கற்பனை 5
ஷனா-3 (கதிர் எழுதும் கதை)
"ஹேய் நேத்ரா ரொம்ப பேசாத.இன்னைக்கு மறுபடி அந்த அஜய்ய மீட் பண்ணோம் அப்புறம் உன்னைத்தான் நான் போட்டுக்கொடுப்பேன்" என்று ஆகாஷான எகிறினாள்.இவளின் எகிறலுக்கு கொஞ்சமும் அசராத நேத்ரா
"ஹலோ மேடம், அவன்கிட்ட வாலண்டியரா போய் வம்பிழுத்தது நீ, நான் இல்லை.சோ எல்லா மேட்டர்லயும் என்ன மாட்டி விடுற மாதிரி இதுலயும் நீ என்ன கோர்த்து விட முடியாதுடி" என்று பழிப்புக்காட்டியவளை ஆகாஷனா
"சரிதான் பார்க்கலாம்" என்றாள்.
"இன்று முதல் வருட மாணவர்களுக்கு முதல் நாள் என்பதால் ஆங்காங்கே ராக்கிங்க் சிறப்பாக நடைபெற அவ்விடத்துக்கு அஜய்
வந்ததும் எல்லோரும் அமைதியாகினர்.அதில் ஒரு 2ம் வருட மாணவன் ஒரு பெண்ணின் துப்பட்டாவை இழுத்து ராக்கிங்க் செய்ய அவனிடம் சென்றவன்
"கய்ஸ் ராக்கிங்க் பண்ணுங்க வேணாம்னு சொல்லல.ஆனா இப்படி டச் பண்ணி ராக்கிங்க் பண்ற வேலை எல்லாம் வெச்சுக்க வேணாம்" என்று கூற கோவம் கொண்ட அந்த 2ம்வருட மாணவன் கோவத்துடன் அஜய்யை பார்த்து
"டேய் யாரு நீ? நான் யாருன்னு தெரியுமா? எங்கப்பா யாருன்னு தெரியுமா?" என்று கேட்க கோவம் கொண்ட அஜய்
"டேய் நீ,உங்கப்ப ,உங்க தாத்தாலாம் யாரா வேணா இருந்துட்டு போங்க.இனிமே நீ யாரயாச்சும் ராக்கிங்க் பண்றத பார்த்தேன் உன் மூக்குல இருந்து தக்காளி சட்னி வரும்" என்று கூற அந்த 2ம் வருட மாணவன் உடனே அஜய்யை அடிக்க அவனின் மூக்கில் இருந்து இரத்தம் வந்து கொண்டிருந்த்தது.இதை எதிர்பாராதா அஜய்யும் அவனை தாக்க சண்டை பெரிதாகியது.
உடனே அவ்விடத்துக்கு வந்த லெக்சரர் சிலர் இவர்களுன் சண்டையை விளக்கி சமாதானம் செய்ய முயன்று தோற்றதால் பிரச்சினை காலேஜ் பிரின்சிபாலிடம் சென்றது .
"என்னப்பா உங்க ரெண்டு பேருக்கும் பிரச்சினை.கிஷோர் உனக்கு என்னடா பிரச்சினை.எதுக்கு இப்போ நீ அஜய்ய அடிச்ச.உங்கப்ப்பா பெரிய அரசியல்வாதின்னா இப்படித்தான் பண்ணுவியா.உங்க அரசியல் திமிரெல்லாம் காலேஜ்கு வெளில வெச்சிக்கோங்க்.அஜய் என்ன நடந்தது" என்று அவனிடம் கேட்க அஜய் நடந்தவற்றை கூறினான்.அது கிஷோருக்கு மேலும் ஆத்திரத்தை கொடுத்தது.எல்லாவற்றையும் கேட்ட பிரின்சிபால்
"கிஷோர் இதுதான் உனக்கு லாஸ்ட் வார்னிங்க்.காலேஜ்ல சேர்ந்து ஒரு வருசத்துலேயே நீ ரொம்ப கெட்ட பேரு வாங்கிட்ட.இனிமே ஏதும் ப்ராப்ளம்னு வந்த அப்புறம் உங்கப்பாவ கூப்பிட்டு பேச வேண்டியிருக்கும்" என்று கூற அவன் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்.கடைசியில் இருவரையும் போக சொன்னவர் அவரின் வேலைகளை கவனிக்க ஆரம்பித்தார்.
பிரின்சிபாலின் அறையை விட்டு வெளியில் வந்த அஜய் தன் முன்னே வந்த நேத்ராவை கவனிக்காமல் அவள் மீது மோதியவன் அவசரமாக
"சாரிங்க சத்தியமா நான் கவனிக்கல்ல" என்று கூறினான்.நேத்ராவின் பின்னாள் வந்த ஆகாஷனா
"ஹலோ என்ன மறுபடியும் சாரியா.பொண்னுங்கள இடிக்கிறதுக்குன்னே காலேஜ்கு வருவீங்களா.வீட்டுல அக்கா தங்கச்சிங்க யாருமில்லயே,இல்ல அவங்க கிட்டயும் இப்படித்தான் நடப்பீங்களா" என்று கேட்க கோவத்தில் பளாரென்று ஆகாஷனாவை அறைந்தவன்
"மைண்ட் யுவர் பிஸ்னஸ்.நான் வந்து உன்னயா இடிச்சேன்.., இல்லல்லே சோ மூடிகிட்டு கிளம்பு" என்று கூற தன் வாழ்க்கையில் முதன் முதலாக ஒருத்தன் அறைந்ததை தாங்க முடியாத ஆகாஷனா அப்படியே அதிர்ச்சியில் இருக்க அஜய் அவ்விடத்தை விட்டு சென்றான்.
அதிர்ர்சியில் உறைந்து நின்ற ஆகாஷனாவை நேத்ரா பிடித்து உலுக்க சுய நினைவுக்கு வந்தவள்
"என்னையே கை நீட்டி அடிச்சிட்டேல்ல,இரு உனக்கு ஆகாஷனான்னா யாருன்னு காட்டுறேன்" என்று கூறினாள்.
இவர்களுக்குள் நடந்த இந்த பிரச்சினையை வெளியில் வந்த கிஷோர் கவனித்தவன் அஜய்யை பழிவாங்க சரியான ஒரு சந்தர்ப்பம் ஆகாஷனா மூலம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் புன்முறுவலுடன் சென்றான்.
அஜய் காலேஜில் எல்லாரிடமும் நல்ல பெயர் வாங்கியிருக்கும் ஒரு மாணவன்.அவனது தந்தை மாநில அளவில் அமைச்சராக இருக்கின்றார்.ஆனால் காலேஜில் அவன் எல்லோரிடமும் கண்ணியமாக நடப்பதால் அவன் பேச்சை பிரின்சிபால் உட்பட எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள்.எதுவாக இருந்தாலும் யோசித்து சமயோசிதமாக முடிவெடுக்க கூடியவன்.கிஷோரின் தந்தையே மத்திய அரசில் அமைச்சராக இருப்பவர்.கிஷோருக்கு இருக்க கூடாத அனைத்து கெட்ட பழக்கங்களும் இருந்தன ஒன்றைத்தவிர,சிகரட் பிடிக்க மாட்டான்.அஜய்யின் தந்தையும் கிஷோரின் தந்தையும் ஒரே கட்சியாக இருந்தாலும் அவர்களுக்குள் இருக்கும் அதிகாரப்போட்டி அவர்களின் பிள்ளைகளின் வடிவில் உருமாறியிருந்தது.
என்னதான் அஜய்யின் தந்தை அரசியல் ,அதிகாரம் பற்றி அவனுக்கு கூறினாலும் அவன் அதை பெரிதாக எடுத்துகொள்வதே இல்லை.ஆனால் கிஷோரின் தந்தை அவனிடம் அரசியல் பற்றி பேசாவிட்டாலும் காலேஜில் சேரும் போது அவனுக்கு அங்கு நல்ல மதிப்பும் மற்றவர்கள் தன்னை பார்த்து மரியாதை செய்வார்கள் என்றும் என்னியவனுக்கு எல்லாமே எதிர்மாறாகவே நடந்தது.ஏனென்றல் காலேஜில் அஜய் ஒரு இளவரசன் போலவே வலம் வந்தான்.எல்லா இடத்திலும் அவனுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டது.தனக்கு கிடைக்க வேண்டிய மதிப்பும் கௌரவமும் அஜய்க்கு கிடைப்பதை விரும்பாத கிஷோர் வேண்டுமென்றே அடிக்கடி அஜய்யை வம்பிழுப்பான்.
இப்படி சிறிது சிறிதாக புகைந்து கொண்டிருந்தது அஜய் எதை செய்தாலும் அதற்கு நேர்மாறாக செய்வதை கிஷோர் வழமையாக கொண்டிருந்தது காலேஜில் இருந்த எல்லோரையும் சங்கடத்துக்குள்ளாக்கியது.
வீட்டிற்கு வந்த ஆகாஷனா அஜய் அவளை அடித்த கோவத்தில் எதுவுமே பேசாமல் தன் அறைக்குள் தஞ்சமடைந்தாள்.லக்ஷ்மியோ மகள் வந்ததும் வராததுமாக தன் அறைக்குள் புகுந்து கொண்ட மகளை வினோதமாக பார்த்தவர் உடனே நேத்ராவுக்கு கால் செய்து
"நேத்ரா என்னாச்சி, காலேஜ்ல ஏதும் ப்ராப்ளமா?" என்று கேட்க அவளோ எதை சொல்வது எதை விடுவது என்று தடுமாறிக்கொண்டிருந்தாள்.எப்படியோ அங்கு நடந்த எல்லாவறையும் சொல்லிமுடித்தவள் அஜய் அவளை அடித்தது மட்டும் கூறாமல் ரொம்ப திட்டியதாக கூறினால்.இதை கேட்ட லக்ஷ்மி அழ ஆரம்பிக்க நேத்ராவுக்கு எதற்காக ஆகாஷனாவின் தாய் அழுகின்றார் என்று புரியாமல் குழம்பி நின்றவள்
"ஆண்ட்டி இப்போ எதுக்கு நீங்க இவ்வளவு எமோசனல் ஆகுறீங்க.காலேஜ்னா இப்படித்தான் சில விசயங்கள் நடக்கும்.அதை நீங்க பெருசா எடுத்துக்காதீங்க" என்று கூற லக்ஷ்மியோ அவளிடம்
"நேத்ரா உனக்கு சில விசயங்கள் தெரியாதுமா.இன்னைக்கு நான் சொல்ரேன் ஆனா தயவு செஞ்சி யார்கிட்டயும் சொல்லிடாத .நான் உங்கிட்ட இதை இப்போ ஏன் சொல்ரேன்னா எங்கள விட அவகூட அதிகமாக இருக்குறது நீதான்மா.ஆனா நீ எனக்கு ஒரு சத்தியம் பண்ணி கொடு யார்கிட்டயும் இதை சொல்ல மாட்டேன்னு" என்று கூறிய லக்ஷ்மி நேத்ராவிடம்ஆகாஷனா பற்றிகூற தன் கண்களின் இருந்து வரும் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் நேத்ரா நின்று கொண்டிருந்தாள்.எல்லாவற்றையும் பேசி முடித்த லக்ஷ்மி
"நேத்ரா இனி அவ உன்னோட பொறுப்பு. அவ இனிமே வாழ்க்கைல எப்போமே சந்தோசத்த மட்டும்தான் பார்க்கனும் " என்று கூற நேத்ரா
"ஆண்ட்டி எனக்கு ஆகாஷனவ ரொம்ப பிடிக்கும்.அது எவ்வளவு பிடிக்கும்னு உங்களுக்கு என்னால எக்ஸ்ப்ளைன் பண்ண முடியாது.இனிமே நான் உயிரோட இருக்குறவைக்கும் அவ என் பொறுப்பு ஆண்ட்டி.நீங்க இனிமே எது பத்தியும் யோசிக்காதீங்க " என்று கூறினால்.
----வருவாள்---
கதையை எழுதி முடித்துவிட்டு பப்ளிஷ் செய்த கதிர் ஆகாஷனா வோட் செய்வாள் என்று காத்திருந்தவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருந்தது.தான் அவள் பெயரை கேட்டது தவறோ என்று கவலை கொள்ள தொடங்கினான்.பெண்களிடம் அதிகமாக பழகாத எல்லா ஆண்களுக்கும் இப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் தாங்கள் அவசரப்பட்டு நடந்து கொண்டோமோ என்ற எண்ணம் எழுவது சாதாரனமே.இங்கு கதிரின் மனநிலையோ ஆகாஷனா என்பவள் யார் என்பது தெரியாமல் இருந்த போதும் அவளை ஒரு நல்ல தோழி என்று நினைத்தே அவளுடன் பேச ஆரம்பித்தான்.ஆனால் திடீரென்று இப்படி அவள் காணாமல் போவாள் என்று கனவிலும் நினைக்கவில்லை.
தன் நண்பன் சுமனுக்கு கால் செய்த கதிர்
"டேய் மச்சான், சின்ன ஒரு பராப்ளம்டா " என்றவனை சுமன் என்னவென்று கேட்க கதிர் நடந்த எல்லாவற்றையும் கூறி முடித்தான்.கதிர் கூறியதை முழுவது கேட்டவன்
"டேய் கண்டிப்பா இது பொண்ணுதான்.ஏன்னா பொண்ணுங்களுக்குத்தான் இப்படி டிமாண்ட் பண்ணா கோவம் வரும்" என்றவனை கதிர்
"உனக்கு எப்படி மச்சி இதெல்லாம் தெரியும்" என்று கேட்க அவனோ சிரித்துக்கொண்டு
"எவ்வளவு பொண்ணுங்க கிட்ட பேசி பழகிருப்போம் , நமக்கு தெரியாததா" என்றான். சுமனை கொஞ்சம் கலாய்க்க எண்ணிய கதிர்
"நல்லவேலை மச்சி கால் பண்ணும் போது நான் கால் ரெக்கார்டர் ஆன் பண்ணேன்.பாரு இப்போ நீயே உன் வாயால ஸ்டேட்மண்ட் கொடுத்துட்ட" என்றவனை சுமன் பதறியடித்து
"டேய் அதான் நான் உனக்கு அவ யாருன்னு கண்டுபிடிச்சி சொல்ரேன்னு சொல்லிட்டேன்ல.அப்புறம் ஏண்டா" என்று அழுதவனை
"இல்லடா சும்மா ஒரு சேப்டிக்கு.நாளைக்கு நீ ஏதும் டகால்டி வேல பண்ணா உன்ன மாட்டிவிடத்தான்.என்னதான் வீணா என்ன நம்பினாலும் உன் வாயால சொல்ர மாதிரி வருமா" என்று கேட்க சுமனோ தலையில் அடித்துக்கொண்டு
"உன்னையெல்லாம் பெத்தாங்களா இல்ல செஞ்சாங்களா" என்று கூறி காலை கட்செய்தான்.ஆனால் இங்கு கதிருக்கோ ஆகாஷனாவுக்கு என்னாகியது,அவள் ஏன் பேசவில்லை என்றே மனது கல்லெறிபட்ட குளம் போல அலை அலையாய் தழும்பிக்கொண்டிருந்தது.
---------------
புது எழுத்தாளர்கள், மற்றும் எனக்கு பிடித்த எழுத்தாளார்களின் அப்டேட் வந்த உடனே நான் வோட் போட காரணம்,
புது எழுத்தாளர்களுக்கு அது மிகவும் என்கரேஜ் ஆக இருக்கும்.ஒரு எழுத்தாளனுக்கு தான் பதிவிட்ட அடுத்த கணமே வோட் கிடைப்பதைப் போன்ற சந்தோசம் வேறு எதிலும் இல்லை.பல நேரங்களில் நான் வோட் போட்டாலும் படிப்பது எனக்கு நேரம் கிடைக்கும் போது மட்டுமே....
இதை தெளிவுபடுத்த காரணம் எல்லோரும் கேட்பது உடனே எப்படி நீங்கள் வோட் போடுகின்றீர்கள்? படித்துவிட்டா வோட் போடுகின்றீர்கள்? என்று கேட்பதினால்.
கடைசியாக பல நல்ல எழுத்தாளர்கள் தனிப்பட்ட வலைத்தளங்களுக்கு கதை எழுத சென்றுவிட்டனர். புது புது எழுத்தாளர்களை நாம் ஊக்குவிக்கவில்லை எனில் வாட்பெட்டில் தமிழ் கதைகளை காண்பது அரிதாகிவிடும்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro