கற்பனை 9
"கரு- கண்டுபிடிச்சிட்டேனே, அது அவங்க பேரு கூட ஏதோ நடுவுல வர்ர ரெண்டு எழுத்தும் அ,ஆ இப்படின்னு வரும்"
"ஆகாஷனா-ஓய் என்ன கலாய்க்கிறியா"
"கரு-என்னது ஓய் ஆ. என்னம்மா மரியாதையெல்லாம் குறையுது"
"ஆகாஷனா-ஆமா பொண்னுங்க கிட்ட கடலை போட டிரை பண்ற உங்கள மாதிரி ஆளுங்கள வேற என்ன சொல்லுவாங்க.ஓய்னு சொன்னதே பெருசு"
"கரு- ஹல்லோ, முதல்ல நீங்க பொண்ணான்னே எனக்கு தெரியாது.இதுல கடலை போட்டுட்டாலும்"
"ஆகாஷனா- என்ன ரைட்டர் சார் முன்னாடிலாம் ஒரு வார்த்தை டைப் பண்ணவே கீபோர்ட் தந்தி அடிக்கும்,இப்போலாம் செம்ம போர்ம்ல இருக்கீங்க போல"
"கரு-ஒரு உண்மைய சொல்லட்டா ஷனா.எனக்கு லைப்ல கேர்ல் ப்ரெண்ட்ஸே இருந்தது இல்ல.படிக்கிறப்போ வேலை செய்ற இடத்துலன்னு சில பொண்ணுங்க இருக்காங்க .ஆனா யாரும் எங்கிட்ட நீங்க பேசுற மாதிரி இவ்வளவு உரிமையா பேசினது இல்லைங்க"
"ஆகாஷனா-அது எனக்கு நீங்க ஸ்டார்ட்ல மெசேஜ் பண்ணும் போதே தெரிஞ்சது"
"கரு- என்ன தெரிஞ்சது?"
"ஆகாஷனா-நீங்க ஒரு ஆஞ்சனேயர் பக்தன்னு.ஹஹா"
"கரு-சரி ஷனா எனக்கு அப்டேட் எழுதனும்.எப்படி கண்டினியூவா எழுதுறதுன்னு யோசிச்சிக்கிட்டு இருந்தப்போதான் உங்க கிட்ட இருந்து மெசேஜ் வந்தது.உங்க கிட்ட பேசுனதுல எனக்கு எழுத ஐடியா கிடைச்சிது.நான் எழுதிட்டு வரேன், பாய்"
"ஆகாஷனா-ஓக்கே ஜி பாய்.பெஸ்ட் ஆப் லக்"
-----------------
ஷனா-6
15 நிமிடங்களில் அவர்களிடம் வந்த அஜய் எதுவும் பேசாமல் தனது மொபைலை வாங்கியவன்
"ஆமா என் மொபைல் உங்களுக்கு எப்படி கிடைச்சது" என்று கேட்க ஆகாஷனாவோ
"அது அது....இல்லை பஸ்ஸ விட்டு இறங்கும் போது கீழ கிடைச்சது"என்றவளை அஜய்யோ முறைத்து
"ஓஹ்ஹ்.,அப்போ இந்த மொபைல கண்டதும் அது என் மொபைல்னு உனக்கு எப்படி தெரிஞ்சது" என்று இன்வஸ்டிகேசன் ஆபீசர் போல கேள்வி கேட்டவனை என்ன பதில் சொல்வது என்று புரியாமல் முழித்துக்கொண்டு இருந்தவள் நிலமையை சமாளிக்கும் பொருட்டு
"என்ன அஜய், உன்னோட காஸ்ட்லி மொபைல் மிஸ் ஆகிட கூடாதுன்னு எடுத்து வந்து கொடுத்தா இவ்வளவு கேள்வி கேட்குற.உன் மொபைல வித்து எல்லோருக்கும் சிக்கன் ப்ரை வாங்கி கொடுதிருந்தாதான் சரி.சும்மா உங்கிட்ட மொபைல கொடுக்க வந்து நீ ஏதோ சிபிஐ ஆபீசர் மாதிரி எவ்வளவு கேள்வி கேட்குற" என்று தன் வழமையான நக்கல் தொனியில் பேச ஆத்திரம் கொண்ட அஜய்
"அடிச்சிடுவேன் உன்ன.என்ன பழிவாங்க நீ கிஷோர் கிட்ட பேசின எல்லாமே நேத்ரா என்கிட்ட அன்னைக்கே கால் பண்ணி என்ன மீட் பண்ணனும் சொன்னவ, நாங்கமீட் பண்ணப்போ முழுசா உன் ப்ளான சொல்லிட்டா.நீ என்ன லூசா.அவன்கிட்ட போய் ஹெல்ப் கேட்டிருக்க.அவனுக்கு ஊருல இருக்குற எல்லா கெட்ட பழக்கமும் இருக்கு, ஏன் பொண்ணுங்க சகவாசம் கூட இருக்கு.இதுல நீஙக் ரெண்டு பேரும் போய் அவன்கிட்ட ஹெல்ப் கேட்டிருக்கீங்க.ரெண்டு பேரும்னு சொல்ல முடியாது நீதான் போய் கேட்டிருக்க.ஒரு வேலை நீங்க வீடியோ எடுக்குறப்போ மாட்டியிருந்தீங்கன்னா உங்க நிலமை என்ன.உங்க அம்மா அப்பாக்கு எவ்வளவு அவமானம்" என்று மூச்சிவிடாமல் பேசியவனை கண்கொட்ட மறந்து பார்த்தவள்
"சாரி அஜய், நாங்க...சாரி சாரி நான் பண்ணது தப்புதான்.ஏதோ நீங்க என்ன அடிச்சிட்டீங்கன்னு புத்தி மழுங்கி போய் இப்படி பண்ணிட்டேன்.என் வாழ்க்கைல முதல் முதலா என்ன அடிச்சது நீங்கதான்.அதான் என்னால தாங்கிக்க முடியல .அதான் இப்படி யோசிக்காம லூசு மாதிரி பண்ணிட்டேன்.ப்ளீஸ் மன்னிச்சிடுங்க"என்று கூற அவள் மீதிருந்த கோவம் குறைந்த அஜய் முகத்தில் இருந்த இறுக்கத்தை குறைத்து
"சரி உங்கள யாரும் பார்க்க முன்னாடி நீங்க உங்க ரூமுக்கு போங்க"என்று அவர்களின் ரூமுக்கு அனுப்பி வைத்தான்.
இவர்கள் சுமூகமாக பேசி செல்வதை கண்ட ஒரு உருவம் கண்களில் கோபத்துடன் வேட்டைக்கு தயாராகும் ஓநாயை போல கண்களில் கோபம் கொப்பளிக்க தனது மொபைலில் ஆகாஷனாவும் நேத்ராவும் பெண் லெக்சரர்களின் அறையை வீடியோ எடுத்ததை பார்த்துக்கொண்டு மனதுக்குள்
'என்னடி ரெண்டு பேரும் சமாதானம் ஆகிட்டு போறிங்கலா.உங்க ரெண்டு பேருக்கும் நான் யாருன்னு காட்டுறேன் ' என்று நினைத்துக்கொண்டது.சற்று நேரம் கழித்து ஆகாஷனாவின் மொபைலுக்கு கால் செய்த கிஷோர்
"ஹேய் பேபி, வீடியோ ரெடியா? இன்னும் 10 நிமிசத்துல நான் வர்ரேன்.நீ அஜய்யோட மொபைல எடுத்து வை "என்று கூற பதறிய ஆகாஷனா
"இல்ல கிஷோர் நானும் நேத்ராவும் மொபைல்ல வீடியோ எடுக்கலாம்னு போனப்போ அஜய்யோட மொபைலுக்கு ஒரு கால் வந்திச்சா.அவன் வேற ஒரு மாதிரி வித்தியாசமான ரிங்க்டோன் போட்டிருந்திருக்கான்.எங்க பக்கமா வந்த அஜய்யோட ப்ரெண்டு அஜய் மொபைல் எப்படி எங்க கைலன்னு கேட்டு மொபைல வாங்கிட்டு போயிட்டான்.நாங்க மொபைல் பஸ்ல கிடந்ததுன்னு சொல்லி ஒரு மாதிரி சமாளிச்சிட்டோம்" என்று தட்டு தடுமாறி ஒரு பொய்யை கூற கிஷோரோ
"என்ன பேபி நீ, நாந்தான் அவன் போன சைலண்ட்ல போட்டிருந்தேனே"என்று கேட்க
"ஹேய் என்ன நீ சும்மா சும்மா பேபின்னு சொல்ர.கிஷோர் நான் முன்னடியே சொல்லிருக்கேன் இந்த அட்வாண்டேஜ் எடுத்துக்குற வேலைலாம் வேணாம்னு.கால் மீ ஆகாஷனா ஓக்கே" என்று படபட வென்ரு பேச அமைதியாக இருந்த கிஷோர்
"சரி நான் கேட்டதுக்கு பதில சொல்லுங்க மிஸ் ஆகாஷனா" என்று அவளது பெயரை அழுத்திக்கூற என்ன கூறியும் கிஷோர் அவன் ஆரம்ப புள்ளிக்கே வர ஆகாஷனாவுக்கு என்ன கூறுவது என்றே புரியவில்லை.இருந்தாலும் சுதாகரித்தவள்
"கிஷோர் லீவ் இட், அதான் ப்ளான் சொதப்பிடிச்சே.இனிமே இத பத்தி பேச வேண்டாம்.அப்புறம் முக்கியமா இதுக்கு அப்புறம் எங்க கூட பேச வேண்டாம் " என்று கூற கோவம் கொண்ட கிஷோர்
"என்னடி பெரிய .......மாதிரி பேசுற.உனக்கு தேவைன்னா யூஸ் பண்ணிக்கிறதுக்கும் தேவை இல்லைன்னா தூக்கி போடவும் நான் என்ன டிஷ்யூ பேப்பரா.இப்போ நான் சொன்ன மாதிரி பண்ணல உன்ன என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது. நான் சும்மாவே கெட்டதுதான் பண்ணுவேன்.இதுல கோவத்துல வேற இருக்கேன்.அப்புறம் ரொம்ப தப்பாகிடும் ஆகாஷனா "என்று மிரட்டும் தொனியில் கூற ஆகாஷனாவோ
"சரி இப்போ என்ன பண்ணனும்னு சொல்ர" என்று கேட்க அவனோ
"இங்க பாரு இன்னைக்கு நைட்டு நான் அஜய்ய எப்படி சரி உன் ரூம்கு வர வப்பேன்.அவன் வந்ததும் நீ அவன் உன்கிட்ட தப்பா நடக்க டிரை பண்ணான்னு கத்தி கலாட்டா பண்ணு .அது போதும் எனக்கு " என்று கூற கிஷோரின் கீழ்த்தரமான என்னத்தின் படி தன்னால் நடக்க முடியாது என்று உணர்ந்த ஆகாஷனா
"அது முடியாது கிஷோர்.உன்னால முடிஞ்சத பார்த்துக்க" என்று கூற சிறிது நேர அமைதிக்குப்பின்
"பேபிமா உனக்கு ஒரு வீடியோ மெசேஜ் அனுப்பிருக்கேன் பாரு செல்லம்" என்று நக்கலாக கூறியவன் காலை கட் செய்தான்.அவன் அனுப்பிய வீடியோவை பார்த்த ஆகாஷனாவுக்கு மூச்சே அடைத்தது.அதில் அவளும் நேத்ராவும் தங்கள் லெக்சரர்களின் அறையை வீடியோ எடுப்பதை மறைவாக இருந்து எடுத்த வீடியோ இருந்தது.அதைப்பார்த்துக்கொண்டிருக்கும் போதே கால் செய்த கிஷோர்
"என்ன பேபிமா வீடியோ க்ளாரிட்டி எப்படி இருக்கு.ஐபோன் XS ல எடுத்தது செல்லம்.க்ளாரிட்டி பக்காவா இருக்கும்.அதுலயும் உன் பேஸ் செம்ம ஷைனிங்கா இருக்குப்பா"என்று கூறியவனை ஆகாஷனா
"இதை வெச்சு என்ன பண்ண முடியும் உன்னால" என்று கேட்க அவனோ நக்கலாக
"என்ன டார்லிங்க் இப்படி சொல்ர, இத நான் யூடியூப்ல போட்டு 'பிரபல தொழிலதிவரின் மகள் கல்லூரி சுற்றுலா சென்ற இடத்தில் விரிவுரையாளர்கள் மற்றும் சக மாணவிகள் ஆடை மாற்றுவதை படம்பிடித்த போது வசமாக சிக்கிக்கொண்டார்' அப்படின்னு வரும் செல்லம்.நீ என்ன சொல்ர"என்று கேட்க தனது பழிவாங்கும் அவசர புத்தியால் தான் சரியாக கிஷோரிடம் சிக்கிக்கொண்டதை நினைத்து ஒரு கனம் கலங்கிய ஆகாஷனா அடுத்து என்ன செயது என்று யோசித்துக்கொண்டிருக்க கிஷோரோ
"என்ன டார்லிங்க், என்ன கடுமையா யோசிக்கிற.ஒரே கல்லுல ரெண்டு மாங்கா அடிக்க நான் ப்ளான் போட்டா நீ ஒரு மாங்கா கூட அடிக்க விட மாட்டேங்குறியே .இங்க பாரு இப்போ உனக்கு நான் ரெண்டு ஆப்சன் கொடுக்குறேன்.இதுல நீ ஒன்ன செஞ்சா கூட அந்த வீடியோவ நான் டெலீட் பண்ணிடுவேன். இல்லைன்னா...." என்றவனை அவள்
"சரி என்னன்னு சொல்லு" என்று கூறியவள் அவன் கூறிய ஆப்சன்களை கேட்டவளுக்கு நெஞ்சு படபடவென அடித்துக்கொண்டது.
-----வருவாள்------
ஹாய் ப்ரென்ட்ஸ், பிரடிலிபில என்னோட முதல் கதையான "என் உயிரினில் நீ" அப்டேட் பண்ணிகிட்டு இருக்கேன்.அந்த பக்கமே போகமாட்டேன்னு சொன்னவன் எதுக்குட அங்க அப்டேட் பண்றான்னு எல்லோரும் யோசிக்கிறது தெரியுது.
மற்ற எழுத்தாளர்களின் கதையை நான் குறிப்பிட்டு அதை படிக்கும்படி கூறுவது என் மீது அக்கறை கொண்ட சிலருக்கு பிடிக்கவில்லை.அவர்கள் கூறும் காரணம் இப்படி நான் மற்றவர்களின் கதையை குறிப்பிடுவதால் என் கதைக்கு விளம்பரம் செய்வது போன்று மற்றவர்கள் நினைக்க கூடும் என்பது.இது கூட ஒரு வகையில் நியாயமான கருத்துதான்.அதனாலேயே எனக்கு என்னவென்றே அறியாத பிரடிலிபியில் அப்டேட் போட ஆரம்பித்தேன்.ஒரே ஒரு வாசகர் அந்த கதை வாட்பெட்டில் இருப்பதாக கூறினார்.இங்கு இருக்குன்ற எனக்கு தெரிந்த நூற்றுக்கணக்கானவர்களில் 3 பேர் மாத்திரமே என்னை அங்கு அடையாளம் கண்டு கொண்டனர்.ஏதோ கடவுள் புன்னியத்தில் 3 கதை எழுதிய நமக்கே புது இடத்தில் இந்த நிலமை என்றால் புது எழுத்தாளர்களின் நிலமை கொஞ்சம் கஷ்டமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.எனவே தொடர்ந்தும் நல்ல கதைகள் மற்றும் புதிய எழுத்தாளர்கள் யாருமிருந்தால் எனக்கு இன்பாக்ஸ் பண்ணவும்.சேவை தொடரும்...ஹிஹி
----------------
manjulayazh எழுதிய "என்னை மாற்றும் காதலே" என்னுடைய லீவ் நாட்களில் நான் பகலில் தூங்கும் தூக்கத்தை கூட தொலைத்து படிக்க தூண்டிய கதை.அவ்வளவு அழகாகவும் நேர்ந்த்தியாகவும் எழுதியுள்ளார்கள்.ஒரே நாளில் 25 அப்டேட் படித்தேன்.இது என்னுடைய புது ரெக்கோர்ட்.ஹிஹி..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro