இவ்வளவு கொதிக்கிறோம், இப்படி துடிக்கிறோம் என்பது இன்றுவரை புரியாத புதிராகவே இருந்தது அவனுக்கு!

"ஏய்.... யார் கிட்ட போயி என்ன பேசுறோம்னு தெரியுதா ஒனக்கு? என்ன எப்பப்பாரு யாரையாவது அடிக்குறேன், குத்துறேன்னு சொல்லிட்டு இருக்க? என்னோட அது இதுன்னு எல்லாம்
இனிமே நீ பேசக்கூடாது பாத்துக்க! என்னோட ரிலேஷன்ஸ் கிட்ட  எப்பவும் போய் சண்டையும் போடக்கூடாது சொல்லிட்டேன்!" என்று சுள்ளென்ற குரலில் பதில் சரியாக துள்ளிக் கொண்டு வந்ததே தவிர வதனி இன்னும் ஜெயனுடைய அணைப்பில் தான் கிடந்தாள்.

முகில்ம்மாவின் மடியில் படுத்துக்கொள்ளும் போது எப்படி ஒரு பாதுகாப்பு கிடைக்குமோ அப்படித்தான் இவனுடைய நெஞ்சோடு சேர்த்த அணைப்பும்!  அனைத்து குழப்பங்களுக்கான ஒற்றை வலி நிவாரணி!

வினோத்தோடு தன் திருமணம் என்று உறுதியான பிறகு கூட  இப்படி ஒரு அணைப்பையோ, யாரும் இல்லாத சமயத்தில் ஒரு வேகமான இதழ் ஒற்றலையோ அவளிடம் அவனோ அவனிடம் அவளோ இருவருமே
எதிர்பார்க்கவேயில்லை.

இவள் தான் எனக்கானவள் என்ற உரிமையில் மோகத்தில் அத்தனை வேகம் காட்டாமல் இருந்தானோ என்னவோ? பார்க்கும் போதெல்லாம் வது, வது என்றழைத்து கண்களில் அவ்வளவு பிரியத்தை வெளிப்படுத்துவானே தவிர வதனிக்கும் அவனுக்கும் பெரிதாக உடல்ரீதியான தொடுகை, காதல் காய்ச்சல் இதெல்லாம் இருந்ததில்லை.

ஜெயன் இந்த விஷயத்தில் அவலாஞ்சியின் நீர்த்தேக்கம் போல் எப்போதும் பொங்கி புதுமோகத்துடன் தான் தயாராக நின்று கொண்டிருந்தான்.

"கார் வருது பாரு வர்த்தினி..... ரோட்ல வர்றப்ப ஓரமா நடந்து வான்னு சொல்லிட்டே இருக்கணுமா ஒனக்கு?" என்று சொல்லி அவளை இயல்பாக தோள் தொட்டு நகர்த்துவது,

"எம்மொகமும் உம்மொகம் மாதிரி ஜமுக்கு ஜமுக்குன்னு ஆகிடுச்சான்னு பாக்குறேம்மா....!" என்று ஆழ்ந்த குரலில் பேசி அவள் இரு கன்னத்தையும் நான்கு விரலால் கிள்ளிப் பார்ப்பது என்று சின்ன சின்ன சில்மிஷங்களை செய்து கொண்டிருந்த ஜெயன் இப்போதும் அவளிடம் பொறுமை காத்து நிற்கவுமில்லை. அவளுடைய எச்சரிக்கையை சற்றும் மதிக்கவுமில்லை.

இந்த கடன்காரனுடைய அணைப்பு ஏன் எனக்குப் பிடிக்கிறது? இவனோடு ஒட்டி உராய்வது எனக்கு கோபத்தை அல்லவா உண்டாக்க வேண்டும்? அவனிடம் பேசிய குட்டிப்பூனையின் உறுமல் மாதிரியான என் சப்தத்தில் கொஞ்சங்கூட அவனது செயலுக்கான மறுப்பே தெரியவில்லையே? நான் என்ன செய்ய?" என்று நினைத்த பர்வதவர்த்தினி அந்த யோசனையுடனே,

"போதும் ஜெயன்.... நான் நார்மலாகிட்டேன். என்னைய விடு!" என்று அவனிடம் சொன்னாள்.

"ஏம்மா எப்பவும் என்னைய விட்டுட்டு ஓடுறதுலயே குறியா இருக்க? என் நெஞ்சுல சாய்ஞ்சு நீ நல்லாகிட்ட சரி.... ஆனா எனக்கு ஒங்கூட இந்த அந்த மாதிரி இருக்கணும்னு என்னென்ன ஆசையெல்லாம் தோணுது தெரியுமா? இப்பத்தான் அழுகைய நிறுத்தி, பக்கத்துல வந்து சாஞ்சுக்கறது வரைக்கும் வந்துருக்க! எப்ப சட்டைய கழட்டி, என் எலும்பயெல்லாம் ஒவ்வொன்னா எண்ணிப் பாக்கப் போறியோ..... தெரியல!" என்று சொல்லி பெருமூச்சு விட்டவனிடம் இருந்து பிரிந்து திடீரென ஏதோ ஒரு வேலையின் நியாபகம் வந்தது போன்ற பாவனையுடன் வலுக்கட்டாயமாக  அவளறைக்குள் புகுந்து அறைக்கதவைச் சாற்றிக் கொண்டாள் வதனி.

"இந்தா..... மூடிட்டு கெளம்புடான்னு நம்ம கிட்ட சொல்லாம சொல்லிட்டுப் போறாள்ல நம்ம ஏஎம் அம்மா..... பாப்போம்; ஒன்னோட எழப்புல இருந்து ஒன்னைய பக்குவமா வெளிய கூட்டிட்டு வரணும்னு என் அறிவுக்கு தெரியுதுடீ செல்லமே..... ஆனா என் உணர்ச்சி தான் கெடந்து பேயாட்டம் போடுது; அதத்தா என்ன செய்யன்னு எனக்கு தெரிய மாட்டேங்குது!" என்று நினைத்தவன் கதவை மெலிதாக தட்டி அவளிடம் கிளம்புவதாக சொல்லி விட்டு அவளுடைய ஹாலிலிருந்து வெளியே சென்றான் ஜெயன்.

அழகி வருவாள்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro