🌻 அழகி 17
"யம்மா! மறந்துட்டேன் பாரேன்! கையில கருப்புக்கயிறு இல்லாம நான் சவாரிக்கு கெளம்புனதே இல்ல! இத்தன வருசமா கருப்புக்கயிறு எனக்கு ஒரு சென்டிமெண்ட்டான சாமான்! ரொம்ப பழசாகிட்டதால இன்னிக்கு காலையில அத அவுத்தேன்.... ஆனா புதுசு கட்ட மறந்துட்டேன்! நஸாருப்பய ஷெட் வேற பக்கத்துல வந்துருச்சு! அதுனால இந்த வாட்டி மட்டும் எனக்கு நீ கயிறு கட்டி உடுறியா?" என்று கேட்டவனை சாலையில் நடந்து கொண்டே முறைத்தவள்,
"நீ என்ன இன்னிக்கு பேட்டா வாங்கிட்டா உன்னோட
ட்ரைவர் வேலைய பாக்கப்போற? இல்லல்ல.... என்னைய எங்கயோ கூட்டிட்டு சுத்தணும்னு ப்ளான் போட்டுருக்க! அதுக்கு நஸார் ஸார்ட்ட வண்டி வாங்கிட்டு வரப்போற.... அவ்ளோதான? அதுக்கு எதுக்கு ஒனக்கு நான் கயிறு கட்டி விடணும்? என்னாலலாம் முடியாது!"
"பக்கத்துல தான நஸார் ஸார் கடை இருக்கு? நான் அவரோட கடையில வெயிட் பண்றேன்! நீ மறுபடியும் உன் வீட்டுக்குப் போயிட்டு உங்க அம்மா கையால அந்த கயிற கட்டி உடச் சொல்லிட்டு அவர் கடைக்கு வா!" என்று கொஞ்சங்கூட தயவுதாட்சண்யம் இல்லாமல் சொல்லி விட்டு அவனுக்கு முன்னால் விறுவிறுவென நடந்து கொண்டிருந்தாள் வதனி.
"கையவாச்சு புடிக்க வப்போமுனு பாத்தா சீ பேன்னு சொறிநாய வெரட்டி உடுற மாதிரி வெரட்டுறாளே இவ.....? எப்டியோப்பா இன்னிக்கு பூரா இப்டியே ஏதாச்சு வாய் பேசி பேசி இவ மொகத்த தூக்கி வைக்க உடாம பாத்துக்கணும்!" என்று நினைத்த படி தன்னுடைய வேக நடையால் அவளை எட்டிப் பிடித்து அவள் பக்கத்தில் நடந்து சென்று கொண்டிருந்தான் ஜெயன்.
"எதுக்கு எம்பக்கத்துல இடிச்சுக்கிட்டே வர்ற? தள்ளி நட!" என்று சொன்னவளிடம்,
"இதுக்கும் தள்ளி நடக்குறதுன்னா நான் டால்ஃபின் நோஸ்ல தான் போய் நடக்கணும்மா!" என்றான் கடுப்புக்குரலில்.
"டால்ஃபின் நோஸ்னா என்னது?" என்று கேட்டவளிடம் பரிதாபமாக உச்சுக்கொட்டியவன்,
"ஒனக்கு இங்கிலீஷ் தெரியாதா? டால்ஃபின் நோஸ்னா டால்ஃபினோட மூக்கும்மா!" என்று அவளை ரத்தம் வராமல் கடித்து வைத்தான்.
கையில் கயிறு கட்டி விடு என்று கேட்டது, டால்ஃபின் நோஸில் சென்று விழுவேன் என்றது
இந்த மாதிரியான அவனது சமாதான வேலைகளுக்கு எல்லாம் வதனியிடத்தில் வேலையே இருக்கவில்லை.
என்னுடைய அனுமதி இல்லாமல் எப்போதும் எனக்கான நாள் எப்படி இருக்க வேண்டுமென இவன் ஏன் திட்டமிடுகிறான் என்று நினைத்து
ஏறத்தாழ அவனை மாறுகால் மாறுகையை வாங்கி விடும் அளவுக்கு கோபத்தில் இருந்தாள் வதனி.
அவளது கோபத்தை வெறியாக மாற்றுவதற்கென்றோ என்னவோ தெரியவில்லை..... காலையில் வீட்டில் இருந்து கிளம்புவதற்குள் எனக்கு குடிக்க தண்ணீர் மொண்டு வந்து குடு; ஜெர்கின் எடுத்துக் கொடு, பர்ஸை தேடிக் குடு, க்ரில் கேட்டை சாற்றி வைத்து விட்டு வா என்று சின்ன சின்ன நச்சுப் பிடித்த வேலைகளாக அவளிடம் சொல்லி அவளை செய்ய வைத்திருந்தான் ஜெயன்.
அது மட்டுமில்லாமல் அவள் மேலேயிருந்து இறங்கி வந்தவுடனே ஒரு தட்டில் நாலு இட்லிக்களையும், கொஞ்சம் வெங்காய சட்னியையும் இட்லி பொடியையும் எண்ணெய் ஊற்றிக் கலந்து அவளிடம் கொடுத்தவனை ஒருமாதிரியாக பார்த்தாள் வதனி.
"என்னா மொறைக்குற? ஒனக்கு நாலு; எனக்கு ஆறு! அமுதாம்மாவுக்கு அஞ்சு! நாங்கல்லா எங்க பங்க சாப்ட்டோம்; இப்ப நீ இத காலி பண்ணலயின்னா இந்த நாலு இக்கிலியும் வேஸ்ட்டு தான் பாத்துக்க!" என்று அவளிடம் காலை சாப்பாட்டுக்கு ஆளாளுக்கு எத்தனை இட்லி என கணக்கு சொன்ன மகனது பேச்சைக் கேட்ட முகிலமுதம் தனக்கு வந்த சிரிப்பை உதட்டிற்குள்ளேயே பதுக்கிக் கொண்டார்.
"சாப்டுறத கூட நீ சொல்லித்தான் செய்யணுமா நானு?" என்று கேட்டவளிடம்,
"வேண்டாம் செய்யாத! ஒண்ணுந் திங்காம அங்க இங்க சுத்துறப்ப பசியில மயக்கமடிச்சு உழுவு! எனக்கென்ன?" என்று கேட்டு தோளைக் குலுக்கிக் கொண்டு சென்றான் அவன்.
அவன் அவளுக்கு செய்யும் ஒரு விஷயத்தை கூட ஏற்றுக் கொள்ளாமல் அவனை முறைத்துக் கொண்டே இருந்தால் என்ன செய்வது என்ற கடுப்பு அவனுக்கு!
"டேய் அறிவுகெட்டவனே! ஏன்டா இப்டி அந்தப்புள்ள கிட்ட மல்லுக்கு நிக்குற? சொல்ற மாதிரி சொன்னா நம்ம வதனி நம்ம சொல்ற பேச்ச கேக்கும் இல்லடா வதனிம்மா.....? கொஞ்சூண்டு சாப்ட்டுட்டு வெளியில போயிட்டு வாடா! காலையில வயித்த கொலைப்பட்டினியா போடக்கூடாது தங்கம்!" என்று அக்கறைக் குரலில் அவளிடம் சொன்னார் முகிலமுதம்.
"அதென்ன இவள மட்டும் எப்பப்பாரு நீயி தங்கம், கண்ணு, செல்லமுனு கொஞ்சிக்கிட்டே இருக்க அமுதாம்மா? என்னியல்லாம் தின்னா தின்னு, திங்கலன்னா வயிறு காஞ்சுக்கிட்டு கெடம்ப! நீ இந்தப்புள்ள கிட்ட மட்டும் இப்டி பாசமா பேசறத பாத்தா எனக்கு பத்திக்கிட்டு வருது!" என்றவனை ஒரு நமுட்டு சிரிப்புடன் பார்த்தவள்,
"பத்திக்கிட்டு வருதா ஒனக்கு? நல்லா வரட்டும்! முகில்ம்மா..... இவன் தான் என் பேச்ச கேக்க மாட்டேங்குறான்; நீங்களும் ஏன் இவன் கூட சேந்துட்டு என்னைய அப்பப்ப டார்ச்சர் பண்றீங்க? எனக்கு இன்னிக்கு வெளிய போறதுக்கே பிடிக்கல. நான் வீட்லயே இருக்கேன்! என்னை என் இஷ்டத்துக்கு விடச் சொல்லுங்களேன்!" என்று சொன்னவளின் முன்னால் டம்ளரில் தண்ணீர் பிடித்து வந்து அந்த டம்ளரை நொட்டென்ற சப்தத்துடன் வைத்து விட்டு
"உன்னை அப்டியெல்லாம் விட முடியாது பர்வதவர்த்தினி! நீ எங்கூட கெளம்புற அவ்ளோதா!" என்று இறுகிய குரலில் அவளிடம் உரைத்தான் ஜெயன்.
"நீ சொல்றத எல்லாம் கடுப்பா இருந்தாலும் நான் ஏன் அத செஞ்சு தொலையுறேன்னு எனக்கே தெரியல!" என்று முணங்கியவள் அவனிடம்,
"இட்லியும் சட்னியும்
இன்னிக்கு யாரு சமைச்சது? நீ தான் செஞ்சேன்னு பொய் சொல்லாத! எனக்கு செம கோபம் வரும்!" என்று சொல்ல அவளை பக்கவாட்டில் பார்த்து முறைத்தவன்,
"நான் எப்ப சமையல் செஞ்சேன்னு உங்கிட்ட பொய் சொன்னேன்?
சாந்தாம்மா தான் இன்னிக்கு நமக்கும் சேத்து செஞ்சாங்க. உங்க அம்மா எனக்கு எவ்வளவோ செஞ்சுருக்கு! அவளுக்கும் உங்க ரெண்டு பேருக்குமா சேத்து ஒரு நாளைக்கு சோறாக்கி போட மாட்டனா ஜெயனு?"
"இன்னிக்கு சாயங்காலம் எட்டு மணி வரைக்கும் நான் உங்க வீட்ல இருந்து ஒங்கம்மாவ பாத்துக்குறேன்; அதுக்கு மேல லேட் ஆக்கிடாதீங்கன்னு சாந்தாம்மா எங்கிட்ட சொல்லி தான் அனுப்பிச்சு வச்சாங்க! அவங்களுக்கும் ஒன்னைய ரொம்ப பிடிச்சிருக்கு தெரியுமா?" என்று சொன்னவனை முறைத்தவள் அவன் தந்த தகவல்களால் முகில்ம்மாவை அவருடைய தோழி இன்றைக்கு
பார்த்துக் கொள்வார்; இரண்டு பேரும் எதையாவது பேசிக் கொண்டே பொழுதைப் போக்கி விடுவார்கள் என்று நினைத்து சற்று நிம்மதியாக இருந்தாள்.
அழகி வருவாள்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro