🌻 அழகி 23
"என்ன மலமேல நிக்குற வர்த்தினி மேடம்.... எங்கிட்ட அத்தன அப்பு வாங்குனப்ப கூட அந்தாள் திமிரா தான் நின்னுட்டு இருந்தான்! உங்களப் பாத்ததுக்குப்புறம்
காணிக்கைங்குறான், தட்சணைங்குறான்; கையெடுத்து கும்பிட வேற செய்யுறான்? எப்டி நடந்தது இந்த மேஜிக்?" என்று புருவம் தூக்கி தன்னிடம் கிண்டலாக கேட்டவனிடம் லேசாக சிரித்தவள்,
"எடுத்து சொன்னதுனால நடந்தது! ஆவேசத்த காட்டாம, அன்ப காட்டுனதுனால நடந்தது! இப்ப போற இந்த ஆளு இனிமே இவரோட வாழ்க்கையில கண்டிப்பா திருட மாட்டாரு....!"
"ஏதாவது தப்பு செய்ய நினைக்குறதுக்கு முன்னாடியே குற்ற உணர்ச்சி அவரை குடைய ஆரம்பிச்சிடும்..... நீங்க அவர எத்தன அடி அடிச்சாலும் இந்த மாற்றத்த கொண்டு வர முடியாது. மனசு விட்டு பேசுனா தான் செய்ய முடியும்!" என்று அவனிடம் சொன்னாள்.
"இந்த எடுத்து சொல்றது, பல்பொடி போட்டு தேய்க்குறதெல்லாம் நமக்குத் தெரியாது, வரவும் வராதுங்க மேடம்! ரெண்டு அப்பு வாங்குறப்ப தான் அடுத்து இப்டி செய்யக்கூடாதுன்னு அறிவு வரும்!" என்றவனிடம்,
"அடுத்தவங்களுக்கு அறிவு வர்றதெல்லாம் இருக்கட்டும்; உனக்கு எப்ப வரப்போகுது அறிவு? ஒன்னோட பணம் மொத்தத்தையும் அப்டியே ஆட்டைய போடத் தெரிஞ்சாருன்னு எங்கிட்ட சொன்னியே அதுக்கு என்ன அர்த்தம்? வீட்டுக்கு அட்வான்ஸ குடுன்னு பணத்த வாங்கிட்டு, அத இன்னும் என்னோட பணம்னு சொன்னா..... இன்னிக்கு செய்யப்போற செலவுக்கு எங்கிட்ட இருந்து நீ பணத்த வாங்கி வச்சுருக்க அதான?" என்று கேட்டு கூர்பார்வையால் அவனை பார்த்தாள் பர்வதவர்த்தினி.
"பெறவு.... உன்னோட சொந்தக்காரவுங்க காரியத்துக்கு நீதானம்மா செலவு பண்ணனும்? அதுனால தான் ஒங்கிட்ட இருந்து பணத்த கேட்டு வாங்குனேன். காரை எடுக்க வந்துட்டு, இங்கயே இவ்வளவு நேரமா வாய் பேசிட்டு ஒக்காந்துருக்குறோம் பாரு! கெளம்ப வேண்டாமா? வா போவோம்!" என்று சொன்னவனிடம்,
"ஏய்... ஜெயன்; ஒரு நிமிஷம்!" என்று சொன்னவள் இவ்வளவு நேரமாக அவன் பின்னால் நின்று கொண்டு இருந்து விட்டு இப்போது வேகமாக நடந்து அவன் முன்பாக சென்றாள்.
"என்ன.... முன்னால வந்து வழிய மறிச்சிக்கிட்டு நிக்குறீங்க?" என்று குழம்பியவனிடம்,
"குடு!" என்று கைநீட்டினாள்.
"கையில குடுக்கவா? கன்னத்துல குடுக்கவா?" என்று கேட்டு அவளுடைய கையைப் பற்ற வந்தவனிடம், "ச்சீ....ச்சீ!" என்று முகம் சுளித்து சட்டென்று பின்னால் நகர்ந்தவள்,
"என்னை ஒரு ப்ரெண்டா பாக்கவே முடியாதா உன்னால?" என்று உலக மகா அதிசயமாக அவனிடம் பொறுமையுடன் பேசினாள்.
"ஸ்கூல்ல காலேஜ்ல படிக்கிற வயசுல இருந்தா வேணா ஒரு பொண்ண ப்ரெண்டா பாக்கலாம். எருமக்கடா மாதிரி ஆகிட்ட வயசுல போயி மனசுக்கு பிடிச்ச புள்ளய எப்டி ப்ரெண்டா பாக்க முடியும்? என்னால முடியாது. மன்னிச்சுக்கம்மா! எதயோ குடுன்னு கேட்டியே? என்னத்த குடுன்னு கேட்ட? பணமா?" என்றவனிடம் இல்லையென தலையசைத்தவள்,
"கருப்புக்கயிறு!" என்றாள்.
"பார்றா.....! கயிறு என்னோட சென்டிமெண்ட்டுன்னு வேற உங்கிட்ட சொல்லி வச்சுட்டேன்; அதுனால அத கட்டிஉடாம இவன காருல ஒக்கார வக்க கூடாதுன்னு நெனச்சுட்டியா நீயி? பயப்படாதம்மா; நான் செத்தெல்லாம் போயிர மாட்டேன்!" என்று அவளிடம் அனைத்தையும் பேசிக் கொண்டே வந்தவன் கடைசி வரி ஒன்றை மட்டும் மனதிற்குள்ளாக நினைத்துக் கொண்டான்.
"செத்துப் போவதைப் பற்றி காரில் அமரப் போகும் நேரத்தில் அவளிடம் பேசினால் ஒன்று உண்மையாகவே அவளிடம் அடி வாங்கி செத்தே போவான்.... இல்லை அவள் தன்னுடைய இழப்பை நினைத்து அழ ஆரம்பித்திருப்பாள். இது இரண்டுமே இப்போது ஜெயனுக்கு வேண்டாம் என்று தோன்றியது.
"ஏம்மா..... இந்த தங்கச்சிங்களுக்கு அண்ணன் காரனுங்க கையில ஒரு கயித்த கட்டி உட்டுட்டு காசு கேக்குங்களாமே? அந்த மாதிரி நீயும் ஏதாவது வலுவா கேப்பியா?" என்று கேட்டு அவளை ஒருமாதிரியாக குறும்பு பார்வை பார்த்தவனிடம்,
"உங்கிட்ட எதையும் உரிமையா கேட்டு வாங்குற அளவுக்கு நான் உனக்கு க்ளோஸ் ஆகல! இப்ப கயிற தர்றியா.....? இல்ல நான் நஸார் ஸார்ட்ட கேட்டு கார்ல போயி ஒக்காரவா?" என்று சொன்னவளிடம் புன்னகை முகத்துடன் தன்னுடைய பாண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த கயிறை எடுத்து அவள் முன் நீட்டினான்.
"கைய நீட்டு!" என்று சொன்னவளுடைய முன்பாக தன் வலக்கையை நீட்டியவன்,
"இங்கிட்டும், அங்கிட்டுமா மூணு ரவுண்டு சுத்தி, ஒரு இன்ச்சு கேப்பு விட்டு நல்லா இறுக்கிக் கட்டணும் தெரியுதா மேடம்?" என்று சொல்ல பர்வதவர்த்தினி அவனிடம், "நேரம்டா!" என்று சொன்ன படி அவனுடைய கையில் கயிறைக் கட்டினாள்.
"ஏய்..... நஸாரு! அங்க என்னடா நடக்குது? ரெண்டும் கையெல்லாம் புடிச்சு பேசிக்கிட்டு இருக்குதுக; நெறய பொண்ணுங்க இந்த பயபுள்ளய வேண்டாமுன்னு சொல்லிடுச்சுக; அதுனால தான் நம்ம தல இன்னும் சிங்கிளாவே சுத்திட்டு இருக்கான்னு நான் அந்த அக்கா அவங்கட்ட பேசிட்டு இருக்கும் போது சொன்னேன். அதுனால அவுகளுக்கு நம்ம கரிபுடிச்ச குண்டான் மேல லவ்வு வந்துடுச்சோ?" என்று கேட்ட மரியத்தை கேவலமாக ஒரு பார்வை பார்த்தவன்,
"ஆமாடீ! எவளும் தூக்கலையா அப்ப நான் தூக்கிக்குறேன்னு நெனைக்குறதுக்கு எம்மச்சான் இன்னும் கவர உட்டு பிரிக்காத மேக்கப்பு டப்பா பாரு! அந்தப்புள்ள இப்ப சமீபத்துல தான்டீ அவங்க குடும்பத்துல ரெண்டு பேர எமனுக்கு தூக்கிக் குடுத்துருக்கு! அதுக்குள்ள இப்டியெல்லாம் நீயி லவ்வு பத்தி எதிர்பாக்குறது தப்புடீ பட்டனு!" என்று சொன்னவனிடம்,
"சேரி! நான் ஒண்ணும் பேசல நஸாரு; நீ போயி வண்டி சாவி எடுத்துட்டு ஜெயனுட்ட குடுத்து உடு! அவங்க வெரசா கெளம்பட்டும்!" என்றாள் மரியம்.
நஸார் தன்னிடம் இருக்கும் வண்டிகளிலேயே புதிதாக இருந்த வண்டியின் சாவியை எடுத்து ஜெயனிடம் கொடுத்து விட்டு, "பத்திரம்டா!" என்று சொல்ல மரியத்திடம் விடைபெற்று விட்டு, நஸாரிடம் தலையாட்டி விட்டு வதனி ஜெயனுடன் காரில் ஏறினாள்.
"ஜெயன்.... உங்கிட்ட நான்
ஒரே ஒரு உதவி மட்டும் கேக்கணும்.... அத கேக்கட்டுமா?" என்று கேட்க ஜெயன் அவளிடம் என்ன என்பது போல அவளை ஒரு பார்வை பார்த்தான்.
"நம்ம குடுக்குற பணத்துக்கு அவங்க கிட்ட ரொம்ப தேவையிருக்குங்குற மாதிரி யாராவது இருப்பாங்கல்ல? அவங்கள போய் நாம பாக்க போகலாம்..... கோவிலுக்கு, பூஜைக்கு எல்லாம் வேண்டாம் ஜெயன்!" என்று சொன்னவளிடம்,
"அந்த மாதிரி எடத்துக்கு தாம்மா நான் ஒன்னைய கூட்டிட்டுப் போகப் போறேன்! கோவிலுக்குலா போகல. வீணா மனசு வருத்தப்படாத!" என்று சொன்னவனிடம்,
"தேங்க்யூ ஜெயன்!" என்று சொல்லி லேசாக புன்னகைத்தாள் வதனி.
அழகி வருவாள்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro