கற்பனை 38
மூன்று மாதங்களின் பின்........யூ எஸ்சில்
வேலை விட்டு வீட்டிற்கு வந்த சந்தியா தனக்கு முன் இருந்த மேசையில் மது பாட்டிலுடன் உட்கார்ந்திருந்த கதிரை கண்டும் காணாதது போல அறைக்குள் சென்று உடை மாற்றி வந்தவள் கிட்சன் செல்ல அங்கு எல்லாமே சமைத்து தயாராக இருந்தது. உணவை மேசையில் எடுத்து வைத்த்வள்
"சாப்பிட்டுட்டு குடிக்க போறீங்களா, இல்ல குடிச்சிட்டு சாப்பிட போறீங்களா" என்று கேட்க கோவம் கொண்ட கதிர் மது பாட்டிலை திறந்து அப்படியே மட மட வென்று குடித்து உவ்வேக் என்று வாந்தியெடுக்க ஓடிச்சென்ற சந்தியா
முதலில் அவனின் வாந்தியை துடைக்க முற்பட கதிரோ அவளின் கையை தட்டி விட்டான். அவன் அவளின் கையை தட்டி விட்ட கோபத்தில் சந்தியா அவனை அறைய என்ன
நடக்கின்றது என்று புரியாமல் கதிர் கன்னத்தில் கையை வைத்துக்கொண்டு சந்தியாவை பாவமாக பார்த்தான்.
"ஆமா இப்படி அப்பாவியா முகத்தை வெச்சிக்கிறதுல ஒன்னும் குறைச்சல்
இல்ல.ஆமா யாரு உங்களுக்கு இத வாங்கிக்கொடுத்தா"என்று கேட்க அவன் திருதிரு எனும் முழிக்கும் வேலை கதிரின் செல்போன் ஒலிக்க அதில் தீபக்கின் பெயர்
(என் உயிரினில் நீ ரேனுவோட வில்லன்,நண்பன்,காதல் கணவன்) வர இவன் எதற்கு கால் பண்ணுகின்றான் என நினைத்தவள் போனை ஸ்பீக்கரில் போட
"கதிர் முதன் முதலா ஒரு ஹெல்ப் கேட்டீங்கன்னு பண்ணேன் தயவு செஞ்சி
நாந்தான் உங்களுக்கு சரக்கு வாங்கி கொடுத்தேன்னு மட்டும் அவள்ட்ட
சொல்லிடாதீங்க. நான் சரக்கே அடிக்க மாட்டேன்.அப்படியிருக்கும் போது
உங்களுக்கு வாங்கி தந்து அதனால இந்த சரக்கு மூலமா மாட்டிக்குவோமோன்னு
பயமா இருக்கு"என்று கூற பத்ரகாளியாக மாறியவள்
"டேய் நினைச்சேன்டா. யூ எஸ் ல கதிருக்கு ரொம்ப க்லோஸா இருக்குறது நீ
மட்டும்தான்.நாளைக்கு நீ ஆபீஸ் வா உனக்கு ஸ்ட்ரெஸ் மெனெஜ்மென்ட்ல ஒரு
லெக்சர போட்டு உன் தாலிய அறுக்குறேன்" என்று கூற மறுமுனையில் பதறிய தீபக்
"அம்மா தாயே நீ எது வேணும்னாலும் பண்ணு ஆனா லெக்சர் மட்டும் போட்டுடாத
ப்ளீஸ் "என்று கூற அவளோ
"உன்ன நான் நாளைக்கு வந்து வெச்சிக்கிறேன்" என்று காலை கட் செய்தால்.
"ஏண்டா இப்படி பண்ற,எனக்கு உன் மேல கோவம் கோவமா வருதுடா"என்று கூற கதிர்
"ஏண்டி நீயும் புரிஞ்சிக்க மாட்டேன்னு சொல்ற என் லைப்ல எனக்கு பிடிச்சவங்க யாருமே என் கூட இருந்ததே இல்லை. இப்போ நீயும் என்ன விட்டு போயிடுவியோன்னு பயமா இருக்கு. ப்ளீஸ்டா நான் சொல்றத கேளுடா. நமக்கு குழந்தைங்க வேணாம்" என்று கூற கவலையுடன் கதிரை பார்த்துக் கொண்டிருந்தவள் முகம் சிவக்க கோவத்துடன்
"மாட்டேன் இதுல நீங்க சொல்றத நான் கேட்கவே மாட்டேன். கதிர் ப்ளீஸ்
டாக்டர் சொல்றது எல்லாமே அப்படியே நடந்துடாது. இப்போ என்ன எனக்கு ஒரு கால்
இல்லைங்குறதால டெலிவரி டைம் ல பேபிய வெளில புஷ் பண்றப்போ பாலன்ஸ்
இல்லாம பேபிக்கோ இல்லை எனக்கோ ஏதும் ப்ராப்ளம் வரும்னு சொல்ராங்க .ஆனா
அதுல கூட 30% ப்ராப்ளம் இல்லாம இருக்க சான்ஸ் இருக்குன்னு சொல்றாங்களேடா.நம்ம ஏன் அந்த 30% சான்ஸ பார்க்க கூடாது" என்று கூற கதிரும் கோவத்துடன்
"ரொம்ப புத்திசாலித்தனமா பேசுறதா நினைப்பா.சரி நானும் பார்க்கிறேன்.நான்
உன்கிட்ட நெருங்கி வந்தாதானே உன்னால ப்ரக்னண்ட் ஆக முடியும.பார்க்கலாம்
நீயா நானான்னு"என்று கூற சட்டென்று சிரித்தவள்
"நீயா நானா கோ ஸ்பான்சர் பை......"என்று நக்கலாக கூற கதிருக்கும் சிரிப்பு வந்தது. அன்று இரவு இருவருக்குமே தூக்கம் வரவில்லை. சந்தியா கதிரை எப்படி சம்மதிக்க வைப்பது என்றும் கதிரோ சந்தியாவை எப்படி இதற்கு ஒத்துக்கொள்ள வைப்பது என்றும் யோசித்து யோசித்தே தூக்கத்தை கலைத்தனர்.
காலையில் எழுந்த சந்தியா அவசரமாக கிளம்பி ஆபீஸ் செல்ல தயாராக கதிர்
இன்னும் தூங்கிக்கொண்டே இருந்தான்.யூ எஸ் வந்த கதிர் கம்பெனி எதிலும்
ஜாயிண்ட் ஆகாமல் ப்ரீலான்சர் ஆக வேலை செய்து கொண்டிருந்தான். அதுவே தனக்கு
பிடித்திருப்பதாகவும் சில நாட்களுக்கு சுதந்திரமாக வேலை செய்ய அவன் மனம்
விரும்புவதாக சந்தியாவிடம் கூற அவளும் அதற்கு ஒத்துக்கொண்டால்.
இரண்டு வாரம் முன் சந்தியாவுக்கு மாத விலக்கு தள்ளிச்செல்ல அது குழந்தையாக இருக்குமோ என்று டாக்டரிடம் செல்ல அவர் கூறியதை கேட்டு கதிரும் சந்தியாவும் மிகவும் மனசு உடைந்து போயினர். இப்போது ஏற்பட்டிருப்பது கர்ப்பத்துக்கான அறிகுறி இல்லை என்றும் இனி வரும் காலங்களில் சந்தியா கர்ப்பமானால் அவளின் ஒரு கால் இல்லாததால் குழந்தை பேறு காலத்தில் அவள் பல கஷ்டங்களையும் சில நேரங்களில் உயிர் ஆபத்தையும் எதிர்கொள்ள நேரிடும் என்று கூற அன்றிலிருந்து கதிர் குழந்தை வேண்டாமென்றே கூறிக்கொண்டிருக்க சந்தியாவோ பிடிவாதமாக குழந்தை பெற்றே தீர வேண்டும் என்று இவர்களுக்குள் சண்டை போய் கொண்டு இருக்கின்றது.அதன் வெளிப்பாடே எப்படி மது அருந்துவது என்று கூட தெரியாத கதிர் தீபக்கின் உதவியுடன் மது பாட்டிலை வாங்கி அதை குடித்து சந்தியாவின் மனதை மாற்ற முயற்சித்தான்.ஆனால சந்தியா அதற்கும் அசராமல் இருந்தது அவனுக்கு மிகவும் வருத்தத்தையும் இதற்கு மேல என்ன செய்வது என்றும் புரியாமல் இருந்தான்.
ஆபீசில தீபக்கின் அறையை தேடி சென்றவள் "டேய் உன்ன யாருடா கதிருக்கு சரக்கு வாங்கி கொடுக்க சொன்னது. நீதான் மொடாக் குடிகாரன்னு தெரியும்.அதுக்கு என் புருசனையும் கெடுப்பியா"என்று
கேட்க தீபக்
"அம்மா தாயே நான் ஒரு டீடோட்டலர் மா.இது வரைக்கும் குடிச்சதே இல்ல. 12 படிக்கிறப்போ சிகரட் மட்டும் குடிச்ச்சிருக்கேன். அவ்வளவுதான்.உன் புருசன் தான் கெஞ்சி கேட்டான்.அதான் வாங்கி கொடுத்தேன்.ஆனா அவன் இப்படி என்ன மாட்டி விடுவான்னு கொஞ்சமும் நினைக்கல.ஆமா அப்படி என்னப்பா உங்களுக்குள்ள ப்ராப்ளம்" என்று கேட்க அவளும் நடந்த எல்லாவற்றையும் கூற சற்று யோசித்த தீபக்
"ஏன் சந்தியா கதிர் சொல்றது கூட ஒரு வகைல கரக்ட்தானே.உனக்கு ஏதும் ஆச்சின்னா அவரு என்ன பண்ணுவாருப்பா"என்று கேட்க சந்தியா
"இல்லைடா ஒருத்தங்களுக்கு கல்யாணமாகி குழந்தை இல்லைன்னா யாருக்கு ப்ராப்ளம் இருக்குன்னு பார்க்காம சமூகம் அந்த பொண்ணுக்குதான் ப்ராப்ளம்னு டிசைட் பண்ணிடும். அதுவே ஒரு பையன் 2வது கல்யாணம் பண்ணியும் அவங்களுக்கு குழந்தை இல்லைன்னா எதை பத்தியுமே யோசிக்காம நேரடியாவே அந்த பையனத்தான் இந்த சமூகம் குறை சொல்லும். இப்போ சொல்லுப்பா என் முடிவு சரியா
தவறான்னு"என்று கூற தீபக்கிற்கு என்ன கூறுவது என்று தெரியவில்லை.ஒரு
புறம் தன் மனைவிக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்று எண்ணி தன்னை
ஆண்மையற்றவன் என்று சமூகம் கூறினாலும் பரவாயில்லை என நினைக்கும் ஒரு கணவன், அதே போல தன் உயிர் போனாலும் தன் கணவனை யாரும் ஆண்மையற்றவன் என்று கூறிவிடக்கூடாது என்று யோசிக்கும் மனைவி.இவர்களுக்கு தன்னால் எப்படி உதவ முடியும் என யோசித்தவன் தனது அறிவுக்கு ஏதோ தோன்ற மொபைலை எடுத்து யாருடனோ பேசிவிட்டு
"சரி சந்தியா இன்னைக்கு நான் உங்க வீட்டுக்கு வந்து கதிர் கிட்ட
பேசுறேன். ஆனா இதுல நீயும் சின்னதா ஒரு அட்ஜஸ்ட்மண்ட் பண்ண வேண்டியிருக்கும்" என்று கூற அவனை பார்த்தவள்
"சரி வா.ஆனா ஏதும் ஏடாகூடமா பண்ணே. அப்புறம் உன்ன கொன்னுடுவேன்"என்று கூறினால்.
அன்றைய நாள் வேலை முடித்து தீபக்குடன் வீடு வந்த சந்தியா கதிரையும்
அவனையும் பேச விட்டு எல்லோருக்கும் உணவு தயாரிக்க சென்றால்.
சந்தியா தனது வேலைகளை முடித்து வர தீபக்
"என்னடா இவன் உங்க லைப்ல இருக்குற ப்ராப்ளம்க்கு மூணாவது ஆளு நான் தீர்வு
சொல்றேன்னு யோசிக்காதீங்க.ஏன்னா எனக்கு சந்தியாவ சின்ன வயசில இருந்தே
தெரியும் .சோ ஒரு நல்ல நண்பனா சொல்றேன். என்னோட ஆளு அதாம்பா ரேணு இந்தியால ஒரு ஆர்பனேஜ் நடத்துறா சோ நீங்க ரெண்டு பேரும் முதல்ல அங்க இருந்து ஒரு குழந்தைய தத்தெடுங்க"என்று கூற முறைத்த சந்தியா
"இதான் உன்னோட ஐடியாவா" பெரிய என்னமோ இவன் மாதிரி பேசின"என்று கோபப்பட அவளை அமைதிப்படுத்திய கதிர்
"இரு முதல்ல அவரு என்ன சொல்ல வர்றாருன்னு கேட்கலாம்" என்று கூற அவள்
"ஆமா அவன் உங்களுக்கு சாதகமா சொன்னதும் நீங்க அவன் சொல்றததானே
கேட்பீங்க" என்று எகிற அவளை பிடித்து அவன் அருகில் அமர்த்தியவன்
"கொஞ்சம் பொறுமையா என்ன சொல்றாருன்னு கேளுமா"என்று கூற வேண்டா வெறுப்பாக அவளும் கேட்க ஆரம்பித்தால்.
"இங்க பாரு சந்தியா, ஒரு வேலை நீ கர்ப்பமாகி குழந்தை கிடைக்கும் போது
உனக்கு ஏதும் ஆச்சின்னா கதிரால அத தாங்கிக்க முடியுமா. அப்புறம் அவரு தனியா
எவ்வளவு கஷ்டபடுவாருன்னு யோசிச்சியா. முதல்ல நீங்க ஒரு பேபிய தத்தெடுங்க. அப்புறமா உனக்கு டிரீட்மண்ட் பண்ணலாம். உனக்கு வரும்னு நினைக்குற ப்ராப்ளம எப்படி சால்வ் பண்ணலாம்னு யோசிச்சி டாக்டர்ஸ் அட்வைசோட பண்ணலாம். பட் அதுக்கு கொஞ்ச நாள் போகும் . சோ அந்த கேப்ல உங்களுக்கு பேபி வேணும்னா ரேணுகிட்ட சொல்லி ஒரு பேபிய அடாப்ட் பண்ணலாம். என்ன சொல்ற" என்று கேட்க தீபக் கூறியதிலும் நியாயம் இருப்பதென உணர்ந்தவள்
"நான் இல்லைன்னா கதிர் என்னாவாறுன்னு கொஞ்சம் கூட யோசிக்காம விட்டேனே. நல்ல வேலை தீபக் இதை எனக்கு நீ சுட்டிக்காடின. இல்லைன்னா என்னால இந்த பாய்ண்ட்ல யோசிச்சிருக்கவே முடியாது.சில நேரங்கள்ள நம்ம விடுற சின்ன தவறக்கூட மூணாவது ஆளுங்க சொல்லும் போது நமக்கு ரொம்ப ஈசியா புரிஞ்சிடுது. ஆனா..."என்று இழுக்க
"என்னம்மா ஆனா.."என்று கதிர் கேட்க
"முதல்ல ஒரு 6 மாசம் டிரீட்மண்ட் போறேன். அப்புறமா அடாப்ட் பண்றத பத்தி
யோசிச்சிட்டு இன்னும் டிரீட்மண்ட் கண்டினியூ பண்றதா இருந்தா பண்ணலாம். ஏன்னா இப்பவே பேபி ஒன்ன அடாப்ட் பண்ணிகிட்டா என்னால டிரீட்மண்ட்ல கவனத்த செலுத்த முடியாம போயிடும்" என்று கூற கதிரும் அதற்கு உடன் பட்டான்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro