Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

கற்பனை 39

6 மாதங்களுக்கு  பின்,


"மச்சி நாளைக்கு காலைல அவனுங்கள  அடிக்கிறோம், நம்ம யாருன்னு காட்டுறோம்"என்று வந்த கணவனை நந்தினி

"யார்கிட்ட பேசிகிட்டு வர்றீங்க" என்று கேட்க அவளை பார்த்தவன்

"இல்லடா லாஸ்ட் வீக் ஒரு டீம்மோட கிரிக்கெட்  மேட்ச் ஆடபோனோமா, லாஸ்ட் ஓவர்ல தோத்துட்டோம். ரொம்ப ஓவரா எங்கள நக்கல் பண்ணிட்டானுங்க. அவனுங்களுக்கு நாங்க யாருன்னு காட்டனும்" என்று கூற அவள்

"அப்போ நாளைக்கும் விளையாட போறிங்களா?" என்று கேட்க

"ஆமான்டா பட்டுக்குட்டி. காலைல ஆறு மணிக்கு போயிட்டு எட்டு மணிக்கெல்லாம் வந்துடுவேன். சன்டே எப்படியும் நீ எந்திரிக்க ஒன்பது மணி ஆகுமேடா" என்று கூற அவளும் எதுவும் கூறாமல் இருந்தால்.விளையாட்டு ஆர்வத்தில் நந்தினியின் முகத்தில் இருந்த ஏமாற்றத்தை அவன் கவனிக்கவில்லை.

ஞாயிறு காலை நேரகாலத்தோடு எழுந்து நந்தினிக்கும் சேர்த்து காப்பி போட்டு விட்டு அவளை எழுப்பாமல் தூங்கட்டும் என்று நினைத்தவன் விளையாட சென்றான். இன்றும் அவர்கள் அணி ராஜீவின் சொதப்பலான ஓவரால் தோல்வியை தழுவ வீடு வந்தவன் நந்தினி எழுந்து காலை உணவு தயாரித்துக் கொண்டிருந்தால்.ராஜீவ் குளித்து வந்ததும் அவனுக்கு சாப்பாடு எடுத்து வைக்க அப்போதுதான் நந்தினியின் பாராமுகம் கண்டவன்  எதுவும் பேசாமல் சாப்பிட்டு விட்டு சமையல் அறையில் இருந்த நந்தினியின் பின்புறமாக சென்று அவளை அனைக்க அவளோ

"விடுங்க ராஜீவ் எனக்கு சமைக்கிற வேலை இருக்கு" என்றாள்.நந்தினி ஏதோ தன் மீது கோபமாக உள்ளால் என்பது மட்டும் அறிந்தவன் எதுவும் பேசாமல் அமைதியாக டிவி பார்த்துக்கொண்டிருந்தான்.பகல் நேரம் ஆனதும் அவனுக்கு ஜூஸ் கொடுக்க வந்தவளை

"இப்போ எதுக்கு நீ இப்படி மூஞ்ச தூக்கி வெச்சிக்கிட்டு இருக்க" என்று கேட்க அவனை பார்த்து முறைத்தவள் பதில் எதுவும் கூறாமல் மீண்டும் சமையல் அறைக்குள் செல்ல கோவம் கொண்ட ராஜீவ்

"உன்னத்தான் கேட்குறேன் நந்தினி காது கேட்கலயா"என்று கேட்க அவள் இப்பொழுதும் பதில் எதுவும் கூறாமல் இருக்க அவளை பிடித்து உழுக்கியவன் 

"என்னன்னுதான் சொல்லேன்" என்று கூற அவள்

"நான் நாளைக்கு எங்கம்மா வீட்டுக்கு போறேன்.என்ன பஸ் ஏத்திவிடுங்க"என்று பதிலளிக்க ராஜீவ் ஆத்திரத்துடன்

"மொட்டத்தலைக்கும் முழங்காளுக்கும் சம்பந்தமில்லாத மாதிரி  பேசாதடி. இப்ப எதுக்கு உங்க அம்மா வீட்டுக்கு  போகனும்னு சொல்ற" என்று கேட்க அவளோ 

"லீவ் நாள் அதுவுமா நீங்க என்கூட இருக்காம விளையாட போனீங்கள்ள நான் எதுவும் கேட்டனா.சும்மா என் வாய கிளறாதீங்க"என்று எகிற எரிச்சலுற்றவன்

"ஒவ்வொரு சன்டேயும் உங்கூட இதே ரோதனையா போச்சிடி. நீ எந்திரிக்க முன்னாடி வந்துட்டேன் தானே அப்புறம் ஏண்டி இப்படி சும்மா சீன போடுறே" என்று கூற கோபம் கொண்ட நந்தினி

"எது நான் சீன போடுறேனா.அது சரி நான் எது பண்ணாலும் உங்களுக்கு சீன போடுற மாதிரிதான் இருக்கும்.இனிமே எங்கிட்ட பேசாதீங்க.உங்க முகத்த பார்க்கவே பிடிக்கல"என்று கூற ராஜீவ்

"பிடிக்கலன்னா போடி.சம்பந்தமே இல்லாம சும்மா சண்டைக்கு வந்துகிட்டு,ஆமா இப்போ எதுக்கு அழுதுகிட்டு இருக்க"என்று கேட்க அவள்

"ஏன் அதுக்கு கூட எனக்கு உரிமை இல்லையா.அத கூட கேட்டுத்தான் பண்ணனுமா" என்று வேண்டுமென்று அவனை சூடேற்ற 

"என்னமோ பண்ணித்தொலை. என்ன விட்டிடு. நான் வெளில போறேன்"என்றவனை

"ஓஹ் அப்போ என்கூட வாழ உங்களுக்கு பிடிக்கல அதனால இப்போ வெளில போறீங்க. போயும் போயும் உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டேன் பாரு. என் புத்திய செருப்பால அடிக்கனும். கதிர் என்ன காதலிக்கலன்னாலும் அவரு கூட இருந்தப்போ மனசுல ஒரு சந்தோசம் இருந்திச்சி. ஆனா உன்கூட என் மனசுல கொஞ்சம் கூட சந்தோசமே இல்ல.எதுக்குடா உன்ன கட்டிக்கிட்டோம்னு இருக்கு" என்று அவள் கூற தன்னையும் கதிரையும் கம்பேர்  செய்து நந்தினி பேசியதில் கடுப்பாகிய ராஜீவ் அவன் மனதை நந்தினி காயப்படுத்தியது போல அவனும் செய்ய எண்ணி

"உங்கிட்ட எத்தனைவாட்டிடி சொல்றது என்னயும் கதிரையும்  கம்பேர்  பண்ணாதேன்னு. உனக்கு மூளையே இல்லையா. போயும் போயும்  நீதான் வேணும்னு ஒத்தகால்ல நின்னு கல்யாணம் பண்ணேன் பாரு என் புத்தியத்தான் செருப்பால அடிக்கனும்" என்று கூற தன் மனதை காயப்படுத்திய ராஜீவை பார்த்து

"ஓஹ் குத்தி காட்றியா.நான் சொல்லுவேன் என் மாமா கதிர் எனக்காக எல்லாமே பார்த்து பார்த்து செய்வாறு. உனக்கு என்ன கல்யாணம் பண்ணி ஆறு மாசம் ஆனதால என்மேல இன்டெரெஸ்ட் குறைஞ்சுடுச்சு இல்ல. ஏன் நான் கொஞ்சம் குண்டா இருக்கேன்னா.  உன்ன போய் என்ன காதலிக்கிறேன்னு நினைச்சேன் பாரு ச்ச்சீ" என்றவள் தனது அறைக்குள் சென்று கதவை சாத்திக்கொள்ள ராஜீவும் தனது பைக்கை எடுத்துக்கொண்டு வெளியே சென்றான். போகும் வழியில் மனதுக்குள் 'இவளை கல்யாணம் பண்ணி நம்ம தப்பு பண்ணிட்டோமோ ' என்று எண்ணியவன் அப்படியே தன் மனம் போன போக்கில் சுற்றி விட்டு பீச்சுக்கு வர அங்கே ஒரு இளம் காதல் ஜோடியை  கண்டவனுக்கு தன் மனைவி மீது காதல் பொங்க உடனே வீடு சென்றான்.

தன் தாய் வீடு செல்ல ஆடைகளை அடுக்கிக் கொண்டிருந்தவளை ராஜீவ் பின்னாள் இருந்து அனைக்க

"உனக்கு வெக்கமா இல்லை. அனுமதி இல்லாம ஒரு பொண்ண தொடுறியே" என்று கத்த அவனும் பதிலுக்கு

"என் பொண்டாட்டிக்கிட்ட நான் எதுக்குடி அனுமதி வாங்கனும்" என்று அவளை அனைக்க முற்பட அவனுக்கு பிடிகொடுக்காமல் இருந்த நந்தினியை பலவந்தமாக தனது முரட்டுத்தனத்தை அவள் மீது காட்டினான்.

சில நாழிகைகளின் பின் ராஜீவ் நெஞ்சில் தலை வைத்து படுத்திருந்த நந்தினி அவனது நெஞ்சு முடியை சுருட்டிய வண்ணம் 

"சாரிங்க, இருக்குற ஒரே ஒரு ஞாயிறுதான் நம்ம ஒன்னா ஜாலியா இருக்குறோம்.அதுவும் நீங்க விளையாட போறேன்னு சொன்னதும் எனக்கு கோவம் வந்திடிச்சு. அதான் ஏதேதோ பேசிட்டேங்க" என்றவளை தன்னுடன் அனைத்து

"இல்லைடி நீ பேசினது எனக்கு கொஞ்சம் ஹேர்ட் ஆச்சு. அதான்மா நானும் பதிலுக்கு பேசிட்டேன். சாரிடா"என்று கூற  அவள்

"இல்லைங்க நாந்தான் கொஞ்சம் ஓவரா ரியாக்ட் பண்ணிட்டேன். உங்களுக்கு தெரியுமா நான் யாருகூடவும் சண்டையே போடமாட்டேன்.ஆனா உங்க கூட மட்டும் எனக்கு சண்டை,காதல் எல்லாமே பண்ணனும்னு தோனுத்துப்பா. ஐலவ் யூடா புருசா"என்றவளை

"இட்ஸ் ஓக்கேடி. ஆனா இனிமே கதிரையும் என்னையும் கம்பேர்  பண்ணி பேசாதடா"என்று கூற அவர்களின் படுக்கை அறையில் இருந்த கடிகாரம் அவர்களை பார்த்து சிரித்தது. கல்யாணமாகி ஆறு மாத்ததுக்குள் இந்த வாக்கியத்தை ராஜீவ் 45 வது முறையாக கூறியும் நந்தினி திருந்துவதாகவும் இல்லை ராஜீவ் விட்டுக்கொடுப்பதாகவும் இல்லை.

"ஏங்க அடுத்த வாரம் சந்தியாவும் கதிரும் இந்தியா வர்ராங்க. அவங்க தங்குறதுக்கு என்ன பண்றது "என்று கேட்க அவளின் கேள்வி புரிந்த ராஜீவ் நந்தினியை அவன் மடியில் அமர்த்தி

"கண்ணம்மா, நான் நேத்தைக்கு கோவமா பேசினத வெச்சு  இப்டி  கேட்குறியாடா?" என்று கவலையாக கேட்க அவளோ

"இல்லைங்க அவங்க நம்ம வீட்டுல வந்து தங்கினா அது எப்படியும் அக்கம் பக்கம் இருக்குறவங்களோட வாய்க்கு நம்ம ஸ்வீட் கொடுத்த மாதிரி ஆகிடும் அதான்..."என்று இழுக்க

யோசித்தவன்

"நீ சொல்றது சரிதான். என்னதான் நம்ம மனசுக்கு பிடிச்ச மாதிரி பண்ணாலும் கடைசில சமூகம் என்ன சொல்லும் என்ற பயம் எல்லோருக்கும் இருக்குப்பா. வேணா ஒன்னு பண்ணலாம் அவங்க எங்கம்மா வீட்டுல தங்கிக்கட்டும். இப்போ அது பூட்டித்தான் இருக்கு. அம்மா இப்போ ராகவி கூட இருக்குறதால ஒரு ப்ராப்ளமும் இல்ல" என்று கூற அவளும் சரி என சம்மதித்தாள்.

"ஆமா இன்னைக்கி என்ன மேடம் முகம் ரொம்ப ப்ரைட்டா இருக்கு" என்று கேட்க வெட்கப்பட்டவள்

"நான் அம்மா வீட்டுக்கு போறேன்னு சொன்னப்போவே நீங்க கேட்டிருக்கனும். இப்பவாச்சும் தோனிச்சே"என்று நந்தினி கூற 

"இல்ல நான் நினைச்சேன் சண்டை போட்டதால உன் அம்மா வீட்டுக்கு போறியோன்னு நினைச்சேன்" என்றவனை முறைத்தவள்

"ஆமா இதுக்கு முன்னாடிலாம் சண்டை போட்டு ஒவ்வொரு வாட்டியும் அம்மா வீட்டுக்கு போனேன் பாருங்க.அப்படி போறதா இருந்தா இந்த 6 மாசத்துல 5 மாசம் நான் எங்க அம்மா வீட்டுலதான் இருந்திருக்கனும்" என்றவளை சந்தேகமாக பார்த்தவன்

"அப்போ எதுக்குடி போறேன்னு சொன்ன"என்று கேட்க

"இல்ல எனக்கு இப்போ 10 நாள் தள்ளி போயிருக்கு. 2 மாசம் முன்னாடியும் இப்படி ஆகி நம்ம கார்டு போட்டு பார்த்தப்போ எதுவுமே வரல. அதான் இந்த வாட்டி அம்மா வீட்டுக்கு போயி பார்க்கலாம்னு பார்த்தேன். ஏன்னா அப்பவும் நெகடிவ்னு வந்தா அந்த மன வேதனை என்னோடயே போகட்டும்னு. ஆனா எனக்கு என்னவோ இந்த வாட்டி கன்பார்ம்னு தோனுதுங்க" என்று கூற அவன் எதுவும் சொல்லாமல் உடனே வெளியே சென்றான்.

வீட்டிற்கு வந்த ராஜீவ் கையில் ப்ரக்னன்சி கிட்  இருக்க வெட்கத்தில் புன்னகைத்தவள் 

"ஏங்க இப்பவே பார்க்கலாமா இல்ல காலைலதான் பார்க்கணுமா" என்று கேட்க அவனோ




"3 கார்ட் இருக்கு.இப்போ ஒன்ன பார்க்கலாம் .அப்படி ஏதும் ரிசல்ட் வரலைன்னா காலையில பார்க்கலாம்"என்று மிகவும் உணர்ச்சி மிகுதியாக கூறினான். அவன் கொடுத்த கார்ட்டை எடுத்துக்கொண்டு வாஷ்ரூம் சென்றவள் 15 நிமிடத்தின் பின் முகத்தில் பூரிப்புடன் வந்தவளிடம் எதுவும் கேட்க தோன்றவில்லை ராஜீவிற்கு. அவள் முகமே ரிசல்ட் என்ன என்பதை காட்டியது.அவளை தூக்கி தட்டாமாலை சுற்ற நினைத்தவன்  உடனே அதை தவிர்த்து அவளை மெதுவாக அனைத்து நெற்றியில் முத்தமிட்டு

"இனிமே உன் மனசு கவலை படுற மாதிரி எதுவுமே பண்ண மாட்டேண்டா.ஐ லவ் யூடா!!..  "என்றவனை நந்தினி இறுக்கி அனைக்க அவனோ

"ஹேய் என் பொண்ணு பாவம் அவள ரொம்ப கஷ்டப்படுத்தாத ஓக்கே.."என்று கூற உடனே அவள்

"என்ன சார் இப்பவே பொண்ணுனு கன்பார்ம் பண்ணியாச்சா!!. ஹ்ஹ்ம்.... பார்க்கலாம் பார்க்கலாம் "என்றவளை முத்தமிட்டு தன் நெஞ்சோடு சாய்த்துக் கொண்டான்..

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro