கற்பனை 6
ஷனா-4
நேத்ரா ஆகாஷனாவின் தாயுடன் பேசியதில் இருந்து இனி எப்படி அவளை எதிர்கொள்வது என்று தெரியாமல் முழித்துக்கொண்டிருந்தாள்.அவளது மொபைல் அலற எடுத்தவள் அதில் ஆகாஷனா என்று வர பதற்றத்துடன் காலை அட்டெண்ட் செய்ய
"எருமை மாடு, என்னடி பண்ற.இவ்ளோ நேரமா கால் அடிச்சிக்கிட்டேன் இருக்கேன். நீ எவன் கூட டூயட் பாடிகிட்டு இருக்க" என்று எகிற என்ன கூறுவது என்று தெரியாமல் அமைதி காத்தா நேத்ரா
"ஆகாஷனா" என்று கூற அவள் குரலில் தெரிந்த ஒரு பொழிவிழப்பில் ஆகாஷனாவோ
"ஹேய் நேத்ரா என்னாச்சிடி ,ஏதும் சுகமில்லையாடா" என்று பதறியவளை என்ன கூறுவது என்று தெரியாமல் இருக்க ஒரு முடிவுக்கு வந்தவளாய் நேத்ரா
" ஹேய் அதெல்லாம் ஒன்னுமில்லடி ,ஆமா நீ ஏன் இவ்வளவு டென்சனா இருக்க" என்று கூற ஆகாஷனாவோ
"எனக்கு அந்த டோக் (dog) அஜய்ய பழிவாங்கனும்.இத்தனை வருசத்துல என்ன யாருமே கை நீட்டி அடிச்சதில்ல.இவன் என்ன அடிச்சிட்டான்" என்று பட பட பொரிந்தவளை நேத்ரா
"கூல் பேபி, இப்போ எதுக்கு நீ இவ்வளவு டென்சன் ஆகுற.ப்ரீயா விடுடா ,அது மட்டுமில்லாம அவங்க அப்பா பெரிய அரசியல்வாதி வேற .நம்ம ஏதும் செய்ய போய் அது கடைசில பெரிய பராப்ளத்துல முடிஞ்சிடப்போகுது" என்று கூற ஆகாஷனாவோ
"ஹேய் அவன் யாரு ,அவங்கப்பன் யாருன்னு எல்லா டீடைலும் தெரிஞ்சிட்டுதான் உன்கிட்ட பேசுறேன்.உன்னால எனக்கு ஹெல்ப் பண்ண முடியுமா முடியாதா?" என்று கேட்க சற்றுமுன் ஆகாஷனாவின் தாய்க்கு தான் செய்து கொடுத்த சத்தியம் நினைவுக்கு வர உடனே நேத்ரா
"சரிடா, நீ என்ன சொல்ரியோ அதையே பண்ணலாம்.கண்டிப்பா உங்கிட்ட ஏதோ ப்ளான் இருக்குன்னு தெரியுது.என்னான்னு சொல்லு.அத எக்ஸிகியூட் பண்ணலாம் " என்று கூற அதற்கு
"அதற்கு நம்ம முதல்ல நம கிஷோர் கிட்ட ப்ரெண்ட்டாகனும்.இவன் அப்பா ஸ்டேட்னா அவன் அப்பா செண்ட்றல்டி. கிஷோர வெச்சே நான் அஜய்யோட கொட்டத்த அடக்க போறேன்" என்று ஆகாஷனா கூறியதை கேட்டு நேத்ரா ஆடிப்போனால். அஜய் ஆகாஷனாவை அடித்தது தவறுதான் .இருந்தாலும் அதற்காக கெட்ட பழக்கங்களின் மறு உருவமான கிஷோரிடம் உதவி என்று செல்வது நேத்ராவுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை.
"என்னடி சொல்ர, அந்த கிஷோர் ஒரு பொம்பள பொறுக்கிடி.லாஸ்ட் வீக் லேடி லெகசரர் கிட்டயே வம்பிழுத்திருக்கான்.இப்படிப்பட்ட ஒருத்தன்கிட்ட நம்ம கண்டிப்பா உதவி கேட்டு போகனுமா ?" என்று கேட்க ஆகாஷனாவோ
"மச்சி ரொம்ப யோசிக்காதா ஓக்கே.அவன எப்படி ஹேண்டில் பண்ணனும்னு என்கிட்ட ப்ளான் இருக்கு. நீ ரொம்பல்லாம் பயப்பட வேணாம்டி" என்று கூற நெத்ராவோ அரை மனதுடன்
"சரிடி, நீ எது பண்ணாலும் நான் உன்கூடவே இருப்பேன் சரியா " என்று கூற
"உம்ம்ம்ம்மா, ஐ லவ் யூடி செல்லம்.எனக்கு தெரியாதா என் நேத்ரா என்கூடதான் இருப்பான்னு" என்று கூற நேத்ரா புன்னகைத்தவள் மனதுக்குள்
'உன் கூட நான் எப்போமே இருப்பேண்டி உன்ன சந்தோசமா பார்த்துக்குவேன் ' என்று தனக்குள்ளேயே பேசிக்கொண்டாள்.
இரண்டு வாரம் வேகமாக கடக்க கிஷோருடன் எப்படியோ பேசி அவனுடன் ஆகாஷனா அறிமுகமாகிக்கொண்டாள்.பார்ப்பதற்கு செப்புச்சிலை போல இருக்கும் ஆகாஷனாவின் அறிமுகம் அவனுக்கு கிடைத்ததில் அவன் மிகவும் சந்தோசமாக இருந்தான்.அவனது வட்டத்துக்குள் கொண்டு வர வேண்டும் என்று நினைத்து அவனால் இன்று வரை அதை செய்ய முடியாமல்ல் இருந்த ஒரு சிலரில் ஆகாஷனாவும் ஒருத்தி.இருந்தாலும் காலம் அவனுக்கு கை கொடுத்ததை எண்ணி அவன் மிகவும் சந்தோசப்பட்டான். ஆடு தானாகவே சென்று கசாப்பு கடைக்காரனிடம் தலையை கொடுப்பது போல்.
ஆகாஷனாவும் நேத்ராவும் பேசிக்கொண்டிருக்க அவ்விடத்துக்கு வந்த கிஷோர்
"ஹேய் ஷனா, என்ன பண்றீங்க ரெண்டு பேரும் " என்று கேட்டு நேத்ராவின் அருகில் அமர வர அவள் சற்று நெளிந்து தள்ளி உட்காரவும் அதை கண்ட கிஷோர்
"என்னப்பா உன் ப்ரெண்டுக்கு என்ன பிடிக்கல்ல போல" என்று கேட்ட கிஷோர் அவள் தோழில் கை போட முயன்றவனை அவள் முறைக்க ஆகாஷனா
"ஹேய் கிஷோர் டோண்ட் டேக் அட்வாண்டேஜ்.அவ கொஞ்சம் ரிசேர்வ் டைப்" என்று கூற அவனோ
"அப்போ நீ ப்ரீ டைப்பா பேபி" என்றவனை அவள்
"பார்த்தியா உன்கிட்ட ப்ரெண்ட்லியா பழகினா இப்படி பேசுற " என்றவள் மேலும் தொடர்ந்து
"இங்க பாரு கிஷோர் நான் உன்கிட்ட க்லோசா பழக காரணம் எனக்கு அஜய்ய பழி வாங்கனும் ,எப்படி எங்கன்னு இன்னும் டிசைட் பண்ணல.அவன் பெரிய பொல்டீசியனோட மகன்.அதான் எனக்கு உன்னோட ஹெல்ப் வேணும்.அதுக்குதான் நான் உன்கிட்ட பழகினேன்.ஆனா நீ பழகி 10 நாள் கூட ஆகல அதுக்குள்ள நீ இப்படி பிகேவ் பண்ற.சரி உன்கிட்ட நான் ஏன் பேசினேன்னு சொல்லிட்டேன்.இதுக்கு மேல எங்களுக்கு ஹெல்ப் பண்றதும் பண்ணாததும் உன் விருப்பம் " என்று கூற கொஞ்ச நேரம் யோசித்தவன்
"சரி ஷனா நான் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன்.இனிமே நான் ஏதும் மோசமா உங்ககிட்ட பிகேவ் பண்ண மாட்டேன்.ஏன்னா எனக்கும் அவன் பேர டெமேஜ் பண்ணி அவன பழி வாங்கனும்.லெட் அஸ் பி ப்ரெண்ட்ஸ் பார் ரிவஞ்ச் (பழிவாங்குறதுக்காக நண்பர்கள் ஆகலாம்) "என்று கூற புன்னகைத்த ஆகாஷனா
"நெக்ஸ்ட் வீக் செகண்ட் இயர் அண்ட் தேர்ட் இயர் பசங்க எல்லோரும் இண்டஸ்ட்றியல் டிரைனிங்க்காக டெல்லிக்கு போறோம்ல.அங்க வெச்சி அவன என்ன சரி பண்ணலாம்" என்று கூற ஆகாஷனாவோ கிஷோரிடம்
"ஆமா உங்கிட்ட ஏதும் பளான் இருக்கா?" என்று கேட்க அவன் கூறிய ப்ளானை கேட்டு தோழிகள் இருவரும் அதிர்ர்சியாகினர்.அவர்களின் அதிர்ச்சியை கண்ட கிஷோர்
"சரி ரெண்டு பேரும் யோசிச்சி சொல்லுங்க.இது கொஞ்சம் ரிஸ்க்தான் .ஆனா சரியா பண்ணோம்னா அவன செம்மயா பழிவாங்களாம் " என்று கூற இவர்கள் இருவரும் யோசித்து கூறுவதாக கூற அவனோ மனதுக்குள்
'என்னயாடி ரெண்டு பேரும் யூஸ் பண்ணிக்க பார்க்குறீங்க.உங்க ரெண்டு பேரயும் காலத்துக்கும் என்கிட்ட கெஞ்சுற மாதிரி பண்ணல என் பேரு கிஷோர் இல்லடி' என்று என்னியவன் அவ்விடத்தை விட்டு சென்றான்.
"அவன் சென்றதும் நேத்ரா
"இங்க பாரு இவன் சொல்ர மாதிரி பண்ணா நம்ம ரெண்டு பேரோட பேரும் கெட்டு போக சான்ஸ் இருக்கு.யோசிச்சி பண்ணு" என்று கூற ஆகாஷனாவோ
"இங்க பாரு நேத்ரா, எனக்கு இதுதான் சரியா இருக்கும்னு தோனுது.கொஞ்சம் ரிஸ்க்தான் .ஆனா சரியா பண்ணோம்னா இதை விட சரியா அவன பழிவாங்க முடியாது " என்று கூற நேத்ராவோ என்ன கூறுவது என்று புரியாமல் குழம்பி நின்றால்.
-------------வருவாள்--------
தனது அப்டேட்டை பதிவிட்ட பின் ஆகாஷனாவின் வோட்டுக்காக காத்திருந்தவனுக்கு பதில் என்னமோ பூச்சியமாகவே இருந்தது.அரை மணி நேரம் காத்திருந்தவன் அவளின் வருகையை கானாமல் தன்னுடைய வேலையை பார்க்க சென்றுவிட்டான்.
-------
வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த நந்தினியை அவள் தாய் எழுப்பி
"நந்தினி ,சந்தியா வந்திருக்காடா"என்று கூற அவளோ தூக்க கலக்கத்தில்
"அவதான் வாரத்துல 4 நாள் இங்கதான் வர்ராலேமா.இதுல என்ன புதுசா" என்று கேட்க
"இல்லம்மா அவ ஹாஸ்டல்ல ஏதோ ப்ராப்ளம் ஆச்சாம்.அதான் இருக்குற 3 மாசமும் இங்கேயே தங்கிக்கவான்னு கேட்குறா.நம்ம் வீட்டுல இருகுறது 2 ரூம்தான்.ஒன்னுல நீ இருக்க.இன்னொன்னுல நாங்க இருக்கோம்.இப்போ அந்த பொண்ணு நிரந்தரமா தங்க வந்தா கொஞ்சம் இடப்பற்றாக்குறை வருமோன்னு தோனுது.தற்காலிகமா வந்து தங்கும் போது ப்ராப்ளம் இல்லடா.ஆனா அவளோட சாமான் எல்லாம் எடுத்து வந்தா எப்படி சமாளிக்கிறதுன்னுதான் யோசிக்கிறேன்" என்று கூறிய தன் தாய்க்கு பதில் அளிக்க முன் அங்கு வந்த சந்தியா
"என்ன ஆண்ட்டி இப்படி சொல்ரீங்க.உங்களுக்கு நான் இங்க தங்கிறது பிடிக்கலன்னா நேரடியா எங்கிட்டயே சொல்லிருக்கலாமே.எதுக்கு இப்படி நந்தினி கிட்ட பேசிகிட்டு இருக்கீங்க" என்று கேட்க அவள் கூறியதை கேட்டு பதறிய சென்பகம்
"அப்படி இல்லம்மா நீ சொகுசா வளர்ந்த பொண்ணு அதான் இங்க உனக்கு வசதி பத்தாதுன்னு..." என்று இழுக்க
"அப்போ இவ்வளவு நாளா என்ன உங்க பொண்ணு மாதிரின்னு சொன்னதெல்லாம்..ஓஹ் பொண்ணு மாதிரிதானே.பொண்ணு இல்லைல்ல" என்று கூற கோபம் கொண்ட சென்பகம்
"ஏய் என்ன விட்டா ரொம்ப ஓவரா பேசுற.இனிமே நீ இங்கதான் தங்குற .இது என்னோட கட்டளை" என்று கூற
"உங்கள் கட்டளையே எங்கள் சாசனம்" என்று நந்தினியும் ,சந்தியாவும் கோரசாக கூற சென்பகம் சிரித்துவிட்டார்.உடனே சந்தியா
"ஆண்ட்டி எங்கிட்ட பெருசா. ஏதும் திங்க்ஸ்லாம் இல்லை.என்னோட டிரஸ் மட்டும்தான்.வேற எதுவுமே இல்லை.அத நாங்க அட்ஜஸ்ட் பண்ணிக்கிவோம் .3 மாசம் தானே யூ டோண்ட் வொர்ரி" என்று கூற அவரும் திருப்தியுடன் " சரி" என்று கூறி தன் வேலைகளை பார்க்க்க செல்ல முற்பட்டவரை சந்தியா
"ஓய் சென்பா.., இன்னைக்கு வீட்டுக்கு புது ஆளு வந்திருக்கேன்.சமையல் சூப்பரா இருக்கனும் " என்று கூற சென்பகமோ
"எது சென்பாவா.அடிங்க..மவளே இன்னைக்கு நீ என்கூட சேர்ந்து சமையல் கத்துக்குற"என்று கூற சந்தியாவோ பாவமாக அவரை பார்க்க
"இந்த பச்ச புள்ள மாதிரி முகத்தை வெச்சிக்கிறதெல்லாம் எங்கிட்ட வேணாம்.நீதானே கேட்ட உங்க பொண்ணு இல்லையான்னு, என் பொண்ணா இருந்துகிட்டு சமைக்க தெரியாதுன்னா எப்படி.முதல்ல உனக்கு நான் கத்துக்கொடுக்க போற கலையே சமையல்தான் என்றார்".
------------
kuttyma147 வின் "இதய திருடா" மற்றும் "இரவா பகலா" செம்மயா இருக்கும் போல இருக்கு.ஒரு அப்டேட்தான் படிச்சேன்.ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல ஒரு அப்டேட்டிலேயே தெரிஞ்சது சூப்பரா இருக்கும்னு.கண்டிப்பா படிக்கலாம்.முதல் கதை 220 K வாசகர்களையும் இரண்டாவது கதை 62 K வாசகர்களையும் கொண்டுள்ளது.படிக்காதவர்களுக்கு இது ஒரு நல்ல விருந்தாக இருக்கும் என்பது என் கருத்து.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro