🌻 அழகி 16
"கடவுளே..... இவனையாவது நாம போலீஸ், கம்ப்ளையிண்ட்னு சொல்லி மெரட்டுறதாவது? எங்க மெரட்டித்தான் பாரேன் பாப்போம்னு எஸ்ஐ நம்பருக்கு டயல் பண்ணவான்னு கேட்டுட்டுல்ல நிக்குறான் எழவெடுத்தவன்......! பேசி பேசி சும்மா எரிச்சலக் கெளப்பிக்கிட்டு.... ச்சை! இவனோட பேச்சுக்கு எதிர்ப்பேச்சு பேசுற அளவுக்கு இப்போ எனக்கு மனசுலயும், உடம்புலயும் சுத்தமா வலு இல்ல.....!" என்று நினைத்த வதனி அவனிடம்,
"ஸார்.....! என்னைய பாத்தா உங்களுக்கு பாவமா இல்லையா?
சாதாரணமா எந்த குடித்தனக் காரங்க வீட்லயாவது ஒரு ஹவுஸ் ஓனர் இப்டி அடாவடியா கதவத் தொறந்துட்டு உள்ள வருவாங்களா?
இருக்குற கஷ்டம் போதாதுன்னு நீங்க வேற ஏன் ஸார் என்னைய இப்டி பாடாப்படுத்துறீங்க?என்னோட நெலைமய கொஞ்சமாவது புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க! முகில்ம்மா மாதிரி எனக்காக நீங்க கண்ணீரெல்லாம் சிந்த வேண்டாம்..... பட் ப்ளீஸ்! எனக்கு கொஞ்சம் ப்ரைவேட் ஸ்பேஸ் குடுங்க!" என்று அவனிடம் ஒரு சீற்றத்துடன் நியாயம் கேட்டு கைகூப்பி அவனது அலைபேசியை சட்டைப்பைக்குள் வைக்கச் சொன்னாள்.
பிறந்த நாளில் காலையில் இருந்து ஒரு பரிசு கூட கிடைக்காத குழந்தை மாலையில் தன்னுடைய அன்னையிடம் எவ்வாறு உதடுபிதுக்கிக் கொண்டு கண்களில் நீர் திரள நிற்குமோ அதைப் போலவே தன் முன்பு நின்று கொண்டிருப்பவளைப் பார்க்கவே மிகவும் பாவமாக இருந்தது ஜெயனுக்கு. அவனது நினைப்பையே தான் அவளும் கேள்வியாகக் கேட்டாள்.
"என்னைய பாத்தா உங்களுக்குப் பாவமா இல்லையான்னு நீ எங்கிட்ட கேக்குறது..... எனக்கு கொஞ்சம் ப்ரைவேட்டா ஸ்பேஸ் குடுங்கன்னு சொல்றதெல்லாம் சரிதாம்மா.... ஆனா நீ இங்க குடித்தனம் இருக்கன்னு உங்கிட்ட யாரு சொன்னது? எத்தன மாச அட்வான்ஸ் குடுத்து இந்த வீட்டோட குடித்தனக்காரி நாந்தான்னு சொல்ற?" என்று ஒரு கேள்வி கேட்டவனைப் பார்த்து ஒரேடியாக திகைத்துப் போனவளுக்கு அவனிடமோ முகில் அம்மாவிடமோ இதுவரை தங்கும் இடத்திற்கான அட்வான்ஸ் எவ்வளவு என்று கேட்ட நியாபகமே இல்லை.
காலையில் இருந்து நல்ல வெயிலில் ரோட்டில் கொய்யா விற்கும் வியாபரி தனக்கு முதல் போணி செய்யும் நபரைப் பார்த்து எவ்வளவு ஆசுவாசம் அடைவாரோ, அவ்வளவு ஆசுவாசம்
இந்த வீட்டில் வந்து தங்கியதும் கிடைத்தது வதனிக்கு!
அதற்கு மேல் வீட்டுத் தேவைக்கான அத்தியாவசியமான பொருட்கள், முகிலமுதத்தின் தற்போதைய நிலை, அவரின் பொறுப்பை தான் ஏற்றுக் கொள்ள நினைத்தது, தன்னுடைய கவலையை அவருடைய மடியில் சற்று மறந்தது என இந்த வீட்டின் குடித்தனக்காரி என்ற எண்ணம் தெளிவாக இருந்தாலும், தங்கி இருக்கும் வீட்டினுடைய அட்வான்ஸ் என்ற ஒரு விஷயம் வதனிக்கு இப்போது ஜெயன் நியாபகப்படுத்தும் வரையில் கூட யோசனையிலேயே வரவில்லை.
"ஐ'ம் ஸாரி ஸார்.... குடி வர்ற வீட்டுக்கு அட்வான்ஸ் குடுக்கணும்னு கூட யோசிக்காத அளவுக்கு நான் ரொம்ப டிஸ்டர்ப்டா இருந்துருக்கேன். இங்க வந்து இத்தன நாளாகியும் அட்வான்ஸ் குடுக்காதது ரொம்ப ரொம்ப தப்புதான்! அட்வான்ஸ் பணம் எவ்ளோன்னு சொல்லுங்க; அத நான் உங்களுக்கு ஒடனே குடுத்துடுறேன்!" என்றாள்.
"மாச வாடக மூவாயிரம்! மூணு மாச அட்வான்ஸ குடு!" என்று கேட்டவன் ஏதோ ஈட்டிக்கடை காரன் போல் ஒன்பதாயிரத்தை அவளிடமிருந்து வாங்கிக் கொண்ட பிறகு தான் அமைதியாக இருந்தான்.
நல்லவேளையாக வதனி நேற்று தான் கையில் சற்று பணம் இருக்கட்டுமென ஒரு பத்தாயிரத்தை எடுத்து வந்திருந்தாள். அது இவன் கேட்ட தொகையை சட்டென உடனே கொடுப்பதற்கு உபயோகப்பட்டதில் வதனிக்கு மிகவும் சந்தோஷமே!
"நீங்க கேட்ட அட்வான்ஸ நான் உங்களுக்கு குடுத்துட்டேன்ல..... இப்போ நான் இந்த வீட்டோட டெனன்ட் தான்! தயவுசெஞ்சு இப்பயாவது வெளிய கெளம்புறீங்களா?" என்று கேட்டவளிடம் தலையை கோதியவன்,
"ஏ.... மறந்துட்டேன் பாரு! அதச் சொல்றதுக்கு தாம்மா வந்தேன். நான் அவலாஞ்சி வரைக்கும் போறேன். நீயும் எங்கூட வர்ற!" என்றான் கட்டளைக் குரலில்.
"லீவு போட்டு வீட்ல இருக்கணும்னு நெனச்சது குத்தமாடா? இந்த அரப்பைத்தியம் எப்போ பாத்தாலும் நம்ம மேல வந்து விழுந்து பொராண்டிக்கிட்டு இருக்கே? அம்மாவும், வினுவும் கூட இருந்தாலாவது இவன மாதிரி கேஸுங்கள கொஞ்சம் ரிலாக்ஸ்டா சமாளிக்கலாம்! நான் மட்டுமா இவன சமாளிக்க ரொம்ப எரிச்சலா இருக்கே?" என்று நினைத்தவள் விட்ட ஒரு பெரிய மூச்சில்,
"மெல்ல.... மெல்ல! உன் ஸ்பீடான மூச்சுக் காத்துல நான் ஹில்ஸ்ல இருந்து பறந்து ப்ளைன்ஸ்ல போய் உழுவேன் போலிருக்கு!" என்று அவளிடம் சொன்னான் ஜெயன்.
"நீங்க எனக்கு எவ்ளோ ப்ரெஷர் போட்டாலும் சரி! என்னால இப்ப வெளிய வர முடியாது ஸார்!" என்று தீர்மானமான குரலில் சொன்னவளிடம்,
"எங்க அதையும் பாப்போம்!" என்று சொன்னவன், அவளுடைய அறைக்குள் அவளது அனுமதி இல்லாமல் நுழைந்து அறைக்கதவை வேறு சாற்றியிருந்தான்.
"ஐயோ...... டேய் நாசமாப் போறவனே; உனக்கு அவ்ளோதான்டா மரியாத; என் வீட்டுக்குள்ள வந்துட்டு, இப்ப என் ரூமுக்குள்ள வேற போயி ஒக்காந்துட்டு என்னடா செஞ்சுட்டு இருக்க?" என்று அவனிடம் கேட்டுக் கொண்டே தன்னுடைய பெட்ரூமின் நொட்டு நொட்டென்று வெளியில் கைவலிக்க தட்டிக் கொண்டிருந்தாள் பர்வதவர்த்தினி.
"ஏய்....... நீ உன் லிமிட்ட ரொம்ப க்ராஸ் பண்ணிட்டு இருக்க! நான் கீழ போய் முகில்ம்மாட்ட இதெல்லாம் சொன்னேன்; இப்ப இல்லன்னாலும் அவங்க கால் சரியானதுக்கப்புறமா நீ அவங்கட்ட நல்லா அடி வாங்கிருவடா!" என்று மிரட்டியவளிடம்,
"அப்ப வர்றத அப்ப பாத்துக்குறேன். இப்ப வரவா?" என்று சொல்லி விட்டு அவளுடைய சூட்கேசை கையில் எடுத்துக் கொண்டு அறைக்குள் இருந்து வெளியே வந்து நின்றான் ஜெயன்.
"யேய்...... என்ன வச்சிருக்க பெட்டிக்குள்ள? இத எங்க தூக்கிட்டுப் போற?" என்று சற்றே பதறியவளிடம்,
"பூரா உன் ட்ரெஸ்தா.... நீ தான் எங்கூட இப்ப வெளிய வரமாட்டேன்னு சொல்லிட்டல்ல? அதான் வீட்லயே இருக்குறவளுக்கு ரெண்டு நைட்டி மட்டும் போதும். ஒன்னோட மத்த ட்ரெஸ்ஸ எடுத்துட்டுப் போயி ஏதாவது ஒரு ஹோம்ல குடுத்துடுறேன்! எல்லாம் நல்லா புதுசாத்தேன் இருக்கு! வெளிய வராதவளுக்கு எதுக்கு நல்ல ட்ரெஸ்ஸெல்லாம்....?" என்று சொன்னவனுடைய பின் மண்டையை தாக்க தன்னுடைய தண்ணீர் குடிக்கும் சொம்பை கையில் எடுத்தாள் வர்த்தினி.
"இவங்கிட்ட எல்லாம் பேசுனா வேலைக்காகாதுன்னு நெனச்சு சொம்பை தூக்கிட்டியாக்கும்......? பரவால்ல அடிச்சு மண்டைய ஒட! உன்னோடது மாதிரி என்னோடதும் லைட்டா ஓப்பன் ஆகட்டும்.... பெறவு தச்சிக்கிடுவோம்!" என்று சொன்னவனிடம் அலுப்பான குரலில்,
"சூட்கேஸ அப்டியே வச்சுட்டு கீழ எறங்கிப் போ.... இல்லன்னா கண்டிப்பா ஒம்மண்டைய ஒடைப்பேன்" என்று அவனை பயமுறுத்தி வாசல்புறமாக கைகாட்டினாள்.
"செத்தாலும் பரவால்ல! ஒன்னைய வெளிய கூட்டிட்டுப் போவாம, இங்கருந்து நான் ஒரு அடி நகர மாட்டேன்!" என்று உறுதியான குரலில் அவளிடம் உரைத்தான் ஜெயன்.
"கடவுளே..... ஒங்கூட இப்டி இங்க நின்னுக்கிட்டே ஆர்க்யூ பண்றத விட, நீ கூப்டுற எடத்துக்கே வந்து தொலையுறேன் வாடா!" என்றவளிடம்,
"ம்ம்ம்.... அப்டி சட்டுன்னு ஈஸியான முடிவெடுத்துட்டுப் போயிட வேண்டியதுதான? இப்பத்தான் நீ
நல்ல பொண்ணு! நான் ஹால்லயே ஒக்காந்துருக்கேன். பதினைஞ்சு நிமிஷத்துல குளிச்சு பொட்டிக்குள்ள இருக்குற ஒரு நல்ல ட்ரெஸ்ஸ போட்டுக்கிட்டு வா பாப்போம்!" என்றவனிடம்,
"பதினைஞ்சு நிமிஷத்துல நான் கீழ வர்றேன். அப்டி நான் வரலையின்னா நீ மறுபடியும் மேல ஏறி வந்து என் உயிர வாங்கு! பட் இப்ப வெளிய போ!" என்று சொன்னவளை ஏற இறங்கப் பார்த்தவன்,
"கரெக்டா பதினைஞ்சு நிமிஷம்!" என்று அழுத்தி சொல்லி விட்டு அங்கிருந்து நகர்ந்தான்.
"சனியன் புடிச்சவன், வீம்பு பிடிச்சவன், திமிரு பிடிச்சவன், கொழுப்பு பிடிச்சவன், எமகிங்கரன்,
என்று ஏகப்பட்ட வசைமொழிகளால் அவளை தனக்குப் பிடிக்கிறது என்று சொன்னவனை குளிப்பாட்டிய படி தானும் குளித்து விட்டு அவன் அழைத்த இடத்திற்கு செல்வதற்காக இயந்திரகதியில் தயாராகி வந்தாள் வதனி.
அழகி வருவாள்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro